என் மலர்
பொது மருத்துவம்
- கோதுமை ரவை ஒரு மிகக் குறைந்த கிளைசிமிக் இன்டெக்ஸ் ஆகும்.
- குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் ஏற்படாமல் தடுக்கிறது.
100 கிராம் கோதுமை ரவையில் 152 கலோரிகள், 28 கிராம் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், 5 கிராம் புரதம் இருக்கிறது. மேலும் இதில் வைட்டமின் பி1, பி2, பி6, பாஸ்பரஸ், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், கால்சியம், இரும்பு சத்து ஆகியவையும் இருக்கிறது. இதன் சர்க்கரை உயர்தல் குறியீடு 41 ஆகும். இது ஒரு மிகக் குறைந்த கிளைசிமிக் இன்டெக்ஸ் ஆகும். இதில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், செரிமானத்தை தாமதப்படுத்தி குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் ஏற்படாமல் தடுக்கிறது.
கோதுமை ரவையில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ரத்த கொதிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் மெக்னீசியம் இதய ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாததாக கருதப்படுகிறது. கோதுமை ரவையில் வைட்டமின் பி1, பி2, பி6, புரதம், நார்ச்சத்து அதிகமாக இருப்பதாலும், கொழுப்பு மற்றும் கிளைசிமிக் இண்டெக்ஸ் மிகக்குறைவாக இருப்பதாலும், நீரிழிவு நோயாளிகள் தாராளமாக கோதுமை ரவையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
- அச்சுறுத்தும் நோய்களில் ஒன்றாக நீரிழிவு நோய் காணப்படுகிறது.
- வயது வித்தியாசமின்றி இந்த நோய் தாக்கும் ஆபத்து உள்ளது.
சர்வதேச அளவில் மக்களை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்றாக நீரிழிவு நோய் காணப்படுகிறது. வயது வித்தியாசமின்றி இந்த நோய் தாக்குதல் ஆபத்து உள்ளது. வரும்முன் காப்போம் என்பதை கருத்தில் கொண்டு உணவுப்பழக்கம், வாழ்வியல் முறைகளில் கட்டுப்பாடு போன்றவற்றை முறையாக கடைப்பிடிப்பதன் மூலம் இந்த நோய் வராமல் பாதுகாக்க இயலும். ஒரு வேளை நோய் தாக்குதல் இருந்தாலும் அதை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
நீரிழிவு நோய் குறித்த பல்வேறு சந்தேகங்களும், நம்பிக்கைகளும் மக்களிடம் உள்ளது. அவற்றுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் உதவும் மருத்துவ தகவல்களை காண்போம்.
டைப்-1, டைப்-2 நீரிழிவு நோய்
டைப் 1 நீரிழிவு நோய் சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினரிடையே காணப்படும் நோயாகும். இதில் கணையத்தில் உள்ள பீட்டா செல்களை உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்கள் அழிக்கிறது. இது ஒரு தன்னியக்க நோய் எதிர்ப்பு நிலையாகும். இது மரபணு காரணங்கள் மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களால் ஏற்படலாம். டைப் 1 நீரிழிவு நோயில், இன்சுலின் உற்பத்தி முற்றிலும் நடைபெற முடியாமல் போகிறது. தாய்க்கு டைப் 1 நீரிழிவு நோய் இருக்கும்போது குழந்தைக்கு மூன்று சதவிகிதமும் தந்தைக்கு டைப்1 நீரிழிவு நோய் இருக்கும் போது குழந்தைக்கு ஐந்து சதவிகிதமும் இந்நோய் ஏற்பட அபாயம் உள்ளது.
டைப் 2 நீரிழிவு நோய்
அனைத்து வயதினரையும், குறிப்பாக 30 வயதை கடந்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது ஒரு வளர்சிதை மாற்ற நோயாகும். இந்நோயில், உடலில் இன்சுலின் உற்பத்தி குறைவாக இருப்பதாலும், அப்படி சுரக்கப்படும் இன்சுலின் உடலில் உள்ள இன்சுலின் எதிர்ப்பு நிலையால் (இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்) திறம்பட செயல்பட முடியாமல் போகிறது. இதனால் ரத்த சர்க்கரை அதிகமாகிறது. உடல் பருமன், தவறான உணவு பழக்கங்கள் மற்றும் தவறான வாழ்க்கை முறை பழக்க வழக்கங்கள் இதை ஏற்படுத்துகிறது.
பரிசோதனைகள்
டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயினை உறுதிப்படுத்த ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதிக்கப்படுகிறது. இதில் உணவுக்கு முன் ரத்த சர்க்கரை அளவு, உணவு உண்ட பின் இரண்டு மணி நேரம் கழித்து எடுக்கப்படும் ரத்த சர்க்கரை அளவு, குளுக்கோஸ் சகிப்புத்தன்மை சோதனை (ஜி.டி.டி), எச்.பி.ஏ1சி, இன்சுலின் அளவு, சீ-பெப்டைட் டெஸ்ட் போன்ற பரிசோதனைகள் செய்யப்படுகிறது.
டைப் 1 நீரிழிவு நோயை டைப் 2 நீரிழிவு நோயிலிருந்து வேறுபடுத்துவதற்கு சில குறிப்பிட்ட பரிசோதனைகள் இருக்கிறது. இதற்கு ஆன்ட்டிபாடி டெஸ்ட் என்று (பிற பொருள் எதிரி) பெயர். இந்த பரிசோதனையில் ஜி. ஏ.டி ஆன்டிபாடீஸ் (குளுடாமிக் ஆசிட்டிகார்பாக்சிலேஸ்), இன்சுலினோமா அசோசியேட்டடு 2ஆட்டோ ஆன்ட்டிபாடிஸ் IA-2A, இன்சுலின் ஆட்டோ ஆன்ட்டிபாடிஸ் (IAA), ஐலட் செல் சைடோபிலாஸ்மிக் ஆட்டோ ஆன்டிபாடிஸ் (ICA) போன்ற பிறப்பொருள் எதிரி பரிசோதனைகள் செய்து டைப் 1 நீரிழிவு நோயை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

ஆரம்பகட்டத்திலேயே எப்படி கண்டறிவது?
நீரிழிவு நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதற்கு ஓரல் குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட் (ஓ.ஜி. டி.டி) பரிசோதனை செய்ய வேண்டும். இப்பரிசோதனையில் முதலில் வெறும் வயிற்றில் ரத்த சர்க்கரை பரிசோதனை (பாஸ்டிங் பிளட் சுகர்) செய்யப்படுகிறது. பின்னர் தண்ணீரில் 75 கிராம் குளுக்கோஸ் கலந்து குடித்துவிட்டு, இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் ஒருமுறை ரத்தச் சர்க்கரை அளவு பரிசோதனை செய்து பார்க்கப்படுகிறது.
வெறும் வயிற்றில் 100 மி.கி/டெசி லிட்டருக்கு குறைவாகவும், சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து எடுக்கப்படும் ரத்த சர்க்கரை அளவு 140 மி.கி/டெசி லிட்டருக்கு குறைவாகவும் இருந்தால் அவர்களுக்கு நீரிழிவு நோய் இல்லை என்று அர்த்தம்.
வெறும் வயிற்றில் 101 மி.கி/டெசி லிட்டர் முதல் 125 மி.கி/டெசி லிட்டர் வரை ரத்தச் சர்க்கரை இருந்தால், அது இம்பேர்டு பாஸ்டிங் குளுக்கோஸ் ஆகும். இது சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையாகும். இதை ப்ரீடயாபட்டீஸ் என்றும் அழைப்பார்கள். சாப்பிட்ட பின் ரத்தச் சர்க்கரை அளவு 141 மி.கி/டெசிலிட்டர் முதல் 199 மி.கி/டெசிலிட்டர் வரை இருந்தால் இம்பேர்டு குளுக்கோஸ் டாலரன்ஸ் என்று பெயர். இதுவும் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையாகும்.
வெறும் வயிற்றில் 126 மி.கி/டெசிலிட்டருக்கு மேல் இருந்தாலும், சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து ரத்த சர்க்கரை அளவு ௨௦௦ மி.கி/டெசிலிட்டருக்கு மேலிருந்தாலும் அவர்களுக்கு நீரிழிவு நோய் உள்ளது என்று அர்த்தம்.
நீரிழிவு நோய் அறிகுறி இல்லாதவர்களுக்கும் இந்த ஓரல் குளுக்கோஸ் டெஸ்ட் செய்து பார்க்க வேண்டும். இந்த ஓரல் குளுக்கோஸ் டெஸ்ட்டை, 40 வயதை கடந்தவர்கள், நீரிழிவு நோய் உள்ள குடும்ப பாரம்பரியத்தில் பிறந்தவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், உயர் ரத்த கொலஸ்ட்ரால் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், உடல் உழைப்பு இல்லாமல் வேலை செய்பவர்கள், கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள், அதிக எடை உள்ள குழந்தை பெற்றெடுத்தவர்கள் கண்டிப்பாக செய்து பார்க்க வேண்டும்.
அதிகமாக வியர்ப்பது ஏன்?
நீரிழிவு நோயாளிகளில் ஒரு சில பேருக்கு அதிகமான அளவு வியர்ப்பதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுவது...
ஹைபர்ஹைட்ரோசிஸ்:
இதில் காரணம் இல்லாமல் அதிகமாக வியர்க்கும் நிலையை பிரைமரி ஹைபர்ஹைட்ரோசிஸ் எனவும், ஏதேனும் காரணத்தோடு ஏற்படும் அதிகமான வியர்வையை செகண்டரி ஹைப்ரோ ஹைட்ராசிஸ் அல்லது டயாப்ரோசிஸ் என்றும் கூறுவார்கள்.
கஸ்டேட்டரி ஸ்வெட்டிங்:
இது காரமான உணவை உண்ணும்போதோ அல்லது நுகரும்போதோ முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் அதிகமான வியர்வை ஏற்படும். இது பெரும்பாலும் அட்டானமிக் நரம்புகள் (தன்னிச்சை நரம்புகள்) பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும்.
இரவு நேர வியர்த்தல்:
இது பெரும்பாலும் ரத்த சர்க்கரை தாழ்நிலையால் ஏற்படலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு இதுபோன்று அதிகமான வியர்க்கும் நிலையான ஹைப்ரோஹைட்ராசிஸ்க்கு முக்கிய காரணம், டயாபட்டிக் அட்டானமிக் நரம்பியல் பாதிப்பு, உடல் பருமன் அல்லது மாத்திரைகளின் பக்கவிளைவுகளால் ஏற்படலாம். இதை தவிர்ப்பதற்கு உடல் எடையை குறைக்க வேண்டும்.
மதுப்பழக்கம், புகைப் பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். ரத்த சர்க்கரை அளவை அடிக்கடி சரிபார்த்து மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து இன்சுலின் மற்றும் சர்க்கரை மாத்திரைகளின் டோசை மாற்றி அமைத்து சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதிகமான வியர்வை ஏற்படுதல் தொற்றுக்கும், உடலில் இருந்து துர்நாற்றம் வீசவும் வழி வகுக்கும்.
மாத்திரை உட்கொள்ள மறந்து விட்டால்?
நீரிழிவு நோயாளிகள் பொதுவாக மாத்திரைகளை ஞாபகமறதி காரணமாக சில நேரம் உட்கொள்ள மறந்து விடுகிறார்கள். சில சமயம் மறந்து போனதற்கும் சேர்த்து நிறைய மாத்திரைகளை ஒரே நேரத்தில் உட்கொள்கிறார்கள். சிலர் மாத்திரைகள் வாங்க முடியாத சூழ்நிலையில் மாத்திரைகளை உட்கொள்ள தவறலாம்.
எப்போதாவது ஒருமுறை மாத்திரையை தவறுவது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் அடிக்கடி நீரிழிவு மாத்திரைகளை உட்கொள்ள தவறும்போது ரத்த சர்க்கரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. நீங்கள் மாத்திரையை தவறவிட்ட ஒரு சில மணி நேரத்திற்குள் அதை உணரும் போது உடனே மாத்திரையை உட்கொள்ளுங்கள்.
ஆனால் மாத்திரை உட்கொள்ள தவறியதை மிகத்தாமதமாக அடுத்த டோஸ் மாத்திரையை போட வேண்டிய நேரத்தில் உணர நேர்ந்தால், நீங்கள் தவற விட்ட மாத்திரை டோசை தவிர்த்து வழக்கமாக போட வேண்டிய மாத்திரை டோசை உட்கொள்ளுங்கள்.
எக்காரணம் கொண்டும் தவறவிட்ட மாத்திரையையும் வழக்கமாக உட்கொள்ள வேண்டிய மாத்திரையையும் சேர்த்து இரண்டு மாத்திரைகளாக போடக்கூடாது.
- உணவு விரைவாக செரிமானமாக வேண்டும்.
- உணவின் வகையை பொறுத்து செரிமான முறை அமையும்.
இருக்கிறது. எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரத்தில் செரிமானமாகும் என்பது பற்றி பார்ப்போம்.

தண்ணீர்
தண்ணீர் விரைவாக செரிமானம் ஆகக்கூடியது. இருப்பினும் வயிறு நிரம்பியுள்ளதை பொறுத்து அது ஜீரணமாகும் நேரம் மாறுபடும். வெறும் வயிற்றில் தண்ணீர் பருகினால் ஐந்து நிமிடங்களுக்குள் அது உறிஞ்சப்பட்டுவிடும். ஆனால் அதிக அளவு உணவு சாப்பிட்டு விட்டு அதன் பிறகு தண்ணீர் பருகினால் அது உறிஞ்சப்படுவதற்கு சில மணி நேரமாகிவிடும்.

ஜூஸ்
பழச்சாறு பருகினால் அது சுமார் 20 நிமிடங்களில் ஜீரணமாகிவிடும். அதில் இருக்கும் சத்துக்கள் விரைவாக உறிஞ்சப்பட்டு உடல் உறுப்புகளை சென்றடைந்துவிடும். அதன் மூலம் ஆரோக்கியம் வலுப்படும். ஸ்மூத்திகளை பருகினால் அவை செரிமானம் ஆவதற்கு சுமார் 30 நிமிடங்கள் தேவைப்படும். எந்த உணவுகளை உட்கொண்டாலும் அதனுடன் இது போன்ற நார்ச்சத்துமிக்க உணவுகளையும் அடிக்கடி சாப்பிட வேண்டும். அவைதான் செரிமான மண்டலத்திற்கு சிறந்தவை.

பழங்கள்
முலாம்பழம், ஆரஞ்சு, திராட்சை மற்றும் வாழைப்பழங்கள் சுமார் 30 நிமிடங்களில் செரிமானமாகிவிடும். ஆப்பிள், பேரிக்காய், கிவி, செர்ரி போன்றவை ஜீரணமாக சுமார் 40 நிமிடங்கள் செலவாகும். தர்பூசணி பழம் விரைவாக செரிமானமாகக்கூடியது. அதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் 20 நிமிடங்களுக்குள்ளாகவே செரிமான செயல்முறை ஒட்டுமொத்தமாக நடைபெற்று முடிந்துவிடும். குடல் இயக்கம் சுமூகமாக நடைபெறுவதற்கும் உதவி புரியும். அதேவேளையில் செரிமான பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு உணவுகளுடன் பழங்களை சேர்த்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

காய்கறிகள்
பழங்களை விட காய்கறிகள் ஜீரணிக்க சற்று கூடுதல் நேரம் தேவைப்படும். இருப்பினும் கீரை, வெள்ளரிக்காய், குடை மிளகாய், தக்காளி உள்ளிட்ட நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகள் செரிமானமாகி வயிற்றை விட்டு வெளியேற சுமார் 30 நிமிடங்கள் ஆகலாம். முட்டைக்கோஸ், காலிபிளவர், புரோக்கோலி உள்ளிட்ட காய்கறிகள் 40 நிமிடங்களில் செரிக்கப்படும். கேரட், பீட்ரூட் உள்ளிட்ட வேர் காய்கறிகள் செரிமானமாக சுமார் 50 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, சோளம் போன்றவை செரிமானமாக சுமார் ஒரு மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.

தானியங்கள்
பழுப்பு அரிசி, ஓட்ஸ் போன்ற தானியங்கள் செரிமானமாகி வயிற்றில் இருந்து வெளியேற சுமார் ஒன்றை மணி நேரம் ஆகலாம். அதுபோல் பருப்பு வகைகள், பீன்ஸ் போன்றவை செரிமானமாவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் தேவைப்படும்.

இறைச்சி
எண்ணெய் இல்லாத மீன் வகைகள், கடல் உணவுகளை சாப்பிட்டால் அவை 30 நிமிடங்களுக்குள் செரிமானமாகிவிடும். அதே நேரத்தில் சால்மன், மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள் செரிமானம் அடைவதற்கு 50 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். ஆடு, கோழி, மாடு, பன்றி போன்றவைகளின் இறைச்சிகளை உட்கொண்டால் அவை ஜீரணமாவதற்கு 4 முதல் 6 மணி நேரமாகும். சில சமயங்களில் முழுமையாக செரிமானம் ஆவதற்கு 24 மணி நேரத்திற்கும் மேலாகும்.

பால் பொருட்கள்
கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பாலாடைக்கட்டிகள் ஜீரணிக்க சுமார் 2 மணி நேரமாகும். கெட்டியான பாலாடைக்கட்டிகள் ஜீரணமாக5 மணி நேரம் கூட ஆகலாம். முட்டையின் மஞ்சள் கரு மட்டும் ஜீரணமாகுவதற்கு 30 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். முழு முட்டையும் செரிமானமாவதற்கு சுமார் 45 நிமிடங்களாகும்.

நட்ஸ்கள்-விதைகள்
எள், சூரியகாந்தி, பூசணி விதைகள் ஜீரணமாக சுமார் 2 மணி நேரம் தேவைப்படும். பச்சை வேர்க்கடலை, பாதாம், முந்திரி பருப்புகள், அக்ரூட் பருப்புகள் போன்றவை ஜீரணமாகுவதற்கு சுமார் 3 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.
- உடலில் ‘தடுப்பாற்றல் மண்டலம்’ என்ற தற்காப்பு படை உள்ளது.
- நுண் கிருமிகளிடம் இருந்து உடலைப் பாதுகாத்து வருகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தவரை, `இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி', 'செயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி' என இரண்டு வகைகள் உண்டு. கோடிக்கணக்கான நுண்கிருமிகள் உடலின் திசுக்களுக்குள்ளும், உறுப்புகளுக்குள்ளும் புகுந்து நம்மை ஆட்டிப் படைக்கின்றன.
மனித உடலில் 'தடுப்பாற்றல் மண்டலம்' என்ற தற்காப்புப் படை உள்ளது. இதுதான் நுண் கிருமிகளிடம் இருந்து உடலைப் பாதுகாத்து வருகிறது. நாம் நடந்தாலும், ஓடினாலும், அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தாலும், உறங்கினாலும் 24 மணி நேரமும் இடையறாது நம்மைக் காவல் காக்கிறது. நம் ரத்தம்தான் இதன் 'தலைமையகம்'.
ரத்த வெள்ளை அணுக்கள்தான் போர் தளபதிகள். டி அணுக்கள், பி அணுக்கள், 'மேக்ரோபேஜ்' அணுக்கள், 'எதிர் அணுக்கள்' என்று பலதரப்பட்ட சிப்பாய்கள் போர் தளபதியின் கீழ் இயங்கும் படையில் இரவு பகல் பாராமல் பணிபுரிகின்றனர். ரத்தக்குழாய்களும், ரத்தக் குழாய்க்கு வெளியில் இருக்கும் நிணநீர்க் குழாய்களும்தான் யுத்தம் நடக்கும் இடங்கள்.
கண்ணுக்குத் தெரியாத நுண் கிருமிகளுடன்தான் யுத்தம். வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, புரோட்டோசோவா ஆகிய நான்கு வகைகளில் அவை அடங்கும். இந்த 'எதிரிகள்' நம் உடலுக்குள் நுழையும்போது, அவர்களை தடுக்க ரத்த வெள்ளை அணுக்கள் கட்டளையிடுகின்றன.
அதை ஏற்று, சிப்பாய் படை எதிரிகளைக் கொல்கின்றன. சில சிப்பாய்கள், கொல்லப்பட்ட எதிரிகளை அப்படியே விழுங்கி, அந்த இடத்தை துப்புரவு செய்கின்றன.
இந்த எதிரிகளை நினைவில் வைத்துக்கொண்டு, இனியும் இதுபோன்ற எதிரிகள் உடலுக்குள் நுழைகிறார்களா என்பதை வேவு பார்க்க உளவாளிகளும் உண்டு. இப்படி, நம் எதிரிகளை அழித்து, அவை உண்டாக்கும் பல நோய்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது, உடலின் தற்காப்புப்படை. இதற்கு 'நோய் எதிர்ப்பு சக்தி' அல்லது `நோய்த் தடுப்பாற்றல்' என்று பெயர்.
நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தவரை, 'இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி', 'செயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி' என இரண்டு வகைகள் உண்டு. 'இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி' என்பது உடலில் பிறவியிலேயே அமைந்திருப்பது.
செயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி என்பது, தடுப்பு மருந்துகள் தருவது. ஒரு நோய்க் கிருமியை அழிப்பதற்கு நம் உடலில் எதிர்ப்புச் சக்தி கிடைக்க வேண்டும் என்றால், அந்தக் கிருமியையே உடலுக்குள் செலுத்த வேண்டும். இதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டவைதான் தடுப்பூசிகள்.
தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகள் மூலம் வீரியம் குறைந்த நோய்க் கிருமிகளைச் சிறிதளவு நம் உடலுக்குள் செலுத்தினால், அந்தக் கிருமிகளுக்கு எதிராக 'எதிர் அணுக்கள்' உருவாகி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிவிடும். பிறகு, மற்றொரு சமயத்தில் இதே நோய்க்கிருமிகள் நம் உடலுக்குள் நுழையும்போது, ஏற்கனவே உள்ள எதிர் அணுக்கள் அந்தக் கிருமிகளை அடையாளம் கண்டு அழிக்கின்றன.
- ஹீமீகுளோபின் என்பது ரத்த அணுக்களில் உள்ள புரோட்டீன்.
- சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் ரத்தசோகை.
ஹீமோகுளோபின் என்பது சிவப்பு ரத்த அணுக்களில் உள்ள புரோட்டீன் அளவாகும். இது உடலின் மற்ற பாகங்களுக்கு ஆக்சிஜனை செலுத்தி அவற்றிலிருந்து கார்பன் - டை- ஆக்சைடை உறிஞ்சி நுரையீரலுக்கு கடத்துகிறது. அப்படி உங்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கிறது எனில் ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். இதற்கு ரத்த சோகை (anemia) என்று பெயர். இந்த ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இரும்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். அப்படி இரும்பு சத்து நிறைந்த சில உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தாலே போதுமானது. அவை என்னென்ன பார்க்கலாம்.
ரத்தம் எவ்வளவு இருக்க வேண்டும்:
ஆண்களுக்கு 13.5 முதல் 17.5 கிராம் வரை இருக்க வேண்டும். பெண்களுக்கு 12.0 முதல் 15.5 கிராம் வரை இருக்க வேண்டும்.
உடலில் இரும்புச்சத்து குறைவதால் உடலில் ரத்தத்தின் அளவு குறைகிறது. அதனால் காய்கறிகள், முட்டைகள், தானியங்கள், பருப்பு வகைகள், அசைவ உணவுகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
போலிக் அமிலம் என்பது பிகாம்ப்ளக்ஸ் வைட்டமின் ஆகும். இவை உடலில் ரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது. போலிக் அமிலம் குறைவாக இருந்தால் ஹீமோகுளோபின் அளவும் குறையும். அதனால் பச்சை காய்கறிகள், வேர்க்கடலை, வாழைப்பழம், பிரக்கோலி, ஈரல் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
மாதுளையில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை ஹீமோகுளோபினை அதிகரிக்க மிகச்சிறந்த ஒன்றாகும். அதனால் தினமும் ஒரு மாதுளை சாப்பிட வேண்டும்.
பேரிச்சம்பழம் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச்செய்து இரும்புச்சத்தை அளிக்கிறது. ஒரு நாளைக்கு தினமும் 3 பேரிச்சை பழமாவது சாப்பிட வேண்டும். சர்க்கரை நோய் பிரச்சினை உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.
பீட்ருட்டில் பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலம் போன்றவை உள்ளது. எனவே தினமும் பீட்ருட் ஜூஸ் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.
பருப்பு, வேர்க்கடலை, பட்டாணி மற்றும் பீன்ஸ் போன்ற பருப்பு வகைகள் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச்செய்யும் உணவு வகைகள் ஆகும். அவற்றில் உள்ள இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலம் உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரிக்க உதவி செய்கிறது.
- ஸ்டிராய்டு சொட்டு மருந்து பயோகிப்பவர்களுக்கு வர அதிக வாய்ப்பு உள்ளது.
- இந்த நோயை அமைதி பார்வைத் திருடன் எனக்கூறுவார்கள்.
கண் நீர் அழுத்த நோய் வருவதற்கு பரம்பரையும் ஒரு காரணமாகும். கண்நீர் அழுத்த நோய் உள்ள குடும்பத்தினருக்கும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், கண்ணில் அடிபடுதல், கண் புரை முற்றி வெடித்த நிலையில் உள்ளவர்களுக்கும், கிட்டப்பார்வை உள்ளவர்களுக்கும், ஸ்டிராய்டு சொட்டு மருந்து தொடர்ந்து உபயோகிப்பவர்களுக்கும் இந்த நோய் பாதிப்பு வர அதிக வாய்ப்பு உள்ளது.
கண் நீர் அழுத்த நோய் பல வகைப்படும். இவற்றில் முக்கியமானவை கண் திறந்த கோண கண் நீர் அழுத்த நோய், குறுகிய கோண கண் நீர் அழுத்த நோய், பிறவியில் அமைந்த கண் நீர் அழுத்த நோய், இரண்டாம் நிலை கண் நீர் அழுத்த நோய் ஆகும். இந்த நோய்க்கு பொதுவாக அறிகுறிகள் எதுவும் இருக்காது. அதனால் இதனை அமைதி பார்வைத் திருடன் எனக்கூறுவார்கள்.

40 வயதிற்கு மேற்பட்டவர்கள் வருடத்திற்கு ஒரு முறை கண் பரி சோதனை செய்து கொண்டால், இந்நோயை சீக்கிரமாக கண்டுபிடித்து உரிய மருத்துவம் செய்து பார்வை இழப்பை தடுக்கலாம். குறுகிய கோண கண் நீர் அழுத்த நோயை சில சமயம் லேசர் சிகிச்சை மூலம் பாதிப்பு ஏற்படுவதற்கு முன் தடுக்கலாம்.
கண் நீர் அழுத்த நோய்க்கு மருந்துகள், லேசர் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை கண்ணின் தன்மைகேற்ப மருத்துவரின் ஆலோசனைப்படி செய்யப்படும்.
- விரல்களை மடக்க இயலாத நிலை, நடப்பதற்கு சிரமம்.
- புளிப்பான உணவுகள் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
ருமட்டாய்டு ஆர்தரைடிஸ் நோய்' சித்த மருத்துவத்தில் 'வளி அழல் கீல் வாயு' என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு 'தன்னுடல் எதிர்ப்பு நோய்'. நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு, மூட்டுகள் மற்றும் இணைப்புத் திசுக்களை சேதப்படுத்துவதால் இந்த நோய் பாதிப்பு வருகிறது.
கை,கால், மணிக்கட்டு, கணுக்கால், விரல்கள் ஆகிய கீல்களில் நாள்பட்ட அழற்சி அல்லது வலியை ஏற்படுத்தும். அந்த இடங்களில் சூடு, சிவப்பு நிறம், எரிச்சல் அல்லது வலியையும் உண்டாக்கும். என்ன மருத்துவம் பார்த்தாலும், அதற்கு அடங்காமலும், சில நேரங்களில் மருத்துவத்திற்கு அடங்கினாலும் சிறிது நாட்களில் மீண்டும் திரும்பி வருவதுமாக இருக்கும் குணம் கொண்டது இந்த நோய். இதனால் பாதிக்கப்பட்ட மூட்டு பகுதிகளை நீட்டவும், நன்றாய் மடக்கவும் முடியாது.
மேலும் இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு தூக்க மின்மை, அவ்வப்போது லேசான காய்ச்சல், காலையில் எழுந்தவுடன் கை விரல்கள், மூட்டுகளில் விரைப்புத் தன்மை, விரல்களை மடக்க இயலாத நிலை, நடப்பதற்கு சிரமம், உடல் பலவீனம் போன்ற பாதிப்புகள் இருக்கும்.
ஒருவருக்கு இந்த நோய் பாதிப்பு இருக்கிறதா என்பதை ரத்தத்தில் 'ஆர்.ஏ' மற்றும் சைக்ளிக் சிட் ருலினேடட் பெப்டைடு (சி.சி.பி) பரிசோதனைகள் மூலம் உறுதி செய்து கொள்ளலாம். இந்த நோய்க்கு சித்த மருத்துவத்தில் சிறப்பான சிகிச்சைகள் சித்தர்களால் கூறப்பட்டுள்ளன. இந்த நோய் பாதிப்பு உள்ளவர்கள் குளிர்ந்த நீரில் குளிப்பதையும், புளிப்பான உணவுகள் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
இந்த நோய் தாக்கியவர்களுக்கு வாதமும், பித்தமும் அதிகரித்திருக்கும். இதை சமன் செய்ய சித்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி பேதி மருந்து மற்றும் வாந்தி மருந்துகள் எடுத்து விட்டு அதன்பிறகு நோய்க்குரிய மருந்துகளை சாப்பிட வேண்டும். மருந்து உண்ணும் காலத்தில் எளிதில் செரிக்கும் உணவுகளை உண்ண வேண்டும்.
கீழ்க்கண்ட சிகிச்சை முறைகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி எடுக்கலாம்.
1) வங்கச் சுண்ணம், முத்துப்பற்பம், தங்க பற்பம் இவற்றை வகைக்கு 65 மி.கி. எடுத்து பாலில் இரு வேளை சாப்பிட வேண்டும்.
2) அமுக்கரா சூரணம் 1 கிராம், ஆறுமுகச்செந்தூரம் 200 மி.கி, குங்கிலிய பற்பம் 200 மி.கி, முத் துச்சிப்பி பற்பம் 200 மி.கி. இவைகளை இருவேளை தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.
3) உளுந்து தைலம், சிவப்பு குங்கிலிய தைலம், வாதகேசரி தைலம் இவைகளில் ஒன்றை வலி உள்ள இடங்களில் மெதுவாக பூசி வர வேண்டும்.
- நீலநிற ஒளி உங்களது தூக்கத்தை தொந்தரவு செய்யும்.
- உடலுழைப்பு நன்றாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
தூக்க மாத்திரை உபயோகிக்காமல் தூங்குவதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன. இதற்கு சில விஷயங்களை நீங்கள் முதலில் செய்தாக வேண்டும். தூங்கப் போகும் நேரத்தையும் எழுந்திருக்கும் நேரத்தையும் முடிவு செய்து, அந்த நேரத்திற்கு சரியாக தூங்கி எழுந்திருக்க முயற்சி செய்யுங்கள். வார நாட்களில் மட்டுமல்லாமல் விடுமுறை நாட்களில் கூட அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு எழுந்திருக்க முயற்சி செய்யுங்கள்.
தூக்கம் சரியாக வராததற்கு மூன்று முக்கிய காரணங்களை சொல்லலாம்.
1) எதையோ ஒன்றை யோசித்துக் கொண்டு அதையே மனதில் நினைத்துக் கொண்டு அதையே மனதில் போட்டுக் கசக்கிக்கொண்டு அதிலேயே பயணம் செல்வது
2) சிறியதோ, பெரியதோ உங்கள் உடலில் ஏதோ பிரச்சினை. அந்த பிரச்சினை நம்முடைய எதிர்காலத்தை பாதித்துவிடுமோ என்ற பயத்திலேயே இருப்பது
3) தூங்கும் இடம், சுற்றுப்புற சூழ்நிலை சரியாக இல்லாமல் இருப்பது. ஆழ்ந்த தூக்கம் வர கீழ்க்கண்டவற்றை கடைப்பிடிப்பது நல்லது.

தினமும் தூங்கப்போகும் முன்னர் மிதமான சுடு நீரில் குளியல் போடுவது, பிடித்த புத்தகத்தை வாசிப்பது, சிறிது நேரம் தியானம் பண்ணுவது இப்படி ஏதாவது ஒன்றை தினமும் செய்யுங்கள்.
செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர், டெலிவிஷன் போன்ற எலெக்ட்ரானிக் கருவிகளை இரவு நேரங்களில் உபயோகப்படுத்தாதீர்கள். இவைகளில் இருந்து வெளியாகும் நீலநிற ஒளி உங்களது தூக்கத்தை தொந்தரவு செய்யும்.
பகல் நேரத்தில் உடலுழைப்பு நன்றாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். கடின உடலுழைப்பு எப்பொழுதுமே ஒரு நல்ல ஓய்வை விரும்பும். அந்த ஓய்வை நாம் தூக்கமாக மாற்றி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
காபின் கலந்தபானங்கள் (காபி) தூக்கம் வரவிடாமல் தடுக்கும். இரவு நேரங்களில் காபி குடிப்பதைத் தவிருங்கள். நீங்கள் தூங்கும் அறையை முடிந்தவரை இருட்டாக்கி, அமைதியாக்கிக் கொள்ளுங்கள். உடலுக்கு இதமான வெப்ப நிலைக்கு அறையை தயார்படுத்திக்கொள்ளுங்கள்.
படுக்கை, தலையணை,பெட்ஷீட், படுக்கை அறை போன்றவற்றை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். அதிக வெளிச்சமுள்ள விளக்கொளி படுக்கை அறையில் வேண்டாம். படுக்கப்போகும் முன் கால்களுக்கு நல்லதொரு மசாஜ் எடுத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் தூங்க ஆரம்பிக்கும் போது, எதையோ ஒன்றை நினைக்க ஆரம்பிக்கிறது உங்கள் மனது. சில நினைவுகள் நல்லதாக இருக்கலாம். சில நினைவுகள் கெட்டதாக இருக்கலாம். எதை நினைத்தாலும் அதைப்பற்றிய சிந்தனைகள் மனதில் வந்துகொண்டே இருக்கும். எனவே இதைத் தவிர்க்க எதைப்பற்றியும் யோசிக்காமல் மனதை காலியாக வைத்துக் கொள்ளுங்கள்.
50,49,48 என்று எண்களை தலைகீழாக சொல்லிப் பாருங்கள். மனம் அதை ஒழுங்காக தவறில்லாமல் சொல்ல வேண்டும் என்பதில் ஈடுபட ஆரம்பித்துவிடும். ஆக மற்ற சிந்தனைகள் வராது. தூக்கமும் சிறிது நேரத்தில் தானாக வந்துவிடும்.
- மிகப் பழமையான மூலிகை கருஞ்சீரகம்.
- கருஞ்சீரக எண்ணெய் சிறந்த உடல் தேற்றியாக பயன்படுகிறது.
சித்த மருத்துவத்தில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் மிகப் பழமையான மூலிகை கருஞ்சீரகம். இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள், "கருஞ்சீரகம், இறப்பை தவிர மற்ற அனைத்து நோய்களையும் இறைவன் நாடினால் குணப்படுத்தும்" என குறிப்பிட்டிருக்கிறார்.
அரபு நாடுகளில் கருஞ்சீரகத்தை அதிகளவில் உணவில் பயன்படுத்துகிறார்கள், இதனால் தான் அவர்களுக்கு இதயம் சார்ந்த நோய்கள் அதிகமாக வருவதில்லை. யுனானி மருத்துவத்திலும் கருஞ்சீரக எண்ணெய் சிறந்த உடல் தேற்றியாக பயன்படுத்தப்படுகிறது.
கருஞ்சீரகத்தின் சிறப்புகள், அவற்றில் உள்ள மருத்துவ பயன்கள், அதன் மூலம் குணமாகும் நோய்கள், பயன்படுத்தும் வழிமுறைகள் போன்றவற்றை விரிவாக காண்போம்.
கருஞ்சீரகம் செடி வகையைச் சேர்ந்த மூலிகை ஆகும். ஆங்கிலத்தில் இதை பிளாக் குமின் என்பார்கள். இதன் தாவரவியல் பெயர் நிஜல்லா சடிவா. இம்மூலிகையின் பிறப்பிடம் தெற்கு ஐரோப்பா மற்றும் தென்மேற்கு ஆசியா நாடுகள் ஆகும். இது, மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா, இந்தியா போன்ற நாடுகளில் அதிகஅளவில் பயிரிடப்படுகிறது. இந்தச்செடியின் காய்-கனியில் இருந்து வெளிப்படும் விதை மூலிகையாக பயன்படுகிறது.
கசப்புத்தன்மை கொண்ட கருஞ்சீரக விதைகள் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டவை. கருஞ்சீரகத்தை சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எவ்வாறு பயன்படுத்தி எந்த நோய்களை தீர்க்கலாம். அதன் விவரம் வருமாறு:-
தாய்ப்பால் சுரக்க:
பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு வரும் வலி, சோர்வு போன்றவை நீங்க கருஞ்சீரகத்தை தேன் விட்டு அரைத்து கொடுக்கலாம். இது தவிர தாய்ப்பால் நன்றாக சுரக்கும், கருப்பையை இயல்பு நிலைக்கு மாற்றும். பிரசவத்திற்கு பின் கருப்பையில் சேரும் அழுக்குகளை நீக்க, ஒரு டேபிள் ஸ்பூன் கருஞ்சீரக பொடியுடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிடலாம். குழந்தை பெற்ற மூன்றாம் நாளில் இருந்து தொடர்ந்து 5 நாட்கள் சாப்பிட வேண்டும்.
தோல் நோய்கள்:
தோல் நோய்களுக்கு கருஞ்சீரகம் ஒரு சிறப்பான மருந்து. கருஞ்சீரகத்தை அரைத்து நல்லெண்ணெய்யில் குழப்பி, கரப்பான், சிரங்கு உள்ள இடங்களில் பூச நல்ல குணம் கிடைக்கும்.
மூக்கடைப்பு நீங்க:
கருஞ்சீரக பொடியை தேன் அல்லது நீரில் கலந்து கொடுக்க, மூச்சுமுட்டல் நீங்கும். மழை, குளிர்காலத்தில் பாடாய்படுத்தும் மூக்கடைப்பு நோய்க்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்து. ஒரு டீஸ்பூன் கருஞ்சீரக பொடியை 50 மில்லி தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து சூடாக்கி, ஆறிய பின் அதில் இரண்டு சொட்டு மூக்கில் விட்டால் மூக்கடைப்பு விலகும்.
இருமல்-விக்கல்:
தொடர் இருமலினால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை, அரை டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுது மற்றும் தேன் சேர்த்து சாப்பிடலாம். இது நுரையீரலில் தேங்கி இருக்கும் சளியை அகற்றும். கருஞ்சீரகத்தை பொடித்து மோருடன் கலந்து கொடுக்க விக்கல் நீங்கும்.
பித்தப்பை கல் அகல:
ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை வெந்நீர் அல்லது தேன் கலந்து காலை, மாலை என இருவேளையும் பருகினால் சிறுநீரக கற்களும், பித்தப்பை கற்களும் படிப்படியாக கரையும்.
மாதவிலக்கு பிரச்சினை:
ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினைக்கு ஒன்று முதல் 3 கிராம் அளவு கருஞ்சீரக பொடியை உண்டால் மாதவிடாய் ஒழுங்காக ஏற்படும். மாதவிடாய் நேர வயிற்று வலி ஏற்பட்டால், வறுத்து பொடித்த கருஞ்சீரக பொடியை தேன் அல்லது கருப்பட்டி கலந்து மாதவிடாய் தொடங்கும் தேதிக்கு பத்து நாட்கள் முன்பு இருந்தே சாப்பிட்டு வரலாம். இதனால் வயிற்று வலி, ரத்தப்போக்கு, அடிவயிறு கனமாகி சிறுநீர் கழிக்க சிரமப்படுதல் போன்றவை நீங்கும்.
கொழுப்பு நீங்க:
வெந்தயம் கால் கிலோ, ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் எடுத்து கருக விடாமல் வறுத்து பொடியாக்க வேண்டும். இதை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து இரவில் குடிக்கவும். இதை குடித்ததும் வேறு எதையும் உண்ணக்கூடாது. இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுகளும் மலம், சிறுநீர், வியர்வை வழியாக வெளியேறும். தேவையற்ற கொழுப்பு நீங்கும். ரத்தம் சுத்தமடையும். ரத்த ஓட்டம் சீராகும்.
ஆண்மை பெருக:
கருஞ்சீரகத்தை, நல்லெண்ணெய்யில் காய்ச்சி அந்த தைலத்தில் சிறிதளவு எடுத்து வெற்றிலையில் பூசி சாப்பிட ஆண்மை பெருகும். இந்த எண்ணெய்யை ஆண் உறுப்பில் தடவ தளர்ச்சி நீங்கும்.
நீரிழிவு குணமாக:
தினமும் காலையில் வெறும் வயிற்றில் கருஞ்சீரகம் கொதிக்க வைத்த நீரை குடித்து வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.
புற்றுநோயை தடுக்க:
கருஞ்சீரகத்தை ஆய்வு செய்த போது இதில் உள்ள தைமோகுயினன் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை தடுப்பது கண்டறியப்பட்டுள்ளது. ரத்த புற்றுநோய், மார்பகம், கணையம், கல்லீரல், கர்ப்பப்பை, பெருங்குடல் மற்றும் வாய் புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது. புற்றுநோய் வந்தவர்கள் எந்த சிகிச்சை எடுத்தாலும் உணவில் கருஞ்சீரகத்தை சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
விஷக்கடி குணமாக:
4 கிராம் கருஞ்சீரகப் பொடியை நீராகாரத்தோடு மூன்றில் இருந்து ஏழு நாள் வரை காலை, மாலை சாப்பிட்டு வர எந்த நச்சுக்கடி இருந்தாலும் குணமாகும்.
தலைவலி, மூட்டுவலி நீங்க:
கருஞ்சீரகத்தை வெந்நீர் விட்டு அரைத்து தலையின் நெற்றிப்பகுதியிலும், மூட்டுவலி உள்ள இடத்திலும் பூச வலி படிப்படியாக நீங்கும்.
யார் பயன்படுத்தக்கூடாது
கருஞ்சீரக விதைக்கு மாதவிடாயை தூண்டும் தன்மை உடையதால் கர்ப்பிணிகள், கருத்தரிக்க விரும்புபவர்கள் பயன்படுத்தக் கூடாது. ரத்த அழுத்தத்திற்கு மருந்து எடுப்பவர்கள் இதை அளவோடு எடுக்க வேண்டும். ஏனெனில் இது ரத்த அழுத்தத்தை சிறிது குறைக்கும். பொதுவாக சித்த மருத்துவரின் ஆலோசனையுடன் கருஞ்சீரகத்தை தினமும் அளவோடு எடுத்து வந்தால், இது ஆயுள் காக்கும் இறை மருந்து என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதயத்துக்கு நல்லது
100 கிராம் கருஞ்சீரகத்தில் கார்போஹைட்ரேட் 24.9, புரதம் 26.7, கொழுப்பு 28.5 சதவீதம் உள்ளது. இதுதவிர வைட்டமின்கள் ஏ, சி, ஈ, பி மற்றும் லினோலெய்க் அமிலம் நிறைந்துள்ளது. இதிலுள்ள `தைமோகுயினோன்' என்ற தாவர வேதிப்பொருள் மிகச்சிறந்த ஆன்ட்டி ஏஜிங், ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆகும். இது உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதிலும், உடல் உள் உறுப்புகளில் ஏற்படும் கோளாறுகளை
சீராக்குவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. கருஞ்சீரக விதைகளில் உள்ள எண்ணெய் சத்து, கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரித்து இதய செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. தைராய்டு சுரப்பி பிரச்சினை உள்ளவர்களுக்கு இது ஓர் அருமருந்து. கருஞ்சீரகத்தை வறுத்து பொடித்து டீ போல போட்டு குடிக்கலாம் அல்லது மசாலாவில் சேர்த்து பயன்படுத்தலாம்.
சத்துக்கள்
கருஞ்சீரகத்தில் 32-40 சதவீதம் எண்ணெய் சத்து உள்ளது. இது தவிர லினோலினிக் அமிலம், ஒலியிக் அமிலம், பால்மைடிக் அமிலம், நைஜல்லின், டிரான்ஸ் - அனித்தோல், தைமோகுயினன், பி- சைமின், கார்வாகிரால், தைமால், ஆல்பா மற்றும் பீட்டா பைனின் போன்ற மனித உடலுக்கு நன்மை பயக்கும் ஆல்கலாய்டுகள், கிளைக்கோசைடுகள், நன்மை தரும் கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதச் சத்துகள் உள்ளன.
- தூசுக்கள் சுவாசம் மூலம் நுரையீரலுக்குள் ஊருடுவி பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
- தக்காளி சேர்த்துக்கொள்வது நுரையீரல் நலன் காக்க உதவும்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் நுரையீரலின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது. ஏனெனில் மற்ற உள் உறுப்புகளுடன் ஒப்பிடும்போது சுற்றுச்சூழலுடன் நேரடி தொடர்புள்ள உறுப்பாக நுரையீரல் அமைந்திருக்கிறது. காற்றில் கலந்திருக்கும் தொற்றுகள், தூசுக்கள் சுவாசம் மூலம் எளிதில் நுரையீரலுக்குள் ஊருடுவி பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
நுரையீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உண்ணும் உணவுப்பொருட்களும் உதவிபுரியும். அத்தகையவற்றுள் உணவுப்பொருட்களை ஏன் அவசியம் சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம்.
தக்காளி:
தக்காளியில் இருக்கும் ஆன்டி ஆக்சிடெண்டுகள் காற்றுப் பாதைகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கக்கூடியவை. ஆஸ்துமாவை தடுக்கவும் உதவுபவை. தினமும் ஏதாவதொரு வகையில் சமையலில் தக்காளி சேர்த்துக்கொள்வது நுரையீரல் நலன் காக்க உதவும்.
பூண்டு:
தினமும் பூண்டு சாப்பிடுவதன் மூலம் நுரையீரலுக்கு போதுமான அளவு அல்லிசின் கிடைக்கும். இது நுரையீரலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை கொன்று நோய்த்தொற்றுகளை தடுக்கக்கூடியது. பூண்டுவை உலரவைத்தும், நெருப்பில் சுட்டும் உட்கொள்ளலாம். ஊறுகாய் தயாரித்தும் ருசிக்கலாம். அதேவேளையில் பூண்டுவை அதிகம் சாப்பிடுவது நெஞ்சரிச்சலை ஏற்படுத்தும் என்பதால் மிதமான அளவில் உட்கொள்ள வேண்டும்.
அக்ரூட் பருப்புகள்:
நுரையீரலை சூழ்ந்திருக்கும் காற்றுப் பைகள் சுருங்காமல் இயல்பான அளவை தக்கவைத்துக்கொள்வதற்கு இந்த பருப்புகள் துணை புரியும். மேலும் அக்ரூட்டில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் தசைகளுக்கு வலிமை அளிக்கும். பெரும்பாலும் முதியவர்கள் சுவாசம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள். அவர்கள் ஒரு கைப்பிடி அக்ரூட் பருப்புகள் சாப்பிட்டு வருவது நல்ல பலனை கொடுக்கும்.
கிரீன் டீ:
கிரீன் டீ நுரையீரல் தசைகளை இலகுவாக்கி வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், நுரையீரல் ஆரோக்கியத்தை பேணவும் தினமும் இரண்டு கப் கிரீன் டீ பருகுவதற்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
பிரக்கோலி:
பிரக்கோலியில் இருக்கும் அதிக நார்ச்சத்து நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தை எதிர்த்து போராட உதவிபுரியும். அத்துடன் சல்போராபேன் என்னும் சேர்மம் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் அழிக்க துணை புரியும்.
இஞ்சி:
நுரையீரலில் நச்சுக்கள் படியாமல் இருக்க இஞ்சி உட்கொள்வது சிறந்த வழியாகும். நுரையீரலில் இருக்கும் மாசுக்களை அகற்றும். காற்றுப்பாதையில் ஏற்படும் நெரிசலை குறைக்கவும் செய்யும். கிரீன் டீயுடன் இஞ்சியை சேர்த்தும் ருசிக்கலாம். இஞ்சியை கொதிக்க வைத்த நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு, தேன் கலந்தும் பருகலாம்.
முழு தானியங்கள்:
ஓட்ஸ், பார்லி, கைக்குத்தல் அரிசி உள்ளிட்ட முழு தானியங்களில் ஆன்டி ஆக்சிடெண்டுகள் நிறைந்திருக்கின்றன. மேலும் இவற்றில் உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் ஏ, செலினியம் போன்றவை நுரையீரலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தக்கூடியவை. மாசுபட்ட காற்றை சுவாசிப்பதன் விளைவாக ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும் செய்யும்.
பச்சை இலை காய்கறிகள்:
பச்சை இலை காய்கறிகள் நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு போதுமான வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. கீரை, முட்டைக்கோஸ் போன்றவற்றை எளிதாக சமைத்து சாப்பிடலாம்.
ஆப்ரிகாட்:
இந்த பழத்தில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது சுவாச குழாய்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வழிவகை செய்யும். நோய்த்தொற்று அபாயத்தையும் குறைக்கும்.
சிட்ரஸ் பழங்கள்:
ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, சாத்துக்குடி போன்ற பழங்களில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இவை சுவாச நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராடி, சுவாசத்தை மேம்படுத்தக்கூடியவை. இவற்றை காலை அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவோ அல்லது ஜூஸாகவோ தயாரித்து சுவைக்கலாம்.
- கொரோனா மீண்டும் தனது கோர முகத்தை காட்டத் தொடங்கி உள்ளது.
- கொரோனா தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒட்டுமொத்த உலகையே தனது கட்டுக்குள் வைத்திருந்த கொரோனா மீண்டும் தனது கோர முகத்தை காட்டத் தொடங்கி உள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்துக்கொண்டிருக்கிறது. நம் முன்னோர்கள் உபயோகித்த ஆயுர்வேத பொருட்களை அதிகம் பயன்படுத்துவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து கொரோனா வைரசை விரட்டி அடிக்கலாம்.

துளசி:
ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, சளி, காய்ச்சலை கட்டுப்படுத்தும் சிறந்த மூலிகையாக துளசி விளங்குகிறது. அதன் சாறை பருகி வருவது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். சுவாசம் சார்ந்த நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடவும், சுவாசக் கோளாறுகளை போக்கவும் துணை புரியும். மேலும் மனஅழுத்தம், பதற்றம் சோர்வு போன்றவற்றில் இருந்து நிவாரணம் தரும்.

இஞ்சி:
இஞ்சியில் நுண்ணுயிர் மற்றும் தொற்று எதிர்ப்பு பண்புகள் உள்ளன. தொண்டை புண்ணுக்கு தீர்வு காண உதவும். நோய் எதிர்ப்பு அமைப்பையும் அதிகரிக்கச் செய்யும். புற்றுநோய் தடுப்பு பண்புகளையும் கொண்டது. இஞ்சி, தேன், துளசி இவை மூன்றையும் சேர்த்து கசாயம் தயாரித்தும் சாப்பிடலாம்.

நெல்லிக்காய்
இதுவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத பொருட்களுள் ஒன்றாக விளங்குகிறது. வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாட்டை மேம்படுத்தும் சேர்மங்களும் நெல்லிக்காயில் உள்ளன. தினமும் வெறும் வயிற்றில் நெல்லிச்சாறு பருகி வருவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வருவதும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.

ஜிலோய்:
ஆங்கிலத்தில் `ஜிலோய்', தமிழில் `அமிர்தவல்லி' என்று அழைக்கப்படும் இது பல்வேறு ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. உடலில் சேரும் நச்சுகளை வெளியேற்றவும், ரத்தத்தை சுத்தப்படுத்தவும், நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிர் கிருமிகளை எதிர்த்து போராடவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யவும் இது உதவும். சளி மற்றும் இருமலுக்கும் நிவாரணம் தரும். ஜிலோய் தண்டுகளை தண்ணீரில் சில நிமிடங்கள் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை வடிகட்டி அதனுடன் தேன் சேர்த்து வாரத்திற்கு இரண்டு முறை பருகி வரலாம்.

மஞ்சள்:
இதில் உள்ள குர்குமின் நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுமின்றி உடலில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க செய்யும். இரவில் தூங்குவதற்கு முன்பு மஞ்சள் பால் பருகலாம். அது ஆழ்ந்த தூக்கத்திற்கும் வழிவகை செய்யும். குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருக்கவும் உதவும்.

அஸ்வகந்தா:
தூக்கமின்மை பிரச்சினைக்கு தீர்வு காணவும், மன அழுத்தத்தை போக்கவும் இது உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதுடன் மூட்டு சார்ந்த நோய்களுக்கும் சிகிச்சையளிக்க உதவும். அஸ்வகந்தா மாத்திரைகள், பொடியை வெதுவெதுப்பான பால் அல்லது தண்ணீருடன் கலந்து பருகலாம். அதற்கு முன்பு மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமானது.
- இதயக் கோளாறு, பலவீனம் குணமாகும்.
- அன்னாசிப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வர, சிறுநீரகக் கற்கள் கரையும்.
* அன்னாசிப்பழத் துண்டுகளை தேனில் கலந்து சாப்பிட்டு வர உடல்பலம் கூடும். உடல் பளபளப்பாகும்.
* அன்னாசிப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வர, சிறுநீரகக் கற்கள் கரையும்.
* இதயக் கோளாறு, பலவீனம் குணமாகும்.
* அன்னாசிப்பழச்சாறை ஒரு நாள் நான்கு வேளை ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி மாறும்.
* பழச்சாறை தொண்டையில் படும்படி சிறிது நேரம் வைத்திருந்து விழுங்கி வர தொண்டைவலி, தொண்டைப்புண் தீரும்.
* மூக்கு ஒழுகுதல், சுவாசக் குழாயில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும், சாதாரண காய்ச்சல் இவைகள் உடலைப் பாதிக்காமல் தடுக்கிறது அன்னாசி.
* இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒருடம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். விட்டமின் ஏ.பி.சி. சத்துகள் நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்பு சத்தி அதிகம் உள்ள அன்னாச்சிப் பழத்தை சாப்பிட்டால் பல்வேறு நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.
* அன்னாச்சி இலைசாறு வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் தன்மை கொண்டது.
* அன்னாச்சிப்பழச் சாறுடன் தேன் சேர்த்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, வாய்ப்புண், முளைக்கோளறு ஞாபகசத்தி குறைவு போன்ற நோய்கள் குணமடையும்.
* மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாச்சிப் பழச்சாற்றை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
* அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல நோய்களை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த மருந்தாகும்.
* புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் இதில் அதிகம் உள்ளது. இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது.
* தையாமின் மற்றும் வைட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் உள்ளது. அன்னாசி பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கும்.
* இதய நோய்கள் மற்றும் மாரடைப்பில் இருந்து பாதுகாப்பளிக்கிறது. இப்பழத்தில் உள்ள இதர பிற வைட்டமின்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.இது சோர்வின்றி செயல்பட ஏதுவாகிறது.
* நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் வற்றல்களாக செய்து வைத்து தினமும் இரவில் ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும்.
* அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல், சிறுநீர் எரிச்சல் போன்றவை குணமாகும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து விதமான உடல் உபாதைகளும் தீரும்.
* அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது. இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. இன்றைக்கும் பெரும்பாலானோருக்கு இருக்கும் ஒற்றை தலைவலிக்கு அன்னாசிப்பழம் மிகச்சிறந்த மருந்தாக உள்ளது. அதற்காக 40 நாட்கள் அன்னாசிப் பழத்துடன் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.
* மேலும் மூளைக் கோளாறு, ஞாபகசக்தி குறைவு போன்றவையும் குணமாகும். தொடர்ந்து விக்கல் வந்துகொண்டே இருப்பவர்கள், ஒரு சங்கு அளவுக்கு அன்னாசிப்பழச் சாற்றில் சர்க்கரை சேர்த்து அருந்த வேண்டும். அன்னாசி பழத்தில் ப்ரோமெலைன் என்னும் பொருள் உள்ளது. இது உங்கள் மூட்டுக்களில் தேய்மானம் ஏற்படும்போது ஏற்படும் வலியினை கட்டுப்படுத்த உதவுகின்றது. மேலும் இந்த ப்ரோமெலைன் நெறைய ஆரோக்கிய சிறப்புகளை கொண்டது.
* அன்னாசி பழத்தில் உள்ள அதிக அளவு வைட்டமின் சி உங்கள் காயங்களை விரைவில் ஆற்ற உதவுகின்றது. எனவே உங்கள் காயங்களை விரைவில் ஆற்ற அன்னாசி பலத்தினை உட்கொண்டு வரவும்.
* அன்னாசி பழத்தில் அதிக அளவில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் உங்கள் எலும்புகளின் வலிமையினை அதிகரிக்கின்றது. கால்சியம் நிறைந்த உணவுகளை இருந்து கால்சியம் சத்தினை உரிய மெக்னீசியம் மிகவும் முக்கிய பங்கினை வகிக்கின்றது.அன்னாசி பழத்தில் அதிக அளவு மெக்னீசியம் நிறைந்துள்ளது.
* இன்றைய நவீன உலகில் பலபேர் உயர் இரத்த அழுத்தத்தினால் கஷ்டப்படுகின்றனர். இரத்த அழுத்தத்தினை குறைக்க பொட்டாசியம் நிறைந்த உணவுகள் மிக மிக முக்கியம். அன்னாசியில் அதிக அளவில் பொட்டாசியம் சத்து உள்ளது.
* அன்னாசி பழத்தை வெட்டி உப்பு கலந்த தண்ணீரில் 5 நிமிடம் போட்டு எடுத்து பிறகு பயன்படுத்த வேண்டும். இந்த உப்பு தண்ணீரில் பழத்தை சேர்த்து சாப்பிடுவதால் ப்ரோமைலின் தன்மையை செயலிழக்கச்செய்கிறது. ஆகவே சிறிதளவு உப்பில் பழம் சேர்ப்பதால் பழத்தின் இனிப்பு தன்மையை அதிகரித்து ருசியை அதிகரிக்கிறது.
* அன்னாசி பழத்தை வெட்டி எடுத்து உப்பு தண்ணீரில் கலந்து எடுத்த பிறகு பயன்படுத்த வேண்டும். இப்படி உப்பு கலந்த தண்ணீரில் கலந்து சாப்பிடுவதால் எரிச்சல் மற்றும் அரிச்சலை ஏற்படுத்தாது. உப்பு தண்ணீரில் கலந்து எடுத்து சாப்பிடுவதால் உடம்பில் அலர்ஜி ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு கூட பயனுள்ளதாக இருக்கிறது.






