என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    250 கிலோ எடையில் பிரமாண்ட யானை சிலை- புதுவையில் தயாராகி ஆந்திர நகர வனத்திற்கு செல்கிறது
    X
    250 கிலோ பைபரில் உருவாகியுள்ள பிரமாண்ட யானை சிலை.

    250 கிலோ எடையில் பிரமாண்ட யானை சிலை- புதுவையில் தயாராகி ஆந்திர நகர வனத்திற்கு செல்கிறது

    • புபேஷ் குப்தா கடந்த 17 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் இயற்கை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு குறித்து வனவிலங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.
    • ஆந்திர மாநில கடப்பா மாவட்டத்தில் புலிவேந்தலாவில் அந்த மாநில முதல்-மந்திரியின் நேரடி பார்வையில் நகர வனம் உருவாக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் கைவினை கிராமம் முருங்கப்பாக்கத்தில் இயங்கி வருகிறது. சுற்றுலாத் துறையின் கீழ் கைவினைப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுஉள்ளன.

    கைவினை கலைஞர்கள் மட்டுமல்லாது ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் இங்கு பல்வேறு சிற்பங்கள் உருவாக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பிடத்தக்க வகையில் பல்லுயிர் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த புதுவை பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களில் அழிவின் விளிம்பில் உள்ள பறவைகள், மிருகங்கள், பூச்சி வகைகள் போன்றவற்றை சிற்பங்களாக வடிவமைக்கபடுகின்றன.

    புதுவை அரசும் சர்வதேச சுற்றுச்சூழல் அறக்கட்டளையும் இணைந்து இந்த விழிப்புணர்வு சிற்பங்கள் உருவாக்கி வருகின்றன. சர்வதேச சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் நிறுவனரான முனைவர் புபேஷ் குப்தா கடந்த 17 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் இயற்கை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு குறித்து வனவிலங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    இவரது முயற்சியால் புதுவையை அலங்கரித்து வரும் இது போன்ற சிற்பங்கள் தற்போது தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என தென் மாநிலங்களுக்கும் செல்ல தொடங்கியுள்ளன. இங்கு உருவாகும் மிருகங்கள், பறவைகள் போன்றவை திருப்பதி பூங்காக்களிலும் சேலம் சரணாலயங்களும் வண்டலூர் மிருக காட்சி சாலையிலும் மக்களை ஈர்க்கும் வகையில் இயற்கை சூழலுடன் வைக்கப்பட்டு உள்ளது.

    தற்போது ஆந்திர மாநில கடப்பா மாவட்டத்தில் புலிவேந்தலாவில் அந்த மாநில முதல்-மந்திரியின் நேரடி பார்வையில் நகர வனம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு ஏற்கனவே புலி, சிங்கம், மான்கள், மயில், பாம்பு உட்பட 50 கற்சிற்பங்கள் புதுவையில் உருவாக்கப்பட்டு அனுப்பப் பட்டுள்ளன. தற்போது வரவேற்பில் வைக்க பிரமாண்ட யானை சிலை தயாரிக்கப்பட்டுள்ளது.

    இந்த சிலை 250 கிலோ பைபரில் 9½ அடி உயரத்தில் 90 நாட்களில் 10 கலைஞர்களை கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பிரமாண்ட யானைசிலை ஆந்திராவிற்கு பயணமாக உள்ளது.

    Next Story
    ×