என் மலர்
ஆந்திர பிரதேசம்
ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. மகாசிவராத்திரி இங்கு உருவானதாகவும், புரணாங்கள் கூறுகின்றன.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா 7 நாட்கள் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மகா சிவராத்திரி விழாவையொட்டி தினமும் 4 மாட வீதிகளில் சாமி வீதி உலா நடந்து வருகிறது. மகா சிவராத்திரி விழா இன்று நடைபெறுவதால் கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின்விளக்குகள் மற்றும் வண்ண மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் காளஹஸ்தியில் குவிந்துள்ளனர். இதனால் ஆங்காங்கே கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆந்திர மாநில அரசு சார்பில் அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திரா ரெட்டி, மதுசூதன் ரெட்டி எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பட்டு வஸ்திரங்களை ஊர்வலமாக கொண்டுவந்து காளகஸ்தி கோவில் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர்.
ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவதால் 1200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
- கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பித் தருமாறு பாலாஜிக்கு நெருக்கடி கொடுத்தனர்.
- கடந்த 2 நாட்களாக பாலாஜியும், அவரது மனைவியும் தங்கி இருந்த அறையில் இருந்து வெளியே வரவில்லை.
திருப்பதி:
சேலத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 40).இவர் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி நிர்மலா வஸ்திரா (36). பாலாஜி வியாபாரம் செய்வதற்காக வங்கி ஒன்றில் ரூ.40 லட்சம் கடன் வாங்கி உள்ளார்.
மேலும் உறவினர்கள் அக்கம்பக்கத்தினரிடம் ரூ 20 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.
ஜவுளி வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை பாலாஜியால் திருப்பி கொடுக்க முடியவில்லை.
கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பித் தருமாறு பாலாஜிக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் விரக்தி அடைந்த பாலாஜி, தனது மனைவியுடன் கடந்த 15-ந் தேதி திருப்பதிக்கு வந்தார். திருப்பதி பெத்தகாப்பு லே-அவுட் பகுதியில் லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கினார்.
கடந்த 2 நாட்களாக பாலாஜியும், அவரது மனைவியும் தங்கி இருந்த அறையில் இருந்து வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் அறையின் ஜன்னல் கதவை திறந்து பார்த்தபோது பாலாஜி அவரது மனைவி நிர்மலா ஆகியோர் தூக்கில் பிணமாக தொங்கினர்.
இதுகுறித்து திருப்பதி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக எஸ். வி.மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பாலாஜி தங்கி இருந்த அறையில் இருந்து அவரது செல்போன் மற்றும் ரெயில் டிக்கெட்களை வைத்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 2 மணி நேரத்திற்கு மேல் ஆம்புலன்ஸ் கேட்டு கெஞ்சி கதறி அழுதார்.
- இறந்து போன குழந்தையை பைக்கில் எடுத்துச் செல்வதைக் கண்டவர்கள் மிகுந்த மன வேதனை அடைந்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராம ராஜ் மாவட்டம், குமடா பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் மத்திஷ்ராய ராஜு. இவரது மனைவி மகேஸ்வரி. நிறைமாத கர்ப்பிணியான மகேஸ்வரிக்கு கடந்த 2-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது கணவர் மகேஸ்வரியை படேரு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்தார்.
அங்கு மகேஸ்வரிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. மகேஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்ததால் அவரது கணவர் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சியில் திளைத்து இருந்தனர். ஆனால் அவர்களது மகிழ்ச்சி ஒரு நாள் கூட நிலைத்திருக்கவில்லை.
இந்நிலையில் குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.
குழந்தை நேற்று காலை 7 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இறந்து போன குழந்தையை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தர வேண்டும் என குழந்தையின் தந்தை ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் கேட்டார். ஆனால் அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் மத்திஷ்ராய ராஜு கோரிக்கையை காதில் வாங்கிக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்தனர்.
சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் ஆம்புலன்ஸ் கேட்டு கெஞ்சி கதறி அழுதார். ஆனாலும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் மனம் இறங்காமல் கல் நெஞ்சம் படைத்தவர்களாக இருந்தனர்.
இதையடுத்து தனியார் ஆம்புலன்ஸை நாடிய போது அவர்கள் அதிக அளவில் பணத்தை கேட்டனர். அந்த பணத்தை கொடுக்க குழந்தையின் தந்தையால் முடியவில்லை. செய்வது அறியாமல் தவித்த குழந்தையின் தந்தை குழந்தையை பைக்கில் கொண்டு செல்ல முடிவு செய்தார். ஊரிலிருந்து நண்பர்கள் கொண்டு வந்த பைக்கின் பின்னால் மனைவி குழந்தையை வைத்துக்கொண்டு 120 கி.மீ தொலைவில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றார்.
இறந்து போன குழந்தையை பைக்கில் எடுத்துச் செல்வதைக் கண்டவர்கள் மிகுந்த மன வேதனை அடைந்தார். இதனை ஒரு சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மருத்துவ துறை இயக்குனர் உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- சிறுமியின் பெற்றோர் பணத்தை வாங்க மறுப்பு தெரிவித்ததால் ஆளுங்கட்சியினர் சிறுமியின் பெற்றோரை மிரட்டத் தொடங்கினர்.
- எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்ததால் டிஎஸ்பி மாதவ ரெட்டி வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம் அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் காட்டேனி கோனா அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் கடந்த 6-ந்தேதி கிராமத்துக்கு வெளியே உள்ள விவசாய பம்பு செட்டில் துணி துவைக்க சென்றார்.
சிறுமியை பின் தொடர்ந்து சென்ற 5 பேர் கொண்ட கும்பல் அவரை அருகில் உள்ள மரவள்ளிக்கிழங்கு தோட்டத்திற்கு தூக்கிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி சென்றனர்.
துணி துவைக்க சென்ற தனது மகள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் சிறுமியை தேடிச் சென்றனர். விவசாய பம்பு செட் அருகே சிறுமி எடுத்துச் சென்ற துணிகள் சிதறி கிடந்தது. ஆனால் அங்கு சிறுமி இல்லை.
அங்குள்ள மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தில் பார்த்தபோது சிறுமியின் உடைகள் கிழிந்த நிலையில் அலங்கோலமாக மயங்கி கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சிறுமியை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சிறுமியை உள்ளூரை சேர்ந்த ஆளுங்கட்சி பிரமுகர்களின் மகன்கள் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இது சம்பந்தமாக பஞ்சாயத்தார் கூடி பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் தருவதாக பேரம் பேசினர்.
சிறுமியின் பெற்றோர் பணத்தை வாங்க மறுப்பு தெரிவித்ததால் ஆளுங்கட்சியினர் சிறுமியின் பெற்றோரை மிரட்டத் தொடங்கினர்.
இது குறித்து அவரது பெற்றோர் காட்ரேனி கோனா போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்ய மறுப்பு தெரிவித்தனர்.
எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்ததால் டிஎஸ்பி மாதவ ரெட்டி வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீசார் கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஓலேடி தேஜா, ஓலேடி தர்மராஜ், ஓலேடி துளசி, மல்லாடி வம்சி, அர்த்தனி சத்தியம் ஆகிய 5 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.
- நாளை இரவு நந்தி வாகன சேவை நடக்கிறது.
- ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணம் நடக்கிறது.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாளை (சனிக்கிழமை) மகாசிவராத்திரி விழா நடக்கிறது. விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு சிறப்பு வரிசைகள், சாமியானா பந்தல்கள், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மகாசிவராத்திரியையொட்டி நாளை அதிகாலை 2.30 மணியில் இருந்து அதிகாலை 4.30 மணி வரை ஏகாதச ருத்ராபிஷேகம் நடக்கிறது. காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை தேரோட்டம், காலை 10.30 மணியில் இருந்து காலை 11.30 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம், மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை நந்தி வாகன சேவை நடக்கிறது.
மேலும் அதிகாலை 5.30 மணியில் இருந்து மதியம் 2 மணி வரையிலும், மாலை 4.30 மணியில் இருந்து இரவு 12 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை லிங்கோத்பவ அபிஷேகம், புருஷாமிருக வாகன வீதிஉலா, மாலை சிவன்-பார்வதி திருக்கல்யாணம், இரவு திருச்சி உற்சவம் நடக்கிறது.
மேற்கண்ட தகவலை கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மூலவர் சன்னதியில் பக்தர்களுக்கான தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
- லிங்கோத்பவ தரிசனத்தை எந்தவித கட்டணமும் இன்றி இலவச தரிசனம் செய்யலாம்.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி உற்சவம் நாளை (சனிக்கிழமை) கோலாகலமாக நடக்கிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு, அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நாளை மகா சிவராத்திரி உற்சவம் நடக்கிறது. அன்று சாதாரணப் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முக்கியத்துவம் கொடுக்கப்படும். இந்த ஆண்டு மூலவர் சன்னதியில் பக்தர்களுக்கான தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அனைத்துப் பிரபலங்களுக்கும் சாதாரணப் பக்தர்களுக்கும் என அனைவருக்கும் 'மகா லகு' தரிசனம் (சற்று தூரத்தில் நின்று வழிபடுவது) அளிக்கப்படும். குறுக்கு வழியில் சாமி தரிசனம் செய்ய யாரும் அனுமதிக்கப்படுவது இல்லை. பக்தர்கள் கோவிலின் நுழைவு வாயிலில் இருந்து வரிசையில் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும்.
குறிப்பாக, லிங்கோத்பவ தரிசனத்தைப் பக்தர்களுக்கு எந்தவித கட்டணமும் இன்றி இலவச தரிசனத்தில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் மனதை கவரும் வகையில் தூர்ஜெட்டி கலையரங்கத்தில் கலை நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மகா சிவராத்திரி அன்று மட்டும் கோவில் வளாகத்தில் உள்ள 3-வது கோபுரமான திருமஞ்சன கோபுர வழி அடைக்கப்பட உள்ளது. மற்ற 3 கோபுர வாயில்கள் வழியாக வழக்கம்போல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். சாமி தரிசனம் செய்ததும் பக்தர்கள் முருத்யுஞ்சய சாமி சன்னதி அருகில் இருந்து வெளியே வரலாம்.
இல்லையேல், கோவிலின் மேல் பகுதியில் இருந்தும் வரலாம் அல்லது நுழைவு வாயில் பகுதியிலேயே ஒரு பகுதியில் இருந்தும் வெளி வரலாம்.
பக்தர்களுக்கு குளியல் அறைகள், கழிவறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை நிரந்தரமாக 80 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. மகா சிவராத்திரி அன்று 180 நடமாடும் கழிவறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மகா சிவராத்திரி அன்று பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் பிரசாதம் வழங்க 1½ லட்சம் லட்டுகள், வடைகள், புளியோதரை, ஜிலேபி ஆகியவை தயாரித்து வழங்கப்படும். சிவராத்திரி உற்சவம் சிறப்பாக நடக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஏறத்தாழ 300 கோடி ரூபாய் செலவில் ஸ்ரீ பத்மாவதி மல்டி சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்படுகிறது.
- மருத்துவமனையில் அவசர காலத்தில் நோயாளிகளை ஹெலிகாப்டர் மூலம் கொண்டுவரவும், கொண்டு செல்லவும் பயன்படும் வகையில் ஹெலிபேட் அமைக்கப்படும்.
திருப்பதி:
திருப்பதியில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் இதய அறுவைசிகிச்சை மருத்துவமனையில், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி ஆய்வுசெய்தார்.
2021-ம் ஆண்டு அக்டோபர் 11-ந் தேதி இந்த மருத்துவமனையை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி திறந்து வைத்தார். கடந்த 15 மாத காலத்தில், இங்கு 1,110 குழந்தைகளுக்கு முற்றிலும் இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மாநில அரசின் ஆரோக்ய ஸ்ரீ திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு இங்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட அன்னமய்யா மாவட்டம் சிட்டி வேல் மண்டலம் கே.எஸ்.ஆர். அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இப்போது உடல்நிலை தேறி இன்னும் ஒருவார காலத்தில் வீடு திரும்ப உள்ளார்.
ஏறத்தாழ 300 கோடி ரூபாய் செலவில் ஸ்ரீ பத்மாவதி மல்டி சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இங்கு கட்டப்படுகிறது.
இந்த மருத்துவமனையில் அவசர காலத்தில் நோயாளிகளை ஹெலிகாப்டர் மூலம் கொண்டுவரவும், இங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லவும் பயன்படும் வகையில் ஹெலிபேட் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக திருப்பதி மலைஅடிவாரத்தில் சிற்ப கலாசாலையை பார்வையிட்ட அவர் இங்கு செதுக்கப்படும் சிலைகளை விற்பனை செய்ய கவுன்டர் அமைக்கப்படும் என்றார்.
- சுப்பா ரெட்டி கடந்த 4 ஆண்டுகளாக அறங்காவலர் குழு தலைவராக இருந்து வருகிறார்.
- அறங்காவலர் குழு தலைவராக ரெட்டி சமூகத்தை சேர்ந்தவர்கள் பதவி வகித்து வருவதால் இந்த முறை யாதவ சமுதாயத்தை சேர்ந்தவருக்கு இந்த பதிவு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகத்தை நிர்வகிக்க தேவஸ்தான அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. தேவஸ்தான அறங்காவலர் தலைவராக ஆளும் கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் தேர்ந்தெடுக்கபடுவது வழக்கம்.
அறங்காவலர் குழு தலைவராக தேர்ந்தெடுப்பவர்கள் இரண்டு ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள். அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை பிடித்து ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி அமைத்தார்.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்த பிறகு தெலுங்கு தேசம் கட்சியில் நியமிக்கப்பட்டிருந்த அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினரான சுப்பா ரெட்டி அறங்காவலர் குழு தலைவராக பதவி ஏற்றார்.
அவரது பதவி காலம் கடந்த 2021-ம் ஆண்டு நிறைவடைந்தது. இதையடுத்து மீண்டும் சுப்பாரெட்டி அறங்காவலர் குழு தலைவராக பதவி ஏற்றார். சுப்பா ரெட்டி கடந்த 4 ஆண்டுகளாக அறங்காவலர் குழு தலைவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் அறங்காவலர் குழு தலைவரை மாற்ற ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்தார். அறங்காவலர் குழு தலைவர் பதவிக்கு திருப்பதி எம்.எல்.ஏ கருணாகரரெட்டி அல்லது கங்கா கிருஷ்ணமூர்த்தி யாதவ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஏற்கனவே அறங்காவலர் குழு தலைவராக ரெட்டி சமூகத்தை சேர்ந்தவர்கள் பதவி வகித்து வருவதால் இந்த முறை யாதவ சமுதாயத்தை சேர்ந்தவருக்கு இந்த பதிவு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
அறங்காவலர் குழு தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து திருமலையில் உள்ள அன்னமைய்ய பவனில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டம் இன்று நடைபெற்றது.
- ரெயில் பெட்டிகள் குலுங்கியதை அறிந்த ரெயில் எஞ்சின் டிரைவர் சுதாரித்துக்கொண்டு திடீரென பிரேக் போட்டு ரெயிலை நிறுத்தினார்.
- அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயமோ, உயிர்சேதமோ எதுவும் ஏற்படவில்லை.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திராபாத் நோக்கி கோதாவரி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டு இருந்தது. ரெயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.
இன்று காலை 6 மணி அளவில் ரெயில் ஐதராபாத் டி.பி.நகர் ரெயில் நிலையம் அருகே வந்தபோது தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக 5 பெட்டிகள் திடீரென தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி தடம் புரண்டது.
இதனால் ரெயில் பெட்டிகள் குலுங்கியது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரெயில் பணிகள் அலறி கூச்சலிட்டனர்.
ரெயில் பெட்டிகள் குலுங்கியதை அறிந்த ரெயில் எஞ்சின் டிரைவர் சுதாரித்துக்கொண்டு திடீரென பிரேக் போட்டு ரெயிலை நிறுத்தினார்.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயமோ, உயிர்சேதமோ எதுவும் ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த ஐதராபாத் ரெயில் நிலைய அதிகாரிகள் பயணிகளை மீட்டு பஸ் மூலம் அந்தந்த பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.
தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.
- இந்த விழா 26-ந்தேதி வரை நடக்கிறது.
- ராகு, கேது பூஜைகள் வழக்கம்போல் நடக்கும்.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் தொடங்கியது. மகா சிவராத்திரி விழாவின் 2-வது நாளான நேற்று வெள்ளி பல்லக்குகளில் சாமி, அம்மையார் 4 மாட வீதிகளில் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து வருகிற 26-ந் தேதிவரை விழா நடக்கிறது. மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் நடக்கும் 13 நாட்களும் தினந்தோறும் காலை மற்றும் இரவு வேளைகளில் பஞ்ச மூர்த்திகள் ஊர்வலம் நடைபெறும்.
மகாசிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு நகரை அழகுப்படுத்தியுள்ளனர். சாமி ஊர்வலத்திற்கு முன்னதாக சாலைகளை தூய்மைப் படுத்தி, தண்ணீரை தெளிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். அப்போது மூலவரின் சேவையை விட உற்சவமூர்த்திகள் சேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
இதனால் மகாசிவராத்திரி நடைபெறும் 26-ந்தேதி வரை கோவிலில் நடக்கும் ருத்ராபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், பால் அபிஷேகம், பச்சை கற்பூர அபிஷேகம் ரத்து செய்யப்படுவதோடு, கோவிலில் நடக்கும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் கோவில் சார்பில் மட்டுமே நடத்தப்படுகிறது.
வழக்கமாக பிரம்மோற்சவத்தின் போது இரண்டு வேளைகளிலும் உற்சவ மூர்த்திகளான சுவாமி, அம்பாள் 4 மாட வீதிகளில் வீதிஉலா வருகின்றனர். அப்போது பக்தர்களை அபிஷேகங்களில் அனுமதித்தால் கால நிர்வாகம் செய்ய இயலாது என்பதால் பக்தர்களை அனுமதிக்காமல் கோவில் சார்பில் மட்டுமே நடத்தப்படுகிறது.
ஆனால் பக்தர்கள் மிகவும் பக்தி பாவசத்துடன் ஈடுபடும் ராகு, கேது, சர்ப்பதோஷ நிவாரண பூஜைகள் வழக்கம் போல் நிர்ணயிக்கப்பட்ட நேரங்களில் நடக்கும் என்றும், இப்பூஜைகள் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என்றும் கோவில் நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.
- பெண்களுடன் பழகுவதற்கு ஒரு நாளைக்கு ரூ.1000 வரை கட்டணமாக வசூலித்து வந்துள்ளார்.
- காதலன், காதலி இல்லாதவர்கள் எப்படி எல்லாம் தவிப்பார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், குருகிராம் பகுதியை சேர்ந்தவர் சாகுல் குப்தா (வயது 31). பட்டதாரி வாலிபரான இவருக்கு காதலி யாரும் இல்லாததால் தனிமையில் தவித்து வந்து உள்ளார்.
அப்போதுதான் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. வித்தியாசமான ஏதாவது ஒரு செயலை செய்ய வேண்டும் அதன் மூலம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. தன்னைப்போல் காதலன் இல்லாமல் தவிக்கும் பெண்களுக்கு உதவும் வகையில் தனது சேவையை செய்ய முன்வந்தார்.
அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு "வாடகைக்கு பாய் ப்ரெண்ட்" என சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். அதில் காதலன் இல்லாமல் தனிமையில் தவிக்கும் பெண்களுக்கு தான் சேவை செய்வதாகவும் அதற்காக ஒரு நாளைக்கு இவ்வளவு தொகை என கட்டணம் நிர்ணயித்து பதிவிட்டார். கட்டணம் செலுத்தும் பெண்களுடன் அரட்டை அடிப்பது, சமையல் செய்வது, பார்க் பீச் என பெண்கள் விரும்பும் சேவையை செய்வதாக தெரிவித்து இருந்தார்.
பெண்களுடன் பழகுவதற்கு ஒரு நாளைக்கு ரூ.1000 வரை கட்டணமாக வசூலித்து வந்துள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு முதல் சாகுல் குப்தா இதுவரை 50 பெண்களுக்கு சேவை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
காதலன் இல்லாமல் தனிமையில் தவிக்கும் பெண்களின் தனிமையை போக்க இந்த சேவையை செய்து வருவதாகவும், காதலர் தினத்தன்று காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் ஐ லவ் யூ சொல்லிக் கொள்வார்கள்.
ஆனால் காதலன், காதலி இல்லாதவர்கள் எப்படி எல்லாம் தவிப்பார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
அதனால் தான் வாடகைக்கு காதலன் என்று சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தேன்.
என்னுடைய பதிவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது அதன்படி கடந்த 4 ஆண்டுகளில் 50 இளம்பெண்களுக்கு இந்த சேவையை செய்து இருக்கிறேன். என்னுடைய சேவையில் ஆபாசம் எதுவும் இல்லாததால் இளம்பெண்கள் கட்டணம் செலுத்தி என்னை வாடகை காதலனாக ஏற்றுக்கொள்கின்றனர். இதன் மூலம் இளம்பெண்களுக்கு சேவை செய்தது போலும் ஆனது, எனக்கு கணிசமான தொகையும் கிடைத்து வருகிறது.
உலகில் உள்ளவர்கள் ஒவ்வொரு ரகம் இதில் சாகுல் குப்தா தனி ரகம் என ஆந்திர இளம்பெண்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
பிரியமானவளே சினிமா படத்தில் நடிகர் விஜய்க்கு சிம்ரன் வாடகை காதலியாக நடித்து இருப்பார் அதே பாணியில் வாலிபர் ஒருவர் இளம்பெண்களுக்கு வாடகை காதலனாக சேவை செய்து வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மனோகரம்மா காலை 7 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி வேலைக்குச் சென்று பின்னர் இரவு திரும்புவது வழக்கம்.
- வேலைக்குச் சென்று வீட்டிற்கு திரும்பிய தனது தாயிடம் ராணி எஸ்தர் நடந்த சம்பவங்கள் குறித்து கூறினார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் அமராவதி மாவட்டம் தாதேப்பள்ளியை சேர்ந்தவர் யேசலு. இவரது மனைவி மனோகரம்மா. தம்பதிக்கு 17 வயதில் ராணி எஸ்தர் என்ற மகள் இருந்தார். இவர்களது வீடு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வீடு அமைந்துள்ள பகுதியில் உள்ளது. மேலும் அருகிலேயே போலீஸ் நிலையமும் உள்ளது.
ராணி எஸ்தருக்கு 7 வயதாக இருந்தபோது திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.
அப்போது அவருக்கு திடீரென கண் பார்வை பறிபோனது. அவரை பல டாக்டர்களிடம் காண்பித்த போதும் கண் பார்வை சரியாகவில்லை.
இந்த நிலையில் ராணி எஸ்தரின் தந்தை கண்ணாவரம் பகுதியில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார் அவரது தாய் வீட்டு வேலை செய்து வருகிறார்.
மனோகரம்மா காலை 7 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி வேலைக்குச் சென்று பின்னர் இரவு திரும்புவது வழக்கம். ராணி எஸ்தரின் வீட்டின் அருகே வசித்து வருபவர் குக்கல ராஜு (வயது 30). எப்போதும் கஞ்சா போதையில் சுற்றிவரும் இவர் தனியாக இருக்கும் பெண்களிடம் அத்துமீறி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மனோகரம்மா வழக்கம் போல் வேலைக்கு சென்று இருந்தார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட குக்கல் ராஜு கஞ்சா போதையில் ராணி எஸ்தர் வீட்டிற்குள் புகுந்து அவரை பலாத்காரம் செய்ய முயன்றார்.
அதற்கு ராணி எஸ்தர் எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக போராடியதால் வீட்டில் இருந்து வெளியேறினார். பின்னர் அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்தார்.
வேலைக்குச் சென்று வீட்டிற்கு திரும்பிய தனது தாயிடம் ராணி எஸ்தர் நடந்த சம்பவங்கள் குறித்து கூறினார். இதனைக் கேட்டு ஆத்திரம் அடைந்த மனோகரம்மா மற்றும் சில பெண்கள் சேர்ந்து குக்குல ராஜுவை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதனால் ஆத்திரத்தில் இருந்த குக்கல ராஜு நேற்று மனோகரம்மா வேலைக்கு சென்றதை அறிந்து அவரது வீட்டிற்குள் புகுந்து ராணி எஸ்தரை சரமாரியாக வெட்டினார். அவரது தலை, கழுத்து பகுதியில் பயங்கரமாக வெட்டு விழுந்தது.
ராணி எஸ்தர் வலியால் அலறி துடித்தபடி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். அவரின் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது உயிருக்கு போராடியபடி கிடந்தார். குக்கல் ராஜு அங்கிருந்து தப்பி சென்றார்.
உடனடியாக ராணி எஸ்தரை மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக விஜயவாடா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி குக்கல் ராஜுவை கைது செய்தனர்.
குக்கல ராஜு ஏற்கனவே கஞ்சா போதையில் பல பெண்களை பலாத்காரம் செய்த வழக்கு நிலுவையில் இருந்த போதும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த சம்பவம் நடந்து இருக்காது.
மேலும் முதலமைச்சரின் வீட்டின் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு இருக்கும் நிலையில் கொலை நடந்தது எப்படி. கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் முயற்சி செய்யவில்லை என அப்பகுதி மக்கள் பல்வேறு குற்றம் சாட்டினார்.






