என் மலர்
ஆந்திர பிரதேசம்
- புணர்விகாவிற்கு அவரது தாய் மஞ்சள் நீர் ஊற்றி வாயில் குங்குமத்தை திணித்து பூஜை அறைக்கு அழைத்துச் சென்றார்.
- சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஆத்மகூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மகள் புணர்விகா (வயது 3). வேணுகோபால் பொக்லைன் எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார்.
வேணுகோபாலுக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் மந்திரவாதி ஒருவர் கூறியதின் பேரில் புணர்விகாவை நேற்று முன்தினம் இரவு நரபலி கொடுக்க முடிவு செய்தார்.
அதன்படி இரவு 11 மணி அளவில் புணர்விகாவிற்கு அவரது தாய் மஞ்சள் நீர் ஊற்றி வாயில் குங்குமத்தை திணித்து பூஜை அறைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் சிறுமியின் கை கால்களை கட்டி நரபலி கொடுக்க முயன்றனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த புணர்விகா கத்தி கூச்சலிட்டார். அவரது சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பெற்றோரிடம் இருந்து சிறுமியை மீட்டனர்.
வேணுகோபாலை அங்குள்ள கட்டிலில் கட்டி அறையில் போட்டு பூட்டினர். இதுகுறித்து அத்மகூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஆத்மகூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு புணர்விகா பரிதாபமாக இறந்தார்.
வாயில் குங்குமம் திணிக்கப்பட்டதால் அவர் மூச்சு திணறி இறந்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 300 பெரிய லட்டுக்களை விமானத்தில் எடுத்துச்செல்ல விமான நிலைய அதிகாரிகள் அனுமதி வழங்காததால் வேறு விமானத்தின் மூலம் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
- யாருடைய அனுமதியின் பேரில் 300 லட்டுகளை கொண்டு சென்றார். அந்த 300 லட்டுகளை யார் யாருக்கு கொடுத்தார்.
திருப்பதி:
திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மாரெட்டி கடந்த மாதம் 25-ந் தேதி டெல்லியில் உள்ள அதிகாரிகளை சந்திக்க சென்றார்.
அப்போது திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து ரூ.200 விலை உள்ள 300 கல்யாண உற்சவ பெரிய லட்டுகளை டெல்லிக்கு கொண்டு சென்று அதிகாரிகளுக்கு கொடுத்ததாகவும், தனது பதவியை காப்பாற்றிக்கொள்ள இவ்வாறு செய்ததாக சமூக வலைத்தளங்களில் பரவியது.
300 பெரிய லட்டுக்களை விமானத்தில் எடுத்துச்செல்ல விமான நிலைய அதிகாரிகள் அனுமதி வழங்காததால் வேறு விமானத்தின் மூலம் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
அதில் யாருடைய அனுமதியின் பேரில் 300 லட்டுகளை கொண்டு சென்றார். அந்த 300 லட்டுகளை யார் யாருக்கு கொடுத்தார். அதற்குண்டான பணத்தை யார் தேவஸ்தானத்திற்கு செலுத்துவது என்பன போன்ற கேள்விகளை கேட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு இருந்தது. ஆந்திரா முழுவதும் இந்த தகவல் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தேவஸ்தான செயல் அலுவலர் தர்மா ரெட்டி கூறுகையில்:-
ஆந்திர முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து வந்த தகவலின் பேரில் 30 கல்யாண உற்சவ லட்டுகளை மட்டுமே டெல்லிக்கு கொண்டு சென்று மரியாதை நிமித்தமாக பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கு கொடுத்ததாகவும், 300 லட்டுக்கள் கொண்டு செல்லவில்லை எனவும் பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாக தெரிவித்தார்.
இதுகுறித்து திருமலை 1 டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொய்யான தகவலை சமூக வலைதளங்களில் பரப்பியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இலவச தரிசனத்தில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
- தற்போது தரிசன டிக்கெட் கிடைக்காமல் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் தீர்ந்தது.
தற்போது தரிசன டிக்கெட் கிடைக்காமல் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இதனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருகின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் தரிசனம் செய்யாததால் தற்போது ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். இதற்கு முன்பு சென்னையில் இருந்து ஒரு நாளைக்கு 100 பக்தர்கள் வரை தரிசனத்திற்கு சென்று வந்தனர். ஆனால் தற்போது தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதி சென்று வருகின்றனர்.
இதேபோல் அனைத்து ஊர்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்வதால் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நீண்ட தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
எனவே இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு டோக்கன்கள் வழங்க வேண்டும் என பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். தேவஸ்தான அதிகாரிகளும் இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு டோக்கன் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 76,425 பேர் தரிசனம் செய்தனர்.36,053 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.4.15 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.
- தனக்கு தெரிந்த மந்திரவாதியிடம் சென்று தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அங்கங்கே கடன் வாங்கி நிம்மதி இல்லாமல் இருப்பதாக கூறினார்.
- வீட்டிற்கு வந்த வேணுகோபால் மகளை நரபலி கொடுப்பது சம்பந்தமாக மனைவியிடம் ஆலோசனை நடத்தினார். அவரும் இதற்கு சம்மதம் தெரிவித்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். இவருக்கு மனைவி மற்றும் இரட்டை பிறவியில் பிறந்த 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் ஒரு பெண் குழந்தையின் பெயர் புணர்விகா (வயது 3). வேணுகோபால் பொக்லைன் எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். கொரோனா காலத்தில் வேணுகோபாலுக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டது.
இதனால் வேணுகோபால் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கினார். கடனை கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டு வற்புறுத்தினர். மேலும் தொடர்ந்து தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவித்து வந்தார்.
இந்த நிலையில் தனக்கு தெரிந்த மந்திரவாதியிடம் சென்று தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அங்கங்கே கடன் வாங்கி நிம்மதி இல்லாமல் இருப்பதாக கூறினார். அதற்கு மந்திரவாதி குழந்தைகள் யாரையாவது நரபலி கொடுத்தால் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடன் தொல்லை நீங்கிவிடும் என தெரிவித்தார். இதனை உண்மை என நம்பிய வேணுகோபால் தனது 2 மகள்களில் ஒருவரை நரபலி கொடுப்பது என முடிவு செய்தார்.
வீட்டிற்கு வந்த வேணுகோபால் மகளை நரபலி கொடுப்பது சம்பந்தமாக மனைவியிடம் ஆலோசனை நடத்தினார். அவரும் இதற்கு சம்மதம் தெரிவித்தார்.
இதையடுத்து நேற்று மாலை மகளை நரபலி கொடுப்பதற்கான பூஜை ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. இரவு 11 மணி அளவில் புணர்விகாவிற்கு அவரது தாய் மஞ்சள் நீர் ஊற்றி வாயில் குங்குமத்தை திணித்து பூஜை அறைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் சிறுமியின் கை கால்களை கட்டி நரபலி கொடுக்க முயன்றனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த புணர்விகா கத்தி கூச்சலிட்டார். அவரது சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு ஓடிவந்தனர். அவர்கள் அங்கு கண்ட காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பெற்றோர்களிடம் இருந்து சிறுமியை மீட்டனர். வேணுகோபாலை அங்குள்ள கட்டிலில் கட்டி அறையில் போட்டு பூட்டினர்.
இதுகுறித்து அத்மகூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப் இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஆத்மகூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் ரேணுகோபாலை கைது செய்து விசாரணை நடத்தியதில், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், தனது மகளை நரபலி கொடுத்தால் அனைத்து பிரச்சினைகளும் தீரும் என தனக்கு தெரிந்த மந்திரவாதி கூறியதால் மகளை நரபலி கொடுக்க முயன்றதாக தெரிவித்தார்.
மேலும் சிறுமியின் தாயாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தியானம் மற்றும் யோகாசனம் செய்வதற்காக தரிகொண்ட வெங்கமாம்பா தியான மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
- கோசாலையில் உள்ள பசுக்களுக்கு அதன் அருகிலேயே புல் மற்றும் தீவனம் வளர்க்கப்படும்.
திருப்பதி:
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோல் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தியானம் மற்றும் யோகாசனம் செய்வதற்காக தரிகொண்ட வெங்கமாம்பா தியான மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
தியான மண்டபத்தை தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி கூடுதல் செயல் அலுவலர்கள் சதாபார்கவி, வீரபிரம்மம், நரசிம்ம கிஷோர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆந்திரா, தெலுங்கானாவில் தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டு வருகிறது.
கோவில்கள் கட்டப்படும் இடங்களை சேர்த்து 24 இடங்களில் தேவஸ்தானம் சார்பில் கோசாலைகள் அமைக்கப்பட உள்ளது. கோசாலையில் உள்ள பசுக்களுக்கு அதன் அருகிலேயே புல் மற்றும் தீவனம் வளர்க்கப்படும். தற்போது திருப்பதி மற்றும் பலமனேர் கோசாலையில் உள்ள பசுக்கள் பாதுகாப்பாகவும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது.
இதேபோல் புதிதாக அமைக்கப்படும் கோசாலைகளும் சிறப்பாக பராமரிக்கப்படும் என்றார்.
- ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆட்சி நடைபெற்று வருகிறது.
- ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை பொதுமக்களிடம் வழங்கினர்.
திருப்பதி:
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் 150 பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி உள்ளது.
கடந்த 2019 சட்டமன்ற தேர்தலையொட்டி ஜெகன்மோகன் ரெட்டி, அவரது தாயார் விஜயம்மா, மனைவி பாரதி மற்றும் சகோதரி ஷர்மிளா ஆகியோர் ஆந்திரா முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தனர்.
அப்போது முதியோர் பென்ஷன் உயர்த்தி வழங்கப்படும். ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை பொதுமக்களிடம் வழங்கினர்.
இதையடுத்து நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஆளும் கட்சியாக இருந்த தெலுங்கு தேசம் கட்சி வெறும் 22 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலத்திற்கு சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் 100 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்ற தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வியூகம் வகுத்து உள்ளார்.
அதன்படி ஜெகன்மோகன் ரெட்டியின் பாணியை பின்பற்றி ஆந்திர மாநிலம் முழுவதும் என்.டி.ஆர் பூர்த்தி சந்திரன்னா பரோத்தா என்ற பெயரில் சுற்றுப் பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து ஜெகன்மோகன் ஆட்சியில் நடைபெற்ற பாலியல் பலாத்காரம், சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை பொது மக்களிடம் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளார்.
இன்று காலை ஐதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு விமானத்தில் வந்த சந்திரபாபு நாயுடு சோழவரம் வழியாக காரில் வந்து அனக்கா பள்ளியில் உள்ள திருமண மண்டபத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொது மக்களை சந்தித்து தனது சுற்றுப் பயணத்தை தொடங்கினார்.
நிகழ்ச்சியில் கட்சி தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து கலந்து கொண்டனர். அவர் திருப்பதி, சித்தூர் உள்பட முக்கிய பகுதிகள் வழியாக ஒரு ஆண்டு சுற்றுப் பயணம் செய்ய உள்ளார்.
இதே போல் ஜன சேனா கட்சி தலைவரும் பிரபல நடிகருமான பவன் கல்யாண் 6 மாதத்திற்கு ஆந்திரா முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
ஜெகன்மோகன் ஆட்சியை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நான் கருப்பாக இருக்கிறேன். உனக்கு பிறந்த குழந்தை வெள்ளையாக உள்ளதால் அந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை என மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்தார்.
- தந்தையே தனது குழந்தையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஆர்வக் கல்லு பகுதியை சேர்ந்தவர் ரங்கா முரளி. ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி வீணா. தம்பதிக்கு திருமணமாகி முனி வர்ஷா என்ற 6 மாத ஆண் குழந்தை இருந்தது.
தற்போது ரங்கா முரளி நன்னூர் பகுதியில் உள்ள பேரடைஸ் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
வீணாவிடம் நான் கருப்பாக இருக்கிறேன். உனக்கு பிறந்த குழந்தை வெள்ளையாக உள்ளதால் அந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை என மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது போதையில் வந்த ரங்கா முரளி வீணா இருவர் இடையே தகராறு ஏற்பட்டது. தனக்கு பிறக்காத குழந்தை உயிருடன் இருக்கக்கூடாது என கூறியபடி அருகே இருந்த பூட்டை எடுத்து குழந்தையின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் படுகாயம் அடைந்த குழந்தை ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.
மேலும் ஆத்திரம் அடங்காத ரங்கா முரளி மனைவியை கீழே தள்ளி அவரது கழுத்தில் காலால் மிதித்து கொலை செய்ய முயன்றார். சுதாரித்துக்கொண்ட வீணா கணவரை தள்ளிவிட்டு வீட்டிலிருந்து தப்பி வெளியே ஓடினார். சிறிது நேரம் கழித்து மீண்டும் வீட்டிற்கு சென்ற வீணா தனது குழந்தை ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு கதறி அழுதார். வீணாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டில் இருந்த ரங்கா முரளியை பிடித்து கர்னூல் 4-வது டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தந்தையே தனது குழந்தையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- இந்திய பந்து வீச்சாளர் சஹல் 4 ஓவரில் 20 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் முதலில் ஆடிய இந்தியா முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்தது.
விசாகப்பட்டினம்:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. ருத்ராஜ் கெய்க்வாட் 57 ரன்னும், இஷான் கிஷன் 54 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடி 31 ரன் எடுத்தார்.
இதையடுத்து, 180 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. இந்திய பவுலர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. கேப்டன் பவுமா 8 ரன், ஹென்ரிக்ஸ் 23 ரன், பிரிடோரியஸ் 20 ரன்னிலும் அவுட்டாகினர்.
வான் டெர் டுசன் ஒரு ரன்னில் வெளியேறினார். கிளாசன் 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 141 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டும், சஹல் 3 விக்கெட்டும், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் கெய்க்வாட், இஷான் கிஷன் அரை சதமடித்தனர்.
- இந்தியா பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்தது.
விசாகப்பட்டினம்:
தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
முதல் 2 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பத்தில் இந்தியா அதிரடியில் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ருத்ராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.
கெய்க்வாட் 30 பந்தில் அரை சதமடித்தார். அவர் 35 பந்தில் 2 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 57 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்தார்.
அடுத்து இறங்கிய ஷ்ரேயஸ் அய்யர் 14 ரன்னில் அவுட்டானார்.
கெய்க்வாடை தொடர்ந்து இஷான் கிஷன் அரை சதமடித்தார். அவர் 35 பந்தில் 2 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 54 ரன்னில் அவுட்டானார்.
ரிஷப் பண்ட்6 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 6 ரன்னிலும் வெளியேறினர்.
இறுதியில், இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை எடுத்துள்ளது. ஹர்திக் பாண்ட்யா 31 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.
இதையடுத்து, 180 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்குகிறது.
- சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய கட்சியை பலப்படுத்த பல்வேறு வியூகங்களை வகுத்து களமிறங்க நடிகர் பவன் கல்யாண் தயாராகி உள்ளார்.
- நடிகர் பவன் கல்யாண் விஜயதசமி முதல் 6 மாதங்களுக்கு ஆந்திரா முழுவதும் தீவிர சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வர உள்ளது.
அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கட்சியை பலப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆந்திராவில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 175 இடங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 150 இடங்களை பிடித்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
தெலுங்கு தேசம் கட்சிக்கு 25 இடங்களும் நடிகர் பவன் கல்யாணி ஜனசேனா கட்சிக்கு 1 இடமும் கிடைத்தது. பவன் கல்யாண் 2 இடங்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சியில் இருந்த தலா ஒரு எம்.எல்.ஏ., ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு தாவினர். தற்போது தெலுங்கு தேசம் கட்சிக்கு 23 எம்.எல்.ஏ.க்களும் ஜனசேனா கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லை.
இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய கட்சியை பலப்படுத்த பல்வேறு வியூகங்களை வகுத்து களமிறங்க நடிகர் பவன் கல்யாண் தயாராகி உள்ளார்.
விஜயதசமி முதல் 6 மாதங்களுக்கு ஆந்திரா முழுவதும் தீவிர சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். திருப்பதியில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் பவன் கல்யாண் காளஹஸ்தி, சித்தூர், கர்னூல், கடப்பா, விஜயவாடா மாவட்டங்களில் நகரங்கள் தொட்டு கிராமங்கள் தோறும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
அப்போது தனது கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்க உள்ளார்.
பொதுமக்களிடம் தனது கட்சி கொள்கைகள் மற்றும் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் செய்யப்படும் நல திட்டங்கள் குறித்து பேச உள்ளார்.
சுற்றுப்பயணத்திற்கு செல்லும்போது முதலமைச்சர் செல்லும்போது எப்படி போலீஸ் கான்வாயில் செல்கிறாரோ அதேபோல் செல்ல திட்டமிட்டுள்ளார். இதற்காக புதியதாக 8 கருப்பு நிற கார்களை வாங்கியுள்ளார்.
அந்த கார்கள் பிரசாரத்திற்கு தயாரான நிலையில் உள்ளது.
முதலமைச்சராவதற்கு முன்பாக சென்டிமென்டாக கான்வாயில் செல்வதற்காக கார்களை வாங்கி இருப்பதாக அவரது ரசிகர்கள் கருதுகின்றனர். எப்படியாவது தனது கட்சியை பலப்படுத்தி முதலமைச்சராக வேண்டும் என பவன் கல்யாண் தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். இதற்காக சினிமாவுக்கு முழுக்கு போடவும் தயாராகியுள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரா முழுவதும் நடைபயணம் செய்து தனது கட்சியை பலப்படுத்தி ஆட்சியை பிடித்தார்.
அதேபாணியில் தற்போது நடிகர் பவன் கல்யாணும் களத்தில் இறங்க திட்டமிட்டுள்ளார்.
- ஏர்ரகொண்ட பாளையத்தை சேர்ந்தவர் ராஜசேகர் ரெட்டி. இவரது மருமகன் இந்திர சேனா ரெட்டி.
- வெங்கடேஸ்வரா ரெட்டி மரகத விநாயகர் சிலையை மாறுவேடத்தில் இருந்த போலீசாரிடம் காண்பித்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஏர்ரகொண்ட பாளையத்தை சேர்ந்தவர் ராஜசேகர் ரெட்டி. இவரது மருமகன் இந்திர சேனா ரெட்டி. இவர்களது விவசாய நிலத்தில் பள்ளம் தோண்டியபோது 2½ அடி உயரம், 2 அடி அகலம் கொண்ட 9 கிலோ எடையுள்ள பச்சை கல் மரகத விநாயகர் சிலை கிடைத்தது. இந்த சிலையின் மதிப்பு ரூ.25 கோடி ஆகும்.
மரகத சிலையை அரசிடம் வழங்கவேண்டுமென ஐதராபாத் கோர்ட்டில் ஆந்திர அரசு சார்பில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது ராஜசேகர ரெட்டி இந்த சிலை தன்னுடைய குடும்பத்திற்கு சொந்தமானது. எனவே உரிமைப் பத்திரம் வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.
மரகத விநாயகர் சிலை ராஜசேகர ரெட்டிக்கு சொந்தமானது என கோர்ட்டில் உரிமைப் பத்திரம் வழங்கப்பட்டது. இதையடுத்து மரகத விநாயகர் சிலையை ராஜசேகர் ரெட்டி வீட்டில் வைத்திருந்தார். வீட்டில் சிலை வைத்துள்ளதால் அவரது குடும்பத்திற்கு ஆகாது என ஜோதிடர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து ராஜசேகர ரெட்டி அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஸ்வரர் ரெட்டியிடம் கொடுத்து வினுகொண்ட சாலையில் உள்ள பண்ணை வீட்டில் சிலையை வைத்து இருந்தனர்.
இந்த நிலையில் மரகத விநாயகர் சிலையை விற்பனை செய்ய உள்ளதாக ஓங்கோல் குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வெங்கடேஸ்வரர் ரெட்டியின் பண்னை வீட்டிற்கு மாறுவேடத்தில் சென்ற போலீசார் சிலையை தாங்களே வாங்கி கொள்வதாகவும், சிலையை காண்பிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
அப்போது வெங்கடேஸ்வரா ரெட்டி மரகத விநாயகர் சிலையை மாறுவேடத்தில் இருந்த போலீசாரிடம் காண்பித்தார்.
மாறுவேடத்தில் இருந்த போலீசார் தாங்கள் போலீசார் என தங்களது அடையாள அட்டையை காண்பித்து மரகத விநாயகர் சிலையை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது ராஜசேகர் ரெட்டி கோர்ட்டு வழங்கிய உரிமை பத்திரத்தை போலீசாரிடம் காண்பித்தார்.
ஆனால் புராதன சின்னமான மரகத விநாயகர் சிலையை தனிநபர் ஒருவர் வைத்துக்கொள்ள அனுமதி இல்லை என தெரிவித்தனர். இந்த விநாயகர் சிலை விற்பனையில் ஆந்திர மாநில 2 அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதால் போலீசார் வழக்கு பதிவு செய்ய தாமதம் செய்தனர்.
இது குறித்து சமூக வலைத்தளங்களில் பரவியதால், போலீசார் ராஜசேகர், அவரது மருமகன் இந்திர சேனா மற்றும் வெங்கடேஸ்வரா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பப்ஜி விளையாட்டில் தோல்வி அடைந்ததால் நண்பர்கள் அவரை கேலி கிண்டல் செய்தனர். இதில் விரக்தி அடைந்த கல்லூரி மாணவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து பப்ஜி விளையாட்டில் தோல்வி அடைந்ததால் மாணவர் தற்கொலை செய்தாரா? அல்லது அவரது சித்தி கொலை செய்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மசூலிப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சாந்தி ராஜ். இவரது முதல் மனைவி லட்சுமி நரசம்மா. அவர் விஜயவாடாவில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 4 ஆண் குழந்தைகள் உள்ளனர். சாந்தி ராஜ், கவுரி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டு மசூலிப்பட்டினத்தில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
லட்சுமி நரசிம்மாவின் மகன் பிரபு (வயது 16).தனது தந்தையுடன் மசூலிப்பட்டினத்தில் தங்கி அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார். பிரபு தனது நண்பர்களுடன் பப்ஜி விளையாட்டில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் பப்ஜி விளையாடிக்கொண்டு இருந்தார்.
அப்போது விளையாட்டில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் நண்பர்கள் அவரை கேலி கிண்டல் செய்தனர். இதில் விரக்தி அடைந்த பிரபு இரவில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரபு தூக்கில் தொங்குவதை கண்ட சாந்தி ராஜ் மற்றும் அவரது மனைவி கதறி அழுதனர்.
இதுகுறித்து சிலகளபுடி போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரபு பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முசிறிபட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பிரபுவின் தாய் தனது மகனை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக 2-வது மனைவி கவுரி மீது போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பப்ஜி விளையாட்டில் தோல்வி அடைந்ததால் பிரபு தற்கொலை செய்தாரா? அல்லது அவரது சித்தி கொலை செய்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






