என் மலர்
நீங்கள் தேடியது "bihar train accident"
- விபத்து ஏற்பட்டு 12 மணி நேரத்திற்கும் மேல் ஆன நிலையில், பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் தனது வருத்தத்தை அறிக்கையின் மூலம் வெளியிட்டுள்ளார்.
- விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு.
டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரெயிலின் 6 பெட்டி பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரெயில் நிலையம் அருகே நேற்று இரவு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 4 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்துள்ளனர். மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
ரெயில் விபத்து குறித்து அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.
விபத்து ஏற்பட்டு 12 மணி நேரத்திற்கும் மேல் ஆன நிலையில், பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் தனது வருத்தத்தை அறிக்கையின் மூலம் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து நிதிஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பீகாரில் ரெயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த துயரச் சம்பவத்தால் மனம் உடைந்து வேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துக்க நேரத்தில் உறவுகளை இழந்து வாடும் குடும்பத்திற்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






