என் மலர்
கிச்சன் கில்லாடிகள்
குழந்தைகளுக்கு மீன் மிகவும் பிடிக்கும். சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு சூப்பரான சைடு டிஷ் லெமன் ஃபிஷ் பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மீன் துண்டுகள் - அரை கிலோ (துண்டு மீன்)
சின்ன வெங்காயம் - 50 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
மீனை ஊற வைப்பதற்கு:
எலுமிச்சைச் சாறு - அரை டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

செய்முறை :
சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மீனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து அதிலிருக்கும் நீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கழுவிய மீனை போட்டு அதனுடன் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு பிரட்டி 30 நிமிடங்கள் ஊற விடவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய பச்சைமிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்றாக வதக்கவும்.
அடுத்து அதில் மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி விட்டு, கலவையை பேனில் சமமாக பரப்பி அதன் மேல் மீன் துண்டுகளை வைத்து அடுப்பை சிறு தீயில் வைத்து மூடி போட்டு வேக விடவும்.
மீன் ஒரு புறம் வெந்தவுடன் திருப்பிப் போட்டு மறுபுறமும் வேக விட்டு இறக்கவும். மீனுடன் மசாலாக் கலவையும் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
மீன் துண்டுகள் - அரை கிலோ (துண்டு மீன்)
சின்ன வெங்காயம் - 50 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
மீனை ஊற வைப்பதற்கு:
எலுமிச்சைச் சாறு - அரை டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

செய்முறை :
சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மீனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து அதிலிருக்கும் நீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கழுவிய மீனை போட்டு அதனுடன் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு பிரட்டி 30 நிமிடங்கள் ஊற விடவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய பச்சைமிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்றாக வதக்கவும்.
அடுத்து அதில் மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி விட்டு, கலவையை பேனில் சமமாக பரப்பி அதன் மேல் மீன் துண்டுகளை வைத்து அடுப்பை சிறு தீயில் வைத்து மூடி போட்டு வேக விடவும்.
மீன் ஒரு புறம் வெந்தவுடன் திருப்பிப் போட்டு மறுபுறமும் வேக விட்டு இறக்கவும். மீனுடன் மசாலாக் கலவையும் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
லெமன் ஃபிஷ் பிரை, சாதத்துடன் சாப்பிட சுவையான சைடு டிஷ்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஐஸ்கிரீம் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே வாழைப்பழம் சேர்த்து சாக்லேட் ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பெரிய வாழைப்பழம் - 3
கருப்பு பேரீச்சை பழம் - 12
கோகோ பவுடர் - 2 ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை :
கருப்பு பேரீச்சை பழத்தை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறிய பின்பு கொட்டை நீக்கி சதையை தனியாக எடுத்துக் கொள்ளவும்.
வாழைப் பழத்தை தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும்.
மிக்ஸியில் நறுக்கிய வாழைப் பழத்தை சேர்த்து அரைக்கவும்.
மிக்ஸியில் வாழைப் பழத்துடன் பேரீச்சை சேர்த்து அரைக்கவும்.
அடுத்ததாக கோகோ பவுடர், உப்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து மைய அரைக்கவும்.
அரைத்ததும் அதை ஒரு கண்ணாடி டப்பாவில் ஊற்றி ஃபிரீசரில் வைக்கவும்.
ஐஸ்கிரீம் பதத்திற்கு உறைந்ததும், தேவைப்பட்டால் பிஸ்தா, பாதாமை உடைத்து அதன் மேல் தூவலாம்.
சுவையான பனானா சாக்லெட் ஐஸ்கிரீம் தயார்.
பெரிய வாழைப்பழம் - 3
கருப்பு பேரீச்சை பழம் - 12
கோகோ பவுடர் - 2 ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
ஏலக்காய் - ஒரு சிட்டிகை

செய்முறை :
கருப்பு பேரீச்சை பழத்தை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறிய பின்பு கொட்டை நீக்கி சதையை தனியாக எடுத்துக் கொள்ளவும்.
வாழைப் பழத்தை தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும்.
மிக்ஸியில் நறுக்கிய வாழைப் பழத்தை சேர்த்து அரைக்கவும்.
மிக்ஸியில் வாழைப் பழத்துடன் பேரீச்சை சேர்த்து அரைக்கவும்.
அடுத்ததாக கோகோ பவுடர், உப்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து மைய அரைக்கவும்.
அரைத்ததும் அதை ஒரு கண்ணாடி டப்பாவில் ஊற்றி ஃபிரீசரில் வைக்கவும்.
ஐஸ்கிரீம் பதத்திற்கு உறைந்ததும், தேவைப்பட்டால் பிஸ்தா, பாதாமை உடைத்து அதன் மேல் தூவலாம்.
சுவையான பனானா சாக்லெட் ஐஸ்கிரீம் தயார்.
இதில் சேர்க்கப்பட்ட வாழைப்பழம் மற்றும் கருப்பு பேரீச்சை உடலுக்கு பல ஊட்டச்சத்துகளை கொடுக்கக் கூடியவை என்பதால் பயமில்லாமல் சாப்பிடலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு வெரைட்டியாக செய்து கொடுக்க விரும்பினால் தேங்காய்ப்பால், உருளைக்கிழங்கு சேர்த்து பிரியாணி செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி, தேங்காய்ப் பால் - தலா ஒரு கப்,
வெங்காயம் - 2,
சின்ன உருளைக்கிழங்கு - 1 கப்,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3,
பட்டை - ஒரு துண்டு,
ஏலக்காய், கிராம்பு - தலா 1,
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,

செய்முறை
ப.மிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக வெட்டிக்கொள்ளவும்.
சின்ன உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்.
அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து, தண்ணீர் வடித்து, நெய்யில் வறுத்து வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதங்கியதும் உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
பிறகு, நெய்யில் வறுத்த அரிசியைப் போட்டு நன்கு கலக்கி, தேங்காய்ப் பால் சேர்க்கவும்.
மிதமான தீயில் ஒரு விசில் வரும் வரை வேக விட்டு, சில நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
ஆவி போனதும், மூடியைத் திறந்து, நறுக்கிய கொத்த மல்லி தூவி பரிமாறவும்.

நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

சூப்பரான தேங்காய்ப்பால் உருளைக்கிழங்கு பிரியாணி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
புளிச்சக்கீரை மட்டன் குழம்பு மிகவும் சுவையாகவும், காரமாகவும் இருக்கும். ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை மட்டன் குழம்பை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
புளிச்சக்கீரை - 1 கட்டு
மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 4
கிராம்பு - 3
பட்டை - 1 இன்ச்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது

செய்முறை :
புளிச்சகீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், புளிச்சக் கீரையை சேர்த்து வதக்கி மூடி வைத்து, 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கி நன்றாக மசித்துகொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளித்த பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மட்டன் துண்டுகளை சேர்த்து 10 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பின் அதில் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, 1 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி குறைவான தீயில் 6 விசில் விட்டு இறக்க வேண்டும்.
விசில் போனதும், குக்கரை திறந்து மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் மசித்த புளிச்சக்கீரையை சேர்த்து கிளறி மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து, பின் கரம் மசாலா சேர்த்து பிரட்டி கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.

ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை மட்டன் குழம்பு ரெடி !
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பிரெட்டில் பல்வேறு சுவையான ரெசிபிகளை செய்யலாம். இன்று பிரெட் வைத்து சூப்பரான குளுகுளு குல்ஃபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பிரெட் - தேவைக்கேற்ப,
பால் - 1/2 கப்,
குங்குமப்பூ - சிறிது,
பாதாம் மில்க் பவுடர் - 2 டீஸ்பூன்,
கன்டன்ஸ்டு மில்க் - 1/2 டின்,
சோள மாவு - 1 டீஸ்பூன்,

செய்முறை
பிஸ்தா, பாதாமை ஊற வைத்து தோல் உரித்து அவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
முந்திரியையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பிரெட்டின் ஓரத்தை வெட்டி விட்டு மிக்ஸியில் போட்டு தூளாக்கவும்.
கடாயில் காய்ச்சிய பாலை ஊற்றி, அதில் கன்டன்ஸ்டு மில்க், பிரெட் தூள் கலந்து கொதிக்க விடவும்.
சிறிது பாலில் ஊற வைத்த குங்குமப் பூவை சேர்த்து நன்றாக கலந்து அத்துடன் சேர்க்கவும்.
அடுத்து அதில் சோள மாவு, பாதாம் மில்க் பவுடரை கொதிக்கும் பாலில் கலக்கவும்.
அடுத்து அதில் நறுக்கிய பிஸ்தா, பாதாம், முந்திரியை சேர்த்து சற்று திக்கான பதம் வந்தவுடன் இறக்கி விடவும்.
கலவை ஆறிய பின் குல்ஃபி மோல்டில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் 4 மணி நேரம் வைத்திருந்து பரிமாறவும்.
பிரெட் - தேவைக்கேற்ப,
பால் - 1/2 கப்,
குங்குமப்பூ - சிறிது,
பாதாம் மில்க் பவுடர் - 2 டீஸ்பூன்,
கன்டன்ஸ்டு மில்க் - 1/2 டின்,
சோள மாவு - 1 டீஸ்பூன்,
முந்திரி, பிஸ்தா, பாதாம் - தேவைக்கேற்ப.

செய்முறை
பிஸ்தா, பாதாமை ஊற வைத்து தோல் உரித்து அவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
முந்திரியையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பிரெட்டின் ஓரத்தை வெட்டி விட்டு மிக்ஸியில் போட்டு தூளாக்கவும்.
கடாயில் காய்ச்சிய பாலை ஊற்றி, அதில் கன்டன்ஸ்டு மில்க், பிரெட் தூள் கலந்து கொதிக்க விடவும்.
சிறிது பாலில் ஊற வைத்த குங்குமப் பூவை சேர்த்து நன்றாக கலந்து அத்துடன் சேர்க்கவும்.
அடுத்து அதில் சோள மாவு, பாதாம் மில்க் பவுடரை கொதிக்கும் பாலில் கலக்கவும்.
அடுத்து அதில் நறுக்கிய பிஸ்தா, பாதாம், முந்திரியை சேர்த்து சற்று திக்கான பதம் வந்தவுடன் இறக்கி விடவும்.
கலவை ஆறிய பின் குல்ஃபி மோல்டில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் 4 மணி நேரம் வைத்திருந்து பரிமாறவும்.
சூப்பரான பிரெட் குல்ஃபி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஹோட்டல் ஸ்டைலில் செய்யும் இந்த இறால் உருண்டை குழம்பு மிகவும் அருமையாக இருக்கும். சாதம், தோசை, சப்பாத்திக்கு அருமையான இறால் கோலா உருண்டை குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இறால் - முக்கால் கிலோ,
கடலை மாவு - அரை கப்,
சின்ன வெங்காயம் - 150 கிராம்,
பெரிய வெங்காயம் - 3,
தக்காளி - 4,
மீன் வறுவல் மசாலா - 50 கிராம்,
மிளகாய்த் தூள் - 2 டேபிள் ஸ்பூன்,
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - சிறிதளவு,
சோம்பு, சீரகம், கசகசா - தலா ஒரு டீஸ்பூன்,
இஞ்சி - பூண்டு விழுது - 3 டீஸ்பூன்,
தேங்காய் - அரை மூடி,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,

செய்முறை :
இறாலை நன்றாக சுத்தம் செய்து வெதுவெதுப்பான நீரில் முக்கி எடுத்து தனியே வைக்கவும்.
கொத்தமல்லி, சின்ன வெங்காயம், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சின்ன வெங்காயத்துடன் சோம்பு, சீரகம், கசகசா ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்.
தேங்காயை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் மீன் வறுவல் மசாலா, மிளகுத் தூள், இஞ்சி - பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், அரைத்து வைத்த வெங்காய விழுது, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு திக்கான மாவு பதத்தில் வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒவ்வொரு இறாலாக தனியாக எடுத்து மாவுடன் உருட்டி, சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து தனியாக வைக்கவும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் மீதமுள்ள இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து குழைய வேக விடவும்.
தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கிய பின்னர், சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
அரைத்த தேங்காய் விழுதை அதனுடன் கலந்து, திக்கான பதம் வந்ததும் பொரித்த இறால் உருண்டைகளை சேர்த்து, அடுப்பை ‘சிம்’மில் வைத்து வேக விடவும்.

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

குழம்பு திக்கான பதம் வந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்த மல்லி தூவி இறக்கினால்… சுவையான இறால் கோலா உருண்டை குழம்பு ரெடி!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பழங்கள் சேர்த்து ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீமை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
திராட்சை, ஆப்பிள், மாம்பழம், கொய்யா, கிவி, ஸ்ட்ராபெரி மற்றும் பப்பாளி பழ கலவை - 2 கப்,
எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்,
பொடித்த சர்க்கரை - ஒரு டேபிள் ஸ்பூன்,

செய்முறை
ஆப்பிள், மாம்பழம், கொய்யா, கிவி, ஸ்ட்ராபெரி, பப்பாளி பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பழக்கலவையை போட்டு அதனுடன் எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சேர்த்துக் கலந்து பிரிட்ஜில் வைத்து குளிர வைக்கவும்.
2 மணி நேரம் கழித்து எடுத்து இதன் மேல் ஐஸ்கிரீமை போட்டு பரிமாறவும்.
விருப்பப் பட்டால் சிறு துண்டுகளாக நறுக்கி வறுத்த பாதாம், முந்திரியை மேலே தூவியும் பரிமாறலாம்.

வெனிலா ஐஸ்கிரீம் - 2 கப்.

சூப்பரான ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சூடான சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மாங்காய் - மட்டன் குழம்பு. இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சின்ன வெங்காயம் - 100 கிராம்
மட்டன் - 200 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
கரம் மசாலாத் தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
நல்லெண்ணெய் - தேவையான அளவு
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
மாங்காய் - கால்பகுதி மாங்காய் (நறுக்கவும்)

செய்முறை:
மட்டனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மாங்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பிரஷர் குக்கரில் மட்டன், இஞ்சி பூண்டு விழுது பாதியளவு, மிளகாய்த்தூள், உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் பச்சை மிளகாய், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், மாங்காய்த் துண்டுகள் போட்டு வதக்கவும்.
மாங்காய் நன்றாக வெந்ததும கடைசியில் வேக வைத்த மட்டனைப் போட்டுப் புரட்டி அடுப்பை அணைத்து கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான மாங்காய் - மட்டன் குழம்பு ரெடி
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவருக்கும் பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஸ்பெஷல் பெங்களூர் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - 1 கிலோ
அரிசி - 1 கிலோ
எண்ணெய் - 100 கிராம்
வெங்காயம் - 500 கிராம்
தக்காளி - 500 கிராம்
தயிர் - 1 கப்
சிகப்பு மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
நெய் - 150 கிராம்
இஞ்சி விழுது - 1 1/2 ஸ்பூன்
பூண்டு விழுது - 1 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி தழை -1 கப்
புதினா - 1 1/2 கப்
ப. மிளகாய் - 5
பட்டை பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் - தேவையான அளவு
தனியா பொடி - 1 தேக்கரண்டி
கலர் பொடி - 1 சிட்டிகை
எலுமிச்சை பழம் - 1

செய்முறை:
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
ஒரு பெரிய கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பாதி வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்து கொள்ளவும்.
பின்னர் அதில் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை ஏலக்காய் போட்டு பொரிந்ததும் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதங்கியதும் மீதமுள்ள வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் பாதி கொத்தமல்லி, புதினாவை போட்டு கிளறவும்.
அடுத்து பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு போட்டு வதங்கியவுடன் சிக்கன், தயிர், தனியா பொடி, 1/2 மூடி எலுமிச்சை சாறு தக்காளி, மீதி கொத்த மல்லி, புதினாவையும் போட்டு வேக விடவும்.
சிக்கன் நன்றாக வெந்தது எண்ணெய் பிரிந்து வரும் போது 1 கப் அரிசிக்கு 1 1/2 கப் சூடு நீர் ஊற்றி கொதிக்க விடவும்
தண்ணீர் நன்றாக கொதித்ததும் கலர் பொடி, உப்பு போடவும். அரிசியை 20 நிமிடம் முன்பே ஊற வைத்து நன்றாக வடிகட்டவும்.
அரிசியை போட்டு நன்றாக கிளரவும். அரிசி பாதி வேகும் வரை தீயை அதிகமாக வைக்க வேண்டும்.

நெய் - ஒரு தேக்கரண்டி

முக்கால் பகுதி அரிசி வெந்தவுடன் தீயை குறைத்து மீதமுள்ள பாதி எலுமிச்சை ஜீஸ், பொரித்து வைத்த வெங்காயத்தை போட்டு சட்டி்யை சுற்றிலும் துணி கட்டி தம்மில் போடவும். 10 நிமிடங்கள் கழித்து இறக்கினால் சுவையான ஸ்பெஷல் பெங்களூர் சிக்கன் பிரியாணி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வீட்டில் இருக்கும் கோதுமை மாவை வைத்து அதனுடன் வெங்காயம் சேர்த்து சூப்பராக போண்டா எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். இது குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
தயிர் - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :
வெங்காயம், ப,மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு சுத்தமான பவுலில் கோதுமை மாவு, அரிசி மாவு, உப்பு போட்டு நன்றாக கலக்கவும்,
அடுத்து அதனுடன் தயிர், பெரிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். மாவு கட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் தெளித்து போண்டா மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
இந்த மாவை 1 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவினை சிறிய சிறிய உருண்டையாக எடுத்து போடவும். போண்டா ஒருபுறம் நன்றாக வெந்து சிவந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான கோதுமை வெங்காய போண்டா ரெடி.
கோதுமை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
தயிர் - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :
வெங்காயம், ப,மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு சுத்தமான பவுலில் கோதுமை மாவு, அரிசி மாவு, உப்பு போட்டு நன்றாக கலக்கவும்,
அடுத்து அதனுடன் தயிர், பெரிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். மாவு கட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் தெளித்து போண்டா மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
இந்த மாவை 1 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவினை சிறிய சிறிய உருண்டையாக எடுத்து போடவும். போண்டா ஒருபுறம் நன்றாக வெந்து சிவந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான கோதுமை வெங்காய போண்டா ரெடி.
இதற்கு தொட்டுக்கொள்ள வெங்காய சட்னி அருமையாக இருக்கும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஃபிஷ் டிக்காவை ஹோட்டலில் சாப்பிட்டு இருப்பீங்க. ஊரடங்கு காரணமாக ஹோட்டலுக்கு செல்ல முடியாத காரணத்தால் வீட்டிலேயே ஃபிஷ் டிக்காவை செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
துண்டு மீன் - அரை கிலோ
கெட்டியான தயிர் - 1 கப்
எண்ணெய் - 4 டீஸ்பூன்
வெங்காயம் விழுது - 1 டீஸ்பூன்
இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்
பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
தனியா தூள் - 1 தேக்கரண்டி
சீரகம் தூள் - 1 தேக்கரண்டி
பட்டை தூள் - 1/4 தேக்கரண்டி
ஜாதிக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:
மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் கெட்டியான தயிர், வெங்காயம் விழுது, எண்ணெய், இஞ்சி விழுது, பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், தனியா தூள், சீரகம் தூள், பட்டை தூள், சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக மென்மையான பேஸ்ட்டை தயாரிக்கவும்.
அடுத்து அதில் கழுவி வைத்த மீனை போட்டு மசாலா மீனில் நன்றாக படும் படி பிரட்டவும்.
கலந்த மீனை மூடி, பிரிஜில் 1 மணி நேரம் வைக்கவும்.
அடுத்து மீனை வெளியே எடுத்து சிறிது கொத்தமல்லி சேர்க்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த மீனை போட்டு ஒருபுறம் நன்றாக வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறம் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
சுவையான ஃபிஷ் டிக்கா ரெடி.

பச்சை சட்னியுடன் பரிமாறவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கிரில்டு இறாலை ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் கிரில்டு இறால் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
இறால் - 500 கிராம்
பூண்டு - 5 பெரியது
எலுமிச்சை சாறு - 3 மேசைக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
அரைத்த மிளகு - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:
இறலை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இறாலுடன் நசுக்கிய பூண்டு, எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய், அரைத்த மிளகு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
கிரில்லை சூடாக்கி அனைத்து இறால்களையும் ஒரே லேயராக பெரிய ஆவன்-ப்ரூப் பாத்திரத்தில் வைக்கவும்.
பாத்திரத்தை கிரில்லின் கீழ் வைக்கவும்.
இறாலின் ஒரு புறத்தை 2-3 நிமிடங்கள் கிரில் செய்யவும்.
பாத்திரத்தை வெளியே எடுத்து, இறால்களைத் திருப்பவும். மறு புறமும் 2-3 நிமிடங்கள் கிரில் செய்யவும்.

பின் கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான கிரில்டு இறால் ரெடி.