என் மலர்
குஜராத்
- பிபோர்ஜோய் புயலின் கோர தாண்டவத்தில் ஜாகவ் துறைமுக பகுதி, பவ்நகர் மாவட்டங்களில் சுமார் 940 கிராமங்களில் கடும்பாதிப்பு ஏற்பட்டது.
- சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 500-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன.
அரபிக்கடலில் கடந்த 5-ந் தேதி உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக உருமாறியது. இது நேற்று மாலை குஜராத் மாநிலம் ஜாகவ் துறைமுகம் அருகே கரையை கடந்தது. புயலின் மையப்பகுதி நேற்று நள்ளிரவில் கரையை கடந்த போது ஜாகவ் துறைமுக பகுதியில் 125 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. அப்போது கடலில் பல மீட்டர் உயரத்திற்கு அலைகளும் எழுந்தது. அதோடு கன மழையும் பெய்தது.
பிபோர்ஜோய் புயலின் கோர தாண்டவத்தில் ஜாகவ் துறைமுக பகுதி, பவ்நகர் மாவட்டங்களில் சுமார் 940 கிராமங்களில் கடும்பாதிப்பு ஏற்பட்டது. இங்குள்ள கட்டிடங்களின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. ராட்சத மரங்களும் வேரோடு சரிந்து விழுந்தது. சிறியதும், பெரியதுமாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்தது. மேலும் சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 500-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன. மரங்கள், மின்கம்பங்கள், கட்டிடங்கள் இடிந்ததில் அப்பகுதியில் இருந்த வாகனங்களும் சேதமானது.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குஜராத் முதலமைச்சருடன் இணைந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டார்.
- ஜாகவ் துறைமுகத்தில் கரையை கடந்தபின்பும் பிபோர்ஜோய் புயலின் சீற்றம் தணியவில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- மாநிலத்தில் புயல் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அகமதாபாத்:
அரபிக்கடலில் கடந்த 5-ந் தேதி உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக உருமாறியது. இது நேற்று மாலை குஜராத் மாநிலம் ஜாகவ் துறைமுகம் அருகே கரையை கடந்தது.
புயலின் மையப்பகுதி நேற்று நள்ளிரவில் கரையை கடந்த போது ஜாகவ் துறைமுக பகுதியில் 125 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. அப்போது கடலில் பல மீட்டர் உயரத்திற்கு அலைகளும் எழுந்தது. அதோடு கன மழையும் பெய்தது.
புயல் கரையை கடக்கும்போது பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான கடலோர கிராம மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.
மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 15 குழுக்கள், மாநில பேரிடர் மீட்பு படையின் 12 குழுக்கள், பொதுப்பணித்துறையின் 115 குழுக்கள், மின்வாரியத்தின் 397 குழுக்கள் ஜாகவ் துறைமுக பகுதி மற்றும் கடலோர மாவட்டங்களில் தயார் நிலையில் இருந்தனர்.
பிபோர்ஜோய் புயலின் கோர தாண்டவத்தில் ஜாகவ் துறைமுக பகுதி, பவ்நகர் மாவட்டங்களில் சுமார் 940 கிராமங்களில் கடும்பாதிப்பு ஏற்பட்டது. இங்குள்ள கட்டிடங்களின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. ராட்சத மரங்களும் வேரோடு சரிந்து விழுந்தது. சிறியதும், பெரியதுமாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்தது. மேலும் சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 500-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன. மரங்கள், மின்கம்பங்கள், கட்டிடங்கள் இடிந்ததில் அப்பகுதியில் இருந்த வாகனங்களும் சேதமானது.
பவ் நகர் மாவட்டத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலியானார்கள். 22-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுபோல ஆடு, மாடு, நாய்கள் என 23-க்கும் மேற்பட்ட விலங்குகளும் இறந்தது. இதனை குஜராத் மாநில நிவாரண பணிகள் பிரிவு ஆணையர் அலோக் சிங் தெரிவித்துள்ளார்.
புயல் முன்னெச்சரிக்கை காரணமாக ஜாகவ், பவ் மாவட்டங்களில் நேற்றே மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. நள்ளிரவு வீசிய சூறைக்காற்றில் ஏராளமான மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் அவற்றை சரிசெய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று நள்ளிரவே பேரிடர் மீட்பு குழுவினருடன் இணைந்து மின்வாரிய ஊழியர்கள் கிராமங்களில் சரிந்து விழுந்த மின்கம்பங்களை சீர் செய்யவும், முறிந்த மரக்கிளைகளை அப்புறப்ப டுத்தும் பணியிலும் ஈடுபட்டனர். இந்த பணிகள் முழுமையாக முடிந்த பின்னரே இக்கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுக்க முடியும். இதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் ஆகும் என்று தெரிகிறது. அதுவரை இம்மாவட்டங்களை சேர்ந்த 940 கிராமங்கள் இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிபோர்ஜோய் புயல் பாதிப்பு குறித்து குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேலுடன் பிரதமர் மோடி போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை உடனே மேற்கொள்ளவும், வனவிலங்கு சரணாலயங்களில் உள்ள விலங்குகள் பாதுகாப்பாக இருக்கிறதா? என்பதை கண்காணிக்கவும் கேட்டுக்கொண்டார். இதனை குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் தெரிவித்தார்.
மேலும் மாநிலத்தில் புயல் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையே நேற்று ஜாகவ் துறைமுகத்தில் கரையை கடந்தபின்பும் பிபோர்ஜோய் புயலின் சீற்றம் தணியவில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக புயல் கரையை கடந்ததும் அது வலுவிழந்து இயல்பு நிலைக்கு திரும்பும்.
ஆனால் இப்போது ஜாகவ் துறைமுகத்தில் கரையை கடந்த பிபோர்ஜோய் புயல் இன்று காலை வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்தது. சவுராஷ்டிரா-கட்ச் வழியாக நகரும் புயல் 105 முதல் 115 கிலோ மீட்டர் வேகத்தில் சீற்றம் குறையாமல் ராஜஸ்தான் நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக ராஜஸ்தான் பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
- புயல் கரை கடக்கத் தொடங்கியதையடுத்து பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
- பல்வேறு இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன.
அகமதாபாத்:
அரபிக் கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக மாறியது. இந்தப் புயல் குஜராத் மாநில கடற்கரை மாவட்டமான கட்ச்- பாகிஸ்தானின் கராச்சி கடற்கரை இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்தது. இதனால் குஜராத் மாநிலத்தில் கடற்கரையோரப் பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் சுற்றுப்பகுதியில் வசிக்கும் மக்கள் அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சுமார் ஒரு லட்சம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, அரசின் தற்காலிக தங்குமிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
புயல் காரணமாக நேற்றிலிருந்து காற்றுடன் மழை பெய்து வருகிறது. 6-க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பலத்த காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.
தேசிய பேரிடர் மீட்புப்படையின் 15 குழுக்கள், 12 மாநில பேரிடர் மீட்புக்குழுக்கள், மாநில சாலை மற்றும் கட்டுமானத்துறையின் 115 குழுக்கள், மின்சாரத்துறையின் 397 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.
இதற்கிடையே, ஏற்கனவே கணித்தபடி பிபோர்ஜோய் புயல் வடகிழக்கு நோக்கி நகர்ந்து நேற்று மாலை 4.30 மணியளவில் குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடலோர பகுதியில் கரைகடக்கத் தொடங்கியது. கரைகடக்கும் நிகழ்வு நள்ளிரவு வரை நீடித்தது.
கடலோரப் பகுதியில் மணிக்கு 110 முதல் 125 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.
புயல் கரை கடக்கத் தொடங்கியதையடுத்து பலத்த காற்றுடன், கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன.
இந்நிலையில், பிபோர்ஜோய் புயல் தாக்கியதில் பவ்நகர் மாவட்டத்தில் 2 பேர் பலியானார்கள். 22 பேர் காயமடைந்தனர். 23 விலங்குகள் உயிரிழந்தன. 500க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளன. மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதால் சுமார் 900 கிராமங்களில் மின்சாரம் பாதிப்பு அடைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ராணுவத்தினர் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், புயல் பாதிப்பு நிலவரம் குறித்து முதல் மந்திரி பூபேந்திர படேலிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.
- சுமார் ஒரு லட்சம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
- புயல் கரை கடக்கத் தொடங்கியதையடுத்து பலத்த காற்றுடன், கனமழை பெய்து வருகிறது.
அரபிக் கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக மாறியது. இந்தப் புயல் இன்று மாலை குஜராத் மாநில கடற்கரை மாவட்டமான கட்ச்- பாகிஸ்தானின் கராச்சி கடற்கரை இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்தது.
இதனால் குஜராத் மாநிலத்தில் கடற்கரையோரப் பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் சுற்றுப்பகுதியில் வசிக்கும் மக்கள் அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சுமார் ஒரு லட்சம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, அரசின் தற்காலிக தங்குமிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
புயல் காரணமாக நேற்றிலிருந்து காற்றுடன் மழை பெய்து வருகிறது. 6-க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பலத்த காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.
தேசிய பேரிடர் மீட்புப்படையின் 15 குழுக்கள், 12 மாநில பேரிடர் மீட்புக்குழுக்கள், மாநில சாலை மற்றும் கட்டுமானத்துறையின் 115 குழுக்கள், மின்சாரத்துறையின் 397 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஏற்கனவே கணித்தபடி பிபோர்ஜேய் புயல் வடகிழக்கு நோக்கி நகர்ந்து இன்று மாலை 4.30 மணியளவில் குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடலோர பகுதியில் கரைகடக்கத் தொடங்கியது. கரைகடக்கும் நிகழ்வு நள்ளிரவு வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் காரணமாக குஜராத் கடற்கரையை ஒட்டியுள்ள துவாரகா, ஓகா, நலியா, பூஜ், போர்பந்தர் மற்றும் காண்ட்லா ஆகிய பகுதிகளில் இன்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது. கடலோரப் பகுதியில் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.
புயல் கரை கடக்கத் தொடங்கியதையடுத்து பலத்த காற்றுடன், கனமழை பெய்து வருகிறது. கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. பல்வேறு இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன. கூரை வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து காற்றில் பறந்தன. தேவபூமி துவாரகா மாவட்டத்தில் மரம் விழுந்ததில் 3 பேர் காயமடைந்துள்ளனர். சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ராணுவத்தினர் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அடுத்த ஐந்து நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
- அரபிக் கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக மாறியது.
- டிட்லி, ஃபானி மற்றும் குலாம் ஆகிய பேரிடர்களின் பெயர்களை தொடர்ந்து தற்போது பிபோர்ஜோய் பெயரும் இணைந்துள்ளது.
இந்தியாவில் இயற்கை பேரிடர்களின்போது பிறக்கும் குழந்தைகளுக்கு தனித்துவமாக இருப்பதற்காக பெற்றோர்கள் தங்களின் குழந்கைளுக்கு அதன் பெயர்களை வைத்து மகிழ்ந்து வருகின்றனர். சுனாமி, சூறாவளி முதல் கொரோனா, லாக்டவுன் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின் பெயர்களிலும் இந்தியாவில் குழந்தைகள் உள்ளது என்றே கூறலாம்.
டிட்லி, ஃபானி மற்றும் குலாம் ஆகிய சூறாவளி பெயர்களை தொடர்ந்து தற்போது பிபோர்ஜோய் பெயரும் இணைந்துள்ளது.
ஆம், கடந்த சில நாட்களுக்கு முன்பு அரபிக் கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக மாறியது. இந்தப் புயல் இன்று மாலை குஜராத் மாநில கடற்கரை மாவட்டமான கட்ச்- பாகிஸ்தானின் கராச்சி கடற்கரை இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் குஜராத் மாநிலத்தில் கடற்கரையோரப் பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் சுற்றுப்பகுதியில் வசிக்கும் மக்கள் அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த முகாம்களில் தங்கியுள்ள குஜராத்தை சேர்ந்த பெற்றோர் தங்களின் ஒரு மாத பெண் குழந்தைக்கு புயலின் பெயரான பிபோர்ஜோய் என பெயர் வைத்துள்ளனர். இது அனைவரது கனத்தையும் ஈர்த்துள்ளது.
- இன்று மாலை கட்ச் பகுதியில் கரையை கடக்கிறது
- 130 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை
அரபிக் கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக மாறியது. இந்தப் புயல் இன்று மாலை குஜராத் மாநில கடற்கரை மாவட்டமான கட்ச்- பாகிஸ்தானின் கராச்சி கடற்கரை இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் குஜராத் மாநிலத்தில் கடற்கரையோரப் பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் சுற்றுப்பகுதியில் வசிக்கும் மக்கள் அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதுவரை 74 ஆயிரம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நேற்றிலிருந்து காற்றுடன் மழை பெய்து வருகிறது. 6-க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று 130 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்புப்படையின் 15 குழுக்கள், 12 மாநில பேரிட மீட்புக்குழுக்கள், மாநில சாலை மற்றும் கட்டுமானத்துறையின் 115 குழுக்கள், மின்சாரத்துறையின் 397 குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக குஜராத் நிவாரண ஆணையர் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை வடகிழக்கு நோக்கி நகர்ந்து சவுராஷ்டிரா மற்றும் கட்ச், குஜராத்தின் மந்த்வி- பாகிஸ்தானின் கராச்சி அருகில் உள்ள ஜக்காவ் துறைமுகம் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தின் போர்பந்தர், ராஜ்கோட், மொர்பி, ஜுனாகாத், சவுராஷ்டிரா, வடக்கு குஜராத் பகுதிகளில் அதிதீவிர மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.
- புயல் காரணமாக குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது.
- புயல் நாளை மாலை கரையை கடக்கும் போது கடலோர பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அரபிக் கடலின் கிழக்கு மத்திய பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் குறைந்த காற்றழுத்தம் உருவானது. அதன்பிறகு அது கடந்த 6-ந்தேதி புயலாக மாறியது. அந்த புயலுக்கு 'பிபோர்ஜோய்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
அந்த புயல் வடக்கு திசை நோக்கி கடந்த சில தினங்களாக நகர்ந்து வந்தது. இந்த நிலையில் அது தீவிர புயலாகவும், அதி தீவிர புயலாகவும் அடுத்தடுத்து மாறியது.
வடகிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருக்கும் 'பிபோர்ஜோய்' அதிதீவிர புயல் குஜராத்தின் போர்பந்தரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் இன்று காலை நிலை கொண்டிருந்தது. இது நாளை (வியாழக்கிழமை) மாலை குஜராத்தின் ஜாக்ஹா துறைமுகப் பகுதியில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதி தீவிர புயல் கரையை கடக்கும் போது பலத்த மழையும், பலத்த காற்றும் வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மணிக்கு 125 முதல் 150 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்படி மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் நேற்று முதல் மிக பலத்த மழையும், மிக பலத்த சூறாவளி காற்றும் வீசத் தொடங்கியுள்ளது.
இன்று (புதன்கிழமை) காலை முதல் பலத்த காற்றுடன் குஜராத் கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன.
இதனால் குஜராத் கடலோர மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 95 ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
புயல் நாளை மாலை கரையை கடக்கும் போது கடலோர பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பேரிடர் மீட்பு குழுவின் 17 படை வீரர்கள் குஜராத் கடலோர பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
புயல் காரணமாக குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. புயல் அபாயம் உள்ள இதர மாவட்டங்களிலும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
6 மாநிலங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று இன்று காலை வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது.
புயல் கரையை கடக்கும் போது மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. எனவே புயலை எதிர்கொள்வது தொடர்பாக குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் கடற்படை வீரர்கள் கட்ச், சவுராஷ்டிரா பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். கடற்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 40 ஆயிரம் பேர் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.
- குஜராத்தில் அரசு சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி பிபர்ஜாய் புயலாக உருவெடுத்தது. இந்த புயலானது போர்பந்தருக்கு 340 கிலோ மீட்டர் தெற்கு, தென்மேற்கிலும், துவாரகாவுக்கு 400 கிலோ மீட்டர் தெற்கு-தென்மேற்கிலும் அதிதீவிர புயலாக மையம் கொண்டு உள்ளது.
பிபோர்ஜோய் புயல் மணிக்கு 9 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்வதாகவும், வருகிற 15-ந் தேதி பிற்பகல் குஜராத்தின் மாண்ட்வி- பாகிஸ்தானின் கராச்சி இடையே சவுராஸ்டிரா கடல் பகுதியில் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியால், குஜராத்தில் அரசு சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், புயல் காரணமாக 67 ரெயில் சேவைகள் ரத்துசெய்யப்பட்டு உள்ளது. குஜராத் மேற்கு ரெயில்வே பிராந்தியத்தில் 67 ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- கோடை வெயிலில் இருந்து தப்புவதற்காக ராகுல் பாபா வெளிநாடு செல்கிறார்.
- பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியா மிகப்பெரும் மாற்றத்தை கண்டுள்ளது.
படான்:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசினார். அப்போது மத்திய அரசின் செயல்பாடுகளை அங்கு கடுமையாக விமர்சித்தார்.
ராகுல் காந்தியின் இந்த கருத்துகளுக்கு மத்திய பா.ஜனதா தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் உள்துறைமந்திரி அமித்ஷாவும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சி நிறைவையொட்டி குஜராத்தின் படான் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
கோடை வெயிலில் இருந்து தப்புவதற்காக ராகுல் பாபா (ராகுல் காந்தி) வெளிநாடு செல்கிறார். அங்கு இந்தியாவை விமர்சிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் தனது முன்னோரிடம் இருந்து அவர் கற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
எந்தவொரு தேசப்பற்று மிகுந்தவரும் இந்திய அரசியலை இந்தியாவுக்குள்ளேதான் விவாதிக்க வேண்டும். எந்தவொரு தலைவரும் வெளிநாடுகளில் இந்தியாவை விமர்சிப்பதும், இந்திய அரசியலை விவாதிப்பதும் ஏற்க முடியாது. இதை இந்திய மக்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை ராகுல் காந்தி நினைவில் கொள்ள வேண்டும்.
பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியா மிகப்பெரும் மாற்றத்தை கண்டுள்ளது. ஆனால் இந்தியாவுக்கு எதிரான விஷங்களை பேசுவதை காங்கிரஸ் நிறுத்தவில்லை.
தமிழகத்தின் வரலாற்று சிறப்பு மிக்க செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவியதை நீங்கள் எதிர்த்தீர்கள். இந்த செங்கோல் நேருவால் நிறுவப்பட இருந்தது. ஆனால் அவர் செய்யாததை பிரதமர் மோடி செய்திருக்கிறார். நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள்?
பாபர் காலத்தில் இருந்தே அயோத்தியில் ராமர் கோவில் இழிவுபடுத்தப்பட்டது. ஆனால் இன்று, அங்கு பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. விரைவில் அது திறக்கப்படும்.
நாட்டின் வளர்ச்சிக்கான ஒரு புதிய சகாப்தத்தை குஜராத்தில் இருந்து நரேந்திர மோடி தொடங்கினார். 2002 முதல் 2014-ம் ஆண்டு வரை குஜராத்தில் மின்சாரம், தண்ணீர், தடுப்பணை, பண்ணை மற்றும் பெண் கல்வி என அனைத்து துறைகளின் வளர்ச்சி மோடியை பிரதமராக்க உதவியது. மேலும் 'குஜராத் மாடல்' இந்தியா மாடலாக மாறியது.
நான் செல்லும் இடங்களில் எல்லாம் பிரதமர் மோடிக்கான ஆதரவை பார்க்கிறேன். குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் பா.ஜனதா 3-வது முறையாக வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று குஜராத் மக்களை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அமித்ஷா கூறினார்.
- கவுரவ் காந்தி இதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்தார்.
- இவர் 41 வயதில் 16 ஆயிரம் பேருக்கு வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தின் ஜாம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் கவுரவ் காந்தி (41). இதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்தார். இவர் தனது பணிக் காலத்தில் 16,000 இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்துவிட்டு வீடு திரும்பிய அவர், இரவு உணவுக்குப் பிறகு படுத்து தூங்கினார்.
நேற்று காலை நீண்ட நேரமாகியும் எழாததால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரை எழுப்ப முயன்றனர். அவர் எழுந்திருக்காததால், உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பால் உயிரிழந்தார் என தெரிவித்தனர்.
16,000 இதய அறுவை சிகிச்சை செய்த டாக்டர் மாரடைப்பால் மரணம் அடைந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கடந்த ஏப்ரல் 9-ந் தேதி, 13.9 கிலோ எடையுள்ள யானை தந்தத்தை வைத்திருந்ததற்காக அவரை அகமதாபாத் நகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
- 2006-ம் ஆண்டு வரை சேலத்தில் முகாமிட்டு வனவிலங்குகளை வேட்டையாடியதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அகமதாபாத்:
சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளியாக 1992-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டுவரை செயல்பட்டவர் பிரகாஷ் ஜெயின்(வயது56). குஜராத் மாநிலம் போடக்தேவ் பகுதியை சேர்ந்த ஜவுளி வியாபாரியான இவர் வன விலங்குகளை வேட்டையாடி அதன் பொருட்களை விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. கடந்த ஏப்ரல் 9-ந் தேதி, 13.9 கிலோ எடையுள்ள யானை தந்தத்தை வைத்திருந்ததற்காக அவரை அகமதாபாத் நகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்பு ஒரு மாதத்திற்குப் பிறகு ஜெயின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் புலித்தோல் வைத்திருந்ததாக அவரை போலீசார் மீண்டும் கைது செய்தனர். அவர் மீது வன விலங்குகள் (பாது காப்பு) சட்டம், 1972 இன் பிரிவுகள் 2, 39 (பி), 44, 49 (பி), 50 மற்றும் 51 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது, அவர் தமிழ்நாட்டின் திருச்சி வனச்சரக பகுதியில் விலங்குகளை வேட்டையாடியதாக தெரிகிறது. அவரிடம் இருந்து ஒரு புலித்தோல், 2 யானை தந்தம், இரண்டு கொம்புகள் மற்றும் நரியின் வால்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அவரை அகமதாபாத் போலீசார் தமிழக வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
ஜெயினுடன் மேலும் 7 பேரும் கைது செய்யப்பட்டார்கள். இதனிடையே கைதான ஜெயின் மற்றும் 7 பேரையும் வனத்துறையினர் காவலில் எடுத்து விசாரித்தனர். கைதான ஜெயின், வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகும் 2006-ம் ஆண்டு வரை சேலத்தில் முகாமிட்டு வனவிலங்குகளை வேட்டையாடியதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
- மகளும், மனைவியும் மாடியில் தூங்க விரும்புவதாகத் தெரிவித்தனர்.
- அதற்கு அவர் வீட்டின் அறையில்தான் தூங்க வேண்டும் என அனுமதி மறுத்துள்ளார்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தின் சூரத்தில் வசித்து வருபவர் ராமானுஜ சாஹு. இவர் தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 18-ம் தேதி இரவு இவரின் மகளும், மனைவியும் மாடியில் தூங்க விரும்புவதாகத் தெரிவித்தனர். அதற்கு அவர், வீட்டின் அறையில்தான் தூங்க வேண்டும் என அனுமதி மறுத்துள்ளார். இதனால் 3 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராமானுஜ சாஹு, வீட்டின் சமையலறையிலிருந்த கத்தியை எடுத்துவந்து மகளைக் குத்தியிருக்கிறார்.
தடுக்க வந்த குடும்பத்தினரையும் கத்தியால் தாக்கியிருக்கிறார். இதில் அனைத்துக் குடும்ப உறுப்பினர்களுக்கும் கத்திக்காயம் ஏற்பட்டிருக்கிறது. மகளையும், மனைவியையும் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்.
ஆத்திரத்தில் மகளை மட்டும் ஏறத்தாழ 25 முறை கத்தியால் குத்திக் கொலைசெய்திருக்கிறார். இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கின்றன.
இதுதொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த தந்தை மகளை 25 முறை கத்தியால் குத்திக் கொன்றது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






