என் மலர்
மகாராஷ்டிரா
- லாசல்கான் மற்றும் உகான் ரெயில் நிலையங்களுக்கு இடையில் இந்த சம்பவம் நடந்துள்ளது
- டவர் வேகன் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம், லாசல்கான் அருகே ரெயில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழித்தடத்தில் ரெயில்வே பராமரிப்பு பணிக்கான டவர் வேகன் வாகனம் வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஊழியர்கள் மீது டவர் வேகன் மோதியது. இதில், 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
டவர் வேகன் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றபோது, அவரை சக ஊழியர்கள் தாக்கினர்.
லாசல்கான் மற்றும் உகான் ரெயில் நிலையங்களுக்கு இடையில் அதிகாலை 5.45 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. டிராக்மேன்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, டவர் வேகன் தவறான பாதையில் வந்து அவர்கள் மீது மோதியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
- மும்பையில் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் வீராங்கனைகள் ஏலம் நடைபெற்று வருகிறது.
- பெண்கள் கிரிக்கெட்டில் ஒரு புதிய புரட்சியைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை:
ஐபிஎல் போன்று பெண்களுக்கான பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மகளிர் பிரீமியர் லீக் முதல் சீசன் அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை மும்பையில் நடக்கிறது. மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், உ.பி. வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகளுக்காக விளையாடும் வீராங்கனைகள் ஏலம் மூலம் எடுக்கப்படுகின்றனர். மும்பையில் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ சர்வதேச கூட்டரங்கில் இன்று ஏலம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான அதிகாரப்பூர்வ லோகோ இன்று வெளியிடப்பட்டது. ஏல நிகழ்ச்சியின்போது, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா, ஐபிஎல் தலைவர் அருண் துமால் ஆகியோர் லோகோவை வெளியிட்டனர். இதுதொடர்பான வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக்கின் தொடக்க சீசன் உலகம் முழுவதும் பெண்கள் கிரிக்கெட்டில் ஒரு புதிய புரட்சியைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஹர்மன்ப்ரீத் கவுரை ரூ.1.8 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் ஏலம் எடுத்துள்ளது.
- ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லீ கார்ட்னரை ரூ.3.2 கோடிக்கு குஜராத் அணி வாங்கி உள்ளது.
மும்பை:
ஐபிஎல் போன்று பெண்களுக்கான பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் தொடர் அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை மும்பையில் நடக்கிறது. இதற்காக அகமதாபாத், பெங்களூரு, டெல்லி, லக்னோ, மும்பை ஆகிய 5 நகரங்களை அடிப்படையாக கொண்டு மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், உ.பி. வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அணிகளுக்கான வீராங்கனைகள் ஏலம் மூலம் எடுக்கப்படுகின்றனர். மும்பையில் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ சர்வதேச கூட்டரங்கில் இன்று பிற்பகல் ஏலம் தொடங்கியது. ஒவ்வொரு அணியும் ஏலத்தில் ரூ.12 கோடி செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
5 அணிகளுக்கும் சேர்த்து 30 வெளிநாட்டவர் உள்பட 90 வீராங்கனைகள் தேவைப்படுகிறார்கள். ஏலப்பட்டியலில் 15 நாடுகளை சேர்ந்த மொத்தம் 448 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 269 பேர் இந்தியர். 179 வீராங்கனைகள் வெளிநாட்டவர்.
இதில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3.4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. முதல் சுற்றில் ஏலம் எடுக்கப்பட்ட முன்னணி வீராங்கனைகள் விவரம்:
1. ஸ்மிருதி மந்தனா - ரூ.3.4 கோடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
2. ஹர்மன்பிரீத் கவுர் - ரூ.1.8 கோடி (மும்பை இந்தியன்ஸ்)
3. சோபி டிவைன் ரூ.50 லட்சம் - (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
4. ஹெய்லி மேத்யூஸ் - விற்கப்படாதது - 40 லட்சம் அடிப்படை விலை
5. ஆஷ்லீ கார்ட்னர் - ரூ.3.2 கோடி (குஜராத் ஜெயண்ட்ஸ்)
6. சோபி எக்லெஸ்டோன் - ரூ.1.2 கோடி (உ.பி. வாரியர்ஸ்)
7. எல்லிஸ் பெர்ரி - ரூ.1.7 கோடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
- சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி தீப்பிடித்த காரில் இருந்து காயத்துடன் தப்பிய அவருக்கு முதலில் டேராடூனிலும், பிறகு மும்பையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
- கால்முட்டியில் ஆபரேஷன் செய்யப்பட்டு இப்போது படிப்படியாக குணமடைந்து வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் 30ம் தேதி அதிகாலை காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார்.
சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி தீப்பிடித்த காரில் இருந்து காயத்துடன் தப்பிய அவருக்கு முதலில் டேராடூனிலும், பிறகு மும்பையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
கால்முட்டியில் ஆபரேஷன் செய்யப்பட்டு இப்போது படிப்படியாக குணமடைந்து வருகிறார். ஆபரேஷனுக்கு பிறகு ரிஷப் பண்ட் தனது புகைப்படத்தை 'ஒரு படி முன்னேற்றம்' என்ற வாசகத்துடன் நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
கம்பூன்றி நடப்பது போல் உள்ள அந்த புகைப்படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ள ரசிகர்கள் விரைவில் களம் திரும்ப வேண்டும் என்று வாழ்த்தி பதிவிட்டு வருகிறார்கள்.
- மோடி அதானி பற்றி பாராளுமன்றத்தில் பேசவில்லை.
- அதானி பங்கு சந்தையின் பெரிய எருது.
மும்பை :
இந்திய விலங்குகள் நல வாரியம் சமீபத்தில் அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டது. அதில் காதலர் தினத்தை 'பசு தழுவுதல் தினம்' ஆக கொண்டாட வேண்டும் என அழைப்பு விடுத்து இருந்தது. நேர்மறை சக்தியை பரப்பவும், மகிழ்ச்சிக்காவும் இந்த முயற்சியை முன்எடுத்து இருப்பதாக விலங்குகள் நலவாரியம் தெரிவித்தது.
இதற்கு சில பா.ஜனதா தலைவர்களும் ஆதரவு அளித்தனர். அதே நேரத்தில் விலங்குகள் நல வாரியத்தின் முன்எடுப்பை கேலி செய்தும் சமூகவலைதளத்தில் மீம்ஸ்கள் பரவின.
இந்தநிலையில் விலங்குகள் நல வாரிய முடிவுடன், தொழில் அதிபர் கவுதம் அதானி விவகாரத்தை ஒப்பிட்டு உத்தவ் தாக்கரே சிவசேனா விமர்சித்து உள்ளது.
இதுதொடர்பாக அந்த கட்சியின் பத்திரிகையான 'சாம்னா'வில் கூறியிருப்பதாவது:-
அதானிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. ஆனால் அதானி மோசடி பற்றி பிரதமர் ஒரு வார்த்தை கூட வாய் திறக்கவில்லை. அதானி மோசடி பற்றி மக்கள் பிரதமரிடம் இருந்து விளக்கத்தை கேட்டனர். ஆனால் மோடி அரசு மீண்டும் மக்களை அமைதியாக்க மதத்தை ஒரு டோஸ் கொடுத்து உள்ளது.
மோடி அதானி பற்றி பாராளுமன்றத்தில் பேசவில்லை. ஆனால் அவர்களின் அரசு பசு மாடு பற்றி பேசுகிறது. அதானி பங்கு சந்தையின் பெரிய எருது. ஆனால் மோடிக்கு அவர் புனிதமான பசு. பிரதமர் அதனை தழுவிக் கொண்டுள்ளார். அதன் பிடியை தளர்த்த அவர் தயாராகயில்லை. பல மாநிலங்களில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு தான் உள்ளது. மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக ஆட்சியில் எந்த வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே அவர்கள் ராமர் கோவில், பசு மாடுகளை கூறி ஓட்டு கேட்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொழில் அதிபர் கவுதம் அதானி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
- போரா முஸ்லிம்களின் தலைமைக் கல்வி நிறுவன தொடக்க விழா மும்பையில் நடந்தது.
- இந்த விழாவில் பிரதமர் மோடி, முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்பட பலர் பங்கேற்றனர்.
மும்பை:
போரா முஸ்லிம்களின் தலைமைக் கல்வி நிறுவன தொடக்க விழா மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். கல்வி நிறுவனத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
உங்களிடம் வரும்போது குடும்பத்திற்கு வருவது போன்ற உணர்வு எனக்கு ஏற்படுகிறது. இன்று சில வீடியோக்களைப் பார்த்தேன். அதைப் பார்த்த பிறகு எனக்கு ஒரு புகார் கூற தோன்றுகிறது. அந்த வீடியோவில் என்னை குஜராத் முதல் மந்திரி என்றும், பிரதமர் என்றும் பலமுறை குறிப்பிட்டார்கள்.
நான் உங்கள் குடும்ப உறுப்பினர். நான் முதல்வராகவோ, பிரதமராகவோ இங்கு வரவில்லை. இந்தக் குடும்பத்தோடு எனக்கு 4 தலைமுறை தொடர்பு இருக்கிறது. 4 தலைமுறைகளைச் சேர்ந்தவர்களும் எனது வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். இன்று தொடங்கப்பட்டுள்ள கல்வி நிறுவனம் வளர்ச்சிக்கான, மாற்றத்திற்கான அடையாளம்.
காலத்திற்கு ஏற்ப தாவூதி போரா சமூகம் முன்னேற்றமடைந்து வருகிறது. வெளிநாடுகளுக்குச் செல்லும்போது போரா இன மக்கள் எவ்வளவு நேரமானாலும் இருந்து என்னை பார்த்துவிட்டுச் செல்வார்கள் என தெரிவித்தார்.
- பிரதமர் மும்பையில் நடைபெற்ற விழாவில் 2 வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- மும்பையில் இருந்து புனித ஸ்தலமாக கருதப்படும் ஷீரடிக்கும் (339 கி.மீ), மும்பையில் இருந்து சோலாப்பூருக்கும் (452 கி.மீ.) இயக்கப்பட உள்ளது.
மும்பை:
நாடு முழுவதும் 8 அதிவேக வந்தே பாரத் ரெயில்கள் ஓடுகின்றன. இதில் முதல் ரெயில் சேவை தலைநகர் டெல்லி- வாரணாசி இடையே கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்நிலையில் புதிதாக 2 வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் மோடி மும்பையில் நடைபெற்ற விழாவில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ரெயில்கள் மராட்டிய மாநிலத்துக்குள்ளே இயக்கப்படுகிறது. அதாவது மாநில தலைநகர் மும்பையில் இருந்து புனித ஸ்தலமாக கருதப்படும் ஷீரடிக்கும் (339 கி.மீ), மும்பையில் இருந்து சோலாப்பூருக்கும் (452 கி.மீ.) இயக்கப்பட உள்ளது.
- வெல்ஸ்பன் குழுமம் அடுக்குமாடி குடியிருப்பை ரூ.240 கோடிக்கு வாங்கி உள்ளதாக தெரிகிறது.
- இந்தியாவிலேயே இன்று வரை விற்பனையான குடியிருப்புகளில் மும்பை 360 வெஸ்ட் அடுக்குமாடி குடியிருப்பு தான் அதிக விலைக்கு விற்பனை ஆன குடியிருப்பு என்று கூறப்படுகிறது.
மும்பை:
மும்பையின் ஓர்லி பகுதியில் தொழில் அதிபர்கள் வசிக்கும் சொகுசு பங்களாக்கள் உள்ளன.
இங்குள்ள மும்பை 360 வெஸ்ட் அடுக்குமாடி குடியிருப்பு மிகவும் பிரபலமானது. சமீபத்தில் இந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி விற்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியானது.
இதனை வெல்ஸ்பன் குழுமத்தின் தலைவர் பி.கே.கோயங்கா விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
வெல்ஸ்பன் குழுமம் இந்த குடியிருப்பை ரூ.240 கோடிக்கு வாங்கி உள்ளதாக தெரிகிறது. அதன்படி இந்தியாவிலேயே இன்று வரை விற்பனையான குடியிருப்புகளில் இந்த குடியிருப்பு தான் அதிக விலைக்கு விற்பனை ஆன குடியிருப்பு என்று கூறப்படுகிறது.
அடுக்குமாடி குடியிருப்பின் கோபுரத்தில் 3 தளங்களில் பென்ட் ஹவுஸ் அமைந்துள்ளது. சுமார் 30 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைந்துள்ள இக்குடியிருப்பினை ரூ.240 கோடிக்கு வெல்ஸ்பன் குழுமம் வாங்கி உள்ளது. இனி இந்த தளத்தில்தான் இக்குழுமம் தங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- கரும்புகையுடன் வெளிவந்த தீ பற்றி எரிவதை கண்ட அப்பகுதியினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
- தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
ராய்காட்:
ராய்காட் மாவட்டம் மகாட் எம்.ஐ.டி.சி பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களில் அங்கிருந்த பொருட்கள் தீயின் வெப்பம் காரணமாக வெடித்து சிதறியது.
கரும்புகையுடன் வெளிவந்த தீ பற்றி எரிவதை கண்ட அப்பகுதியினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் 10 வாகனங்களில் அங்கு விரைந்து வந்தனர்.
தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் அதிர்ஷடவசமாக யாரும் காயமடையவில்லை எனவும், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
- இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஹேசில்வுட் விலகியுள்ளார்.
- காயத்தால் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கும் முதல் டெஸ்டில் ஆடவில்லை.
நாக்பூர்:
சிட்னியில் கடந்த மாதம் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டுக்கு இடது கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. அதில் இருந்து அவர் இன்னும் முழுமையாக மீளவில்லை.
ஆஸ்திரேலிய அணிக்கான பயிற்சி முகாமிலும் அவர் பெரிய அளவில் பந்து வீசவில்லை. இதனை அவரே நேற்று தெரிவித்தார். இதன் மூலம் அவர் இந்தியாவுக்கு எதிராக வரும் 9-ம் தேதி நாக்பூரில் தொடங்கும் முதலாவது டெஸ்டில் விளையாட வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது. 2-வது டெஸ்டிலும் அவர் ஆடுவது சந்தேகம் தான்.
ஏற்கனவே காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் முதலாவது டெஸ்டில் ஆடவில்லை. ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனும் விரல் காயத்தால் பந்து வீச முடியாத நிலைமையில் தவிக்கிறார். இப்போது ஹேசில்வுட்டும் விலகுவது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அவருக்கு பதிலாக முதல் டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலன்ட் இடம் பெறுவார் என்று தெரிகிறது.
- மும்பை அணி தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்தின் சார்லட் எட்வர்ட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
- மும்பை அணி பந்துவீச்சு பயிற்சியாளராக ஜூலன் கோஸ்வாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பெண்களுக்கான முதலாவது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் மும்பையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கு 'பெண்கள் பிரிமீயர் லீக்' என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் 5 அணிகளில் ஒன்றான மும்பையை தலைமையிடமாக கொண்ட மும்பை அணியை ரூ.912.99 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வாங்கியது. அந்த அணி நிர்வாகம் தற்போது மும்பை அணியின் பயிற்யாளர் குழுவை அறிவித்துள்ளது.
இந்நிலையில், அணியின் தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்து பெண்கள் அணியின் முன்னாள் வீராங்கனை சார்லட் எட்வர்ட்ஸ் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி அணியின் ஆலோசகர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் தேவிகா பால்ஷிகார் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதை அந்த அணி நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
- பரந்த அடுக்குமாடி குடியிருப்புகள் ஒவ்வொன்றும் சுமார் 5 ஆயிரம் சதுரஅடி பரப்பளவு உடையது.
- ஒவ்வொரு வீடும் ரூ.50 முதல் 60 கோடி வரை விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது.
மும்பை:
இந்தியாவில் மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனையில் மும்பை முன்னணியில் உள்ளது.
மும்பையில் கடற்கரையையொட்டி அமைந்துள்ள மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளும், பெருநகரின் முக்கிய இடங்களில் அமைந்துள்ள பிரமாண்ட சொகுசு வீடுகளையும் வி.ஐ.பி.க்கள் பல கோடி ரூபாய்க்கு வாங்குகிறார்கள்.
அந்தவகையில் மும்பையின் வொர்லி பகுதியில் 23 சொகுசு வீடுகள் சுமார் ரூ.1,200 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.
டிமார்ட் நிறுவனர் ராதாகிஷன் தமானியின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நெருங்கிய கூட்டாளிகள் வொர்லி பகுதியில் டாக்டர் அன்னிபெசன்ட் சாலையில் உள்ள பிரிமியம் சொகுசு திட்டமான டவர் பி ஆப் த்ரி சிக்ஸ்டி மேற்கு பகுதியில் அமைந்துள்ள இந்த 23 சொகுசு வீடுகளை வாங்கி உள்ளனர்.
இந்த பரந்த அடுக்குமாடி குடியிருப்புகள் ஒவ்வொன்றும் சுமார் 5 ஆயிரம் சதுரஅடி பரப்பளவு உடையது. மேலும் ஒவ்வொரு வீடும் ரூ.50 முதல் 60 கோடி வரை விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வீடுகளை தொழிலதிபரும், கட்டுமான நிறுவன உரிமையாளருமான சுதாகர் ஷெட்டியிடம் இருந்து ராதாகிஷன் குடும்பத்தினர் வாங்கி உள்ளனர்.
சுதாகர்ஷெட்டி பிரம்மால் பைனான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.1000 கோடி கடன் வாங்கி இருந்ததாகவும், அதனை திருப்பி செலுத்துவதற்காக இந்த வீடுகளை விற்றுள்ளதாகவும் ஷெட்டிக்கு நெருக்கமானவர்கள் கூறி உள்ளனர். ஷெட்டி மற்றும் ராதாகிஷன் தமானியின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கிடையே கடந்த 4, 5 மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்ததாகவும், மொத்த பரிவர்த்தனை கடந்த வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்டதாகவும் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
த்ரி சிக்ஸ்டி மேற்கு பகுதியில் உள்ள சில பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் இதற்கு முன்பு ரூ.75 முதல் 80 கோடி வரை விற்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு ஐ.ஜி.இ. பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினர் இந்த 2 அடுக்குமாடி குடியிருப்புகளை 151 கோடிக்கு வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.






