என் மலர்
மகாராஷ்டிரா
- புல்வாமாவில் பயங்கரவாதிகளால் காஷ்மீர் பண்டிட் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
- பஞ்சாப்பில் காலிஸ்தான் சார்ப்பு அமைப்புகள் மீண்டும் தலைதூக்குவது கவலை அளிக்கிறது.
மும்பை :
காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் சமீபத்தில் காஷ்மீரி பண்டிட் ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டார். இதுகுறித்து உத்தவ் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் சஞ்சய் ராவத் எம்.பி. எழுதிய கட்டுரை வெளியானது. அதில் அவர் கூறி இருப்பதாவது:-
ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது, தற்போதும் இருக்கிறது. இருப்பினும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சிறப்பு அந்தஸ்து ரத்து வெறும் காகிதமாக மட்டுமே உள்ளது. அதுமட்டும் இன்றி இந்த நடவடிக்கை பா.ஜனதா கட்சி தனது அரசியல் லாபத்துக்காக மட்டுமே மேற்கொண்டது. காஷ்மீர் பண்டிட்டுகளுக்கான உரிமை இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் படும் துயரங்களுக்கு பா.ஜனதா தலைவர்களிடம் பதில் இல்லை.
சமீபத்தில் கூட புல்வாமாவில் பயங்கரவாதிகளால் காஷ்மீர் பண்டிட் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
ஆனால் டெல்லி துணை முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான மணீஷ் சிசோடியாவை ஊழல் வழக்கில் கைது செய்ததன் மூலமாக பண்டிட்டுகளின் பிரச்சினையில் இருந்து அரசு மக்களை திசை திருப்பியது.
ராகுல் காந்தியின் தலைமையிலான இந்திய ஒற்றுமை பயணத்தில் கலந்துகொள்வதற்காக நான் சமீபத்தில் வடக்கு யூனியன் பிரதேசத்திற்கு சென்று இருந்தேன். அப்போது காஷ்மீர் பண்டிட் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர் தங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்களை இந்த அரசு வலுக்கட்டாயமாக மீண்டும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மறு குடியமர்வு செய்கிறது. இருப்பினும் தங்களின் பாதுகாப்புக்கு அரசு எந்த உத்தரவாதமும் வழங்க தயாராக இல்லை என்று என்னிடம் கூறினார்.
சமீபத்தில் லவ் -ஜிகாத் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி மும்பையில் "இந்து ஆக்ரோஷ் மோர்சா" போராட்டத்தை வலதுசாரி அமைப்புகள் நடத்தின. அவர்கள் காஷ்மீர் பண்டித் கொல்லப்பட்டதற்கு எதிராக ஜம்மு காஷ்மீரில் தங்கள் போராட்டத்தை நடத்த வேண்டும்.
பஞ்சாப்பில் காலிஸ்தான் சார்ப்பு அமைப்புகள் மீண்டும் தலைதூக்குவது கவலை அளிக்கிறது. இது உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை, இதை அங்குள்ள மாநில அரசின் பொறுப்பில் விட்டுவிட முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- எங்களிடமிருந்து கட்சியின் பெயரையும் சின்னதையும் தேர்தல் ஆணையம் பறித்துவிட்டது.
- ஆனால் உங்களால் சிவசேனாவை என்னிடம் இருந்து பறிக்க முடியாது என்றார்.
மும்பை:
சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று ரத்னகிரியில் நடந்த பொதுகூட்டத்தில் பேசியதாவது:
எனது ஆதரவாளர்களுக்கு வழங்க என்னிடம் எதுவும் இல்லை. உங்கள் ஆசிர்வாதத்தையும் ஆதரவையும் பெற மட்டுமே இங்கே வந்துள்ளேன்.
மக்களை முட்டாளாக்கும் போலி அமைப்பு தேர்தல் ஆணையம். அது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கைப்பாவையாக செயல்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் முடிவு தவறானது.
நீங்கள்(தேர்தல் ஆணையம்) எங்களிடமிருந்து கட்சியின் பெயரையும் சின்னதையும் பறித்துவிட்டீர்கள், ஆனால் உங்களால் சிவசேனாவை என்னிடம் இருந்து பறிக்க முடியாது. சிவசேனாவை கொடூரமாகவும், ஈவிரக்கமின்றி ஒழித்துக்கட்ட பா.ஜ.க. முயற்சி செய்கிறது.
பா.ஜ.க.வில் முன்பு சாதுக்கள் மற்றும் சன்னியாசிகள் அங்கம் வகித்தனர். தற்போது அக்கட்சி சந்தர்ப்பவாதிகளால் நிரம்பியுள்ளது.
அதிகமான ஊழல்வாதிகள் பா.ஜ.க.வில் தான் உள்ளனர். முதலில் அவர்கள் எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள். ஆனால், ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பின்னர் பா.ஜ.க.விலேயே சேர்க்கப்படுகிறார்கள்.
நான் வேண்டுமா அல்லது ஏக்நாத் ஷிண்டே வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். நான் மக்களின் தீர்ப்பை ஏற்றுகொள்வேன். ஆனால் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதில்லை.
மக்கள் என்னை வேண்டாம் என்று சொன்னால் நான் வெளியேறுவேன். மகாராஷ்டிர தேர்தலில் பா.ஜ.க.வை தூள் தூளாக்க வேண்டும் என மக்களுக்கு கோரிக்கை வைக்கிறேன் என தெரிவித்தார்.
- முதலில் ஆடிய குஜராத் அணி 169 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய உத்தர பிரதேச அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு தொடங்கியுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி நேற்று தொடங்கியது.
இன்று நடைபெற்ற 3-வது லீக் போட்டியில் உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் ஹர்லின் தியோல் அதிகபட்சமாக 48 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உத்தர பிரதேச அணி களமிறங்கியது. அந்த அணியின் கிரன் நவ்கிரே பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 53 ரன்னில் அவுட்டானார்.
கடைசி கட்டத்தில் கிரேஸ் ஹாரிஸ் போராடினார். அதிரடியாக ஆடிய அவர் பந்துகளில் அரை சதம் கடந்து 59 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், உத்தர பிரதேச அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்து திரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் குஜராத் அணி பெற்ற 2வது தோல்வி இதுவாகும்.
- குடிநீர் குழாய் வெடித்து தண்ணீர் பீய்ச்சி அடித்து வெளியேறிய போது ஏற்பட்ட அதிர்வால் சாலையிலும் விரிசல் ஏற்பட்டது.
- குடிநீர் குழாயில் இருந்து வெளிவந்த தண்ணீர் அங்கிருந்த ஒரு பள்ளம் முழுவதும் நிரம்பி வெளியேறியது.
மும்பை:
மராட்டிய மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் நிலத்தடியில் சென்ற குடிநீர் குழாய் வெடித்ததால் சாலையில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது.
குடிநீர் குழாய் வெடித்து தண்ணீர் பீய்ச்சி அடித்து வெளியேறிய போது ஏற்பட்ட அதிர்வால் சாலையிலும் விரிசல் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் சென்ற பெண் படுகாயம் அடைந்தார். இந்த காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.சி. கேமராவில் பதிவாகியுள்ளது.
அந்த வீடியோவில் குடிநீர் குழாய் வெடித்து தண்ணீர் பீய்ச்சியடிப்பதும், அப்போது பழுப்பு நிற தண்ணீர் அலையின் கீழ் இளஞ்சிவப்பு நிற ஆடை அணிந்த பெண் ஸ்கூட்டர் ஓட்டி வருவதும் பதிவாகி இருந்தது. மேலும் சாலையில் விரிசல் ஏற்பட்ட காட்சிகளும் அதில் உள்ளன.
குடிநீர் குழாயில் இருந்து வெளிவந்த தண்ணீர் அங்கிருந்த ஒரு பள்ளம் முழுவதும் நிரம்பி வெளியேறியது. மேலும் சாலை முழுவதும் கற்களும் சிதறி கிடந்தன.
இந்த வீடியோ காட்சிகள் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கஸ்பா பேத் புத்திசாலி வாக்காளர்கள் ஆளும் கட்சிக்கு அடி கொடுத்து உள்ளனர்.
- மாநில அரசியல் எதிர்காலத்துக்கான குறியீடு தான் இந்த வெற்றி.
மும்பை :
மராட்டியத்தில் நடந்த இடைத்தேர்தலில் மகாவிகாஸ் கூட்டணி கஸ்பா பேத் தொகுதியில் வெற்றி பெற்று பா.ஜனதாவுக்கு அதிர்ச்சி அளித்தது. சிஞ்வாட்தொகுதியில் பா.ஜனதா வெற்றியை தக்க வைத்தது. இந்தநிலையில் புனே சென்ற சிவசேனா உத்தவ் தாக்கரே அணி எம்.பி. சஞ்சய் ராவத் கஸ்பா பேத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர தன்கேகரை சந்தித்தார்.
சந்திப்புக்கு பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கஸ்பா பேத் புத்திசாலி வாக்காளர்கள் ஆளும் கட்சிக்கு அடி கொடுத்து உள்ளனர். அவர்கள் இங்கு வாக்காளர்களை வாங்க முயற்சி செய்தனர். ஆனால் தோல்வி அடைந்துவிட்டனர். கஸ்பா டிரைலர் தான். இன்னும் ஒட்டுமொத்த மராட்டியமும் பாக்கி உள்ளது. மாநில அரசியல் எதிர்காலத்துக்கான குறியீடு தான் இந்த வெற்றி. மகாவிகாஸ் கூட்டணி வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும், சட்டசபை தேர்தலில் 200-க்கும் அதிகமாக தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
நான் சட்டசபை உறுப்பினர்களை மதிக்கிறேன். சட்டசபையில் ஒரு குழுவை தான் திருடர்கள் என நான் கூறினேன். இது எல்லோருக்கும் தெரியும். எல்லா சட்டசபை உறுப்பினர்களையும் திருடன் என அழைப்பவன் நான் அல்ல. நான் நாடாளுமன்ற உறுப்பினர். எனக்கு அரசியல் அமைப்பு, சட்டம் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 207 ரன்கள் எடுத்தது.
- அதிரடியாக ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 65 ரன்கள் குவித்தார்.
மும்பை:
முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 30 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசினார்.
இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பம் முதலே மும்பை இந்தியன்ஸ்
பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. எந்த வீராங்கனையும் ஒற்றை இலக்கை ரன்னை தாண்டவில்லை. 4 பேர் டக் அவுட் ஆனார்கள். 23 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி திணறியது.
அந்த அணியின் தயாளன் ஹேமலதா மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்தார். கடைசி கட்டத்தில் இறங்கிய மோனிகா படேலும் இரட்டை இலக்கை எட்டினார்.
இறுதியில், குஜராத் அணி 64 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோற்றது. ஹேமலதா 29 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மும்பை இந்தியன்ஸ் சார்பில் சைகா இஷாக் 4 விக்கெட்டும், நட் சிவர் பிரண்ட், அமீலியா கெர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம், மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி முத்திரை பதித்து 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 30 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசினார்.
- குஜராத் ஜெயண்ட்ஸ் தரப்பில் ஸ்னே ரானா 2 விக்கெட் கைப்பற்றினார்.
மும்பை:
முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. 5 அணிகள் பங்கேற்றுள்ள இந்த சீசனின் துவக்க ஆட்டம் நவி மும்பை டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 30 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசினார். ஹெய்லி மேத்யூஸ் 47 ரன்களும், நாட் ஷிவர் பிரன்ட் 23 ரன்களும், அமெலியா கெர் ஆட்டமிழக்காமல் 45 ரன்களும் அடித்தனர்.
குஜராத் தரப்பில் ஸ்னே ரானா 2 விக்கெட் கைப்பற்றினார். ஜார்ஜியா, தனுஜா, ஆஷ்லெய் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்குகிறது.
+3
- மகளிர் பிரீமியர் லீக் கோப்பையை 5 அணிகளின் கேப்டன்கள் அறிமுகம் செய்தனர்.
- பாலிவுட் நட்சத்திரங்களான கியாரா அத்வானி, கிருத்தி சனோன் உள்ளிட்டோரின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன
மும்பை:
முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது. மும்பை பிரபோர்ன் ஸ்டேடியம் மற்றும் நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியம் ஆகிய இரு மைதானங்களில் இந்த போட்டி அரங்கேறுகிறது.
டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் இதில் கலந்துகொள்கின்றன.
போட்டி தொடங்குவதற்கு முன்பாக, இன்று மாலை டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் பிரமாண்டமான துவக்க விழா நடைபெற்றது. வரலாற்று சிறப்பு மிக்க மகளிர் பிரீமியர் லீக் குறித்து மந்த்ரா பேடி அறிமுக உரையாற்றி விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பாலிவுட் நட்சத்திரங்களான கியாரா அத்வானி, கிருத்தி சனோன் மற்றும் பஞ்சாபி பாடகர் ஏ.பி. தில்லான் ஆகியோரின் ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் மூத்த நிர்வாகிகள் மேடையில் ஏறி, அனைவரையும் வரவேற்றனர். போட்டியில் பங்குபெறும் ஐந்து அணிகளின் கேப்டன்களையும் மேடைக்கு அழைத்தனர். அவர்கள் மகளிர் பிரீமியர் லீக் கோப்பையை அறிமுகம் செய்தனர்.

துவக்க விழா முடிந்ததும் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பெர்த் மூனே பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
- தானேயில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- கடந்த ஒரு ஆண்டாக அவர்கள் எந்தவித ஆவணமும் இல்லாமல் தங்கி வந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.
தானே:
மகாராஷ்டிர மாநிலம் தானேயில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதில் 10 பேர் பெண்கள். கடந்த ஒரு ஆண்டாக அவர்கள் எந்தவித ஆவணமும் இல்லாமல் தங்கி வந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.
- பரோல் முடிந்ததும் அவர்கள் மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டும்.
- கொரோனா பரவலை தடுக்கவே கைதிகள் பரோலில் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டனர்.
மும்பை:
நாட்டில் கொரோனா பெருந்தொற்று பரவியபோது, அதிகம் பாதித்த மாநிலங்களின் வரிசையில் மராட்டியம் முதல் இடம் பிடித்தது. மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் அதிக பாதிப்புகள் காணப்பட்டன.
இதனை தொடர்ந்து மராட்டியத்தில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்த, குற்றவாளிகள் என கோர்ட்டு தண்டனை விதித்த கைதிகள், விசாரணை கைதிகள் உள்ளிட்ட கைதிகளில் பலர், பரோலில் விடுவிக்கப்பட்டனர். அவர்களின் பரோல் முடிந்ததும் அவர்கள் மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டும். அதன்படி, பலர் சிறைக்கு திரும்பினர்.
ஆனால், அவர்களில் சிலர் அப்படி செய்யவில்லை. பரோல் காலம் நிறைவடைந்தும் சிறைக்கு திரும்பி வராமல் இருந்து உள்ளனர். இதனை அடுத்து, மும்பை போலீசார் சமீபத்தில் சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டு அவர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர்.
இதன்பின், அவர்களை கைது செய்து வந்து உள்ளனர். இதன்படி, 18 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த சிறப்பு நடவடிக்கை தொடரும் என போலீசார் தெரிவித்தனர். சிறைகளில் நெருக்கடியை தவிர்க்கவே, கொரோனா பரவலை தடுக்கவே கைதிகள் பரோலில் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டனர்.
- பா.ஜனதாவுக்கு சாதகமாக எல்லாம் நடக்கின்றன.
- எத்தனை பேர் வந்தாலும் சிவசேனாவை அழிக்க முடியாது.
மும்பை :
முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் மும்பையில் மராத்தி மொழி தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
மூத்த வக்கீல் கபில் சிபில் கூறியது சரியாக உள்ளது. சிவசேனா தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து கொண்டு இருக்கும் போது, அதில் தேர்தல் ஆணையம் தலையிட வேண்டிய அவசியமில்லை. தேர்தல் ஆணையம் ஒரு போலி அமைப்பு. மக்களை முட்டாளாக்கும் ஆணையம் என அதை அழைக்க வேண்டும். பா.ஜனதாவுக்கு சாதகமாக எல்லாம் நடக்கின்றன. மொகம்போ வம்சாவளியினர் (அமித்ஷா) எத்தனை பேர் வந்தாலும் சிவசேனாவை அழிக்க முடியாது.
சட்டத்தை பின்பற்ற வேண்டும் என குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லிகொடுக்காவிட்டால், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை திருடிச்செல்வார்கள். எனவே திருடர்கள் பற்றி நான் அதிகம் பேசவிரும்பவில்லை. அவர்கள் அதற்காக வெட்கப்படமாட்டார்கள்.
சிவசேனா வெறும் பெயர், சின்னம் மட்டுமல்ல. வில், அம்பு மட்டும் சிவசேனா அல்ல. சிவசேனா நம்முடையது. அதை யாராலும் திருட முடியாது. பால் தாக்கரே விதைத்ததை நீங்கள் எப்படி நீக்க முடியும். யாராலும் சிவசேனாவை அழிக்க முடியாது. உங்களுக்கு தைரியம் இருந்தால், திருடிய சிவசேனா பெயர், வில், அம்புடன் தேர்தல் களத்துக்கு வாருங்கள். 2024 தேர்தல் தான் நாட்டில் நடக்கும் கடைசி தேர்தல் என எல்லோரும் நினைக்க ஆரம்பித்துவிட்டனர். மராத்தி தினத்தில் கவர்னர் சட்டசபையின் இரு அவைகளில் இந்தியில் உரையாற்றுகிறார். இது துரதிருஷ்டவசமானது.
இவ்வாறு அவர் பேசினார்.
- கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் 2 ஆண்டுகள் வீட்டுக்குள் முடங்கி கிடந்தனர்.
- கொரோனா தடுப்பு மருந்தாக மூலிகை மற்றும் ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.
மும்பை :
மராட்டிய மாநிலம் அகோலாவில் நடந்த ஆன்மிக சொற்பொழிவு ஒன்றில் வாழும் கலை அமைப்பின் தலைவரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேசியதாவது:-
கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் 2 ஆண்டுகள் வீட்டுக்குள் முடங்கி கிடந்தனர். அந்த நேரத்திலேயே, கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது அல்ல என்று நான் கூறினேன். சில நாடுகள் மற்றும் சில மனிதர்கள் செய்த சதி தான் என்றும் கூறினேன். இது கிருமியை பரப்பி செய்யப்பட்ட போர். ஆனால் இதனை வெளியில் கூற வேண்டாம், சர்ச்சையை ஏற்படுத்தி விடும் என்று என்னுடைய சீடர்கள் என்னை அறிவுறுத்தினர்.
கொரோனா தடுப்பூசி மருந்து எதிர்பார்த்த அளவு பலன் அளிக்கவில்லை என்று பெரிய நாடுகள் கூட தற்போது கூறுகின்றன. இது தொடர்பாக நான் முன்பு கூறியது இப்போது நிரூபணம் ஆகி உள்ளது.
கொரோனா தடுப்பு மருந்தாக மூலிகை மற்றும் ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்த வேண்டும். நமது நாட்டின் யோகா மற்றும் ஆயுர்வேதம் மீது நாம் நிச்சயம் நம்பிக்கை வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






