என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கப்பல் பயணத்துக்கு குறைவான கட்டணமே வசூலிக்க முடிவு செய்துள்ளனர்.
    • பெரும்பாலான பயணிகள் இனி புதுவை வழியாக இலங்கைக்கு செல்ல விரும்புவார்கள் என தெரிகிறது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் உள்ள 2-ம் கட்ட நகர துறைமுகங்களில் சரக்கு கப்பல் சேவை மற்றும் பயணிகள் கப்பல் சேவையை அதிகப்படுத்தி துறைமுகங்களின் வருவாயை பெருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    புதுவை உப்பளம் துறைமுகத்தில் இருந்து இலங்கை, யாழ்பாணத்தில் உள்ள காங்கேசன் துறைமுகத்துக்கு 300 பயணிகள் பயணிக்கும் ஏ.சி. வசதியுடன் கூடிய கப்பல் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    இதற்காக உப்பளம் துறைமுகத்தில் உள்ள ஒரு குடோனில் இதற்கான அலுவலகம் செயல்பட கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கு சுங்கத்துறை அலுவலகம் செயல்பாட்டில் உள்ளது.

    புதுவையில் இருந்து செல்லும் கப்பல் பயணத்துக்கு குறைவான கட்டணமே வசூலிக்க முடிவு செய்துள்ளனர்.

    இதனால் தமிழக பகுதியை சேர்ந்த பெரும்பாலான பயணிகள் இனி புதுவை வழியாக இலங்கைக்கு செல்ல விரும்புவார்கள் என தெரிகிறது.

    இலங்கை செல்லும் பயணிகள் கப்பல் சேவையால் புதுவை உப்பளம் துறைமுகத்துக்கு அதிகளவு வருவாயும், மேலும் உள்ளூர் இளைஞர்களுக்கு மறைமுக வேலை வாய்ப்பும் ஏற்படும் என அதிகாரிகள் கூறினர்.

    • காரைக்கால் திருநள்ளாறு வீதியில் உள்ள தருமபுரத்தில், புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது
    • கொடிமரத்தில் ஏற்றப்படும் கொடியை, ஆலய பங்குத்தந்தை மந்திரித்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் திருநள்ளாறு வீதியில் உள்ள தருமபுரத்தில், புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆண்டுத்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆண்டுத்திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, கொடிமரத்தில் ஏற்றப்படும் கொடியை, ஆலய பங்குத்தந்தை மந்திரித்தார். தொடர்ந்து, கொடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது. ஊர்வலம் மீண்டும் ஆலயத்தை வந்தடை ந்தவுடன், பெங்களுரு புனித பேதுரு பாப்பிறை குருமடம் பேராசிரியர் அலெக்சாண்டர் தலை மையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.  விழா முடியும் வரை, தினசரி மாலை சிறிய தேர்பவனியும், திருப்பலியும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்சியாக, ஏப்ரல் 21-ந் தேதி இரவு, காரைக்கால் குரும்பகரம் பங்குத்தந்தை ராயப்பன் தலைமையில் 3 பெரிய தேர்பவனியும், ஏப்ரல் 22-ந் தேதி இரவு, நீலகிரியைச்சேர்ந்த பங்குகுரு செபஸ்தியான் தலைமையில், சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு 5 தேர்பவனியும் நடைபெறவுள்ளது. ஏப்ரல் 23-ந் தேதி காலை கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    • நாய்கள் கடித்து தின்றது அழுகிய நிலையில் இருந்த குழந்தையின் தலை என்பது தெரியவந்தது.
    • சுடுகாட்டு பகுதியில் இருந்து நாய்கள் குழந்தையின் தலையை எடுத்து வந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம் சண்முகாநகர் ராமசிங் வீதியில் அரசு கழிவறை கட்டிடம் உள்ளது.

    இதன் அருகே உள்ள காலி இடத்தில் நேற்று ஏராளமான தெரு நாய்கள் உருண்டையான பொருள் ஒன்றை கடித்து குதறி தின்றன.

    அப்போது நாய்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டு ஒன்றுக்கொன்று குரைத்தன.

    இதனை அப்பகுதியில் மருந்து கடை வைத்துள்ள விக்கி என்பவர் பார்த்தார். நாய்கள் கடித்து கொண்டிருந்தது குழந்தையின் தலை போல இருந்தது.

    இதனால் சந்தேகமடைந்த அவர் அப்பகுதி பொது மக்கள் உதவியுடன் நாய்களை விரட்டி அடித்தனர்.

    அப்போதுதான் நாய்கள் கடித்து தின்றது அழுகிய நிலையில் இருந்த குழந்தையின் தலை என்பது தெரியவந்தது. இதனை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    மேலும் இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் தலையை மீட்டனர்.

    மேலும் அந்த பகுதியில் குழந்தையின் மற்ற உடல் பாகங்கள் உள்ளதா? என தேடினர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. தலை அழுகிய நிலையில் இருப்பதால் இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கும் என தெரிகிறது.

    அந்த பகுதியில் குழந்தை ஏதாவது கொலை செய்து வீசப்பட்டதா? அல்லது சுடுகாட்டு பகுதியில் இருந்து நாய்கள் குழந்தையின் தலையை எடுத்து வந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வருகிற 16-ந் தேதி வரை சித்திரை கடற்கரை திருவிழா கொண்டாடப்படுகிறது.
    • சித்திரை கடற்கரை திருவிழாவின் தொடக்கவிழா கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை சுற்றுலாத்துறை மாநிலத்தில் பல்வேறு கடற்கரைகள், இடங்களை தேர்வு செய்து சுற்றுலா தலங்களாக அழகுபடுத்தி உள்ளது.

    கோடை விடுமுறையையொட்டி புதுவையில் சுற்றுலா யணிகள் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளை கவரவும், அவர்களின் வருகையை அதிகரிக்கவும் கடந்த ஆண்டு தமிழ் புத்தாண்டில் சித்திரை கடற்கரை திருவிழா கொண்டாடப்பட்டது.

    இதேபோல இந்த ஆண்டும் வருகிற 16-ந் தேதி வரை சித்திரை கடற்கரை திருவிழா கொண்டாடப்படுகிறது. 3 நாட்கள் நடைபெறும் சித்திரை விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விழாக்கள் நடத்தப்படுகிறது.

    புதுவை கடற்கரை சாலை காந்தி திடல், பாண்டி மெரீனா, அரியாங்குப்பம் ரூபி கடற்கரை, சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை, சீகல்ஸ், பாரதி பூங்கா, ஊசுடு படகு குழாம் ஆகிய இடங்களில் கலை நிகழ்ச்சிகள், பீச் வாலிபால் போட்டிகள் நடத்தப்படுகிறது.

    சித்திரை கடற்கரை திருவிழாவின் தொடக்கவிழா கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அமைச்சர் லட்சுமிநாராயணன் வாழ்த்தி பேசினார்.

    நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை செயலர் ஜவகர், இயக்குனர் பிரியதர்ஷினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    சித்திரை திருவிழாவில் முதல் நாளான இன்று புதுவை கடற்கரைகளில் பலவிதமான நிகழ்ச்சிகள் நடந்தது. இசையுடன் கூடிய நடனம், இசைக்கச்சேரிகள், பீச் வாலிபால், பேஸ் பெயிண்டிங், ரெயின் நடனம், குழு விளையாட்டுகள், நீர் விளையாட்டுக்கள், நீச்சல் போன்றவை நடந்தது.

    இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கடற்கரைகளில் கைவினை பொருட்கள் அதிக அளவில் விறபனைக்கு வைத்திருந்தனர். தொடர் விடுமுறையால் புதுவையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வாகனம் நிறுத்தும் இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

    • நிரவி கிராமத்தைச்சேர்ந்த ஸ்ரீமதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஸ்ரீமதி 5 மாத கர்ப்பினியாக உள்ளார்.
    • நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, சக்திவேல் புடவையில் வீட்டின் வளாகத்தில் உள்ள மூங்கில் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டு காணப்பட்டார்

    புதுச்சேரி:

    காரைக்காலை அருகே கோட்டுச்சேரி முக்கூட்டு ஆலமரம் பகுதியைச்சேர்ந்தவர் சக்திவேல் (வயது31). சக்திவேல் தந்தை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அதனால், தாய் காளியம்மாளுடன் வசித்துவந்தார். கொத்தனார் வேலை செய்துவரும் இவர் கடந்த 6 மாதத்திற்கு முன், நிரவி கிராமத்தைச்சேர்ந்த ஸ்ரீமதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஸ்ரீமதி 5 மாத கர்ப்பினியாக உள்ளார்.  சக்திவேலுக்கு குடிபழக்கம் உண்டு. மது அருந்திவிட்டு மனைவி மற்றும் தாயுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இருவரும் பலமுறை எடுத்துகூறியும், சக்திவேல் தொடர்ந்து குடித்துவிட்டு சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஸ்ரீமதி, கணவர் மற்றும் மாமியாரிடம் கூறாமல், நிரவியில் உள்ள அவரது பெரியம்மா வீட்டுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. சக்திவேல் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல், மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததால், தாய் காளியம்மாள் அதே பகுதியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, சக்திவேல் புடவையில் வீட்டின் வளாகத்தில் உள்ள மூங்கில் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டு காணப்பட்டார். இது குறித்து, காளியம்மாள் கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    தமிழ் புத்தாண்டான சோபகிருது ஆண்டு இன்று பிறந்தது.

    புதுவையில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி இன்று சிறப்பு பூஜைகள் நடந்தது.

    காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மணக்குள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து அமெரிக்க வைரம் பொருத்தப்பட்ட கிரீடம், தங்க கவசம் மணக்குள விநாயகருக்கு அணிவிக்கப்பட்டது.

    பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதேபோல தமிழ் புத்தாண்டை முன்னிட்டு காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள், ரெயில் நிலையம் எதிரே உள்ள கவுசிக பாலசுப்பிரமணியர், முத்தியால்பேட்டை தென்கலை சீனிவாச பெருமாள், முத்தியால்பேட்டை வன்னிய பெருமாள், வில்லியனூர் திருக்காமீஸ்வரர், திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர், காசி விஸ்வநாதர் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

    • காரைக்கால், துறைமுகத்தின் ஒரு பகுதியில், மர்மமான முறையில் இறந்த ஆண்பிணம் மிதந்து வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
    • பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் காவலராக பணிபுரிபவர் ஜோதிமணி. இவர், நேற்று முன்தினம் காலை பணியில் இருந்த போது, துறைமுகத்தின் ஒரு பகுதியில், மர்மமான முறையில் இறந்த ஆண்பிணம் மிதந்து வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து, ஜோதிமணி காரைக்கால் மேடு பஞ்சாயத்தார் மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நிரவி போலீசார், ஆண் பிணத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் கொலை செய்யப்பட்டாரா, அல்லது துறைமுகத்தில் இறங்கும் போது, கால்தவறி விழுந்து இறந்தாரா? தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • சுரேஷ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி
    • வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் பீரோ, அலமாரி உள்ளிட்டவை உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகை திருட்டு போய் இருப்பது தெரியவந்தது

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி கீழகாசாகுடி எம்.எஸ்.பி லட்சுமி நகரைச்சேர்ந்தவர் சுரேஷ்.  ,இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதி மாலை ரேவதி, தனது 2 குழந்தைகளுடன் கடைவீதிக்கு சென்றுவிட்டு, இரவு 9 மணி அளவில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டு வாசல் கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு ரேவதி அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் பீரோ, அலமாரி உள்ளிட்டவை உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகை திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இது குறித்து, கோட்டுச்சேரி ேபாலீஸ் நிலையத்தில் ரேவதி புகார் கொடுத்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து, வீட்டு கதவை உடைத்து தங்க நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம், திருட்டு நடந்த வீட்டின் அருகே, கோட்டுச்சேரி போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். பின்னர், அவரை போலீஸ் நிலையம் அழைத்துசென்று விசாரித்தபோது, திருப்பூர் மாவட்டம் எடுவபாலயம் பகுதியைச்சேர்ந்த ஜீவானந்தம்(வயது34) என்பதும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுரேஷ் வீட்டு கதவை உடைத்து, 40 பவுன் தங்க நகைகளை, கேரளா, சந்திரப்புரத்தைச்சேர்ந்த நண்பர் சம்சுதின் பாபு(32) என்பவரோடு சேர்ந்து கொள்ளையடித்ததையும், 

    • காரைக்காலைச் சேர்ந்த 35 வயதுபெண்கடந்த 10 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்
    • 84 வயது முதியவர் நேற்று கொரோனாவிற்கு பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டத்தில் சமீப காலமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனாவிற்கு, காரைக்காலைச் சேர்ந்த 35 வயதுபெண்கடந்த 10 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அதனை தொடர்ந்து காரைக்கால் மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை சார்பாக நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பொது இடங்களில் பொதுமக்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், நல்வழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் ஆகியோர் அறிவித்து இருந்தனர்.  இந்த சூழலில் காரைக்கால் பெசன்ட் நகர் பகுதியை சேர்ந்த 84 வயது முதியவர் நேற்று கொரோனாவிற்கு பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, கொரோனா தொற்று ஏற்பட்டு, தஞ்சாவூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், குணமாகிவிட்டதாக எண்ணி, ஆஸ்பத்திரி யிலிருந்து வீட்டுதனி மையில் இருந்த நிலையில், அந்த முதியவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுவை மாநிலத்திலேயே காரைக்காலில் மட்டும் கடந்த 10 நாட்களில் கொரோனா தொற்றால்2 பேர் உயிரிழந்த தால்காரைக்கால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில், பொதுமக்கள் முக கவசம், சமூக இடைவேளையை பின்பற்ற வேண்டுமென மாவட்ட நலவழித்துறை அறிவுறுத்தியுள்ளது.

    • முள்ளோடை என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் பாரில் அவர்கள் அதிக அளவில் மது வாங்கி நீண்ட நேரம் அருந்தியுள்ளனர்.
    • தகராறை தடுக்க சென்ற பார் ஊழியர்களை கையாலும் பீர் பாட்டிலாலும், தாக்கி கொலை மிரட்டல் விட்டனர்.

    பாகூர்:

    கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தற்கொலை முயற்சி செய்தார். அவர் சிகிச்சைகாக புதுவை கிருமாம்பாக்கம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அவரைப் பார்க்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 10-க்கும் மேற்பட்டோர் நேற்று கிருமாம்பாக்கம் பகுதிக்கு வந்தனர்.

    பின்னர் புதுவையில் மதுபாட்டில் குறைந்த விலையில் கிடைக்கும் என்பதால் மது குடிக்க முடிவு செய்தனர்.

    முள்ளோடை என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் பாரில் அவர்கள் அதிக அளவில் மது வாங்கி நீண்ட நேரம் அருந்தியுள்ளனர்.

    போதை தலைக்கு ஏறி பார் ஊழியர்கள் மற்றும் அருகில் மது அருந்தியவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    அவர்களுக்குள்ளே தகராறு ஏற்பட்டு தாக்கி கொண்டனர். இதனை தடுக்க சென்ற பார் ஊழியர்களை கையாலும் பீர் பாட்டிலாலும், தாக்கி கொலைமிரட்டல் விட்டனர்.

    தகவல் அறிந்த புதுவை ரோந்து போலீசார் அங்கு சென்றனர். அவர்களையும், தமிழக வாலிபர்கள் தாக்கினர்.

    இதனையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

    விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டம் வடலூர் ஆர்.சி காலனி பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது 30), அதே பகுதியை சேர்ந்த ஜீவஜோதி (27), குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த சரத்குமார் (25), புவனகிரி அடுத்த கரைமேடு பின்நல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆசைமணி (27), சவுந்தரராஜன் (24), அருள்பாண்டி (20), அருளரசன் (22), வேல்முருகன் (23) என்பது தெரியவந்தது.

    இது சம்பந்தமாக பார் ஊழியர் மூலகுளம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து 9 பேரையும் கைது செய்தனர்.

    • காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் கூலிதொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • எதிரே வந்த சரக்கு லாரி எதிர்பாராத விதமாக பழனி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (வயது 30). இவர் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் கூலிதொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த பழனி திருநள்ளாறு அருகே வந்தபோது எதிரே வந்த சரக்கு லாரி எதிர்பாராத விதமாக பழனி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பழனி லாரி டயரில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    உயிரிழந்த பழனியின் உடலை கைப்பற்றிய போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மரிய கிறிஸ்டின் பால் தலைமை யிலான போலீசார் பிரேத பரிசோதனைக்காக காரைக் கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பழனிக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் திருமணம் நிச்சயிக்கப்பட்டு தடைபட்ட நிலையில் பழனி உயிரிழந்துள்ள சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.

    • போலீசார் விசாரணை செய்த பொழுது, காரில் இருந்த வாலிபர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.
    • தொடர்ந்து காரை சோதனை செய்த பொழுது, ஏராளமான சாராய பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட மேலவாஞ்சூர் பகுதியில், திரு.பட்டினம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தி விசாரணை செய்த பொழுது, காரில் இருந்த வாலிபர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.

    தொடர்ந்து காரை சோதனை செய்த பொழுது, ஏராளமான சாராய பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், காரைக்கால் தலத்தெரு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜா (வயது37), சத்யராஜ் (27) என்பதும், 2 பேரும் காரைக்காலில் இருந்து தமிழக பகுதிக்கு சாராயத்தை கடத்திச் சென்று விற்க முயன்றதை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான சாராய பாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்து, மாவட்ட கலால் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    ×