என் மலர்tooltip icon

    டெல்லி

    • சக்திவாய்ந்த பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைகள் அணிவகுத்தன.
    • ராணுவத்தில் பயன்படுத்தப்படும் மோப்ப நாய்கள், கருங்கழுகுகள், ஒட்டகங்கள் கடமைப்பாதையில் அணிவகுத்தன.

    நாட்டின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு கடமைப்பாதையில் 21 குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

    குடியரசு தினத்தை ஒட்டி டெல்லி கடமைப்பாதையில் தேசியக் கொடி ஏற்றப்பட்டதை அடுத்து அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    இதில், ஆபரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் குடியரசு தின விழாவில் அணிவகுத்தன.

    சக்திவாய்ந்த பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைகள் அணிவகுத்தன.

    ராணுவத்தில் பயன்படுத்தப்படும் மோப்ப நாய்கள், கருங்கழுகுகள், ஒட்டகங்கள் கடமைப்பாதையில் அணிவகுத்தன.

    குடியரசு தினவிழாவில் 4 பைரவா மற்றும் சீக்கியர் படைப்பிரிவினர் கூட்டாக அணிவகுத்து சென்றனர்.

    • அணிவகுப்பு தொடக்கத்தின் அடையாளமாக ஹெலிகாப்டர்கள் தேசியக்கொடியை பறக்கவிட்டபடி மலர்களைத் தூவிச் சென்றன.
    • குடியரசு தினத்தை ஒட்டி இந்திய ராணுவத்தின் பிரசாந்த் வகை இலகு ரக ஹெலிகாப்டர்கள் வானில் அணிவகுத்தன.

    நாட்டின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு கடமைப்பாதையில் 21 குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

    குடியரசு தினத்தை ஒட்டி டெல்லி கடமைப்பாதையில் தேசியக் கொடி ஏற்றப்பட்டதை அடுத்து அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    இங்கு, மும்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றார்.

    அணிவகுப்பு தொடக்கத்தின் அடையாளமாக ஹெலிகாப்டர்கள் தேசியக்கொடியை பறக்கவிட்டபடி மலர்களைத் தூவிச் சென்றன.

    குடியரசு தினத்தை ஒட்டி இந்திய ராணுவத்தின் பிரசாந்த் வகை இலகு ரக ஹெலிகாப்டர்கள் வானில் அணிவகுத்தன.

    ஐரோப்பிய யூனியன் தலைவரகள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றதால் ஐரோப்பிய யூனியன் கொடிகள் கட்டப்பட்ட வாகனங்கள் அணிவகுத்தன.

    குடியரசு தினவிழாவில் ஆளில்லா விமானங்கள், டிரோன்கள், ராணுவ டாங்கிகள், டி19 பீஷ்மா ரக பீரங்கிகள் உள்ளிட்டவை அணிவகுத்தன.

    குடியரசு தினவிழாவில் சூர்யஸ்திர ராக்கெட் லாஞ்சர், ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு, அர்ஜூன் வகை பீரங்கிகள் அணிவகுத்தன.

    • கடமைப்பாதையில் 21 குண்டுகள் முழங்க தேசியக்கொடியை ஏற்றினார்.
    • தேசியக்கொடிக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்பட்டன.

    நாட்டின் 77-வது குடியரசு தினத்தையொட்டி டெல்லி கடமைப்பாதையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மூவர்ண கொடியை ஏற்றினார்.

    கடமைப்பாதையில் 21 குண்டுகள் முழங்க குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    அப்போது, டெல்லி கடமைப்பாதையில் பட்டொளி வீசிப்பறக்கும் தேசியக்கொடிக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்பட்டன.


    • நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவாக மரியாதை.
    • பிரதமர் மோடி, அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

    டெல்லியில் 77-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இதை முன்னிட்டு நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

    போர் நினைவுச்சின்னத்தில் மலர்வளையம் வைத்து பிரதமர் மோடி, அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

    • குடிமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த குடியரசு தின வாழ்த்துகள்.
    • வளர்ந்த இந்தியாவிற்கான உறுதிப்பாடு இன்னும் வலுவாக வளரட்டும்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் 77-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பா அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    எனது சக குடிமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த குடியரசு தின வாழ்த்துகள். இந்தியாவின் மரியாதை, பெருமை மற்றும் மகிமையின் அடையாளமான இந்த மகத்தான தேசிய விழா, உங்கள் வாழ்வில் புதிய ஆற்றலையும், உற்சாகத்தையும் புகுத்தட்டும். வளர்ந்த இந்தியாவிற்கான உறுதிப்பாடு இன்னும் வலுவாக வளரட்டும். இதுவே எனது இதயப்பூர்வமான விருப்பம் என்று கூறியுள்ளார். 

    • 130-வது மன் கி பாத் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது.
    • மலேசியாவில் வசிக்கும் இந்திய சமூகத்தினர் மெச்சத்தக்க பணிகள் மேற்கொள்கின்றனர்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலி மூலம் மன் கி பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சி வழியே நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 130-வது மன் கி பாத் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது.

    அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

    மலேசியாவில் இந்திய மொழிகள் மற்றும் கலாசாரம் பாதுகாக்கப்படுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் இந்திய சமூகத்தினரை பாராட்டினார்.

    குஜராத் மாநிலம் சந்தாங்கி கிராமத்தில் உள்ள பாரம்பரியம் மிகவும் தனித்துவமானது. அங்கு வசிப்பவர்கள், குறிப்பாக முதியோர் தங்கள் வீடுகளில் சமைப்பது இல்லை. அதற்கு காரணம், அந்த கிராமத்தில் பிரமாண்ட சமுதாய சமையல் கூடம் செயல்படுவதுதான்.

    இந்த முன்முயற்சி, மக்களை இணைப்பது மட்டுமின்றி, குடும்ப உணர்வை வளர்க்கிறது. இந்தியாவின் குடும்ப முறை, அந்த பாரம்பரியத்தின் ஓர் அங்கம் ஆகும்.

    பல நாடுகளில் இந்தக் குடும்ப முறை மதிக்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன், என் சகோதரர், ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயது அல் நஹ்யான் இந்தியா வந்தார். அப்போது, 2026-ம் ஆண்டை குடும்ப ஆண்டாக அமீரகம் கொண்டாடி வருகிறது. அதன் நோக்கம், மக்களிடையே இணக்கத்தையும், சமுதாய உணர்வையும் வலுப்படுத்துவது ஆகும். இது உண்மையிலேயே பாராட்டத்தக்க முயற்சி என தெரிவித்தார்.

    • நடப்பு ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • இந்த ஆண்டுக்கான பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.

    புதுடெல்லி:

    நடப்பு ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டுக்கான பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதில் 5 பேருக்கு பத்ம விபூஷண், 13 பேருக்கு பத்ம பூஷண், 113 பேருக்கு பத்ம ஸ்ரீ என மொத்தம் 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதில் 19 பேர் பெண்கள், 6 பேர் வெளிநாட்டினர் அல்லது வெளிநாடுவாழ் இந்தியர்கள், 16 பேருக்கு மறைவுக்கு பிந்தைய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், பத்ம விருது பெற்றவர்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டுக்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்புக்காக பத்ம விருது பெறும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தங்களது பண்பு, அர்ப்பணிப்பு, சேவை ஆகியவை நமது சமூகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துகின்றன. இந்த கவுரவம் வரும் தலைமுறையினரைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் அர்ப்பணிப்பு மற்றும் மேன்மையின் உணர்வைப் பிரதிபலிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

    • இந்தியாவின் 77-வது குடியரசு தினம் நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது.
    • நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் 77-வது குடியரசு தினம் நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது.

    இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது:

    இந்திய மக்களுக்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.

    கடந்த ஆண்டு நவம்பர் 7-ம் தேதி முதல் நமது தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' இயற்றப்பட்ட 150-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இந்தியத் தாயின் தெய்வீக வடிவத்திற்கான ஒரு பாடலாக திகழும் 'வந்தே மாதரம்' பாடல், ஒவ்வொரு இந்தியரின் இதயங்களிலும் தேசபக்தியை விதைக்கிறது. தமிழ் கவிஞர் பாரதி, வந்தே மாதரம் பாடலுக்கு வலிமை சேர்த்துள்ளார்.

    அரசியலமைப்பு சட்டம் என்பது இந்தியாவைப் போன்ற மிகப்பெரிய குடியரசு நாட்டின் அடிப்படை ஆவணமாகும்.

    விளையாட்டுத் துறையில் மகளிர் சிறப்பாக செயல்படுகின்றனர். கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் மகள்கள் ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையையும், பின்னர் பார்வையற்ற மகளிர் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பையையும் வென்று வரலாறு படைத்தனர்.

    நமது இந்திய சகோதர, சகோதரிகள் கடின உழைப்பால் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புகிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்கு பெண்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

    நமது நாட்டை சுத்தமாக வைத்திருப்பதில் தூய்மை பணியாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். உலகத்தரம் வாய்ந்த இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் நமது நாட்டின் வளர்ச்சியை வடிவமைக்கின்றனர். நமது முப்படைகளின் துணிச்சலான வீரர்கள் தாய்நாட்டைப் பாதுகாக்க எப்போதும் விழிப்புடன் இருக்கிறார்கள்.

    நமது வாக்காளர்கள் தங்கள் அரசியல் விழிப்புணர்வை வெளிப்படுத்துகிறார்கள். வாக்களிப்பதில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருவது நமது குடியரசின் சக்திவாய்ந்த பரிமாணமாகும்.

    'பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ்' இயக்கம் பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவித்துள்ளது. பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனாவின் கீழ் இதுவரை 570 மில்லியனுக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 56 சதவீதம் பெண்களுடையது என தெரிவித்தார்.

    • தமிழ்ப் பாடம் கற்பிப்பதுடன் மற்ற பாடங்களும் தமிழிலேயே கற்பிக்கப்படுகின்றன.
    • கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு சங்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    இந்தியப் பண்டிகைகள் உலகின் ஒவ்வொரு மூலையிலும் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படுகின்றன.

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நமது சகோதர சகோதரிகள், அனைத்து வகையான கலாச்சாரத்தையும் பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

    மலேசியாவில் உள்ள நமது இந்தியச் சமூகமும் இது தொடர்பாக பாராட்டத்தக்க பணியைச் செய்து வருகிறது. மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. தமிழ்ப் பாடம் கற்பிப்பதுடன் மற்ற பாடங்களும் தமிழிலேயே கற்பிக்கப்படுகின்றன.

    மேலும், தெலுங்கு, பஞ்சாபி மொழிகளுடன் மற்ற இந்திய மொழிகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு சங்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    அதன் பெயர் 'மலேசியா இந்திய பாரம்பரிய சங்கம்'. கடந்த மாதம், மலேசியாவில் 'லால் பாட் சேலை'அணிவகுப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தச் சேலைக்கு நமது வங்காளக் கலாச்சாரத்துடன் ஒரு சிறப்புத் தொடர்பு உண்டு.

    இந்த நிகழ்வு, இந்தச் சேலையை அதிக எண்ணிக்கையிலான மக்கள் அணிந்ததற்காக ஒரு சாதனையை நிகழ்த்தியது, இது மலேசிய சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியப் பொருள் என்றாலே 'உயர்தரம்' என்ற அர்த்தம் ஏற்பட வேண்டும்.
    • நாம் உற்பத்தி செய்யும் எந்தப்பொருளாக இருந்தாலும், அதன் தரத்தை மேம்படுத்துவோம் என்று உறுதி ஏற்போம்.

    பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ரேடியோ மூலம் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

    தனது 130-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    தேசிய வாக்காளர் தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஒரு இளைஞர் முதல் முறையாக வாக்காளராகும்போது நாம் பிறந்த நாளை விரும்பி கொண்டாடுவது போலவே அவருக்கு வாழ்த்து தெரிவித்து இனிப்புகள் வழங்க வேண்டும். இது வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, வாக்காளராக இருப்பது எவ்வளவு முக்கியம் என்ற உணர்வை ஏற்படுத்தும்.

    செயற்கை நுண்ணறிவு, விண்வெளி, அணுசக்தி, போக்குவரத்து, பசுமை ஹைட்ரஜன், உயிரிதொழில்நுட்பம் என நீங்கள் எதை குறிப்பிட்டாலும், அந்தத் துறையில் ஏதேனும் ஒரு இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனம் செயல்படுவதை காண்பீர்கள்.

    ஏதேனும் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்துடன் தொடர்புடைய அல்லது சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்க விரும்பும் இளம் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நாம் உற்பத்தி செய்யும் எந்தப்பொருளாக இருந்தாலும், அதன் தரத்தை மேம்படுத்துவோம் என்று உறுதி ஏற்போம். ஜவுளி, தொழில் நுட்பம், மின்னணு வியல் அல்லது பேக்கேஜிங் என எதுவாக இருந்தாலும், ஒரு இந்தியப் பொருள் என்றாலே 'உயர்தரம்' என்ற அர்த்தம் ஏற்பட வேண்டும். சிறப்பையே நமது அளவு கோலாக கொள்வோம்.

    இந்தியப் பொருட்கள் உயர்தரத்திற்கு இணையாக இருக்க வேண்டும். இன்று இந்தியா உலகின் 3-வது பெரிய ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பாக மாறியுள்ளது. இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வழக்கத்திற்கு மாறானவை.

    10 ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்ய முடியாத துறைகளில் அவை செயல்படுகின்றன. வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

    இந்தியாவில் உள்ள குடும்ப அமைப்பு நமது பாரம்பரியத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இது உலகின் பல நாடுகளில் மிகுந்த ஆர்வத்துடன் பார்க்கப்படுகிறது.

    பல நாடுகளில், இத்தகைய குடும்ப அமைப்புகள் மிகவும் மதிக்கப்படுகின்றன. சில நாட்களுக்கு முன்பு, எனது சகோதரரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரு மான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். ஐக்கிய அரபு அமீரகம் 2026-ம் ஆண்டை 'குடும்ப ஆண்டு' ஆக கொண்டாடுகிறது என்று அவர் என்னிடம் தெரிவித்தார்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • இந்தியாவின் குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது.
    • இன்று ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் குடியரசு தினம் நாளை (26-ம் தேதி) கொண்டாடப்பட உள்ளது.

    இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இந்த உரை ஆகாசவாணியில் நாடு முழுவதும் மாலை 7 மணி முதல் ஒலிபரப்பப்படும். மேலும் தூர்தர்ஷனின் அனைத்துச் சேனல்களிலும் இந்தியில் ஒளிபரப்பப்பட்டு, தொடர்ந்து ஆங்கில பதிப்பு ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின், தூர்தர்ஷனின் பிராந்திய சேனல்களில் பிராந்திய மொழிகளில் ஜனாதிபதியின் உரை ஒளிபரப்பு செய்யப்படும்.

    • பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம்.
    • பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளில் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

    புதுடெல்லி:

    பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசின் சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.

    கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிவோருக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

    பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது.

    ×