search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 91 ரன்கள் முன்னிலை
    X

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 91 ரன்கள் முன்னிலை

    • மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா 131 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் எடுத்து இருந்தது.
    • இரட்டை சதத்தை நெருங்கிய கோலில் 186 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மர்பி பந்துவீச்சில் கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது.

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்தது. உஸ்மான் கவாஜா 180 ரன்னும், கேமரூன் கிரீன் 114 ரன்னும் எடுத்தனர்.

    இந்திய தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் முதல் இ னிங்சை விளையாடிய இந்திய அணி நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 99 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் சதம் (128 ரன்) அடித்தார்.

    விராட்கோலி 59 ரன்னுடனும், ஜடேஜா 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 191 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்தியா விளையாடியது. விராட் கோலி, ஜடேஜா தொடர்ந்து ஆடினர். இருவரும் நிதான மாக விளையாடினார்கள். இந்தியா 102-வது ஓவரில் 300 ரன்னை தொட்டது.

    ரவீந்திர ஜடேஜா 28 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் நாதன்லயன் பந்தில் கவாஜாவிடம் கேட்ச் ஆனார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 4 விக்கெட் இழப்புக்கு 309 ரன்னாக இருந்தது. அடுத்து கோலியுடன் விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் ஜோடி சேர்ந்தார்.

    இந்த ஜோடி பொறுமையாக விளையாடியது. விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா 131 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் எடுத்து இருந்தது. வீராட் கோலி 88 ரன்னுடனும், கே.எஸ்.பரத் 25 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    5-வது வீரராக களம் இறங்க வேண்டிய ஸ்ரே யாஸ் அய்யர் முதுகில் வலி இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அவர் ஸ்கேன் செய்ய அனுப்பப்பட்டார். அவரை கிரிக்கெட் வாரிய மருத்துவ குழு கண்காணித்து வருகிறது. இதனால் ஸ்ரேயாஸ் அய்யர் களம் இறங்கவில்லை. இரட்டை சதத்தை நெருங்கிய கோலில் 186 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மர்பி பந்துவீச்சில் கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார்.

    இந்நிலையில், மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் 178.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 571 ரன்களை குவித்து இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

    ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயான், மர்பி தலா 3 விக்கெட்டும், குன்னமென், ஸ்டார்க் தலா 1 விக்கெட்டும் விக்கெட்டும் எடுத்தனர். 91 ரன்கள் பின்னிலையுடன் ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்சை தொடங்கி உள்ளது.

    Next Story
    ×