என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    கருடனை வழிபடும் போது கருட காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரித்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் எளிதாக நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
    தன்னை வழிபடும் பக்தர்களின் குறைகளை கருடன், தன்னுடைய எஜமானரான மகாவிஷ்ணுவிடம் கொண்டு செல்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கருடனை வழிபடும் போது கருட காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரித்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் எளிதாக நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

    கருட காயத்ரி மந்திரம்

    ‘ஓம் தத்புருஷாய வித்மஹே
    ஸூவர்ண பட்சாய தீமஹி
    தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்’
    நன்றாகப் படித்த மாணவர்கள்கூட, தேர்வு நெருங்கும் வேளையில் கொஞ்சம் படபடப்பாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்.
    நன்றாகப் படித்த மாணவர்கள்கூட, தேர்வு நெருங்கும் வேளையில் கொஞ்சம் படபடப்பாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். இதை தினமும் கூட சொல்லலாம்.

    பாஷ்யாதி ஸர்வஸாஸ்த்ரானி ஏசான்யே நியமாஹா: ததா
    அட்சரானயச ஸர்வானி துவந்து தேவி நமோஸ்துதே.

    இந்த ஸ்லோகத்தைச் சொல்லச் சொல்ல, படிப்பின் மீதும், படித்து மனனம் செய்த விஷயங்கள் மீதும் அசைக்கமுடியாத நம்பிக்கை பிறக்கும். படித்து உள்வாங்கிய விஷயங்களை, சட்டென்று எடுத்து தேர்வுத்தாளில் இறக்குவதற்கான சாவிதான் இந்த ஸ்லோகம்! ஆத்மார்த்தமாகச் சொல்லுங்கள்; தேர்வில் வெற்றி நிச்சயம்!
    தேகம் ஆரோக்கியத்துடன் இருக்க தன்வந்திரி பகவானை மனதில் நிறுத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தைச் தினமும் சொல்லி வழிபடுங்கள்.
    தேகம் ஆரோக்கியத்துடன் இருந்துவிட்டால், மற்ற எல்லா வேலைகளையும் திறம்படச் செய்யமுடியும். தவிர, உடல் உழைப்புக்கு மட்டுமின்றி, புத்தியின் யோசிப்புத் தன்மைக்கும் உடலில் எந்த நோயும் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பலம். எனவே தன்வந்திரி பகவானை மனதில் நிறுத்தி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள்.

    ஓம் நமோ பகவதே வாசுதேவாய
    தன்வந்தரேயே அம்ருதகலச ஹஸ்தாய
    சர்வாமய நாசாய த்ரைலோக்ய நாதாய
    ஸ்ரீமகாவிஷ்ணவே நம:

    சிவராத்திரியான இன்று சிவனின் திருநாமங்களையும், பெருமைகளையும் போற்றி வாழ்த்தி மலர்தூவி வழிபட வேண்டும். இந்தப் போற்றிகள் 108-ம் உங்களுக்கு உதவும்.
    சிவராத்திரி தினத்தன்று சிவனின் திருநாமங்களையும், பெருமைகளையும் போற்றி வாழ்த்தி மலர்தூவி வழிபட வேண்டும். இந்தப் போற்றிகள் 108-ம் உங்களுக்கு உதவும். நினைவில் நிற்க வசதியாக அவை அமைந்துள்ளன.

    பாடிப் பாடிப் பரவவும், பணிந்து உவந்து போற்றவும். இதனால் பரமனருள் சித்திப்பது உறுதி. ஒவ்வொரு துதியின் முன்னாலும் ‘ஓம்‘ சேர்த்து, சொல்ல வேண்டும். இப்படி சொல்வதால் பலன் உண்டு. ஒவ்வொரு போற்றி முடிந்ததும், வில்வத் தழையோ மலரோ இறைவன் பாதங்களில் இட்டு, அருச்சனை செய்வது போல் மனப்பூர்வமாகப் பாவிக்கவும். இதுவும் மானச பூஜையின் பகுதிதான்.

    ஓம் அம்மையே அப்பா போற்றி
    ஓம் அளப்பிலா அருளே போற்றி
    ஓம் அன்பெனும் மலையே போற்றி
    ஓம் அடியார்கள் துணையே போற்றி
    ஓம் அணுவினுள் அணுவே போற்றி
    ஓம் அண்டங்கள் கடந்தாய் போற்றி
    ஓம் அகரமே அறிவே போற்றி
    ஓம் அறிந்திடு மொழியே போற்றி
    ஓம் அகத்தனே  போற்றி போற்றி!

    ஓம் அலைகடல் விரிவே போற்றி
    ஓம் அழகனாம் அமுதே போற்றி
    ஓம் அரும்பிறை அணிந்தாய் போற்றி
    ஓம் அவிரொளி சடையாய் போற்றி
    ஓம் அகஞ்சுடர் விளக்கே போற்றி
    ஓம் அகந்தை நோய் அழிப்பாய் போற்றி
    ஓம் அருமறை முடிவே போற்றி
    ஓம் அருந்தவர் நினைவே போற்றி
    ஓம் அரஹரா போற்றி போற்றி!

    ஓம் ஆதியே அருளே போற்றி
    ஓம் ஆலால கண்டா போற்றி
    ஓம் ஆதாரப் பொருளே போற்றி
    ஓம் ஆலமர் குருவே போற்றி
    ஓம் ஆலவாய் அப்பா போற்றி
    ஓம் ஆரூரின் தியாகா போற்றி
    ஓம் ஆடிடும் கூத்தா போற்றி
    ஓம் ஆடரவு அணியாய் போற்றி
    ஓம் ஆற்றலே போற்றி போற்றி!

    ஓம் இமையவர் உளத்தாய் போற்றி
    ஓம் இருட்கறை மிடற்றாய் போற்றி
    ஓம் இருவினை தவிர்ப்பாய் போற்றி
    ஓம் இரக்கமே வடிவாய் போற்றி
    ஓம் இனியசெந் தமிழே போற்றி
    ஓம் இலக்கியச் செல்வா போற்றி
    ஓம் இமயவள் பங்கா போற்றி
    ஓம் இன்னல்கள் களைவாய் போற்றி
    ஓம் இறைவனே போற்றி போற்றி!

    ஓம் இதயத்தே கனிவாய் போற்றி
    ஓம் இனிமையே நிறைப்பாய் போற்றி
    ஓம் இனியவர் மனத்தாய் போற்றி
    ஓம் இடபவா கனத்தாய் போற்றி
    ஓம் ஈடிலாப் பிரானே போற்றி
    ஓம் ஈந்தருள் தேவே போற்றி
    ஓம் ஈமத்தே குனிப்பாய் போற்றி
    ஓம் ஈசானத் திறையே போற்றி
    ஓம் ஈசனே போற்றி போற்றி!

    ஓம் உலகிதன் முதலே போற்றி
    ஓம் உமையரு பாகா போற்றி
    ஓம் உள்ளளிர் சுடரே போற்றி
    ஓம் உணவொடு நீரே போற்றி
    ஓம் உடுக்கையின் ஒலியே போற்றி
    ஓம் உடைகரித் தோலாய் போற்றி
    ஓம் உரைகடந் தொளிர்வாய் போற்றி
    ஓம் உருவொடும் அருவே போற்றி
    ஓம் உடையனே போற்றி போற்றி!
    ஓம் ஊரெல்லாம் உவப்பாய் போற்றி
    ஓம் ஊழினை விதிப்பாய் போற்றி
    ஓம் ஊங்கார ஒலியே போற்றி
    ஓம் ஊக்கமே உணர்வே போற்றி
    ஓம் எல்லையில் எழிலே போற்றி
    ஓம் எரிதவழ் விழியாய் போற்றி
    ஓம் எண்குண வடிவே போற்றி
    ஓம் எருதேறும் ஈசா போற்றி
    ஓம் எம்பிரான் போற்றி போற்றி!

    ஓம் ஏகநா யகனே போற்றி
    ஓம் ஏதிலார் புகலே போற்றி
    ஓம் ஏத்துவார் ஏத்தே போற்றி
    ஓம் ஏர்முனைச் செவ்வா போற்றி
    ஓம் ஏந்துகூர் மழுவாய் போற்றி
    ஓம் ஏகம்பா இறைவா போற்றி
    ஓம் ஏக்கமே களைவாய் போற்றி
    ஓம் ஏற்றமே தருவாய் போற்றி
    ஓம் ஏந்தலே போற்றி போற்றி!

    ஓம் ஐயனே அரனே போற்றி
    ஓம் ஐம்பூத வடிவே போற்றி
    ஓம் ஐம்புலன் அவிப்பாய் போற்றி
    ஓம் ஐயங்கள் களைவாய் போற்றி
    ஓம் ஒப்பிலா மணியே போற்றி
    ஓம் ஒளியெறி நுதலாய் போற்றி
    ஓம் ஒள்ளிழை பாகா போற்றி
    ஓம் ஒண்குழைக் காதா போற்றி
    ஓம் ஒப்பிலாய் போற்றி போற்றி!

    ஓம் ஓதுவார் உளத்தாய் போற்றி
    ஓம் ஓதிடும் பொருளே போற்றி
    ஓம் ஓய்விலாக் கூத்தா போற்றி
    ஓம் ஓமென்னும் பொருளே போற்றி
    ஓம் ஓசையின் ஒலியே போற்றி
    ஓம் ஓர்மையின் உள்ளே போற்றி
    ஓம் ஓதுசெந் தமிழே போற்றி
    ஓம் ஓதிடும் பண்ணே போற்றி
    ஓம் ஓய்விலாய் போற்றி போற்றி!

    ஓம் கறைதிகழ் கண்டா போற்றி
    ஓம் காலனைக் கடிந்தாய் போற்றி
    ஓம் காமனை எரித்தாய் போற்றி
    ஓம் கந்தனைத் தந்தாய் போற்றி
    ஓம் கங்கைவாழ் சடையாய் போற்றி
    ஓம் கண்ணப்பர் முதலே போற்றி
    ஓம் கண்கள்மூன் றுடையாய் போற்றி
    ஓம் கருணைமா கடலே போற்றி
    கடவுளே போற்றி போற்றி!

    ஓம் சிவமெனும் பொருளே போற்றி
    ஓம் செவ்வொளி வடிவே போற்றி
    ஓம் தவநிலை முடிவே போற்றி
    ஓம் தண்பதம் தருவாய் போற்றி
    ஓம் பவமெலாம் தவிர்ப்பாய் போற்றி
    ஓம் பரமெனும் பொருளே போற்றி
    ஓம் புலியூரான் உளத்தாய் போற்றி
    ஓம் புவிபுரந் தருள்வாய் போற்றி
    ஓம் புண்ணியா போற்றி போற்றி!
    கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை கர்மசிரத்தையுடன் சொல்லச் சொல்ல... நம் வாழ்வில் தொலைந்த பொருளை மீட்டெடுக்கலாம்.
    இழப்புகள் தவிர்க்க முடியாதவை. ஆனால், தாங்கிக்கொள்ள இயலாதவை! இழந்த பதவியைப் பெறுவதற்காக அப்பேர்ப்பட்ட பிரம்மதேவரே கடும் தவம் புரிந்து, வரம் பெற்றார். நாம் இழந்ததைப் பெறுவதற்கும் தொலைத்ததை மீட்டெடுப்பதற்கும் ஒரு ஸ்லோகம் இருக்கிறது.

    இந்த ஸ்லோகத்தை கர்மசிரத்தையுடன் சொல்லச் சொல்ல... நம் வாழ்வில் தொலைந்த பொருளை மீட்டெடுக்கலாம். இழந்த வாழ்க்கையைக்கூட திரும்பப் பெற்று வாழலாம்.

    அந்த ஸ்லோகம் இதுதான்!  

    ஸ்ரீகார்த்தவீர்யாஜுன மந்திரம்

    அபூர்வ ராஜ்ய ஸம்ப்ராப்திம்  நஷ்டஸ்ய புனராகமம்,
    லபதே நாத்ர ஸந்தேஹ ஸத்யேமேதந் மயோதிதம்
    ஓம் கார்த்த வீர்யார்ஜுனோ  நாம:
    ராஜா பாஹூ ஸஹஸ்ரவாந் ||.
    யஸ்ய ஸ்மரந மாத்ரேன நஷ்டம் த்ரவ்யம் ச லப்யதே
    ஆஞ்சநேயர் பக்தர்கள் கேட்கும் அனைத்து வரங்களையும் அருள்பவர். அவருடைய அருளை பெற தினமும் இந்த ஸ்லோகத்தை சொல்லி வரவேண்டும்.
    ஆஞ்சநேயர் பக்தர்கள் கேட்கும் அனைத்து வரங்களையும் உடனுக்குடன் அருள்பவர். அவருடைய அருளைப் பெறுவதற்கு மிகச் சிறந்ததும் எளிமையானதுமான ஒரே வழி ராம நாமத்தை ஜபிப்பதுதான். அதைப் பற்றிய ஒரு ஸ்லோகமே உள்ளது. அந்த ஸ்லோகம்:

    யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
    தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்
    பாஷ்பவாரி பரிபூரண லோசனம்
    மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்

    ‘எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்கக் காட்சி தந்து கொண்டிருப்பவர் எவரோ, அவரே அனுமன் என்று தெரிந்துகொள் ‘ இதுதான் இந்த ஸ்லோகத்தின் பொருள். பக்திபூர்வமாக ராமநாமம் ஜபிக்கும் அனைவரும் ஆஞ்சநேயரின் அருளைப் பெற்று சிறக்க வாழலாம்.
    புத்தியில் தெளிவும் ஞாபக சக்தியும் அதிகரித்து, தெளிவானவர்களாக, திடமானவர்களாகத் திகழ இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்கள்.
    கல்வியைக் கண்ணுக்கு நிகராகச் சொல்கிறோம். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்றார்கள், முன்னோர்கள். கல்வி என்பது தெய்வத்துக்குச் சமமானது. ஒருவீட்டில் கல்விச் செல்வம் இருந்து விட்டால், அங்கே சகல செல்வங்களும் குடியேறிவிடும் என்கின்றன ஞானநூல்கள்.

    எனவே, கல்வி ஞானம் கிடைக்கக்கூடிய இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். புத்தியில் தெளிவும் ஞாபக சக்தியும் அதிகரித்து, தெளிவானவர்களாக, திடமானவர்"களாகத் திகழ்வீர்கள் என்பது உறுதி!

    ஸ்ரீஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காம ரூபினி
    வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா
    ஞான ஆனந்த மயம் தேவம் நிர்மலம் ஸ்படிக ஆக்ருதிம்
    ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே!

    இந்த ஸ்லோகத்தைத் தினமும் சொல்லுங்கள். சகல ஞானமும் பெற்று, புத்திமானாக வாழ்வில் உயர்வீர்கள்.
    ஆயிரங்காலத்துப் பயிர் என்றும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிற காரியம் என்றும் போற்றப்படுகிற திருமண வரம் தரக்கூடிய அற்புதமான ஸ்லோகத்தை பார்க்கலாம்.
    திருமணம் என்பது வாழையடி வாழையாக சந்ததி வளர்க்கும் விஷயமாகவும் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. என் புள்ளைக்கு கல்யாண ராசி இன்னும் வரலை என்று வருத்தப்படுகிற பெற்றோர்கள் நம் உலகில் உண்டு. ஒரு பெற்றோரின் மிகப்பெரிய கவலையும் துக்கமும் தங்கள் வாரிசுக்குத் திருமணம் நடக்கவில்லையே என்பதாகத்தான் இருக்கும்.

    ஆயிரங்காலத்துப் பயிர் என்றும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிற காரியம் என்றும் போற்றப்படுகிற திருமண வரம் தரக்கூடிய அற்புதமான ஸ்லோகம் இது!

    காமேஸ் வராய காமாய காம பாலாய காமினே நம:
    காம விஹாராய காம ரூபதராய ச
    மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே
    மங்களார்த்தம் மங்களேசிமாங்கல்யம் தேஹிமே சதா:
    ஸ்வாமிக்கு பூஜை செய்கிற போது மறக்காமல் நிறைவில் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள். மலர்களைப் போல, நம் வாழ்க்கையும் மலரும்.
    எப்போது பூஜை செய்தாலும் என்ன பூஜைகள் செய்தாலும் அந்த பூஜையில் முக்கிய அங்கம் வகிப்பவை, பூக்கள்தான்! ஒவ்வொரு பூவுக்கும் எப்படி விதம்விதமான நறுமணங்கள் இருக்கிறதோ... அதேபோல் ஒவ்வொரு பூவைக் கொண்டும் செய்கிற பூஜைகளுக்கும், ஒவ்வொரு பலன் உண்டு.

    அந்தப் பூக்களைக் கொண்டு ஸ்வாமிக்கு பூஜை செய்கிற போது மறக்காமல் நிறைவில் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள். மலர்களைப் போல, நம் வாழ்க்கையும் மலரும்!    

    அந்த புஷ்பாஞ்சலி ஸ்லோகம் இதுதான்!

    யோபாம் புஷ்பம் வேத புஷ்பவான்
    பிரஜாவான் பசுமான் பவதி   சந்த்ரமாவா
    அபாம் புஷ்பம் புஷ்பவான் பிரஜாவான் பசுமான் பவதி
    தினமும் அல்லது சிவனுக்கு உகந்த நாட்களில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் துன்பம் நீங்கி நன்மைகள் உண்டாகும்.
    விபூதி சுந்தர மஹேஸ்வர ஹர
     சிவசிவ ஹரஹர மஹாதேவா

    வில்வதள ப்ரிய சந்த்ர கலாதர
     சிவசிவ ஹரஹர மஹாதேவா

    கங்காதர ஹர சாம்ப சதாசிவாய
     சிவசிவ ஹரஹர மஹாதேவா

    த்ரியம்பகாய லிங்கேஸ்வராய
     சிவசிவ ஹரஹர மஹாதேவா

    மௌலீஸ்வராய யோகேஸ்வராய
     சிவசிவ ஹரஹர மஹாதேவா

    குஞ்சேஸ்வராய குபேரேஸ்வராய
     சிவசிவ ஹரஹர மஹாதேவா

    நடேஸ்வராய நாகேஸ்வராய
     சிவசிவ ஹரஹர மஹாதேவா

    கபாலீஸ்வரய்யா கற்கடகேஸ்வராய
     சிவசிவ ஹரஹர மஹாதேவா

    சர்வேஸ்வராய சாம்ப சதாசிவாய
     சிவசிவ ஹரஹர மஹாதேவா

    போலோ ஹரஹர சிவசிவ மஹாதேவா .....

    குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்ட நோயில் இருந்து மீட்டெடுக்கவும் குழந்தைகள் சத்தாக வளரவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகம் உதவும்.
    உலகின் மிகப்பெரிய செல்வம், பிள்ளைகள்தான்! குழந்தைச் செல்வம் இல்லாத வீட்டில், வேறு எத்தனைச் செல்வங்கள் இருந்தாலும் பயனில்லாது போகும் என்பார்கள். 'எவ்வளவு சொத்துகள் இருந்து என்ன... அள்ளியெடுத்துக் கொஞ்சி விளையாடக் குழந்தை இல்லை’ என்பதே பலரின் ஏக்கம்.

    அதைவிட, அந்தக் குழந்தைக்கு சின்னச் சின்ன நோய்கள் வந்து சரியாகச் சாப்பிடாமல் இருந்தாலோ, சாப்பிட்டதையெல்லாம் வாந்தி எடுத்தாலோ, சரிவரத் தூங்காமல் எப்போதும் எதற்காகவோ அழுதுகொண்டே இருந்தாலோ... அதைவிட பெரிய வலியும் வேதனையும் வேறில்லை.

    இதனை பாலாரிஷ்ட நோய் என்பார்கள். இதில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்கவும் குழந்தைகள் சத்தாக வளரவும் இந்த ஸ்லோகம் உதவும்.

    பால க்ரஹ விநாச்ச தர்மநேதா கிருபாகர:
    உக்ரக்ருத்யோக்ரா வேகச்ச உக்ர நேத்ர: சதக்ரது:
    காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கைகளை விரித்துக்கொண்டு, உள்ளங்கையில் குடியிருக்கும் ஸ்ரீமகா லக்ஷ்மியை வணங்கியபடி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்.
    காலையில் எழுந்திருக்கும்போதே, காலில் சக்கரமும் தோளில் றெக்கையும் கட்டிக்கொண்டு பரபரக்கிற வாழ்க்கைதான் பலருக்கும்! ஆனாலும் தினமும் எழுந்தவுடன் ஒரு பத்து நிமிடம் கொஞ்சம் நிதானம் பழகுவது நல்லது. குறிப்பாக, காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே விசேஷம். ஏனெனில், நம் உள்ளங்கையில், ஸ்ரீலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பதாக ஐதீகம்!

    ஆகவே, காலையில் எழுந்ததும் நம் உள்ளங் கைகளை விரித்துக்கொண்டு, உள்ளங்கையில் சூட்சுமமாக குடியிருக்கும் ஸ்ரீமகா லக்ஷ்மியை வணங்கியபடி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்.  

    கராக்ரே வஸதே லக்ஷ்மீ
    கரமத்யே ஸரஸ்வதீ கரமூலேது
    கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம்

    நம் ஒவ்வொரு செயலிலும் பக்கபலமாக இருந்து, நம்மையும் நம் இல்லத்தையும் சிறக்கவும் செழிக்கவும் செய்வாள் தேவி!
    ×