என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
    • உண்டியல் வருமானம் தொடர்ந்து 5 மாதமாக ரூ.100 கோடிக்குமேல் வந்துள்ளது.

    திருமலை :

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. உண்டியல் வருமானமும் குறைவாகவே வந்தது.

    தற்போது கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. உண்டியல் வருமானமும் தொடர்ந்து 5 மாதமாக ரூ.100 கோடிக்குமேல் வந்துள்ளது. ஜூலை மாதத்தில் 23 நாட்களில் ரூ.106.4 கோடி வருமானம் கிடைத்தது.

    மார்ச் மாதத்தில் ரூ.128 கோடி, ஏப்ரல் மாதம் ரூ.127.5 கோடி, மே மாதத்தில் ரூ.19.93 கோடி, ஜூன் மாதத்தில் ரூ.120 கோடி கிடைத்துள்ளது.

    பக்தர்கள் அதிகமாக உண்டியலில் காணிக்கை செலுத்துவதால், இந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1,500 கோடி உண்டியல் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

    மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குரங்கு அம்மை நோய் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பதி:

    உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவில் தற்போது குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது.

    கேரளாவில் 3 பேர் குரங்கு அம்மைநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இமாச்சல் பிரதேசம், மணாலிலிருந்து டெல்லிக்கு உறவினர் திருமணத்திற்கு வந்த 34 வயது வாலிபருக்கு குரங்கமை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    அவரது ரத்த மாதிரிகள் புனேயில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதில் அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அவரை டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெயபிரகாஷ் ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் காமெட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு சொறி ஏற்பட்டதால் சந்தேகம் அடைந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் அவரை காமெட்டி அரசு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தனர்.

    இதையடுத்து ஐதராபாத் அரசு ஆஸ்பத்திரிக்கு அவர் மாற்றப்பட்டார். வாலிபரின் ரத்த மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவுகள் இன்று வந்தது. இதில் அவருக்கு குரங்கு அம்மை நோய் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து அவருக்கு சிகிச்சை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் அவருடன் தொடர்பில் இருந்த 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

    • கடந்த 5 மாதங்களில் மாதம்தோறும் உண்டியல் காணிக்கை ரூ.100 கோடிக்கும் மேல் வசூலாகியுள்ளது.
    • திருப்பதியில் நேற்று 80,815 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதியில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதன் மூலம் உண்டியல் வருவாய் வெகுவாக அதிகரித்துள்ளது.

    கடந்த 5 மாதங்களில் மாதம்தோறும் உண்டியல் காணிக்கை ரூ.100 கோடிக்கும் மேல் வசூலாகியுள்ளது என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த மார்ச் மாதம் ரூ.128 கோடி, ஏப்ரல் மாதத்தில் ரூ.127.5 கோடி, மே மாதத்தில் ரூ.129.93 கோடி, ஜூன் மாதத்தில் ரூ.120 கோடி, ஜூலை மாதம் இதுவரை ரூ.106 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது.

    இதே நிலை தொடரும் பட்சத்தில் இந்த ஆண்டு முடிவுக்குள் உண்டியல் வருவாய் ரூ.1500 கோடியை எட்டும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது போக தங்கம், வெள்ளி, வைரம் தனியாக கணக்கில் சேர்க்கப்படும்.

    திருப்பதியில் நேற்று 80,815 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 31,562 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.82 கோடி உண்டியல் வசூலானது.

    • குரங்கு அம்மை நோய் புதிய வைரஸ் கிடையாது ஆப்பிரிக்காவில் 50 ஆண்டுகளாக உள்ளது.
    • வன விலங்குகளின் மாமிசம் சாப்பிடுவதாலும் இந்த நோய் மனிதர்களுக்கு எளிதாக பரவுகிறது.

    திருப்பதி:

    கொரோனா உலகை அச்சுறுத்தியது போல் தற்போது புதிய வகை நோயாக குரங்கு அம்மை உலகம் முழுவதிலும் வேகமாக பரவி வருகிறது.

    தற்போது வரை 70 நாடுகளில் 16 ஆயிரம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குரங்கு அம்மை நோய் புதிய வைரஸ் கிடையாது ஆப்பிரிக்காவில் 50 ஆண்டுகளாக உள்ளது. இந்த நோய் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி வருகிறது.

    குரங்கம்மை நோய் 2 வகையாக உள்ளது ஒன்று மத்திய ஆப்பிரிக்கா குரங்கம்மை மற்றொன்று மேற்கு ஆப்பிரிக்கா குரங்கம்மை. இது ஆக்டோ பாக்ஸ் வைரஸ் குடும்ப வகையையை சார்ந்ததாகும். கொரோனா வைரஸ் கண்களுக்கு தெரியாது.ஆனால் குரங்கம்மை வைரஸ் பெரிய அளவில் உள்ளதால் கண்களுக்கு தெரியும்.

    மத்திய ஆப்பிரிக்காவில் காங்கோ என்ற இடத்தில் 1950-ம் ஆண்டு வனப்பகுதியை ஒட்டி உள்ள குடும்பத்தை சேர்ந்த 9 மாத குழந்தைக்கு குரங்கம்மை நோய் முதன் முதலில் பரவியது. வனப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் விலங்குகளிடம் இருந்து அங்குள்ள சில கிராமங்களில் உள்ள மக்களுக்கு இந்த நோய் எளிதில் பரவியது.

    வன விலங்குகளின் மாமிசம் சாப்பிடுவதாலும் இந்த நோய் மனிதர்களுக்கு எளிதாக பரவுகிறது.

    கடந்த 2003-ம் ஆண்டு இந்த வைரஸ் அமெரிக்காவுக்கு பரவியதால் 70 பேர் பாதிக்கப்பட்டனர்.

    இதையடுத்து மற்ற நாடுகளுக்கும் இந்த நோய் பரவி வருகிறது. மேலும் எலி, குரங்கு, வண்டுகள் மூலமும் பரவுகிறது. நோய் தொற்று ஏற்படுவது உடனடியாக தெரியாது. 6 முதல் 13 நாட்கள் கழித்து உடலில் சிறிய அளவில் புண்கள் ஏற்பட்டு சொறி ஏற்படும். மேலும் சளி, இருமல், கழுத்து வலி, உடல் வலி, தலைவலி உண்டாகும்.

    நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு 21 நாட்களுக்குப் பிறகு நோயின் தாக்கம் சிறிது சிறிதாக குறையும்.

    பி.சி.ஆர். சோதனை மூலம் இந்த நோய் தொற்றை கண்டறியலாம் இதற்கு முன்பு குரங்கம்மை பாதித்தவர்களில் 100-க்கு 10 பேர் என இறப்பு இருந்தது.

    தற்போது 100க்கு 3 பேர் மட்டுமே இறக்கின்றனர்.எமினியு குளோபிலின் என்ற ஆன்ட்டி பயாடிக் மூலம் இந்த நோயை குணப்படுத்த முடியும்.

    இந்தியாவில் தற்போது இமாச்சல் பிரதேசம், மணாலிலிருந்து டெல்லிக்கு உறவினர் திருமணத்திற்கு வந்த 34 வயது வாலிபருக்கு குரங்கமை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    அவரது ரத்த மாதிரிகள் புனேயில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதில் அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெயபிரகாஷ் ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் காமெட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு சொறி ஏற்பட்டதால் சந்தேகம் அடைந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் அவரை காமெட்டி அரசு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தனர்.

    இதையடுத்து ஐதராபாத் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். வாலிபரின் ரத்த மாதிரி பரிசோத னைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் அவருடன் தொடர்பில் இருந்த 6 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

    • கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2010-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
    • மனைவியுடன் விவாகரத்து பெற்றது முதல் சிவா ரெட்டி மனமுடைந்து விரக்தியாக காணப்பட்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்தவர் சிவா ரெட்டி (வயது 44). இவரது மனைவி ரமாதேவி. தம்பதிக்கு குழந்தை இல்லை. சிவா ரெட்டி விமானப்படை தளத்தில் வேலை செய்து ஓய்வுபெற்று தற்போது ஐதராபாத்தில் உள்ள மதுரா அப்பார்ட்மெண்டில் தங்கி வக்கீலாக வேலை செய்து வந்தார்.

    கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2010-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். மனைவியுடன் விவாகரத்து பெற்றது முதல் சிவா ரெட்டி மனமுடைந்து விரக்தியாக காணப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவா ரெட்டி படுக்கையறையில் துப்பாக்கியால் நெற்றிப்போட்டில் சுட்டுக்கொண்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து சிக்கலா பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் சஞ்சய் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிவா ரெட்டி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 10-ந் தேதி ஆப்பிரிக்காவில் இருந்து முரளி விசாகப்பட்டினம் வந்தார்.
    • அப்போது அக்கம்பக்கத்தினர் மிருதுளாவின் கள்ளக்காதல் குறித்து முரளியிடம் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம், பில்லால வலசை பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 43). இவர் ஆப்பிரிக்காவில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி மிருதுளா (29). தம்பதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. திருமணத்திற்கு பிறகு இருவரும் ஆப்பிரிக்காவில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 7 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு முரளியின் மகனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மனைவியையும், மகனையும் அவரது சொந்த ஊரான விசாகப்பட்டினத்திற்கு அனுப்பி வைத்தார். விசாகப்பட்டினம் ரிக்‌ஷா காலனியில் முரளி சொந்தமாக வீடு கட்டி அங்கு தனது மனைவி மகனை குடிவைத்தார்.

    பின்னர் ஆப்பிரிக்கா நாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் சாய்ராம் நகர் காலனியை சேர்ந்த ஹரிசங்கர் வர்மா என்பவருடன் மிருதுளாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

    ஹரி ஷங்கர் வர்மா, மிருதுளா இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி ஆப்பிரிக்காவில் இருந்து முரளி விசாகப்பட்டினம் வந்தார். அப்போது அக்கம்பக்கத்தினர் மிருதுளாவின் கள்ளக்காதல் குறித்து முரளியிடம் தெரிவித்தனர்.

    கள்ளக்காதலை கைவிடுமாறு முரளி தனது மனைவியிடம் வற்புறுத்தி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த மிருதுளா இதுகுறித்து அவரது கள்ளக்காதலன் ஹரிசங்கர் வர்மாவிடம் தெரிவித்தார். இருவரும் சேர்ந்து முரளியை கொலை செய்ய முடிவு செய்தனர்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவு முரளி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் மிருதுளா அவரது கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்தார்.

    படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்த முரளி கையை ஹரிசங்கர் வர்மா பிடித்துக் கொள்ள, மிருதுளா சமையல் செய்யும் குக்கரால் முரளியின் தலையில் சரமாரியாக தாக்கினார்.

    இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து சம்பவ இடத்திலேயே முரளி பரிதாபமாக இறந்தார். முரளியின் பிணத்தை போர்வையால் சுற்றி மறைத்து வலசை பாலத்தின் கீழ் வீசி விட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு வந்து விட்டனர்.

    2 நாட்கள் கழித்து சென்று பார்த்தபோது பிணம் அழுகி துர்நாற்றம் வீசியது. இதையடுத்து முரளியின் பிணத்தின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர்.

    இதனைக் கண்ட பொதுமக்கள் சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கணவர் பிணத்தை எரித்துக் கொண்டிருந்த மிருதுளா மற்றும் அவரது கள்ளக்காதலன் ஹரிசங்கர் வர்மா ஆகியோரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    முரளி தங்களது கள்ளக்காதலை கண்டித்ததுடன், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அவரை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்ததாக தெரிவித்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து மிருதுளா மற்றும் அவரது கள்ளக்காதலனை கைது செய்தனர்.

    கள்ளக்காதல் கொலையால் அவர்களது 7 வயது மகன் பெற்றோர் இன்றி தவித்து வருவது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பெரும்பாலானோர் குறைந்த கலோரிகள் மற்றும் இயற்கை இனிப்புகளுடன் நடுத்தர பழங்களை விரும்புகின்றனர்.
    • கொரோனாவுக்கு பிறகு பொதுமக்கள் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டுள்ளனர்.

    திருப்பதி:

    ஆரஞ்சு பழம் மிகவும் சுவையான மற்றும் பிரபலமான ஒரு சிட்ரிக் பழமாகும். இதில் நல்ல அளவில் வைட்டமின் சி உள்ளது.

    ஆரஞ்சு ஆன்ட்டி ஆக்ஸிடேன்டுகளைக் கொண்டுள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகின்றன. ஆந்திராவில் கொரோனா தொற்றுநோயின் உச்சக்கட்டத்தின் போது ஆரஞ்சு சாறுக்கு அதிக தேவை இருந்தது.

    பாபட்லாவில் உள்ள வேளாண்மைக் கல்லூரியில் வேளாண் பொருளாதாரப் பேராசிரியரான நிர்மல் ரவி குமார் நடத்திய ஆய்வில், கோவிட் நோய்க்குப் பிந்தைய சூழ்நிலையில் ஆரஞ்சு பழத்திற்கான தேவை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

    ஒரு லிட்டர் ஆரஞ்சு சாறுக்கு ரூ.141 வரை கொடுக்க கூட மக்கள் தயாராக உள்ளனர்.

    பெரும்பாலானோர் குறைந்த கலோரிகள் மற்றும் இயற்கை இனிப்புகளுடன் நடுத்தர பழங்களை விரும்புகின்றனர்.

    கொரோனாவுக்கு பிறகு பொதுமக்கள் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டுள்ளனர். குறிப்பாக கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு ஆந்திராவில் அதிகளவில் ஆரஞ்சு பழத்தினை சாப்பிடுகின்றனர். இதனால் அதன் தேவை அதிகரித்துள்ளது.

    இப்போது, ​​ஆரஞ்சு சாறுக்கான தேவை விநியோகத்தை விட அதிகமாக உள்ளது. இது மாநிலத்தில் ஆரஞ்சு பழங்களை அதிக அளவில் பயிரிட விவசாயிகளுக்கு போதுமான வாய்ப்பை வழங்கி உள்ளது என தெரிவித்துள்ளனர்.

    • வரும் ஆகஸ்ட் 2-ந் தேதி தேசியக்கொடி தின விழாவில் கலந்துகொள்ள சீதா மகாலட்சுமிக்கு டெல்லியில் இருந்து அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.
    • சீதா மகாலட்சுமி இறப்பு குறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தை சேர்ந்தவர் கண்டசாலா சீதா மகாலட்சுமி (வயது 100). நாடு சுதந்திரம் அடைந்ததும் முதல் முறையாக சீதா மகாலட்சுமி தேசிய கொடியை உருவாக்கி டெல்லிக்கு அனுப்பினார். அவர் அனுப்பிய தேசியக்கொடி டெல்லியில் உள்ள கொத்தளத்தில் ஏற்றப்பட்டது.

    இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 2-ந் தேதி தேசியக்கொடி தின விழாவில் கலந்துகொள்ள சீதா மகாலட்சுமிக்கு டெல்லியில் இருந்து அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.

    அவரை டெல்லிக்கு அழைத்துச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆந்திர மாநில அரசு செய்து வந்தது. இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சீதா மகாலட்சுமி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    அவரது இறப்பு குறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நேரில் வந்து அஞ்சலி செலுத்தி அவருடைய குடும்பத்தாருக்கு ரூ.75 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.

    இதேபோல் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • ஆந்திராவில் காரில் வந்த 13 பேர் திருநங்கையை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • சம்பவம் குறித்து புலி வெந்துலா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் புலி வெந்துலா நகர் பகுதியை சேர்ந்தவர் 50 வயது திருநங்கை. இவர் அங்குள்ள திருநங்கைகளுடன் சேர்ந்து சாலை ஓரங்களில் வரும் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் செய்து பிழைத்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கதிரி செல்லும் சாலையில் வாகன ஓட்டிகளிடம் திருநங்கை பணம் வசூல் செய்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக ஒரே காரில் 13 பேர் வந்தனர். அவர்கள் திருநங்கையிடம் பணம் கொடுப்பதாக கூறி காரில் கடத்திச் சென்று மறைவான இடத்தில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்தனர்.

    இதனால் திருநங்கை மயக்கம் அடைந்தார். இதையடுத்து திருநங்கையை அங்கேயே விட்டுவிட்டு மீண்டும் காரில் தப்பிச் சென்றனர்.

    மயக்கம் தெளிந்த திருநங்கை இது குறித்து புலி வெந்துலா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து திருநங்கையை காரில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமணமாகி விவாகரத்து பெற்று வரன் தேடும் வசதியான பெண்களை கண்டுபிடித்து காதல் வலை வீசினார் சிவசங்கர் பாபு.
    • சிவசங்கர் பாபுவை திருமணம் செய்த சில பெண்கள் தற்போது கர்ப்பம் அடைந்து உள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் அடப்பா சிவசங்கர் பாபு. இவர் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் லட்சக்கணக்கில் சம்பளம் பெறுவதாகவும் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார்.

    திருமணமாகி விவாகரத்து பெற்று வரன் தேடும் வசதியான பெண்களை கண்டுபிடித்து காதல் வலை வீசினார். அவர்களின் நம்பிக்கையை பெரும் அளவிற்கு நைசாக பேசி மனதை மயக்குவார். இதை உண்மை என நம்பிய விவாகரத்து பெற்ற இளம்பெண்கள் 7 பேரை அடுத்தடுத்து திருமணம் செய்து லட்சக்கணக்கில் நகை, பணத்தை மோசடி செய்துள்ளார்.

    இளம்பெண்ணை திருமணம் முடித்த சில மாதங்களில் அவரிடமிருந்து நகை, பணத்தை வாங்கிக்கொண்டு அடுத்த பெண்ணை தேடி செல்வார்.

    ஒரே பெண்ணிடம் மட்டும் ரூ.30 லட்சம் பணம் மற்றும் ஏராளமான நகைகளை ஏமாற்றி வாங்கிச்சென்று அடகு வைத்தது தெரிய வந்தது. சிவசங்கர் பாபுவை திருமணம் செய்த சில பெண்கள் தற்போது கர்ப்பம் அடைந்து உள்ளனர்.

    அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா போலீஸ் நிலையங்களில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபுவை தேடிவந்தனர்.

    இந்த நிலையில் கச்சிபவுலி போலீசார் சிவசங்கர் பாபுவை கைது செய்தனர். மேலும் இதுபோல் பெண்களை ஏமாற்றி உள்ளாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருவதால் திருப்பதியில் லட்டுக்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
    • லட்டுக்கள் விற்பனை மூலம் மட்டும் ஆண்டுக்கு ரூ.400 கோடி தேவஸ்தானத்திற்கு வருவாயாக கிடைக்கிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்றுக்கு பிறகு அதிக அளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்து வருகின்றனர். தினமும் சராசரியாக 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    வார இறுதி விடுமுறை நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 90 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

    தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் இலவசமாக ஒரு லட்டு வழங்கப்படுகிறது.50 ரூபாய் விலையில் எத்தனை லட்டுக்கள் வேண்டும் என்றாலும் பக்தர்கள் பெற்று செல்லலாம். பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு செல்லும்போது தனது உறவினர்கள் நண்பர்களுக்கு லட்டு பிரசாதங்களை வழங்குவதற்காக கூடுதலாக லட்டுக்களை வாங்கிச் செல்கின்றனர்.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தினமும் 4 லட்சம் லட்டுக்களும், பெரிய அளவிலான கல்யாண உற்சவ லட்டுக்கள் 2 ஆயிரமும், 15 ஆயிரம் வடைகள் தயார் செய்யப்படுகின்றன. இதற்காக 80 தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் 616 ஒப்பந்த ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    3 ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் வேலை செய்தாலும் 4 லட்சம் லட்டுகள் மட்டுமே தயார் செய்யப்படுகிறது.

    பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருவதால் திருப்பதியில் லட்டுக்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் பக்தர்களுக்கு 2 லட்டுகள் மட்டுமே ரூ.50 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

    லட்டு தட்டுப்பாட்டை போக்க ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்தில் இருந்து பூந்தி தயாரிக்கும் எந்திரங்களை வாங்க தேவஸ்தானம் கூட்டத்தில் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். எந்திரங்கள் மூலம் நவீன தொழில்நுட்பத்தை கொண்டு தினமும் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட லட்டுக்கள் தயாரிக்க முடியும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதியில் தயாரிக்கப்படும் லட்டுக்களில் முந்திரி, பச்சை கற்பூரம், ஏலக்காய், சர்க்கரை, உலர்ந்த திராட்சை, நாட்டு சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

    லட்டுக்கள் விற்பனை மூலம் மட்டும் ஆண்டுக்கு ரூ.400 கோடி தேவஸ்தானத்திற்கு வருவாயாக கிடைக்கிறது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு உண்டியல் வருவாய், ஆர்ஜித சேவை மற்றும் அறை வாடகை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் ஆண்டுக்கு சராசரியாக 3 ஆயிரம் கோடி வருவாயாக கிடைக்கிறது. கூடுதல் லட்டு விற்பனை மூலம் மேலும் வருவாய் கிடைக்கும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் பிரசாத லட்டுக்களை தேவஸ்தான ஊழியர்களை கொண்டு மட்டுமே தயார் செய்ய வேண்டும். எந்திரங்களை கொண்டு தயார் செய்யக்கூடாது என ஜீயர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    • தற்போது பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்ய தேவஸ்தானம் அனுமதி வழங்கியுள்ளது.
    • தினமும் 750 பக்தர்கள் அங்கபிரதட்சனம் செய்யும் வகையில் டோக்கன் வினியோகிக்கப்பட்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை 2 மணிக்கு பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்ய இலவசமாக அனுமதிக்கப்படுவர். சுப்ரபாத சேவையின்போது அவர்கள் ஏழுமலையானை தரிசித்து விட்டு வெளியே வருவார்கள்.

    கொரோனா பரவல் காரணமாக கோவில் குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அங்க பிரதட்சணமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    தற்போது பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்ய தேவஸ்தானம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இதற்கும் ஆன்லைன் முறையை தேவஸ்தானம் கையாண்டு வருகிறது. இதற்கான டோக்கன்கள் இன்று காலை 11 மணிக்கு தேவஸ்தான இணையத்தில் வெளியிடப்பட்டது.

    வரும் ஆகஸ்ட் மாதம் அங்கபிரதட்சணம் செய்ய விரும்பும் பக்தர்கள் தங்களின் ஆதார் அட்டையை இணைத்து டோக்கனை பெற்றனர். தினமும் 750 பக்தர்கள் அங்கபிரதட்சனம் செய்யும் வகையில் டோக்கன் வினியோகிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை அபிஷேகம் நடப்பதால் அன்று மட்டும் தவிர்க்கப்பட்டுள்ளது.

    திருப்பதியில் நேற்று 74,503 பேர் தரிசனம் செய்தனர். 30,884 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.4.42 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    ×