நீர்கடுப்பு எதனால் ஏற்படுகிறது...? அதற்கான தீர்வு!

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படக்கூடிய உணர்வாகும். ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது.
நீர்கடுப்பு எதனால் ஏற்படுகிறது...? அதற்கான தீர்வு!
Published on

நீர் கடுப்பு என்பது சிறுநீர் கழிக்கும் போது வலி, அசவுகரியம், எரிச்சல் ஏற்படக்கூடிய ஒரு உணர்வாகும். இது ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. சிறுநீர் கடுப்புக்கு முக்கிய காரணமாக கீழ்கண்டவை கருதப்படுகிறது.

சிறுநீர் பாதை, சிறுநீர்ப்பை, சிறுநீர் குழாய், புரோஸ்டேட் சுரப்பி போன்றவற்றில் தொற்று, இன்டர்ஸ்டீடியல் சிஸ்டைடிட்ஸ், சிறுநீரக, சிறு நீர்ப்பை கற்கள், சில மருந்துகளின் பக்க விளைவு, புற்றுநோய்க்கு அளிக்கப்படும் கீமோ தெரபி சிகிச்சை, சிறுநீர்ப்பை புற்றுநோய், சோப்பு மற்றும் லோஷனில் உள்ள ரசாயனங்களால் ஏற்படும் ஒவ்வாமை. இதற்கு தீர்வாக தினசரி குறைந்தபட்சம் 3 அல்லது 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்தும் இஞ்சி, ஏலக்காய் மற்றும் வைட்டமின் சி அதிகமுள்ள ஆரஞ்சு, பச்சை பூ கோஸ் ஆகியவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதிக காரமான உணவு, அமிலம் அதிகமுள்ள உணவு, காபி, செயற்கை குளிர்பானங்கள், மதுபானங்களை தவிர்க்க வேண்டும்.

சிறுநீர் பாதை தொற்றுக்கு பாக்டீரியா ஒரு காரணமாக இருந்தால் மருத்துவர் உங்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை பரிந்துரைக்கலாம். சிறுநீரக கற்கள் காரணமாக நீர்கடுப்பு இருந்தால், கற்களின் அளவை பொறுத்து சிகிச்சை மாறுபடும். ஆகையால் உங்களுக்கு நீர் கடுப்பு பிரச்சினை ஏற்படும் போது மருத்துவரை கலந்து ஆலோசித்து உரிய பரிசோதனைகளை செய்து மருத்துவம் செய்து கொள்ள வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com