search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4th Test"

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.
    • நாளைய ஆட்டத்தில், அனைவரின் பார்வையும் விராட் கோலி மீது இருக்கும்.

    அகமதாபாத்:

    இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. மூன்றாம் நாளான இன்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் குவித்தது. விராட் கோலி 59 ரன்களுடனும், ஜடேஜா 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட இந்தியா 191 ரன்கள் பின்தங்கி உள்ளது. நாளை நான்காம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

    4 போட்டி கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ள இந்தியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற 3-1 என்ற கணக்கில் தொடரை வெல்ல வேண்டும். எனவே நாளைய ஆட்டம் இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

    இப்போட்டியில் இந்தியா தோற்று, நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இலங்கை 2-0 என வெற்றி பெற்றால் இலங்கை அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். ஒருவேளை இந்தியா இப்போட்டியை டிரா செய்து, இலங்கை 2-0 என வெற்றி பெற தவறினால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதும்.

    எனவே நாளைய ஆட்டத்தில், அனைவரின் பார்வையும் விராட் கோலி மீது இருக்கும். இன்று 2 மணி நேரத்திற்கும் மேலாக நிதானமாக ஆடிய அவர் அரை சதம் கடந்துள்ளார். நாளை அவரும், ஜடேஜாவும் நிலைத்து நின்று அணியின் ஸ்கோரை உயர்த்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    நாளை முழுவதும் பேட்டிங் செய்து, ஆஸ்திரேலியாவை விட 150 ரன்கள் முன்னிலை பெறும் முயற்சியில் இந்திய பேட்ஸ்மேன்கள் இறங்குவார்கள். கடைசி நாளில் சுழற்பந்துக்கு சாதகமாக ஆடுகளம் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை எளிதில் வீழ்த்த முடியும் என கணித்துள்ளனர்.

    வரும் ஜூன் மாதம் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை லண்டன் ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • சுப்மன் கில் 235 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 128 ரன்கள் குவித்தார்.
    • ஆஸ்திரேலியாவைவிட இந்தியா 191 ரன்கள் பின்தங்கி உள்ளது.

    அகமதாபாத்:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்தது. உஸ்மான் கவாஜா 180 ரன்னும், கேமரூன் கிரீன் 114 ரன்னும் எடுத்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா 2ம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்து இருந்தது. ரோகித் சர்மா 17 ரன்னுடனும், சுப்மன்கில் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3வது நாள் ஆட்டத்தின்போது தொடர்ந்து ஆடிய ரோகித் சர்மா 35 ரன்னில் அவுட் ஆனார். மறுமுனையில் சுப்மன் கில் அபாரமாக ஆடி சதம் விளாசினார். கிட்டத்தட்ட 6 மணி நேரம் களத்தில் நின்ற அவர் 235 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 128 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழந்தார். இது டெஸ்ட் போட்டியில் அவருக்கு இரண்டாவது சதம் ஆகும். முன்னதாக புஜாரா 42 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

    இதேபோல் நிதானமாக ஆடிய விராட் கோலி அரை சதம் கடந்தார். இதனால் இன்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் குவித்தது. கோலி 59 ரன்களுடனும், ஜடேஜா 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவைவிட இந்தியா தற்போது 191 ரன்கள் பின்தங்கி உள்ளது. நாளை நான்காம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

    ×