search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரூ.252 கோடிக்கு வீடு வாங்கிய தொழில் அதிபர்
    X

    ரூ.252 கோடிக்கு வீடு வாங்கிய தொழில் அதிபர்

    • நீரஜ் பஜாஜ் வாங்கியுள்ள வீடு 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 3 தளங்களை கொண்டது.
    • லோதா மலபார் டவர் என்று பெயரிடப்பட்ட கட்டிடம் தெற்கு மும்பை வாக்கேஷ்வரில் உள்ள கவர்னர் மாளிகைக்கு அருகில் கட்டப்பட்டு வருகிறது.

    தெற்கு மும்பையில் உள்ள வாக்கேஷ்வர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு டவர் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த குடியிருப்பில் தொழில் அதிபர் நீரஜ் பஜாஜ் ரூ.252 கோடிக்கு வீடு வாங்கியுள்ளார். லோதா குழுமத்தை சேர்ந்த மேக்ரோடெக் டெவலப்பர்ஸ் நிறுவனம் இந்த குடியிருப்பை கட்டி வருகிறது. அந்த நிறுவனத்திடம் இருந்து நீரஜ் பஜாஜ் இந்த வீட்டை வாங்கியுள்ளார். அவர் வாங்கியுள்ள வீடு 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 3 தளங்களை கொண்டது. இதுவே இந்தியாவில் மிக அதிகமான தொகைக்கு விற்கப்பட்ட வீடு ஆகும்.

    கடந்த மாதம் மும்பையில் வொர்லி சொகுசு டவரில் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட சகல வசதிகளுடன் கூடிய சொகுசு வீடு தொழில் அதிபர் பி.கே.கோயங்காவுக்கு ரூ.240 கோடிக்கு விற்கப்பட்டது. ஆனால் அதையும் மிஞ்சி இந்த வீடு ரூ.252 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. 1 சதுர அடியின் விலை சுமார் ரூ.1.40 லட்சம் ஆகும். வீட்டை வாங்கியுள்ள தொழில் அதிபர் நீரஜ் பஜாஜ், பஜாஜ் ஆட்டோ குழுமத்தின் தலைவர் ஆவார். லோதா மலபார் டவர் என்று பெயரிடப்பட்ட இந்த கட்டிடம் தெற்கு மும்பை வாக்கேஷ்வரில் உள்ள கவர்னர் மாளிகைக்கு அருகில் கட்டப்பட்டு வருகிறது. 31 மாடிகளுடன் அமையவுள்ள இந்த பிரமாண்ட டவரின் கட்டுமான பணிகள் தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது. இதை 2026-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வீட்டின் பத்திர பதிவுக்கு மட்டும் ரூ.15 கோடி ஆகியுள்ளது.

    Next Story
    ×