என் மலர்
இந்தியா

தரம்தார் விரிகுடா இருந்து கேட்வே ஆஃப் இந்தியா வரை 8 மணி நேரத்தில் நீந்தியே வந்த சிறுவன்
- 39 கிலோ மீட்டர் தூரத்தை 8 மணிநேரம் 40 நிமிடங்களில் கடந்து அசத்தியுள்ளார்.
- சிறுவனை உறவினர்கள் நண்பர்கள், பள்ளி நிர்வாகத்தினர் வரவேற்னர்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஆரவ் கோல், தரம்தார் விரிகுடாவில் இருந்து கேட்வே ஆஃப் இந்தியா (Gate way of india) வரையிலான 39 கிலோ மீட்டர் தூரத்தை 8 மணி நேரம் 40 நிமிடங்களில் நீச்சலடித்துக் கடந்து அசத்தியுள்ளார்.
பெரும்பாலான நீச்சல் வீரர்கள் இந்த தூரத்தை12 முதல் 13 மணி நேரத்தில் கடக்கும் சூழலில், சிறுவன் ஆரவ் குறைவான நேரத்தில் கடந்துள்ளார். வெற்றிகரமாக நீந்திய சிறுவன் ஆரவை உறவினர்கள், நண்பர்கள், பள்ளி நிர்வாகத்தினர் வரவேற்றனர்.
Next Story






