என் மலர்
புதுச்சேரி
- கடந்த சில நாட்க ளுக்கு முன் மாணவர்கள் இடமாற்றம் செய்து வகுப்பு கள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.
- பெற்றோர்களுக்கு எந்த தகவலும் அளிக்காமல் மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அருகே திரு.பட்டினம், கருட பாளையம் பகுதியில், அரசு தொடக்கப்பள்ளி 1-ம் வகுப்புமுதல் 5-ம் வகுப்பு வரை இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் போதிய இடவசதி இல்லாத கார ணத்தால், அருகில் உள்ள பல ஆண்டுகள் பரா மரிப்பு இல்லாத அரசு நடுநிலைப்பள்ளியில், மூடிகிடந்த சில வகுப்பறை களில், கடந்த சில நாட்க ளுக்கு முன் மாணவர்கள் இடமாற்றம் செய்து வகுப்பு கள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, அந்த வகுப்புகளில் மாணவர்கள் கல்வி பயின்றுவந்த நேரத்தில், வகுப்பறை கட்டிடத்தின் மேற்கூரை காரை சில இடங்களில் திடீரென இடிந்து விழுந்த தால், அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், பதறியவாறு வகுப்பறையை விட்டு வெளியே ஓடினர். மாண வர்கள் சுதாரிப்பால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இது குறித்து, பள்ளி நிர்வாகம், முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு எந்த தகவலும் அளிக்காமல் மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து மாணவர்கள் பெற்றோர்களிடம் புகார் கூறியதை அடுத்து, நூற்றுக்கு மேற்பட்ட பெற்றோர்கள், மாணவர்களுடன் சம்பந்த ப்பட்ட பள்ளியை மூடி, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த பள்ளி நிர்வாகத்திடம், பராமரிப்பு இல்லாத பள்ளிக்கு, யாருடைய அனு மதியும் பெறாமல் வகுப்பு கள் நடத்தியதையும், கட்டிட மேற்கூரை காரை இடிந்து விழுந்ததை பெற்றோ–ர்களுக்கு தெரிவிக்காமல் மூடி மறைத்ததற்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர். விபரம் அறிந்த காரைக்கால் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜ சேகரன், திரு.பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பெற்றோர்களுடன் பேசு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையின் முடிவில், தற்போதுள்ள பள்ளியில் போதிய இடவசதிகள் ஏற்படுத்தி தரும்வரை மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என கூறி, மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டு அழைத்துசென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- கோடியக்கரை தென்கிழக்கு கடலில் மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர்.
- மீனவர்கள் சென்ற படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
காரைக்கால்:
காரைக்கால் அருகே உள்ள கோட்டுச்சேரிமேடு பகுதியை சேர்ந்தவர் மீனவர் செல்வமணிக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் தினேஷ்குமார், சிவக்குமார், கிஷோர், ஜெகதாபட்டினத்தை சேர்ந்த அசோக், அழகர் உள்ளிட் 16 பேர் கடந்த 15-ந் தேதி மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கோடியக்கரை தென்கிழக்கு கடலில் மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர்.
அவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி 16 பேரையும் கைது செய்தனர். மீனவர்கள் சென்ற படகும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தகவல் கோட்டுச்சேரி கிராம மீனவர்களுக்கு எட்டியது. அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே காரைக்கால் மாவட்ட கலெக்டர், மீன்வளத்துறை அதிகாரியை சந்தித்து மனு கொடுத்தனர்.
அப்போது மீனவர்கள் மற்றும் படகை மீட்டுத்தருமாறு வலியுறுத்தியுள்ளனர்.
- மாணவன்(வயது12) ஒருவரை, தனியாக அழைத்துசென்று, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததார்.
- பெற்றோர்கள் காரைக்கால் கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
காரைக்கால், நவ.16-
காரைக்கால் கோட்டுச்சேரி அருகே உள்ள இராயன்பாளையத்தில், மத்திய அரசின் நவோதயா பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் பலர் அங்கேயே தங்கி படித்து வருகின்றனர். பள்ளி காவலாளியாக, நாகை மாவட்டம் தரங்கம்பாடியைச்சேர்ந்த முகம்மது அலி(வயது54) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை, பள்ளி விடுதியில் இருந்த 8-ம் வகுப்பு மாணவன்(வயது12) ஒருவரை, தனியாக அழைத்துசென்று, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததார். இது குறித்து, மாணவன் தன் பெற்றோரிடம் போன் மூலம் தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் காரைக்கால் கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார், முகம்மது அலி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் பணி புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
புதுச்சேரி:
உள்ளாட்சி ஊழியர்க ளுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க ஏதுவாக கமிட்டி அமைக்கவும், நிலு வையில் உள்ள ஊதியத்தை வழங்கவும் வலியுறுத்தி, காரைக்காலை அடுத்த திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், நேற்று பணி புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஆர்ப்பாட்டத்தில், உள்ளாட்சி ஊழியர்களுக்கு அரசே நேரடியாக ஊதியம், ஓய்வூதியம் வழங்க ஏதுவாக கமிட்டி அமைக்கப்படும் என, முதல்- அமைச்சர் அளித்த வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும்.
நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனே வழங்கவேண்டும். பொதுவான பணிநிலை அரசாணைப்படி உள்ளா ட்சி அமைப்புகளில் பணி புரியும் அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும் ஒருமுறை நிகழ்வாக பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. முடிவில் சகாயராஜ் நன்றி கூறினார்.
- நாடு முழுவதும் கடல் வழியே தீவிரவாதத்தை ஒழிக்கும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது.
- தேங்காய்திட்டு துறைமுக வளாகத்தில் உள்ள கடலோர காவல் படைக்கு சொந்தமான அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி:
கடலோர பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆண்டுதோறும் சீ விஜில் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று காலை தொடங்கி நாளை மாலை வரை நடைபெறுகிறது. நாடு முழுவதும் கடல் வழியே தீவிரவாதத்தை ஒழிக்கும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதில் இந்திய கடலோர காவல் படை, மத்திய சுங்கத்துறை மற்றும் புதுவை கடலோர காவல்படையினர் இணைந்து ஆழ்கடல் மற்றும் கடற்கரை பகுதிகளை தீவிரமாக கண்காணித்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக பகுதியான கோட்டகுப்பம் அருகே ஆழ்கடலில் கள்ளத்தோணி மூலம் தீவிரவாத வேடமிட்ட 9 நபர்களை அடையாளம் கண்ட கடலோர காவல் படையினர் ஆழ் கடலில் விரட்டிச்சென்று கைது செய்தனர். இவர்களை தேங்காய்திட்டு துறைமுக வளாகத்தில் உள்ள கடலோர காவல் படைக்கு சொந்தமான அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த தீவிர தீவிரவாத தடுப்பு ஒத்திகை நாளை மாலை வரை தொடர்கிறது.
- எல்லா கவர்னர்களும் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, சட்டவிதிகளுக்கு உட்பட்டு தான் நடக்கின்றோம்.
- அனைத்து கவர்னர்களும் மக்களுக்கு நல்லது செய்ய தான் அரசியல் அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் 6 பேர் விடுதலை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு என்பதால் கருத்து சொல்ல முடியாது. கவர்னர் தாமதம் தான் விடுதலைக்கு காரணம் என்றும் கூறமுடியாது. கவர்னர் முடிவெடுப்பதில் சில சவால்கள் இருந்திருக்கலாம்.
சிறையில் இருப்பவர்களை விடுவிக்கும்போது பல மாநிலங்களில் முன் உதாரணமாக இருந்து விடக்கூடாது என்று கவர்னர் அதை சவாலாக நினைத்து இருக்கலாம், கவர்னருக்கு முடிவெடுப்பதில் சில காரணங்கள் இருந்து இருக்கலாம். எனவே நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
கவர்னர்களை பற்றி அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். இப்போது கவனம் கவர்னர் பக்கம் திரும்பியுள்ளது. எல்லா கவர்னர்களும் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, சட்டவிதிகளுக்கு உட்பட்டு தான் நடக்கின்றோம். இதில் விதிமீறல்கள் இல்லை.
ஆனால் சின்ன சின்ன நடவடிக்கைகளை கூட விமர்சனம் செய்வது என சில அரசியல்வாதிகள் கிளம்பியிருக்கிறார்கள்.
அதில் சீத்தாராம் யெச்சூரியும் ஒருவர். அனைத்து கவர்னர்களும் மக்களுக்கு நல்லது செய்ய தான் அரசியல் அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
மக்களுக்கு நல்லது செய்வதற்காக தான் கவர்னர்கள் உள்ளோம். ஆனால், கவர்னர்கள் மக்களை சந்தித்தால் அரசியல்வாதிகளுக்கு குளிர் ஜுரம் ஏற்படுகிறது.
இவ்வாறு தமிழிசை கூறினார்.
- கடலோர கிராமங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
- 15 ஆயிரம் விசை மற்றும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.
புதுச்சேரி:
வங்கக்கடலில் ஏற்பட்டு ள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வலுவடைந்து வருவதால், கடலோர கிராமங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கடல் 3வது நாளாக சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், காரைக்கால் மாவட்டத்தைச்சேர்ந்த காரைக்கால் மேடு, கிளிஞ்சல்மேடு, கோட்டுச்சேரி மேடு உள்ளிட்ட 11 மீனவ கிராமத்தைச்சேர்ந்த சுமார் 15 ஆயிரம் விசை மற்றும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.
இதனால், காரைக்காலிலி ருந்து மீன் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்லாததால், பெரு ம்பாலுமான விசைப்ப டகுகள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் வரிசையாக கட்டிவைக்கப்பட்டுள்ளது. பைபர் படகுகள் காரை க்கால் அரசலாற்றின் கரையோ ரமும், மீனவ கிராம ங்களிலும் பாதுக்கா ப்பாக நிறுத்தி வைக்க ப்பட்டு ள்ளது. 3 -வது நாளாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்க ப்பட்டுள்ளதால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மதிக்கத்தக்க பெண் உடலில் உடையின்றி உப்பிய நிலையில் நிர்வாணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- காவல்நிலையத்திற்கு பெண்ணின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் அளித்தார்.
புதுச்சேரி:
காரைக்கால் அகில இந்திய வானொலி நிலையம் அருகே, தியாகி திருநாவுக்கரசு நகரை ஒட்டி, வாய்க்கல் ஒன்று உள்ளது. வாய்க்காலை ஒட்டிய வயல்வெளிகளில், அப்பகுதி சிறுவர்கள் நத்தை பிடிப்பது வழக்கம். வழக்கம் போல், சிறுவர்கள் சிலர், அப்பகுதி யில் நத்தை பிடித்து கொண்டிருந்த போது, வாய்க்கால் நீரில், 40 லிருந்து 45 வய து மதிக்கத்தக்க பெண், உடலில் உடையின்றி உப்பிய நிலையில் நிர்வாணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடந்து சிறுவர்கள் அங்குள்ளோரிடம் விபரத்தை கூறினர்.
அதன்பேரில், எம்.ஜி.ஆர் நகர் சுனாமி குடியிருப்பைச்சேர்ந்த மினி லாரி டிரைவர் ராஜீவ் காந்தி என்பவர், காரைக்கால் நகர காவல்நிலையத்திற்கு பெண்ணின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் அளித்தார். மேலும், அந்த சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சிலர் பெண்ணின் உடலை பார்த்து அடையாளம் தெரியாத காரணத்தால், யாரோ, இந்த பெண்ணை இங்கு கொண்டுவந்து கற்பழித்து கொலை செய்தி ருக்கலாம்என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக போலீ சார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மோட்டார் சைக்கிளை நிறுத்தி பூட்டிவிட்டு நண்பர்களோடு பேசியவாறு நடைபயிற்சி மேற்கொண்டார்.
- 2 பேரையும் காரைக்கால் நகர காவல்நிலையத்தில் மோட்டார் சைக்கிளுடன் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் கிளிஞ்சல்மேடு சுனாமி குடியிருப்பைச்சேர்ந்தவர் மாதவன். மீன்பிடி தொழில் செய்துவருகிறார். இவர் காரைக்கால் கடற்கரையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகே, ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை நிறுத்தி பூட்டிவிட்டு நண்பர்களோடு பேசியவாறு நடைபயிற்சி மேற்கொண்டார். ஒரு மணி நேரம் கழித்து மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தபோது, மோட்டார் சைக்கிள் பூட்டை உடைத்து, 3 நபர்கள் சாலையில் தள்ளிகொண்டு சென்றதை பார்த்து, நண்பர்கள் உதவியுடன் மோட்டார் சைக்கிளை தள்ளிகொண்டு சென்ற 2 பேரை மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பியோடி விட்டார்.
தொடர்ந்து, பிடிபட்ட 2 பேரையும் காரைக்கால் நகர காவல்நிலையத்தில் மோட்டார் சைக்கிளுடன் ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் மோகன், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, ராஜகண்பாதி, சார்லஸ் மற்றும் போலீசார் 2 பேரையும் விசாரித்தபோது, திருவாரூர் அண்ணாநகர் பின்னவாசலைச்சேர்ந்த சதீஷ்(வயது18) அவருடைய நண்பர் திருவாரூர் தாமரைக்குளம் தெருவைச்சேர்ந்த 17 வயது இளைஞர் என்பதும் தெரியவந்தது. பின்னர் இருவரையும் கைது செய்து, இருவரும் ஏற்கெனவே திருடிய ஒரு மோட்டார் சைக்கிளுடன் 2 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் தேடிவருகின்றனர்.
- இயற்கை விவசாயத்தை மேம்படுத்த விவசாயிகளுக்கு நெல் திருவிழா நடத்தி அதன் மூலம் விலை இல்லா விதைகள் வழங்கி வருகிறார்.
- 5 ஏக்கரில் அரிய வகை நெற்பயிரான ராஜமுடி நெல், சின்னார் 20 நெல் மற்றும் செங்கல்பட்டு சிறுமனி, சம்பா நெல் ரகத்தை சிவலிங்கம் மற்றும் இந்தியா வரைபடம் வடிவத்தில் பயிரிட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர்.
விவசாயியான பாஸ்கர் வரிச்சிகுடி கிராமத்தில் தனக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை விவசாய முறையில் மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, ராஜமுடி சின்னார் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு வருகிறார்.
மேலும் இயற்கை விவசாயத்தை மேம்படுத்த விவசாயிகளுக்கு நெல் திருவிழா நடத்தி அதன் மூலம் விலை இல்லா விதைகள் வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் அனைவரும் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது வயலின் நடுவே 5 ஏக்கரில் அரிய வகை நெற்பயிரான ராஜமுடி நெல், சின்னார் 20 நெல் மற்றும் செங்கல்பட்டு சிறுமனி, சம்பா நெல் ரகத்தை சிவலிங்கம் மற்றும் இந்தியா வரைபடம் வடிவத்தில் பயிரிட்டுள்ளார்.
அந்த நெற்பயிர்கள் அனைத்தும் தற்போது நன்றாக வளர்ந்துள்ளது. இது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
- மாட்டின் கன்று இரு தலையுடன் இருந்ததால் கன்றை வெளியே தள்ள முடியாமல் சிரமப்பட்டது.
- மாட்டின் உரிமையாளர்கள் மாடு சினைப்பருவத்தில் இருக்கும்போதே அதை ஸ்கேன் செய்து பார்த்திருக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவையை அடுத்த தமிழக பகுதியான மரக்காணத்தில் பசுமாடு சினையாக இருந்தது.
மாட்டின் கன்று இரு தலையுடன் இருந்ததால் கன்றை வெளியே தள்ள முடியாமல் சிரமப்பட்டது. மாட்டிற்கு டாக்டர் செல்வமுத்து சிகிச்சை அளித்தார்.
ஆனால், கன்றை வெளியே எடுப்பது மிகவும் சிரமமாக இருந்தது. இறுதியாக, கன்று வெளியே எடுக்கப்பட்டது. சில மணி நேரம் உயிருடன் இருந்த கன்று மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தது.
இதுகுறித்து கால்நடை டாக்டர் செல்வமுத்து கூறியதாவது:-
கருவுற்றிருக்கும்போது கரு சரியாக பிளவுபடாததால் அரிதான இரட்டை வடிவம் உருவாகியுள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையில் மாட்டின் உரிமையாளர்கள் மாடு சினைப்பருவத்தில் இருக்கும்போதே அதை ஸ்கேன் செய்து பார்த்திருக்க வேண்டும். அப்போது தான் முன்கூட்டியே கண்டறிந்து அதை சரி செய்வதற்கான வேலையை பார்க்க முடியும்.
இவ்வாறு டாக்டர் செல்வமுத்து கூறினார்.
- கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
- பெரும்பாலுமான தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
புதுச்சேரி:
வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தமானது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி சென்னை மற்றும் புதுச்சேரி நோக்கி நகர்ந்து வருவதால், அடுத்த 2நாட்களுக்கு தொடர்மழை மற்றும் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி நேற்று இரவு முதல் காரைக்காலில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஒரு சில நேரங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக காரைக்காலில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு புதுச்சேரி அரசு 2 நாள் விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் சென்னை வானிலை நிலையம் எச்சரிக்கை தொடர்ந்து. காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 11 மீனவர் கிராம மீனவர்கள் சுமார் 12,000- க்கு மேற்பட்டோர் இன்று கடலுக்குச் செல்லவில்லை.
ஏற்கனவே கடலுக்குச் சென்ற மீனவர்கள் நேற்று மாலை அவசரமாக கரை திரும்பினார். மழையின் காரணமாக காரைக்காலில் உள்ள பெரும்பாலுமான தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது .ஒரு சில இடங்களில் சாக்கடைகள் வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாத காரணத்தால் மழை நீர் சாலைகளில்தேங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும் காரைக்கால் திருநள்ளார், நெடுங்காடு, சுரக்குடி , திருப்பட்டும் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வயல்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது.






