என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
    • சஞ்சய் ராவத் மக்கள், அரசு மற்றும் நீதித்துறை மீது நம்பிக்கை வைக்க வேண்டும்

    மும்பை :

    சிவசேனா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத்தின் மும்பை வீட்டில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது சஞ்சய் ராவத் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "எந்த ஊழலிலும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று மறைந்த சிவசேனா நிறுவன தலைவர் பாலாசாகேப் பால் தாக்கரே மீது சத்தியம் செய்து கூறுகிறேன்" என தெரிவித்தார்.

    இதுமட்டும் இன்றி எதிர்க்கட்சிகள் அவரின் வீட்டில் நடைபெற்ற சோதனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    இதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

    இந்த நிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அமலாக்கத்துறை நடவடிக்கை குறித்து நிருபர்களிடம் கூறுகையில், "சஞ்சய் ராவத் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று அறிவித்துள்ளார். அப்படியானால், அவர் விசாரணைக்கு பயப்படுவது ஏன்? அது தொடர்ந்து நடக்கட்டும். நீங்கள் நிரபராதி என்றால் ஏன் பயம்?"

    சந்தர்ப்ப சூழ்நிலையின் நிர்ப்பந்தத்தால் தான் சிவசேனா அதிருப்தி அணியில் இணைந்ததாக சிவசேனா தலைவர் அர்ஜூன் கோட்கர் கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "நாங்கள் அவரை அழைத்தோமா? அமலாக்கத்துறைக்கு பயந்து அல்லது எந்த அழுத்தத்தாலும் எங்களிடமோ அல்லது பா.ஜனதாவுக்கு வரவேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னாள் மந்திரி கிரிஷ் மகாஜன் கூறுகையில், "சஞ்சய் ராவத் மறைந்த பால் தாக்கரேயின் பெயரை தேவையில்லாமல் இந்த பிரச்சினையில் எழுப்பி மத்திய அரசுக்கு எதிராக சிவசேனா தொண்டர்களை தூண்டிவிடுகிறார். அவர் எந்த தவறும் செய்யவில்லை என்றால் அவர் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவர் மக்கள், அரசு மற்றும் நீதித்துறை மீது நம்பிக்கை வைக்க வேண்டும்" என்றார்.

    மற்றொரு பா.ஜனதா தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கிரித் சோமையா கூறுகையில், "சஞ்சய் ராவத் தற்போது விசாரணையில் இருக்கிறார். அவர் மீது எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை. அவர் இப்போது எந்த அரசியல் சார்ந்த கருத்துகளையும் கூறக்கூடாது. அவர் ஏதேனும் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால், அதற்கான நடவடிக்கைகளை அவர் எதிர்கொள்ள வேண்டும்" என்றார்.

    • சிவசேனா இந்துக்கள் மற்றும் மராத்தி மக்களுக்கு பலம் அளித்து வருகிறது.
    • எதிர்க்கட்சிகளை எதிரிகளாக கருதக்‌கூடாது என்று இந்திய தலைமை நீதிபதி கூட கூறியுள்ளார்.

    மும்பை :

    சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் வீட்டில் நேற்று அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

    இதற்கு மத்தியில் தானே மாவட்டத்தை சேர்ந்த கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களிடம் தனது இல்லமான மாதோஸ்ரீயில் உத்தவ் தாக்கரே உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அமலாக்கத்துறை விருந்தினர்கள் தற்போது சஞ்சய் ராவத்தின் வீட்டில் உள்ளனர். அவர் கைது செய்யப்படலாம். இது என்ன வகையான சதி? சிவசேனா இந்துக்கள் மற்றும் மராத்தி மக்களுக்கு பலம் அளித்து வருகிறது. எனவே சிவசேனாவை அழிக்க சதி நடக்கிறது. இந்த நடவடிக்கை அதில் ஒரு அங்கமாகும்.

    சிவசேனாவால் அரசியல் ரீதியாக வளர்ந்தவர்கள் தற்போது தங்களின் விசுவாசத்தை மாற்றிக்கொண்டுள்ளனர்.

    முன்னாள் மந்திரி அர்ஜுன் கோட்கர் குறைந்தபட்சம் அழுத்தத்தின் கீழ் தான் அதிருப்தி அணிக்கு செல்வதாக ஒப்புக்கொண்டார்.

    ஆனந்த் திகே 2 ஆண்டுகள் சிறையில் இருந்தபோது சிவசேனா தொண்டர்களுக்கு விசுவாசம் என்றால் என்ன என்பதை காட்டினார்.

    கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியின் மும்பை குறித்த கருத்தால் மராத்தியர்கள் மற்றும் மராட்டியத்தை அவமதித்துள்ளார். அவருக்கு கோலாப்பூரின் செருப்புகளை காட்ட வேண்டும்.

    இந்த விஷயத்தில் அடிமைகளாக மாறியவர்களின் எதிர்வினை என்னவாக இருந்தது. இது மிகவும் லேசானது. எங்களுக்கு அவரின் பேச்சில் உடன்பாடில்லை என்று கூறி கடந்துவிட்டனர்.

    எதிர்க்கட்சிகளை எதிரிகளாக கருதக்‌கூடாது என்று இந்திய தலைமை நீதிபதி கூட கூறியுள்ளார். ஆனால் நாங்கள் கூட்டணி கட்சிகளாக இருந்தபோதும் எதிரிகளாக கருதப்பட்டோம்.

    அஞ்சாத, அநீதிக்கு எதிராக போராடும் அர்ப்பணிப்புள்ள தொண்டர்கள் கட்சிக்கு தேவைப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மும்பை:

    சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் மீது 1,034 கோடி நில மோசடி வழக்கு உள்ளது. இதில் சட்டவிரோதமாக நடந்த பணபரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது தொடர்பாக கடந்த 1-ந்தேதி சஞ்சய் ராவத் மும்பை அமலாக்கதுறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் மோசடி குறித்து 10 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    இதன் தொடர்ச்சியாக 20-ந் தேதி மற்றும் 27-ந்தேதி ஆஜராகும்படி சஞ்சய் ராவத்துக்கு 2 முறை சம்மன் அனுப்பட்டது. ஆனால் தற்போது பாராளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருவதால் ஆகஸ்டு மாதம் 7-ந் தேதிக்கு பிறகு ஆஜராக விலக்கு அளிக்கும்படி சஞ்சய் ராவத் தரப்பில் அமலாக்கதுறைக்கு தெரிவிக்கப்பட்டது.

    மும்பை புறநகர் பகுதியான பாண்டூப்பில் உள்ள சஞ்சய் ராவத் வீட்டுக்கு இன்று காலை 7 மணி அளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமலாக்கதுறை அதிகாரிகள் அதிரடியாக சென்றனர். பின்னர் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

    வீட்டில் இருந்த சஞ்சய் ராவத்திடமும் விசாரணை நடத்தப்பட்டது. பணபரிவர்த்தனை மற்றும் மனைவி உள்ளிட்டவர்கள் பெயரில் உள்ள சொத்துக்கள் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு சஞ்சய்ராவத் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் என் மீது தவறான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நான் இறக்கும் வரை சிவசேனாவில் இருந்து விலக மாட்டேன். நான் எந்த மோசடியிலும் ஈடுபடவில்லை என கருத்து தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நான் பேசத் தொடங்கினால் பூகம்பம் வெடிக்கும் என ஏக்நாத் ஷிண்டே கூறினார்.
    • உத்தவ் தாக்கரேவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே பேசியுள்ளார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சியை பிளவுபடுத்திய ஏக்நாத் ஷிண்டே பா.ஜ.க. ஆதரவுடன் முதல் மந்திரியாகி உள்ளார். இதனால் சிவசேனா 2 ஆக உடைந்துள்ளது.

    ஷிண்டே அணியினர் உத்தவ் தாக்கரேயை விமர்சிக்கக் கூடாது என பா.ஜ.க.வை எச்சரித்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக உத்தவ் தாக்கரே, ஷிண்டே அணி இடையே மோதல் அதிகரித்து வருகிறது.

    ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது அணியில் உள்ள சில தலைவர்கள் நேரடியாக உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரேவை விமர்சிக்கத் தொடங்கி உள்ளனர்.

    இந்நிலையில், நாசிக் மாவட்டம் மாலேகானில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஏக்நாத் ஷிண்டே பேசியதாவது:

    விபத்தில் மரணம் அடைந்த சிவசேனா மூத்த தலைவர் தர்மவீருக்கு (ஆனந்த் திகே) என்ன நடந்தது என எனக்கு தெரியும். இதில் நான் சாட்சி. நான் பேட்டி கொடுக்க ஆரம்பித்தால் பூகம்பம் வெடிக்கும். சிலரை போல நான் ஆண்டுதோறும் விடுமுறைக்கு வெளிநாடு செல்வதில்லை. சிவசேனாவும், அதன் வளர்ச்சியும் மட்டுமே எனது மனதில் உள்ளது. பால்தாக்கரே மருமகள் ஸ்மிதா தாக்கரே, பேரன் நிகார் தாக்கரே எனக்கு ஆதரவு அளித்துள்ளனர். எங்களை துரோகிகள் என கூறுகிறீர்கள், முதல்மந்திரி பதவிக்காக பால் தாக்கரேவின் கொள்கையை சமரசம் செய்த உங்களை நாங்கள் எப்படி அழைப்பது?. நீங்கள் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டீர்கள். ஆனால் முதல் மந்திரியாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்தீர்கள். இது துரோகம் இல்லையா?

    அடுத்த சட்டசபை தேர்தலில் எனது தலைமையிலான சிவசேனா, பா.ஜ.க. கூட்டணி 288 தொகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவித்தார்.

    • கடன் பெற்று மோசடி செய்ததாக திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது.
    • புனே காண்டிராக்டர் வீட்டில் இருந்து ஹெலிகாப்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

    மும்பை:

    17 வங்கிகள் கூட்டமைப்பை ஏமாற்றி ரூ.34,615 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக இயக்குனர் கபில் வதாவன், இயக்குனர் தீபக் வதாவன் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த மோசடி பணத்தின் மூலம் வாங்கப்பட்ட சொத்துகள் தொடர்பாக பல்வேறு இடங்களிலும் கடந்த சில நாட்களாக சி.பி.ஐ. சோதனை நடத்திவருகிறது.

    இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மகாராஷ்டிர மாநிலம் புனேயில் அவினாஷ் போசாலே என்ற பிரபல காண்டிராக்டரின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஹெலிகாப்டரை சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    • மகாராஷ்டிரா மழை வெள்ளத்தை சந்தித்து வருகிறது.
    • புதிய அரசு அமைந்து ஒரு மாதமாகி விட்டது.

    மும்பை :

    மக்கள் வெள்ளத்தில் தவிக்கும் நிலையில் மந்திரி சபை விரிவாக்கத்துக்கான அறிகுறி எதுவும் இல்லை என்று சரத்பவார் குற்றம் சாட்டினார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நாசிக்கில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

    மகாராஷ்டிரா மழை வெள்ளத்தை சந்தித்து வருகிறது. மக்கள் பரிதவிக்கிறார்கள். குறிப்பாக விவசாயிகள் பெருந்துயரத்தை சந்தித்து வருகிறார்கள். இதுபோன்ற சூழலில் மந்திரிகள் நேரில் சென்று மக்கள் துயர் துடைக்க வேண்டும்.

    ஆனால் மகாராஷ்டிராவில் மந்திரி சபை விரிவாக்கத்துக்கான அறிகுறி எதுவும் இல்லை. புதிய அரசு அமைந்து ஒரு மாதமாகி விட்டது. முதல்-மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரி ஆகிய இருவர் மட்டுமே அரசை நடத்தி செல்லலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள். எதிர்க்கட்சி தலைவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வருகிறார்கள். இவர்களிடம் இருந்து முதல்-மந்திரி ஷிண்டே பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதிய அரசு கவிழுமா? என்று நிருபர் ஒருவர் சரத்பவாரிடம் கேட்டார்.

    அதற்கு அவர் பதிலளித்து கூறுகையில், "இதை கணிக்க நான் ஒன்றும் ஜோதிடர் அல்ல. தேர்தல் எப்போது வந்தாலும், அதை சந்திக்க தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருந்தனர்.
    • தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் மேற்கு அந்தேரி பகுதியில் உள்ள சித்ரகூட் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்து வரும் இந்தி திரைப்படப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

    நேற்று படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட தீடீர் தீ விபத்தால் அந்த பகுதியில் முழுவதும் கரும்புகை பரவியது. இந்த தீ விபத்தில் சிக்கி தீக்காயம் அடைந்தவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

    விரைந்து சென்ற மும்பை தீயணைப்பு படையினர் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ஷ்ரத்தா கபூர் படிப்பிடிப்பில் கலந்து கொள்ள இருந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

    • ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி பதவியை மிக மோசமான முறையில் பெற்றுள்ளார்.
    • ஜனநாயகத்தில் எந்த கட்சியும் நிரந்தர வெற்றி பெறாது.

    மும்பை :

    சிவசேனா கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே நேற்று தனது 62-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

    இதை முன்னிட்டு் தனது கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-

    டெல்லி அரசு தற்போது சிவசேனாவுக்கு எதிராக சிவசேனாவுக்குள்ளேயே சண்டையை தூண்டி மராத்தி பேசும் மக்களை பிளவுபடுத்த விரும்புகிறது.

    தற்போதைய ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சிகளை பார்த்து பயப்படுகிறார்கள் என்றால் அது அவர்களின் திறமையின்மையை காட்டுகிறது. ஜனநாயகத்தில் எந்த கட்சியும் நிரந்தர வெற்றி பெறாது.

    நான் மேற்கொண்ட மகா விகாஸ் கூட்டணி சோதனையை மக்கள் வரவேற்றுள்ளனர்.

    சிவசேனாவை சேர்ந்தவர் மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்பார். இதற்காக கட்சியை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபடுவேன். இதற்காக ஆகஸ்ட் மாதம் முதல் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். கட்சியில் அதிக உறுப்பினர்களை சேர்க்க விரும்புகிறேன்.

    2019-ம் ஆண்டு பா.ஜனதாவிடம் நான் என்ன கேட்டேன்? 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி, அது ஒப்புக்கொள்ளப்பட்டது. இதுவும் எனக்காக இல்லை. நான் சிவசேனாவை சேர்ந்தவரை முதல்-மந்திரி ஆக்குவேன் என்று சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேயிடம் வாக்குறுதி அளித்திருந்தேன். எனது வாக்குறுதி இன்னும் முழுமையடையவில்லை.

    2019-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்ட அனைத்தையும் மறுத்ததன் மூலம் பொய்யின் அனைத்து எல்லைகளையும் பா.ஜனதா கடந்தது. இதனால் மகா விகாஸ் அகாடி பிறந்தது.

    ஆனால் தற்போது அதிருப்தியாளர்கள் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சிவசேனாவுக்கு தீங்கு விளைவிப்பதாக கூறுகின்றனர். இது வெறும் சாக்குப்போக்கு தான்.

    அவர் (ஏக்நாத் ஷிண்டே) முதல்-மந்திரி பதவியை மிக மோசமான முறையில் பெற்றுள்ளார். அதிகார மோகத்தில் இப்படி செய்துவிட்டு தன்னை மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேவுடன் ஒப்பிட்டு கொள்கிறார்.

    நாளை அவர் தன்னை நரேந்திர மோடி என்று கூறிக்கொண்டு பிரதமர் பதவிக்கு கூட உரிமை கோர வாய்ப்பு உள்ளது. பா.ஜனதாவினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலில் ஒருசிலரை மிரட்டி பணம் வாங்கியபோது யாரும் இதுபற்றி புகார் கொடுக்கவில்லை.
    • பணத்தை தனது கணக்குக்கு அனுப்பாமல் நண்பர்களின் கணக்குக்கு அனுப்ப கூறியுள்ளார். இதற்காக அவர்களுக்கு கமிஷனும் வழங்கி உள்ளார்.

    மும்பை:

    மும்பை, ஆண்டோப் ஹில் பகுதியை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

    அந்த புகாரில் தனது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வாலிபர் ஒருவர் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது மேலும் பல இளம்பெண்கள் தங்களுக்கும் இதுபோன்ற மிரட்டல் வருவதாக கூறினர். இதையடுத்து மும்பை உதவி போலீஸ் கமிஷனர் அஸ்வினி பாட்டீல் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார், மிரட்டல் வாலிபரை தேடினர்.

    மேலும் பெண்களின் ஆபாச படங்கள் பதிவிடப்பட்ட செல்போன் ஐ.டி. மூலம் அதனை பதிவிட்ட நபரை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டனர். இதில் பெண்களின் ஆபாச படங்களை பதிவிட்டது குஜராத் மாநிலம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த பிரசாந்த் ஆதித்யா (வயது 19 ) என தெரியவந்தது.

    தனிப்படை போலீசார் காந்தி நகர் சென்று வீட்டில் பதுங்கி இருந்த பிரசாந்த் ஆதித்யாவை கைது செய்தனர். பின்னர் அவரை மும்பை அழைத்து வந்து விசாரித்தனர்.

    இதில் பிரசாந்த், 22-க்கும் மேற்பட்ட பெண்களின் படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் பறித்து இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:-

    பெண்கள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைத்துள்ள டி.பி. படங்களை பதிவிறக்கம் செய்து அதனை பிரசாந்த் ஆபாசமாக சித்தரித்து உள்ளார்.

    அந்த படங்களை மீண்டும் அந்த பெண்களுக்கு திருப்பி அனுப்பி பணம் கேட்டு மிரட்டி உள்ளார். உடனே பணம் கொடுத்தால் ரூ.500 என்றும், தாமதமாக தந்தால் ஒவ்வொரு நாளைக்கும் ரூ.1000 வீதம் கூடுதலாக தரவேண்டும் எனவும் மிரட்டியுள்ளார்.

    பிரசாந்த்திடம் இதற்கு முன்பு ஒரு நபர் இதுபோல செல்போனில் மிரட்டி பணம் பறித்து உள்ளார். அவரிடம் பணத்தை இழந்த பிரசாந்த், தானும் இதுபோல மிரட்டி பணம் பறிக்க முடிவு செய்துள்ளார்.

    முதலில் ஒருசிலரை மிரட்டி பணம் வாங்கியபோது யாரும் இதுபற்றி புகார் கொடுக்கவில்லை. எனவே அவர் இதனை தொடர்ந்துள்ளார். பணத்தை தனது கணக்குக்கு அனுப்பாமல் நண்பர்களின் கணக்குக்கு அனுப்ப கூறியுள்ளார். இதற்காக அவர்களுக்கு கமிஷனும் வழங்கி உள்ளார்.

    கைதான பிரசாந்த் 10-ம் வகுப்பு பெயில் ஆனவர். மும்பையில் உள்ள ஒரு மாஸ்க் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

    • அதிருப்தி அணியினர் எல்லோரும் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல.
    • மகாவிகாஸ் கூட்டணியில் ஒருவரை, ஒருவர் மதித்தோம்.

    மும்பை :

    மகாராஷ்டிராவில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை அடுத்து, முதல்-மந்திரி பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். அதன்பிறகு அவர் முதல் முறையாக தனது கட்சி பத்திரிகையான 'சாம்னா'வுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    அதிருப்தி அணியினர் மரத்தில் அழுகிய இலைகள். அவை கண்டிப்பாக அகற்றப்பட வேண்டும். இது மரத்திற்கு நல்லது. மரத்தில் புதிய இலைகள் வளரும்.

    அதிருப்தி அணியினர் அவர்கள் உண்மையான சிவசேனா என கூறுகிறார்கள். இதற்கான பதில் தேர்தல் வந்தால் தெரிந்துவிடும். மக்கள் ஒன்று எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். அல்லது அவர்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். கட்சியில் ஏற்பட்ட பிளவுக்கு யார் காரணம் என கேட்கிறார்கள். சில சிவசேனா தொண்டர்கள், தலைவர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துவிட்டேன் என தோன்றுகிறது. அவர்களை நீண்ட காலமாக நம்பியது எனது தவறுதான்.

    பா.ஜனதா சிவசேனாவை உடைக்க மட்டும் முயற்சி செய்யவில்லை. மற்ற கட்சிகளை சேர்ந்த சிறந்த தலைவர்களையும் தங்கள் அரசியலுக்காக பயன்படுத்த முயற்சி செய்கிறது. காங்கிரஸ் தலைவர் சர்தார் வல்லபாய் பட்டேலை பயன்படுத்த முயற்சி செய்தது போல, மறைந்த எனது தந்தை பால்தாக்கரேயையும் பயன்படுத்த முயற்சி செய்கிறார்கள். அதிருப்தி அணியினர் எல்லோரும் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல. அவர்கள் சிவசேனா தொண்டர்கள் இடையே தான் பகையை ஏற்படுத்துகின்றனர்.

    மகாவிகாஸ் கூட்டணி நல்ல முயற்சி. மக்களுக்கு அது தவறான நடவடிக்கை என்றால், அவர்கள் எங்கள் கூட்டணிக்கு எதிராக எழுவார்கள். மகாவிகாஸ் கூட்டணியில் ஒருவரை, ஒருவர் மதித்தோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மகாராஷ்டிராவை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்ல அமைதி தேவை.
    • இப்போது தான் உத்தவ் தாக்கரே பொதுவெளியில் தோன்றுவது அதிகரித்து உள்ளது.

    மும்பை :

    சிவசேனா பிளவுபட்டுள்ள நிலையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணிக்கும், ஷிண்டே தலைமையிலான அணிக்கும் வார்த்தை போர் வலுத்துள்ளது.

    குறிப்பாக ஆதித்ய தாக்கரே கட்சியை மீண்டும் வலுப்படுத்த நடத்தி வரும் பேரணியில் அதிருப்தி அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை கடுமையாக சாடி வருகிறார்.

    இந்தநிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணியின் செய்தி தொடர்பாளரான தீபக் கேசர்கர் எம்.எல்.ஏ. தெற்கு மும்பையில் வார்டு அளவிலான சிவசேனா அலுவலகத்தை திறந்து வைத்து ஊழியர்களிடம் பேசியதாவது:-

    நாங்கள் முக்கியமான 3 கேள்விகளை எழுப்பி உள்ளோம். அந்த கேள்விகளுக்கு இன்னும் எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை. அதில் ஒன்று முதல்-மந்திரியாக இருந்த உத்தவ் தாக்கரே எத்தனை முறை மந்திராலயாவில் உள்ள முதல்-மந்திரி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் சிவசேனா உறுப்பினர்களை சந்திக்க வாய்ப்பு வழங்கினாரா?. இப்போது தான் அவர் பொதுவெளியில் தோன்றுவது அதிகரித்து உள்ளது.

    மகாராஷ்டிராவை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்ல அமைதி தேவை. முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணியில் உள்ள தலைவர்களுக்கு எதிரான பேரணிகளை ஏற்பாடு செய்து அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

    கடந்த 2½ ஆண்டுகளில் மகா விகாஸ் அகாடி அரசு மத்திய அரசை விமர்சிப்பதில் அதிக நேரத்தை செலவிட்டுள்ளது. மத்திய அரசுடன் நல்லுறவை வைத்துக்கொள்ளாவிட்டால், எப்படி வளர்ச்சி அடைய முடியும்?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிருப்தி அணி பின்னால் பலம்வாய்ந்த சக்தி இருப்பதாக கூறுகின்றனர்.
    • எத்தனை தலைமுறை ஆனாலும் சிவசேனாவை அழிக்க முடியாது.

    மும்பை :

    மும்பை சிவ்ரி பகுதியில் சிவசேனா சாக்கா அலுவலகத்தை கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே திறந்து வைத்தார். அப்போது அவர் கட்சியினர் இடையே பேசியதாவது:-

    சேனாவால் வணங்கப்பட்டு வந்தவர்கள், தற்போது பா.ஜனதா ஆதரவுடன் கட்சியை உடைத்து உள்ளனர். பா.ஜனதா ஆதரவுடன் அதிருப்தி அணியினர் உள்ள போதிலும், அவர்களிடம் என்ன அதிகாரம் இருக்கிறது என்பது எனக்கு புரியவில்லை. இதற்கு முன் பல முறை சிவசேனாவை உடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    தற்போது அவர்கள் சிவசேனாவை அழிக்க திட்டமிட்டு உள்ளனர். அவர்களின் (அதிருப்தி அணி) பின்னால் பலம்வாய்ந்த சக்தி இருப்பதாக கூறுகின்றனர். அதிருப்தி அணியினர் யாரின் கைப்பாவையாக உள்ளார்களோ அவர்கள் சிவசேனாவை அழிக்க விரும்புகின்றனர். மும்பையில் நமது காவி கொடியை அழித்துவிட்டு, அவர்களின் சொந்த கொடியை பறக்கவிட விரும்புகின்றனர்.

    பல வல்லுநர்கள் துரோகிகள் வேறு கட்சியில் சேருவதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை என கூறுகின்றனர். ஒரு கட்சி அவர்களை தங்களுடன் சேர அழைப்பும் விடுத்தது. அவர்கள் சேனாவை அழிக்க விரும்புகின்றனர். ஆனாலும் சிவசேனா இருக்கிறது. தாக்கரேவின் தொடர்பும் சேனாவுடன் இருக்கிறது.

    எத்தனை தலைமுறை ஆனாலும் சிவசேனாவை அழிக்க முடியாது. சிவசேனா- தாக்கரே உறவை முறிக்க அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களுக்கு தைரியம் இருந்தால், அவர்கள் பால் தாக்கரேவின் படத்தை பயன்படுத்த கூடாது. நீங்கள் எனது கட்சியை திருட விரும்புகிறீர்கள். நீங்கள் ஒரு கொள்ளையர்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சமீபத்தில் ராஜ் தாக்கரே அதிருப்தி அணியினர் என்னை அணுகினால் அவர்களை நவநிர்மாண் சேனாவில் இணைத்து கொள்வேன் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×