என் மலர்
பீகார்
- மகாத்மா காந்தி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பிரதமரை பாராட்டிப் பேசினார்.
- பா.ஜ.க. உடன் கூட்டணி என்ற செய்தியை படித்தபோது வேதனை அடைந்தேன் என தெரிவித்தார்.பா.ஜ.க. உடன் கூட்டணி என்ற செய்தியை படித்தபோது வேதனை அடைந்தேன் என தெரிவித்தார்.
பாட்னா:
பீகாரில் மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், பீகாரில் மத்திய பல்கலைக்கழகம் அமைய மத்திய பாஜக அரசுதான் காரணம். முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு உதவவில்லை. 2014ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் (பிரதமர் மோடி பதவியேற்பு) பிறகு பணிகள் நடைபெற்றன என தெரிவித்தார்.
இதற்கிடையே, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமரை பாராட்டி பேசியுள்ளதால், நிதிஷ் குமார் மீண்டும் பா.ஜ.க. கூட்டணிக்கு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் எனது உரை பற்றிய செய்திகளைப் படித்தபோது நான் வேதனை அடைந்தேன். அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் கயாவில் மட்டும் ஒரு மத்திய பல்கலைக்கழகத்தை அமைக்க விரும்பியதை நான் அடிக்கோடிட்டுக் காட்ட விரும்பினேன். பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என தெரிவித்தார்.
- பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- பல்கலையில் பல்வேறு பிரிவுகளில் முதல் தரவரிசையில் உள்ள பெண் மாணவர்களில் 60 சதவீதம் பேர் உள்ளனர்.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு மகாத்மா காந்தி பகிர்ந்துகொண்ட சமூக சமத்துவம் மற்றும் ஒற்றுமை பற்றிய தொலைநோக்கு பார்வை, நவீன மற்றும் வளர்ந்த தேசமாக மாறுவதற்கான நாட்டின் பயணத்திற்கு இன்னும் பொருத்தமானது என்று ஜனாதிபதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள மோதிஹாரியில் உள்ள மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
இந்த விழாவில், ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் தனது உரையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியதாவது:-
"சம்பாரன் சத்தியாகிரகத்தின்" போது, மக்கள் சாதித் தடைகளை துறந்தனர். குறிப்பாக உணவு தொடர்பாக, அவர்கள் ஒன்றாகச் சமைத்து ஒன்றாகச் சாப்பிட்டனர். 106 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி தூண்டிய இந்த சமூக சமத்துவமும் ஒற்றுமையும், வலிமைமிக்க பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை தலைகுனிய வைத்தது.
சமூக சமத்துவம் மற்றும் ஒற்றுமை பற்றிய மகாத்மா காந்தியின் பார்வை பொருத்தமானதாகவே உள்ளது. நவீன காலத்தில் அது ஒரு வளர்ந்த தேசமாக மாறுவதற்கான இலக்கை அடைய அடித்தளமாக செயல்பட வேண்டும்.
இந்திய-நேபாள எல்லையில் டெராய் பகுதியில் வசிக்கும் தாரு பழங்குடியினரின் ஆய்வுகளை ஊக்குவிப்பதற்காக மத்திய பல்கலைக்கழகத்திற்கு பாராட்டுகள்
பேரரசர் அசோகரின் பல தூண் ஆணைகளின் தாயகமாக விளங்கும். டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனுக்கு வரும் அனைத்து பார்வையாளர்களும் ராம்பூர்வா காளை தலைநகரைப் பார்க்கிறார்கள், இது மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் காணப்பட்டது மற்றும் தர்பார் மண்டபத்தின் நுழைவாயிலில் நிறுவப்பட்டுள்ளது.
இந்தப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பிரிவுகளில் முதல் தரவரிசையில் உள்ள பெண் மாணவர்களில் 60 சதவீதம் பேர் உள்ளனர் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். பெண்கள் தன்னம்பிக்கையுடன் படிப்பில் சிறந்து விளங்குவதைக் கண்டால் நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலத்தை நான் காண்கிறேன். காந்தி பெண் கல்வியில் பெரும் வாக்களிப்பவர்."
- பீகார் ரெயில் விபத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழப்பு.
- ரெயில் விபத்து காரணமாக பல்வேறு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரெயிலின் 6 பெட்டி பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரெயில் நிலையம் அருகே நேற்று இரவு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்துக்கான காரணம் பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ரெயில் விபத்து ஏற்பட தண்டவாளத்தில் இருந்த குறைபாடு தான் காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுதவிர ரெயில் அதிவேகமாக வந்து கொண்டிருந்த சமயத்தில், திடீரென ரெயிலை நிறுத்துவதற்கு பிரேக்-ஐ அழுத்தியதால், ரெயில் தடம்புரண்டு விபத்தில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.
"நான் எழுதும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்தேன், அப்போது திடீரென ஓட்டுனர் பிரேக்-ஐ அழுத்தியதாக உணர்ந்தேன். பிறகு, ரெயிலில் அதிர்வுகள் ஏற்பட்டு பின் மயக்கமுற்றேன். இதைத் தொடர்ந்து கிராம மக்கள் என் முகத்தின் மீது தண்ணீரை தெளித்தனர்," என்று ரெயிலில் பயணித்த கார்டு விஜய்குமார் தெரிவித்தார்.
- விபத்து ஏற்பட்டு 12 மணி நேரத்திற்கும் மேல் ஆன நிலையில், பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் தனது வருத்தத்தை அறிக்கையின் மூலம் வெளியிட்டுள்ளார்.
- விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு.
டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரெயிலின் 6 பெட்டி பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரெயில் நிலையம் அருகே நேற்று இரவு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 4 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்துள்ளனர். மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
ரெயில் விபத்து குறித்து அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.
விபத்து ஏற்பட்டு 12 மணி நேரத்திற்கும் மேல் ஆன நிலையில், பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் தனது வருத்தத்தை அறிக்கையின் மூலம் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து நிதிஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பீகாரில் ரெயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த துயரச் சம்பவத்தால் மனம் உடைந்து வேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துக்க நேரத்தில் உறவுகளை இழந்து வாடும் குடும்பத்திற்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரெயில் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
- ரெயில் விபத்துக்குள்ளான இடத்தை மத்திய மந்திரி அஸ்வினி சவுபே நேரில் சென்று ஆய்வுசெய்தார்.
பாட்னா:
டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரெயிலின் 6 பெட்டி பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரெயில் நிலையம் அருகே நேற்று இரவு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 4 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்துள்ளனர். மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரெயில் விபத்து குறித்து அறிந்த ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது என எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
இதற்கிடையே, ரெயில் விபத்துக்குள்ளான இடத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி சவுபே நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்நிலையில், ரெயில் விபத்து எதிரொலியாக, அந்த வழியாக செல்லும் பாட்னா-பூரி எக்ஸ்பிரஸ் உள்பட 10 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், தில்பர்க் எக்ஸ்பிரஸ், பரவ்னி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 21 ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பீகாரில் விரைவு ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டன.
- விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.
பாட்னா:
டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரெயிலின் 6 பெட்டி பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரெயில் நிலையம் அருகே நேற்று இரவு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 4 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்துள்ளனர். மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பீகார் ரெயில் விபத்து குறித்து ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் வலைதளத்தில், ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். பக்சர் மாவட்டத்தில் ரெயில் தடம் புரண்ட இடத்தில் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகள் முடிந்தபின் தண்டவாளம் சீரமைக்கும் பணி தொடங்கும் என பதிவிட்டுள்ளார்.
- விபத்து குறித்து தகவல் அறிய ரெயில்வே தரப்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- மருத்துவ குழுவினர் மற்றும் அதிகாரிகளுடன் விபத்து நிவாரண வாகனம் சம்பவ இடத்திற்கு புறப்பட்டுள்ளது.
பாட்னா:
டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரெயிலின் (12506) 3 பெட்டிகள் பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரெயில் நிலையம் அருகே இரவு சுமார் 9.35 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியானார்கள்.
இந்த விபத்தில் பல பயணிகள் காயம் அடைந்துள்ளனர். மேலும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். காயம் அடைந்த பயணிகளை மீட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவ குழுவினர் மற்றும் அதிகாரிகளுடன் விபத்து நிவாரண வாகனம் சம்பவ இடத்திற்கு புறப்பட்டுள்ளதாக கிழக்கு மத்திய ரெயில்வே மண்டலம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து விபத்து குறித்து தகவல் அறிய ரெயில்வே தரப்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி
PNBE helpline:- 97714 49971
DNR helpline:- 89056 97493
COMM CNL:- 77590 70004
ARA helpline:- 83061 82542
ஆகிய எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
- சாதிகளில், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த யாதவர்கள் அதிக அளவில் உள்ளனர்.
- சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டது, வரலாற்று சிறப்புமிக்கது என்று முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
பாட்னா:
நாடுதழுவிய வகையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமாறு பிரதமர் மோடியிடம் பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் கோரிக்கை விடுத்து வந்தார். அவர் பா.ஜனதா கூட்டணியில் இருந்தபோது, இந்த கோரிக்கையை எழுப்பினார்.
ஆனால், எஸ்.சி., எஸ்.டி. ஆகியோரைத் தவிர, இதர சாதிகளின் கணக்கெடுப்பை நடத்துவது இல்லை என்று மத்திய அரசு கூறிவிட்டது.
இதையடுத்து, பீகார் மாநிலத்தில், தாங்களே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நிதிஷ்குமார் அரசு கடந்த ஆண்டு முடிவு செய்தது.
பீகார் மாநில சட்டசபையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானத்தை அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்தன. சட்ட மேலவையிலும் தீர்மானம் நிறைவேறியது. இப்பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதலில், பாட்னா ஐகோர்ட்டு தடை விதித்தபோதிலும், பின்னர் தடையை நீக்கியது.
ஒவ்வொரு சாதியினரும் எவ்வளவு பேர் இருக்கின்றனர் என்பதை அடிப்படையாக வைத்து, அவர்களுக்கு உரிய இடஒதுக்கீட்டை வழங்குவதே இதன் நோக்கம்.
இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை பீகார் மாநில அரசு நேற்று வெளியிட்டது.
அதன்படி, மாநிலத்தின் மொத்த மக்கள்தொகை 13 கோடியே 7 லட்சம் ஆகும். அதில், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் (இ.பி.சி.) 4 கோடியே 70 லட்சத்து 80 ஆயிரத்து 514 பேர் உள்ளனர். இது மொத்த மக்கள்தொகையில் 36 சதவீதம் ஆகும்.
இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் (ஓ.பி.சி.) 3 கோடியே 54 லட்சத்து 63 ஆயிரத்து 936 பேர் உள்ளனர். இது மொத்த மக்கள்தொகையில் 27.13 சதவீதம் ஆகும்.
மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும், இதர பிற்படுத்தப்பட்டவர்களும் சேர்ந்து மொத்த மக்கள்தொகையில் 63 சதவீதம் உள்ளனர்.
எஸ்.சி. பிரிவினர் 2 கோடியே 56 லட்சத்து 89 ஆயிரத்து 820 பேர் உள்ளனர். இது மொத்த மக்கள்தொகையில் 19.65 சதவீதம். எஸ்.டி. பிரிவினர் 21 லட்சத்து 99 ஆயிரத்து 361 பேர் உள்ளனர். இது மொத்த மக்கள்தொகையில் 1.68 சதவீதம் ஆகும்.
இடஒதுக்கீடு இல்லாத பிரிவினர் 2 கோடியே 2 லட்சத்து 91 ஆயிரத்து 679 பேர் உள்ளனர். இது மொத்த மக்கள்தொகையில் 15.52 சதவீதம் ஆகும்.
மதரீதியாக இந்துக்கள் 81.99 சதவீதமும், முஸ்லிம்கள் 17.70 சதவீதமும் உள்ளனர். கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ஜெயின் மதத்தினர் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அனைவரும் இணைந்து ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளனர்.
சாதிகளில், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த யாதவர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் மொத்த மக்கள்தொகையில் 14.27 சதவீதமாக உள்ளனர்.
சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டது, வரலாற்று சிறப்புமிக்கது என்று முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் தொடர்பாக விரைவில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தி விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ், மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.
- ரூ.1500 கடன் தொகையை வட்டியுடன் முழுவதும் செலுத்தி விட்டார்
- காவல் அதிகாரிகளின் விசாரணையால் ஆத்திரமடைந்தார் பிரமோத்
பீகாரின் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ளது குஸ்ருபூர் நகரம். இங்குள்ள மோஷிம்பூர் கிராமத்தில் வசிக்கும் ஒரு தலித் பெண்ணிற்கு பண நெருக்கடி ஏற்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு பண தட்டுப்பாட்டால் அதே ஊரில் வசிக்கும் பிரமோத் சிங் என்பவரிடம் ரூ.1500 கடனாக பெற்றார். இதற்கான வட்டி தொகையுடன் கடனை முழுவதுமாக அவர் திருப்பி செலுத்தி விட்டார். ஆனால், பிரமோத் மற்றும் அவரது மகன் அன்சு சிங் இருவரும் அந்த தலித் பெண் மேலும் வட்டி செலுத்த வேண்டும் என கூறி வற்புறுத்தி வந்தனர். ஆனால், அப்பெண்மணி இதற்கு மறுத்து வந்தார்.
ஒரு கட்டத்தில் பிரமோத் சிங் அப்பெண்ணை பணத்தை தரா விட்டால் நிர்வாணமாக்கி ஊரில் நடக்க விடுவதாக மிரட்டியுள்ளார். இதனையடுத்து அப்பெண்மணி குஸ்ருபூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல் அதிகாரிகள் பிரமோத்தை விசாரணைக்கு வருமாறு அழைத்தனர். இதனையடுத்து, நேற்று முன் தினம் பிரமோத் காவல் நிலையம் சென்றார்.
இதில் ஆத்திரமடைந்த பிரமோத் அன்றிரவு தனது நண்பர்கள் சிலருடன் அப்பெண்மணியின் வீட்டிற்கு சென்று அவரை கடத்தி, தனது வீட்டிற்கு பலவந்தமாக தூக்கி வந்தார். பிறகு அவரை தாக்கி, ஆடைகளை அவிழ்த்து அவமானப்படுத்தினார். இதிலும் ஆத்திரம் தீராத பிரமோத், தனது மகனை அழைத்து அப்பெண்ணின் வாயில் சிறுநீர் கழிக்க வைத்தார்.
அங்கிருந்து எப்படியோ தப்பித்த அப்பெண் தனது உறவினர்களிடன் நடந்ததை கூறினார். இதனையடுத்து அவர்கள் காவல்நிலையத்தில் இது குறித்து புகாரளித்தனர்.
அந்த பெண்மணியை உடனடியாக மருத்துவமனையில் காவல்துறையினர் சேர்த்தனர்.
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை தேடும் வேட்டை நடைபெறுவதாகவும் காவல்நிலைய அதிகாரி சியாராம் யாதவ் கூறினார்.
- போலீஸ்காரர் வாகன ஓட்டியிடம் லஞ்சம் வாங்கியதாகவும், இதனை சக போலீஸ்காரர் தட்டிக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
- 2 போலீஸ்காரர்களும் ஒருவரையொருவர் கைகளாலும், கம்பாலும் தாக்கிக் கொண்டனர்.
பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள சொஹ்சராய் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முக்கிய சாலையில் போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு போலீஸ்காரர் வாகன ஓட்டியிடம் லஞ்சம் வாங்கியதாகவும், இதனை சக போலீஸ்காரர் தட்டிக் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.
2 போலீஸ்காரர்களும் ஒருவரையொருவர் கைகளாலும், கம்பாலும் தாக்கிக் கொண்டனர். பட்டப்பகலில் போலீஸ்காரர்கள் முக்கிய சாலையில் சண்டை போட்டுக் கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சிலர் இந்த சண்டையை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். வீடியோ வைரலானதைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சாலையில் சண்டை போட்ட 2 போலீஸ்காரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நாடு முழுவதும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என பா.ஜ.க. எதிர்பார்க்கிறது.
- முன்கூட்டியே தேர்தல் வந்தால் அதை எதிர்கொள்வதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றார்.
பாட்னா:
பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாடு முழுவதும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என பா.ஜ.க. எதிர்பார்க்கிறது. அதற்காகத்தான் நாங்களும் காத்திருக்கிறோம்.
எவ்வளவு சீக்கிரம் தேர்தலை நடத்துகிறீர்களோ, அவ்வளவு நல்லது. தேர்தலுக்கு நாங்கள் எப்பொழுதும் தயாராக இருக்கிறோம். முன்கூட்டியே பாராளுமன்றத் தேர்தல் நடந்தால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். மக்களுக்காக உழைத்து வருகிறோம், தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்வோம்.
சாலைகள், பாலங்கள், மின்சாரம், குடிநீர் வசதிகளை அமைப்பது முதல் பல உள்கட்டமைப்பு திட்டங்கள் வரை மாநிலத்தில் பல பணிகளை செய்துள்ளோம். வாக்காளர்களே இறுதி முடிவை எடுப்பார்கள் என தெரிவித்தார்.
- ரூ.12 லட்சம் கோடிக்கு ஊழல் புரிந்தவர்கள் அவர்கள்
- ரெயில்வே மந்திரியாக இருந்த போது லல்லு பிரசாத் பல கோடிக்கு ஊழல் செய்தார்
இந்தியாவின் 18-வது மக்களவைக்கான தேர்தல் அடுத்த வருடம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி தற்போதைய ஆளும் பா.ஜ.க.வை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும், பா.ஜ.க. கூட்டணியை எதிர்க்க "இந்தியா கூட்டணி" எனும் பெயரில் 25க்கும் மேற்பட்ட மாநில கட்சிகளை உள்ளடக்கிய எதிர்கட்சி கூட்டணியும் இப்போதிலிருந்தே மும்முரமாக தங்களை தயார்படுத்தி வருகின்றன.
பா.ஜ.க.வின் சார்பில் "லோக் சபா பிரவஸ்" எனும் திட்டத்தின் கீழ் தற்போது நாடு முழுவதும் ஆங்காங்கே அதன் சாதனை விளக்க பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆளும் பா.ஜ.க.வின் உள்துறை அமைச்சரான அமித் ஷா, பீகார் மாநில மதுபானி மாவட்டத்தில் லோக் சபா பிரவஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக ஜஞ்சர்பூர் நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது இந்தியா கூட்டணியை எதிர்த்து அமித் ஷா பேசியதாவது:
"எதிர் கட்சியினர் ஒரு புது பெயரில் பழைய கூட்டணியையே உருவாக்கியுள்ளனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி எனும் பெயரில் ஒரு கூட்டணி அமைத்து முன்பு ஆட்சியில் இருந்த போது ரூ.12 லட்சம் கோடி அளவிற்கு ஊழல் செய்தனர்."
"அப்போது ரெயில்வே மந்திரியாக இருந்த பீகாரின் லல்லு பிரசாத் யாதவ் பல கோடிக்கு ஊழல் செய்தார். அதே பெயரில் மீண்டும் அவர்கள் ஓட்டு கேட்டு ஆட்சிக்கு வர முடியாது என உணர்ந்து இந்தியா கூட்டணி என புது பெயரிட்டு உலா வருகிறார்கள். இக்கூட்டணியை சேர்ந்தவர்கள் இந்துக்களின் புனித ராம்சரிதமானசை அவமானப்படுத்துகிறார்கள்."
"ரக்ஷாபந்தன் மற்றும் ஜன்மாஷ்டமி ஆகிய இந்துக்களின் பண்டிகை தினங்களுக்கு விடுமுறையை ரத்து செய்கிறார்கள். இந்துக்களின் சனாதன தர்மத்தை வியாதிகளோடு ஒப்பிடுகிறார்கள். ஆனால் வேறு சிலரோடு மற்றும் சமாதான அணுகுமுறையை கடைபிடிக்கிறார்கள்," என்று கூறினார்.






