என் மலர்
இந்தியா

படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து
இந்தி திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து- ஒருவர் பலி
- நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருந்தனர்.
- தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் மேற்கு அந்தேரி பகுதியில் உள்ள சித்ரகூட் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்து வரும் இந்தி திரைப்படப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
நேற்று படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட தீடீர் தீ விபத்தால் அந்த பகுதியில் முழுவதும் கரும்புகை பரவியது. இந்த தீ விபத்தில் சிக்கி தீக்காயம் அடைந்தவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
விரைந்து சென்ற மும்பை தீயணைப்பு படையினர் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ஷ்ரத்தா கபூர் படிப்பிடிப்பில் கலந்து கொள்ள இருந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
Next Story






