என் மலர்tooltip icon

    ஜம்மு காஷ்மீர்

    • வெடித்த குண்டுகளின் மாதிரிகளை சேகரித்து சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    • குண்டு வெடிப்பையொட்டி நர்வால் பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    ஆனாலும் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் அவ்வப்போது பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக பண்டிட்டுகள் மற்றும் காஷ்மீரில் பணிபுரிந்து வரும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் இன்று காலை அங்குள்ள நர்வால் பகுதியில் அடுத்தடுத்து 2 இடங்களில் ரோட்டோரம் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அந்த பகுதி முழுவதையும் பாதுகாப்பு படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அங்கு வரைவழைக்கப்பட்டனர்.

    அவர்கள் குண்டுவெடிப்பு நடந்த பகுதி முழுவதும் தீவிர வெடிகுண்டு சோதனை நடத்தினார்கள். வெடித்த குண்டுகளின் மாதிரிகளை சேகரித்து சோதனைக்காக அனுப்பி வைத்தனர். குண்டு வெடிப்பையொட்டி நர்வால் பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். தீவிர வாகன சோதனையும் நடந்து வருகிறது.

    இந்த நாசவேலையில் ஈடுபட்ட தீவிரவாத கும்பல் யார்? என்று தெரியவில்லை. எந்த அமைப்பும் இதற்கு பொறுப்பேற்கவில்லை. குடியரசு தினத்துக்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் அடுத்தடுத்து நடந்த இந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் ஜம்மு- காஷ்மீரில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சம்பவ இடத்திலேயே காரில் இருந்த நபர்களில் 4 பேர் உயிரிழந்தனர்.
    • விபத்தில் பலியானவர்கள் பாண்டு, ஹன்ஸ் ராஜ், அஜீத் சிங், அம்ரூ மற்றும் காகு ராம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    ஜம்மு- காஷ்மீர் மாநிலம் கடுவா மாவட்டத்தில் கவுகிலிருந்து டன்னு பரோலுக்கு கார் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது சிலா என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்குள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த கோர விபத்தில், சம்பவ இடத்திலேயே காரில் இருந்த நபர்களில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மீட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 5 ஆக உள்ளது.

    இவர்களைத்தவிர, மொத்தம் 15 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்களை மீட்டு பில்லவரில் உள்ள துணை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    மேலும், சம்பவ குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்தில் பலியானவர்கள் பாண்டு, ஹன்ஸ் ராஜ், அஜீத் சிங், அம்ரூ மற்றும் காகு ராம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    • லகன்பூர் எல்லை வழியாக காஷ்மீருக்குள் ராகுல்காந்தி நுழைந்தார்.
    • ராகுல்காந்தியின் பாதயாத்திரை வருகிற 30-ந் தேதி முடிவடைகிறது.

    ஸ்ரீநகர்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.

    கடந்த செப்டம்பர் 7-ந் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம், டெல்லி, அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக பாதயாத்திரை சென்றார்.

    பஞ்சாப்பில் நடந்து வந்த பாத யாத்திரை நேற்று நிறைவு பெற்றது. அங்கிருந்த லகன்பூர் எல்லை வழியாக காஷ்மீருக்குள் ராகுல்காந்தி நுழைந்தார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ராகுல்காந்தி இன்று தனது யாத்திரையை காஷ்மீரில் இருந்து தொடங்கியது. கதுவா மாவட்டம் ஹட்லி மோர் என்ற இடத்தில் இருந்து யாத்திரை புறப்பட்டது.

    ராகுல்காந்தி வெள்ளை நிற டி.சர்ட்டுக்கு மேல் கருப்பு கோட் அணிந்திருந்தார். யாத்திரை காலை 7 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் மோசமான வானிலை காரணமாக 1¼ மணி நேரம் தாமதமாக யாத்திரை தொடங்கியது. பாத யாத்திரையில் ராகுல் காந்தியுடன் ஜம்மு-காஷ்மீர் மாநில தலைவர் விகார் ரசூல்வானி, காங்கிரஸ் தலைவர்கள், சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவத் உள்ளிட்ட தலைவர்கள், ஏராளமான தொண்டர்கள் நடந்து சென்றனர்.

    காஷ்மீரில் ராகுல்காந்தியின் பாதயாத்திரை தொடங்கியதையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ராகுல்காந்தியை சுற்றி போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் அடங்கிய பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    யாத்திரை செல்லும் ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் பதாகைகள், மாலைகளை ஏந்தியவாறு ராகுல்காந்தியை வரவேற்க காத்திருந்தனர். ராகுல்காந்தியின் பாதயாத்திரை வருகிற 30-ந் தேதி முடிவடைகிறது.

    • பல மாநிலங்களைக் கடந்து வந்த இந்த யாத்திரை இன்று காஷ்மீரில் நுழைந்தது.
    • காஷ்மீரின் லகான்பூர் வந்தடைந்த நிலையில் ஏராளமானோர் தீப்பந்தம் ஏந்தி ராகுலுடன் வந்தனர்.

    ஸ்ரீநகர்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கினார். பல மாநிலங்களைக் கடந்து பஞ்சாப்பில் நடந்து வந்த இந்த யாத்திரை நேற்று இமாசல பிரதேசத்தில் நுழைந்தது. கடும் பனியை பொருட்படுத்தாமல் ஏராளமானோர் நடந்தனர்.

    இந்நிலையில், இந்த யாத்திரை இன்று காஷ்மீரை வந்தடைந்தது. காஷ்மீரின் லகான்பூர் வந்தடைந்த நிலையில் ஏராளமானோர் தீப்பந்தம் ஏந்தி ராகுலுடன் வந்தனர்.

    காஷ்மீர் வந்தடைந்த ராகுலின் பாதயாத்திரையில் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பங்கேற்றார். ராகுல் காந்தியை வரவேற்று அவர் கலந்துரையாடினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புத்காம் மாவட்ட கோர்ட்டு வளாகம் அருகே பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புத்காம் மாவட்ட கோர்ட்டு வளாகம் அருகே இன்று காலை பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர்.

    இந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தனர். அவர்கள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரியவில்லை.

    மேலும் அந்த பகுதியில் வேறு பயங்கரவாதிகள் யாரும் இருக்கிறார்களா என பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    • சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
    • பனிச்சரிவு காரணமாக சுரங்கப்பாதையில் சிக்கித் தவித்த 172 தொழிலாளர்களை பத்திரமாக மீட்டனர்.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் உள்ள கான்செர்பால் மாவட்டம் சர்பால் கிராமத்தில் ஜோஜிவா சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

    சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென்று பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 172 தொழிலாளர்களும் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்களால் வெளியே வர முடியவில்லை. இதனால் சுரங்கத்துக்குள்ளேயே தவித்துக் கொண்டிருந்தனர்.

    இதுதொடர்பாக இந்திய ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு ராணுவ வீரர்கள் விரைந்து சென்றனர்.

    அவர்கள் பனிச்சரிவு காரணமாக சுரங்கப்பாதையில் சிக்கித் தவித்த 172 தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்டனர்.

    • ராணுவ வீரர்கள் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • லையில் பனிபடர்ந்து இருந்ததால் வாகனம் நிலை தடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்து உள்ளது.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் மச்சால் செக்டரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே ராணுவ வீரர்கள் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது ஒரு ராணுவ வாகனம் எதிர்பாராதவிதமாக பள்ளத்தாக்கில் தவறி விழுந்தது. ஆழமான பள்ளத்தில் விழுந்த வாகனத்தில் இருந்த 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் பள்ளத்தாக்கில் இருந்து மீட்கப்பட்டது. சாலையில் பனிபடர்ந்து இருந்ததால் வாகனம் நிலை தடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்து உள்ளது.

    உயிரிழந்த 3 பேரும் இந்திய ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் பிரிவை சேர்ந்தவர்கள். இது தொடர்பாக இந்திய ராணுவம் தரப்பில் கூறும்போது, மச்சால் செக்டர் பகுதியில் ரோந்து பணியின் போது 3 வீரர்கள் பள்ளத்தாக்கில் தவறி விழுந்து பலியாகி உள்ளனர். பனி மூட்டம் காரணமாக அவர்கள் தவறி பள்ளத் தாக்கில் விழுந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேசிய கொடியையோ, அரசியல் சட்டத்தையோ மாற்றும் திட்டம் இல்லை.
    • தேசிய கொடியை தீய கண்ணுடன் பார்ப்பவர்களை கடுமையாக அணுகுவோம்.

    ஸ்ரீநகர்

    காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, தற்போதைய தேசிய கொடிக்கு பதிலாக, காவி கொடியை தேசிய கொடியாக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தார்.

    இதற்கு காஷ்மீர் பா.ஜனதா மறுப்பு தெரிவித்துள்ளது. காஷ்மீர் பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் அல்டாப் தாக்கூர் கூறியதாவது:-

    மெகபூபா முப்தி, பிரதமர் மோடிக்கு வளர்ந்து வரும் செல்வாக்கை கண்டு விரக்தியில் பேசி வருகிறார். பா.ஜனதாவை பொறுத்தவரை, 'முதலில் நாடு, இரண்டாவது கட்சி, மூன்றாவதுதான் தனிநபர்' என்ற கொள்கையை பின்பற்றி வருகிறது. தேசிய கொடிக்காக எந்த தியாகமும் செய்ய பா.ஜனதா தொண்டர்கள் தயாராக உள்ளனர். எனவே, தேசிய கொடியையோ, அரசியல் சட்டத்தையோ மாற்றும் திட்டம் இல்லை. அப்படி சொல்வது அபத்தமானது. தேசிய கொடியை தீய கண்ணுடன் பார்ப்பவர்களை கடுமையாக அணுகுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த சில வாரமாக காஷ்மீரின் பல மாவட்டங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் அதிகரித்து வருகிறது.
    • இதனால் அங்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 1800 வீரர்களை மத்திய அரசு அனுப்பி வைத்தது.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இருந்து பயங்கரவாதத்தை ஒழிப்பதாக பா.ஜ.க. உறுதியளித்த நிலையில், பாதுகாப்பு விஷயத்தில் யூனியன் நிர்வாகம் தோல்வி அடைந்து விட்டடு என காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

    இதற்கிடையே, கடந்த சில வாரங்களாக காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி ஆகிய மாவட்டங்களில் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இந்த தாக்குதல்களில் நமது வீரர்கள் மட்டுமின்றி அப்பாவி மக்கள், குழந்தைகள் பலியாகினர். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியது.

    இந்நிலையில், பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள மத்திய ரிசர்வ் படைப்பிரிவு போலீசார் 1,800 பேர் காஷ்மீரின் பூஞ்ச், மற்றும் ரஜோரி, அப்பர் தான்கிர ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • கிராமத்தில் பாதுகாப்பு படையினர் நடவடிக்கையை ஏராளமானோர் திரண்டு நின்று பார்த்தனர்.
    • குண்டு வெடிப்பு நடந்த வீட்டுக்கு அருகே மற்றொரு வீட்டில் இருந்து வெடிக்காத சக்தி வாய்ந்த குண்டு ஒன்றை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்து கைப்பற்றினார்கள்.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் டங்ரி கிராமத்தில் நேற்று பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

    இதையடுத்து அந்த கிராமத்தை முற்றுகையிட்டு பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். வேறு பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா? என்று சோதனை நடத்தப்பட்டது.

    பரபரப்பு நிலவிய அந்த கிராமத்தில் பாதுகாப்பு படையினர் நடவடிக்கையை ஏராளமானோர் திரண்டு நின்று பார்த்தனர். அந்த சமயத்தில் ஒரு வீட்டில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

    இதைத் தொடர்ந்து அலறல் சத்தம் எழுந்தது. அந்த வீட்டில் இருந்து படுகாயங்களுடன் 5 பேர் மீட்கப்பட்டனர்.

    காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஒரு குழந்தை பலியானது. காயம் அடைந்தவர்களில் மற்றொருவர் கவலைக்கிடமாக உள்ளார்.

    இதற்கிைடயே குண்டு வெடிப்பு நடந்த வீட்டுக்கு அருகே மற்றொரு வீட்டில் இருந்து வெடிக்காத சக்தி வாய்ந்த குண்டு ஒன்றை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்து கைப்பற்றினார்கள். தொடர்ந்துஅந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    • கிராமத்திற்குள் புகுந்து அப்பாவி பொது மக்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
    • பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும். தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும்.

    ஜம்மு:

    காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள அப்பர் டாங்ரி என்ற கிராமத்திற்குள் நேற்று இரவு பயங்கரவாதிகள் திடீரென புகுந்துள்ளனர். பின்னர் அங்குள்ள 3 வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்கள் மீதும் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர்.

    இதில் 10-க்கும் மேற்பட்டோர் துப்பாக்கி குண்டு பாய்ந்து அலறி துடித்தனர். சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இதில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே 3 பேர் இறந்துவிட்டனர். படுகாயம் அடைந்த ஒருவரை விமானம் மூலம் ஜம்முவிற்கு கொண்டு சென்ற போது வழியிலேயே அவரும் இறந்து விட்டார்.

    இதனால் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்ந்தது. மேலும் இந்த சம்பவத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியானவர்கள் தீபக் குமார், சதீஷ்குமார், பிரீத்தம் லால் மற்றும் சிவ் பால் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    கிராமத்திற்குள் புகுந்து அப்பாவி பொது மக்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இருந்து பயங்கரவாதத்தை ஒழிப்பதாக பாரதிய ஜனதா உறுதியளித்த நிலையில், பாதுகாப்பு விஷயத்தில் யூனியன் நிர்வாகம் தோல்வி அடைந்துவிட்டதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரவீந்தர் சர்மா குற்றம் சாட்டி உள்ளார்.

    ஜம்மு காஷ்மீரின் இயல்பு நிலை பற்றிய பாரதிய ஜனதாவின் கூற்றுகள் இந்த சம்பவத்தால் அசைக்கப்பட்டுள்ளது. அவர்கள் முதலில் காஷ்மீரிலும், இப்போது ஜம்முவிலும் சிறுபான்மை சமூகத்தை பாதுகாக்க தவறிவிட்டனர்.

    பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும். தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதே போல மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்தின் புதிய கட்சியான தி டெமாக்ரடிக் ஆசாத் கட்சியும், ரஜோரியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    அந்த கட்சியின் மூத்த தலைவர் கூறுகையில், பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டுகிறோம் என்றார்.

    தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஜாவேத் ரானா, அப்னி கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மந்திரி சவுத்ரி சுல்பிகர் உள்பட பல்வேறு கட்சிகளும் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    ரஜோரியில் உள்ள ஆஸ்பத்திரியின் முன்பு திரண்டிருந்த ஏராளமானோர் பாகிஸ்தானிற்கு எதிராக கண்டன கோஷங்களையும், யூனியன் ஆளுனரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள்.

    இதற்கிடையே பொதுமக்கள் மீதான பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த போராட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.

    • துப்பாக்கி ஏந்திய பயங்கவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.
    • அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் இன்று திடீர் தாக்குதல் நடத்தினர். ரஜோரி மாவட்டம் டங்ரி கிராமத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த 3 வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.

    பயங்கரவாதிகள் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர் என ஜம்மு போலீசார் தெரிவித்தனர்.

    கிராமத்துக்குள் புகுந்து அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    ×