என் மலர்
ஜம்மு காஷ்மீர்
- நாளை ஸ்ரீநகரில் நடைபெறும் விழாவிலும், பாத யாத்திரையிலும் பெரும் கூட்டம் சேரும் என்று எதிர்பார்க்கிறோம்.
- ஸ்ரீநகரின் எம்.ஏ. சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அவர் நடைபயணத்தை நிறைவு செய்கிறார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடை பயணம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த செப்டம்பர் 7-ந் தேதி அவர் கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப், இமாச்சலபிரதேசம் ஆகிய 13 மாநிலங்களில் நடை பயணம் செய்த பிறகு ராகுல்காந்தி கடந்த 19-ந்தேதி காஷ்மீர் சென்று அடைந்தார்.
அவரது நடைபயணத்தின் போது ஏராளமானவர்கள் உடன் சென்றனர். சோனியாகாந்தி, பிரியங்கா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நடைபயணத்தின்போது உடன் சென்றனர். முக்கிய பிரமுகர்களும் அவருடன் சென்று தங்களது ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் ராகுல்காந்தியின் பாதுகாப்பில் குளறுபடி இருந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடை பயணத்தை தற்காலிகமாக நிறுத்தினார். பாதுகாப்பில் குளறுபடி இருந்ததாக காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டை காஷ்மீர் போலீசார் மறுத்து இருந்தனர். பாதுகாப்பில் எந்த குளறுபடியும் இல்லை என்று தெரிவித்தது.
தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ராகுல்காந்தியின் பாத யாத்திரை புல்வாமா மாவட்டம் அவந்தி போராவில் நேற்று மீண்டும் தொடங்கியது.
ராகுல்காந்தியுடன் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, அவரது மகள் இல்டிஜா முப்தி மற்றும் கட்சி தொண்டர்கள் ஏராமானோர் பங்கேற்றனர். ராகுலின் சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா லேத்போரா பகுதியில் நடைபயணத்தில் இணைந்தார்.
நேற்று ராகுல்காந்தியை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. நடைப்பயணம் தொடங்கிய இடத்துக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். புல்வாமாவில் கடந்த 2019-ல் தீவிரவாத தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் 40 பேர் பலியான இடத்தில் ராகுல்காந்தி அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஸ்ரீநகரை நோக்கி அவர் நடைபயணத்தை தொடர்ந்தார்.
ராகுல்காந்தியின் பாத யாத்திரை நாளையுடன் நிறைவு பெறுகிறது. ஸ்ரீநகரின் எம்.ஏ. சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அவர் நடைபயணத்தை நிறைவு செய்கிறார். அதன் பின்னர் எஸ்.கே.மைதானத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது.
ராகுல்காந்தியின் பாத யாத்திரை நிறைவு விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்த கட்சி பல்வேறு ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
ஸ்ரீநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு 21 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், கேரளா காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய 12 எதிர்க்கட்சிகள் ராகுல்காந்தியின் நடை பயண நிறைவு விழாவில் பங்கேற்கின்றன.
திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, தெலுங்கு தேசம் உள்ளிட்ட 9 எதிர்க்கட்சிகள் விழாவில் கலந்து கொள்ளவில்லை. சில எதிர்க்கட்சிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக புறக்கணிக்கின்றன.
ராகுல்காந்தியின் பாத யாத்திரை நிறைவு குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:-
நாளை ஸ்ரீநகரில் நடைபெறும் விழாவிலும், பாத யாத்திரையிலும் பெரும் கூட்டம் சேரும் என்று எதிர்பார்க்கிறோம். நிறைவு விழாவின் போது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராகுல்காந்தி 12 மாநிலம் மற்றும் 2 யூனியன் பிரதேசத்தில் 145 நாட்கள் மொத்தம் 3,970 கிலோ மீட்டர் நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார்.
- பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தில் இருக்கலாம்.
- காங்கிரஸ் மட்டுமே தேசிய அரசியல் சக்தியாக இருக்கிறது.
அவந்திபோரா :
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், காஷ்மீரில் உள்ள அவந்திபோராவில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து கூறியதாவது:-
ராகுல் காந்தி, நாடு முழுவதும் இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்தி வருகிற சூழலில், வருகிற பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணியின் முக்கிய ஆதார மையமாக காங்கிரஸ் இருக்குமா என்று கேட்டால் நிச்சயமாக அதை நான் நம்புகிறேன். இன்றும் நாங்கள் மட்டுமே தேசிய கட்சியாக இருக்கிறோம். (பா.ஜ.க. தவிர்த்து).
நாங்கள் ஒவ்வொரு மாநிலமாக ஆட்சியில் இல்லாமல் போய் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு கிராமத்திலும், தாலுகாவிலும், சிறிய நகரத்திலும், நகரத்திலும் காங்கிரஸ் தொண்டர்களை நீங்கள் பார்க்க முடியும். காங்கிரஸ் குடும்பங்களைப் பார்க்க இயலும்.
பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தில் இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் மட்டுமே தேசிய அரசியல் சக்தியாக இருக்கிறது.
நாங்கள் ஆளுகிற மாநிலங்களின் எண்ணிக்கை அல்லது நாங்கள் பெறும் வாக்குகளின் சதவீதத்தை வைத்து எங்கள் செல்வாக்கை அளவிடுவது மிகவும் குறுகிய கண்ணோட்டம் என்று சொல்வேன். காங்கிரசின் சித்தாந்தம், மையம் ஆகும். இது ஒரு மைய-இடதுசாரி கட்சி. ஒவ்வொரு கட்சியும் காங்கிரசின் கண்ணோட்டத்தை சுற்றி வருகின்றன.
எனவே நாங்கள் ஆதார மையமாக இருப்போம். பா.ஜ.க.வை எதிர்கொள்ள வேண்டும் என்றால், அது காங்கிரஸ் கூட்டணியால்தான் முடியும்.
காங்கிரஸ் கட்சி தனித்து நின்று பா.ஜ.க.வை எதிர்கொள்ள வேண்டும் என்பதைத்தான் நான் விரும்புவேன். இதுவே எனது லட்சியம். ஆனால் அது 2024 தேர்தலில் அது யதார்த்தமாக இருக்காது.
2029-ம் ஆண்டு தேர்தலில், நாங்கள் எங்கள் சொந்தப் பலத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் போட்டியிட தயார் ஆவோம்.
சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அதன் கூட்டணி கட்சிகளுக்கு மிக அதிக இடம் கொடுத்திருக்கிறது. இது கட்சியின் கட்டமைப்புக்கு பாதிப்பாக அமைந்து விடும்.
ராகுல் காந்தியின் செய்தி, முதலில் கட்சியை கட்டமையுங்கள். அதிகாரம் தொடர்ந்து வரும் என்பதுதான். ராகுல் காந்தியின் பார்வை சரியானது.
நீண்ட காலம் ஆட்சிப்பொறுப்பில் இருந்தது. கட்சி அமைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ஒரு ஊக்க சக்தியாக அமைந்துள்ளது. அது நிலைத்து நிற்க வேண்டும்.
இந்திய ஒற்றுமை யாத்திரை ஒரு நிகழ்வு அல்ல. இது ஒரு இயக்கம். இதை ஒரு இயக்கமாக பார்க்க வேண்டும் என்றால் அதை நாங்கள் ஒரு இயக்கமாக நடத்தியாக வேண்டும்.
இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு பிந்தைய காங்கிரஸ் கட்சி முற்றிலும் மாறுபட்ட காங்கிரசாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் புல்வாமா தாக்குதலில் வீரர்கள் வீரமரணமடைந்த இடத்தில் ராகுல்காந்தி மலர் வைத்து மரியாதை.
- பாத யாத்திரை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் 30ம் தேதி ஸ்ரீநகரில் தேசியக்கொடி ஏற்றிய பின் யாத்திரை நிறைவடைகிறது.
கன்னியாகுமரியில் ராகுல்காந்தி தொடங்கிய பாத யாத்திரை தற்போது காஷ்மீரை அடைந்துள்ளது. பாத யாத்திரை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் 30ம் தேதி ஸ்ரீநகரில் தேசியக்கொடி ஏற்றிய பின் யாத்திரை நிறைவடைகிறது.
இந்நிலையில், பாதயாத்திரை இன்று காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது, 40 வீரர்கள் உயிரிழந்த புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ராகுல்காந்தி அஞ்சலி செலுத்தினார். ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் புல்வாமா தாக்குதலில் வீரர்கள் வீரமரணமடைந்த இடத்தில் ராகுல்காந்தி மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதற்கிடையே, ஜம்மு காஷ்மீர் லெத்போராவில் நடைபெற்ற ராகுல் காந்தியின் நடைபாதையின்போது பிரியங்கா காந்தியும் இணைந்துக் கொண்டார்.
இடைவேளைக்காக நிறுத்தப்பட்டிருந்த யாத்திரை அவந்திபோராவில் இருந்து மீண்டும் தொடங்கியது. இந்த யாத்திரை இன்று இரவு பந்தாசௌக்கில் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் ஜம்மு காஷ்மீரில் நடைபெறுகிறது.
- பாதுகாப்பு அளிக்கும்வரை நடைபயணத்தை தொடங்கப் போவதில்லை என காங்கிரஸ் அறிவித்தது.
ஜம்மு:
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. இந்த யாத்திரை இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. தற்போது இந்த நடைபயணம் ஜம்மு-காஷ்மீரின் பனிஹாலில் இருந்து மீண்டும் தொடங்கி நடைபெற்றது. காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாகமாக மூவர்ணக் கொடியை ஏந்தியபடி நடைப்பயணத்தைத் தொடர்ந்தனர்.
இதற்கிடையே, காஷ்மீரின் காசிகுண்ட் பகுதியில் நடைபெற்ற ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் பாதுகாப்பு காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளது. உரிய பாதுகாப்பு அளிக்கும் வரை நடைபயணத்தை மீண்டும் தொடங்கப் போவதில்லை என காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
இந்நிலையில், இதுகுறித்து ஜம்மு போலீசார் கூறுகையில், ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் எவ்வித பாதுகாப்பு குறைபாடுகளும் இல்லை. காஷ்மீரில் நடைபெற்றுவரும் ஒற்றுமை நடைபயணத்தில் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பயணத்தின்போது பங்கிஹாலில் பெருங்கூட்டம் இணைவது குறித்து அமைப்பாளர்கள் எந்த தகவலும் தரவில்லை என விளக்கமளித்தனர்.
+2
- பனிஹாலில் சுமார் ஒரு கிலோ மீட்டர் சென்ற பிறகு யாத்திரையை நிறுத்த வேண்டியிருந்தது.
- பாதுகாப்பு விலக்கப்பட்டதால், மக்கள் பாதுகாப்புப் பகுதியை மீறிச் சென்றதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
ஸ்ரீநகர்:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாத யாத்திரை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. தற்போது ஜம்மு காஷ்மீரில் யாத்திரை மேற்கொண்டுள்ளார். குடியரசு தினத்தையொட்டி நேற்று யாத்திரை நிறுத்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் யாத்திரையை தொடங்கினார்.
பனிஹாலில் யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, பனிஹால் சுரங்கத்தை கடந்தபோது, மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இதனால் பாதுகாப்பு கருதி ராகுல் காந்தியை பாதுகாப்பு வாகனத்திற்குள் அழைத்துச் சென்றனர். இதையடுத்து பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக கூறி இன்றைய யாத்திரையை காங்கிரஸ் கட்சி ரத்து செய்தது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று 20 கிலோ மீட்டர் தூரம் நடக்க திட்டமிட்டிருந்த ராகுல் காந்தி, பனிஹாலில் சுமார் ஒரு கிலோ மீட்டர் சென்ற பிறகு யாத்திரையை நிறுத்த வேண்டியிருந்தது.
ராகுல் காந்தி காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு சென்றபோது, திடீரென பாதுகாப்பு விலக்கப்பட்டதால், அங்கு காத்திருந்த ஏராளமானோர் பாதுகாப்புப் பகுதியை மீறிச் சென்றதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். பாதுகாப்பு படை வீரர்கள் திடீரென திரும்ப பெறப்பட்டது கடுமையான பாதுகாப்பு மீறலை ஏற்படுத்தியது என்றும், ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தவறியதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- பனிஹால் பகுதியில் ராகுல் காந்தி தனது யாத்திரையை தொடங்கினார்.
- ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் யாத்திரையில் பங்கேற்றனர்.
ஸ்ரீநகர்:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை காஷ்மீரில் நடந்து வருகிறது. குடியரசு தினத்தையொட்டி ஒரு நாள் இடைவேளைக்கு பிறகு இன்று யாத்திரை மீண்டும் தொடங்கியது.
பனிஹால் பகுதியில் ராகுல் காந்தி தனது யாத்திரையை தொடங்கினார். இதில் அவருடன் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவருமான உமர் அப்துல்லா இணைந்தார். ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் யாத்திரையில் பங்கேற்றனர்.
அப்போது பேசிய உமர் அப்துல்லா, ராகுல் காந்தி தலைமையிலான இந்த யாத்திரையானது, அவரது இமேஜை மேம்படுத்துவதற்காக நடத்தப்படும் யாத்திரை அல்ல, மாறாக நாட்டின் சூழலை மேம்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது என்றார்.
- சர்ஜிகல் தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரம் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை என்றார் திக்விஜய் சிங்.
- சர்ஜிகல் தாக்குதல் பற்றி அவர் சந்தேகம் கிளப்பியது பல்வேறு வகையிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரின் உரி ராணுவ தளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் பயங்கரவாதிகள் 4 பேர் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 19 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக அதே ஆண்டின் செப்டம்பர் 28-ம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் சர்ஜிகல் தாக்குதல் நடத்தியது என மத்திய அரசு தெரிவித்தது.
இதற்கிடையே, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை ஜம்முவில் நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், ஜெய்ராம் ரமேஷ் உள்பட பலர் அவருடன் இணைந்து பாதயாத்திரையில் பங்கேற்றனர். அப்போது பேசிய திக்விஜய் சிங், காஷ்மீரின் புல்வாமா தாக்குதல் குறித்த அறிக்கை இதுவரை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. சர்ஜிகல் தாக்குதல் நடத்தினோம் என மத்திய பா.ஜ.க. அரசு கூறுகிறது. ஆனால், அதற்கான ஆதாரம் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. பா.ஜ.க. அரசு அடுக்கடுக்கான பொய்களை மட்டுமே கூறி ஆட்சி செய்து வருகிறது என கூறினார்.
சர்ஜிகல் தாக்குதல் பற்றி அவர் சந்தேகம் கிளப்பியது பல்வேறு வகையிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு அவர் சான்று கேட்பது இந்திய வீரர்களை அவமதிக்கும் மற்றும் கொச்சைப்படுத்தும் விவகாரம் ஆகும் என பா.ஜ.க. எதிர்ப்பு குரல் எழுப்பியது.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், திக்விஜய் சிங்கின் தனிப்பட்ட பார்வைகளை நாங்கள் ஏற்று கொள்ளவில்லை. அவரது கருத்துகள் ஒதுக்கப்பட வேண்டியவை. ராணுவ வீரர்கள் தங்களது பணியை திறம்பட செய்துள்ளனர் என்பதில் நாங்கள் முழு அளவில் தெளிவாக இருக்கிறோம். அதற்கு வீரர்கள் சான்றளிக்க வேண்டிய தேவையில்லை என தெரிவித்தார்.
- மொத்தம் 3,970 கிலோ மீட்டர்தூரம் நடைபயணம் மேற்கொண்டு இருக்கும் ராகுலின் ஒற்றுமை யாத்திரை வருகிற 30-ந்தேதி நிறைவுபெறுகிறது.
- நிறைவு விழாவை மிக பிரமாண்டமாக நடத்த காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்து உள்ளனர்.
ஸ்ரீநகர்:
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி அவர் கன்னியாகுமரியில் தனது யாத்திரையை தொடங்கினார். தொடர்ந்து அவர் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக நடைபயணம் செய்து கடந்த 19-ந்தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குள் நுழைந்தார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் அவருக்கு காங்கிரசார் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். காங்கிரஸ் ஆளும் மாநில முதல்-மந்திரிகள், முன்னாள் மத்திய மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் என பலர் ராகுல் காந்தி நடைபயணத்தில் கலந்து கொண்டனர்.
சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் சில மாநிலங்களில் நடந்த யாத்திரையில் பங்கேற்றனர். இன்று ராகுல் 130-வது நாளாக காஷ்மீரில் யாத்திரையை தொடங்கி நடந்து வருகிறார். அவருடன் காங்கிரஸ் தலைவர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று உள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவதால் அவருக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 3,970 கிலோ மீட்டர்தூரம் நடைபயணம் மேற்கொண்டு இருக்கும் ராகுலின் ஒற்றுமை யாத்திரை வருகிற 30-ந்தேதி (திங்கட்கிழமை) நிறைவுபெறுகிறது. இந்த நிறைவு விழாவை மிக பிரமாண்டமாக நடத்த காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்து உள்ளனர். ஸ்ரீநகரில் நடைபெறும் நிறைவு நாள் விழாவில் ராகுல் காந்தி தேசிய கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
அதே சமயத்தில் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில தலைவர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள், காங்கிரஸ் அலுவலகங்களில் கொடி ஏற்றுவார்கள். இந்த நிறைவு நாள் விழாவை மிக பிரமாண்டமாக நடத்த காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
இதில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் இந்த விழாவில் பங்கேற்க கூட்டணி கட்சியான தி.மு.க. மற்றும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட 23 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
உத்தரபிரசேதத்தில் நடைபயணம் சென்ற போது சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உள்ளிட்ட தலைவர்கள் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனால் அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி உள்ளிட்ட தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிறைவு விழாவுக்கான ஏற்பாடுகளை காங்கிரசார் தீவிரமாக செய்து வருகின்றனர்.
ராகுல் காந்தி நேற்று பாத யாத்திரைக்காக ஜம்முவில் நுழைந்தபோது நிருபர்களிடம் கூறியதாவது, பாராளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகளை பற்றி எதிர்க்கட்சிகளை பேச அனுமதிக்காததால் இந்த இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது" என்றார்.
- ராகுல் காந்தியின் பாதயாத்திரை தற்போது ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்குள் நுழைந்துள்ளது.
- வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பினர்.
ஸ்ரீநகர்:
காங்கிரஸ் எம்.பியான ராகுல் காந்தி கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பல மாநிலங்களைக் கடந்த பாதயாத்திரை தற்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்குள் நுழைந்துள்ளது.
இந்நிலையில், காஷ்மீர் பாரத் ஜோடோ யாத்திரையின்போது ராகுல் காந்தியிடம், அவரது வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
இதுதொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு தனது திருமணம் குறித்த கேள்விகளுக்கு அவர் சுவாரஸ்யமாக பதிலளித்தார். அக்கட்சியின் தலைவர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள வீடியோவில், கேள்வி கேட்கும் நபர், எந்த தருணத்தில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளீர்கள்? என்ற கேள்விக்கு ராகுல் காந்தி அளித்த பதில் வருமாறு:
சரியான பெண் கிடைத்தால் நான் திருமணம் செய்து கொள்வேன். நான் விரும்பும் பெண் அம்மா மற்றும் தன் பாட்டியின் குண நலன்கள் கலந்து இருந்தால் நல்லது என தெரிவித்துள்ளார் ராகுல்.
- பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலும் குண்டு வெடிப்பு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
- உள்ளூர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரிடம் குண்டு வெடிப்பு குறித்து தகவல்களை அதிகாரிகள் கேட்டு அறிந்தனர்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் ஒற்றுமை நடைப்பயணம் மற்றும் குடியரசு தினவிழா கொண்டாட்டத்துக்காக காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜம்முவின் நர்வால் பகுதியில் நேற்று காலை இரட்டை குண்டு வெடிப்பு நடந்தது. காலை 10.45 மணிக்கு முதல் குண்டு வெடித்தது. அடுத்த 15 நிமிடங்களில் 2-வது குண்டு வெடித்தது.
இந்த இரட்டை குண்டு வெடிப்பில் 9 பேர் காயம் அடைந்தனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலும் குண்டு வெடிப்பு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த இரட்டை குண்டு வெடிப்புக்கு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுனர் மனோஜ் சின்கா கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இரட்டை குண்டு வெடிப்பு நடந்த நர்வால் பகுதியை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் இன்று காலை ஆய்வு செய்தனர். உள்ளூர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரிடம் குண்டு வெடிப்பு குறித்து தகவல்களை அதிகாரிகள் கேட்டு அறிந்தனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து துணை நிலை ஆளுனர் உயர்மட்டக் குழுவினருடன் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். ஜம்முவில் சட்டம்-ஒழுங்கு குறித்து மறு ஆய்வு செய்வது தொடர்பாக இந்த ஆலோசனை நடந்தது.
- ராகுல் காந்திக்கு போதுமான அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
- சி.ஆர்.பி.எப். மற்றும் மற்ற பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் 'ஒற்றுமை பயணம்' பாத யாத்திரை கன்னியாகுமரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது அவர் ஜம்மு- காஷ்மீரில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
குடியரசு தின விழா மற்றும் ராகுல்காந்தி பாத யாத்திரையையொட்டி காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. குறிப்பாக ராகுல் காந்தி செல்லும் வழி முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
ஆனால் இந்த பாதுகாப்பையும் மீறி ஜம்முவில் உள்ள நர்வால் பகுதியில் நேற்று காலை இரட்டை குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் 9 பேர் காயம் அடைந்தனர்.
இந்தநிலையில் ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் பாத யாத்திரை இன்று காலை 7 மணிக்கு மீண்டும் தொடங்கியது.
சர்வதேச எல்லைப் பகுதியில் உள்ள ஜம்மு- பதான் கோட் தேசிய நெடுஞ்சாலையின் ஹிராநகர் பகுதியில் இருந்து அவர் பாதயாத்திரை சென்றார். இதனால் ஜம்மு- பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.
தேசிய கொடியை கையில் ஏந்தி ராகுல்காந்தி தனது ஆதரவாளர்களுடன், பலத்த பாதுகாப்புகளுக்கு நடுவே நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
அவர் சம்பா மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடியை கடந்து செல்லும்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொது மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் கூறும்போது:-
ராகுல் காந்திக்கு போதுமான அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சி.ஆர்.பி.எப். மற்றும் மற்ற பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒற்றுமை பயணம் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2024 பொதுத்தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு ராகுல்காந்தி கடும் சவாலாக இருப்பார்.
- இந்த யாத்திரையில் நான் அரசியல் பார்க்கவில்லை.
ஸ்ரீநகர் :
தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை தொடங்கினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது. இந்த பாதயாத்திரை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
அதன்படி பல மாநிலங்களை கடந்த ராகுல்காந்தியின் பாதயாத்திரை தற்போது ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்குள் நுழைந்துள்ளது. ஜம்முவின் சந்த்வால் பகுதியில் இன்று பாதயாத்திரை நடைபெற்றது. இந்த பாத யாத்திரையில் ராகுல்காந்தியுடன் சிவசேனா மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் பங்கேற்றார்.
ராகுல்காந்தியுடன் இணைந்து சஞ்சய் ராவத் நடைபயணம் மேற்கொண்டார். ராகுல்காந்தியுடன் 13 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொண்ட சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், சித்தாந்த ரீதியாகவும், அரசியல் வேறுபாடுகள் இருந்தபோது ராகுல்காந்தி தனது ஆளுமை குணங்களை தற்போது வெளிக்காட்டியுள்ளார். 2024 பொதுத்தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு ராகுல்காந்தி கடும் சவாலாக இருப்பார். ராகுல்காந்தி அதிசயங்களை நிகழ்த்தப்போகிறார்.
இந்திய பிரதமராகும் தகுதி ராகுல்காந்திக்கு உள்ளது. 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் பயணித்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அனைவராலும் நடைபயணம் மேற்கொள்ள முடியாது. இந்த நடைபயணத்திற்கு திடமான மன உறுதியும், நாட்டின் மீதான அன்பும் தேவை. நாட்டின் மீதான அக்கறையை ராகுல்காந்தி வெளிப்படுத்தியுள்ளார். இந்த யாத்திரையில் நான் அரசியல் பார்க்கவில்லை. பிரதமராக தனக்கு விருப்பமில்லை என்று ராகுல்காந்தி ஏற்கனவே கூறியுள்ளார். ஆனால், ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்று மக்கள் விருப்பப்பட்டால் அவருக்கு வேறு வழியில்லை' என்றார்.






