மும்பை விமான நிலையத்தில் ரூ.53 கோடி ஹெராயின் கடத்தி வந்த பயணி கைது

விமானத்தில் இறங்கிய பயணிகளிடம் சோதனை போட்டனர்.பயணியை கைது செய்த அதிகாரிகள் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
மும்பை விமான நிலையத்தில் ரூ.53 கோடி ஹெராயின் கடத்தி வந்த பயணி கைது
Published on

மும்பை:

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில் எத்தியோப்பிய தலைநகர் அடிஸ்அபாவில் இருந்து மும்பை நோக்கி வந்த விமானத்தில் இறங்கிய பயணிகளிடம் சோதனை போட்டனர். இதில் சந்தேகத்தின் பேரில் ஒரு பயணியை வழிமறித்து உடைமைகளில் சோதனை போட்டனர். இதில் எதுவும் சிக்காததால் தனிமை படுத்தி சோதனை நடத்தினர். இதில் உடலில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 7 கிலோ 600 கிராம் எடையுள்ள பார்சல் ஒன்று இருந்ததை பறிமுதல் செய்தனர்.

இதில் ஹெராயின் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.53 கோடி ஆகும். பயணியை கைது செய்த அதிகாரிகள் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com