என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    • வாரத்திற்கு ஒரு முறை டைட்டனிங் ஃபேஷியல் செய்ய வேண்டும்.
    • டைட்டனிங் மாஸ்க்கை பெண்கள் வீட்டிலேயே தயாரிக்க முடியும்.

    உடல் எடையை குறைத்தாலே உடலில் உள்ள கொழுப்புகள் அனைத்தும் குறைந்து முகம், கை, கழுத்து, கைவிரல் போன்ற பகுதிகளில் சுருக்கங்கள் தோன்றும். இதனை போக்குவதற்கு வாரத்திற்கு ஒரு முறை டைட்டனிங் ஃபேஷியல் செய்ய வேண்டும்.

    இந்த டைட்டனிங் மாஸ்க்கை பெண்கள் வீட்டிலேயே தயாரிக்க முடியும். முட்டையின் வெள்ளைக்கரு, முல்தானிமட்டி, தேன் மூன்றையும் ஒன்றாக கலந்து முகத்தில் தேய்த்து வந்தாலே போதும். வறண்ட சருமமாக இருந்தால் பால் சேர்த்துக்கொள்ளலாம்.

    டைட்டனிங் மாஸ்குகளும், ரைட்டனின் ஃபேஷியல்களும் சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்க உதவுகின்றன. சருமத்தின் அழகை பாதுகாக்க கார்போ ஹைட்ரேட், புரோட்டின், வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்பு போன்ற உணவுகள் தேவை.

    முட்டைக்கோஸ், வெள்ளரிக்காய், கீரை வகைகள், முளைவிட்ட பயறு வகைகள் போன்றவை சருமத்திற்கு இளமையையும், மினுமினுப்பையும் தரும். அதோடு மட்டுமில்லாமல் தினமும் 10 டம்ளர் தண்ணீர் குடித்து வந்தாலும் வறண்ட சருமம் சுருக்கம் இல்லாமல் பொலிவாக இருக்கும்.

    புரோட்டின் கலந்த உணவுகளை எடுத்துக்கொள்வது மட்டுமல்லாமல் ஆயில் மசாஜ், ஹென்னா, ஸ்பா சிகிச்சைகளும் செய்வது சருமத்திற்கும், கூந்தலுக்கும் நல்லது. பெண்கள் டீன் ஏஜ் வயதில் இருந்தே உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ள வேண்டும். 

    • உதடுகள் வறைசி அடையாமல் தடுக்க லிப் பாம் அவசியம்.
    • வெடிப்பு அபாயம் ஏற்படாமல் தடுப்பதற்கும் லிப் பாம்கள் உதவுகிறது.

    பொதுவாக குளிர்காலத்தில் தான் உதடுகள் வறைசி அடையாமல் தடுக்க லிப் பாம் அவசியம். ஆனால் கோடை காலங்களிலும் லிப் பாம் அவசியம் என்கிறார்களே என்றால், கோடை காலத்தில் உதடுகளில் ஏற்படும் வறட்சியை தடுக்க இந்த லிப் பாம் பெரிதும் உதவுகிறது.

    குளிர் காலத்தில் உதடுகள் வறண்டு காணப்படும் என்பதால் பலரும் லிப் பாம் போடுவதற்கு மறப்பதில்லை. இதே பிரச்சினை கோடை காலத்தில் இருக்கும் என்பதாலும் லிப் பயன்படுத்தலாம்.

    ஆனால் கோடை காலத்தில் பயன்படுத்தும் லிப் பாம் போல அதிக அடர்த்தி இல்லாமல் லேசாக இருக்கக்கூடிய மற்றும் சூரிய வெப்பத்தில் இருந்து பாதுகாக்கக்கூடிய லிப் பாம்களை பயன்படுத்துவது நல்லது.

    கோரமைட், ஹையாலரோனிக் ஆசிட் போன்றவை சேர்ந்த லிப் பாம்கள் நன்று வேலை செய்யும் என்றும் கூறப்படுகிறது.

    சூரியனிடம் இருந்து காத்துக்கொள்ள மிகவும் முக்கியம். உடல் திடீரென தண்ணீர் வறட்சியால் வறண்டு போகும் போது அது நேரடியாக எதிரொலிப்பது உதட்டில் தான். எனவே உதடுகள் வறட்சி அடையாமலும், கருத்துப்போகாமலும், வெயிலினால் பாதிப்படையாமலும் பாதுகாப்பதற்கு இந்த லிப் பாம்கள் உதவுகின்றன.

    சூரிய வெப்பக்காற்றினால் உதடுகள் பாதிக்கப்பட்டு வெடிப்பு அபாயம் ஏற்படாமல் தடுப்பதற்கும் லிப் பாம்கள் உதவுகிறது.

    வயோதிகத்தை முதலில் சொல்வது உதடுகளும், சருமமும் தான். எனவே அவற்றை நல்ல முறையில் பராமரித்தால் தான் என்று இளமையாக இருக்க முடியும்.

    மேலும் உதடுகளின் பராமரிப்புல் நாம் குடிக்கும் தண்ணீரின் அளவு முக்கியத்துவம் பெறுவதால் கோடைகாலத்தில் நிறைய தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    • வழக்கமாக கூந்தலுக்கு எண்ணெய் அவசியம்.
    • கூந்தலில் அதிக நேரம் எண்ணெய் விடாதீர்கள்.

    வழக்கமாக கூந்தலுக்கு எண்ணெய் அவசியம். ஆனால் எல்லா நேரங்களிலும் எண்ணெய் தேய்க்கலாமா என்றால், அதிலும் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.

    எண்ணெய் வைத்தவுடன் சீப்பு போடுவது

    பெண்கள் வழக்கமாக, கூந்தலில் உள்ள சிக்குகளை நீக்க, கூந்தலுக்கு எண்ணெயிட்ட பிறகு சீப்பை பயன்படுத்தி வாருவது இயற்கையானது. ஆனால் இது ஒரு பெரும் தவறு, அதை நீங்கள் தவிர்க்க வேண்டும்.

    அதே மாதிரி, நல்ல எண்ணெய் மசாஜ் செய்த பிறகு, சீப்பு பயன்படுத்தினாலும் உச்சந்தலையில் உள்ள கூந்தல் உடையக்கூடியதாக மாறும். அதாவது, கூந்தலுக்கு எண்ணெய் வைத்தவுடன் கூந்தலுக்கு சீப்பு பயன்படுத்துவது உடைப்பு மற்றும் முடி உதிர்தலை ஏற்படுத்தும். உங்கள் கூந்தலுக்கு சீப்பு வேண்டும் என்றால், மெதுவாக உச்சந்தலையில் இருந்து கீழ்நோக்கி சீவலாம்.

    இரவு முழுவதும் கூந்தலில் எண்ணெய் வைத்திருப்பது

    பெரும்பாலான இந்திய பெண்கள் செய்யும் மற்றொரு பொதுவான தவறு, இரவு முழுவதும் உச்சந்தலையில் எண்ணெயை வைத்திருப்பது. இது உங்கள் கூந்தலை கிரீஸ் மற்றும் பிசுபிசுப் தன்மை கொண்டதாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல், உங்கள் படுக்கை மற்றும் தலையணையில் இருந்து அழுக்குகளையும் சேகரிக்கும்.

    இந்த அழுக்கு உங்கள் உச்சந்தலையின் இயற்கை எண்ணெய்களுடன் எளிதில் கலந்துவிடும் மற்றும் உச்சந்தலையில் சிக்குகளை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, உங்கள் கூந்தலில் அதிக நேரம் எண்ணெய் விடாதீர்கள்.

    கூந்தல் ஈரமாக இருக்கும்போது எண்ணெய் தேய்ப்பது

    சில பெண்களுக்கு ஈரமான கூந்தலுக்கு எண்ணெய் பூசும் பழக்கம் உள்ளது. இந்த தவறை ஒருபோதும் செய்ய வேண்டாம். உங்கள் கூந்தல் ஈரமாக இருக்கும்போது, தலைமுடியின் வேர்க்கால்கள் மிகவும் மென்மையாக இருக்கும்.

    மேலும் மென்மையான சிக்கு மற்றும் இழுப்பது கூட முடி உதிர்வதற்கு வழிவகுக்கும். எனவே, உங்கள் கூந்தலை பாதுகாக்க, முதலில் உங்கள் கூந்தலை உலரவிட்டு, பின்னர் எண்ணெயை பயன்படுத்துங்கள்.

    அதிகப்படியான எண்ணெய் பயன்படுத்துதல்

    உலர்ந்த கூந்தல் மற்றும் உச்சந்தலையாக இருந்தாலும், அதிகப்படியான எண்ணெயை பயன்படுத்துவது நல்லதல்ல. உங்கள் கூந்தலுக்கு தேவைப்படுவதை விட அதிகமாக பயன்படுத்த வேண்டாம். எண்ணெயில் இருந்து விடுபட உங்களுக்கு நிறைய ஷாம்பு தேவைப்படும், இது உங்கள் கூந்தலை பராமரிக்கும். அதன் இயற்கையான பாதுகாப்பு எண்ணெய்களை எடுத்துக்கொள்ளும்.

    கூந்தலை மிகவும் இறுக்கமாக கட்டுவது

    முன்பு குறிப்பிட்டபடி, உச்சந்தலை கூந்தல் தளர்வானதாக இருப்பதால், எண்ணெய் வைத்தப் பிறகு, உங்கள் கூந்தலின் மயிர்க்கால்கள் பாதிக்கப்படக்கூடியதாகவும் உடையக்கூடியதாகவும் மாறும். அதனால், உங்கள் கூந்தலை இறுக்கமாக அல்லது பின்னலில் கட்டுவது வேர்களை பலவீனப்படுத்தி கூந்தல் உதிர்வை ஏற்படுத்தும். ஒரு தளர்வான குறைந்த போனிடெயில் கட்டவும்.

    • ஒயின்களில் இயற்கையான அழற்சி தடுப்பு உட்பொருள்கள் உள்ளன.
    • சுருக்கங்களை சரிசெய்து, தொங்கும் சருமத்தை மீட்டமைக்க உதவுகின்றன.

    ஒயின் ஃபேஷியல், ராப், எக்ஸ்ஃபோலியண்ட், குளியல் போன்றவற்றை உள்ளடக்கிய புதிய அழகு சிகிச்சை முறை வந்துள்ளது. அதன் பெயர் ஒயினோதெரபி என்கிறார்கள். இவற்றில், ரெட், ஒயிட் அல்லது ரோஸ் ஒயின், மூலிகைகள், மற்ற எசன்ஷியல் ஆயில்கள் போன்றவற்றை பயன்படுத்தி சருமத்தை சீரமைத்து, முதுமைத் தடுப்பு சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.

    சிவப்பு திராட்சையின் விதைகள், தோல், இலைகள் ஆகியவற்றில், ஆண்டோசயனோசைட்ஸ், பாலிஃபீனால், பிரோசயனோடல்ஸ் போன்ற உட்பொருள்கள் உள்ளன. இவற்றில் வைட்டமின் ஈயைவிட அதிகமான ஆண்டிஆக்சிடண்ட் பண்புகள் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

    ஒயின்களில் இயற்கையான அழற்சி தடுப்பு உட்பொருள்கள் உள்ளன. கொலாஜன், எலாஸ்டிக் ஃபைபர்களை மீட்டமைப்பதன் மூலம் முதுமையை ஒயின் தடுப்பதாக கூறப்படுகிறது. இவை சுருக்கங்களை சரிசெய்து, தொங்கும் சருமத்தை மீட்டமைக்க உதவுகின்றன. சருமத்துக்கு இதமளித்து, இறந்த செல்களை அகற்றவும் உதவுகிறது.

    ஒயின் ஃபேஷியல்:

    முகத்தை ஸ்டீமிங், கிளென்சிங் செய்த பிறகு, ஒயின், மூலிகைகள், பழங்கள், எசன்ஷியல் ஆயில்களின் கலவை முகத்தில் பூசப்பட்டு மசாஜ் செய்யப்படும். சரும வகையைப் பொறுத்து தேர்ந்தெடுக்கப்படும் ஒயினும் மாறுபடும்.

    ஒயின் ஸ்கிரப்:

    இது குறிப்பிட்ட சீசனில் கிடைக்கும். சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு இது பொருந்தாது. ஒயின் தயாரிப்பின்போது மீதமான திராட்சை தோல்கள் ஸ்கிரப்பாக பயன்படுத்தப்படும், கூடுதல் பலன்களுக்கு கொஞ்சம் ஒயினும் சேர்க்கப்படும்.

    ஒயின் மாஸ்க்:

    எசன்ஷியல் ஆயில்களைக் கொண்டு லேசான முழு உடல் மசாஜ். பின்னர், பழங்கள், சாக்லெட் கொண்டு ஒயின் பேஸ்ட்டால் ராப் செய்யப்படும்.

    • பொடுகு மருத்துவ ரீதியாக செபோரியா என்று அழைக்கப்படுகிறது.
    • எளிய பொருட்களை வைத்தே பொடுகை எளிதாக விரட்டி விடலாம்.

    பொடுகு வெளியே வெள்ளைநிறத்தில் உதிரும் வகை , மற்றொன்று மண்டைப்பகுதியில் மெழுகு மாதிரி படிந்திருக்கும் கண்ணுக்குத் தெரியா வகை என இரண்டு வகை உண்டு. இவற்றில் உங்களுக்கு எந்தவிதமான பொடுகு என்றாலும் அதில் இருந்து நிவாரணம் பெற எளிய சிகிச்சை ஒன்று உள்ளது.

    பொடுகு மருத்துவ ரீதியாக செபோரியா என்று அழைக்கப்படுகிறது. இதை எப்படி போக்கலாம் என தெரியாமல் பலரும் குழம்புகிறார்கள். பொடுகின் முதல்கட்டமாக இருந்தால் நீங்கள் வீட்டில் இருக்கும் ஒரு சில எளிய பொருட்களை வைத்தே அதை எளிதாக விரட்டி விடலாம்.

    அதற்கு வேப்பிலை, வேப்ப எண்ணெய், வேப்பம்பூ, எலுமிச்சை போன்றவற்றை பயன்படுத்தி எளிமையான முறையில் பொடுகு பிரச்சனையில் இருந்து வெளியில் வர முடியும்.

    முதலில் வேப்ப இலைகளை அரைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் மாதிரி செய்து உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை தடவி சுமார் 20 நிமிடங்கள் கழித்து பின்னர் கழுவினால் பொடுகு நீங்கிவிடும்.

    இதேபோல் வேப்பம் பூவை அரைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து அந்த விழுதையும் தலையில் தேய்த்து குளித்து வந்தாலும் பொடுகுத்தொல்லை தீரும்.

    இந்த முறைகளை வாரத்துக்கு ஒரு தடவை செய்யலாம். இதனால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. 

    • உங்கள் உடைக்கு இன்னும் அழகூட்டும். மேலும், உங்களைத் தனித்துக் காட்டும்.
    • அப்படி பயன்படுத்தும் பர்ஃயூம் மற்றவர்கள் இரசிக்கும்படியாக இருக்க வேண்டும்.

    உடையை அழகாகவும், சுத்தமாகவும் அணிந்துகொள்ள விரும்புகிறோம். அது போல உங்களுக்கு ஏற்ற பர்ஃயூமைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது, உங்கள் உடைக்கு இன்னும் அழகூட்டும். மேலும், உங்களைத் தனித்துக் காட்டும்.

    முதலில் என்னனென்ன பர்ஃயூம் (fragrance)இருக்கிறது என்று தெரிந்து கொண்டு அதில் நமக்குப் பொருந்தும் பர்ஃயூமை எப்படி தேர்வு செய்வது என்று பார்க்கலாம்.

    வகைகள்

    சிட்ரஸ் – சிட்ரஸ் பழங்களின் மணம் கொண்டது. எலுமிச்சை, மாண்டரின்(சீன ஆரஞ்சு), பெர்காமோட்(எலுமிச்சை, கிச்சிலி இன வகை) போன்ற நறுமணங்கள்.

    அரோமேட்டிக் – லாவெண்டர், லெமன் க்ராஸ், அனீஸ் போன்ற நறுமணங்கள்.

    ப்ளோரல்(பூ) – ரோஸ், ஜாஸ்மின், லீலாக் போன்ற நறுமணங்கள்.

    க்ரீன்(பச்சை) – புல், கல், இலை போன்ற நறுமணங்கள்.

    ப்ரூட்டி(பழங்கள்) – ரேஸ்ப்பெர்ரி, பியர், பீச் போன்ற நறுமணங்கள்.

    ஸ்பைஸஸ்(மசாலா) – கிராம்பு, ஜாதிக்காய், பட்டை போன்ற நறுமணங்கள்.

    வூடெட்(மரம்) – சிடார்(கேதுரு), பட்சவுளி(குளவி), மோஸ்(பாசி) போன்ற நறுமணங்கள்.

    பால்சாமிக் – வெண்ணிலா, ஹெலியோட்ரோப், டோங்கா பீன் போன்ற நறுமணங்கள்.

    பர்ஃயூம் எண்ணெய் எவ்வளவு சதவிகிதம் இருக்கிறது என்பதை வைத்து, எது தரமான பொருள் என்றும் கண்டறியலாம்.

    30 சதவிகிதம் பர்ஃயூம் எண்ணெய் இருந்தால் 6 முதல் 8 மணி நேரம்வரை வாசனை இருக்கும்.

    5 சதவிகிதம் மட்டுமே பர்ஃயூம் எண்ணெய் இருந்தால் 2 முதல் 3 மணி நேரம்தான் அதன் வாசனை இருக்கும்.

    இப்படி வாசனை திரவியத்தின் எண்ணெயின் சதவிகிதத்தைக் கொண்டும், பாட்டில் அளவைக்கொண்டும் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

    உங்களுக்கான நறுமணத்தை எப்படி தேர்வு செய்வது ?

    பர்ஃயூமின் மனம் (perfume/scent) ஒவ்வொருவருடைய உடல் தன்மைக்கேற்ப மாறுபடும். ஒவ்வொருவருக்கும், அவர்களின் ஹார்மோன், ஃபெரோமோன் பொருத்து பர்ஃயூமின் மனம் ஓங்கியோ அல்லது மங்கியோ இருக்கும். அதனால் அவரவர் மணிக்கட்டில் நீங்கள் வாங்க நினைக்கும் பர்ஃயூமை ஸ்ப்ரே செய்து, கொஞ்ச நேரத்திற்கு பின் முகர்ந்து பாருங்கள். பிறகு முடிவெடுங்கள்.

    உங்களால் கடைக்குச் சென்று தேர்வு செய்ய முடியவில்லை என்றால் ஆன்லைனிலும் வாங்கிக் கொள்ளலாம். தள்ளுபடி உள்ள பர்ஃயூமை பார்த்து மயங்கி விடாதீர்கள். ஆன்லைனில் வாங்குகிறீர்கள் என்றால், நீங்கள் தேர்ந்தெடுப்பதற்குமுன் அவர்கள் சில கேள்வி பதில்கள் வைத்திருப்பார்கள். அதை சரியாக செய்து, ஒவ்வொற்றிற்கும் தகுந்த விளக்கம் இருக்கும், அவற்றையும் சரியாக படிக்க வேண்டும். பிறகு உங்களுக்கான ஒன்றைத் தேர்வு செய்யுங்கள்.


    மேலும், நீங்கள் என்ன மாதிரியான உடை அணிகிறீர்கள், எந்த இடத்திற்கு செல்கிறீர்கள், எங்கு அதிகமாக இருக்கிறீர்கள் போன்றவற்றை மனதில் கொண்டு உங்களுக்கான பர்ஃயூமை தேர்ந்தெடுங்கள்.

    நீங்கள் பயன்படுத்தும் வாசனை திரவியம் நீங்கள் வருவதற்குமுன் சில அடி தூரம்வரை மனம் வீசி நீங்கள் வரப்போகிறீர்கள் என்பதை தெரிவித்துவிடும். அப்படி பயன்படுத்தும் பர்ஃயூம் மற்றவர்கள் இரசிக்கும்படியாக இருக்க வேண்டும். முகம் சுளிக்கும் படியாக இருக்கக் கூடாது.

    முதலில் எந்த கம்பெனி பர்ஃயூம் வாங்கப்போகிறீர்கள் என்று முடிவு செய்யுங்கள். பிறகு, அந்த கம்பெனியில் இருக்கும் மற்ற இரகங்களை ஆராய்ந்து உங்களுக்கான ஒரு பர்ஃயூமை தேர்வு செய்யுங்கள்.

    பார்க் அவென்யூ, ஃபாக், ஃபாரெஸ்ட் ஸ்பைஸ், யார்டலே, ப்ளாக் ஜாக், ஜியோர்ஜியோ அர்மானி, பெர்பெர்ரி பார் வுமன் , குச்சி, ரெவ்லான் சார்லி ரெட் பர்ஃயூம்,கால்வின் கிளைன் போன்றவை இந்தியாவில் பெண்களுக்கான (women) முதன்மை பர்ஃயூம்கள் ஆகும்.

    • முகத்தை அதிகமாக கழுவினாலும் எண்ணெய் வடியும்.
    • மேக் அப் அதிகமாக போடுவதை தவிர்க்கவும்.

    நம் முகம் பளிச்சென்று, எண்ணெய் வடியாது இருக்கவே நாம் விரும்புகிறோம். எண்ணெய் வடியும் முகம் கொண்டவர்கள் சோர்வாக காட்சி தருவதால் சங்கடமடைகிறார்கள். மேக் அப் செய்தாலும் பயனற்று போகிறது.

    சீபம் எனும் திரவம் சருமத்தில் சுரப்பதால் எண்ணெய் வடிவது போல் தோற்றமளிக்கிறது. சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க சீபம் உதவினாலும், அதிகமாக சுரந்தால் முகத்தை மந்தமாக மாற்றிவிடும்.

    உங்கள் முகம் எண்ணெய் வடியும் தன்மை கொண்டதா என்பதை சில அறிகுறிகள் கொண்டு அறியலாம். சருமத் துளைகள், முகத்தில் பிசுபிசுக்கும் தன்மை, 'பிளாக்ஹெட்' எனப்படும் முகத்தில் தோன்றும் கரியநிற முற்கள், முகப்பருக்கள், முரடான சருமம் ஆகியவை உங்கள் முகம் எண்ணெய் வடியும் தன்மை கொண்டதை குறிக்கலாம்.

    சரிவிகித உணவு உட்கொள்வது அவசியமாகும். எண்ணெயில் பொரித்த உணவுகள், இனிப்பு அதிகமுள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும், மேக் அப் அதிகமாக போடுவதை தவிர்க்கவும். இப்பிரச்சனை நீடித்தால் மருத்துவரை அணுகவும்.

    முகத்தில் எண்ணெய் வடிய காரணங்கள் என்ன?

    • உங்கள் குடும்பத்தில் யாருக்காவது எண்ணெய் வடியும் முகம் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்கும் அவ்வாறே இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஏனெனில், இது மரபுவழியாக வர வாய்ப்புண்டு.

    • பருவ வயதினர் மற்றும் இளைஞர்களை காட்டிலும் வயதானவர்களுக்கு இப்பிரச்சனை ஏற்படும் வாய்ப்புகள் குறைவு தான். வயது கூடும் போது சருமத்தில் எண்ணெய் தன்மை குறையும்.

    • பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் சருமத்தை பெருமளவு பாதிக்கிறது. வெப்பமான, ஈரப்பதம் உள்ள பகுதிகளில் வசிப்போருக்கு முகத்தில் எண்ணெய் அதிகமாக சுரக்கும். அதனால் தான் குளிர்காலத்தை காட்டிலும் கோடையில் எண்ணெய் அதிகமாக சுரக்கிறது.

    • முகத்தை அதிகமாக கழுவினாலும் எண்ணெய் வடியும்.

    • ஆண்ட்ரோஜன் எனும் ஹார்மோன் தான் சருமத்தில் எண்ணெய் சுரக்கச் செய்கிறது. பருவ வயதிலும் பிரசவ காலத்திலும் இந்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும்.

    • மன இறுக்கம், உடல் நலக்குறைவு காரணமாகக் கூட முகத்தில் எண்ணெய் அதிகமாக சுரக்கும்.

    • சருமத் துளைகள் பெரிதானால் எண்ணெய் அதிகமாக சுரக்கும். வயது கூடும்போது இப்படி ஆக வாய்ப்புண்டு.

    • சருமத்தில் ஈரப்பதம் குறைந்தால், சருமம் வறண்டு விடும். இதனால் எண்ணெய் அதிகம் சுரக்கும்.

    • சுட்டெரிக்கும் கோடைக்காலங்களில் முடி உதிர்வு, முடி வறட்சி போன்ற எத்தனையோ பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
    • கேரட்டின் ஆரோக்கிய நன்மைகளைப் பெற, மாஸ்க் வடிவில் நேரடியாக உங்கள் தலைமுடியில் தடவி வரலாம்.

    ஆண்கள், பெண்கள் என எந்த பாரபட்சமும் இல்லாமல் அனைவரும் சந்திக்கும் ஒரு தொல்லை, முடி உதிர்வு. குறிப்பாக, இந்த சுட்டெரிக்கும் கோடைக்காலங்களில் முடி உதிர்வு, முடி வறட்சி போன்ற எத்தனையோ பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அந்தவகையில், கூந்தலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இந்த கேரட் ஹேர் மாஸ்கை ஒரு முறை பயன்படுத்திப் பாருங்கள்.

    உடலில் ஊட்டச்சத்து குறைவாக இருந்தால்தான், தலைமுடி ஆரோக்கியத்தை இழக்கும். எனவே, அதற்கேற்றவாரு செயற்கை பொருட்களைப் பயன்படுத்தாமல், நாம் வீட்டில் இருந்தப்படியே கூந்தலை கவனிப்பது மிகவும் அவசியம். கேரட்டில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளதால், இது உங்கள் தலை முடி ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. மேலும், இது உங்கள் தலைமுடியின் வேர்களுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. நல்ல முடி வளர்ச்சியைத் தூண்டவும் கேரட் உதவும். ஒருவேளை உங்களுக்கு கேரட் சாப்பிட பிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். கேரட்டின் ஆரோக்கிய நன்மைகளைப் பெற, மாஸ்க் வடிவில் நேரடியாக உங்கள் தலைமுடியில் தடவி வரலாம். இது அவ்வளவு ஆரோக்கிய நன்மைகளைத் தரும்.


    கேரட் மாஸ்க் செய்ய தேவையானப் பொருட்கள்:

    கேரட் – 1 அல்லது 2

    வாழைப்பழம் – 1

    தயிர் – மூன்று டேபிள் ஸ்பூன்

    பாதாம் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

    தயாரிப்பு மற்றும் பயன்படுத்தும் முறை:

    முதலில் கேரட்டுகளின் தோல்களை சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும். பின்னர் வாழைப்பழத்தை உரித்து, அதனையும் ஜாரில் சேர்த்து மென்மையாக அரைக்க வேண்டும். இறுதியாக அந்தக் கலவையில், தயிர் மற்றும் பாதாம் சேர்த்து தலை முடியில் நன்றாக தடவ வேண்டும். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளிக்க வேண்டும். கோடைக்காலம் முழுவதும் வாரம் ஒருமுறை தொடர்ந்து இதனை செய்து வந்தால், கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்.

    இந்த கேரட் மாஸ்க், உங்கள் முடி வறட்சி ஆகாமல் தடுக்கும். அதேபோல் உச்சந்தலையில் வெப்பத்தால் ஏற்படும் வறட்சியை போக்கி, பொடுகை நீக்கும். மேலும் கூந்தலை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்துக்கொள்வதோடு, முடி உதிராமாலும் பாதுகாக்கும்.

    • முகத்தை எப்பொழுதும் ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும்.
    • மன அழுத்தத்தில் இருந்தாலும் கொலாஜன் உற்பத்தி பாதிக்கப்படும்.

    அழகாக இருக்க வேண்டும் என்று அனைவருக்கும் ஆசை தான். இதனால் பலரும் சந்தையில் விற்கப்படும் கிரீம்களை முகத்தில் அப்ளை செய்துவருகிறார்கள். சிலர் இயற்கை முறையில் தங்களை அழகு படுத்திக் கொள்கின்றனர். இருந்தாலும் பல நபர்களுக்கு இளம் வயதிலேயே தோல் சுருக்கங்கள் ஏற்படுகிறது. அதிலும் வயதானால் தோல் சுருக்கம் ஏற்படுவது இயல்பு தான். அதுவே இளம் வயதிலேயே தோல் சுருங்குகிறது என்றால் வருத்தமாக தான் இருக்கும். இதற்கு காரணம் நாம் எடுத்து கொள்ளும் உணவு முறை, பழக்க வழக்கம் போன்றவை தான் இளமையிலே முதுமை தோற்றம் வருவதற்கு காரணமாக இருக்கிறது.

    புற ஊதா கதிர்கள் தான் தோல் சுருங்குவதற்கு காரணமாக அமைகின்றன. இந்த புற ஊதாக்கதிர்கள் தோலில் உள்ள கொலாஜன் உற்பத்தியை குறைத்து தோலினை சுருங்கச்செய்கிறது.

    நீங்கள் வீட்டில் இருந்தாலும் சரி, வெளியில் சென்று வந்தாலும் சரி, வெயிலில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள உடல் முழுவதையும் ஆடைகளால் மறைத்துக்கொள்வது நல்லது.

    இளமையை தக்கவைத்துக்கொள்வதற்கு புகைப்பழக்கம் மற்றும் மது குடிப்பது போன்றவற்றை தவிர்த்துவிடுவது நல்லது. இது ரத்த ஓட்டத்தை குறைத்துவிடும். இதனால் தோல்கள் பலம் இல்லாமல் தொங்க ஆரம்பித்துவிடும்.

    ஒரு மனிதன் மன அழுத்தத்தில் இருந்தாலும் கொலாஜன் உற்பத்தி பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனாலேயும் தோல் சுருக்கம் ஏற்படும். எப்பொழுதாவது மன அழுத்தம் ஏற்பட்டால் பிரச்சினை இல்லை. இதனால் மன அழுத்தம் ஏற்படும் போதெல்லாம் உங்களுக்கு பிடித்தவற்றை செய்து மன அழுத்தத்தில் இருந்து வெளியே வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

    வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு கூட தோல் சுருக்கங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால் வறண்ட சருமம் கொண்டவர்கள் முகத்தை எப்பொழுதும் ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும்.

    சரியாக தூங்காமல் இருந்தாலும் பிஎச் அளவு மற்றும் ஈரப்பதம் இவை இரண்டும் குறைந்து தோலின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. மேலும் கொலாஜன் உற்பத்தியையும் குறைத்துவிடுகிறது. அதனால் சரியான தூக்கம் என்பது மிகவும் அவசியம்.

    உடலில் சத்துக்கள் குறைந்தாலும் தோல் சுருக்கம் மற்றும் தோல் வியாதிகள் ஏற்படும். இதனால் தினமும் ஜூஸ் அல்லது ஏ.பி.சி. ஜூஸ் குடித்து வரும் போது தோலில் உள்ள சுருக்கங்கள் மறைந்து தோற்றம் பொலிவுபெறும்.

    • கவலை கண்களை குளமாக்குமே தவிர கருமையை குணமாக்காது.
    • வெள்ளரிக்காய் துண்டுகளை கருவளையத்துக்கு மேல் தடவி வரலாம்.

    கண்களைச் சுற்றி கருவளையங்கள் யாருக்கும், எந்த வயதிலும் வரலாம். இதற்கு காரணம், வயது முதிர்வு, பரம்பரை, சில பொருட்களுக்கு ஒவ்வாமை, சரியான தூக்கமின்மை, சருமத்தில் மெலனின் அதிகமாக இருப்பது, ரத்தசோகை, சிகரெட், மது பழக்கம், மன உளைச்சல், அடிக்கடி ஹேர்டை பயன்படுத்துவது போன்றவற்றால் கருவளையம் ஏற்படும்.

    இரண்டு கண்களுக்கும் கீழ் கருமை வந்தால் பயப்படத் தேவையில்லை. சில வீட்டு வைத்தியங்களை செய்து பாருங்கள். அவை பலன் அளிக்காவிட்டால் சரும நோய் சிகிச்சை நிபுணரை சந்தியுங்கள். ஆனால் ஒரு கண்ணுக்கு கீழே மட்டும் கருமை வந்தால் உடனடியாக சரும நோய் சிகிச்சை நிபுணரை சந்தித்து சிகிச்சையை ஆரம்பித்துவிடுங்கள்.

    கருமையைப் போக்க சில வழிமுறைகள்:

    1) கண்களில் கருமை நிறமிருக்கும் இடங்களில் குளிர்ந்த நீரில் நனைத்த துணியை ஒற்றி எடுங்கள் 2) தூங்கும்போது தலையை சற்று தூக்கி வைத்துப்படுங்கள். இதனால் கண்ணின் கீழ் இமை வீங்குவது குறையும்

    3) போதுமான நேரம் நன்றாகத் தூங்குங்கள்

    4) மது, சிகரெட் பழக்கத்தை நிறுத்தவும்

    5) சூரிய ஒளியில் வேலை பார்க்கும்போது புற ஊதாக்கதிர்களில் இருந்து பாதுகாக்கும் கறுப்பு கண்ணாடி, தொப்பி அணிந்து கொள்ளுங்கள். குளுமையை உண்டாக்கும் கிரீம்களைத் தடவிக் கொள்ளுங்கள்

    6) வெள்ளரிக்காய் துண்டுகளை கருவளையத்துக்கு மேலே தடவி ஒத்தடம் இடுங்கள்

    7) ஆரோக்கியமான, சத்தான உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்களை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

    கவலை கண்களை குளமாக்குமே தவிர கருமையை குணமாக்காது. எனவே கவலைப்படாதீர்கள். வீட்டு வைத்தியம் பலன் தராவிட்டால் உடனே சருமநோய் சிகிச்சை நிபுணரை சந்திப்பது சிறந்தது.

    • சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களையும், கருமையையும் போக்கும்.
    • முதுமைத் தோற்றம் ஏற்படுவதை தடுக்கும்.

    கிரீன் டீ குடிப்பதால் ஏற்படும் அழகின் நன்மைகள் பற்றி தெரிமா? கிரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறையும் என்று அனைவருக்குமே நன்கு தெரிந்த விஷயம் தான். மேலும் பல திரையுலக நட்சத்திரங்களின் அழகின் ரகசியம் என்னவாக இருக்குமென்றால் அது கிரீன் டீயாகத் தான் இருக்க முடியும்.

    பலரிடம் கிரீன் டீயைப் பற்றி கேட்டால் அனைவரும் சொல்வது, "கிரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும். அதுமட்டுமல்லாமல், முகம் பொலிவாக இருக்கும்" என்பது தான்.

    கிரீன் டீ குடிப்பதால், தலை முதல் கால் வரை நிறைய அதிசயிக்கத்தக்க நன்மைகள் நிறைந்துள்ளன. ஏனெனில் இதில் உள்ள அளவுக்கு அதிகமான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர ஆரோக்கியமான பல ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. சரி, இப்போது இந்த கிரீன் டீ குடிப்பதாலும், சருமத்திற்கு பயன்படுத்துவதாலும், என்ன மாதிரியான அழகு நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

    கிரீன் டீயில் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், அவை சருமத்தில் பழுதடைந்துள்ள செல்களை புதுப்பித்து, முதுமைத் தோற்றம் விரைவில் ஏற்படுவதை தடுக்கும். அதற்கு கிரீன் டீயை குடித்தாலோ அல்லது அதனை சருமத்திற்கு தேய்த்து, மசாஜ் செய்து வந்தாலோ, அவை சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுத்து, ஆங்காங்கு இருக்கும் கருமையையும் போக்கும்.

    பருக்கள் அடிக்கடி உடைந்து பரவுவதற்கு காரணம், சருமத்தில் டாக்சின்கள் தங்கியிருப்பதே ஆகும். ஆகவே கிரீன் டீயை குடித்தால், அவை சருமத்தின் அடியில் தங்கியிருக்கும் டாக்சின்களை வெளியேற்றி, பருக்கள் அதிகம் ஏற்படுவதைத் தடுக்கும்.

    கிரீன் டீயை சருமத்திற்கு தேய்த்தாலோ அல்லது குடித்தாலோ, அவை சருமத்தை தாக்கும் புறஊதாக்கதிர்களின் தாக்கத்தை எதிர்த்து, செல்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கும். அதுமட்டுமின், இவை சருமத்தின் நிறம் மாறாமலும் தடுக்கும்.

    எப்போது சருமத்தில் டாக்சின்கள் அதிகம் இருக்கிறதோ, அப்போது தான் சருமம் பொலிவின்றி காணப்படும். ஆகவே இத்தகைய டாக்சின்களை முற்றிலும் போக்கும் திறன் கிரீன் டீயில் உள்ளது. எனவே அழகான மற்றும் பொலிவான சருமம் வேண்டுமெனில் கிரீன் டீயை தொடர்ந்து பருகுவது நல்லது.

    • கொலாஜன் செல்களை உயிர்பிக்க ஆவிபிடிக்க வேண்டும்.
    • தக்காளி ஆண்டி ஏஜிங் செல்களை உயிர்பிக்க உதவுகிறது.

    முகத்தில் வரும் புள்ளிகளுக்கு Acne என்று பெயர். pimples என்றும் அழைப்பார்கள். இது வெள்ளை நிறத்திலோ, சிவந்தோ காணப்படும். தோல் அடைபட்டு இருக்கும் நிலை இது.

    இளம் வயதில் பலருக்கும் முகத்தில் பரு வரலாம். இது வெள்ளை நிறத்திலோ, சிவந்தோ காணப்படும். தோல் அடைபட்டு இருக்கும் நிலை இது. முகத்தில் முடி வளரும் இடத்தில் அழிந்த திசுக்களுடன் எண்ணெய் பசையும் சேர்ந்து அடைபட்டு போவதால் பரு வருகிறது. முகம், கழுத்து, மார்பு, பின்புறம், தோள்பட்டை போன்ற இடங்களில் இது வரலாம்.

    பருக்கள் வந்தால் அதை தொடாதீர்கள், உடைக்காதீர்கள், கிழிக்காதீர்கள் அப்படி செய்தால் தோள்களில் உள்ள கொலாஜன் என்னும் செல்கள் இறந்து பெரிய குழி மற்றும் தழும்பாக மாறிவிட வாய்ப்புகள் அதிகம்.

    கொலாஜன் செல்களை உயிர்பிக்க ஆவிபிடிக்க வேண்டும். பின்னர் முகத்தை 5 நிமிடம் கைகளால் நன்றாக மசாஜ் செய்து லகுவாக்க வேண்டும்.

    தக்காளி, முல்தானிமட்டி, ரோஸ்வாட்டர் ஆகியவற்றை மிக்சியில் சேர்த்து ஒன்றாக அரைத்து குளைத்து முகத்தில் தடவி வர வேண்டும். இதனைத் தொடர்ந்து 30 நாட்கள் முகத்தில் தடவி வரும்போது பருக்கள், தழும்புகள் மறைவதைக் காணலாம்.

    தக்காளியில் உள்ள ஆண்டிஆக்ஸிடெண்ட் முகத்தில் உள்ள எண்ணெய் தன்மையை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆண்டி ஏஜிங் செல்களை உயிர்பிக்க உதவுகிறது.

    தினமும் 4 லிட்டர் சீரக தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் ரத்த சுத்திகரிப்புக்காக தினமும் ஏபிசி ஜூஸ் குடிக்க வேண்டும். மேலும் ஐஸ் கியூப்களை கொண்டு தினமும் இரண்டு நிமிடம் மசாஜ் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது முகத்துக்கும், உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது.

    துத்தி இலையை அரைத்துப் பருக்கள் மீது தடவிவரப் பருக்கள் மறையும்.

    வெட்டி வேர் நூறு கிராம், சந்தனத் தூள் 25 கிராம் ஆகிய இரண்டையும் தூள் செய்து நீர்விட்டுக் கலந்து கட்டிகள் மீது தடவிவர, முகப் பருக்கள், வேனல் கட்டிகள் மாறும்.

    பாசிப் பருப்புப் பொடியுடன் நெல்லிக்காய் தூள் கலந்து சோப்புக்கு பதில், தினசரி குளிக்கப் பயன்படுத்தினால் பருக்கள் மறைந்து முகம் பொலிவுபெறும்.

    முகத்தில் தழும்புகள் அதிகம் இருந்தால் ஆவாரை இலை சாறு எடுத்து முகத்தில் தடவிவரத் தழும்புகள் மறைந்து, முகம் பளபளப்பாக மாறிப் பொலிவு பெறும்.

    ×