என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • குஜராத் அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தது.
    • அதிரடியாக ஆடி அரை சதம் கடந்த லாரா, 57 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டம் மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் குஜராத் ஜெயண்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் துவக்க வீராங்கனை சோபியா 4 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், லாரா வோல்வார்ட்- ஹர்லீன் தியோல் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் சேர்த்தது. ஹர்லீன் தியோல் 31 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், லாராவுடன் ஆஷ்லி கார்ட்னர் இணைந்தார்.

    அதிரடியாக ஆடி அரை சதம் கடந்த லாரா, 57 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஆஷ்லியுடன் தயாளன் ஹேமலதா இணைய, 20 ஓவர் முடிவில் குஜராத் அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தது. ஆஷ்லி 51 ரன்களுடன் களத்தில் இருந்தார்

    இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களமிறங்குகிறது. 

    • மகளை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மும்பை :

    மும்பையில் உள்ள லால்பாக் இப்ராகிம் கசம் சால் பகுதியை சேர்ந்தவர் வீனா (வயது53). இவரது மகள் ரிபுல் ஜெயின் (23). சம்பவத்தன்று வீனாவின் வீட்டுக்கு உறவினர் சென்றார். வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. வெகு நேரமாக தட்டியும் யாரும் கதவை திறக்கவில்லை. அதே நேரத்தில் வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியது.

    சந்தேகமடைந்த உறவினர் சம்பவம் குறித்து காலாசவுக்கி போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து சென்று வீட்டை திறந்து பார்த்தனர். வீட்டுக்குள் ரிபுல் ஜெயின் மவுனமாக இருந்தார். வீனாவை காணவில்லை. வீட்டின் பீரோவில் மனித உடல் அழுகிய நிலையில் இருந்தது. சந்தேகமடைந்த போலீசார் ரிபுல் ஜெயினை பிடித்து விசாரித்தனர். இதில் அதிர்ச்சி தகவல் வெளியானது.

    வீனாவுக்கும், மகள் ரிபுல் ஜெயினுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் தாய் மீது மகளுக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. சம்பவத்தன்று ரிபுல் ஜெயின், தாய் வீனாவை கொலை செய்து உள்ளார். பின்னர் அவர் மார்பிள் கட்டர், கத்தியை பயன்படுத்தி தாய் உடலை துண்டு, துண்டுடாக வெட்டி கூறுபோட்டது தெரியவந்தது.

    போலீசார் வீட்டின் பீரோ, பாத்திரம், தண்ணீர் தொட்டியில் இருந்து வீனாவின் உடல் பாகங்களை மீட்டனர். மேலும் உடல் பாக மாதிரிகளை ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    தாயை கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டிய மகளை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீனாவை 2, 3 மாதங்களாக பார்க்கவில்லை என அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். எனவே வீனா எப்போது, எப்படி கொலை செய்யப்பட்டார்?, இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமீபத்தில் டெல்லியில் அப்தாப் அமீன் என்ற வாலிபர் தனது காதலியான மும்பையை அடுத்த வாசய் பகுதியை சேர்ந்த ஷரத்தாவை கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் அடைத்து வைத்து, பின்னர் உடல் பாகங்களை சிறிது சிறிதாக வெளியில் எடுத்து சென்று காட்டில் வீசினார். அதே பாணியில் இந்த கொலையும் நடந்து உள்ளதால், ஷரத்தா கொலை பாணியை அறிந்து அதேபோல தாய் வீனாவை ரிபுல் ஜெயின் கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

    பெற்ற மகளே தாயை கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டிய நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • முதலில் ஆடிய உ.பி. வாரியர்ஸ் 135 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • ஆர்சிபி அணியில் அதிகபட்சமாக கனிகா 46 ரன்கள் சேர்த்தார்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த உ.பி. வாரியர்ஸ், 19.3 ஓவர்களில் 135 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கிரேஸ் ஹாரிஸ் 46 ரன்கள் சேர்த்தார். கிரண், தீப்தி சர்மா தலா 22 ரன்கள் அடித்தனர். பெங்களூரு தரப்பில் சிறப்பாக பந்துவீசிய எலிஸ் பெர்ரி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. கேப்டன் மந்தனா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். சோபி டிவைன் 14 ரன்கள், எலிஸ் பெர்ரி 10 ரன்கள், ஹீதர் நைட் 24 ரன் என ஆட்டமிழந்தனர். அதன்பின் கனிகா அஹுஜா- ரிச்சா கோஷ் ஜோடி அணியை சரிவில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றது.

    அதிரடியாக ஆடிய கனிகா 46 ரன்களில் ஆட்டமிழக்க, ரிச்சா கோஷ் தொடர்ந்து ஆடி வெற்றியை உறுதி செய்தார். பெங்களூரு அணி 12 பந்துகள் மீதமிருந்த நிலையில், 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. இதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரிச்சா கோஷ் 31 ரன்களுடனும், ஷ்ரேயங்கா பாட்டீல் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்த போட்டியில் பெங்களூரு அணி பெறும் முதல் வெற்றி இதுவாகும். முதல் 5 லீக் ஆட்டங்களிலும் அடைந்த தோல்விக்கு இந்த வெற்றி ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது. 

    • அதிரடியாக ஆடிய கிரேஸ் ஹாரிஸ் 46 ரன்களும், தீப்தி சர்மா 22 ரன்களும் சேர்த்தனர்.
    • பெங்களூரு தரப்பில் சிறப்பாக பந்துவீசிய எலிஸ் பெர்ரி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 13வது லீக் ஆட்டம் மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் உ.பி. வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த உ.பி. வாரியர்ஸ், ரன் குவிக்க திணறியது. துவக்க வீராங்கனையாக களமிறங்கிய கேப்டன் அலிசா ஹீலி ஒரு ரன்னிலும், தேவிகா வைத்யா ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். கிரண் 22 ரன்கள் சேர்த்தார். அதன்பின் கிரேஸ் ஹாரிஸ், தீப்தி சர்மா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அதிரடியாக ஆடிய கிரேஸ் ஹாரிஸ் 46 ரன்களும், தீப்தி சர்மா 22 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் 19.3 ஓவர்களில் உ.பி. வாரியர்ஸ் 135 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    பெங்களூரு தரப்பில் சிறப்பாக பந்துவீசிய எலிஸ் பெர்ரி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சோபனா ஆஷா, ஷோபி டிவைன் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்குகிறது.

    • விவசாயிகள் வரும் 20ம்தேதி மும்பையை அடைய திட்டமிட்டுள்ளனர்.
    • வெங்காய விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு 600 ரூபாய் நிவாரணம் வழங்க கோரிக்கை

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாசிக் மாவட்டத்தின் திண்டோரியில் இருந்து மும்பை நோக்கி பிரமாண்ட பேரணியை நடத்துகின்றனர். இதில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். விவசாயிகள் மட்டுமின்றி, அமைப்புசாரா தொழிலாளர்கள், ஆஷா பணியாளர்கள், பழங்குடியின சமூகத்தினர் என ஏராளமானோர் இந்த பேரணியில் பங்கேற்றுள்ளனர். சுமார் 200 கிமீ பயணம் மேற்கொள்ளும் விவசாயிகள் வரும் 20ம்தேதி மும்பையை அடைய திட்டமிட்டுள்ளனர்.

    பேரணியின்போது ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளில் விவசாயிகள் அணிவகுத்து செல்வதை காண முடிகிறது.

    வெங்காயம் பயிரிட்ட விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு 600 ரூபாய் உடனடி நிவாரணம் வழங்கவேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட ஏராளமான கோரிக்கைகளை விவசாயிகள் பட்டியலிட்டுள்ளனர்.

    மகாராஷ்டிர மாநிலத்தில் வெங்காய விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகப்படியான விளைச்சல் இருந்ததால் இந்த நிலைக்கு வழிவகுத்துள்ளதாக முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். மேலும், வெங்காய விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு 300 ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளார். அந்த நிவாரணத்தை உயர்த்தி வழங்கும்படி விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

    • நீரஜ் பஜாஜ் வாங்கியுள்ள வீடு 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 3 தளங்களை கொண்டது.
    • லோதா மலபார் டவர் என்று பெயரிடப்பட்ட கட்டிடம் தெற்கு மும்பை வாக்கேஷ்வரில் உள்ள கவர்னர் மாளிகைக்கு அருகில் கட்டப்பட்டு வருகிறது.

    தெற்கு மும்பையில் உள்ள வாக்கேஷ்வர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு டவர் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த குடியிருப்பில் தொழில் அதிபர் நீரஜ் பஜாஜ் ரூ.252 கோடிக்கு வீடு வாங்கியுள்ளார். லோதா குழுமத்தை சேர்ந்த மேக்ரோடெக் டெவலப்பர்ஸ் நிறுவனம் இந்த குடியிருப்பை கட்டி வருகிறது. அந்த நிறுவனத்திடம் இருந்து நீரஜ் பஜாஜ் இந்த வீட்டை வாங்கியுள்ளார். அவர் வாங்கியுள்ள வீடு 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 3 தளங்களை கொண்டது. இதுவே இந்தியாவில் மிக அதிகமான தொகைக்கு விற்கப்பட்ட வீடு ஆகும்.

    கடந்த மாதம் மும்பையில் வொர்லி சொகுசு டவரில் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட சகல வசதிகளுடன் கூடிய சொகுசு வீடு தொழில் அதிபர் பி.கே.கோயங்காவுக்கு ரூ.240 கோடிக்கு விற்கப்பட்டது. ஆனால் அதையும் மிஞ்சி இந்த வீடு ரூ.252 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. 1 சதுர அடியின் விலை சுமார் ரூ.1.40 லட்சம் ஆகும். வீட்டை வாங்கியுள்ள தொழில் அதிபர் நீரஜ் பஜாஜ், பஜாஜ் ஆட்டோ குழுமத்தின் தலைவர் ஆவார். லோதா மலபார் டவர் என்று பெயரிடப்பட்ட இந்த கட்டிடம் தெற்கு மும்பை வாக்கேஷ்வரில் உள்ள கவர்னர் மாளிகைக்கு அருகில் கட்டப்பட்டு வருகிறது. 31 மாடிகளுடன் அமையவுள்ள இந்த பிரமாண்ட டவரின் கட்டுமான பணிகள் தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது. இதை 2026-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வீட்டின் பத்திர பதிவுக்கு மட்டும் ரூ.15 கோடி ஆகியுள்ளது.

    • பயணி ரத்னகர் திவேதி விமான கழிவறையில் புகைப்பிடித்தார்.
    • போலீசார் ரத்னகர் திவேதியை கைது செய்தனர்.

    லண்டனில் இருந்து கடந்த 10-ந் தேதி மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்தது. இதில் வந்த இந்தியாவை சேர்ந்த அமெரிக்க குடியுரிமை வைத்திருக்கும் பயணி ரத்னகர் திவேதி விமான கழிவறையில் புகைப்பிடித்தார். மேலும் விமானத்தில் மற்ற பயணிகளுடன் ரகளையில் ஈடுபட்டார்.

    போலீசார் ரத்னகர் திவேதியை கைது செய்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவரை அந்தேரி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜா்படுத்தினர்.

    மாஜிஸ்திரேட்டு ரூ.25 ஆயிரம் பிணையில் அவரை ஜாமீனில் விடுவித்தார். அப்போது ரத்னகர் திவேதி, "பிறருக்கு ஆபத்தை விளைவிக்கும் சட்டப்பிரிவு 336-ல் வழக்குப்பதிவு செய்தால் அதற்கு ரூ.250 தான் அபராதம் என ஆன்லைனில் பார்தேன். நான் வேண்டுமானால் அந்த அபராதத்தை செலுத்துகிறேன். ஜாமீனுக்கு பிணையாக ரூ.25 ஆயிரம் செலுத்தமுடியாது. அதை செலுத்துவதற்கு பதில் ஜெயிலுக்கு செல்வேன்" என்றார்.

    இதையடுத்து மாஜிஸ்திரேட்டு அவரை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். அபராதமே ரூ.250 தான், ஜாமீனுக்கு ரூ.25 ஆயிரம் கொடுக்க முடியாது என கூறி விமான பயணி ஜெயிலுக்கு போன விநோத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் சேர்த்தது.
    • அடுத்து ஆடிய குஜராத் அணி 107 ரன்களை எடுத்து தோற்றது.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை பேட் செய்ய அழைத்தது.

    அதன்படி முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 51 ரன்கள் குவித்தார். யஸ்திகா பாட்டியா 44 ரன்களும், நாட் சீவர் பிரண்ட் 36 ரன்களும் சேர்த்தனர்.

    குஜராத் சார்பில் ஆஷ்லி கார்ட்னர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கிம் கார்த், தனுஜா கன்வார், சினேஹ் ராணா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. மும்பை அணியின் பந்துவீச்சில் சீரான இடைவெளியில் குஜராத் அணி விக்கெட்டுகளை இழந்தது.

    இறுதியில், குஜராத் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹர்லின் தியோல் அதிகபட்சமாக 22 ரன்கள் எடுத்தார்.

    இதன்மூலம் 55 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது. மேலும் மும்பை தான் ஆடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

    • முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்தது.
    • இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 4 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது

    மும்பை:

    முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், உ.பி.வாரியர்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்று ஆடி வருகின்றன.

    இன்று நடைபெறும் 12வது லீக் ஆட்டத்தில் இதுவரை தோல்வியை சந்திக்காத மும்பை அணியை குஜராத் அணி எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற குஜராத் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை பேட் செய்ய அழைத்தது.

    அதன்படி முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது. யஸ்திகா பாட்டியா 44 ரன்களும், நாட் ஷிவர் பிரண்ட் 36 ரன்களும் சேர்த்தனர். அதிரடியாக ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 31 பந்துகளில் 51 ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். 

    குஜராத் தரப்பில் ஆஷ்லி கார்ட்னர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கிம் கார்த், தனுஜா கன்வார், சினேஹ் ராணா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்குகிறது.

    • சிறுவனுக்கு கயிறு மூலம் தண்ணீர் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆம்புலன்சு வாகனங்கள் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர்.
    • சமீப காலமாக ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழுந்து இறக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

    அகமத்நகர்:

    மத்திய பிரதேச மாநிலம் புர்கன்பூர் மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி. ஒருவர் தனது மனைவியுடன் மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகர் சோபரா கிராமத்தில் தங்கி கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

    இவர்களுடன் இருந்த 5 வயது மகன் சாகர் புத்தா பரலோ நேற்று மதியம் அங்குள்ள ஒரு விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது அவன் திடீரென மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். சுமார் 200 அடி ஆழம் கொண்ட அந்த ஆழ்துளை கிணற்றின் பாதியில் சிக்கி கொண்டான். உயிர் பயத்தில் அவன் கதறி அழுதான்.

    இதைக்கேட்டு அருகில் கரும்பு வெட்டிக்கொண்டு இருந்த அவனது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து அங்கு ஓடி வந்தனர். இது பற்றி உடனே போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஜே.சி.பி. எந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. சிறுவனை உயிருடன் மீட்க ஆழ்துளை கிணற்றின் அருகில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. சிறுவனுக்கு கயிறு மூலம் தண்ணீர் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆம்புலன்சு வாகனங்கள் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர். நேற்று நள்ளிரவு வரை மீட்பு பணி தொடர்ந்து நடந்தது. இரவு நேரம் என்பதால் விளக்கு வெளிச்சத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சிறுவனை காப்பாற்ற போராடினார்கள். ஆனால் அவர்களது முயற்சிக்கு பலன் அளிக்கவில்லை. சிறிது நேரம் சிறுவன் அழுதுகொண்டே இருந்தான். ஆனால் அதன் பிறகு அவனிடம் இருந்து எந்த சத்தமும் வரவில்லை.

    இன்று அதிகாலை சாகர் புத்தா பரேலா பிணமாக தான் மீட்கப்பட்டான். மகன் பிணத்தை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இது அங்கு திரண்டு இருந்த கிராம மக்களின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.

    சமீப காலமாக ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழுந்து இறக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதில் ஒரு சிலர் மட்டுமே உயிருடன் மீட்கப்படுகின்றனர்.

    • மருத்துவ பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், ஆசிரியர்கள் என அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
    • தொழிற் சங்கங்கள் மற்றும் மாநில அரசு இடையே நேற்று நடந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து இந்த போராட்டம் தொடங்கி உள்ளது.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்று போராட்டத்தில் குதித்தனர். 17 லட்சம் அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த போராட்டம் தொடங்கியது. மருத்துவ பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், ஆசிரியர்கள் என அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

    அவர்கள் கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொழிற் சங்கங்கள் மற்றும் மாநில அரசு இடையே நேற்று நடந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து இந்த போராட்டம் இன்று தொடங்கி உள்ளது.

    • மும்பை-லக்னோ சிறப்பு ரெயிலை இயக்கிய அனைத்து பெண்களும் கொண்ட முதல் பெண் லோகோ பைலட் ஆனார்.
    • சுரேகாவின் புகைப்படத்தை பகிர்ந்து மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் சதாரா பகுதியை சேர்ந்தவர் சுரேகா யாதவ். 55 வயதான இவர் ஆசியாவில் முதல் பெண் லோகோ பைலட் என்ற பெருமையை பெற்றவர். கடந்த 1988-ம் ஆண்டு முதல் பெண் லோகோ பைலட் சான்றிதழை பெற்றார். அவரது சாதனைகளுக்காக அவர் மாநிலம் மற்றும் தேசிய அளவில் விருதுகள் பெற்றுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மும்பை-லக்னோ சிறப்பு ரெயிலை இயக்கிய அனைத்து பெண்களும் கொண்ட முதல் பெண் லோகோ பைலட் ஆனார்.

    இந்நிலையில் தற்போது சுரேகா யாதவ் மகாராஷ்டிரத்தில் உள்ள சோலாபூரில் இருந்து சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினல் வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்கி உள்ளார். இதன் மூலம் வந்தே பாரத் ரெயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுனர் என்ற பெருமையை சுரேகாயாதவ் பெற்றுள்ளார். இதையடுத்து சுரேகாவின் புகைப்படத்தை பகிர்ந்து மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    ×