என் மலர்
மகாராஷ்டிரா
- மும்பையில் 2 தினங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று ஊடுருவி தெருக்களில் நடமாடிய காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகி உள்ளது
- வன இலாகாவினர் முற்றுகையிட்டு அப்பகுதியில் ஆய்வு செய்து வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பவானி நகர் ஏரியா பகுதியில் 2 தினங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று ஊடுருவி தெருக்களில் நடமாடிய காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகி உள்ளது. இதனால் இந்த பகுதி மக்களிடம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வன இலாகாவினர் அங்கு முற்றுகையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
- அதிரடியாக ஆடிய யஸ்திகா பாட்டியா 43 ரன்களும், ஹெய்லி மேத்யூஸ் 32 ரன்களும் சேர்த்தனர்.
- 15வது ஓவரில் நாட் ஷிவர் பிரண்ட் அடுத்தடுத்து பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 105 ரன்களில் ஆல் அவுட் ஆனது. கேப்டன் மெக் லேனிங் 43 ரன்களும், ஜெமிமா 25 ரன்களும் அடித்தனர்.
இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. அதிரடியாக ஆடிய யஸ்திகா பாட்டியா 43 ரன்களும், ஹெய்லி மேத்யூஸ் 32 ரன்களும் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். அதன்பின்னர் நாட் ஷிவர் பிரன்ட், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 15வது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் நாட் ஷிவர் பிரண்ட் அடுத்தடுத்து பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். நாட் ஷிவர் பிரண்ட் 23 ரன்களுடனும், கேப்டன் கவுர் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
30 பந்துகள் மீதமிருந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 109 ரன்கள் எடுத்தது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.
- டெல்லி அணி துவக்கம் முதலே மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.
- அதிகபட்சமாக கேப்டன் மெக் லேனிங் 43 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தார்.
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்று முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, துவக்கம் முதலே மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.
துவக்க வீராங்கனையான கேப்டன் மெக் லேனிங் 43 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தார். ஜெமிமா 25 ரன்கள் அடித்தார். மற்ற வீராங்கனைகள் நிலைக்கவில்லை. இதனால் 18 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த அந்த அணி 105 ரன்களில் ஆல் அவுட் ஆனது. மும்பை தரப்பில் சாய்கா இஷாக், இசி வாங், ஹெய்லி மேத்யுஸ் ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 106 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது.
- நடிகை நக்மா மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
- மும்பையில் சமீப நாட்களில் சுமார் 80 பேர் கே.ஒய்.சி. மோசடியில் பணத்தை இழந்திருப்பதும், இதில் நடிகை நக்மாவும் ஒருவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை நக்மா. 48 வயதான இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார். இவரது செல்போனுக்கு சமீபத்தில் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், இருந்த 'லிங்'கை நடிகை நக்மா 'கிளிக்' செய்த உடன் ஒருவர் அவரை தொடர்பு கொண்டு தன்னை வங்கி அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டார்.
அந்த நபர், நக்மாவிடம் உங்களது வங்கி கணக்கின் கே.ஒய்.சி. (வாடிக்கையாளரின் விவரம்) புதுப்பிக்க உதவுவதாக கூறியுள்ளார். சிறிது நேரத்தில் நக்மாவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.99 ஆயிரத்து 998 அபேஸ் செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை நக்மா மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இதுபற்றி நடிகை நக்மா கூறுகையில், "லிங்கில் கேட்கப்பட்டு இருந்த விவரங்களை நான் பகிரவில்லை. இருப்பினும் எதிர்முனையில் பேசிய நபர், கே.ஒய்.சி.யை புதுப்பித்து தருவதாக கூறி, எனது இன்டர்நெட் பேங்கிங் மூலம் வேறொரு வங்கி கணக்கிற்கு பணத்தை பரிவர்த்தனை செய்துள்ளார். நல்ல வேளையாக நான் பெரும் தொகையை இழக்கவில்லை" என்றார்.
மும்பையில் சமீப நாட்களில் சுமார் 80 பேர் கே.ஒய்.சி. மோசடியில் பணத்தை இழந்திருப்பதும், இதில் நடிகை நக்மாவும் ஒருவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
- விமானத்தில் இறங்கிய பயணிகளிடம் சோதனை போட்டனர்.
- பயணியை கைது செய்த அதிகாரிகள் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
மும்பை:
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் எத்தியோப்பிய தலைநகர் அடிஸ்அபாவில் இருந்து மும்பை நோக்கி வந்த விமானத்தில் இறங்கிய பயணிகளிடம் சோதனை போட்டனர். இதில் சந்தேகத்தின் பேரில் ஒரு பயணியை வழிமறித்து உடைமைகளில் சோதனை போட்டனர். இதில் எதுவும் சிக்காததால் தனிமை படுத்தி சோதனை நடத்தினர். இதில் உடலில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 7 கிலோ 600 கிராம் எடையுள்ள பார்சல் ஒன்று இருந்ததை பறிமுதல் செய்தனர்.
இதில் ஹெராயின் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.53 கோடி ஆகும். பயணியை கைது செய்த அதிகாரிகள் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
- முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது.
- கடுமையாக போராடிய பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் சேர்த்தது
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹர்லீன் தியோல் 67 ரன்களும், சோபியா 65 ரன்களும் விளாசினர். பெங்களூரு தரப்பில் ஷ்ரேயங்கா பாட்டீல், ஹெதர் நைட் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி கடுமையாக போராடி 190 ரன்களே எடுத்தது. துவக்க வீராங்கனை சோபி டிவைன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 66 ரன்கள் குவித்து வெற்றிக்கான அடித்தளம் அமைத்தார். எலிஸ் பெரி 32 ரன்களும், ஹெதர் நைட் (30 நாட் அவுட்) ரன்களும் எடுத்தனர். இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.
- ரோந்து பணியின்போது திடீரென விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த கடற்படை உத்தரவிட்டுள்ளது.
மும்பை கடற்பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான துருவ் என்கிற மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் இன்று விபத்தில் சிக்கியது.
இது இன்று காலை வழக்கமான ரோந்து பணியின்போது திடீரென விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்து, உடனடியாக விரைந்த மீட்புக்குழுவினர் கடற்படை ரோந்து கப்பல் மூலம் விபத்தில் சிக்கிய மூன்று பணியாளர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த கடற்படை உத்தரவிட்டுள்ளது.
- சர்வதேச மகளிர் தினத்தன்று மகளிர் பிரீமியர் லீக் போட்டியை இலவசமாக காணலாம்.
- இத்தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்று வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது.
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்று வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 4-ம் தேதி தொடங்கிய இத்தொடர் வரும் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தன்று நடைபெறும் குஜராத் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையிலான போட்டியை பெண்கள், சிறுமிகள் மற்றும் ஆண்கள் உள்பட அனைவரும் இலவசமாக காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் பிரீமியர் லீக்கின் அதிகாரபூர்வ டுவிட்டரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஏற்கனவே, மகளிர் கிரிக்கெட் தொடரில் நடைபெறும் அனைத்துப் போட்டிகளையும் பெண்கள், சிறுமிகள் இலவசமாக பார்க்கலாம் என பிசிசிஐ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவரில் 211 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய உத்தர பிரதேச அணி 169 ரன்கள் மட்டுமே எடுத்தது.
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 211 ரன்கள் குவித்தது. கேப்டன் மெக் லேனிங் அதிரடியாக ஆடி 42 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34 ரன்களும், ஜெஸ் ஜோனாசன் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து, 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. வாரியர்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தஹிலா மெக்ராத் மட்டும் போராடினார். மற்ற வீராங்கனைகள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், உத்தர பிரதேச அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. தஹிலா மெக்ராத் 50 பந்துகளில் 90 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.
- டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
- கேப்டன் மெக் லேனிங் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 70 ரன்கள் விளாசினார்.
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், உ.பி. வாரியர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. கேப்டன் மெக் லேனிங் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 70 ரன்கள் விளாசினார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34 ரன்களும், ஜெஸ் ஜோனாசன் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. வாரியர்ஸ் அணி களமிறங்குகிறது.
- முதலில் ஆடிய பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
- மும்பை இந்தியன்ஸ் துவக்க வீராங்கனை ஹெய்லி மேத்யூஸ் அதிரடியாக ஆடி ரன் குவித்தார்.
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் ஆடிய பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 28 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஷ்ரேயங்கா பாட்டீல் தலா 23 ரன்கள் அடித்தனர். மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ஹெய்லி மேத்யூஸ் 3 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 34 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. துவக்க வீராங்கனை ஹெய்லி மேத்யூஸ் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். மறுமுனையில் யஷ்திகா பாட்டில் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஹெய்லியுடன் நாட் ஷிவர் பிரண்ட் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த மும்பை அணி, 159 ரன்கள் சேர்த்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹெய்லி 77 ரன்களுடனும், நாட் ஷிவர் பிரண்ட் 55 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
- சிறுமியின் தாயார் ஒரு வணிகவளாகத்தில் வேலை பார்த்து வருகிறார்.
- பிரசவத்திற்காக ஆஸ்பத்திரிக்கு சென்றால் மாட்டிக்கொள்வோம் என கருதிய சிறுமி யூ-டியூப்பில் வீடியோக்களை பார்த்து வீட்டில் தானாகவே பிரசவம் பார்த்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
நாக்பூர்:
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த சிறுமி அதிகநேரம் செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் தாக்கூர் என்ற வாலிபருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது.
தாக்கூரை பற்றிய முழு விபரங்களும் கூட தெரியாத சிறுமி நீண்ட நேரம் அவருடன் செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலமும், வாய்ஸ் கால் மூலமும் பேசி பழகி வந்துள்ளார்.
நாளடைவில் இருவரும் நெருங்கி பழகிய நிலையில் அவ்வப்போது தனிமையில் சந்தித்துள்ளனர். அப்போது தாக்கூர் ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். நாளடைவில் மாணவியின் வயிறு பெரிதாகி உள்ளது. இதுகுறித்து சிறுமியிடம் அவரது தாயார் கேட்டபோது, தனக்கு சில உடல்நல பிரச்சினைகள் இருப்பதாக கூறி சமாளித்துள்ளார்.
சிறுமியின் தாயார் ஒரு வணிகவளாகத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் பிரசவத்திற்காக ஆஸ்பத்திரிக்கு சென்றால் மாட்டிக்கொள்வோம் என கருதிய சிறுமி யூ-டியூப்பில் வீடியோக்களை பார்த்து வீட்டில் தானாகவே பிரசவம் பார்த்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதன்படி யூ-டியூப்பில் பிரசவம் செய்வது குறித்து வீடியோக்களை பார்த்துள்ளார்.
கடந்த 3-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த சிறுமி யூ-டியூப்பில் வீடியோக்களை பார்த்து தானாகவே குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
சிறிது நேரத்தில் குழந்தை அழுதுள்ளது. இதனால் சத்தம் கேட்டு மாட்டிக்கொள்ளக்கூடாது என நினைத்த அந்த சிறுமி பெல்ட்டால் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் குழந்தையின் உடலை வீட்டில் உள்ள ஒரு பெட்டியில் மறைத்து வைத்துள்ளார். வேலை முடிந்து வீடு திரும்பிய சிறுமியின் தாயார் வீட்டின் பல இடங்களில் ரத்தக்கறை படிந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் சிறுமியிடம் விசாரித்த போது தனது மாதவிடாய் காரணமாக ரத்தக்கறை ஏற்பட்டதாக கூறினார். ஆனாலும் விபரீதம் ஏதோ நடந்துள்ளது என்பதை உணர்ந்த சிறுமியின் தாயார் அவரிடம் தொடர்ந்து விசாரித்த போது நடந்த சம்பவங்களை தாயிடம் கூறி சிறுமி கதறி அழுதுள்ளார்.
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கொலை செய்யப்பட்ட பிறந்த குழந்தை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமியை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






