என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    ஹயக்ரீவர் ஸ்லோகத்தை, படிக்கும் பிள்ளைகள் நாள்தோறும் சொல்லி வந்தால் அவர்கள் வாக்குவன்மையில் சிறந்து விளங்குவர்.
    ஹயக்ரீவர் ஸ்லோகத்தை, படிக்கும் பிள்ளைகள் நாள்தோறும் சொல்லி வந்தால் அவர்கள் வாக்குவன்மையில் சிறந்து விளங்குவர். கல்வி கேள்விகளில் ஞானம் பெற்று உலகை ஆளும் திறம் பெறுவர்.

    ஹயக்ரீவர் ஸ்லோகம்:

    “ஞானானந்தமயம் தேவம் நிர்மல
    ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வவித்யானாம்
    ஹயக்ரீவ முபாஸ்மஹே”

    பொருள்: ஞானமும் ஆனந்தமயமமானவரும், தூய்மையான ஸ்படிகம் போன்ற தேகத்தை உடையவரும், சகல கல்விக் கலைகளுக்கு ஆதாரமுமானவரான ஸ்ரீஹயக்ரீ வரை நான் உபாசிக்கிறேன்.

    ஹயக்ரீவர் மூல மந்திரம் :

    உக்தீத ப்ரண வோத்கீதஸர்வ வாகீச்வரேச்வரஸர்வ
    வேத மயோச்ந்த்யஸர்வம் போதய போதயஹயக்ரீவர்

    ஹயக்ரீவர் காயத்ரீ மந்திரம்

    ஓம் தம் வாகீச்வராய வித்மஹே
    ஹயக்ரீவாய தீமஹிதந்நோ
    ஹஸெள ப்ரசோதயாத்!
    குரு பகவானுக்கு உகந்த இந்த ஸ்ரீ தட்சிணாமூர்த்தி 108 போற்றியை தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் சொல்லி வந்தால் குருவருள் கிடைக்கும்.
    1. ஓம் அறிவுருவே போற்றி
    2. ஓம் அழிவிலானே போற்றி
    3. ஓம் அடைக்கலமே போற்றி
    4. ஓம் அருளாளனே போற்றி
    5. ஓம் அல்லல் அறுப்பவனே போற்றி
    6. ஓம் அடியாரன்பனே போற்றி
    7. ஓம் அகத்துறைபவனே போற்றி
    8. ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
    9. ஓம் அற்புதனே போற்றி
    10. ஓம் அபயகரத்தனே போற்றி

    11. ஓம் ஆன்கீழமர்ந்தவனே போற்றி
    12ஓம் ஆன்மீகநாதனே போற்றி
    13. ஓம் ஆச்சாரியனே போற்றி
    14. ஓம் ஆசாரக்காவலே போற்றி
    15. ஓம் ஆக்கியவனே போற்றி
    16. ஓம் ஆதரிப்பவனே போற்றி
    17. ஓம் ஆதி பகவனே போற்றி
    18. ஓம் ஆதாரமே போற்றி
    19. ஓம் ஆழ்நிலையானே போற்றி
    20. ஓம் ஆனந்த உருவே போற்றி
    21. ஓம் இருள் கொடுப்பவனே போற்றி
    22. ஓம் இருமை நீக்குபவனே போற்றி
    23. ஓம் இசையில் திளைப்பவனே போற்றி
    24. ஓம் ஈடேற்றுபவனே போற்றி
    25. ஓம் உய்யவழியே போற்றி
    26. ஓம் ஊழிக்காப்பே போற்றி
    27. ஓம் எந்தையே போற்றி
    28. ஓம் எளியோர்க்காவலே போற்றி
    29. ஓம் ஏகாந்தனே போற்றி
    30. ஓம் ஏடேந்தியவனே போற்றி
    31. ஓம் ஒளிப்பிழம்பே போற்றி

    32. ஓம் ஓங்கார நாதமே போற்றி
    33. ஓம் கயிலை நாதனே போற்றி
    34. ஓம் கங்காதரனே போற்றி
    35. ஓம் கலையரசே போற்றி
    36. ஓம் கருணைக்கடலே போற்றி
    37. ஓம் குணநிதியே போற்றி
    38. ஓம் குருபரனே போற்றி
    39. ஓம் சதாசிவனே போற்றி
    40. ஓம் சச்சிதானந்தமே போற்றி
    41. ஓம் சாந்தரூபனே போற்றி

    42. ஓம் சாமப்பிரியனே போற்றி
    43. ஓம் சித்தர் குருவே போற்றி
    44. ஓம் சித்தியளிப்பவனே போற்றி
    45. ஓம் சுயம்புவே போற்றி
    46. ஓம் சொற்பதங்கடந்தவனே போற்றி
    47. ஓம் ஞானமே போற்றி
    48. ஓம் ஞானியே போற்றி
    49. ஓம் ஞானநாயகனே போற்றி
    50. ஓம் ஞானோபதேசியேபோற்றி
    51. ஓம் தவசீலனே போற்றி

    52. ஓம் தனிப்பொருளே போற்றி
    53. ஓம் திருவுருவே போற்றி
    54. ஓம் தியானேஸ்வரனே போற்றி
    55. ஓம் தீரனே போற்றி
    56. ஓம் தீதழிப்பவனே போற்றி
    57. ஓம் துணையே போற்றி
    58. ஓம் தூயவனே போற்றி
    59. ஓம் தேவாதிதேவனே போற்றி
    60. ஓம் தேவருமறியா சிவனே போற்றி
    61. ஓம்நன்னெறிக்காவலே போற்றி

    62. ஓம் நல்யாக இலக்கே போற்றி
    63. ஓம் நாகப்புரியோனே போற்றி
    64. ஓம் நான்மறைப்பொருளே போற்றி
    65. ஓம் நிலமனே போற்றி
    66. ஓம் நிறைந்தவனே போற்றி
    67. ஓம் நிலவணியானே போற்றி
    68. ஓம் நீறணிந்தவனே போற்றி
    69. ஓம் நெற்றிக்கண்ணனே போற்றி
    70. ஓம் நோய் தீர்ப்பவனே போற்றி
    71. ஓம் பசுபதியே போற்றி

    72. ஓம் பரப்பிரம்மனே போற்றி
    73. ஓம் பிரம்மச்சாரியே போற்றி
    74. ஓம் பிறப்பறுப்போனே போற்றி
    75. ஓம் பேறளிப்பவனே போற்றி
    76. ஓம் பேசாமற்றெளிவிப்பேன் போற்றி
    77. ஓம் பொன்னம்பலனே போற்றி
    78. ஓம் போற்றப்படுவனே போற்றி
    79. ஓம் மறைகடந்தவனே போற்றி
    80. ஓம் மறையாப் பொருளே போற்றி
    81. ஓம் மஹேசுவரனே போற்றி

    82. ஓம் மங்கலமளிப்பவனே போற்றி
    83. ஓம் மலைமுகட்டிருப்பவனே போற்றி
    84. ஓம் மாமுனியே போற்றி
    85. ஓம் மீட்பவனே போற்றி
    86. ஓம் முன்னவனே போற்றி
    87. ஓம் முடிவிலானே போற்றி
    88. ஓம் முக்கண்ணனே போற்றி
    89. ஓம் மும்மலமறுப்பவனே போற்றி
    90. ஓம் முனீஸ்வரனே போற்றி
    91. ஓம் முக்தியளிப்பவனே போற்றி

    92. ஓம் மூலப்பொருளே போற்றி
    93. ஓம் மூர்த்தியே போற்றி
    94. ஓம் மோஹம் தீர்ப்பவனே போற்றி
    95. ஓம் மோன சக்தியே போற்றி
    96. ஓம் மௌன உபதேசியே போற்றி
    97. ஓம் மேதா தட்சணாமூர்த்தியே போற்றி
    98. ஓம் யோக நாயகனே போற்றி
    99. ஓம் யோக தட்சணாமூர்த்தியேபோற்றி
    100. ஓம் யம பயமழிப்பவனே போற்றி
    101. ஓம் ருத்திரப்பிரியனே போற்றி

    102. ஓம் ருத்திராட்சம் பூண்டவனே போற்றி
    103. ஓம் வித்தகனே போற்றி
    104. ஓம் விரிசடையனே போற்றி
    105. ஓம் வில்லவப்பிரியனே போற்றி
    106. ஓம் வினையறுப்பவனே போற்றி
    107. ஓம் விஸ்வரூபனே போற்றி
    108. ஓம் தட்சணா மூர்த்தியே போற்றி போற்றி
    தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மனுக்கு உகந்த இந்த தியான ஸ்லோகத்தை சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.
    அக்நிஜ்வாலாசிகாம் அக்னிநேத்ராம் அக்னிஸ்வரூபிணீம்
    கரண்ட மகுடோபேதாம் கதா டக்கா கராம்புஜாம்|
    வீராஸநாம் கபாலாஸி பாச ஹஸ்தாம் ரவிப்ரபாம்
    வந்தே தேவீம் மஹாமாரீம் நாகாபரணபூஷிதாம்.
    சபரிமலை ஐயப்பனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் வாழ்வில் அனைத்து விதமான நன்மைகளையும் பெறலாம்.
    திருவடியைத் தேடிவந்தோம் ஐயப்பா- உன் 
    திருப்புகழைப் பாடிவந்தோம் ஐயப்பா 
    இருமுடியைத் தாங்கிவந்தோம் ஐயப்பா - உன் 
    இன்னருளை நாடிவந்தோம் ஐயப்பா 
    காடுமலை கடந்துவந்தோம் ஐயப்பா - உன் 
    காந்தமலை காணவந்தோம் ஐயப்பா 
    கேடுஒன்றும் வந்திடாமல் ஐயப்பா - எனக்குக் 
    கேட்டவரம் தந்திடுவாய் ஐயப்பா 
    பம்பைநதி ஆடிவந்தோம் ஐயப்பா - எம்மைப் 
    பார்த்தருள வேண்டுகிறோம் ஐயப்பா 
    உன்னைநம்பி வாழுகிறோம் ஐயப்பா - எனக்கு 
    நல்வழி காட்டிடுவாய் ஐயப்பா 
    முற்பிறப்பில் செய்ததவம் ஐயப்பா - உன் 
    முகம்காண கொடுத்துவைத்தோம் ஐயப்பா 
    அன்னையைப்போல் நீயிருந்து ஐயப்பா - எம்மை 
    அன்புடனே ஆண்டருள்வாய் ஐயப்பா 
     என்னதவம் செய்தேனோ ஐயப்பா 
    பேரின்பத்தை நான் அடைந்தேன் ஐயப்பா 
    முன்னாள் செய்த புண்ணியத்தால் ஐயப்பா 
    இந்நாள் சரணம் பாடுகிறேன் ஐயப்பா 
    ஐயனைக் காண விரதம் இருந்து ஐயப்பா 
    கழுத்தில் துளசி மாலையணிந்தேன் ஐயப்பா 
    காலை, மாலை சரணம்பாடி ஐயப்பா 
    காவியுடை நான் அணிவேன் ஐயப்பா 
    எல்லோரையும் சாமி என்றே ஐயப்பா
    நல்லபடி நான் அழைப்பேன் ஐயப்பா 
    மார்கழிப் பதினொன்றில் ஐயப்பா 
    மண்டலபூஜை செய்திடுவேன் ஐயப்பா 
    உன்னைக்காண நல்லநாளில் ஐயப்பா - உன் 
    இருமுடியைத் தாங்கிடுவேன் ஐயப்பா 
    சரணம்பாடி வழிநடப்பேன் ஐயப்பா 
    ஐயன்மலை வந்தடைவேன் ஐயப்பா
    சாமி சரணம் ஐயப்பா ஐயப்ப சரணம் ஐயப்பா
    ஓம் ஸ்வாமியே ..... சரணம் ஐயப்பா  ..... 
    தினமும் அல்லது பிரதோஷம் அன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் பெறலாம்.
    ஓம் ஓம்கார நமசிவாய 
    ஓம் நகாராய நமசிவாய‌ 
    ஓம் மகாராய நமசிவாய 
    ஓம் சிகாராய நமசிவாய 
    ஓம் வகாராய நமசிவாய 
    ஓம் யகாராய நமசிவாய 
    ஓம் நம; ஸ்ரீ குரு தேவாய, 
    பரமபுருஷாய ஸர்வ தேவதா 
    வசீகராய‌ ஸர்வாரிஷ்ட விநாசாய 
    ஸர்வ துர்மந்தரச் சேதனாய த்ரை 
    லோக்யம் வசமாய ஸ்வாஹா।
    ஸ்தோத்திரங்களை, ஸ்லோகங்களை விட மூலமந்திர ஜெபம் அந்த குறிப்பிட்ட தெய்வத்திற்கு அருகில் விரைவாய் அழைத்துச் செல்லும்.
    1. ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்

    ஓம் ஐம் க்லீம் சௌம்

    இதில் சௌம் என்பதை "சௌஹூம்" என்று சொல்லுவது சிறந்தது.

    ஐம் - என்ற பீஜம் வாக்பீஜம் எனப்படுகிறது.- பிரம்மா.சரஸ்வதி இவர்களின் அம்சம்.இம் மந்திரம் நல்ல வாக்குவன்மை (பேச்சாற்றல்),வாக்குபலிதம்,ஞானம்,அறிவு இவற்றைத் தரும்.

    க்லீம் - என்ற பீஜம் காமராஜபீஜம் எனப்படும்.இதில் விஷ்ணு, லக்ஷ்மி, காளி, மன்மதன் இவர்கள் அடக்கம்.இம்மந்திரம் நல்ல செல்வம்,செல்வாக்கு,கௌரவம்,வசீகரசக்தி,உடல்,மன பலம் இவற்றை தரும்.

    சௌஹூம் - இப்பீஜத்தில் சிவன்,பார்வதி,முருகன் இவர்கள் அடக்கம்.சௌம் என்ற பீஜத்தில் இருந்தே சௌபாக்கியம் என்ற வார்த்தை தோன்றியதாக வேதம் கூறுகிறது.இப்பீஜம் சௌபாக்கியம் நிறைந்த வளவாழ்வினைத்தரும்.

    இவ்வாறு மும்மூர்த்திகளின் பீஜத்தையும் ஒருங்கே கொண்டவள் வாலைத்தாய் என்ற ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அன்னை. இவள் மந்திரத்தை முறையாய் ஜெபித்து நல்வாழ்வு வாழ்ந்து ஆன்மீகத்திலும், வாழ்விலும் உயர்ந்த நிலையை அடையலாம். 

    2. ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி சடாட்சரி மந்திரம் :

    ஓம்
    ஐம் க்லீம் சௌம்
    சௌம் க்லீம் ஐம்

    3. ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி நவாட்சரி மந்திரம் :

    ஓம்
    ஐம் க்லீம் சௌம்
    சௌம் க்லீம் ஐம்||ஐம் க்லீம் சௌம்

    முதலில் திரியட்சரம் ஜெபித்து சித்தியடைந்த பின் சடாட்சரியும் பின்னர் நவாட்சரியும் ஜெபிக்க உத்தமம்.

    வாலையடி சித்தருக்கு தெய்வம் என்று சித்தர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட அன்னை ஸ்ரீ பால திரிபுரசுந்தரியின் அருள் நம்மனைவரையும் வாழ்விலும் ஆன்மீகத்திலும் மென்மேலும் உயர வழிகாட்ட, உறுதுணையாய் நிற்க வேண்டுகிறேன்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தைக்கிருத்திகையான இன்று பாராயணம் செய்தால் ராகு, கேது தோஷங்கள் நீங்கும். எல்லா செயல்களிலும் வெற்றி கிட்டும்.
    ஸிந்தூராருணமிந்துகாந்திவதனம் கேயூரஹாராதிபி:
    திவ்யைராபரணைர் விபூஷிததனும் ஸ்வர்காதி ஸௌக்யப்ரதம்
    அம்போஜாபயசக்திகுக்குடதரம் ரக்தாங்கராகோஜ்வலம்
    ஸுப்ரஹ்மண்யமுபாஸ்மஹே ப்ரணமதாம் பீதிப்ரணாசோத்யதம்
    சுப்ரமண்ய த்யானம்.

    பொதுப்பொருள்: 

    சிந்தூரம் போல் சிவந்த வண்ணம் கொண்டவரே, சந்திரன் போன்ற பேரழகு முகத்தவரே, தோள்வளை, முக்தாஹாரம் முதலான திவ்யமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவரே, ஸ்வர்க்க போகம் முதலான சுகத்தை அளிப்பவரே, தாமரைப்பூ, அபயஹஸ்தம், சக்திவேல், சேவல் ஆகியவற்றைக் கரங்களில் தரித்தவரே, சிவந்த வாசனைப் பொடிகளால் நறுமணம் கமழ்பவரே, பக்தி செலுத்துவோரின் பயத்தைப் போக்குபவரே, சுப்ரமண்யரே நமஸ்காரம்.

    இத்துதியை தைக்கிருத்திகையான இன்று பாராயணம் செய்தால் ராகு, கேது தோஷங்கள் நீங்கும். எல்லா செயல்களிலும் வெற்றி கிட்டும்.
    இத்துதியை வெள்ளிக்கிழமை அல்லது அஷ்டமி அன்றும் பாராயணம் செய்தால் தேவியின் திருவருளால் தடைகள் நீங்கி, திருமணம் மகிழ்ச்சி பொங்க நடைபெறும்.
    ஓம் ஹ்ரீம் யோகினி யோகினி யோகிச்வரி யோக பயங்கரி
    ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய முக ஹ்ருதயம் மம வஸமாகர்ஷய
    கர்ஷய ஸ்வாஹா

    - ஸ்வயம்வரா பார்வதி மூல மந்திரம் 

    பொதுப் பொருள்: 

    ஹ்ரீம் எனும் பீஜத்தில் உறைபவளே, யோகினியே, யோகேஸ்வரியே, சகல ஜீவன்களும் எனக்கு வசமாக அருள்புரிவாய் அம்மா.

    - இத்துதி, தேவி வழிபாட்டில் ஸ்வயம்வர கல்யாணி என்று போற்றப்படுகிறது. ருக்மிணி கிருஷ்ணனை இத்துதியை ஜபித்தே மணந்தாள். பார்வதியாக அவதரித்தபோது உமாதேவி இத்துதியை பராசக்தியைக் குறித்து துதித்தே ஈசனை மணந்தாள். 

    இத்துதியை வெள்ளிக்கிழமைகளிலும் அஷ்டமி தினத்தன்றும் குறிப்பாக பங்குனி உத்திர தினத்தன்றும் பாராயணம் செய்தால் தேவியின் திருவருளால் தடைகள் நீங்கி, திருமணம் மகிழ்ச்சி பொங்க நடைபெறும்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள சூரிய காயத்ரி மந்திரத்தை தினமும் அல்லது ரதசப்தமியான இன்று 108 தடவை சொல்வது நன்மை அளிக்கும்.
    ‘ஓம் அஸ்வத் வஜாய வித்மஹே
    பத்ம ஹஸ்தாய தீமஹீ
    தன்னோ, சூரிய பிரசோதயாத்’

    என்ற சூரிய காயத்ரி மந்திரத்தை 108 தடவை சொல்வது நன்மை அளிக்கும்.

    ரதசப்தமியன்று தொடங்கும் தொழில் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நாளில் செய்யப்படும் தர்மம், தானத்திற்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். சூரியன், நாம் வழங்கும் தானத்தை நம் முன்னோர்களிடம் வழங்குகிறார். எவ்வளவு கொடிய பாவங்களும் இதனால் அகன்று விடும்.
    தினமும் மகாலட்சுமி தேவிக்கு நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, கீழ்க்காணும் லட்சுமி ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபடுங்கள்.
    தினமும் மகாலட்சுமி தேவிக்கு நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, கீழ்க்காணும் லட்சுமி ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபடுங்கள். மேலும், தங்களது சக்திக்கு உகந்தவாறு ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள். இதனால், ரோகங்கள், மனத் துயரங்கள், சஞ்சலங்கள் ஆகிய யாவையும் நீங்கி புது நம்பிக்கைப் பிறக்கும். தேவியின் திருவருளால் வீட்டில் செல்வகடாட்சம் உண்டாகும்; நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்.

    நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
    ஸங்கசக்ரகதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    நமஸ்தே கருடாரூடே கோலாஸுரபயங்கரீ
    ஸர்வபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    ஸர்வக்ஞே ஸர்வவரதே ஸர்வதுஷ்டபயங்கரீ
    ஸர்வ து:க்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    ஸித்திபுத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
    மந்த்ரமூர்த்தே ஸ்தாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
    ஆத்யந்த்ரஹிதே தேவி ஆத்யஸக்தி மஹேஸ்வரி
    யோகஜே யோக ஸம்பூதே மகா லக்ஷ்மி நமோஸ்துதே

    கருத்து: மகாமாயையும் ஸ்ரீ பீடத்தில் வசிப்பவளும் தேவர்களால் பூஜிக்கப்பட்டவளும் சங்கம், சக்கரம், கதாயுதம் ஆகியவற்றைத் தரித்தவளுமான மகாலட்சுமி தேவியே தங்களை வணங்குகிறோம்.
    பயம், எதிரிகளின் தொல்லை நீங்க அனுமனுக்கு உகந்த இந்த அஷ்டோத்ர சத நாமாவளியை தினமும் சொல்லி வந்தால் நிச்சயம் நல்ல பலனை காணலாம்.
    ஓம் ஆஞ்சநேயா நம
    ஓம் மஹாவீராய நம
    ஓம் ஹநூமதே நம
    ஓம் மாருதாத்மஜாய நம
    ஓம் தத்வஜ்ஞாநப்ரதாய நம
    ஓம் ஸீதாதேவீ முத்ரா ப்ரதாயகாய நம
    ஓம் அசோகவநிகாச்சேத்ர நம
    ஓம் ஸர்வமாயாவி பஞ்ஜநாய நம
    ஓம் ஸர்வபந்தவிமோக்த்ரே நம
    ஓம் ர÷க்ஷõவித்வம்ஸகாரகாய நம 

    ஓம் பரவித்யாபரீஹாராய நம
    ஓம் பரஸெளர்யநாஸநாய நம
    ஓம் பரமந்த்ர நிராகர்த்ரே நம
    ஓம் பரயந்த்ரப்ரபேதகாய நம
    ஓம் ஸர்வக்ரஹவிநாஸிநே நம
    ஓம் பீமஸேநஸஹாயக்ருதே நம
    ஓம் ஸர்வலோகசாரிணே நம
    ஓம் மநோஜவாய நம
    ஓம் பாரிஜா தத்ரு மூவஸ்தாய நம 

    ஓம் ஸர்வமந்த்ரஸ்வரூபவதே நம
    ஓம் ஸர்வ தந்த்ரஸ்வரூபிணே நம
    ஓம் ஸர்வமந்த்ராத்மகாய நம
    ஓம் கபீச்வராய நம
    ஓம் மஹாகாயாய நம
    ஓம் ப்ரபவே நம
    ஓம் பலஸித்திகராய நம
    ஓம் ஸர்வவித்யாஸம்பத ப்ரதாயகாய நம
    ஓம் கபிஸேநாநாயகாய நம 

    ஓம் பவிஷ்யச்சதுராநநாய நம
    ஓம் குமாரப்ரஹ்மசாரிணே நம
    ஓம் ரத்நகுண்டல தீப்திமதே நம
    ஓம் ஸஞ்சலத் வாலஸந்நத்த நம
    ஓம் லம்பமாநஸிகோஜ்ஜவ லாய நம
    ஓம் கந்த்ர்வவித்யா தத்வஜ்ஞயா நம
    ஓம் மஹாபலபராக்ரமாய நம
    ஓம் காராக்ருஹவி மோக்த்ரே நம
    ஓம் ச்ருங்கலா பந்தமோ சகாய நம
    ஓம் ஸாகரோத்தாரகாய நம 

    ஓம் ப்ராஜ்ஞாய நம
    ஓம் ராமதூதாய நம
    ஓம் ப்ரதாபவதே நம
    ஓம் வாநராய நம
    ஓம் கேஸரிஸுதாய நம
    ஓம் ஸீதாஸோக நிவாரணாய நம
    ஓம் அஞ்ஜநாகர்ப ஸம்பூதாய நம
    ஓம் பாலார்க்கஸத்ருஸாந நாய நம
    ஓம் விபீஷணபரிகராய நம
    ஓம் தஸக்ரீவகுலாந்தகாய நம 

    ஓம் லக்ஷ்மணப்ராணதாத்தே நம
    ஓம் வஜ்ரகாயாய நம
    ஓம் மஹாத்யுதயே நம
    ஓம் சிரஞ்ஜீவிநே நம
    ஓம் ராமபக்தாய நம
    ஓம் தைத்யகார்ய நம
    ஓம் விகாதகாய நம
    ஓம் அக்ஷஹந்த்ரே நம
    ஓம் காஞ்சநாபாய நம
    ஓம் பஞ்சவக்த்ராய நம 

    ஓம் மஹா தபஸே நம
    ஓம் லங்கிணீ பஞ்ஜநாய நம
    ஓம் ஸ்ரீமதே நம
    ஓம் ஸிம்ஹி காப்ராண பஞ்ஜநாய நம
    ஓம் கந்தமாதநசைலஸ் தாய நம
    ஓம் லங்காபுரவிதாஹகாய நம
    ஓம் ஸுக்ரீவஸ்சிவாய நம
    ஓம் பீமாய நம
    ஓம் சூராய நம
    ஓம் தைத்யகுலாந்தகாய நம 
    ஓம் ஸுரார்ச்சிதாய நம
    ஓம் மஹாதேஜஸே நம
    ஓம் ராமசூடாமணிப்ரதாய நம
    ஓம் காமரூபிணே நம
    ஓம் பிங்களாக்ஷய நம
    ஓம் வார்திமை நாசபூஜிதாய நம
    ஓம் கபளீக்ருதமார்த்தாண்ட மண்டலாய நம
    ஓம் விஜிதேந்தரியாய நம
    ஓம் ராமஸுக்ரீவஸந்தாத்ரே நம
    ஓம் மஹாராவணமாதநாய நம 

    ஓம் ஸ்படிகாபாய நம
    ஓம் வாகதீஸாய நம
    ஓம் நவவ்யாக்ருதி பண்டிதாய நம
    ஓம் சதுர்பாஹவே நம
    ஓம் தீநபந்தவே நம
    ஓம் மஹாத்மநே நம
    ஓம் பக்தவத்ஸலாய நம
    ஓம் ஸஞ்ஜீவநநகர ஹர்த்ரே நம
    ஓம் ஸுசயே நம
    ஓம் வாக்மிநே நம 

    ஓம் த்ருடவரதாய நம
    ஓம் காலநேமிப்ரமத நாய நம
    ஓம் ஹரிமர்கடமாகடாய நம
    ஓம் தாந்தாய நம
    ஓம் ஸாந்தாய நம
    ஓம் ப்ரஸநாத்மநே நம
    ஓம் தசகண்ட மதா பஹ்ருதே நம
    ஓம் யோகிநே நம
    ஓம் தசகண்ட மதா பஹ்ருதே நம
    ஓம் யோகிநே நம
    ஓம் ராமகதாலோலாய நம
    ஓம் ஸீதாந்வேஷண பண்டிதாய நம 

    ஓம் வஜ்ரநாய நம
    ஓம் ருத்ரவீகயஸமுத்பவாய நம
    ஓம் இந்திரஜித ப்ரஹிதா மோகப்ரஹ்மா நம
    ஓம் ஸ்த்ரவிநிவாரகாய நம
    ஓம் பார்த் த்வஜாக்ர ஸம்வாஸிநே நம
    ஓம் ஸரபஞ்ஜர பேதகாய நம
    ஓம் தஸபாஹவே நம
    ஓம் லோகபூஜ்யாய நம
    ஓம் ஜாம்பவத் ப்ரீதி வர்த்தநாய நம
    ஓம் ஸீதாஸமேத ஸ்ரீராம பாதஸேவா துரந்தராய நம
    அனுமனுக்கு உகந்த சனிக்கிழமைகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வந்தால் அனுமன் அருள் கிட்டும். கிரக தோஷங்கள் விலகும்.
    அதுலித பலதாமம் ஸ்வர்ண
    சைலாபதேஹம்தநுஜவன க்ருசாநும்
    ஞானினாமக்ரகண்யம்
    ஸகல குண நிதானம் வானராணாமதீசம்
    ரகுபதிவரதூதம் வாதஜாதம் நமாமி

    - ஹனுமத் ஸ்லோகம்

    பொதுப்பொருள் :

    நிகரில்லாத பலம் கொண்டவரே, ஸ்வர்ண பர்வதம் போன்ற ஒளி மிகுந்த தேகம் கொண்டவரே, வனம்போல் மிகுந்த ராட்சஸ குலத்தை பொசுக்கும் தீ போன்றவரே, ஞானிகளின் தலைவரே, ஸகல ஸத்குண நிலையமாக உடையவரே, குரங்கு குணத்தையே மாற்றும் புத்தி திறமை உள்ளவரே, ராமனுக்கு தூதனாக சென்றவரே, வாதத் திறமை கொண்டவரே, தங்களை வணங்குகிறேன். இத்துதியை ஹனுமத் ஜெயந்தி அன்று ஆரம்பித்து பின் தொடரும் சனிக்கிழமைகளில் பாராயணம் செய்து வந்தால் அனுமன் அருள் கிட்டும். கிரக தோஷங்கள் விலகும்.
    ×