search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணியா? - பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் விளக்கம்
    X

    பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணியா? - பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் விளக்கம்

    • மகாத்மா காந்தி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பிரதமரை பாராட்டிப் பேசினார்.
    • பா.ஜ.க. உடன் கூட்டணி என்ற செய்தியை படித்தபோது வேதனை அடைந்தேன் என தெரிவித்தார்.பா.ஜ.க. உடன் கூட்டணி என்ற செய்தியை படித்தபோது வேதனை அடைந்தேன் என தெரிவித்தார்.

    பாட்னா:

    பீகாரில் மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், பீகாரில் மத்திய பல்கலைக்கழகம் அமைய மத்திய பாஜக அரசுதான் காரணம். முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு உதவவில்லை. 2014ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் (பிரதமர் மோடி பதவியேற்பு) பிறகு பணிகள் நடைபெற்றன என தெரிவித்தார்.

    இதற்கிடையே, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமரை பாராட்டி பேசியுள்ளதால், நிதிஷ் குமார் மீண்டும் பா.ஜ.க. கூட்டணிக்கு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்தது.

    இந்நிலையில், பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் எனது உரை பற்றிய செய்திகளைப் படித்தபோது நான் வேதனை அடைந்தேன். அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் கயாவில் மட்டும் ஒரு மத்திய பல்கலைக்கழகத்தை அமைக்க விரும்பியதை நான் அடிக்கோடிட்டுக் காட்ட விரும்பினேன். பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என தெரிவித்தார்.

    Next Story
    ×