என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைலட்"

    • அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது.
    • விமானம் இயக்க முடியாமல் போகும் தருணத்தில் விமானி விமான கட்டுப்பாட்டு அறைக்கு "மேடே" என தகவல் அனுப்புவார்.

    அசாம் மாநிலம் கவுஹாத்தியில் இருந்து 168 பயணிகளுடன் சென்னை புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் எரிப்பொருள் தீர்ந்ததை அடுத்து, விமானி "மேடே" என அறிவித்ததை தொடர்ந்து, அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 12ம் தேதி அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில், 241 பயணிகள் உயிரிழந்தனர்.

    விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் கட்டுப்பாட்டை இழந்ததை அடுத்து, விமான கட்டுப்பாட்டு அறைக்கு விமானி "மேடே" என அறிவித்தார். விமானி அதை அறிவித்த சில நொடிகளில் விமானம் விபத்துக்குள்ளானது.

    "மேடே" என்பது தொழில்நுட்ப கோளாறு, எரிப்பொருள் காலி உள்பட விமானம் இயக்க முடியாமல் போகும் தருணத்தில் விமானி விமான கட்டுப்பாட்டு அறைக்கு "மேடே" என தகவல் அனுப்புவார்.

    ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சில நாட்களில், கடந்த வியாழக்கிழமை அன்று கவுஹாத்தியில் இருந்து- சென்னை புறப்பட்ட இண்டிகோ விமானத்தில், எரிப்பொருள் தீர்ந்ததை அடுத்து விமானிகள் 'மேடே' என்று விமான கட்டுப்பாட்டு அறைக்கு அறிவித்தனர்.

    இதைஅடுத்து, பெங்களூரில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அபாய அழைப்பு வந்தவுடன், பெங்களூரு விமான நிலையத்தில் விமான ஊழியர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

    மேலும், மருத்துவ மற்றும் தீயணைப்புப் படை வீரர்களும் சம்பவ இடத்தில் இருந்தனர். பின்னர், விமானம் இரவு 8:20 மணிக்கு பாதுகாப்பாக தரையிறங்கியது. இதனால், பயணிகள் பெருமூச்சுவிட்டனர்.

    • விமானி அறையில் இருந்து கமல்குமார் வெளியே வந்து தனது பெற்றோர் முன்பு நின்றார்.
    • கமல்குமாரின் தாய் அவரது கையை பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் கமல்குமார். விமானியான இவர் ஜெய்ப்பூருக்கு செல்லும் விமானத்தை இயக்கினார். அந்த விமானத்தில் கமல்குமாரின் பெற்றோர் பயணம் செய்தனர்.

    ஆனால் அந்த விமானத்தை தங்களது மகன்தான் இயக்க உள்ளார் என்று அவர்களுக்கு தெரியாது. அப்போது விமானி அறையில் இருந்து கமல்குமார் வெளியே வந்து தனது பெற்றோர் முன்பு நின்றார். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை பார்த்து சிரித்தனர்.

    கமல்குமாரின் தாய் அவரது கையை பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் தாய், தந்தையை விமானி அறைக்கு அழைத்து சென்று அங்கு இருவரையும் சிறிது நேரம் அமர வைத்து நெகிழ்ந்தார்.

    இந்த வீடியோவை கமல்குமார் இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டார். அதில், நான் பறக்கத் தொடங்கியதில் இருந்து இதற்காக தான் காத்திருந்தேன். இறுதியாக அவர்களுடன் ஜெய்ப்பூருக்கு விமானத்தில் பறக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது ஒரு சிறந்த உணர்வு என்று கூறி உள்ளார்.

    கமல்குமாரின் இந்த செயலை சமூக வலைதளங்களில் பலர் பாராட்டி உள்ளனர்.

    ×