என் மலர்tooltip icon

    ராஜஸ்தான்

    • தலித் சிறுவன் பள்ளி ஆசிரியரால் தாக்கப்பட்டு உயிரிழந்தான்.
    • சாதிக்கொடுமைகள் ராஜஸ்தான் மாநிலத்தில் தினமும் நடக்கின்றன.

    லக்னோ :

    ராஜஸ்தான் மாநிலம் சுரானா கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இந்திரகுமார் மேக்வால் என்ற தலித் சிறுவன் படித்துவந்தான்.

    9 வயதான அந்தச் சிறுவன், பள்ளியில் உள்ள தண்ணீர் பானையில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்துள்ளான். அப்போது பள்ளி ஆசிரியர் அவனை தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் படுகாயமடைந்த அச்சிறுவன், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவன் உயிரிழந்தான்.

    இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'இதுபோன்று வலி ஏற்படுத்தும் சாதிக்கொடுமைகள் ராஜஸ்தான் மாநிலத்தில் ஏறக்குறைய தினமும் நடக்கின்றன. தலித் மக்கள் உள்ளிட்டோரின் உயிர், கவுரவத்தை காக்க காங்கிரஸ் அரசு தவறுவதையே சிறுவனின் சாவு காட்டுகிறது. எனவே ராஜஸ்தானில் தற்போதைய அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்' என்று கூறியுள்ளார்.

    • 9 வயது தலித் சிறுவன் ஆசியர்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்த பானையில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்துள்ளான்.
    • ஆத்திரம் அடைந்த ஆசிரியர் மாணவனை கடுமையாக அடித்து உதைத்தார். இதில் சிறுவனின் காது, கண்களில் காயம் ஏற்பட்டது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டம் ஷயாளா கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இருக்கிறது.

    இந்த பள்ளியில் படிக்கும் 9 வயது தலித் சிறுவன் ஆசியர்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்த பானையில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்துள்ளான்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர் மாணவனை கடுமையாக அடித்து உதைத்தார். இதில் சிறுவனின் காது, கண்களில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். இந்த சம்பவம் கடந்த மாதம் 20-ந்தேதி நடந்தது.

    இந்த நிலையில் ஆசிரியரால் கடுமையாக தாக்கப்பட்ட அந்த சிறுவன் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தான்.

    சிறுவன் இறந்த செய்தி அறிந்த அந்த பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர். நிலைமை மோசமடைவதை தடுக்க அந்த பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டது. இதை தொடர்ந்து கொலை வழக்கில் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

    ஆசிரியரால் அடித்து கொல்லப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.

    அதோடு இந்த வழக்கு தொடர்பாக விரைவாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    • மாணவர்களுக்கு முதல்-மந்திரி அசோக் கெலாட் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

    ஜெய்ப்பூர் :

    நமது நாட்டின் 75-வது சுதந்திர தினம் இந்த ஆண்டு சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ஒரு கோடி மாணவர்கள் நேற்று ஒன்று கூடி தேசபக்தி பாடல்களை பாடி உலக சாதனை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அதன்படி நேற்று ஒரு கோடி மாணவர்கள் 25 நிமிட நேரம் வந்தே மாதரம், சரே ஜஹான் சே ஆச்சா, தேசிய கீதம் உள்ளிட்ட தேசபக்தி பாடல்களைப் பாடினார்கள்.

    இது உலக சாதனையாக நேற்று பதிவாகி உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பாடிய மாணவர்களுக்கு முதல்-மந்திரி அசோக் கெலாட் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதையொட்டி அவர் விடுத்துள்ள செய்தியில், "லண்டனில் உள்ள புகழ்பெற்ற நிறுவனமான 'வேர்ல்ட் புக் ஆப் ரெகார்ட்ஸ்', ஒரு கோடி மாணவர்கள் பாடிய பாடல்களைக் கேட்டு, மாநில அரசிடம் சான்றிதழை வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என தெரிவித்துள்ளார்.

    அவர் மேலும் கூறும்போது, "புதிய தலைமுறையினர் சகோதரத்துவம், தியாகம் ஆகிய விழுமியங்களைப் புகுத்த வேண்டும், அதுவே நாட்டின் எதிர்காலம் ஆகும்" என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கூடியதால் பெண்கள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
    • நெரிசல் எதனால் ஏற்பட்டது என்பது தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து 115 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிகார் மாவட்டத்தில் புகழ்பெற்ற கட்டு ஷியாம்ஜி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரபலமான புனித தலம் ஆகும்.

    இந்த கோவிலில் வழிபட்டால் கஷ்டங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். மேலும் இன்று இந்த கோவிலில் கியாரஸ் விழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ணரின் அவதாரமாக நம்பப்படும் கட்டு ஷியாம்ஜியை இன்று தரிசனம் செய்தால் சிறப்பானது என்று நம்பப்படுகிறது.

    இதையடுத்து இந்த கோவிலில் இன்று அதிகாலையில் தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் பக்தர்கள் கூடி இருந்தனர். கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்து நின்றனர்.

    இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் முண்டியடித்த படி கோவிலுக்குள் நுழைந்தனர். இதனால் பக்தர்கள் கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

    அப்போது இதய நோயால் பாதிக்கப்பட்ட 63 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நெரிசலில் சிக்கி கீழே விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    அவர் விழுந்த போது அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த 2 பெண்களும் நெரிசலில் சிக்கி கீழே விழுந்தனர். இதில் அவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கோவில் நுழைவு வாயிலில் இருந்து சில மீட்டர் தூரத்தில் இந்த சம்பவம் நடந்தது. மேலும் நெரிசலில் சிக்கி பக்தர்கள் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கூடியதால் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் நெரிசல் எதனால் ஏற்பட்டது என்பது தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    கோவில் விழாவில் நெரிசலில் சிக்கி 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் உள்ள கட்டு ஷியாம்ஜி கோவில் வளாகத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது.

    அதற்காக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எனது எண்ணங்கள் துயரம் அடைந்த குடும்பங்கள் மீது உள்ளன' என்று கூறி உள்ளார்.

    ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக்கெலாட் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், 'சிகாரில் கட்டு ஷியாம்ஜி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்தது மிகவும் சோகமானது, துரதிருஷ்டவசமானது.

    அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

    • ரக்‌ஷா பந்தன் பண்டிகை, சகோதர-சகோதரி பந்தத்தை கொண்டாடுகிறது.
    • மாநில எல்லைகளுக்குள் ஓடும் பேருந்தில் பெண் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படாது.

    ராஜஸ்தான் மாநிலத்தில், ரக்‌ஷா பந்தன் அன்று பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

    வரும் ஆகஸ்டு 11-ம் தேதி அன்று ராக்கி என்றும் அழைக்கப்படும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை, சகோதர-சகோதரி பந்தத்தை கொண்டாடுகிறது.

    ராஜஸ்தான் சாலை மார்க்கத்தில் பேருந்துகளில், ஏசி, வால்வோ மற்றும் அகில இந்திய அனுமதி பெற்ற பேருந்துகளை தவிர, மாநில எல்லைகளுக்குள் ஓடும் பேருந்தில் பெண் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படாது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ராஜஸ்தானில் போர் விமானம் தீப்பிடித்து விபத்திற்குள்ளானது.
    • இந்த விபத்தில் அதில் பயணம் செய்த இரு விமானிகளும் பலியாகினர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் மாவட்டத்தில் மிக் 21 ரக போர்விமானம் இன்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

    இரவு 9 மணியளவில் அந்த போர் விமானம் திடீரென பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிய தொடங்கியது. விமானம் முழுவதும் எரிந்து நாசமானதில் 2 விமானிகளும் பலியாகினர்.

    சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்துள்ளனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    விமான விபத்து விமானப்படை தளபதியிடம் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார்.

    • விமானி அறையில் இருந்து கமல்குமார் வெளியே வந்து தனது பெற்றோர் முன்பு நின்றார்.
    • கமல்குமாரின் தாய் அவரது கையை பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் கமல்குமார். விமானியான இவர் ஜெய்ப்பூருக்கு செல்லும் விமானத்தை இயக்கினார். அந்த விமானத்தில் கமல்குமாரின் பெற்றோர் பயணம் செய்தனர்.

    ஆனால் அந்த விமானத்தை தங்களது மகன்தான் இயக்க உள்ளார் என்று அவர்களுக்கு தெரியாது. அப்போது விமானி அறையில் இருந்து கமல்குமார் வெளியே வந்து தனது பெற்றோர் முன்பு நின்றார். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை பார்த்து சிரித்தனர்.

    கமல்குமாரின் தாய் அவரது கையை பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் தாய், தந்தையை விமானி அறைக்கு அழைத்து சென்று அங்கு இருவரையும் சிறிது நேரம் அமர வைத்து நெகிழ்ந்தார்.

    இந்த வீடியோவை கமல்குமார் இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டார். அதில், நான் பறக்கத் தொடங்கியதில் இருந்து இதற்காக தான் காத்திருந்தேன். இறுதியாக அவர்களுடன் ஜெய்ப்பூருக்கு விமானத்தில் பறக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது ஒரு சிறந்த உணர்வு என்று கூறி உள்ளார்.

    கமல்குமாரின் இந்த செயலை சமூக வலைதளங்களில் பலர் பாராட்டி உள்ளனர்.

    • அடுத்த 24 மணி நேரத்தில் அஜ்மீர், பரத்பூர், ஜெய்ப்பூர், கோட்டா மற்றும் உதய்பூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும்.
    • அஜ்மீரில் உள்ள தொலைதூர பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் என கணிப்பு.

    ஜெய்ப்பூர்:

    கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் கிழக்கு ராஜஸ்தானின் பல இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த நிலையதில், கடந்த 24 மணி நேரத்தில் நாகௌர் மாவட்டத்தில் உள்ள மக்ரானா பகுதியில் அதிகபட்சமாக 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து ரத்தன்கர் (சுரு) 8 செ.மீ மழையும், ஹனுமன்கரில் சங்கரியா 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளன.

    பனேரா (பில்வாரா), கெர்வாடா (உதைபூர்), பதம்பூர், சதுல்ஷாஹர் (இரண்டும் கங்காநகரில்), மற்றும் நவா (நாகூர்) தலா 6 செ.மீ., நரைனா (ஜெய்ப்பூர்), பசேரி (தோல்பூர்), சஜ்ஜன்கர் (பன்ஸ்வாரா), தோல்பூரில் 5 செ.மீ., சோட்டிசாத்ரி (பிரதாப்கர்), அக்லேரா, அஸ்னாவர் (இரண்டும் ஜாலவாரில்), கர்ஹி (பன்ஸ்வாரா), துங்லா (சித்தோர்கர்), மற்றும் பாரி (தோல்பூர்) ஆகியவை பதிவாகியுள்ளன. 4 செ.மீ மற்றும் பல இடங்களில் வெள்ளிக்கிழமை முதல் 4 செ.மீட்டருக்கும் குறைவான மழை பெய்துள்ளது.

    மறுபுறம், ஸ்ரீகங்காநகரில் ஒரு நாள் முன்பு பெய்த கனமழையால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இராணுவம் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தேங்கிய பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்கு குழாய்கள் மற்றும் பிற உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    சுகாதியா மார்க், அசோக் நகர், மீரா சௌக், சுகாடியா சர்க்கிள், பூரணி அபாடி போன்ற தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    அடுத்த 24 மணி நேரத்தில் அஜ்மீர், பரத்பூர், ஜெய்ப்பூர், கோட்டா மற்றும் உதய்பூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், அஜ்மீரில் உள்ள தொலைத்தூர பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    • முன்தைய விசாரணையில் 12-ந் தேதிவரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • 7 பேரும் ஜெய்பூரில் உள்ள நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துகின்றனர்.

    நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த டெய்லர் கன்னையா லாலை தலையை துண்டித்து கொலை செய்த ரியாஸ் அக்தாரி, கவுஸ் முகமது ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

    இரண்டு நாட்களுக்கு பின்னர் இந்த கொலையில் தொடர்புடைய மொஹ்சின் மற்றும் ஆசிப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் முகமது மொஹ்சின், வாசிம் அலி மற்றும் ஃபர்ஹாத் முகமது ஷேக் ஆகியோரை வெவ்வேறு தேதிகளில் என்ஐஏ கைது செய்தது. 7 குற்றவாளிகளும் ஜெய்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 12ந் தேதிவரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், கன்னையா லால் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் ஜெய்பூரில் உள்ள நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துகின்றனர்.

    • நூபுர் சர்மா தனது கருத்துக்கு தொலைக்காட்சியில் தோன்றி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
    • இன்று அதிகாலை போலீசார் மதகுரு சல்மான் சிஷ்டியை கைது செய்தனர்.

    அஜ்மீர்:

    டெல்லி பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா கடந்த மாதம் இறைதூதர் நபிகள் நாயகத்திற்கு எதிராக தெரிவித்த கருத்து விமர்சனம், சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரை எதிர்த்து நாடு முழுவதும் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.

    அவரை கண்டித்து பல்வேறு நகரங்களில் போராட்டங்களும் நடந்தன. நூபுர் சர்மா தனது கருத்துக்கு தொலைக்காட்சியில் தோன்றி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்தநிலையில் கடந்த திங்கட்கிழமை ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்கா மதகுரு சல்மான் சிஷ்டி நபிகள் நாயகத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த பா.ஜனதா முன்னாள் செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மாவை விமர்சித்து ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர், "நூபுர் சர்மாவின் தலையை துண்டித்து என்னிடம் கொண்டு வருபவர்களுக்கு என் வீட்டை பரிசாக கொடுப்பேன்" என்று கூறி இருந்தார்.

    இந்த வீடியோ நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடினார்கள். அப்போது அவர் தலைமறைவாகி விட்டது தெரிந்தது.

    அவரை பிடிக்க தனிப்படைகள் உருவாக்கப்பட்டன. விசாரணையில் அவர் பதுங்கியிருந்த இடம் போலீசாருக்கு தெரிய வந்தது. இன்று அதிகாலை 2 மணி அளவில் போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்து மதகுரு சல்மான் சிஷ்டியை கைது செய்தனர்.

    பிறகு அவரை ஆள்வார் கேட் போலீசார் ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    இதற்கிடையே அஜ்மீர் தர்கா நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மதகுரு சல்மான் சிஷ்டியின் கருத்துக்கும், தர்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்து உள்ளனர். அந்த வீடியோவில் சல்மான் சிஷ்டி போதையில் இருப்பது தெரிய வந்துள்ளது.

    மது அருந்திவிட்டு அவர் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

    • டெய்லர் கொலை வழக்கு குற்றவாளிகள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்.
    • நீதிமன்றத்திற்கு வெளியே குற்றவாளிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த டெய்லர் கன்னையா லாலை தலையை துண்டித்து  கொலை செய்த ரியாஸ் அக்தாரி, கவுஸ் முகமது ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

    இரண்டு நாட்களுக்கு பின்னர் இந்த கொலையில் தொடர்புடையே மொஹ்சின் மற்றும் ஆசிப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 4 குற்றவாளிகளும் இன்று ஜெய்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 12ந் தேதிவரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதைத் தொடர்ந்து நான்கு குற்றவாளிகளும் நீதிமன்றத்திற்கு வெளியே இருந்த வாகனத்தில் ஏற்றுவற்கு அழைத்து வரப்பட்ட போது,  அங்கு காத்திருந்த வழக்கறிஞர்கள் உள்பட பொதுமக்கள் ஆவேசத்துடன் நான்கு பேரையும் அடித்து உதைத்தனர். இதில் ஒரு குற்றவாளியின் ஆடைகள் கிழிந்தன.

    #WATCH | Udaipur murder incident: Accused attacked by an angry crowd of people while being escorted by police outside the premises of NIA court in Jaipur

    நான்கு பேரையும் தூக்கிலிட வேண்டும் என்றும், பாகிஸ்தான் ஒழிக என்றும் வழக்கறிஞர்கள் கோஷமிட்டனர். உடனடியாக போலீசார் நான்கு பேரையும் மீட்டு வாகனத்தில் அழைத்து சென்றனர். குற்றவாளிகள் மீது வழக்கறிஞர்கள், பொதுமக்கள் தாக்கிய சம்பவம் உதய்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெகன்னாத் ரத யாத்திரை அமைதியான முறையில் நடைபெற்றதால், நிர்வாகம் இன்று தளர்வு அளிக்க முடிவு.
    • இன்று மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்வு.

    ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் தையல்காரர் ஒருவர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஏழு காவல் நிலைய எல்லைகளில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மதியம் 12 மணி முதல் 4 மணி வரை தளர்த்தி அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு, இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நுபர் சர்மாவின் முகமது நபிக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துக்கு சமூக ஊடகங்களில் ஆதரவளித்ததற்காக கன்ஹையா லால் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

    குற்றம்சாட்டப்பட்டுள்ள இருவரை சில மணி நேரங்களுக்குப் பிறகு ராஜ்சமந்தில் கைது செய்தனர். இதனால் ஏற்பட்ட வன்முறை காரணமாக, அங்கு ஊரடங்க உத்தரவு விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற ஜெகன்நாத் ரத யாத்திரை அமைதியான முறையில் நடைபெற்றதால், நிர்வாகம் இன்று தளர்வு அளிக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    ×