என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • முதலில் ஆடிய குஜராத் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது.
    • உ.பி.வாரியர்ஸ் அணியில் அதிரடியாக ஆடிய மெக்ராத் 57 ரன்னிலும், ஹாரிஸ் 72 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதலாவது ஆட்டத்தில் குஜராத் - உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய குஜராத் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது. அதிரடியில் மிரட்டிய கார்ட்னர் 39 பந்தில் 60 ரன்னும், ஹேமலதா 33 பந்தில் 57 ரன்னும் விளாசினர்.

    இதையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உ.பி. அணியின் துவக்க வீராங்கனைகள் விரைவில் அவுட் ஆகினர். தஹ்லியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து அசத்தினர். மெக்ராத் 57 ரன்னிலும், ஹாரிஸ் 72 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    இறுதியில் உ.பி.வாரியர்ஸ் அணி ஒரு பந்து மீதமிருந்த நிலையில், 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. மும்பை மற்றும் டெல்லி அணிகள் ஏற்கனவே பிளேஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. தற்போது 3வது அணியாக உ.பி.வாரியர்ஸ் அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    • நான் பாலாசாகேப்பின் சித்தாந்தம் மற்றும் மரபின் வாரிசு.
    • எங்களை துரோகிகள் என்று சொல்ல உத்தவ் தாக்கரேவுக்கு உரிமை இல்லை.

    மும்பை :

    உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கடந்த 15 நாட்களுக்கு முன்பு ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள கேத் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தினார்.

    இந்தநிலையில் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி சார்பில் அதே இடத்தில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. இதில், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கலந்துகொண்டார்.

    இதில் முதல்-மந்திரி ஷிண்டே உத்தவ் தாக்கரேவை கடுமையாக தாக்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தனது சொந்த கட்சியினரின் அரசியல் வாழ்க்கையை அழிக்க மற்ற அரசியல் கட்சிகளுடன் இணைந்து சதி செய்த ஒரு தலைவரை நான் பார்த்ததில்லை. நான் துரோகி இல்லை, சுயமரியாதை உள்ளவன். எங்களை துரோகிகள் என்று சொல்ல உத்தவ் தாக்கரேவுக்கு உரிமை இல்லை. கஜானன் கீர்த்திகர், ராம்தாஸ் கதம் போன்ற மூத்த தலைவர்கள் சிவசேனாவை வலுப்படுத்த பாலாசாகேப்புடன் தோளோடு, தோள் நின்று உழைத்தனர். ஆனால் நீங்கள் அவர்களை துரோகிகள் என்று கூறுகிறீர்கள். நாங்கள் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதற்கும் ஒரு வரம்பு உள்ளது.

    நான் வீட்டில் உட்கார்ந்துகொண்டு உத்தரவு போடும் முதல்-மந்திரி அல்ல. நெருக்கடியான நேரத்தில் களத்தில் இறங்குவேன். 2 முறை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளேன். நான் எப்போதும் களத்தில் உழைத்திருக்கிறேன். ஆனால் நீங்கள் என்னை துரோகி என்று அழைக்கிறீர்கள்.

    உத்தவ் தாக்கரே பாலாசாகேப் தாக்கரேவின் சொத்துகளுக்கு வாரிசாக இருக்கலாம். ஆனால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசிடம் அடகு வைத்த சித்தாந்தத்திற்கு அவர் வாரிசு இல்லை.

    நான் பாலாசாகேப்பின் சித்தாந்தம் மற்றும் மரபின் வாரிசு. பாலாசாகேப் பால் தாக்கரே தனது தந்தையாக இருப்பதை விட மிகவும் பெயரிவர் என்பதை உத்தவ் தாக்கரே அறிந்துகொள்ள வேண்டும்.

    எனக்கு உங்கள் சொத்துக்கள் வேண்டாம். பாலாசாகேப் உங்கள் தந்தையாக இருக்கலாம். ஆனால் அனுதாபத்தை பெறுவதற்காக அதைப்பற்றி கூறிக்கொண்டே இருக்காதீர்கள்.

    மாநில தேர்தலில் கூட வெற்றி பெற முடியாத, தனது கட்சிக்கு கூட பொறுப்பேற்க முடியாத ராகுல் காந்தி அல்லது தேசபக்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி இதில் யார் வேண்டும் என்பதை சிவசேனா தொண்டர்கள் முடிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு ஏக்நாத் ஷிண்டே பேசினார்.

    • ரஜினிகாந்தை உத்தவ் தாக்கரே குடும்பத்தினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
    • ரஜினிகாந்த் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்தார்.

    மும்பை :

    நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் தனது மனைவி லதாவுடன் மும்பை வந்துள்ள ரஜினிகாந்த் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்தார். போட்டியின் போது மைதானத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவிலும் கலந்து கொண்டார்.

    ரஜினிகாந்துடன் மராட்டிய கவர்னர் ரமேஷ் பயஸ், துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்டவர்களும் போட்டியை பார்த்து ரசித்தனர்.

    இந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று பாந்திராவில் உள்ள மாதோஸ்ரீ இல்லத்தில் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை திடீரென சந்தித்து பேசினார். ரஜினிகாந்தை உத்தவ் தாக்கரே குடும்பத்தினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    இது தொடர்பாக ஆதித்ய தாக்கரே தனது டுவிட்டர் பதிவில், ''ரஜினிகாந்த் மீண்டும் மாதோஸ்ரீ வந்ததில் மிக்க மகிழ்ச்சி'' என தெரிவித்து உள்ளார்.

    ரஜினிகாந்த், உத்தவ் தாக்கரே சந்திப்பு அரசியலுக்கு அப்பாற்பட்ட மரியாதை நிமித்தமானது என உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

    நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாதோஸ்ரீயில் மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரேயை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது.
    • சோபி டிவைன் 36 பந்துகளில் 9 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 99 ரன்கள் விளாசினார்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

    டாஸ் வென்று முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக லாரா வோல்வார்ட் 68 ரன்கள் அடித்தார். ஆஷ்லி கார்ட்னர் 41 ரன்கள் சேர்த்தார்.

    இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. துவக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, சோபி டிவைன் இருவரும் குஜராத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து ரன் குவித்தனர். அதிரடியாக ஆடிய மந்தனா 37 ரன்களில் ஆட்டமிழந்தார். சிக்சர் மழை பொழிந்த சோபி டிவைன் 36 பந்துகளில் 9 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 99 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். மகளிர் பிரீமியர் லீக்கில் அவர் ஒரு ரன்னில் முதல் சதத்தை தவறவிட்டார். அதன்பின் எலிஸ் பெர்ரி, ஹெதர் நைட் இருவரும் இணைந்து வெற்றியை உறுதி செய்தனர்.

    27 பந்துகள் மீதமிருந்த நிலையில், பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் சேர்த்து இலக்கை எட்டியது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எலிஸ் பெர்ரி 19 ரன்களுடனும், ஹெதர் நைட் 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    • லாரா வோல்வார்ட்- சபினேனி மேகனா ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தது.
    • பெங்களூரு தரப்பில் ஷ்ரேயங்கா பாட்டீல் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    டாஸ் வென்று முதலில் ஆடிய குஜராத் அணியின் துவக்க வீராங்கனை சோபியா 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின், லாரா வோல்வார்ட்- சபினேனி மேகனா ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தது. மேகனா 31 ரன்களில் வெளியேறினார். அதன்பின்னர் லாராவுடன் ஆஷ்லி கார்ட்னர் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் அரை சதம் கடந்த லாரா 68 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஷ்லி 41 ரன்கள் விளாசினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது.

    பெங்களூரு தரப்பில் ஷ்ரேயங்கா பாட்டீல் 2 விக்கெட் வீழ்த்தினார். சோபி டிவைன், பிரீத்தி போஸ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்குகிறது.

    • உ.பி.வாரியர்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
    • அதிகபட்சமாக தஹ்லியா மெக்ராத் 38 ரன்களும், கிரேஸ் ஹாரிஸ் 39 ரன்களும் அடித்தனர்

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முதலாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ், உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது.

    உபி வாரியர்ஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய மும்பை அணி, 127 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக ஹேலி மேத்யூஸ் 35 ரன்களும், இஸ்ஸி வோங் 32 ரன்களும் சேர்த்தனர்.

    இதையடுத்து 128 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் களமிறங்கிய உ.பி. வாரியர்ஸ் அணி, 3 பந்துகள் மீதமிருந்த நிலையில், இலக்கை எட்டியது. தஹ்லியா மெக்ராத் 38 ரன்களும், கிரேஸ் ஹாரிஸ் 39 ரன்களும் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர். கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், 3வது பந்தில் சோபி எக்லெஸ்டோன் சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். உ.பி.வாரியர்ஸ் அணி 5 விக்கெட்டுகளை 129 ரன்கள் சேர்த்ததால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணியின் தொடர் வெற்றிக்கு உ.பி. வாரியர்ஸ் அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 

    • இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.
    • 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    மும்பை:

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 35.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 81 ரன்கள் சேர்த்தார்.

    இந்திய அணி தரப்பில் முகமது சமி, சிராஜ் தலா 3 விக்கெட்டும் ஜடேஜா 2 விக்கெட்டும் குல்தீப், பாண்ட்யா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறியது. டாப் ஆர்டர் வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இஷான் கிஷன் 3 ரன், விராட் கோலி 4 ரன், சுப்மன் கில் 20 ரன்னில் அவுட் ஆகினர். சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆனார். 39 ரன்கள் எடுப்பதற்குள் டாப் ஆர்டரில் 4 வீரர்கள் வெளியேறிய நிலையில், கே.எல்.ராகுல்- கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டது.

     

    ஹர்திக் பாண்ட்யா

    ஹர்திக் பாண்ட்யா

    ஹர்திக் பாண்ட்யா 25 ரன்களில் ஆட்டமிழந்தையடுத்து கே.எல்.ராகுலுடன், ரவீந்திர ஜடேஜா இணைய, அணி வெற்றியை நோக்கி பயணித்தது. அரை சதம் கடந்த கே.எல்.ராகுல் 75 ரன்களும் (நாட் அவுட்), ஜடேஜா 45 ரன்களும் (நாட் அவுட்) விளாச, 39.5 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இப்போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி நாளை மறுநாள் விசாகப்பட்டினத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

    • மகாராஷ்டிரா பா.ஜனதா கட்சியில் பெரும் தலைவராக இருந்தவர் ஏக்நாத் கட்சே.
    • இவர் பாஜகவில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்.எல்.சி. ஆனார்.

    மும்பை :

    மகாராஷ்டிரா பா.ஜனதா கட்சியில் பெரும் தலைவராக இருந்தவர் ஏக்நாத் கட்சே. இவர் 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டுவரை மந்திரியாக இருந்தபோது நில பேரம் தொடர்பான மோசடி வழக்கில் சிக்கினார். இதற்காக மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ஏக்நாத் கட்சே பா.ஜனதாவில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்.எல்.சி. ஆனார்.

    இந்தநிலையில் மேல்-சபையில் பேசிய ஏக்நாத் கட்சே, பா.ஜனதா கட்சி மறைந்த தலைவர் கோபிநாத் முண்டேவை மறந்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.

    மேலும் பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்து அவர் கூறியதாவது:-

    பா.ஜனதா பணம் படைத்த பெரிய மனிதர்களுக்கான கட்சி என்ற எண்ணத்தை மாற்றி மக்களிடம் கொண்டு செல்ல கடுமையாக உழைத்தவர் கோபிநாத் முண்டே. ஆனால் அவரது மறைவுக்கு பின்னர் பா.ஜனதா அவரை மறந்துவிட்டதாக தெரிகிறது.

    2014-ம் ஆண்டுக்கு முன்பு தேவேந்திர பட்னாவிஸ் கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்படுவதை நான் எதிர்த்தேன். ஆனால் அப்போது கட்சியின் மூத்த தலைவராக இருந்த கோபிநாத் முண்டே எனது ஆட்சேபனையை நிராகரித்தார்.

    பா.ஜனதாவின் வளர்ச்சியில் கோபிநாத் முண்டேவின் பெரும் பங்களிப்பு இருந்தாலும், அவரும் அவரது குடும்பத்தையும் இப்போது மறந்துவிட்டார்கள். முண்டேவின் குடும்பமும், நானும் சில காலம் கட்சியில் அறிவிக்கப்படாத புறக்கணிப்பை எதிர்கொண்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தபோது ஏக்நாத் கட்சே முதல்-மந்திரி போட்டியில் இருந்தார். ஆனால் கட்சி அவருக்கு பதிலாக தேவேந்திர பட்னாவிசை தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.

    • அனிஷ்கா தனக்கு சில சூதாட்டக்காரர்களை தெரியும் என அம்ருதா பட்னாவிசிடம் கூறினார்.
    • அம்ருதா பட்னாவிஸ் சம்பவம் குறித்து மும்பை மலபார்ஹில் போலீசில் புகார் அளித்தார்.

    மும்பை :

    மராட்டிய துணை முதல்-மந்திரியாக இருக்கும் பா.ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா. இவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு நவம்பா் மாதம் அனிஷ்கா என்ற பேஷன் டிசைனர் அறிமுகம் ஆனார். அவர் தான் வடிவமைத்த ஆடைகள், நகைகள், காலணிகளை பொது நிகழ்ச்சிகளில் அணிந்தால் தனக்கு விளம்பரம் கிடைக்கும் என அம்ருதா பட்னாவிசிடம் கூறினார்.

    மேலும் அவர் தனக்கு தாய் கிடையாது, குடும்பத்தை தனியாக கவனித்து வருவதாகவும் கூறினார். இதனால் அம்ருதா பட்னாவிசுக்கு அவர் மேல் அனுதாபம் ஏற்பட்டுள்ளது.

    அனிஷ்கா அவரது தந்தையுடன் அம்ருதா பட்னாவிசை துணை முதல்-மந்திரி பங்களாவிலும் சந்தித்து இருக்கிறார்.

    இந்தநிலையில் அனிஷ்கா தனக்கு சில சூதாட்டக்காரர்களை தெரியும் என அம்ருதா பட்னாவிசிடம் கூறினார். அவர்கள் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    மேலும் அம்ருதா பட்னாவிசிடம் சூதாட்டக்காரரான தனது தந்தையை வழக்கு ஒன்றில் இருந்து காப்பாற்ற வேண்டும் என கேட்டார். இதற்காக ரூ.1 கோடி லஞ்சம் தருவதாக கூறினார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அம்ருதா பட்னாவிஸ், அனிஷ்காவின் செல்போன் எண்ணை பிளாக் செய்துவிட்டு அவருடனான தொடர்பை துண்டித்தார். அதன் பிறகு அனிஷ்கா வேறு செல்போனில் இருந்து அம்ருதா பட்னாவிசை மறைமுகமாக மிரட்டும் வகையில் வீடியோ, ஆடியோ பதிவுகளை அனுப்பினார். அனிஷ்காவின் தந்தையும் அம்ருதாவை மிரட்டி உள்ளார்.

    இதையடுத்து அம்ருதா பட்னாவிஸ் சம்பவம் குறித்து மும்பை மலபார்ஹில் போலீசில் புகார் அளித்தார். புகார் தொடர்பாக போலீசார் அனிஷ்கா, அவரது தந்தை மீது சதித்திட்டம், ஊழல் தடுப்பு, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.

    துணை முதல்-மந்திரியின் மனைவிக்கு லஞ்சம் கொடுக்க முயன்று ஆடை வடிவமைப்பாளர் தனது தந்தையுடன் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடக்கிறது.
    • இரு அணிகளும் பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் உள்ளன.

    மும்பை:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு மோதலாக மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

    இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, நெருங்கிய உறவினருக்கு திருமணம் காரணமாக தொடக்க ஆட்டத்தில் மட்டும் ஆடமாட்டார். அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அணியை வழிநடத்துகிறார். சுப்மன் கில்லுடன், இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரராக இறங்குவார் என்பதை பொறுப்பு கேப்டன் ஹர்திக் பாண்ட்யா உறுதி செய்தார்.

    காயத்தால் ஸ்ரேயாஸ் அய்யர் ஒதுங்கி இருப்பதால் கிடைத்துள்ள பொன்னான வாய்ப்பை சூர்யகுமார் யாதவ் கச்சிதமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அகமதாபாத் டெஸ்டில் சதம் அடித்ததால் நட்சத்திர வீரர் விராட் கோலி கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணுவார். ஒருநாள் கிரிக்கெட்டில் கடைசி 7 இன்னிங்சில் 3 சதங்கள் விளாசியுள்ளார் கோலி. மற்றபடி ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுலும் பேட்டிங்கில் வலு சேர்க்கிறார்கள்.

    பந்துவீச்சில் முகமது ஷமி, முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் கட்டுக்கோப்புடன் பவுலிங் செய்வதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

    ஆஸ்திரேலிய அணியும், இந்தியாவுக்கு நிகராக பலம் வாய்ந்ததாக விளங்குகிறது. ஆஸ்திரேலியாவின் கேப்டன் பொறுப்பை ஸ்டீவன் சுமித் கவனிக்கிறார். ஆல்-ரவுண்டர்கள் கிளைன் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ் ஆகியோர் காயத்தில் இருந்து மீண்டு அணியுடன் இணைந்திருப்பது அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும். முழங்கை காயத்தில் இருந்து குணமடைந்துள்ள டேவிட் வார்னரும் ரன் வேட்டைக்கு ஆயத்தமாக உள்ளார். பந்துவீச்சில் ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க், நாதன் எலிஸ் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    மொத்தத்தில் இரு அணிகளும் பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    இந்திய அணி இந்த ஆண்டில் உள்ளூரில் ஆடிய 6 ஒரு நாள் போட்டிகளிலும் வாகை சூடியுள்ளது. இதே போல் ஆஸ்திரேலியா தனது கடைசி 6 ஒரு நாள் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. இவர்களில் யாருடைய வீறுநடை முடிவுக்கு வரப்போகிறது என்பதை பார்ப்பதும் சுவாரஸ்யமாக இருக்கும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:

    இந்தியா: சுப்மன் கில், இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் அல்லது ரஜத் படிதார், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் அல்லது யுஸ்வேந்திர சாஹல் அல்லது வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ், முகமது ஷமி அல்லது உம்ரான் மாலிக்.

    ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), மார்னஸ் லபுஸ்சேன், மிட்செல் மார்ஷ் அல்லது மார்கஸ் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, சீன் அப்போட் அல்லது நாதன் எலிஸ்.

    பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • மகாராஷ்டிராவில் எச்3என்2 வைரஸ் காய்ச்சலுக்கு 119 பேர் பாதிப்பு அடைந்தனர்.
    • மேலும், 73 வயது முதியவர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

    மும்பை:

    தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது.

    இதற்கிடையே தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் அனுப்பியுள்ளார். அதன்படி கொரோனோ பரிசோதனைகள், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அறிவுறுத்தியுள்ளார்.

    மார்ச் 8-ம் தேதி வரை கொரோனா பாதிப்பு குறைவாக இருந்ததாகவும், தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் எச்3என்2 வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 119 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்றும், 73 வயது முதியவர் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர் என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

    • நெருக்கடிக்கு மத்தியில் அதிரடியாக ஆடிய டெல்லி வீராங்கனை மாரிசான் கேப் 36 ரன்கள் சேர்த்தார்
    • கிம் கார்த், தனுஜா கன்வார், ஆஷ்லி கார்ட்னர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக லாரா வோல்வார்ட் 57 ரன்களும், ஆஷ்லி கார்ட்னர் 51 ரன்களும் (நாட் அவுட்) விளாசினர்.

    இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே தடுமாறிய டெல்லி அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் மெக் லேனிங் 18 ரன்கள், அலிஸ் கேப்சி 22 ரன்கள் எடுத்தனர்.

    நெருக்கடிக்கு மத்தியில் அதிரடியாக ஆடிய மாரிசான் கேப் 36 ரன்களும், அருந்ததி ரெட்டி 25 ரன்களும் அடித்து நம்பிக்கை அளித்தனர். எனினும் பின்கள வீராங்கனைகள் சோபிக்காததால் டெல்லி அணி 18.4 ஓவர்களில் 136 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் குஜராத் ஜெயண்ட்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிம் கார்த், தனுஜா கன்வார், ஆஷ்லி கார்ட்னர் தலா 2 விக்கெட் எடுத்தனர். 

    ×