search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சஞ்சய் ராவத் மீதான நடவடிக்கை சிவசேனாவை அழிக்கும் சதி: உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
    X

    சஞ்சய் ராவத் மீதான நடவடிக்கை சிவசேனாவை அழிக்கும் சதி: உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

    • சிவசேனா இந்துக்கள் மற்றும் மராத்தி மக்களுக்கு பலம் அளித்து வருகிறது.
    • எதிர்க்கட்சிகளை எதிரிகளாக கருதக்‌கூடாது என்று இந்திய தலைமை நீதிபதி கூட கூறியுள்ளார்.

    மும்பை :

    சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் வீட்டில் நேற்று அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

    இதற்கு மத்தியில் தானே மாவட்டத்தை சேர்ந்த கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களிடம் தனது இல்லமான மாதோஸ்ரீயில் உத்தவ் தாக்கரே உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அமலாக்கத்துறை விருந்தினர்கள் தற்போது சஞ்சய் ராவத்தின் வீட்டில் உள்ளனர். அவர் கைது செய்யப்படலாம். இது என்ன வகையான சதி? சிவசேனா இந்துக்கள் மற்றும் மராத்தி மக்களுக்கு பலம் அளித்து வருகிறது. எனவே சிவசேனாவை அழிக்க சதி நடக்கிறது. இந்த நடவடிக்கை அதில் ஒரு அங்கமாகும்.

    சிவசேனாவால் அரசியல் ரீதியாக வளர்ந்தவர்கள் தற்போது தங்களின் விசுவாசத்தை மாற்றிக்கொண்டுள்ளனர்.

    முன்னாள் மந்திரி அர்ஜுன் கோட்கர் குறைந்தபட்சம் அழுத்தத்தின் கீழ் தான் அதிருப்தி அணிக்கு செல்வதாக ஒப்புக்கொண்டார்.

    ஆனந்த் திகே 2 ஆண்டுகள் சிறையில் இருந்தபோது சிவசேனா தொண்டர்களுக்கு விசுவாசம் என்றால் என்ன என்பதை காட்டினார்.

    கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியின் மும்பை குறித்த கருத்தால் மராத்தியர்கள் மற்றும் மராட்டியத்தை அவமதித்துள்ளார். அவருக்கு கோலாப்பூரின் செருப்புகளை காட்ட வேண்டும்.

    இந்த விஷயத்தில் அடிமைகளாக மாறியவர்களின் எதிர்வினை என்னவாக இருந்தது. இது மிகவும் லேசானது. எங்களுக்கு அவரின் பேச்சில் உடன்பாடில்லை என்று கூறி கடந்துவிட்டனர்.

    எதிர்க்கட்சிகளை எதிரிகளாக கருதக்‌கூடாது என்று இந்திய தலைமை நீதிபதி கூட கூறியுள்ளார். ஆனால் நாங்கள் கூட்டணி கட்சிகளாக இருந்தபோதும் எதிரிகளாக கருதப்பட்டோம்.

    அஞ்சாத, அநீதிக்கு எதிராக போராடும் அர்ப்பணிப்புள்ள தொண்டர்கள் கட்சிக்கு தேவைப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×