என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    ஸ்டைலிஷாகத் தெரிய வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் முதலில் தங்களது உடல்வாகுக்கு ஏற்ற ஸ்டைல் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
    ஆயிரம் பேருக்கு மத்தியில் செல்வதாக இருந்தாலும் தான் தனித்துத் தெரிய வேண்டும் என்பதே பெண்களின் விருப்பம். டீன் ஏஜ் பருவத்தினர் மட்டுமின்றி வேலைக்குச் செல்லும் பெண்களும் வயது வித்தியாசம் இன்றி டிரெண்டியாக தெரிய வேண்டும் என்று நினைக்கிறார்கள். டிசைனிங் பற்றி எதுவும் தெரியாமல் தனக்குத் தானே டிசைனராகி வீண் செலவுகளால் பெருமளவு பணத்தை இழந்து விடுபவர்களும் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் இனி கவலைப்படத் தேவையில்லை பெண்களே...!

    ஸ்டைலிஷாகத் தெரிய வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் முதலில் தங்களது உடல்வாகுக்கு ஏற்ற ஸ்டைல் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஹேர்ஸ்டைல், மேக்கப், சிம்பிள் அக்சசரீஸ் மற்றும் உடைகள் உடலோடு பொருந்தி அழகை கூட்டிக் காட்ட வேண்டும் என்பதே முக்கியம். டிரெண்டில் இருக்கிறது என்பதற்காக எல்லாப் பொருள்களும் அனைத்துப் பெண்களுக்கும் ஒரே மாதிரியாகப் பொருந்தாது.

    டிரெண்டியாகவும் தெரிய வேண்டும் அதே சமயம் அழகிலும் மாற்றுக் குறையக் கூடாது என்று நினைக்கும் பெண்கள் இங்கேகூறப்பட்டிருக்கும் 8 விதிகளை மறக்காமல் பின்பற்ற வேண்டும்.

    1) உங்களை ஸ்டைலாகக் காட்டுவதில் முதல் இடம் வகிப்பது உங்களது ஹேர் ஸ்டைல். உங்கள் மனதுக்கு நெருக்கமான அழகுக் கலைஞரை சந்தித்து உரையாடுங்கள். டிரெண்டி ஹேர் ஸ்டைலுக்கு மாறுங்கள்.

    2) நீங்கள் உடுத்தும் உடை உங்களைப் பற்றிச் சொல்வதில் முதலிடத்தில் உள்ளது. நீங்கள் எதை உடுத்தும்போதும் நம்பிக்கையோடு உடுத்துங்கள். உங்கள் உடை கம்பீரமாகவும், தன்னம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கும் பட்சத்தில் அதுவே உங்கள் மீதான மதிப்பீட்டை உயர்த்தும். உங்கள் உடை உங்களின் உயர்ந்த எண்ணங்களை வெளிப்படுத்துவதாக இருக்கட்டும்.

    3) இடத்துக்கு தகுந்த உடையை தேர்வு செய்வது ஒரு கலை. அலுவலகம் செல்வதற்கு, பார்ட்டிக்கு செல்ல, திருமண விழாக்களில் கலந்துகொள்ள என்று சூழலுக்குப் பொருந்தும் உடைகளை அணிந்து செல்லுங்கள். எனது வாழ்க்கைப் பயணத்தில் எது வந்தாலும் அதனை என்னால் இன்முகத்துடன் ஏற்றுக்கொள்ள முடியும் என்பதை உணர்ந்துகொள்ள முடியும். சூழலுக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வதும் எளிதாகும்.

    4) நீங்கள் எவ்வளவு அதிகம் பணம் கொடுத்து வாங்கிஇருந்தாலும் உங்களது உடல்வாகுக்கு பொருந்தாத உடைகள் உங்களை டிரெண்டியாகக் காட்டாது. நீங்கள் செலவளித்த பணம் வீணாகி விடும். எந்த உடையாக இருந்தாலும் சிக்கென பொருந்தும்படி அணிந்து செல்லுங்கள். அழகிய ஆடையோடு உங்களது தன்னம்பிக்கையும், செல்லத் திமிருமே அழகிய அணிகலன்கள். அவற்றை மறந்திட வேண்டாம்.

    5) ஜீன்ஸ் எப்போதுமே டிரெண்டில் இருப்பதால் இரண்டு ஜோடியாவது உங்கள் வாட்ரோப்பில் இருக்கட்டும். திடீரென வெளியில் கிளம்பும் போதும், டிராவல் போன்ற சூழலிலும் சாதாரண டீ சர்ட்டையும் கொஞ்சம் ஸ்டைலாக காட்ட ஜீன்ஸ் அவசியம்.

    6) நீங்கள் அணியும் உடை 50 சதவிகிதம் மற்றவர்களுக்குப் பிடித்திருந்தால்போதும். மீதம் 50 சதவிகிதம் அது உங்களுக்கு ஆத்மார்த்தமாகப் பிடித்திருக்க வேண்டும். நீங்கள் செல்லும் இடத்தில் இருக்கும் நபர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்க வேண்டும் என்பதையும் உடைகளால் தீர்மானியுங்கள். எனவே, உடையில் எப்போதும் சிறப்புக் கவனம் செலுத்துங்கள். உங்கள் மனதுக்குப் பிடிக்காத உடையை ஒருபோதும் அணிய வேண்டாம்.

    7) டிரெண்டியாகத் தெரியவேண்டும் என்பதற்காக உங்களது தோற்றத்தை தலைகீழாக மாற்ற வேண்டியதில்லை. சின்னச் சின்ன விஷயங்களில் மாற்றம் செய்தாலே டிரெண்டியாகத் தோன்றலாம். பெல்ட் அணிவது, துப்பட்டாவை வித்தியாசமாகப் போடுவதும் ஸ்டைலை மாற்றும். அணிகலன்களிலும் வித்தியாசம் காட்டுங்கள்.

    8) நீங்கள் இப்படி மட்டும்தான் இருப்பீர்கள் என்ற ஒற்றை அடையாளத்தை உருவாக்கி விடாதீர்கள். ஜீன்ஸ், டீ-ஷர்ட் என்று டிரெண்டியாக டிரஸ் செய்தாலும் தங்கச் செயின், வளையல், கொலுசு போன்றவற்றை மாட்டிக் கொள்ளவே மாட்டேன் என்ற கொள்கை முடிவுகளை விட்டு விடுங்கள். என்ன உடுத்துகிறீர்களோ அதற்கு ஏற்ப அணிகலன்களையும் மாற்றி உங்களை பர்பெக்டாக உணருங்கள். எப்பவும் நான் புதிதாகவும் இளமையாகவும் இருக்கிறேன் என்பதை உலகுக்குச் சொல்ல நினைக்கும் பெண்கள் ட்ரெண்டில் தான் இருப்பார்கள் இல்லையா?!

    இவற்றைப் பின்பற்றினால் நீங்கள் எப்போதும் ட்ரெண்டியாகத் தான் தெரிவீர்கள்! இளமை ததும்பும் புன்னகையோடு வலம் வாருங்கள். அனைத்திலும் வெற்றியை எட்டுங்கள்.
    எடைக்குறைப்பில் உடற்பயிற்சியை விட, உணவு முதன்மையான பங்கு வகிக்கிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
    நவீன வாழ்க்கையில், மனித இனத்தின் பெரும் சவாலாக இருப்பது உடல் எடை அதிகரிப்பும், அதன் மூலம் ஏற்படும் சிரமங்களும்தான். இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது பெண்களே. எடைக் குறைப்பில் உடற்பயிற்சியை விட, உணவு முதன்மையான பங்கு வகிக்கிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த வகையில் சமையலுக்கு பயன்படுத்தும் சில மசாலாப் பொருட்கள் எடை குறைப்புக்கு உதவுகின்றன. அவற்றின் தொகுப்பு இங்கே…

    1) லவங்கப் பட்டை:

    அதிக கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை லவங்கப்பட்டை குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது பசியை அடக்குகிறது, உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது, கொழுப்பை குறைக்கிறது, வளர் சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது.

    2) சோம்பு:

    ‘பெருஞ்சீரகம்’ எனப்படும் சோம்பு, நார்ச்சத்து நிறைந்தது. இது வைட்டமின்களையும், தாது உப்புக்களையும் உடல் உறிஞ்சுவதற்கு உதவும். உடலில் சேரும் தேவையற்றக் கொழுப்பைக் கரைக்கும். ஒரு டீஸ்பூன் சோம்பை தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்கவைத்து, வடிகட்டி ஆறவைக்கவும். இந்தத் தண்ணீரைத் தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கழிவுகள் வெளியேறி உடல் எடை குறையும்.

    3) ஏலக்காய்:

    இனிப்பு மற்றும் தேநீரில் சேர்க்கப்படும் ஏலக்காய், நறுமணத்தைத் தருவதோடு, உடல் எடை குறைப்புக்கும் உதவும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்பைக் கரைக்கும்; குறிப்பாக அடிவயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பைக் குறைக்கிறது. இதில் உள்ள மூலக்கூறுகள் குடலில் உள்ள தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழிக்கின்றன. அமில-கார சமநிலையை உண்டாக்குகின்றன. செரிமானத்துக்கும் வழி வகுக்கின்றன.

    4) மிளகு:

    மிளகில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே, தாதுக்கள், ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது இயற்கையான வளர்சிதை மாற்ற ஊக்கியாக செயல்படுகிறது. இதில் உள்ள ‘தெர்மோஜெனிக்’ தன்மை தேவையற்ற கலோரிகளையும், கொழுப்பையும் எரிக்கும்.

    5) மஞ்சள்:

    மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, எடை குறைப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள ‘குர்குமின்’ உடல் எடையைக் குறைப்பதோடு மட்டுமில்லாமல், எடை அதிகரிக்காமலும் தடுக்கிறது.

    6) வெந்தயம்:

    நார்ச்சத்து நிறைந்த வெந்தயம், அளவுக்கு அதிகமாக உணவு உண்பதைத் தடுக்கிறது. வளர்சிதை மாற்றத்தையும், செரிமானத்தையும் அதிகரிக்கிறது. வெந்தயத்தில் உள்ள நீரில் கரையும் தன்மைக் கொண்ட மூலக்கூறுகள், கொழுப்பு மூலக்கூறுகளை அழிக்கும் ஆற்றல் பெற்றவை.

    இவற்றைத் தவிர சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி போன்றவற்றிற்கும் உடல் எடையைக் குறைக்கும் தன்மை உண்டு.

    முகப்பருக்கள் வராமல் தவிர்ப்பதற்கு சரும ஆரோக்கியத்துக்கு ஏற்ற உணவுகளை உட்கொள்வது அவசியமானது.
    பருவம் அடைந்த பெண்களிடையே தற்போது பரவலாகக் காணப்படும் பிரச்சினை, கருப்பை நீர்க்கட்டி. டீன்-ஏஜ் முதல் 45 வயது வரை உள்ள பெண்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படும் ஹார்மோன் கோளாறு இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதன் மூலம், கருமுட்டைகள் முதிர்ந்து வெளிவராமல், திரவங்கள் அடங்கிய குமிழ்களாக கருமுட்டைப் பையில் தங்கிவிடும். இதனால் உடலில் பல பிரச்சினைகள் உண்டாகும். அவற்றுள் முக்கியமானது முகப்பருக்கள் வருவது.

    தோலுக்கு அடியில் அமைந்துள்ள ‘செபேஷியஸ்’ சுரப்பியில் இருந்து ‘சீபம்’ எனும் எண்ணெய்ப் பொருள் சுரக்கிறது. தோலின் மினுமினுப்புத் தன்மைக்கு இதுவே காரணம். மாசு மற்றும் தூசு போன்றவை இதில் படிந்து, சருமத் துளைகளை அடைத்துக் கொள்ளும்போது ‘சீபம்’ வெளிவர முடியாமல் தேங்கி நிற்கும். இதனால் பாக்டீரியா போன்ற கிருமிகளால் தொற்று ஏற்பட்டு சருமத்தில் பருக்கள் உருவாகின்றன.

    இவ்வாறு உண்டாகும் முகப்பருக்களை நீக்குவதற்கான வழிகளைப் பற்றி பார்க்கலாம்.

    முகப்பருக்கள் வராமல் தவிர்ப்பதற்கு சரும ஆரோக்கியத்துக்கு ஏற்ற உணவுகளை உட்கொள்வது அவசியமானது. தக்காளி, பிராக்கோலி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கீரை வகைகள், மீன், எலுமிச்சைப் பழம் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கும்போது சருமம் வறண்டு போகாமல் நீரேற்றத்துடன் இருக்கும்.

    கிரீன் டீ குடிப்பதன் மூலம் உடல் எடை குறைவதோடு, முகப்பரு பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும். கிரீன் டீயில் இருக்கும் ‘பாலிபீனால்’ எனும் மூலக்கூறு, கிருமித்தொற்றுக்களை அழிக்கும் தன்மை கொண்டது. இது முகப்பருக்கள் உண்டாவதைத் தடுக்கும்.

    தேனில் உள்ள பொருட்கள் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை கொண்டவை. இரவில் உறங்கச் செல்வதற்கு முன்பு, சில சொட்டு தேனை முகத்தில் தடவி காலையில் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம். பருவினால் முகத்தில் ஏற்படும் வீக்கத்தை தடுக்கக்கூடிய ஆற்றல் தேனிற்கு உண்டு.

    வேப்பிலைப் பொடியுடன் மஞ்சள் தூள், சந்தனம் சேர்த்து நீர்விட்டு குழைத்து பருக்களின் மீது பூசி வந்தால் விரைவில் குணமாகும்.

    அருகம்புல் பொடி, குப்பைமேனி இலைப்பொடி இரண்டையும் சமஅளவு எடுத்து தண்ணீர் ஊற்றிக் குழைத்து பருக்களின் மீது தடவலாம். தொடர்ந்து ஒரு வாரம் இவ்வாறு செய்து வந்தால் பருக்கள் நீங்கி சருமம் பளிச்சிடும்.

    முகப்பருக்களை நீக்குவதற்கு முடிந்தவரை ரசாயனங்களைத் தவிர்த்து, இயற்கை முறைகளைப் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.
    ஏராளமான மேக்கப் முறைகள் இருந்தாலும், கண்களை உறுத்தாமல் இயற்கையான அழகை சற்றே மெருகூட்டிக்காட்டும் ‘லைட்-வெயிட்’ மேக்கப் முறை தற்போது பெண்களிடையே பிரபலமாக இருக்கிறது.
    பெண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள். வெளியே செல்லும்போதும், விசேஷ நாட்களிலும் இயல்பான அழகை ஒப்பனை மூலம் மேலும் ‘பளிச்’ என்று மாற்றிக் கொள்வதில் பல பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள்.

    ஏராளமான மேக்கப் முறைகள் இருந்தாலும், கண்களை உறுத்தாமல் இயற்கையான அழகை சற்றே மெருகூட்டிக்காட்டும் ‘லைட்-வெயிட்’ மேக்கப் முறை தற்போது பெண்களிடையே பிரபலமாக இருக்கிறது. அதைப் பற்றி இங்கே பார்ப்போம். லைட்-வெயிட் மேக்கப்பை பகல், இரவு என எந்த நேரத்திலும் போட்டுக் கொள்ளலாம்.

    பவுண்டேஷன்:

    அதிக அடர்த்தி இல்லாத, மென்மையான பவுண்டேஷனைத் தேர்வு செய்ய வேண்டும். சருமத்தின் நிறத்துக்கு ஏற்ற பவுண்டேஷனைப் பயன்படுத்தும்போது, மேக்கப் இயற்கையானதாக இருக்கும்.

    தரத்துக்கு முக்கியத்துவம்:

    அழகு சாதனப் பொருட்கள் தரமற்றதாக இருந்தால் சருமத்தில் பாதிப்பு ஏற்படும். இதன் காரணமாக முகப்பொலிவு குறையும். எனவே, தரமான பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒவ்வாமை ஏற்படுத்தாத அழகு சாதனப் பொருட்களைத் தேர்வு செய்வது நல்லது.

    பயன்படுத்தும் முறை:

    பவுடர், கிரீம், லிக்விட் என பல வகைகளில் அழகு சாதனப் பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றை நமது சருமத்துக்கு ஏற்ற விதத்தில் உபயோகப்
    படுத்துவது பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    மாய்சுரைசர்:

    மேக்கப் போடுவதற்கு முன்பு கைகளை நன்றாகத் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். ஈரமான துணியைக் கொண்டு, முகத்தை துடைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின்பு, மாய்சுரைசர் பூச வேண்டும். இது முகத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.

    முக்கியமான பகுதிகள்:

    கண்களுக்குக் கீழிருக்கும் கருவளையம், சுருக்கங்கள், கருந்திட்டுக்கள் போன்ற அனைத்தையும் மறைக்கும் வகையில் மேக்கப் போட வேண்டும்.

    கன்னம், கண்கள்:

    கன்னத்திற்கு மேக்கப் போடும்போது, அதிக இறகுகள் கொண்ட பிரஷ்ஷை பயன்படுத்துவது நல்லது. இதில் குறைந்த அளவில் பவுடரைத் தொட்டு, கன்ன எலும்புகளில் மேல்வாக்கில் தடவ வேண்டும். இதன் மூலம் கன்னங்களை அழகுபடுத்தலாம்.

    மேலும் எடுப்பாகக் காட்ட வேண்டுமானால், தங்கம் மற்றும் வெள்ளி நிற பவுடரை லேசாகத் தடவலாம். முகத்துக்கு அழகு சேர்ப்பவை கண்கள். அவற்றை அழகுபடுத்துவதன் மூலம் மேக்கப் முழுமை பெறும். ஐ ஷேடோ, ஐ லைனர், மஸ்காரா போன்ற அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தி கண்களின் அழகை அதிகரிக்கலாம்.

    உதடுகள்:

    வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்கும் உதடுகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இதற்கு லிப்பாம் அல்லது கண்டிஷனர் பூச வேண்டும். பின்பு பிங்க், பிரவுன் போன்ற நிறங்கள் கொண்ட உதட்டுச்சாயங்களைப் பயன்படுத்தலாம்.
    பற்களில் மஞ்சள் கறை படிவதை தடுப்பதற்கு வாய்வழி சுகாதாரத்தை பராமரிப்பதுதான் முதன்மையானது. தினமும் தவறாமல் பல் துலக்கும் வழக்கத்தை பின்பற்றுவது முக்கியமல்ல.
    முத்து போன்ற வெண்மையான பற்களை விரும்பாதவர்கள் இல்லை. அவை வாய் ஆரோக்கியத்தின் அடையாளம் மட்டுமல்ல. உடல் தோற்றத்திற்கும் அழகு சேர்ப்பவை. இருப்பினும் பலர் பற்களில் வெண்மை நிறத்தை தக்க வைப்பதற்கு தடுமாறுகிறார்கள். வயது அதிகரிக்கும்போது பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவது இயல்பானதுதான்.

    ஆனால் புகைபிடித்தல், மரபணுக்கள் ரீதியான பாதிப்பு, காபி, டீ போன்ற காபின் நிரம்பிய பானங்களை அதிகமாக உட்கொள்வது போன்ற காரணங்களாலும் பற்கள் நிறம் மாறக்கூடும். பற்களை மெருகூட்ட சில வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றினாலே போதும்.

    ஆப்பிள் சிடேர் வினிகர்:

    கூந்தல் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் ஆப்பிள் சிடேர் வினிகரை பற்களை வெண்மையாக்கவும் பயன்படுத்தலாம். சுமார் 200 மில்லி தண்ணீரில் 2 டீஸ்பூன் ஆப்பிள் சிடேர் வினிகரை கலந்து மவுத்வாஷ் செய்யலாம். இந்த கலவையை வாயில் ஊற்றியதும் பற்கள் உள்பட வாயின் அனைத்து மூலைகளிலும் படியுமாறு 30 வினாடிகள் வைத்திருக்கலாம். ஆப்பிள் சிடேர் வினிகர் பிளிச்சிங் தன்மை கொண்டது. அதனால் வாயில் நீண்ட நேரம் வைத்திருக்கக்கூடாது.

    பழத்தோல்கள்:

    எலுமிச்சை, ஆரஞ்சு, வாழைப்பழம் போன்ற சில பழங்களின் தோல்களில் வைட்டமின் சி மற்றும் டி-லிமோனென் என்ற கலவை நிறைந்துள்ளது. இந்த இரண்டு சேர்மங்களும் பற்களை இயற்கையாகவே வெண்மையாக்கும் என்று நம்பப்படுகிறது. அமெரிக்கன் ஜர்னல் ஆப் டெண்டிஸ்ட்ரியில் வெளி யிடப்பட்ட ஆய்வில், பற்களின் கறைகளை நீக்குவதில் 5 சதவிகிதம் டி-லிமோனைன் கொண்ட பற்பசைகள் பற்களில் படிந்துள்ள கறைகளை நீக்குவது கண்டறியப்பட்டுள்ளது. அத்தகைய பற் பசையை கொண்டு தினமும் பல் துலக்கு பவர்களின் கறைகள் பெருமளவு குறைந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிட்ரிக் அமிலம் கலந்த சாறு, பற்களை வெண்மையாக்கும் தன்மை கொண்டது என்பதும் தெரியவந்துள்ளது. பழ தோல்கள் அமிலத்தன்மை கொண்டவை. மேலும் அதிக உணர்திறன் கொண்டவை என்பதால் கவனமாக கையாள வேண்டும்.

    எண்ணெய் உபயோகம்:

    வாயில் எண்ணெய் ஊற்றி கொப்பளிக்கும் `ஆயில் புல்லிங்' முறையும் பற்களுக்கு நலம் சேர்க்கக்கூடியது. வாய் கொப்பளிப்பதற்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். பற்களில் மஞ்சள் நிறத்திற்கு வித்திடும் பிளேக் கட்டிகளை நீக்குவதற்கும் உபயோகிக்கலாம்.

    சமையல் சோடா:

    பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை அகற்ற சமையல் சோடா சிறந்த தேர்வாக அமையும். அமெரிக்கன் டென்டல் அசோசியேஷன் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வில், பேக்கிங் சோடா பற்களை வெண்மையாக்க உதவும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பாக்டீரியாவை எதிர்த்து போராடும். பிளேக்கை குறைக்கும்.

    வாய் சுகாதாரம்:

    பற்களில் மஞ்சள் கறை படிவதை தடுப்பதற்கு வாய்வழி சுகாதாரத்தை பராமரிப்பதுதான் முதன்மையானது. தினமும் தவறாமல் பல் துலக்கும் வழக்கத்தை பின்பற்றுவது முக்கியமல்ல. அது பற்களை சுத்தமாக பராமரிப்பதற்கு வழிவகுக்க வேண்டும். பற்களின் மஞ்சள் நிறத்தைத் தடுக்க செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.
    உலர்ந்த பழங்களை கொண்டு சமைக்கப்படும் சத்தான உணவு பண்டம் இது. ‘எனர்ஜி பால்ஸ்' என்பது இதன் பெயர். இன்று எனர்ஜி பால்ஸ் எப்படி செய்வது என பார்ப்போமா..?
    தேவையான பொருட்கள்

    வாதுமை கொட்டை - கால் கப்
    பாதாம் - கால் கப்
    பிஸ்தா - கால் கப்,
    முந்திரி -  கால் கப்,
    பூசணி விதை - ஒரு கைப்பிடி
    பேரீச்சம் பழம் - 1 கப்

    செய்முறை

    பேரீச்சம் பழத்திலிருந்து கொட்டையை எடுத்து விட்டு மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    அதே போல் வாதுமை கொட்டை, பாதாம், பிஸ்தா, முந்திரி, பூசணி விதைகளை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

    பிசுபிசுப்பான பதத்தில் அரைத்த பேரீட்சையுடன், மற்ற அரைத்த பொடியை சேர்த்து நன்றாக பிசையுங்கள். அப்போது கெட்டியான, லட்டு பதம் கிடைக்கும்.

    உடனே பந்துபோல உருட்டி, எடுத்தால் `எனர்ஜி பால்ஸ்' ரெடி.
    வெளியே செல்லும் போது முகத்தில் போட்டிருக்கும் மேக்கப் முக கவசத்தில் ஒட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக என்னென்ன உத்திகளை பின்பற்றலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
    கொரோனா தொற்றிலிருந்து தற்காத்து கொள்வதன் காரணமாக அனைவருக்கும் முக கவசம் உடலின் ஒரு அங்கமாகவே மாறியிருக்கிறது. இதனால் வைரஸ் தொற்று பரவும் தீவிரம் குறைக்கூடும். அதேசமயம் முக கவசவத்தை பயன்படுத்துவதால் அன்றாட வாழ்வில் சில அசவுகரியங்களையும் சந்திக்க நேரிடும். அவற்றுள் பெண்கள் அதிகமாக சந்திப்பவை மேக்கப் கலைவதும், உதட்டுச்சாயம் கவசத்திலேயே ஒட்டிக்கொள்வதுமாகும்.

    வெளியே செல்லும் போது முகத்தில் போட்டிருக்கும் மேக்கப் முக கவசத்தில் ஒட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக என்னென்ன உத்திகளை பின்பற்றலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

    * முக அமைப்பு சருமத்தின் தன்மை போன்றவை ஒவ்வொருவருக்கும் வேறுபடக்கூடும். ஆகையால் அதன் அடிப்படையில் சரும பராமரிப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

    * முகத்தை கழுவி தூய்மை செய்து முடிந்ததும் சருமத்தில் உள்ள நுண்ணிய துளைகள் விரிவடையும். இவற்றை மூடுவதற்காக முதலில் பன்னீர் டோனர் கொண்டு முகம் முழுவதும் நன்றாக துடைத்துக்கொள்ள வேண்டும்

    * முக கவசத்தில் ஒட்டிக்கொள்ளாதவாறு மேக்கப் போடுவதற்கு ஜெல் மற்றும் கிரீம் கலந்த வாட்டர் பேஸ்டு மாய்ஸ்சுரைசர் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    * முகத்தில் மாய்ஸ்சுரைசர் தடவியதற்கு பின்பு ஜெல் மற்றும் கிரீம் கலந்த ப்ரைமர் தடவுவது சிறந்தது.

    * அடுத்ததாக கன்சீலர் பயன்படுத்த வேண்டும். இதை சருமத்தின் தன்மையை பொறுத்து அதற்கு ஏற்றவகையில் தேர்வு செய்வது முக்கியமானது. டோனர், மாய்ஸ்சுரைசர் போன்றே இதுவும் ஜெல் மற்றும் கிரீம் கலந்த வகையாக இருக்கலாம்.

    * பின்பு பவுண்டேஷன் தடவ வேண்டும். முக கவசத்தில் ஒட்டிக்கொள்ளாதவாறு மேக்கப் போடுவதற்கு பவுண்டேஷன் லிக்விட் ஃபார்மில் இருக்க வேண்டும்.

    * இவற்றையெல்லாம் சரியான முறையில் செய்த பிறகு பவுடர் பூசிக்கொண்டு மேக்கப்பை செட் செய்ய வேண்டும். இதற்கு டிரான்ஸ்லுசென்ட் பவுடரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். காம்பேக்ட்டு பவுடரை தவிர்க்க வேண்டும்.

    * உதட்டில் தடவிக்கொண்ட லிப்ஸ்டிக் முக கவசத்தில் ஒட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக லிக்விட் வகையிலான லிப்ஸ்டிக் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    * லிக்விட் லிப்ஸ்டிக் இல்லாதபோது ஃபவுண்டேஷன் மற்றும் டிரான்ஸ்லுசென்ட் பவுடரை உதட்டின் மேல் கொஞ்சமாக தடவிக்கொண்டு பின்பு அதன் மேலேயே லிப்ஸ்டிக் தடவ வேண்டும்.

    மேற்கண்ட முறைகளை கையாளும் போது முகத்திற்கு போடும் மேக்கப்பும் உதட்டு சாயமும் முக கவசத்தில் ஒட்டிக்கொள்ளும் பிரச்சனை ஏற்படாது.
    உதடு சிகப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு ஈரப்பதம் மிகவும் முக்கியமானதாகும். அவற்றை அடிக்கடி நாவினால் ஈரப்படுத்துவது மிகவும் தவறான செயலாகும்.
    முக அழகை அதிகரித்து வசீகரிப்பதில் உதடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றை மேலும் அழகு படுத்துவதற்காக பயன்படுத்தும் உதட்டுச்சாயங்கள் பெரும்பாலும் ரசாயனம் கலந்தவை. உணவு சாப்பிடும் போது உதட்டுச்சாயத்தின் துகள்களையும் சேர்த்து விழுங்குவதால் பல பிரச்சனைகள் உருவாகின்றன. அதனை தவிர்ப்பதற்காக இயற்கை முறையில் உதடுகளின் வண்ணத்தை பராமரிக்கும் வழிகளை இங்கே பார்க்கலாம்.

    உதடு சிகப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு ஈரப்பதம் மிகவும் முக்கியமானதாகும். அவற்றை அடிக்கடி நாவினால் ஈரப்படுத்துவது மிகவும் தவறான செயலாகும். இதன் மூலம் உதடுகள் கருமை அடைவதோடு, வறண்டு போகவும் நேரிடும். இதை தவிர்ப்பதற்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அதிகமாக தண்ணீர் குடிப்பதால் உதடுகள் ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் இருக்கும்.

    அடிக்கடி தேநீர் அருந்துபவரின் உதடுகள் கருத்து காணப்படும். இதனை தவிர்க்க தினமும் காலையில் தேநீருக்கு பதிலாக வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு அல்லது எலுமிச்சம் பழச்சாறை அருந்தலாம். இது ஈரப்பதத்தை தக்கவைப்பதுடன் உதடுகளை மெருகேற்றும்.

    முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உதடுகளுக்கும் கொடுக்க வேண்டும். அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்தும் போது உதட்டிற்கு தனி கவனம் செலுத்துவது நல்லது. உதடுகளை தூய்மைப்படுத்த தினமும் இரவு தூங்கச்செல்வதற்கு முன்பு அரை டீஸ்பூன் சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு, 4 துளிகள் தேன் மற்றும் 2 துளிகள் எலுமிச்சை சாறு போன்றவற்றை நன்றாக கலந்து சர்க்கரை கரைவதற்கு முன்பு உதட்டின் மீது பூசி 2 முதல் 3 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்தால் இறந்த செல்கள் நீங்கி உதடுகள் மிருதுவாகும்.

    பீட்ரூட் சாறு 2 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு கால் தேக்கரண்டி, நாட்டு சர்க்கரை 3 தேக்கரண்டி, தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி இவை அனைத்தையும் நன்றாக கலந்து ஒரு கண்ணாடி குப்பியில் காற்று புகாதவாறு மூடி குளிர்சாதனப்பெட்டியில் பாதுகாக்கவும். இதனை தினமும் 2 முறை தடவி வந்தால் உதடுகள் மென்மையாகவும் சிவப்பாகவும் மாறும்.

    பன்னீர் ரோஜா இதழ்கள் 20 கிராம் (அரைத்தது), பசுவின் பால் 1 தேக்கரண்டி, இவை இரண்டையும் நன்றாக கலந்து தினமும் உதடுகளின் மேல் தடவி வந்தால் அவை சிகப்பாகவும், மிருதுவாகவும் காட்சியளிக்கும்.

    சிறிது கஸ்தூரி மஞ்சளுடன், பசுவின் பால் கலந்து பூசி வந்தால் உதடுகள் பளபளப்பாகவும் சிகப்பாகவும் மாறும்.
    ‘டீ ட்ரீ எண்ணெய்’யை நேரடியாகப் பயன்படுத்தாமல், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் கலந்து பயன்படுத்தினால் பலன் அதிகம் கிடைக்கும். இதன் மற்ற பயன்களைப் பார்ப்போம்..
    சுற்றுச்சூழல் மாசுகளால், இளம் வயதிலேயே கேசம் முதல் சருமம் வரை அனைத்து உடல் உறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகிறது. இவற்றைத் தடுத்து, பெண்களின் அழகை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது ‘டீ ட்ரீ எண்ணெய்’.

    ஷாம்பூ முதல் பேஸ் வாஷ், கிரீம் வரை அனைத்து வகையான அழகு சாதனப் பொருட்களிலும், இந்த எண்ணெய்யை கலந்து தயாரிக்கிறார்கள்.

    ‘டீ ட்ரீ எண்ணெய்’யை நேரடியாகப் பயன்படுத்தாமல், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் கலந்து பயன்படுத்தினால் பலன் அதிகம் கிடைக்கும். இதன் மற்ற பயன்களைப் பார்ப்போம்..

    கேசத்தின் நண்பன்:

    முடி உதிர்வு, அடர்த்தி குறைவது, பொடுகு, அரிப்பு போன்ற தலைமுடி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும் தன்மை ‘டீ ட்ரீ எண்ணெய்’க்கு உண்டு. 3 டீஸ்பூன் ‘டீ ட்ரீ எண்ணெய்’யுடன், நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தடவி, அரை மணிநேரம் ஊற வைக்கவும். பின்பு மிருதுவான ஷாம்பூ கொண்டு தலைக்கு குளிக்க வேண்டும். வாரம் 3 முறை இவ்வாறு செய்துவந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

    சருமத்தைப் பாதுகாக்கும்:

    ‘டீ ட்ரீ எண்ணெய்’யில் உள்ள ‘ஜிங்க் ஆக்சைடு’ சருமத்தில் ஏற்படும் அரிப்பை நீக்குகிறது. ஈரப்பதத்தைத் தக்க வைத்து, சருமம் வறண்டு போவதைத் தடுக்கிறது. ‘கொலாஜன்’ உற்பத்தியை அதிகரித்து, வயது முதிர்வதன் காரணமாக, சருமத்தில் சுருக்கம் ஏற்படாமல் காக்கிறது. சிறிதளவு தண்ணீருடன் 3 சொட்டு ‘டீ ட்ரீ எண்ணெய்’ கலந்து தினமும் முகத்தில் தடவி வந்தால் சுருக்கம், பருக்கள், கரும்புள்ளி, வடு, தழும்பு, மரு ஆகியவை நீங்கும்.

    நகத்தை அழகாக்கும்:

    சிலருக்கு நகங்கள் வலுவில்லாமல் இருப்பதால், எளிதில் உடைந்துவிடும். மேலும், நகத்தில் பூஞ்சை தாக்கும்போது அதன் நிறம், வளர்ச்சி அனைத்தும் பாதிப்புக்குள்ளாகும். ‘டீ ட்ரீ எண்ணெய்’யை நகத்தின் மீது தடவி வரும்போது, பூஞ்சைத்தொற்று நீங்கும். இந்த எண்ணெய்யை கால் பாதம், கைகளில் தடவி மசாஜ் செய்யும்போது, மிருதுவாகவும், அழகாகவும் மாறும்.
    சரும அழகை பராமரிப்பதற்கு அதிக பணம் செலவளிக்க வேண்டிய அவசியமில்லை. தினசரி வழக்கத்தில் சில மாற்றங்களையும், சரியான முறையில் சரும பராமரிப்பையும் மேற்கொண்டாலே போதுமானது.
    சரும அழகை பேணுவதற்காக விலை உயர்ந்த சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை குறிவைத்து விதவிதமான அழகு சாதன பொருட்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. சரும அழகை பராமரிப்பதற்கு அதிக பணம் செலவளிக்க வேண்டிய அவசியமில்லை. தினசரி வழக்கத்தில் சில மாற்றங்களையும், சரியான முறையில் சரும பராமரிப்பையும் மேற்கொண்டாலே போதுமானது. அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி பார்ப்போம்.

    1. தலையணை உறையை மாற்றுங்கள்:

    பெட்ஷீட் மற்றும் தலையணை உறையை அடிக்கடி மாற்றுவது சருமத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். ஏனெனில் அவற்றில் எண்ணெய், பாக்டீரியா போன்ற வைரஸ் கிருமிகள், இறந்த சரும செல்கள் போன்ற அழுக்குகள் படிந்திருக்கும். அவற்றை துவைக்காமல் நாட்கணக்கில் உபயோகிக்கும்போது சருமத்தில் படர்ந்து பாதிப்பை ஏற்படுத்திவிடும். குறிப்பாக முகப்பரு, சரும வெடிப்பு, முடி உதிர்வு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். இதனை தவிர்க்க தலையணை உறைகள், மெத்தை உறைகளை அடிக்கடி மாற்ற வேண்டும்.

    2. தலையணையில் முகம் பதிக்காதீர்கள்:

    உறங்கும் நிலையும் சருமத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். நிறைய பேர் தலையணைக்குள் முகத்தை பதித்து தூங்கும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். முதுகு பகுதி மெத்தையில் படும்படி தூங்குவதுதான் சரியான நிலையாகும். மெத்தையிலோ அல்லது தலையணையிலோ முகம் பதிப்பது கன்னம் பகுதி முழுவதற்கும் அழுத்தம் கொடுக்கும். அப்படி முகம் பதித்து தூங்குவது முகப்பரு மற்றும் சுருக்கங்களுக்கு வழிவகுக்கும்.

    3. உடற்பயிற்சி செய்ய தவறாதீர்கள்:

    உடற்பயிற்சி செய்யும் போது, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுகள் வியர்வை வடிவில் வெளியேறும். மேலும் உடற்பயிற்சியை வழக்கமாக்கிக்கொள்வது உடலில் ஊட்டச்சத்துக்கள் சீராக செல்லவும், ரத்த ஓட்டம் அதிகரிக்கவும் வழிவகுக்கும். சருமம் பிரகாசமாக காட்சியளிப்பதற்கும் வித்திடும். குறைபாடற்ற சரும அழகை பெறுவதற்கு உடற்பயிற்சியை பரிந் துரைக்கவும் செய்கிறார்கள். மார்பக புற்றுநோய் போன்ற சருமம் சார்ந்த நோய் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் உடற்பயிற்சி உதவும்.

    4. தூக்கம் அவசியம்:

    நல்ல தூக்கம் சருமத்திற்கு புத்துயிர் கொடுக்கும். தினமும் குறிப்பிட்ட நேரத்தை தூங்குவதற்கு ஒதுக்குவது முக்கியமல்ல. அந்த தூக்கம் உடலுக்கும், மனதுக்கும் எந்த இடையூறும் கொடுக்காததாக இருக்க வேண்டும். அப்படி ஆழ்ந்த தூக்கத்தை கடைப்பிடிக்கும் வழக்கத்தை பின்பற்றினால் சரும பராமரிப்புக்காக ஒரு பைசா கூட செலவு செய்ய வேண்டியிருக்காது என்பது சரும நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. தூக்கத்தின்போது உடலில் ஏற்படும் பழுதை சீர்செய்தல் மற்றும் வளர்ச்சி போன்ற முக்கிய செயல்பாடுகள் நடைபெறுகின்றன. போதிய தூக்கமின்மை கருவளையம், உடல் சோர்வு, சுருக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். தினமும் குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேர தூக்கம் அவசியமானது.

    5. செல்போன் திரையை சுத்தம் செய்யுங்கள்:

    கழிவறையை விட செல்போன் திரையில் அழுக்குகள் அதிகம் படர்ந்திருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் செல்போன் உபயோகம் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. முகத்தில் பதித்தபடி செல்போனில் பேசும்போது அதில் படர்ந்திருக்கும் அழுக்குகள் சருமத்தில் படிந்துவிடும். அதன் மூலம் முகப் பருக்கள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
    பாதங்களில் உள்ள குதிகால் வெடிப்பைப் போக்குவதற்கான சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி உங்கள் பாதங்களை அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.
    பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும்.

    மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

    நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, பாதங்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி அல்லது தினமும் செய்து வந்தால், பாதங்களில் ஈரப்பசை தக்க வைக்கப்பட்டு, வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பு மறைய ஆரம்பிக்கும்.

    வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அக்கலவையில் பாதங்களை 10 நிமிடம் ஊற வைத்து, பிரஷ் கொண்டு தேய்த்துக் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வர, பாதங்களில் உள்ள இறந்த தோல் வெளியேற்றப்பட்டு, பாதங்கள் மென்மையுடன் இருக்கும். குறிப்பாக இச்செயலை செய்த பின்னர், பாதங்கள் உலர்ந்ததும், நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை பாதங்களுக்கு தடவுங்கள். இல்லாவிட்டால் வறட்சி இன்னும் அதிகமாகும்.

    குதிகால் வெடிப்பை விரைவில் நீக்குவதற்கான எளிய வழிகளில் ஒன்று தான் இது. தினமும் இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான சோப்பு நீரில் பாதங்களை 15 நிமிடம் ஊற வைத்து, பின் பிரஷ் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்து கால்களை நீரில் கழுவிய பின் உலர வைக்க வேண்டும். பின்பு 1 டீஸ்பூன் வேஸ்லின் மற்றும் 1 எலுமிச்சையின் சாற்றினை ஒன்றாக கலந்து, பாதங்களில் தடவி வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், குதிகால் வெடிப்பை ஒரே வாரத்தில் மறையச் செய்யலாம்.

    கிளிசரினில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, தினமும் அதனை பாதங்களில் தடவி வர, பாதங்களில் உள்ள வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பும் மறைய ஆரம்பிக்கும். தினமும் இரவில் வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடம், குளிர்ந்த நீரில் 5 நிமிடம் என பாதங்களை ஊற வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கால்களில் உள்ள சோர்வு நீங்கும். மேலும் 2 டீஸ்பூன் கிளிசரின், 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, பாதங்களில் தடவி வர வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
    பாதாம் எண்ணெய் அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றது. எனினும் முதல் முறை பயன்படுத்தும்போது சருமத்திற்கு ஒத்துக்கொள்கிறதா? என்று பரிசோதித்து பார்ப்பது நல்லது.
    பெண்கள் பலர் சரும பராமரிப்புக்காக நிறைய நேரங்களை செலவிடுகிறார்கள். மிருதுவான, பளபளப்பான சருமத்தை பெற விரும்புகிறார்கள். சருமம் எளிதில் உறிஞ்சப்படும் தன்மை கொண்டது என்றால் பாதாம் எண்ணெய் பயன்படுத்தலாம். அதில் இரண்டு வகைகள் உள்ளன. இனிப்பு பாதாம் எண்ணெய் எனப்படும் முதல் வகை சருமம் மற்றும் கூந்தலுக்கு பயன்படுத்தக்கூடியது. இரண்டாம் வகை கசப்பான பாதாம் எண்ணெய். இது வாசனை திரவிய தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக பாதாம் எண்ணெய்யில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது.

    இது சருமத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. வைட்டமின் ஏயும் இதில் உள்ளடங்கி உள்ளது. அது முகப்பருவை கட்டுப்படுத்தும். பாதாம் எண்ணெயை முகத்திற்கு பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சருமத்தை புத்துணர்ச்சியடைய செய்யும். பாதாம் எண்ணெய் அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றது. எனினும் முதல் முறை பயன்படுத்தும்போது சருமத்திற்கு ஒத்துக்கொள்கிறதா? என்று பரிசோதித்து பார்ப்பது நல்லது.1. முதுமைக்கான அடையாளத்தை குறைக்கும்: 2. சருமம் வெண்மையாகும்:3. கருவளையத்தை கட்டுப்படுத்தும்:5. முகப்பருவை குறைக்கும்: 4. சரும வறட்சியை போக்கும்:7. தோல் அழற்சியை நீக்கும்:

    பாதாம் எண்ணெய்யை அடிக்கடி சருமத்தில் பயன்படுத்தி வந்தால் வயதாகும் அறிகுறிகளை தள்ளிப்போட்டு விடலாம். டீன் ஏஜ் வயதில் இருந்தே பாதாம் எண்ணெய்யை பயன்படுத்த தொடங்கினால் வயதாகும் அறிகுறிகள் குறைந்து, இயற்கையாகவே சருமம் பளபளப்புடன் காட்சியளிக்க தொடங்கிவிடும். அதில் இருக்கும் வைட்டமின் ஈ, சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது.

    சருமத்தில் படர்ந்திருக்கும் கருமையை போக்கி, சருமத்தை மேம்படுத்தி மென்மையாக, மிருதுவாக காட்சியளிக்க வைக்கும் தன்மை பாதாம் எண்ணெய்க்கு உண்டு. சருமத்தை மேம்படுத்துவதற்கான சிறந்த வழியை தேடுகிறீர்கள் என்றால், தினசரி சரும பராமரிப்பு வழக்கத்தில் பாதாம் எண்ணெய்யை சேர்த்துக்கொள்ளுங்கள். சருமத்தை வெண்மையாக்குவதற்கு பாதாம் எண்ணெய் சிறந்த தேர்வாக அமையும்.

    தூக்கமின்மை மற்றும் சமச்சீரற்ற உணவு முறை இவை இரண்டும்தான் கருவளையத்திற்கு முக்கிய காரணமாகும். கருவளையம் மற்றும் வீக்கத்தை குறைக்க பாதாம் எண்ணெய் சிறந்த தீர்வாக அமையும். இரவு தூங்க செல்வதற்கு முன்பு சில துளிகள் பாதாம் எண்ணெய்யை கண் பகுதியை சுற்றி தடவவும். காலையில் எழுந்ததும் முகத்தை கழுவி விடலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் நான்கு வாரங்களுக்குள் நல்ல மாற்றத்தை உணரலாம்.

    பாதாம் எண்ணெய்யில் உள்ள கொழுப்பு அமிலங்கள் சருமத்தில் படிந்திருக்கும் அதிகப்படியான எண்ணெய் தன்மை மற்றும் சரும துளைகளில் சேரும் அழுக்குகளை அகற்றக்கூடியவை. சருமத்தை சுத்தப் படுத்தி, பளிச்சென்று காட்சி யளிக்கவும் வைக்கும். முகப்பரு ஏற்படுவதையும் தடுக்கும். பாதாம் எண்ணெய்யில் ரெட்டினோல் உள்ளது. இது முகப் பருவை குறைக்கும் தன்மை கொண்டது. எனினும் சருமத்திற்கு ஒத்துக்கொள்கிறதா? என்பதை பரிசோதித்து பார்த்துவிட்டு பயன்படுத்துவது நல்லது. முகப்பருவை கட்டுப்படுத்துவதற்கு சாலிசிலிக் அமிலம் கலந்த கிளீன்சரையும் பயன் படுத்தலாம்.

    6. பழுப்பு நிறத்தை போக்கும்:

    பாதாம் எண்ணெய் மசாஜ் தன்மை கொண்டது. இது சருமத்தில் ஊடுருவிச் செல்லக்கூடியது என்பதால் சரும செல்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும். பாதாம் எண்ணெய்யை அடிக்கடி முகத்தில் தடவி மசாஜ் செய்வது சரும நிறத்தை மெருகேற்ற உதவும். குளிப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு முகம் மற்றும் உடலில் பாதாம் எண்ணெய்யை தடவி மசாஜ் செய்யலாம். பின்பு குளியல் போடலாம். இது சருமத்தை மேம்படுத்தவும், ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் உதவும்.

    குளிர்காலத்தில் தோல் அழற்சி, தோல் தடிப்பு அழற்சி மற்றும் வறண்ட சரும பிரச்சினை உள்ளவர்கள் சருமத்தை ஈரப் பதத்துடன் வைத்திருப்பது நல்லது. அவர்களுக்கு பாதாம் எண்ணெய் சிறந்த மாய்ஸ்சுரைசர்களில் ஒன்றாக அமைந் திருக்கும். ஏனெனில் இது எந்த பக்க விளைவுகளையும் ஏற் படுத்தாது. இது தோல் அரிப்பு, சொறி மற்றும் மோசமான தோல் பிரச்சினைகளை கட்டுப்படுத்தும். மேலும் பாதாம் எண்ணெய் சோர்வை விரட்டி சருமத்திற்கு புத்துயிர் ஊட்டக்கூடியது. சரும பராமரிப்புக்கு புதிய பொருளை தேடுபவர்கள் தாராளமாக பாதாம் எண்ணெய்யை உபயோகிக்கலாம்.

    பாதாம் எண்ணெய்யில் ஆன்டி - ஆக்சிடென்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது சருமத்தை பாதுகாக்கக்கூடியது. ஒவ்வாமை, கொசு கடித்தால் ஏற்படும் சொறி மற்றும் வீக்கத்தை கட்டுப்படுத்தும். அத்தகைய பாதிப்புகள் நேர்ந்தால் தினமும் பாதாம் எண்ணெய் தடவி மசாஜ் செய்து வரலாம்.
    ×