search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    முதல் வெற்றியை பதிவு செய்வது யார்? குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு 208 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்
    X

    அதிரடியாக ஆடிய ஹர்மன்பிரீத் கவுர்

    முதல் வெற்றியை பதிவு செய்வது யார்? குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு 208 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்

    • கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 30 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசினார்.
    • குஜராத் ஜெயண்ட்ஸ் தரப்பில் ஸ்னே ரானா 2 விக்கெட் கைப்பற்றினார்.

    மும்பை:

    முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. 5 அணிகள் பங்கேற்றுள்ள இந்த சீசனின் துவக்க ஆட்டம் நவி மும்பை டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 30 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசினார். ஹெய்லி மேத்யூஸ் 47 ரன்களும், நாட் ஷிவர் பிரன்ட் 23 ரன்களும், அமெலியா கெர் ஆட்டமிழக்காமல் 45 ரன்களும் அடித்தனர்.

    குஜராத் தரப்பில் ஸ்னே ரானா 2 விக்கெட் கைப்பற்றினார். ஜார்ஜியா, தனுஜா, ஆஷ்லெய் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்குகிறது.

    Next Story
    ×