என் மலர்
மகாராஷ்டிரா
- சச்சின் தெண்டுல்கர் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சை சந்தித்தார்.
- மும்பை சென்ற பில்கேட்ஸ் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாசை சந்தித்தார்.
மும்பை:
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மும்பை சென்ற பில்கேட்ஸ், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாசை சந்தித்தார்.
இந்நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி ஆகியோரை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் நேற்று சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து சச்சின் டுவிட்டர் பதிவில், நாம் அனைவரும் வாழ்நாள் முழுவதும் மாணவர்கள். உலகின் சவால்களைத் தீர்க்க யோசனைகளைப் பகிர்வது ஒரு சக்திவாய்ந்த வழியாகும். உங்கள் நுண்ணறிவுக்கு நன்றி பில்கேட்ஸ் என தெரிவித்துள்ளார்.
- ஏக்நாத் ஷிண்டேவால் கட்சியின் பெயர், சின்னத்தை தான் திருடமுடியும்
- அலிபாபாவும், 40 திருடர்களும் நடத்தும் அரசாங்கம் இது
மும்பை :
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கடந்த வாரம் முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரேவின் ஒர்லி தொகுதியில் பொதுக்கூட்டம் நடத்தினார். பொதுக்கூட்டத்தில் குறைந்த அளவில் மட்டுமே தொண்டர்கள் கலந்து கொண்டனர். துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் கூட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் தொண்டர்கள் கூட்டம் குறைவாக இருந்ததால் அவர் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஒர்லியில் ஆதித்ய தாக்கரேவின் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தொண்டாகள் திரளாக கலந்து கொண்டனர். உத்தவ் தாக்கரே அணியின் முக்கிய தலைவர்களான அரவிந்த் சாவந்த் எம்.பி., பாஸ்கர் ஜாதவ் எம்.எல்.ஏ., சுஷ்மா அந்தாரே, சச்சின் ஆஹிர் எம்.எல்.சி., சுனில் ஷிண்டே உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஆதித்ய தாக்கரே பேசியதாவது:-
ஏக்நாத் ஷிண்டேவால் சிவசேனாவின் பெயர், சின்னத்தை மட்டுமே திருட முடியும். ஆனால் மராட்டிய மற்றும் மும்பை மக்கள் எங்கள் (தாக்கரே) மீதும், சிவசேனாவின் மீதும் வைத்து உள்ள அன்பை திருடமுடியாது. இது சிவசேனாவுக்கான போராட்டம் அல்ல. ஜனநாயகம், அரசியல் அமைப்பை பாதுகாப்பதற்கான போராட்டம். ஒற்றுமையுடன் இருந்து அவர்களுக்கு எதிராக போராடுவோம். நமக்கு வெற்றி கிடைக்கும்.
ஷிண்டே-பா.ஜனதா அரசு மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும் முன்பே கவிழும். இதுபற்றி தொழில் அதிபர்களுக்கு கூட தெரிந்து இருக்கிறது. அதனால் தான் மராட்டியத்தில் முதலீடு செய்ய யாரும் முன்வரவில்லை.
அலிபாபாவும், 40 திருடர்களும் நடத்தும் அரசாங்கம் இது. ஷிண்டே தரப்பு எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள் செய்யும் முறைகேடுகள் பற்றி அவர்களின் புதிய நண்பர்கள் (பா.ஜனதா) தான் எங்களுக்கு தகவல் கொடுக்கிறார்கள். இந்த அரசு கவிழ்ந்த பிறகு துரோகிகள் விருப்ப ஓய்வு பெற்றுக்கொள்வார்கள். அரசு கவிழ்ந்த பிறகு அவர்களின் தேவை பா.ஜனதாவுக்கு முடிந்துவிடும்.
சிவசேனாவின் சின்னம், பெயரை பறிக்க தான் துரோக எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு தேவைப்பட்டனர். தற்போது ஆட்டம் முடிந்துவிட்டது. கட்சி பெயர், சின்னம் கிடைத்த பிறகு ஏக்நாத் ஷிண்டே, "தாக்கரே" பெயரும் வேண்டும் என டெல்லியிடம் கேட்டாலும் கேட்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மகாராஷ்டிராவில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
- வெங்காயம் அடிமாட்டு விலைக்கு ஏலம் போனது விவசாயிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
மும்பை :
சோலாப்பூரை சேர்ந்த விவசாயி ராஜேந்திர சவான் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் சோலாப்பூர் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டுக்கு 512 கிலோ வெங்காயத்தை விற்க சென்றார். அவரது வெங்காயம் கிலோ ரூ.1-க்கு ஏலம் போனது. போக்குவரத்து கட்டணம், சுமை கூலி, கமிஷன் போன்ற கழிவுகள் போக அவருக்கு ரூ.2 மட்டுமே கிடைத்தது. இதற்காக அந்த விவசாயிக்கு வழங்கப்பட்ட ரூ.2-க்கான காசோலை சமூகவலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் மகாராஷ்டிராவில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையான நாசிக் லசல்காவ் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் நேற்று காலை வெங்காய ஏலம் தொடங்கியது. வெங்காயம் கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை ஏலம் போனது.
வெங்காயம் அடிமாட்டு விலைக்கு ஏலம் போனது விவசாயிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர்கள் விலை வீழ்ச்சியை கண்டித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மராட்டிய மாநில வெங்காய உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தலைமையில் விவசாயிகள் வெங்காய ஏலத்தை நிறுத்தினர். இதனால் நாசிக் மார்க்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
ஏலத்தை நிறுத்தியது குறித்து வெங்காய உற்பத்தியாளர் சங்க தலைவர் பாரத் திகோலே கூறுகையில், "தற்போது நடந்து வரும் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில், ஒரு குவிண்டால் வெங்காயத்தை ரூ.1,500-க்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதாக அரசு அறிவிக்க வேண்டும். தற்போது கிலோ ரூ.3, 4, 5-க்கு விற்பனை ஆகிறது.
ஒரு கிலோவுக்கு ரூ.15-20 வரை தர வேண்டும். எங்களின் கோரிக்கை இன்று நிறைவேற்றப்படவில்லை எனில், நாசிக் லசல்காவ் மார்க்கெட்டில் ஏலம் தொடங்காது" என்றார்.
- அனைவரும் வந்ததும் பிறந்த நாள் கொண்டாடும் பூனை மேடைக்கு அழைத்து வரப்பட்டது.
- பூனைக்கு பிறந்த நாள் பரிசுகளை வழங்கும் விருந்தினர்கள் பூனையுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
மும்பையில் திருமண நாளை மறந்து போன கணவரை சரமாரியாக அடித்து உதைத்த மனைவி பற்றிய தகவல் சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வரும் நிலையில், செல்ல பூனைக்கு பிறந்த நாள் கொண்டாடிய பெண்கள் பற்றிய தகவலும் இப்போது சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது.
பூனைக்கு பிறந்த நாள் கொண்டாட பெண்கள் வீட்டை அலங்கரித்து பலூன்கள் கட்டி, உறவினர்களை விருந்துக்கு அழைத்து உள்ளனர்.
அனைவரும் வந்ததும் பிறந்த நாள் கொண்டாடும் பூனை மேடைக்கு அழைத்து வரப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த கேக் வெட்டி பூனைக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்படுகிறது.
அதன்பின்பு விருந்து நிகழ்ச்சி களைகட்டுகிறது. பூனைக்கு பிறந்த நாள் பரிசுகளை வழங்கும் விருந்தினர்கள் பூனையுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்து கொண்டனர். இவை அனைத்தையும் பெண்கள் குழுவினர் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளனர். இப்போது இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.
- 2019-ம் ஆண்டு விஷால் தனது முதல் திருமண நாளை உற்சாகமாக கொண்டாடினார்.
- அடுத்தடுத்த திருமண நாள்களை விஷால் முதல் திருமண நாள் அளவுக்கு கொண்டாடவில்லை.
எந்த ஒரு செயலையும் புதிதாக செய்யும் போது, ஆர்வமும், மீண்டும் அதனை எப்போது செய்யலாம் என்ற எண்ணமும் இருக்கும்.
அதுவே பழகி விட்டால் அதன்மீது இருக்கும் ஆர்வமும் குறைந்து விடும். இது நாம் செய்யும் செயல்களுக்கு மட்டுமல்ல. நமது பிறந்த நாள், திருமண நாள் போன்ற நாட்களை கூட மறந்து போவதுண்டு.
அப்படி தனது திருமண நாளை மறந்து போன மும்பை வாலிபர் ஒருவருக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவம் மும்பை நகர மக்களை பதற வைத்துள்ளது.
அந்த வாலிபரின் பெயர் விஷால். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கல்பனா என்பவருக்கும் இடையே கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந் தேதி திருமணம் நடந்தது.
2019-ம் ஆண்டு விஷால் தனது முதல் திருமண நாளை உற்சாகமாக கொண்டாடினார். ஆனால் அடுத்தடுத்த திருமண நாள்களை அவர் முதல் திருமண நாள் அளவுக்கு கொண்டாடவில்லை. ஆனால் மறக்காமல் மனைவிக்கு வாழ்த்து மட்டும் சொல்லிவிடுவார்.
இந்த நிலையில் தான் விஷாலின் 5-வது திருமண நாள் கடந்த வாரம் வந்தது. குடும்ப சூழ்நிலை மற்றும் மனைவியின் மீதான நாட்டம் குறைந்தது போன்றவற்றால் விஷால், தனது திருமண நாளை மறந்து போனார். அதோடு மனைவிக்கு வாழ்த்தும் சொல்லவில்லை.
முதல் நாள் இரவு வரை கணவரிடம் இருந்து வாழ்த்து வரும் என காத்திருந்த மனைவி, மறுநாளும் அவர் வாழ்த்து சொல்லாததால் கடுப்பாகி போனார்.
இதுபற்றி கல்பனா தனது பெற்றோரிடம் கூறி அழுதார். அவர்கள் கல்பனாவின் கணவரை திட்டி தீர்த்ததோடு, அலுவலகத்திற்கு சென்ற அவரை உடனே வீட்டுக்கு வருமாறு அழைத்தனர்.
அவர் வந்ததும் திருமண நாளில் மனைவிக்கு வாழ்த்து சொல்ல மறந்தது ஏன்? என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர். இதில் பிரச்சினை முற்றி அவர்கள் விஷாலை சரமாரியாக தாக்க தொடங்கினர். இதை தடுக்க வந்த விஷாலின் தாயாருக்கும் அடி-உதை விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த விஷால் மற்றும் அவரது தாயார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி மும்பை போலீசார் விஷாலின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.
இதுபற்றி அறிந்த மும்பைவாசிகள், திருமண நாளை மறந்து போனது ஒரு தப்பாடா? எங்களை போன்ற பலர் இதை நினைத்து பார்ப்பதே இல்லை என்று கூறினர்.
- சரத்பவார் பிரதமர் மோடியை தோற்கடிக்க விரும்புகிறார்.
- காங்கிரஸ் தலைவர்களுக்கு பாரத் ஜோடா யாத்திரைக்கு நேரம் இருக்கிறது.
மும்பை :
எம்.ஐ.எம். கட்சியின் பொதுக்கூட்டம் தானே மாவட்டம் மும்ரா பகுதியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் ஓவைசி உத்தவ் தாக்கரே, சரத்பவார் போன்றவர்கள் தேவையான நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள் என கூறினார். மேலும் அவர் பேசியதாவது:-
அஜித்பவார், சுப்ரியா சுலே, சரத்பவார், உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிசால் தலைவராக முடியும் போது, உங்களால் ஏன் முடியாது?. எம்.ஐ.எம். கட்சி 65 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. அப்போது கட்சி கூட்டங்களில் குறைவான மக்களே கலந்து கொள்வார்கள். தற்போது ஆயிரக்கணக்கான மக்கள் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகளில் நமது கட்சியினர் உள்ளனர். இந்த வளர்ச்சி தொடர வேண்டும். இளைஞர்கள் நிர்வாகத்திற்குள்ளும் நுழைய முயற்சி செய்ய வேண்டும். தேர்தல் மூலமாகவும் நிர்வாகத்துக்குள் செல்ல வேண்டும். இஸ்லாமியர்கள், தலித்துகளுக்காக போராட இளைஞர்கள் எம்.ஐ.எம். கட்சியை பலப்படுத்த வேண்டும்.
நமது மதத்தினருக்கு எதிரான சம்பவங்கள் நடந்த போது உத்தவ் தாக்கரே ஏன் அமைதியாக இருந்தார். சரத்பவார் பிரதமர் மோடியை தோற்கடிக்க விரும்புகிறார். அதற்காக அவருக்கு நமது ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால் நமக்கு தேவையான நேரத்தில் உதவி செய்ய அவர்கள் மறந்துவிடுவர். நமது விதி என, நம்மை அவர்கள் விட்டுவிடுவர். இது என்ன மாதிரியான மதச்சார்பின்மை. காங்கிரஸ் தலைவர்களுக்கு பாரத் ஜோடா யாத்திரைக்கு நேரம் இருக்கிறது. ஆனால் கும்பலால் கொலை செய்யப்படும் நமது மக்களை சந்திக்க அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. தங்களின் கோட்டை என நினைப்பவர்களுக்கு எதிராக எம்.ஐ.எம். பலமான வேட்பாளர்களை நிறுத்தும். உங்களால் எல்லோரையும் பணம் கொடுத்து வாங்க முடியாது.
எங்களுக்கு விசுவாசமாக உள்ளவர்கள் சிலர் இன்னும் இருக்கிறார்கள். அவர்களை வைத்து நான் உங்களை தோற்கடிப்பேன். பண பலத்தால் எங்களை நீங்கள் வாங்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
- கோடிக்கணக்கான ரூபாய்களை ஷிண்டே அரசு ஊதாரித்தனமாக செலவு செய்கிறது.
- கடந்த சில மாதங்களில் மாநில அரசு பல்வேறு திட்டங்களுக்கு நிவாரணங்களை அறிவித்தது.
மும்பை :
மராட்டிய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குவதை முன்னிட்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் நேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
மாநில அரசு சாமானிய மக்களின் துயரை தீர்க்கும் முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, தங்களின் சிரித்த முகத்தை வெளியில் காட்டிக்கொள்வதற்காக கோடிக்கணக்கான ரூபாய்களை ஷிண்டே அரசு ஊதாரித்தனமாக செலவு செய்கிறது.
கடந்த சில மாதங்களில் மாநில அரசு பல்வேறு திட்டங்களுக்கு நிவாரணங்களை அறிவித்தது. ஆனால் இதுவரை அந்த திட்டத்தின் பயனாளிகளுக்கோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கோ நிவாரண தொகை சென்று சேரவில்லை. மராட்டியம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு நான் சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இதை நான் கவனித்தேன்.
பணவீக்கம் அதிகரித்து வருவதால் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு அதிகரித்து வருகிறது. இருப்பினும் விவசாய விளை பொருட்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கவில்லை.
எனவே கூட்டத்தொடரை முன்னிட்டு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அரசு நடத்தும் வழக்கமான தேனீர் விருந்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.
இதற்கு பதிலாக புதிய கவர்னர் ரமேஷ் பயசை சந்தித்து எங்கள் கவலைகளை அவருடன் பகிர்ந்துகொள்ள திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உத்தவ் பாலாசாகேப் சிவசேனாவை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் அம்பாதாஸ் தன்வே, "அவுரங்காபாத் மற்றும் உஸ்மனாபாத் நகரங்களின் பெயரை சத்ரபதி சாம்பாஜிநகர் மற்றும் தாராஷிவ் என மாநில அரசு மாற்றி உள்ளது.
இந்த 2 மாவட்டங்களின் பெயர்களையும் மாற்றலாம் என்று மத்திய அரசு, மாநில அரசுக்கு அனுப்பிய தகவலில் தெளிவாக கூறியுள்ளது. ஆனால் இதை செயல்படுத்த அரசு தவறிவிட்டது" என்றார்.
- அவுரங்காபாத் நகர் இனி சத்ரபதி சம்பாஜி நகர் என்று அழைக்கப்படும்.
- மராட்டியத்தில் உள்ள உஸ்மான்பாத் நகரின் பெயரும் தர்சிவா என்று மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுரங்காபாத்:
மராட்டிய மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் நகரின் பெயரை மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதுபற்றி அந்த மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது.
அதை ஏற்றுக்கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம் அவுரங்காபாத் நகரின் பெயரை மாற்ற ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து அவுரங்காபாத் நகர் இனி சத்ரபதி சம்பாஜி நகர் என்று அழைக்கப்படும்.
இந்த தகவலை துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்நாவிஸ் டுவிட்டர் மூலம் அறிவித்துள்ளார். மராட்டியத்தில் உள்ள உஸ்மான்பாத் நகரின் பெயரும் தர்சிவா என்று மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- அந்த பணமும் 15 நாட்களுக்கு பிறகு எடுக்கும்படி காசோலையாக வழங்கப்பட்டுள்ளது.
- விலை குறையும் போது அரசு எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
மும்பை :
சோலாப்பூர் மாவட்டம் பார்ஷி தாலுகா போர்காவ் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திர துக்காராம் சவான்(வயது58). இவர் தனது விளைநிலத்தில் விளைந்த 512 கிலோ வெங்காயத்தை, விற்க வீட்டில் இருந்து சுமார் 70 கி.மீ. தூரத்தில் உள்ள சோலாப்பூர் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றார்.
துரதிருஷ்டவமாக இவர் சென்றபோது மார்க்கெட்டில் வெங்காய விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து இருந்தது. 70 கி.மீ. தூரம் வந்ததற்கு பயண செலவுக்காவது ஏதாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயி அவரது வெங்காயத்தை ஏலத்துக்கு அனுப்பினார். அப்போது, அவரது வெங்காயம் கிலோ ரூ.1-க்கு மட்டுமே ஏலம் போனது. இதன் மூலம் ரூ.512-க்கு விற்பனையானது.
ஆனால் சுமை கூலி, போக்குவரத்து கட்டணம், எடைப்போட கூலி போன்றவை எல்லாம் கழித்து விவசாயிக்கு 2 ரூபாய் 49 பைசா மட்டுமே கிடைத்தது. அந்த பணமும் 15 நாட்களுக்கு பிறகு எடுக்கும்படி காசோலையாக வழங்கப்பட்டுள்ளது.
இதனால் அவர் வேதனையுடன் புலம்பிக்கொண்டே வீடு திரும்பினார். இதுகுறித்து விவசாயி ராஜேந்திர துக்காராம் சவான் கூறுகையில், "நான் தரமான வெங்காயத்தை தான் கொண்டு சென்றேன். ஆனால் வியாபாரி தரம் இல்லாத வெங்காயம் என்று கூறுகிறார். இப்படி வருமானம் கிடைத்தால் நாங்கள் எப்படி பிழைப்பது?. இதுபோன்று அடிமாட்டு விலை கிடைப்பது என்னையும், வெங்காய விவசாயிகளையும் அவமதிப்பதாக உள்ளது. விலை குறையும் போது அரசு எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்" என்றார்.
- மாரடைப்பு காரணமாக புனேவில் உள்ள மருத்துவமனையில் தேவ்சிங் ஷெகாவத் உயிரிழந்தார்.
- சமூகத்திற்கு பல்வேறு வழிகளில் ஆற்றிய சேவை மூலம் சமூகத்தில் தனி முத்திரை பதித்தவர் ஷெகாவத்.
புனே:
முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கணவர் தேவ்சிங் ஷெகாவத் காலமானார். அவருக்கு வயது 89. மாரடைப்பு காரணமாக புனேவில் உள்ள மருத்துமனையில் சேர்க்கப்பட்ட தேவ்சிங் ஷெகாவத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
முன்னாள் ஜனாதிபதியின் கணவர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், " கணவர் மறைவால் வாடும் முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். சமூகத்திற்கு பல்வேறு வழிகளில் ஆற்றிய சேவை மூலம் சமூகத்தில் தனி முத்திரை பதித்தவர் ஷெகாவத்" என்று தெரிவித்துள்ளார்.
- அதானி குழுமத்தில் எல்ஐசி மேற்கொண்டிருந்த முதலீட்டு மதிப்பானது ரூ.81,000 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த ஒரு மாதத்தில் அதானி குழும பங்குகள் ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு சந்தை மூலதன மதிப்பு சரிவை சந்தித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மும்பை:
அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இது அதானி குழுமத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
ஹிண்டன்பெர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு, பங்குச் சந்தையில் பெரும் பின்னடைவை சந்தித்தது அதானி குழுமத்தின் பங்குகள். இதனால், அதானி குழுமத்தில் எல்ஐசி செய்த முதலீடு மதிப்பானது 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி கிட்டத்தட்ட ரூ.83,000 கோடியாக இருந்தது. இதுவே, 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி ரூ.33,000 கோடியாக சரிந்துள்ளது. அதாவது, ஜனவரி 24ஆம் தேதி ஹிண்டன்பெர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்ட போது, அதானி குழுமத்தில் எல்ஐசி மேற்கொண்டிருந்த முதலீட்டு மதிப்பானது ரூ.81,000 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதானி குழுமத்தின் மிகப்பெரிய பங்குகளை வாங்கியிருக்கும் எல்ஐசி நிறுவனம், ஜனவரி 30ஆம் தேதிக்குப் பிறகு எந்தவிதமான பங்குகளையும் வாங்கவோ விற்கவோ இல்லை என்று கருதப்படுகிறது. இதுவரை அதானி குழுமத்தின் பல்வேறு நிறுவனப் பங்குகளை எல்ஐசி நிறுவனம் ரூ.30,127 கோடிக்கு வாங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதானியின் குழுமத்தில் உள்ள 7 நிறுவனங்களின் பங்குகளை எல்ஐசி 1.28 சதவிகிதம் முதல் 9.14 சதவிகிதம் வரை வாங்கியிருக்கிறது. அதானி போர்ட்ஸ் பங்குகளில் 9 சதவிகிதப் பங்குகளை எல்ஐசி வைத்துள்ளது. இது ஜனவரியில் 15 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், பிப்ரவரியில் 11 ஆயிரம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இதுபோல அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 4.23 சதவிகிதப் பங்குகளை எல்ஐசி வைத்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 80 சதவிகிதம் அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்திருக்கும் அதானி குழுமத்தின் பங்குகளில், எல்ஐசியின் முதலீட்டு மதிப்பும் 25,500 கோடியிலிருந்து ரூ.5,200 கோடியாக சரிவடைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் பங்குச் சந்தைகளில் அதானி குழும பங்குகள் ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு சந்தை மூலதன மதிப்பு சரிவை சந்தித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
- 39 கிலோ மீட்டர் தூரத்தை 8 மணிநேரம் 40 நிமிடங்களில் கடந்து அசத்தியுள்ளார்.
- சிறுவனை உறவினர்கள் நண்பர்கள், பள்ளி நிர்வாகத்தினர் வரவேற்னர்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஆரவ் கோல், தரம்தார் விரிகுடாவில் இருந்து கேட்வே ஆஃப் இந்தியா (Gate way of india) வரையிலான 39 கிலோ மீட்டர் தூரத்தை 8 மணி நேரம் 40 நிமிடங்களில் நீச்சலடித்துக் கடந்து அசத்தியுள்ளார்.
பெரும்பாலான நீச்சல் வீரர்கள் இந்த தூரத்தை12 முதல் 13 மணி நேரத்தில் கடக்கும் சூழலில், சிறுவன் ஆரவ் குறைவான நேரத்தில் கடந்துள்ளார். வெற்றிகரமாக நீந்திய சிறுவன் ஆரவை உறவினர்கள், நண்பர்கள், பள்ளி நிர்வாகத்தினர் வரவேற்றனர்.






