என் மலர்tooltip icon

    குஜராத்

    • படகில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 2 பேரை கடற்படையினர் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
    • 2 பேர் பலத்த காயம் அடைந்ததால் போர்பந்தரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    போர்பந்தர்:

    குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே அரபிக்கடலில் மீன்பிடி படகு சென்று கொண்டு இருந்தது. திடீரென அந்த படகில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென படகு முழுவதும் பரவியது.

    இது பற்றி அறிந்ததும் இந்திய கடற்படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். படகில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 2 பேரை கடற்படையினர் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்கள் பலத்த காயம் அடைந்ததால் போர்பந்தரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் அவர்களுடன் படகில் சென்ற 5 பேர் மாயமானார்கள். இதையடுத்து கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணியில் இறங்கினார்கள். அப்போது கடலில் தத்தளித்து கொண்டு இருந்த 5 பேரையும் அவர்கள் பத்திரமாக மீட்டனர். தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

    • குஜராத் மாநிலத்தில் உத்தராயண பண்டிகை கொண்டாட்டப்பட்டது.
    • அப்போது காற்றாடிகளின் நூல் கழுத்தை அறுத்ததில் குழந்தை உள்பட 6 பேர் பலியாகினர்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் மகர சங்கராந்தியையொட்டி உத்தராயண பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையின்போது மக்கள் வண்ண வண்ண காற்றாடிகளைப் பறக்கவிட்டு குதூகலிப்பது வழக்கம். இந்த வழக்கத்தால் சில அப்பாவிகளின் உயிர் அநியாயமாக பறிபோய்விடுகிறது. காற்றாடிகளின் மாஞ்சா நூல், சிலரின் கழுத்தை அறுத்து பலிவாங்கிவிடுகிறது.

    இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் பவநகரில் தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த கீர்த்தி என்ற 2 வயது சிறுமியின் கழுத்தை காற்றாடி நூல் அறுத்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.

    விஸ்நகரில் தனது தாயுடன் தெருவில் நடந்து சென்ற கிஸ்மத் என்ற 3 வயது பெண்குழந்தை காற்றாடி நூலால் கழுத்து அறுபட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அக்குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    ராஜ்கோட் நகரில் ரிஷப் வர்மா என்ற 7 வயது சிறுவன் காற்றாடி வாங்கிக்கொண்டு பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தான். அப்போது மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் பரிதாபமாக பலியானான்.

    இதேபோல வதோதரா, கட்ச், காந்திநகர் மாவட்டங்களில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் காற்றாடி நூலால் கழுத்து அறுபட்டு செத்தனர். காற்றாடி நூலால் மேலும் 130 பேர் காயமடைந்தனர்.

    • வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • தபோலிம் விமான நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கோவா காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

    மாஸ்கோவில் இருந்து 244 பயணிகளுடன் அஸூர் ஏர் விமானம் கோவா சென்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில், கோவா ஏர் டிராபிக் கன்ட்ரோலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, குஜராத் ஜாம்நகர் விமான நிலையத்தில் இரவு 9.49 மணிக்கு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    இதுகுறித்து காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ராஜ்கோட் மற்றும் ஜாம்நகர் ரேஞ்ச்) அசோக் குமார் யாதவ் கூறியதாவது:-

    வெடிகுண்டு மிரட்டலை அடுத்து 236 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். உள்ளூர் அதிகாரிகள், போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கப் படையுடன் இணைந்து விமானத்தை சோதனை செய்து வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்தும் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே, மாஸ்கோவில் இருந்து புறப்பட்ட விமானம் டபோலிம் விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ளதாக கோவா காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தபோலிம் விமான நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கோவா காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தப்பட்டுள்ளது.

    • மாஸ்கோவில் இருந்து கோவா நோக்கி தனியார் சார்டர் விமானம் சென்றுள்ளது.
    • வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அந்த விமானம் ஜாம்நகர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

    ஜாம் நகர்:

    மாஸ்கோவில் இருந்து கோவா நோக்கி தனியார் சார்டர் விமானம் சென்றுள்ளது. கோவா விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் நிலையத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் சிலர், விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து குஜராத்தின் ஜாம்நகர் விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    விமானத்தில் இருந்த 236 பயணிகள் மற்றும் விமான நிறுவன ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

    விமானம் தனிமைப்படுத்தப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விமான நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர். விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • முதலில் ஆடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் சேர்த்தது.
    • 3 போட்டி கொண்ட டி20 தொடரை இந்தியா 2-1 என கைப்பற்றி உள்ளது

    ராஜ்கோட்:

    இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடந்தது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி, 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் சேர்த்தது. சூர்யகுமார் யாதவ் 112 ரன்கள் விளாசினார். இலங்கை தரப்பில் தில்சன் 2 விக்கெட் எடுத்தார். கசுன் ரஜிதா கருணாரத்னே, ஹசரங்கா டி சில்வா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 137 ரன்களில் சுருண்டது. இதனால் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இலங்கை அணியில் அதிகபட்சமாக குசால் மெண்டிஸ், தசுன் சனகா தலா 23 ரன்கள் அடித்தனர். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் ௩ விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஹர்திக் பாண்ட்யா, உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாகல் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 2 ரன்னில் வெற்றி பெற்றது. புனேயில் நடந்த 2-வது போட்டியில் இலங்கை அணி 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதன்மூலம் தொடரை 2-1 என கைப்பற்றி உள்ளது.

    • 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் சேர்த்தது.
    • சூர்யகுமார் யாதவ் 112 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    ராஜ்கோட்:

    இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    துவக்க வீரர் இஷான் கிஷன் ஒரு ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன்பின் ஷூப்மான் கில், ராகுல் திரிபாதி ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ராகுல் திரிபாதி 35 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஷூப்மான் கல்லுடன் சூர்யகுமார் யாதவ் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

    163 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்த ஜோடி பிரிந்தது. ஷூப்மான் கில் 46 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஹர்திக் பாண்ட்யா (4), தீபக் ஹூடா (4) நிலைக்கவில்லை. மறுமுனையில் அதிரடியை தொடர்ந்த சூர்யகுமார் யாதவ் சதம் விளாசினார். அவர் 45 பந்துகளில் 6 பவுண்டரி 8 சிக்சர்களுடன் இந்த இலக்கை எட்டினார்.

    20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் சேர்த்தது. சூர்யகுமார் யாதவ் 112 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை தரப்பில் தில்சன் 2 விக்கெட் எடுத்தார். கசுன் ரஜிதா கருணாரத்னே, ஹசரங்கா டி சில்வா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்குகிறது.

    • இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன
    • இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    ராஜ்கோட்:

    தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 2 ரன்னில் வெற்றி பெற்றது. புனேயில் நடந்த 2-வது போட்டியில் இலங்கை அணி 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

    இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில், இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இலங்கை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பனுகா ராஜபக்சேவுக்கு பதில் அவிஷ்கா பெர்னாண்டோ சேர்க்கப்பட்டுள்ளார்.

    இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும். தொடரை கைப்பற்றப்போவது இந்தியாவா? இலங்கையா? என்பது இன்று இரவு தெரிந்துவிடும்.

    இந்திய அணி சொந்த மண்ணில் 20 ஓவர் தொடரை இழந்து நீண்ட காலம் ஆகிறது. இதனால் அதை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி கடுமையாக போராடும். அதே நேரத்தில் இலங்கை அணி இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்லும் வேட்கையில் உள்ளது.

    • 3-வது டி20 போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற உள்ளது.
    • இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் போராடும்.

    ராஜ்கோட்:

    இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

    மும்பையில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புனேயில் நடந்த 2-வது டி20 போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், தொடரை வெல்லப் போவது யார் என்பதை நிர்ணயிக்கும் 3-வது டி20 போட்டி ராஜ்கோட் நகரில் இன்று நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் போராடும்.

    • ராஜ்கோட்டில் நயாரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான அடிக்கல் பணி நடந்தது.
    • இந்த தடுப்பணை கட்டும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் நயாரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பணி கடந்த 4-ம் தேதி நடந்தது. 400 அடி நீளமும், 150 அடி அகலமும் கொண்ட இந்த தடுப்பணை கட்டும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

    இன்னும் 2 வாரங்களில் பணி முடிய உள்ள நிலையில் தற்போது அதற்கு பெயர் சூட்டுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், சமீபத்தில் மரணம் அடைந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் நினைவாக ஹிராபா ஸ்மிருதி சரோவர் என பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கண் சிகிச்சை மையம் உள்ளது.
    • குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கண் சிகிச்சை மையம் உள்ளது.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கண் சிகிச்சை மையம் உள்ளது. இந்த மையத்தில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியது.

    இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் அந்த மையத்தின் வளாகத்தில் தங்கி அங்கு பணியாற்றி வந்த நரேஷ் பார்சி மற்றும் அவரது மனைவி ஹன்சா ஆகியோர் இறந்து விட்டனர்.

    தீ விபத்து ஏற்பட்ட போது கடுமையான புகை எழுந்ததால் அதில் மூச்சு திணறி 2 பேரும் இறந்ததாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காரில் பயணித்த ஒன்பது பேரில், சொகுசு பேருந்தின் ஓட்டுனருடன் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    • சாலை விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டத்தில் இன்று அதிகாலை சொகுசு பேருந்து மீது கார் ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் ஒன்பது பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 15 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    நவ்சாரி மாவட்டம் வெஸ்மா கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு பேருந்து வல்சாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர் திசையில் இருந்து வந்த கார் பேருந்து மீது மோதியதாக நவ்சாரி காவல் கண்காணிப்பாளர் ருஷிகேஷ் உபாத்யாய் தெரிவித்தார்.

    காரில் பயணித்த ஒன்பது பேரில், சொகுசு பேருந்தின் ஓட்டுனருடன் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும், பயணம் செய்தவர்கள் அங்கிலேஷ்வர் பகுதியில் வசிப்பவர்கள் என்றும், அவர்கள் வல்சாத்திலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர் என்றும், பேருந்தில் பயணம் செய்தவர்கள் வல்சாத்தை சேர்ந்தவர்கள் என்றும் உபாத்யாய் கூறினார்.

    சாலை விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மருத்துவமனையில் இருந்து தாயாரின் உடலை பிரதமர் மோடி சுமந்து சென்றார்.
    • தாயாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்த பிரதமர் மோடி காலில் விழுந்து வணங்கி தனது அஞ்சலியை செலுத்தினார்.

    பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 99), திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.

    பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளத்தில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவதற்காக செல்ல இருந்தார். தாயார் ஹீராபென் மறைவையடுத்து பிரதமர் மோடி அகமதாபாத்துக்கு விரைந்தார்.

    அங்கு, மறைந்த தனது தாயார் ஹீரா பென்னுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். மருத்துவமனையில் இருந்து தாயாரின் உடலை பிரதமர் மோடி சுமந்து சென்றார்.

    ஹீரா பென்னின் உடல் காந்தி நகரில் உள்ள பிரதமர் மோடியின் சகோதரரின் வீட்டில் உடல் வைக்கப்பட்டது. அங்கு, தனது தாயாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்த பிரதமர் மோடி காலில் விழுந்து வணங்கி தனது அஞ்சலியை செலுத்தினார்.

    இதையடுத்து, இறுதி சடங்கிற்காக மறைந்த ஹீரா பென்னின் உடல் காந்தி நகரில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, பிரதமர் மோடி இறுதி சடங்குகளை செய்தார். தொடர்ந்து, தனது தாயின் சிதைக்கு பிரதமர் மோடி தீ மூட்டினார். இதன்மூம் பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென்னின் உடல் தகனம் செய்யப்பட்டது.

    ×