என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • தொடரின் இன்று நடைபெறும் 12வது லீக் ஆட்டத்தில் இதுவரை தோல்வியை சந்திக்காத மும்பை அணியும், குஜராத் அணியும் மோத உள்ளன.
    • தனது வெற்றிபயணத்தை தொடர மும்பை அணி கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி.வாரியர்ஸ், குஜராத் ஜெய்ண்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்று ஆடி வருகின்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

    2வது மற்றும் 3வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் ஆடும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

    இந்நிலையில் இந்த தொடரின் இன்று நடைபெறும் 12வது லீக் ஆட்டத்தில் இதுவரை தோல்வியை சந்திக்காத மும்பை அணியும், குஜராத் அணியும் மோத உள்ளன.

    தற்போது வரை இந்த தொடரில் தோல்வியை சந்திக்காத மும்பை அணியை வீழ்த்தி, தொடக்க ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் முனைப்புடன் குஜராத் அணி ஆடும்.

    அதே வேளையில் தனது வெற்றிபயணத்தை தொடர மும்பை அணி கடுமையாக போராடும். இதனால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    • முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது.
    • டெல்லி அணியில், அதிரடியாக ஆடிய அலிஸ் கேப்சி 38 பந்துகளில் ஆட்டமிழந்தார்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக எலிஸ் பெர்ரி 67 ரன்கள் (நாட் அவுட்) சேர்த்தார்.

    இதையடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துவக்க வீராங்கனை ஷபாலி வர்மா ரன் எதுவும் எடுக்காமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்தார். கேப்டன் மெக் லேனிங் 15 ரன்களில் வெளியேறினார். அதிரடியாக ஆடிய அலிஸ் கேப்சி 38 பந்துகளில் ஆட்டமிழந்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 32 ரன்கள் எடுத்தார்.

    அதன்பின் மரிசான் கேப், ஜெஸ் ஜோனாசன் இருவரும் நிதானமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். கடைசி ஓவரின் 4வது பந்தில் பவுண்டரி அடித்து ஜோனாசன் வெற்றியை உறுதி செய்தார். டெல்லி அணி 2 பந்துகள் மீதமிருந்த நிலையில், 4 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் சேர்த்தது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மரிசான் கேப் 32 ரன்களுடனும், ஜோனாசன் 29 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

    • குழந்தையை வளர்க்கும் உரிமை குழந்தையை பெற்ற தாய்க்கே உள்ளது எனவும் கோர்ட்டு கூறியது.
    • குழந்தையின் வளர்ப்பு பெற்றோர், குழந்தையை முறையாக தத்து எடுத்திருப்பதாகவும், எனவே அதனை தாயிடம் கொடுக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.

    மும்பை:

    மும்பையை சேர்ந்த 25 வயது இளம்பெண், வாலிபர் ஒருவரை காதலித்தார்.

    காதல் ஜோடி திருமணத்திற்கு முன்பே பல இடங்களுக்கும் சென்று உல்லாசமாக இருந்தனர். இதில் அந்த பெண் கர்ப்பம் ஆனார். இதுபற்றி காதலனிடம் கூற அவர் உடனடியாக திருமணம் செய்ய மறுத்தார்.

    இதற்கிடையே நிறைமாத கர்ப்பிணியான அந்த பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2021-ம் ஆண்டு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    திருமணத்திற்கு முன்பே குழந்தை பிறந்ததால் அதனை எப்படி வளர்ப்பது என தெரியாமல் திணறிய இளம்பெண்ணை சந்தித்த சிலர், அந்த குழந்தையை தத்து கொடுத்துவிடுமாறு கூறினர்.

    அப்போது இருந்த மனநிலையில் அந்த பெண்ணும் அதற்கு ஒப்பு கொண்டார். அவரிடம் பேசிய இடைதரகர்கள், குழந்தையை தத்து எடுப்பவர்கள் மிகப்பெரிய செல்வந்தர்கள் என்றும், அவர்கள் குழந்தையை நன்றாக வளர்ப்பார்கள் எனவும் கூறினர்.

    இந்நிலையில் குழந்தையை தத்து கொடுத்த பெண், அவரது காதலனை திருமணம் செய்து கொண்டார். எனவே அவர், தத்து கொடுத்த குழந்தையை மீண்டும் வாங்க முயற்சி செய்தார்.

    ஆனால் குழந்தையை தத்து எடுத்து அதனை வளர்த்து வரும் பெற்றோர் குழந்தையை தாயிடம் கொடுக்க மறுத்துவிட்டனர்.

    இதையடுத்து குழந்தையின் தாய், மும்பை மாநகர கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையின் போது கோர்ட்டில் ஆஜரான குழந்தையின் வளர்ப்பு பெற்றோர், குழந்தையை முறையாக தத்து எடுத்திருப்பதாகவும், எனவே அதனை தாயிடம் கொடுக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.

    வழக்கை விசாரித்த கோர்ட்டு தத்தெடுப்பு தொடர்பான ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.

    அதன்படி வளர்ப்பு பெற்றோர் கோர்ட்டில் தத்தெடுப்பு ஆவணங்களை ஒப்படைத்தனர். அந்த ஆவணங்கள் கடந்த 2022-ம் ஆண்டே கோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்ட ஆவணம் என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து வளர்ப்பு பெற்றோர், குழந்தையை அதனை பெற்ற தாயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த வாரம் உத்தரவிட்டது. குழந்தையை வளர்க்கும் உரிமை குழந்தையை பெற்ற தாய்க்கே உள்ளது எனவும் கோர்ட்டு கூறியது.

    • கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்றபோது அது 60 ஓவர்கள் கொண்ட போட்டியாக இருந்தது.
    • டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

    மும்பை:

    20 ஓவர் கிரிக்கெட் வருகைக்கு பிறகு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி (50 ஓவர்) ஆகியவற்றின் மீது ரசிகர்கள் ஆர்வம் குறைந்துள்ளதாக கருதப்படுகிறது.

    இதையடுத்து டெஸ்ட் போட்டி மீதான ஆர்வத்தை அதிகரிக்க உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. இதற்கிடையே ஒரு நாள் போட்டி மீது ரசிகர்கள் கவனத்தை இழுக்க இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி யோசனை தெரிவித்துள்ளார்.

    ஒரு நாள் கிரிக்கெட் போட்டி உயிர்பித்து இருக்க எதிர்காலத்தில் 40 ஓவர் ஆட்டங்களாக குறைக்கப் பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இது ரசிகர்களின் கவனம் குறைந்து போவதை தடுக்கும்.

    1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்றபோது அது 60 ஓவர்கள் கொண்ட போட்டியாக இருந்தது. பின்னர் 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தற்போது 40 ஓவர்களாக குறைக்க வேண்டிய சரியான நேரம்.

    காலத்திற்கு ஏற்ப வளர்ச்சி அடையுங்கள். வடிவமைப்பை குறையுங்கள். 20 ஓவர் கிரிக்கெட் முக்கியமானதுதான் என்று நினைக்கிறேன். இது விளையாட்டின் வளர்ச்சிக்கு தேவையானது. ஆனால் இரு தரப்பு தொடர்கள் குறைக்கப்பட வேண்டும்.

    உலகம் முழுவதும் போதுமான உள்நாட்டு லீக் போட்டிகள் நடக்கின்றன. அந்த லீக் போட்டிகள் நடக்க அனுமதிக்க வேண்டும். அதன்பிறகு இடையில் ஒரு உலக கோப்பையை நடத்த வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மது விற்பனை 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் விஸ்கி, பிராந்தி, ரம், ஜின் மற்றும் ஓட்கா வகைகள் அடங்கும்.
    • கடந்த 10 ஆண்களில் ஒரு தட்டையான வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த 4 ஆண்டுகளில் சிகரெட் விற்பனையில் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் சுமார் 5 சதவீதமாக இருந்தது.

    மும்பை:

    இந்தியாவில் சில்லரை பணவீக்கம் கடந்த ஜனவரி மாதத்தில் 6.52 சதவீதமாக உயர்ந்துள்ளது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. உணவு பொருட்களின் விலை உயர்வே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இது ஒருபுறம் இருக்க வேகமாக விற்பனையாகும் நுகர்வு பொருட்கள் சந்தையில் கடந்த ஆண்டு சிகரெட் மற்றும் மது விற்பனை அதிகரித்திருப்பது புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது.

    சமீபத்திய ஆராய்ச்சி அறிக்கைகள் மற்றும் தொழில்துறை மதிப்பீடுகளின்படி டிசம்பர் 2022 வரை கடந்த 4 காலாண்டுகளில் சிகரெட் விற்பனை அளவு தொடர்ந்து 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இதே போல மது விற்பனையும் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் விஸ்கி, பிராந்தி, ரம், ஜின் மற்றும் ஓட்கா வகைகள் அடங்கும்.

    கடந்த 10 ஆண்களில் ஒரு தட்டையான வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த 4 ஆண்டுகளில் சிகரெட் விற்பனையில் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் சுமார் 5 சதவீதமாக இருந்தது.

    இதுகுறித்து மதுபான விற்பனை நிறுவனமான டியாஜியோவுக்கு சொந்தமான யுனைடெட் ஸ்பிரிட்ஸின் நிர்வாக இயக்குனர் ஹினா நாகராஜன் கூறுகையில், பணவீக்கம் மற்றும் பெரிய அளவிலான மேக்ரோ பொருளாதார பிரச்சினை சற்று இழுபறியாக இருக்கலாம். ஆனால் நுகர்வோர் தேவை தொடர்ந்து வழுவாக இருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.

    அதிக வரி விதிப்பு, சட்ட விரோத மற்றும் கடத்தப்பட்ட சிகரெட்டுகள் மீது கடும் நடவடிக்கை ஆகியவை சிகரெட் சந்தையில் அதன் விற்பனை அளவை அதிகரிக்க செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    • இரவு 7.30 மணிக்கு நடக்கும் 11-வது லீக் ஆட்டத்தில் இரண்டு அணிகள் மோதுகின்றன.
    • பெங்களூரு அணி தான் மோதிய நான்கு ஆட்டத்திலும் தோல்வியை சந்தித்தது.

    மும்பை:

    முதலாவது பெண்கள் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 11-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்-ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    டெல்லி அணி 4 ஆட்டத்தில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. பெங்களூரு அணி தான் மோதிய நான்கு ஆட்டத்திலும் தோல்வியை சந்தித்தது. இன்னும் வெற்றி கணக்கை தொடங்காத நிலையில் பெங்களூரு அணி உள்ளது. அந்த அணி முதல் வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது.

    • முதலில் ஆடிய உ.பி. வாரியர்ஸ் அணி 159 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய மும்பை அணி 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் டி 20 கிரிக்கெட் தொடர் மும்பையில் நடந்து வருகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய 10-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய உ.பி. வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. பொறுப்புடன் ஆடிய கேப்டன் அலிசா ஹீலி 58 ரன்னும், தஹ்லியா மெக்ராத் 50 ரன்னும் எடுத்தனர்.

    உ.பி. அணி சார்பில் சாயிகா இஷாக் 3 விக்கெட்டும், அமீல கெர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. மும்பை அணி தொடக்கம் முதல் அதிரடியில் இறங்கியது. யஸ்தீகா பாட்டியா 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், நட் சீவர் பிரன்ட் ஜோடி இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. கவுர் 53 ரன்னும், நட் சீவர் 45 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இறுதியில் மும்பை அணி 17.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் 4வது வெற்றியையும் பதிவு செய்தது.

    • குஜராத், பெங்களுரூ, டெல்லி ஆகிய அணிகளை வீழ்த்தியது. மும்பை 4-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.
    • உ.பி. வாரியர்ஸ் அணி 3 ஆட்டத்தில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி பெற்று உள்ளது.

    5 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் மும்பையில் நடந்து வருகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 10-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்நிலையில், உ.பி வாரியர்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.

    மும்பை அணி தான் விளையாடிய 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது. குஜராத், பெங்களுரூ, டெல்லி ஆகிய அணிகளை வீழ்த்தியது. மும்பை 4-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.

    அந்த அணி பேட்டிங், பந்துவீச்சில் சம பலத்துடன் உள்ளது. மேத்யூஸ், ஹர்மன் பிரீத் கவூர், ஸ்கிவர் பிரண்ட், அமெலியா கெர், வாங், பூஜா வஸ்த்ரகர் ஆகிய வீராங்கனைகள் உள்ளனர்.

    உ.பி. வாரியர்ஸ் அணி 3 ஆட்டத்தில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி பெற்று உள்ளது. அந்த அணியில் அலிசா ஹுலி, தகலியா மெக்ராத், தீப்தி சர்மா, கிரேஸ் ஹாரிஸ், சோபி எக்பெஸ்டோன், ராஜேஸ்வரி கெய்க்வாட், தேவிகா வைதியா ஆகிய வீராங்கனைகள் உள்ளனர்.

    • பராக்கா பகுதியில் சென்ற போது மர்ம நபர்கள் ரெயில் மீது திடீரென்று கற்களை சரமாரியாக வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
    • ரெயில் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. இந்த சம்பவத்தால் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.

    கொல்கத்தா:

    மேற்குவங்காள மாநிலம் ஹவுரா ரெயில் நிலையத்தில் இருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு புறப்பட்டு சென்றது. முர்ஷிதாபாத் மாவட்டம் பராக்கா பகுதியில் சென்ற போது மர்ம நபர்கள் ரெயில் மீது திடீரென்று கற்களை சரமாரியாக வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

    இதில் ரெயில் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. இந்த சம்பவத்தால் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. மேற்கு வங்காளத்தில் இதுபோன்று வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடைறெ்று வருகிறது. இதுகுறித்து கிழக்கு ரெயில்வே கோட்ட கூறுகையில், ரெயில் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் துரதிருஷ்டவசமானது. வந்தே பாரத் ரெயிலை குறி வைத்து தாக்கும் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது" என்றார்.

    • குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்களே சேர்த்தது.
    • ஷபாலி வர்மா 28 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில், குஜராத் ஜெயண்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. முன்னணி வீராங்கனைகள் சோபிக்காத நிலையில், 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்களே சேர்த்தது. அதிகபட்சமாக கிம் கார்த் 32 ரன்கள் (நாட் அவுட்) அடித்தார். டெல்லி தரப்பில் மரிசான் கேப் 5 விக்கெட்டுகளும், ஷிகா பாண்டே 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

    இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 77 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. துவக்க வீராங்கனைகளான மெக் லேனிங் 21 ரன்களும், ஷபாலி வர்மா 76 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர். இதனால் டெல்லி அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இந்த கொடூர செயலுக்கு மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.

    புனே :

    பீட் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. புனே பகுதியில் உள்ள கணவர் வீட்டில் தன்னை மாமியார் சித்ரவதை செய்து வருவதாக அப்பெண் பெற்றோரிடம் தெரிவித்தார்.

    இதன்பேரில் பெற்றோர் மாமியாருக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரித்தனர்.

    அப்போது அந்த பெண் திடுக்கிடும் தகவலை போலீசாரிடம் தெரிவித்தார். மாதவிடாய் காலத்தில் தனது கை, கால்களை கட்டி போட்டு ரத்தத்தை பிடித்து அதனை அகோரி பூஜை மற்றும் மாந்திரீக பூஜைக்காக தனது மாமியார் மந்திரவாதியிடம் ரூ.50 ஆயிரத்திற்கு விற்று வருவதாக கூறினார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த பெண்ணின் மாமியார் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    மாமியாரின் இந்த கொடூர செயலுக்கு மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு போலீசாரை அறிவுறுத்தினார்.

    • முதலில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 138 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
    • அலிசா ஹீலி 96 ரன்களும், தேவிகா 36 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய பெங்களூரு அணி, உ.பி. அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.

    அதிரடியாக ஆடிய எல்லிஸ் பெர்ரி 39 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்சருடன் 52 குவித்து ஆறுதல் அளித்தார். சோபி டிவைன் 36 ரன்கள், ஸ்ரேயா பாட்டீல் 15 ரன்கள் அடித்தனர். மற்ற வீராங்கனைகள் சோபிக்கவில்லை. இதனால் அந்த அணி 19.3 ஓவர்களில், 138 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. உ.பி. வாரியர்ஸ் தரப்பில் சோபி எக்லஸ்டோன் 4 விக்கெட், தீப்தி சர்மா 3 விக்கெட் கைப்பற்றினர்.

    இதையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உ.பி. வாரியர்ஸ் அணியின் துவக்க வீராங்கனைகள் தேவிகா வைத்யா, அலிசா ஹீலி (கேப்டன்) இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி நிலைத்து நின்று வெற்றியை எட்டினர்.

    இவர்களை பிரிக்க அனைத்து பந்துவீச்சாளர்களையும் மாறி மாறி பந்து வீச செய்தனர். ஆனால் அவர்களின் முயற்சி வீணானது. பந்துகளை பவுண்டரிகளாக பறக்கவிட்ட அலிசா ஹீலி 96 ரன்களும், தேவிகா 36 ரன்களும் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    13 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியதால், 10 விக்கெட் வித்தியாசத்தில் உ.பி. வாரியர்ஸ் வெற்றி பெற்றது. 47 பந்துகளில் 18 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 96 ரன்கள் விளாசிய அலிசா ஹீலி சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார். 

    ×