என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா

ஆந்திராவில் கொரோனாவுக்கு பிறகு ஆரஞ்சு பழத்தின் தேவை அதிகரிப்பு

- பெரும்பாலானோர் குறைந்த கலோரிகள் மற்றும் இயற்கை இனிப்புகளுடன் நடுத்தர பழங்களை விரும்புகின்றனர்.
- கொரோனாவுக்கு பிறகு பொதுமக்கள் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டுள்ளனர்.
திருப்பதி:
ஆரஞ்சு பழம் மிகவும் சுவையான மற்றும் பிரபலமான ஒரு சிட்ரிக் பழமாகும். இதில் நல்ல அளவில் வைட்டமின் சி உள்ளது.
ஆரஞ்சு ஆன்ட்டி ஆக்ஸிடேன்டுகளைக் கொண்டுள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகின்றன. ஆந்திராவில் கொரோனா தொற்றுநோயின் உச்சக்கட்டத்தின் போது ஆரஞ்சு சாறுக்கு அதிக தேவை இருந்தது.
பாபட்லாவில் உள்ள வேளாண்மைக் கல்லூரியில் வேளாண் பொருளாதாரப் பேராசிரியரான நிர்மல் ரவி குமார் நடத்திய ஆய்வில், கோவிட் நோய்க்குப் பிந்தைய சூழ்நிலையில் ஆரஞ்சு பழத்திற்கான தேவை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
ஒரு லிட்டர் ஆரஞ்சு சாறுக்கு ரூ.141 வரை கொடுக்க கூட மக்கள் தயாராக உள்ளனர்.
பெரும்பாலானோர் குறைந்த கலோரிகள் மற்றும் இயற்கை இனிப்புகளுடன் நடுத்தர பழங்களை விரும்புகின்றனர்.
கொரோனாவுக்கு பிறகு பொதுமக்கள் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டுள்ளனர். குறிப்பாக கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு ஆந்திராவில் அதிகளவில் ஆரஞ்சு பழத்தினை சாப்பிடுகின்றனர். இதனால் அதன் தேவை அதிகரித்துள்ளது.
இப்போது, ஆரஞ்சு சாறுக்கான தேவை விநியோகத்தை விட அதிகமாக உள்ளது. இது மாநிலத்தில் ஆரஞ்சு பழங்களை அதிக அளவில் பயிரிட விவசாயிகளுக்கு போதுமான வாய்ப்பை வழங்கி உள்ளது என தெரிவித்துள்ளனர்.