என் மலர்tooltip icon

    இந்தியா

    மேடே என மெசேஜ் அனுப்பிய பைலட்.. பத்திரமாக தரையிறங்கிய சென்னை புறப்பட்ட விமானம்- பெருமூச்சுவிட்ட பயணிகள்
    X

    "மேடே" என மெசேஜ் அனுப்பிய பைலட்.. பத்திரமாக தரையிறங்கிய சென்னை புறப்பட்ட விமானம்- பெருமூச்சுவிட்ட பயணிகள்

    • அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது.
    • விமானம் இயக்க முடியாமல் போகும் தருணத்தில் விமானி விமான கட்டுப்பாட்டு அறைக்கு "மேடே" என தகவல் அனுப்புவார்.

    அசாம் மாநிலம் கவுஹாத்தியில் இருந்து 168 பயணிகளுடன் சென்னை புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் எரிப்பொருள் தீர்ந்ததை அடுத்து, விமானி "மேடே" என அறிவித்ததை தொடர்ந்து, அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 12ம் தேதி அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில், 241 பயணிகள் உயிரிழந்தனர்.

    விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் கட்டுப்பாட்டை இழந்ததை அடுத்து, விமான கட்டுப்பாட்டு அறைக்கு விமானி "மேடே" என அறிவித்தார். விமானி அதை அறிவித்த சில நொடிகளில் விமானம் விபத்துக்குள்ளானது.

    "மேடே" என்பது தொழில்நுட்ப கோளாறு, எரிப்பொருள் காலி உள்பட விமானம் இயக்க முடியாமல் போகும் தருணத்தில் விமானி விமான கட்டுப்பாட்டு அறைக்கு "மேடே" என தகவல் அனுப்புவார்.

    ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சில நாட்களில், கடந்த வியாழக்கிழமை அன்று கவுஹாத்தியில் இருந்து- சென்னை புறப்பட்ட இண்டிகோ விமானத்தில், எரிப்பொருள் தீர்ந்ததை அடுத்து விமானிகள் 'மேடே' என்று விமான கட்டுப்பாட்டு அறைக்கு அறிவித்தனர்.

    இதைஅடுத்து, பெங்களூரில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அபாய அழைப்பு வந்தவுடன், பெங்களூரு விமான நிலையத்தில் விமான ஊழியர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

    மேலும், மருத்துவ மற்றும் தீயணைப்புப் படை வீரர்களும் சம்பவ இடத்தில் இருந்தனர். பின்னர், விமானம் இரவு 8:20 மணிக்கு பாதுகாப்பாக தரையிறங்கியது. இதனால், பயணிகள் பெருமூச்சுவிட்டனர்.

    Next Story
    ×