என் மலர்
ஆரோக்கியம்
முகத்தின் அழகை கூட்ட நாம் பலவகையான ஃபேஸ்பேக்குகளைப் பார்த்திருக்கிறோம். அந்தவகையில் தற்போது சிவப்பழகைத் தரக்கூடிய ஃபேஸ்பேக்கினை எப்படி செய்வது என்றும், அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் பார்க்கலாம்.

சிவப்பழகு பெற கற்றாழை ஃபேஸ்பேக்!!
தேவையானவை:
கற்றாழை ஜெல்- 1 கப்
காட்டேஜ் சீஸ்- சிறிதளவு,
பேரிச்சம் பழம்- 1
வெள்ளரிக்காய்- 1
செய்முறை:
கற்றாழை ஜெல்லுடன் காட்டேஜ் சீஸ் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து அதனுடன் பேரிச்சம்பழத்தினை நசுக்கிக் கலக்கவும்.
இறுதியாக வெள்ளரிக்காயினை துண்டுகளாக்கி தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
இந்த பேஸ்ட்டினை சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு குழைத்துக் கொள்ளவும். இந்த பேஸ்ட்டினை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கழுவ வேண்டும். இதனைத் தொடர்ந்து செய்துவந்தால் முகமானது சிவப்பழகு பெறும்.

நெய்யில் உள்ள பிட்யூட்ரிக் அமிலம் மற்றும் டிரைகிளிசரைடுகள் கெட்ட கொழுப்புகளை உடலில் இருந்து வெளியேற்றவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் செய்கின்றன.
நெய், ஆரோக்கியமான கொழுப்பை கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. சூடாக சமைத்த உணவின் மீது நெய் ஊற்றி பலரும் சாப்பிடுவார்கள். ஆயுர்வேதத்தின் கூற்றின்படி, வெறும் வயிற்றில் நெய் குடித்தால் ஆரோக்கியமாக வாழலாம். உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் ஊட்டச்சத்தை வழங்கும் முக்கிய ஆதாரமாகவும் நெய் விளங்குகிறது. உடலில் உள்ள செல்கள் புத்துணர்ச்சியுடன் செயல்படவும், எடையை குறைக்கவும் உதவுகிறது. நெய்யில் உள்ள பிட்யூட்ரிக் அமிலம் மற்றும் டிரைகிளிசரைடுகள் கெட்ட கொழுப்புகளை உடலில் இருந்து வெளியேற்றவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் செய்கின்றன.
காலையில் ஒரு டீஸ்பூன் பசுமாட்டு நெய்யை வெதுவெதுப்பான நீரில் கலந்து பருகிவரலாம். ஒரு டீஸ்பூன் நெய்யுடன் சிறிதளவு மஞ்சள் துண்டை கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்தும் பருகலாம். தினமும் அவ்வாறு செய்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். வறட்டு இரு மலும் குணமாகும். ஒரு டீஸ்பூன் நெய்யுடன் மஞ்சளை அரைத்து நீரில் கொதிக்கவைத்து பானமாகவும் பருகி வரலாம்.
தினமும் காலை பொழுதை நெய்யுடன் தொடங்கினால் மூட்டுகள் வலுப்படும். எலும்பு மூட்டுகள் இணையும் இடத்தில் நெகிழ்வு தன்மை உருவாகும். இதனால் மூட்டு தேய்மான பிரச்சினை ஏற்படாது.
நெய் இயற்கையாகவே சருமத்தை பளபளப்பாக மிளிர வைக்கும் தன்மை கொண்டது.
நெய்யில் அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் நிரம்பி இருக்கின்றன. இது தொப்பையை குறைக்கவும் உதவும். மேலும் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை நீக்கவும் செய்யும்.
தூக்கமின்மை, மன அழுத்தம், அதிக வேலைப்பளு காரணமாக கண்களை சுற்றி கருவளையங்கள் ஏற்படும். தூங்க செல்லும் முன்பு கண்களை சுற்றி நெய் தடவுவது நல்ல பலனை தரும்.
நெய்யில் கொழுப்பு அமிலங்களும், ஆன்டி ஆக்சிடென்டுகளும் நிறைந்திருக்கின்றன. இவை உலர்ந்த கூந்தலுக்கு சிறந்த கண்டிஷனராகவும் செயல்படும்.

சிறு குழந்தைகளுக்கு பற்களை மென்மையாகவும், அரை வட்டமாகவும் தேய்த்து விடுவது அவசியம். குழந்தைகள் இதை பழகிக் கொண்டபின் அவர்களாகவே தேய்த்துக்கொள்ளச் சொல்ல வேண்டும்.
மனிதனுக்கு என்று தனி அடையாளத்தை தருவது பேச்சுத் திறன்தான். அதை தெளிவாக உச்சரிக்க பற்கள் உதவுகிறது. பற்களின் அணிவகுப்பை வெள்ளைச் சிப்பாய்களின் அணிவகுப்பு என்று கூறலாம். சத்தான உணவை அரைத்து, சக்தியை உடல் உறிஞ்சிக்கொள்ள உதவுவதுதான் இந்த வெண் சிப்பாய்களின் வேலை.
பற்களில் பால் பற்கள், நிரந்தர பற்கள் என இரண்டு வகை உண்டு. பால் பற்கள் விழுந்தபின் பற்கள் முளைக்கும் என்றாலும், பால் பற்களைப் பேணிக் காப்பது முக்கியம். அதுவே பின்னால் உருவாகப்போகும் நிரந்தரப் பற்களுக்கு அடிப்படை.
சிறு குழந்தைகளுக்கு பற்களை மென்மையாகவும், அரை வட்டமாகவும் தேய்த்து விடுவது அவசியம். குழந்தைகள் இதை பழகிக் கொண்டபின் அவர்களாகவே தேய்த்துக்கொள்ளச் சொல்ல வேண்டும்.
பெரியவர்கள் பல் தேய்க்கிறேன் என்று அழுத்தமாகத் தேய், தேய் என்று தேய்த்துவிடுவார்கள். இதனால் ஐம்பது வயதுக்குள் அரை பல்லுக்கு மேல் தேய்ந்து போய்விடும். பின்னர் எது சாப்பிட்டாலும் கூசும். முன்னும், பின்னும், உள்ளும், புறமும் மேலும் கீழுமாகவே பல்லைத் துலக்க வேண்டும்.
சிறு வயதில் இருந்தே பற்களை பாதுகாக்க குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். இரவில் சர்க்கரை போட்ட பாலைக் குடித்துவிட்டு அப்படியே தூங்கச் செல்லக் கூடாது. வாயில் தங்கிவிடும்.
மீதமுள்ள பாலின் சர்க்கரை பாக்டீரியாக்களை உற்பத்தி செய்யும். பற்கள் சொத்தை ஆவதும் இதனால் நடைபெறும். இதைத் தவிர்க்க, தூங்கச் செல்லும் முன் பல் துலக்க வேண்டும். இந்தப் பழக்கத்தால் பல் சொத்தையைப் பெரும்பாலும் தவிர்த்துவிடலாம்.
‘ஐஸ் கிரீம்’, ‘ஜில்’ தண்ணீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்ளக்கூடாது. அப்படியே சாப்பிட்டாலும் பல்லில் படாமல் கவனமாக சாப்பிட வேண்டும். எலுமிச்சையை அதிகம் உட்கொண்டாலும், பல்லின் மேல் பூச்சாக உள்ள ‘எனாமல்’ பாதிக்கப்படும். இதனால் பற் கூச்சம் ஏற்படும். சூடான உணவு உண்ட உடன் ஜில்‘ உணவு சாப்பிடுவது பல்லுக்கு பெருங்கேடு. வாயில், குறிப்பாக ஈறில் ஏற்படும் நோய்த்தொற்று வேறு பல பிரச்சினைகளைக் கொண்டு வரலாம். அதில் இதயக் கோளாறுகளும் மாரடைப்பும் அடக்கம். எனவே, ஈறு, பற்களின் ஆரோக்கியம் பேணப்படும் பட்சத்தில், அது நிச்சயமாக ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் அடிப்படையாக இருக்கும்.

விவாகரத்து கோரி நீதிமன்ற நிழலில் காத்திருக்கும் இளம் தம்பதியினர் பலரிடம் பேச்சுக் கொடுத்தால், பெரும்பாலான மணமுறிவுக்குக் காரணமாக ஈகோவே உள்ளது.
பல குடும்பங்களில் ஈகோவை முன்வைத்து எழும் சச்சரவுகள் இல்லற அமைதியைக் காவுகொள்கின்றன. கனவுகளுடன் தொடங்கிய மணவாழ்வின் வேர்களில் தம்பதியரின் ஈகோ அமிலம் ஊற்றுகிறது. புனிதமாகப் போற்றி வளர்த்த காதலை, பல தம்பதியர் கணப்பொழுது ஈகோவால் தொலைத்திருக்கிறார்கள்.
எந்த உறவானாலும் அதன் உறுதியை உரசிப் பார்க்க அவ்வப்போது வந்து செல்லும் ஈகோ போன்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியாது. ஆனால், கொஞ்சம் கவனமாகக் கையாண்டால் ஈகோவை எதிர்கொண்டு மீளலாம். ஆனால், கணவன் - மனைவி இருவரில் ஒருவர் பக்குவக் குறைவானவராக இருந்தால் போதும், இந்த ஈகோ மன முறிவுக்கு வித்திட்டுவிடும். விவாகரத்து கோரி நீதிமன்ற நிழலில் காத்திருக்கும் இளம் தம்பதியினர் பலரிடம் பேச்சுக் கொடுத்தால், பெரும்பாலான மணமுறிவுக்குக் காரணமாக ஈகோவே உள்ளது.
மணவாழ்வில் ஒருவர் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி ஈகோவை வளர்க்கும்போது கணவன் - மனைவி உறவு சிக்கலாகிறது. ஈகோ தலைக்கேறியவர்களை எப்போதும் புகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும். ஏதாவதொரு தவறைச் சுட்டிக்காட்டினால் வேறு முகம் காட்டுவார்கள். பொதுவாக, ஈகோ தலைக்கேறியவர்களிடம் இருந்து விலகவே விரும்புவோம். ஆனால், ஈகோ முற்றியவர் வாழ்க்கைத் துணையாக அமைந்துவிட்டால் வாழ்க்கை கசப்புத் தட்டும்.
கடந்த தலைமுறையில் மனைவியைவிடக் கணவனின் வயது பொதுவாக அதிகமாக இருக்கும். பொருள் சார்ந்த குடும்ப ஓட்டமும் பெரும்பாலும் கணவனைச் சார்ந்தே இருக்கும். இவற்றுடன் கலாச்சாரம் சார்ந்தும் பெண் விட்டுக்கொடுத்துப் போகவே பழக்கப்பட்டிருந்ததால் குடும்பங்கள் ஈகோவில் சிக்காமல் தப்பிப் பிழைத்தன. இன்றோ கிட்டத்தட்ட ஒரே வயதில், இணையான படிப்பு, வேலை, ஊதியம் என இருப்பதால் இளம் தம்பதிகளுக்கு மத்தியில் ஈகோ பிரச்சினை இயல்பாகப் பற்றிக்கொள்கிறது. ஆழமான புரிதலும் நிபந்தனையற்ற அன்பும் கொண்ட தம்பதியரிடையே ஈகோ எடுபடுவதில்லை.
கணவனோ மனைவியோ இணை மீதான பிடிமானம் இளகுவதாக உணரும்போது ஒருவகையான பாதுகாப்பின்மை தோன்றும். அப்போது சிலர் தங்களது சுய மதிப்பை ஈகோவாக வெளிப்படுத்துவார்கள். இன்னும் சில இடங்களில் ஈகோவின் தோற்றுவாய் தற்பெருமையாக இருக்கும். தனது வீடு, வசதி, படிப்பு, அழகு உள்ளிட்டவை குறித்த தம்பட்டம் பெரும்பாலும் அடுத்தவரை மட்டம் தட்டுவதற்கே பயன்படுத்தப்படுகிறது.
பரஸ்பரம் மதித்தல், புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றுடன் மனத்தாங்கல்களுக்கு ஆரம்ப கட்டத்திலேயே காது கொடுத்தால் அங்கே ஈகோவுக்கு இடமிருக்காது. உண்மையான அன்பும் அசைக்க முடியாத நம்பிக்கையும் ஈகோவைத் தூர விரட்டும். நிறை குறைகளை ஏற்றுக்கொள்வதும் சச்சரவுகள் முளைக்கும்போது துணையின் பலவீனத்தைக் கவனமாகக் கடந்துபோவதும் இதில் சேரும்.

பச்சைப்பயறில் இரும்புச் சத்தும் புரதச்சத்தும் அதிக அளவு உள்ளது. பச்சைப்பயிறை முளைக்கட்டி சாப்பிடும் போது ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும். இதனால் ரத்த சோகை வராமல் காத்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சைப்பயறு - ஒரு கப்
கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை - முக்கால் கப்
முந்திரி - 30 கிராம்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் தூள் , ஜாதிக்காய் தூள் - தலா கால் டீஸ்பூன்

செய்முறை :
பச்சைப்பயறை வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்துக்கொள்ளவும்.
நன்கு சூடு ஆறியதும் 2 மணிநேரம் ஊற வைக்கவேண்டும்.
இட்லிக்கு உளுந்து அரைப்பது போன்று நீர் சேர்த்து பொங்க அரைக்கவும்.
அரைத்த மாவை உப்பு சேர்த்து கரைத்து இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேக வைத்து கொள்ளவும்.
வேக வைத்த இட்லியை ஆறியதும் உதிர்த்து கொள்ளவும்.
அரை கப் நீரில் கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை போட்டு சூடாக்கி கரைந்ததும் வடிகட்டவும்
வடிகட்டிய கரைசலை அடுப்பில் வைத்து கெட்டிப்பாகு செய்து உதிர்த்த பச்சைப்பயறு இட்லியை நெய் , தேங்காய் துருவல் , ஏலக்காய் தூள் , ஜாதிக்காய் தூள் , சேர்த்து நன்றாக கலக்கவும்.
நெய்யில் முந்திரி வறுத்து இறுதியாக சேர்த்துக்கொள்ளவும்.

உப்பு - அரை டீஸ்பூன்

உடலுக்கு ஆற்றல் அளிக்கக்கூடிய பச்சைப்பயறு புட்டு ரெடி..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நுரையீரல் புற்றுநோய் ஆண்கள் , பெண்கள் இருவரையுமே தீவிரமாகத் தாக்கினாலும் 30 - 49 வயது கொண்ட இளம் பெண்களையே அதிகமாக தாக்குகிறது. இதற்கு எது காரணம் என்று தெரிந்து கொள்ளலாம்.
52 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் பெண்கள் நுரையீரல் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வை உலக புற்றுநோய் இதழ் வெளியிட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது 2030 ஆண்டுக்குள் 43% ஆக அதிகரிக்கும் என்றும் யூகிக்கப்பட்டுள்ளது. இந்த நுரையீரல் புற்றுநோய் பாதிக்கப்பட்டால் உயிரிழப்புகளே அதிகம் நிகழ்வதாகக் கூறப்படுகிறது.
இது ஆண்கள் , பெண்கள் இருவரையுமே தீவிரமாகத் தாக்கினாலும் 30 - 49 வயது கொண்ட இளம் பெண்களையே அதிகமாக தாக்குகிறது. அப்படி உலக அளவில் ஐந்தில் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் புகைப் பிடிக்கும் பழக்கம் இருந்தால் ஆண்களைக் காட்டிலும் பெண்களையே அதிகமாகவும், விரைவாகவும் பாதிக்கிறது. விரைவில் நுரையீரல் பாதிக்கப்பட்டு இறப்பை சந்திப்பதாகக் கூறுகின்றனர்.
பெண்களைக் கொல்லும் புற்றுநோய்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால் பெண்களைத் தாக்கும் மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவைதான் பெரிதாக கவனம் பெறுகிறது. ஆனால் நுரையீரல் புற்றுநோய் சத்தமில்லாமல் பரவி வருவதாக கூறுகின்றனர்.
அதேபோல் நுரையீரல் புற்றுநோய் என்பதும் ஆண் , பெண் இருவருக்கும் வேறுபடுவதாக கூறுகின்றனர். ஆனால் பெண்களுக்கு அறிகுறிகள் தென்பட்டாலும் அதை அலட்சியமாகக் கருதுகின்றனர்.

புருவங்களை இப்போது அகலமாக வைத்துக் கொள்வதே ஃபேஷன். அதுதான் உங்களை இளமையாக காண்பிக்கும்! சரி, உங்கள் புருவத்தை எளிதில் அடர்த்தியாக வளர சில எளிய வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
அழகான புருவங்கள் ஒருவரது முகத்தை உயர்த்திக் காட்டும். புருவங்களை இப்போது அகலமாக வைத்துக் கொள்வதே ஃபேஷன். அதுதான் உங்களை இளமையாக காண்பிக்கும்! சரி, உங்கள் புருவத்தை எளிதில் அடர்த்தியாக வளர சில எளிய வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
கற்றாழை : சருமத்திற்கும், கூந்தலுக்கும் என்ன பயன்படுத்துவது என்றால் முதலில் வரும் பொருள் கற்றாழைதான். எல்லோருக்கும் தெரிந்த பொருள்தான். ஆனால், எளிதில் கிடைப்பதால் பயன்படுத்த மாட்டீர்கள். இதில், அலோனின் என்ற சத்து புருவம் வளர உதவும். முடி உடையாமல் இருக்க, கெரட்டின் போன்ற சத்து இதில் இருக்கிறது. சிறிது கற்றாழையை எடுத்து, மேல் தோளை சீவி விட்டு, உள்ளே இருக்கும் ஜெல் மட்டும் புருவத்தில் தடவினால் போதும். வேறு இந்தப் பொருளையும்விட இது எளிமையானது, நல்ல வளர்ச்சியை கொடுக்கக்கூடியது.
வெந்தயம் : வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள். மறுநாள் அதை ஒரு பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை புருவங்களில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவி விடுங்கள். இது புருவ முடிக்கு நல்ல பொலிவைத் தரும்.இதில் நிகோடினிக் அமிலம், புரதச் சத்து, லெசிதின் ஆகியவை இயற்கையான நிறத்தை தக்கவைத்து, புருவம் வளர மிகவும் உதவும்.
விளக்கெண்ணெய் : இது ஒரு பழங்காலத்தில் இருந்து கடைபிடிக்கப்படும் மிகவும் பயனுள்ள பொருள். விரல் நுனிகளால் தடவி, மசாஜ் செய்து ஒரு மணிநேரம் வைத்திருந்து துடைத்துவிடலாம். தினமும் பயன்படுத்தினால், அடர்த்தியான, கருமையான புருவங்கள் வளரும். விளக்கெண்ணெயில், புரதச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின்கள் இருப்பதால் புருவத்தின் வேருக்கு நல்ல ஊட்டச்சத்து அளிக்கிறது.
ஆலிவ் எண்ணெய் : ஆலிவ் எண்ணெய்யில் வைட்டமின் ஈ சத்து நிறைந்து இருப்பதால், உங்கள் புருவங்கள் நன்றாக வளர உதவும். வெது வெதுப்பான ஆலிவ் எண்ணெய்யை புருவங்களுக்கு தினமும் தடவி வாருங்கள்.
முட்டை மஞ்சள் கரு : முட்டையின் மஞ்சள் கருவில் புரதச்சத்து மற்றும் பயோடின் என்னும் சத்து அதிகம் இருப்பதால், புருவம் வளர மிகவும் உதவுகிறது. முட்டையின் மஞ்சள் கருவை ஒரு தூரிகையின் உதவியுடன் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவவும் . இது உங்கள் புருவங்களை அடர்த்தியாகவும், கூந்தல் உதிர்வதற்கான வாய்ப்புகளையும் குறைகிறது.
ஜோஜோபா எண்ணெய் : ஜோஜோபா எண்ணெய் புருவம் வளருவதற்கு ஏதாவது அடைப்பு இருந்தால் அதை நீக்கிவிடும். அதனால் முடி வேகமாக வளரும். இந்த எண்ணெய்யையும் தூங்கும்போது பயன்படுத்தலாம்.
வெங்காயச்சாறு : வெங்காயத்தில், சல்பர், செலினியம், மினெரல்ஸ், வைட்டமின் பி, சி ஆகியவை உள்ளதால் புருவம் நன்றாக வளரும். மயிர்கால்களை நன்றாக உறுதியாக்குகிறது. வெங்காயத்தை தோள் உரித்து, ஜூஸ் செய்து, அதை தடவினால் போதும். வெங்காயம் ஒரு வாசனை கொடுக்கும் என்பதால், சிறிது எலுமிச்சை சாறு கலந்து தடவலாம்.
தேங்காய் எண்ணெய் : மேல் கூறிய (டிப்ஸ்) எதுவும் இல்லையென்றால் வெறும் தேங்காய் எண்ணையே போதுமானது! இது தண்ணீரைப்போல இருப்பதால், பெரும்பாலும் உதாசீனப் படுத்துகிறோம். ஆனால் தேங்காய் எண்ணெய் கண்டிஷனர் போல வேலை செய்யும். இயற்கையான புரதச்சத்து முடி உடைவதை தவிர்க்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள லாரிக் அமிலம், ஆன்டி-மைக்ரோபையல் தன்மை கொண்டதால், முடிக்காலில் இன்பெக்ஷன் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். வாரத்தின் சில நாட்கள் பயன்படுத்தினாலே நல்ல பிரதிபலன் கிடைக்கும். இரவு தூங்கும்முன் புருவங்களில் தடவிக்கொண்டு தூங்கலாம்.

சுற்றுப்புற சூழலை சிறந்ததாக்கி, நம் உடலை நோய் அணுகாமல் தடுக்கும் சில வழிமுறைகளை கடைப்பிடித்தாலே ஆரோக்கியமான வாழ்வை பெறலாம்.
நம் முன்னோர்களை எடுத்துக் கொண்டால் அதிக காலம் வாழ்ந்து இருப்பார்கள். தற்போதும் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். அவர்களது நீண்ட ஆயுளுக்கு காரணம் சத்தான உணவு வகைகளே. குறிப்பாக, கம்பு, சோளம், ராகி போன்ற தினை வகை உணவுகளை அதிகம் உண்டு இருப்பார்கள். அரிசி சாதம் வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒரு முறையோ தான் உண்டு இருப்பார்கள்.
ஆனால், இன்றைய நாகரிக உலகில் துரித உணவுகள், பீட்சா, பர்க்கர், தினமும் அரிசி சாதத்தை உண்டு வருகிறோம். துரித உணவுகளில் ரசாயனம் அதிகமாக கலக்கப்படுவதால் வயிற்று கோளாறுகள் ஏற்பட்டு மருத்துவமனைகளை நோக்கி ஓடுகிறோம். அரிசியில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது. அன்றைய கால கட்டத்தில் நோயில்லாத செல்வத்தை பெற இயற்கையை நேசித்தார்கள். இயற்கையோடு இணைந்து வாழ்ந்தார்கள். இன்றைய கால கட்டத்தில் வாகனங்களின் நச்சுப் புகையால் சுவாச கோளாறுகள் ஏற்பட்டு பாதிக்கப்படுகிறோம்.
இனியாவது நோயற்ற வாழ்வு வாழ என்ன செய்ய வேண்டும். சுற்றுப்புற சூழலை சிறந்ததாக்கி, நம் உடலை நோய் அணுகாமல் தடுக்கும் சில வழிமுறைகளை கடைப்பிடித்தாலே ஆரோக்கியமான வாழ்வை பெறலாம். அதற்கான வழிமுறைகளில் மிக முக்கியமானது நம் கைகளை சுத்தப்படுத்துவது. அதாவது, கைகளை நன்றாக கழுவுவது. கைகளை கழுவுவதால் நோய் தீருமா என்ற எண்ணம் சிலருக்கு தோன்றலாம். காற்றின் மூலமும், நீரின் மூலமும், மற்ற பொருட்களை தொடுவதன் மூலமும் பரவும் நோய்கள் ஏராளம்.
இப்படிப்பட்ட நோய்கள் பரவாமல் தடுக்க கைகளை கழுவுதல் மிகவும் முக்கியமானது. பழங்காலத்தில் வீட்டின் முன்புறத்தில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்திருப்பார்கள். வெளி இடங்களுக்கு சென்று வருபவர்கள், அந்த நீரில், கை கால்களை சுத்தம் செய்த பிறகே வீட்டிற்குள் நுழைவார்கள். ஆனால், நாளடைவில் அந்த பழக்கம் மறைந்து போய் விட்டது.
நாம் முன்னோர்களையும் மறந்தோம், அவர்கள் கற்றுத் தந்த நல்ல பழக்க வழக்கங்களையும் அடியோடு மறந்து விட்டோம். இன்று உலக அரங்கில் சுகாதாரத்தை முன்னிறுத்தி சொல்லப்படும் விஷயங்களில் கை கழுவும் முறைதான் முதன்மையாக உள்ளது. இந்த கை கழுவும் முறையை சரியாக பின்பற்றாததால் பல நோய்களுக்கு ஆட்பட்டு அவதியுறுகிறோம்.
குழந்தைகள் மணலில் விளையாடும் போதும், மலம் கழித்துவிட்டு வரும்போதும், கை கால்களில் பாக்டீரியாக்கள் ஒட்டிக் கொள்கின்றன. இவற்றை சரியான முறையில் கை, கால்களை சுத்தம் செய்வதால் மட்டுமே அழிக்க முடியும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அடிக்கடி உண்டாகும் வயிற்றுப்போக்கு, ஜலதோஷம், வாந்தி, மயக்கம், குடல்புண் போன்ற பல நோய்களுக்கு அடிப்படைக் காரணம் அவர்கள் கைகளை ஒழுங்காக சுத்தம் செய்யாமல் இருப்பதே. ஸ்டெபைலோகாக்கஸ் ஆரியஸ் என்ற கிருமி நகங்களின் இடுக்குகளில் ஒட்டிக்கொண்டு உணவருந்தும் சமயம் உட்சென்று குடலில் பல்கிப் பெருகி நோயைத் தோற்றுவிக்கிறது.
ஆகவே, காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். பிறகு தான் பல் துலக்க வேண்டும்.
மலம் கழித்தபின் சோப்பு போட்டு கைகளை கழுவுவது நல்லது. எந்த வேலை செய்தாலும், உடனே கைகழுவுதல் வேண்டும். சமைத்த பின்பு கூட பெண்கள் கைகளை கழுவுவது நல்லது. வாகனம் ஓட்டி வந்தபின்பும், உடனே கை கழுவுதல் நல்லது. குழந்தைகளுக்கு எந்த ஒரு உணவு கொடுப்பதற்கு முன்பும், அவர்களது கைகளை நன்கு சுத்தமாக கழுவிய பின்பே கொடுக்க வேண்டும். இந்த பழக்கத்தை அவர்கள் சீராக கடைப்பிடிக்கும்படி செய்ய வேண்டும். கைகளை அவசர அவசரமாக 23 வினாடிகளில் கழுவக் கூடாது. குறைந்தது 30 வினாடியாவது கை கழுவுவதற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக ரசாயனம் கலந்த சோப்புகள், கிரீம்களை பயன்படுத்தக்கூடாது. கைகளை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். நக இடுக்குகளில் தண்ணீர் விட்டு கழுவ வேண்டும். இந்த முறைகளைக் கடைப்பிடித்து வந்தாலே, நோய்கள் நெருங்காத வண்ணம் ஆரோக்கியமாக வாழலாம்.

குழந்தை பிறக்கும் வரை கர்ப்பிணிகள் மல்லாந்து படுக்கக்கூடாது பக்கவாட்டில் தான் படுக்கவேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? இதோ சில உண்மைகள்..!
கர்ப்ப காலத்தில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது மல்லாந்து பார்த்தபடி தூங்கக்கூடாது. பக்கவாட்டில் தான் தூங்கவேண்டும் என்பது தான் அது. இது பற்றி அறிவியல் என்ன கூறுகிறது
* முதல் மூன்று மாதங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் 4 ஆம் மாதத்தில் இருந்து தாய்க்கும் சேய்க்கும் தொப்புள் கொடி வலிமை பெற்று இருக்கும்.
* மல்லாந்து படுத்தால், கருப்பையில் இருக்கும் நீரில் மிதந்துக்கொண்டிருக்கும் தொப்புள் கொடி கருவின் மீது சுற்றிக்கொள்ள வாய்ப்பு உள்ளது.
* 4 மாதங்களுக்கு பிறகு குழந்தையின் எடை கூடும் நிலையில் மல்லாந்து பார்த்தபடி படுத்தால் தாயின் குடல் மீது அழுத்தத்தை கொடுக்கும். இதனால் அஜீரணம் ஏற்படும். அசவுகரியமாக உணர்வார்கள்.
* அதிக எடை வயிற்று பகுதியில் இருக்கும் நிலையில் மேல் பார்த்தபடி படுத்தால் இடுப்பு மற்றும் முதுகு எலும்பிலும் அழுத்தம் ஏற்படும். இதனால் தாயின் உடலில் ரத்த ஓட்டமும் பாதிக்கும்.
* தாய் பக்கவாட்டில் படுத்திருக்கும் போது வயிற்றில் வளரும் குழந்தை அசைந்து விளையாடும். நடமாடும் போது, அசைவின்றி இருக்கும். இது ஏனென்றால், பக்கவாட்டில் படுத்திருக்கும் போது குழந்தை விளையாட அதிக இடம் கிடைக்கும். நின்றுக்கொண்டிருக்கும் போதும், மேல்நோக்கி பார்த்தபடி படுத்திருக்கும் போதும் கருப்பை சுருங்கி இடுப்பு எலும்பில் தாங்கியபடி இருக்கும். (தண்ணீர் பலூனின் இயல்பை ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்).
அதனால் கர்ப்பிணிகள் பக்கவாட்டில் படுத்து உறங்குவது தாயுக்கும் சேய்க்கும் மிகவும் நல்லது.

நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. நல்லெண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் நம் சருமத்திற்கு கிடைக்கும் பயன்கள் என்னவென்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும். பொடுகு முற்றிலும் நீங்கும். நல்லெண்ணெய் மிகவும் பிரபலமான பல்வேறு க்ரீம்கள், ஆயின்மென்ட், சோப்புகள், லோஷன் மற்றும் பாடி ஸ்கரப் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. நல்லெண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் நம் சருமத்திற்கு கிடைக்கும் பயன்கள் என்னவென்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
1 நல்லெண்ணெய் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவுகிறது, முகப்பரு மற்றும் பருக்களால் வரும் தழும்புகளைத் தடுக்கும். அதற்கு தினமும் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பஞ்சில் தொட்டு பருக்கள் உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் குறைவதோடு, தழும்புகளும் குறையும்.
2. பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு சரும பிரச்சனை தான் சரும வறட்சி. இந்த சரும வறட்சியைத் தடுக்க பல்வேறு வழிகள் உள்ளன. அதில் ஒன்று நல்லெண்ணெய். இந்த நல்லெண்ணெயை டோனர் வடிவில் பயன்படுத்தி வந்தால், சருமத்தின் இளமைத்தன்மை தக்க வைக்கப்பட்டு, சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.அதற்கு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதை முகம், கை, கால்களில் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். இப்படி தினமும் பயன்படுத்தி வருவதால், சருமம் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.
3. நல்லெண்ணெய் உதடுகளுக்கு ஒரு நல்ல நிறத்தை வழங்கும். ஒருவர் தினமும் நல்லெண்ணெயை உதடுகளுக்கு பயன்படுத்தி வந்தால், உதடுகள் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும். அதற்கு நல்லெண்ணெயை தினமும் இரவில் படுக்கும் முன் உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். ஆனால் நல்லெண்ணெயைப் பயன்படுத்திய உடனேயே பலன் கிடைக்காது. தினமும் பயன்படுத்தி வந்தால் தான் பலனைக் காண முடியும்.
4. கெமிக்கல் கலந்த மேக்கப் ரிமூவரைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, இயற்கை வழியில் மேக்கப்பை நீக்க நினைத்தால், நல்லெண்ணெயைப் பயன்படுத்துங்கள். அதுவும் பஞ்சுருண்டையில் நல்லெண்ணெயை நனைத்து, முகத்தை தினமும் துடைத்து எடுங்கள். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், மேக்கப் முழுமையாக நீங்குவதோடு, சருமமும் வறட்சியடையாமல் இருக்கும்.
5. நல்லெண்ணெயை ரோஸ் வாட்டருடன் சேர்த்து குதிகால் வெடிப்பை சரிசெய்யலாம். அதற்கு நல்லெண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டரை சரிசம அளவில் எடுத்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் குதிகாலில் தடவுங்கள். மறுநாள் காலையில் காலை வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இதனால் விரைவில் குதிகால் வெடிப்பு நீங்கும்.
6. கோடையில் ஒவ்வொருவரும் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனை தான் சருமம் கருமையாவது. இதைத் தடுப்பதற்கு நல்லெண்ணெய் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, கருமையான பகுதிகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
7. உங்கள் தலைமுடி வறட்சியுடனும், பாதிக்கப்பட்டும் காணப்படுகிறதா? அப்படியானால் உங்கள் தலைமுடியை நல்லெண்ணெய் பயன்படுத்தி பராமரியுங்கள். அதுவும் உங்கள் தலைமுடிக்கு தேவையான அளவு நல்லெண்ணெயை தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு ஒருமுறை தலைமுடிக்கு நல்லெண்ணெய் மசாஜ் செய்து வந்தால், தலைமுடி வறட்சியின்றி மென்மையாக இருக்கும்
8. உங்கள் கண்கள் சோர்வடைந்து, கருவளையங்களுடன் காணப்படுகிறதா? இதை நல்லெண்ணெய் கொண்டு சரிசெய்யலாம். அதற்கு நல்லெண்ணெயை ப்ரிட்ஜில் வைத்து குளிர செய்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி, கண்களின் மீது தடவ வேண்டும். இப்படி செய்தால், வீங்கிய கண்களின் வீக்கம் குறைவதோடு, கருவளையங்களும் நீங்கிவிடும்.

மாரடைப்பு நோயாளிகள், இரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.
தேவையான பொருட்கள் :
புழுங்கல் அரிசி - ஒரு கப்,
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு (மூன்றும் சேர்ந்து) - ஒரு கப்,
சின்ன வெங்காயம் - அரை கப்
காய்ந்த மிளகாய் - 4,
இஞ்சி - ஒரு துண்டு
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய் - கால் கப்,

செய்முறை:
சின்னவெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை கலந்து ஊற வைக்கவும். தண்ணீர் வடித்து, காய்ந்த மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.
மாவில் நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், சேர்த்துக் கலக்கவும்.
பிறகு, உப்பு போட்டு கலக்கவும்.
சூடான தவாவில் எண்ணெய் தடவி, மாவை கரண்டி அளவு விட்டு வட்டமாக, கொஞ்சம் கனமாக தேய்க்கவும்.
சுற்றிலும் எண்ணெய் விடவும். நடுவில் துளை செய்து கொஞ்சம் எண்ணெய் விட்டு வேகவிடவும். வெந்ததும் திருப்பி போடவும். நன்கு வெந்து பொன் முறுவலாக வந்ததும் எடுக்கவும்.

உப்பு - தேவையான அளவு.

சத்தான சுவையான சின்ன வெங்காய அடை ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கொரோனா வைரஸ் தடுக்க தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை பலரும் பயனுள்ள வழியில் செலவிட தொடங்கி இருக்கிறார்கள். பெண்களே நீங்களும் தனித்திறன்களை வளர்த்து வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்லலாம்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கி இருப்பது அவசியமானதாக இருக்கிறது. இந்த தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை பலரும் பயனுள்ள வழியில் செலவிட தொடங்கி இருக்கிறார்கள். பொழுதைப்போக்குவதற்கு சிரமப்படுபவர்களும் சில வழிமுறைகளை பின்பற்றினால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலுவாகி விடலாம். தனித்திறன்களை வளர்த்து வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்லலாம். அதற்கு செய்ய வேண்டிய சில விஷயங்கள்:
* ஏதாவதொரு புதிய திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள். இணையதளத்தில் கற்றுக்கொள்வதற்கான விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. தொழில் ரீதியாக உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. உங்களுக்கு தெரியாத புதிய விஷயங்கள் எதையாவது கற்றுக்கொண்டால் கூட அது வீண்போகாது. அதனை கொண்டு முதலீடு செய்து வாழ்க்கையில் முன்னேற தொடங்கலாம்.
* பெண்கள் ஏதாவதொரு கைவினைக்கலையை கற்றுக்கொள்ளலாம். இணையதள வீடியோக்கள் அதற்கு வழிகாட்டும். எளிமையான முறையில் விளக்கி புரியவைக்கும் விதத்தில் இருப்பதால் சிரமமில்லாமல் கற்றுக்கொண்டு சம்பாதிக்க தொடங்கலாம்.
* செல்போனில் வீணாக பொழுதைபோக்குவதை விட புத்தகங்கள் படிப்பது உங்கள் அறிவுத்திறனை மேம்படுத்தும். தெரியாத விஷயங்களை படித்து தெரிந்து கொள்வது வெளி உலகத்தொடர்பை விசாலப்படுத்தும்.
* நோய் எதிர்ப்பு தரும் பழங்கள், ஜூஸ்களை பருகுங்கள். ஆன்டிஆக்சிடெண்டுகள் நிறைந்த பொருட்களை உணவில் அதிகம் சேருங்கள். இந்த சமயத்தில் அவை உடலுக்கு அதிகம் தேவை.
* வெளி உணவுகளை தவிர்ப்பதற்கு பதிலாக அதே உணவை வீட்டிலேயே தயார் செய்வதற்கு பழகுங்கள். அது சமையல் கலை மீது உங்களை நாட்டம் கொள்ள வைக்கும். புதிய ரெசிபிகளை தயார் செய்து ருசித்துப்பார்க்க தூண்டும்.
* வீட்டின் மொட்டைமாடி, பால்கனியில் செடிகள் வளர்க்கலாம். அறைக்குள்ளும் உள் அலங்கார செடிகள் வளர்க்கலாம். வீட்டின் மொட்டை மாடியை மினி தோட்டமாக மாற்றுவதற்கு உகந்த நேரமாக இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.
* வீட்டிலிருந்து வேலை செய்கிறீர்கள் என்றால், வேலை செய்வதற்கு ஏற்ற அலுவலக சூழலை உருவாக்குங்கள். படுக்கை அறையில் இருந்து அலுவலக வேலைபார்ப்பதை தவிருங்கள். இடையூறு ஏற்படுத்தும் விஷயங்களை கண்டறிந்து அப்புறப்படுத்துங்கள்.
* உடல் ரீதியான சமூக இடைவெளி என்பது முழுமையான தனிமையில் வாழ்வது என்று அர்த்தமல்ல. குடும்ப உறுப்பினர்களுடன் பேசுவது, நண்பர்களுடன் வீடியோ காலில் அரட்டை அடிப்பது உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். பெற்றோர், நண்பர்கள், உறவினர்களிடம் நேஇரத்தை செலவிடாமல் சமூகவலைத்தளங்களில் மூழ்கி கிடந்தவர்கள் இந்த தருணத்தை அவர்களுக்காக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.