என் மலர்tooltip icon

    சமையல்

    குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சுவைமிக்க, பிஷ் தவா கிரில்டு செய்வதற்கான எளிய செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வாவல் மீன் - 3
    முட்டை - 1
    அரிசி மாவு - 1/2 கப்
    எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    மஞ்சள் துாள் - 1/2 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    மிளகாய் துாள் - 1 டீஸ்பூன்
    மல்லி துாள் - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - 1 கொத்து
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

    பிஷ் தவா கிரில்டு

    செய்முறை :

    மீனை சுத்தம் செய்து, அதன் மீது குறுக்காக ஸ்லைஸ் போடுவது போல, ஆங்காங்கே வெட்டிக் கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், மல்லி துாள் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

    மீனின் மீது இந்த மசாலாவை சேர்த்து நன்றாக பிரட்ட வேண்டும். மீனில் மசாலா நன்கு இறங்க வேண்டும்.

    அடுத்து அதில் நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழையை சேர்க்கவும்.

    இறுதியாக, அரிசி மாவு, முட்டை இரண்டையும் கலந்து, அரை மணிநேரம் ஊறவிடவும்.

    'நான்-ஸ்டிக்' கிரில் தவாவில் எண்ணெய் சூடானதும், மீனை நன்கு வறுக்கவும். இரண்டு பக்கமும் நன்கு வெந்ததும், தட்டில் வைத்து கொத்தமல்லி தழையை தூவி, வெங்காயம் மற்றும் எலுமிச்சை சேர்த்து பரிமாறவும்.

    சூப்பரான பிஷ் தவா கிரில்டு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முட்டையை ஒரே விதமாக சமைத்துச் சாப்பிடும் போது, அலுப்பு தோன்றலாம். பொரி, காய்கறிகள், முட்டை சேர்த்து சுவையான, சத்தான சாலட் செய்யும் முறை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முட்டை - 2
    பொரி - 1 கப்
    வெங்காயம் - 2
    கொத்தமல்லி சட்னி - 2 ஸ்பூன்
    கேரட் - 2
    ப.மிளகாய் - 2
    பீட்ரூட் - 2
    கொத்தமல்லி தழை - 1 கையளவு
    எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப

    முட்டை வெஜிடபிள் பொரி சாலட்

    செய்முறை :

    ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட், பீட்ரூட்டை துருவிக்கொள்ளவும்.

    முட்டையை வேக வைத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொரியை போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி சட்னி, துருவிய கேரட், பீட்ரூட் மற்றும் கொத்தமல்லி தழை ஆகியற்றை சேர்த்து, நன்கு கலந்துகொள்ளவும்.

    பின், ருசிக்கேற்ப உப்பு சேர்த்து, உடன் எலுமிச்சை சாறு, நறுக்கிய முட்டையை கலந்தால், சுவையான முட்டை வெஜிடபிள் பொரி சாலட் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாதி, நாண், சாதம், தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் காடை பெப்பர் கிரேவி. இன்று இந்த கிரேவியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    காடை - 6
    மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
    இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
    பெரிய வெங்காயம் - 3
    தக்காளி - 3
    மிளகாய் - 2
    தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்ட
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
    மிளகு - 1/2 டேபிள் ஸ்பூன்
    சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
    சோம்பு - 1/4 டேபிள் ஸ்பூன்
    ஏலக்காய் - 2
    பட்டை - 2 இன்ச்
    தேங்காய் எண்ணெய் - தேவைக்கு

    காடை பெப்பர் கிரேவி

    செய்முறை

    காடையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிளகு, சீரகம், சோம்பு, ஏலக்காய், பட்டை இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கொஞ்சம் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை இவை அனைத்தும் சேர்த்து தாளிக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் ப.மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக குழைய வேகவிடவும்.

    பின்பு காடை, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து 1/4 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

    அடுத்து அதில் தயிர் சேர்த்து குறைந்த தணலில் வேக விடவும்.

    காடை அரை வேக்காடு வெந்ததும் திரித்த தூள்களை சேர்த்து வேக விடவும்.

    எண்ணெய் பிரிந்து வரும்வரை குரைந்த தணலில் வைத்தே வேகவிடவும்

    பின்பு எலுமிச்சை சாறு ஊற்றி கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.

    நெய் சோறு, சப்பாத்தி, ரசம் சோறு ஆகியவற்றுடன் பரிமாற சுவையாக இருக்கும்.

    சூப்பரான காடை பெப்பர் கிரேவி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. மேலும் உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும்.
    தேவையான பொருட்கள் :

    மைசூர் தால் - 1 கப்,
    தக்காளி - 4,
    இஞ்சி - 1 துண்டு,
    பூண்டு - 5 பல்,
    பச்சை மிளகாய் - 2,
    மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
    எலுமிச்சைச் சாறு - 1 டேபிள் ஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்.

    தக்காளி தால்

    செய்முறை:

    பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து, மலர வேகவைத்து கொள்ளவும்.

    தக்காளியை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

    இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழையைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்..

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின்னர் அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.

    இதனுடன், தக்காளி, மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கி, இதை அப்படியே பருப்பில் சேருங்கள்.

    இதில் தேவையான உப்பு போட்டு, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

    கடைசியாக, எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்துப் பரிமாறுங்கள்.

    சூப்பரான தக்காளி தால் ரெடி.

    குறிப்பு: தாளிக்கும்போது, எண்ணெயைக் குறைத்து ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால், ருசியும் மணமும் அதிகரிக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சீரகம் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. சீரக நீர் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது. இன்று சீரகத்தை வைத்து குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சீரகம் - 2 டேபிள்ஸ்பூன்
    புளித்தண்ணீர்- ஒரு எலுமிச்சை அளவு
    பெரிய வெங்காயம் - 1
    பூண்டு -  15 பல்
    சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    வெல்லம் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க:

    நல்லெண்ணெய் - ஒன்றரை டேபிள் ஸ்பூன்
    கடுகு - 1 டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 1
    கறிவேப்பிலை - சிறிது
    வெந்தயம் - கால் டீஸ்பூன்
    பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை

    பூண்டு சீரகக் குழம்பு

    செய்முறை:

    வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் அதில் எண்ணெய் விடாமல் சீரகத்தை வாசனை வரும் வரை வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள்.

    புளியை ஒரு கப் நீரில் 10 நிமிடம் ஊறவைத்து கரைத்து கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின்னர் வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்த்து வதக்குங்கள்.

    அடுத்து அதில் நறுக்கிய வெங்காயம், தோல் உரித்த பூண்டுப்பல்லைச் சேர்த்து 3 நிமிடம் வதக்குங்கள்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் சாம்பார் பொடி மற்றும் மஞ்சள்தூளைச் சேர்த்து மீண்டும் வதக்கி, புளித்தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடுங்கள்.

    பச்சை வாசனை போனதும் பொடித்த சீரகப்பொடி, தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.

    நன்கு கொதித்ததும் அடுப்பை மிதமாக்கி வெல்லத்தைச் சேர்த்து 5 முதல் 8 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கிப் பரிமாறுங்கள்.

    ஒவ்வொரு முறையும் சீரகத்தை வறுத்து அரைத்து உபயோகப்படுத்தி, இந்தக் குழம்பை வைத்தால் 2 முதல் 3 நாள்கள் வரை கெடாமல் இருக்கும்.

    சூப்பரான பூண்டு சீரகக் குழம்பு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெள்ளரிக்காய் பிடிக்குமானால், அதனை அப்படியே பச்சையாக சாப்பிடுவதற்கு பதிலாக, மதிய வேளையில் சாதத்தோடு சாப்பிடுவதற்கு ஏற்றவாறு தால் செய்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.
    தேவையான பொருட்கள்:

    வெள்ளரிக்காய் - 1
    துவரம் பருப்பு - 100 கிராம்
    வெங்காயம் - 1
    தக்காளி - 2
    பூண்டு - 4
    வரமிளகாய் - 2 பச்சை
    மிளகாய் - 2  
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    உப்பு - தேவையான அளவு
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    கொத்தமல்லி - சிறிதளவு
    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
    புளிச்சாறு - சிறிது

    வெள்ளரிக்காய் தால்


    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெள்ளரிக்காயை தோல் நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி கொள்ள வேண்டும்.

    துவரம் பருப்பை நன்றாக கழுவி குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 3-4 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், வரமிளகாய் சேர்த்து தாளித்த பிறகு அதில் பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.‘

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் வெள்ளரிக்காய் துண்டுகளை சேர்த்து சிறிது வதக்கி, தண்ணீர் சிறிது ஊற்றி, மூடி வைத்து மிதமான தீயில் வேக வைக்கவும்.

    வெள்ளரிக்காய் ஓராளவு வெந்ததும், அத்துடன் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து, அதோடு வெண்ணெயையும் சேர்த்து கிளறி, சிறிது புளிச்சாற்றினை சேர்த்து கொதிக்க விட்டு, கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.

    சூப்பரான வெள்ளரிக்காய் தால் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வாயில் போட்டவுடன் கரைந்து போய்விடக் கூடியது சாக்லேட் பிரவுனி. இன்று இந்த பிரவுனியை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வெண்ணெய் - — 70 கிராம்
    சர்க்கரை - — 70 கிராம்
    கண்டென்ஸ்டு மில்க் - — 140 மி.லி.
    தண்ணீர் - — 65 மி.லி.
    மைதா மாவு - — 140 கிராம்
    பேக்கிங் பவுடர் - — 1 தேக்கரண்டி
    பேக்கிங் சோடா - — 1 தேக்கரண்டி
    நறுக்கிய வால்நட் - — 200 கிராம்
    சாக்லேட் - — 125 கிராம்

    சாக்லேட் பிரவுனி

    செய்முறை

    1 வெண்ணெய், சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தில் பால், தண்ணீர் இவற்றை கலக்கவும், பின்னர் இதை மெதுவாக வெண்ணெய் கலவையுடன் சேர்க்கவும்.

    மைதா மாவு, பேக்கிக் பவுடர், பேக்கிக் சோடாவை கலக்கவும், அதனுடன் வால்நட்டை சேர்க்கவும்.

    சாக்லேட்டை டபுள் பாய்லரில் வைத்து நன்றாக உருகும் வரை காத்திருக்கவும். அதை பால் கலவையுடன் கலக்கவும். பின்னர் மென்மையாக மாவுடன் சேர்த்து கலக்கவும்.

    பட்டர் பேப்பர் வைக்கப்பட்ட ஒரு ட்ரேவில் இந்த கலவையை ஊற்றி, 180மு சென்டிகிரேடில் 40 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.

    கேக் ரெடியானதும் குளிர்வித்து, சதுரம் சதுரமாக வெட்டவும்.

    சூடான காஃபியுடன் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடல் நலத்தை பேணும் வகையில் விதவிதமான பச்சடி வகைகளை தயார் செய்து ருசிக்கலாம். இன்று பழவகைகளை பயன்படுத்தி பச்சடி தயார் செய்வது பற்றி பார்ப்போம்.
    தேவையான பொருட்கள் :

    நறுக்கிய அன்னாசி பழம் - கால் கப்
    நறுக்கிய ஆப்பிள் - கால் கப்
    உலர் திராட்சை - 10
    நறுக்கிய பேரீச்சம் பழம் - 10
    நாட்டு சர்க்கரை - தேவைக்கு
    காய்ச்சிய பால் - கால் கப்
    தயிர் - அரை கப்
    ஏலக்காய் தூள் - சிறிதளவு
    லவங்கத்தூள் - சிறிதளவு
    தேன் - 1 டேபிள்ஸ்பூன்
    உப்பு - சிறிதளவு

    பழ தயிர் பச்சடி

    செய்முறை:

    அகன்ற பாத்திரத்தில் அன்னாசி பழம், ஆப்பிள், உலர் திராட்சை, பேரீச்சம் பழம் ஆகியவற்றை ஒன்றாக போட்டு கிளறவும்.

    பிறகு நாட்டு சர்க்கரை, பால், தயிர் போன்றவற்றை கலக்கவும்.

    அதைத்தொடர்ந்து தேன், ஏலக்காய் தூள், லவங்கத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து பரிமாறலாம்.

    சூப்பரான பழ தயிர் பச்சடி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு நேரத்தில் ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். ஸ்வீட் கார்ன், சீஸ் சேர்த்து நக்கட்ஸ் செய்து கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.
    தேவையான பொருட்கள்

    ஸ்வீட் கார்ன் - 1 கப்
    மக்காச்சோள மாவு - 4 தேக்கரண்டி
    உருளைக்கிழங்கு - 1
    பிரெட் தூள் - கால் கப்
    சீஸ் துருவல் - கால் கப்
    மைதா மாவு - கால் கப்
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    ஸ்வீட் கார்ன் சீஸ் நக்கட்ஸ்

    செய்முறை :

    ஸ்வீட் கார்னை வேகவைத்து ஆறியதும் மிக்சியில் போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுது, மசித்த உருளைக்கிழங்கு, சீஸ் துருவல், மிளகாய்த்தூள், சோள மாவு, உப்பு, சேர்த்து நன்றாக பிசையவும்.

    பிறகு மாவை விரும்பிய வடிவில் உருட்டி வைக்கவும்.

    அகலமான தட்டில் மைதா மாவுடன், பிரெட் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

    உருட்டிய நக்கட்ஸ்களை மைதா கலவையில் புரட்டி எடுத்து வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.

    வாணலியில் எண்ணெயை காய விட்டு உருட்டி வைத்த நக்கட்ஸ்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான ஸ்வீட் கார்ன் சீஸ் நக்கட்ஸ் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வேர்க்கடலையை பச்சையாகச் சாப்பிடுவதைவிட, அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். இன்று வேர்க்கடலையில் சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    வேர்க்கடலையை பச்சையாகச் சாப்பிடுவதைவிட, அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் இதை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையை தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில் தான் அதிக அளவு சத்துகள் உள்ளன.

    தேவையான பொருட்கள்:

    பச்சை வேர்க்கடலை - 1 கப்
    தேங்காய் - தேவையான அளவு
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்ழுன்
    வரமிளகாய் - 4
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
    எண்ணெய் - அரை டீஸ்பூன்

    வேர்க்கடலை சுண்டல்

    செய்முறை:

    வேர்க்கடலையை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையை கழுவிப் போட்டு, போதிய அளவு தண்ணீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, மூடி 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்த பின்னர் வேக வைத்துள்ள வேர்க்கடலை மற்றும் உப்பு சேர்த்து கிளறி, துருவி வைத்துள்ள தேங்காயை போட்டு 2 நிமிடம் பிரட்டி இறக்கினால், சூப்பரான வேர்க்கடலை சுண்டல் ரெடி!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பிஸ்கெட், சீஸ் வைத்து வீட்டிலேயே எளிய முறையில் கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவைப்படும் பொருட்கள்

    கிரீம் சீஸ் - 250 கிராம்
    விப்பிங் கிரீம் - 200 மில்லி
    பவுடர் சுகர் - 3/4 கப்
    பிஸ்கெட் (கிராக்கர் பிஸ்கட்) - 100 கிராம்
    பட்டர் -  50 கிராம்
    பிரவுன் சுகர் அல்லது வொய்ட் சுகர் - 1/2 கப்
    வெண்ணிலா எசன்ஸ் - 2 மூடி

    பிஸ்கெட் சீஸ் கேக்

    செய்முறை:


    முதலில் பிஸ்கட்டை பொடியாக நொறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் சூடானதும் பட்டரை போட்டு உருகியதும் அடுப்பில் இருந்து இறக்கி பிரவுன் சுகர் அல்லது வொய்ட் சுகர் மற்றும் பொடியாக நொறுக்கிய பிஸ்கெட்டையும் அதனுடன் சேர்க்க வேண்டும்.

    குழிவான கேக் டிரேயில் பட்டர் பேப்பர் விரித்து அந்த டிரேயில் பிஸ்கெட் கலவையை பரப்பி வைக்க வேண்டும்.

    அந்த பிஸ்கெட்டை கரண்டியால் அழுத்த வேண்டும். அதனை பிரிட்ஜ்ஜில் வைத்து செட் செய்ய வேண்டும்.

    அரை வெப்பநிலையில் கிரீம் சீஸை வைத்து எடுத்த பின்பு அதனுடன் வெண்ணிலா எசன்ன்ஸ், பவுடர் சுகர் போட்டு ஹேன்ட் மிக்‌ஸரில் வைத்து பீட் செய்ய வேண்டும்.

    பிறகு விப்பிங் கிரீமை ஒரு பவுலில் போட்டு 2 நிமிடம் பீட் செய்ய வேண்டும்.

    விப்பிங் கிரீமையும், சீஸ் கிரீம் கலவையையும் ஒன்றாக மிருதுவாக பிரட்ட வேண்டும்.

    இதனை பிரிட்ஜில் வைத்து இருக்கும் பிஸ்கட்டின் மேல் போட்டு பரப்ப வேண்டும்.

    இதனை இரவு முழுவதும் பிரிட்ஜுக்குள் வைத்து எடுத்தால்.. அட்டகாசமான சுவையில் பிஸ்கெட் சீஸ் கேக் ரெடியாகி விடும்.

    உங்களுக்கு பிடித்த பழமோ அல்லது ஜெல்லியோ அதன் மேல் வைத்து சாப்பிடலாம்.

    .பழமோ, ஜெல்லியோ வைப்பதாக இருந்தால் சீஸ் கிரீம் செட் ஆன பின்பு தான் வைக்க வேண்டும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ப்ரோக்கோலி உடலுக்கு அதிக அளவு சத்துக்களை கொடுக்க கூடிய உணவாகும். ப்ரோக்கோலியை வைத்து சப்பாத்தி செய்வது எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    ப்ரோக்கோலி  - 1/4 கப்
    கோதுமை மாவு - 1 1/2 கப்
    கொத்தமல்லி - சிறிதளவு
    இஞ்சி - ஒரு சிறு துண்டு
    உப்பு - தேவைகேற்ப
    எண்ணெய் - தேவையான அளவு

    ப்ரோக்கோலி சப்பாத்தி

    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி ப்ரோக்கோலி  மூன்று நிமிடம் கொதிக்க விடவும். பின்பு இறக்கி ஆறிய பின் தண்ணீரை வடிகட்டி ப்ரோக்கோலி யை தனியே எடுத்து வைத்து கொள்ளவும்.

    இஞ்சி, ப்ரோக்கோலி, கொத்தமல்லி, ப்ரோக்கோலி வேகவைத்த தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் உப்பு, அரைத்த ப்ரோக்கோலி விழுது, தேவையான அளவு ப்ரோக்கோலி வேகவைத்த தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

    பிசைந்து வைத்துள்ள மாவை உருண்டைகளாக உருட்டி சப்பாத்திக்கு தட்டுவது போல் தட்டி போட்டு எடுக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    இப்போது சூடான சுவையான ப்ரோக்கோலி சப்பாத்தி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×