என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    சூரிய வழிபாடு செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறையும், ஸ்லோகம் சொல்லும் முறையையும் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    முதலில் விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும். மஞ்சளில் விநாயகரைப் பிடித்து அதன் மேல் அருகம்புல்லை வைத்து, கைகளில் வாசனை மலர்களை எடுத்துக் கொண்டு,

    ‘’ஓம் ஹஸ் கராடாய வித்மஹே தனுர் ஹஸ்தாய தீமஹி
    தந்நோ கணேச: ப்ரசோதயாத்’’ என்றும்

    ‘’நல்லார் பழிப் பினெழிற் செம்பவளத்தை நாணநின்ற
    பொல்லா முகத் தெங்கள் போதகமே புறமூன்றெரித்த
    வில்லா னளித்த விநாயகனே யென்று மெய்ம்மகிழ
    வல்லார் மனத் தன்றி மாட்டாளிருக்க மலர்த்திருவே
    ஓம் விநாயகா போற்றி’’

    என்று சொல்லி மலர்களை சமர்ப்பித்து வெற்றிலை - பாக்கு, பழம் படைத்து கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும்.

    அடுத்து, சூரிய பூஜை செய்ய வேண்டும். பூஜைக்குத் தேவையான தேங்காய், ஐந்து விதமான பழங்கள், வெண்பொங்கல், பதினாறு உளுந்து வடை, பாயசம், தூபம், நெய்தீபம், வெண்தாமரை, முல்லை, நந்தியாவட்டை, சிவப்பு தாமரை ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு, வெள்ளை நூல் சுற்றிய சிறுகுடம் ஒன்றை கலசமாக அலங்கரித்துக் கொள்ள வேண்டும். சுத்தமான தரையில் சூரிய கோலத்தைப் போட்டு அதன்மேல் கோதுமை பரப்பி அதன் மேல் கலசத்தை வைக்க வேண்டும். ஏலக்காய், பச்சை கற்பூரம், குங்குமப்பூ, ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி, வெட்டிவேர் ஆகியவற்றை இடித்து கலச நீரில் போட வேண்டும்.

    இப்போது, உடல்நலம் தேவைப்படுபவரை மணை ஒன்றில் கோலம் போட்டு, பூஜை செய்யுமிடத்தில் கிழக்குப் பக்கத்தைப் பார்த்தவாறு உட்கார வைக்க வேண்டும். பிறகு பூஜையைத் தொடங்கலாம்.

    அன்றைய திதி, வாரம், நட்சத்திரம் சொல்லி,



    ‘’ஓம் நம: சூர்யமண்டலாதிபதியே.. மம சுக குடும்ப சர்வ வியாதி நிவாரணார்த்தம் மன வாக் சுத்த சித்யர்த்தம் சூர்ய பூஜாம் கரிஷ்யே’’ என்று சொல்லி, கலசத்துக்கு ஐந்து உபசாரங்களை செய்ய வேண்டும். அப்போது கலசத்தின் மேல் சிறிது தீர்த்தம் விட வேண்டும். பிறகு,

    ‘மி’’’ஓம் சூர்யாய நம: ஸ்நானம் சமர்ப்பயாமி.
    ஓம் அருணாய நம: ஸ்நானானந்தரம் ஆசமனம் சமர்ப்பயாமி.
    ஓம் தினகராய நம: கந்தம் புஷ்பம் சமர்ப்பயாமி.
    ஓம் பாஸ்கராய நம: வஸ்திரம் உபவீதம்
    ஓம் அர்க்காய நம: புஷ்ப மாலாம் சமர்ப்பயா

    என்று சொல்லி முடித்ததும் கீழே இருக்கிற முக்கியமான சூரிய தியானத்தைக் கை கூப்பியபடி சொல்ல வேண்டும்.

    ‘’சூர்யம் குங்கும ஸங்காசம் ஸர்வாபரண பூஷிதம்
    துவினேத்ரம் சாருவதனம் ரக்த மால்யா நுலேபனம்
    சதுர்புஜ சமோபேதம் பரிதச்சாம்புஜ த்வயம்
    அபீதி வரதோ பேதம் ப்ரபா மண்டல மண்டிதம்
    உபவீத ஸமாயுக்தம் உஷாப்ரத்யுஷ ஸேவிதம்‘’

    - இதை சொல்லி முடித்ததும் சூரியனைக் குறித்த பதினாறு தமிழ்ப் போற்றிகளைச் சொல்லி கலசத்தில் வெள்ளை நிற மலர்களைப் போட வேண்டும்.

    ‘’ஓம் ஆதவனே போற்றி
    ஓம் உடல்நலம் தருவாய் போற்றி
    ஓம் உள்வினை நீக்குவாய் போற்றி
    ஓம் மும்மூர்த்தியே போற்றி
    ஓம் மூத்தவனே போற்றி
    ஓம் மூலப்பொருளே போற்றி
    ஓம் ஒளிபொருந்தியவா போற்றி
    ஓம் தெளிவுடையோய் போற்றி
    ஓம் தேவாதி தேவனே போற்றி
    ஓம் வட்ட ஒளியோனே போற்றி
    ஓம் வரந்தரும் வள்ளலே போற்றி
    ஓம் அழகு முகத்தோனே போற்றி
    ஓம் அதிசயப்பொருளே போற்றி
    ஓம் ஆதாரநிலையே போற்றி
    ஓம் இயற்கைச் சுடரே போற்றி
    ஓம் எல்லையற்றவா போற்றி
    ஓம் சுகம்தரும் சுந்தரனே போற்றி! போற்றி!’’

    என்று சொல்லி தேங்காய் உடைத்து வைத்து ஊதுபத்தி, நெய்தீபம் காட்டி படைக்கும் பொருட்களை நிவேதனம் செய்ய வேண்டும். பிறகு கலசத்துக்குக் கற்பூர ஆரத்தி காட்டி,

    ‘’ஓம் பாஸ்கராய வித்மஹே மகத்யுதிகராய தீமகி
    தந்நோ சூர்ய ப்ரசோதயாத் - சூர்ய நாராயண மூர்த்தியே நம:
    கற்பூர நிராஜனம் தர்சயாமி’’

    என்ற மந்திரப் பாடலை சொல்ல வேண்டும். பாடலை பாடி முடித்ததும் ஆரத்தியைக் கண்களில் ஒற்றிக் கொள்ள-பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள சிவ மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
    நங்சிவயநம என்று உச்சரிக்க - திருமணம் நிறைவேறும்
    அங்சிவயநம என்று உச்சரிக்க - தேகநோய் நீங்கும்
    வங்சிவயநம என்று உச்சரிக்க - யோகசித்திகள் பெறலாம்.
    அங்சிவயநம என்று உச்சரிக்க - ஆயுள் வளரும், விருத்தியாகம்
    ஓம் அங்சிவாய என்று உச்சரிக்க - எதற்கும் நிவாரணம் கிட்டும்.
    கிலி நமசிவய என்று உச்சரிக்க - வசிய சக்தி வந்தடையும்
    ஹிரீநமசிவய என்று உச்சரிக்க - விரும்பியது நிறைவேறும்
    ஐயும் நமசிவய என்று உச்சரிக்க - புத்தி வித்தை மேம்படும்.
    நம சிவய என்று உச்சரிக்க - பேரருள், அமுதம் கிட்டும்.
    உங்யுநமசிவய என்று உச்சரிக்க - வியாதிகள் விலகும்.
    கிலியுநமசிவய என்று உச்சரிக்க - நாடியது சித்திக்கும்
    சிங்வங்நமசிவய என்று உச்சரிக்க - கடன்கள் தீரும்.
    நமசிவயவங் என்று உச்சரிக்க - பூமி கிடைக்கும்.
    சவ்வுஞ் சிவாய என்று உச்சரிக்க - சந்தான பாக்யம் ஏற்படும்.
    சிங்றீங் என்று உச்சரிக்க - வேதானந்த ஞானியாவார் உங்றீம்
    சிவயநம என்று உச்சரிக்க - மோட்சத்திற்கு வழி வகுக்கும்.
    அங்நங் சிவாய என்று உச்சரிக்க - தேக வளம் ஏற்படும்.
    அவ்வுஞ் சிவயநம என்று உச்சரிக்க - சிவன் தரிசனம் காணலாம்.
    ஓம் நமசிவாய என்று உச்சரிக்க - காலனை வெல்லலாம்.
    லங் ஸ்ரீறியுங் நமசிவாய என்று உச்சரிக்க - தானிய விளைச்சல் மேம்படும்.
    ஓம் நமசிவய என்று உச்சரிக்க - வாணிபங்கள் மேன்மையுறும்
    ஓம் அங்உங்சிவயநம என்று உச்சரிக்க - வாழ்வு உயரும், வளம் பெருகும். 
    ஓம் ஸ்ரீயும் சிவயநம என்று உச்சரிக்க - அரச போகம் பெறலாம்.
    ஓம் நமசிவய என்று உச்சரிக்க - சிரரோகம் நீங்கும்.
    ஓங் அங்சிவாய நம என்று உச்சரிக்க - அக்னி குளிர்ச்சியைத் தரும்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள 12 ராசிகளுக்கான மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து வந்தால் சகலவித நன்மைகளும் உண்டாகும்.
    மேஷம் – ஓம் ஐம் க்லீம் சௌம்

    ரிஷபம் – ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்

    மிதுனம் – ஓம் க்லீம் ஐம் சௌம்

    கடகம் – ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்

    சிம்மம் – ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்

    கன்னி – ஓம் ஸ்ரீம் ஐம் சௌம்

    துலாம் – ஒம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்

    விருச்சிகம் – ஓம் ஐம் க்லீம் சௌம்

    தனுசு – ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம்

    மகரம் – ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்

    கும்பம் – ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்

    மீனம் – ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்

    இந்த மந்திரத்தை தினம் 108 முறை ஜபித்து வந்தால் சகலவித நன்மைகளும் உண்டாகும்.
    எதிரியை அழிக்க வகுத்தது ஆதித்ய ஹ்ருதயம். எதிரி அழியத் தகுந்த உபாயங்களைத் தானே கண்டு பிடித்து அழிக்கும் மந்திரம் ஆதித்ய ஹ்ருதயம்.
    ஸ்ரீராமர் ராவணனை எதிர்த்து போர் புரிந்த பொழுது, அகஸ்திய மாமுனிவர் ராமர் எதிரே தோன்றி ஆதித்ய ஹ்ருதயம் என்னும் சக்தி வாய்ந்த மந்திரத்தை உபதேசித்து அருளினார். ஆதித்ய ஹ்ருதயம் சூரியனைக் குறித்த ஒரு துதி. இது விசேஷ மந்திரங்கள் அடங்கிய ஒன்று! ராமர் இதை ஓதி ராவணனை எதிர் கொண்டார்.

    ராவணன் மீது பலம் பொருந்திய பாணங்கள் பாய்ந்தாலும் அவன் சமாளித்து மீண்டும் மீண்டும் எழுவதைக் கண்டார் ராமர். அருகில் இருந்த விபீஷணன் ராமரைக் குறிப்பாக பார்த்தார். விபீஷணன் ஏதோ சொல்ல விரும்புவதைத் தெரிந்து கொண்ட ராமர் விபீஷணனை அருகில் அழைத்தார்.

    ராமரை நோக்கி விபீஷணன், ஐயனே! அன்னையை எப்போதும் நினைத்துக்கொண்டே இருக்கிறான் ராவணன். உலகத்திற்கே அருள்பாலிக்கும் அன்னையை அவன் இடைவிடாது அடி மனத்திலிருந்து நினைப்பதால் இயல்பாகவே நினைப்பவர் தம்மைக் காக்கும் அன்னையின் சக்தி அவனைக் காக்கிறது. ஆகவே அந்த ஆசையை முதலில் நீங்கள் அழித்தால், பின்னர் அவன் அழிந்து விடுவான் என்று ராவணனின்-உயிர் ரகசியத்தைக் கூறினார்.

    உடனே ராமர், ஒரு பாணத்தை எடுத்து அவன் நாபியை நோக்கி அடித்தார். அடிவயிற்றில் இருந்த அன்னை நினைவு போனவுடன் அது ராவணன் மரணத்திற்கு வழி வகுத்தது. அடுத்து பத்து பாணங்களால் பத்துக் தலைகளையும், இருபது பாணங்களால் இருபது கைகளையும் அறுத்துக் தள்ளினார் ராமர். ஆக முப்பத்தியரு பாணங்களை ராமர் செலுத்தி ராவணனை அழித்ததை துளசிதாசர் அழகாக அரக்கன் அழிவின் ரகசிய விளக்கமாக ராமசரித மானசத்தில் கூறுகிறார்.
    ஆதித்ய ஸ்ருதயம் தரும் பலன்கள்

    இப்படி பலம் பொருந்திய எதிரியை அழிக்க வகுத்தது. ஆதித்ய ஹ்ருதயம், எதிரி அழியத் தகுந்த உபாயங்களைத் தானே கண்டு பிடித்து அழிக்கும் மந்திரம் ஆதித்ய ஹ்ருதயம்.

    ஆதித்ய ஹ்ருதயத்தைத் தினமும் ஓதினால் பெரும் பயன் பெறலாம் என மகான்களும் ஞானிகளும் காலம் காலமாகக் கூறி வருகின்றனர்.

    ஆதித்ய ஹிருதயம் பாடல்களின் தமிழக்கத்தில் சில....

    * அதிதியின் புத்திரனே! நீயே இந்த உலகத்தை படைத்திருக்கிறாய். உலக ஜீவன்கள், தங்கள் செயல்களை செய்யும்படியான பலத்தை கொடுக்கிறாய். எவ்வித எதிர்பார்ப்புமின்றி உலகிற்கு ஒளி கொடுப்பதற்காக ஆகாயத்தில் சஞ்சரிக்கிறாய். ஒளிமிக்க கதிர்களை கொண்டிருக்கிறாய்.

    * தங்க நிறமானவனே நீ! அபரிமிதமான பலன்களை கொடுக்கிறாய். சுவர்ணமயமான இந்த பிரபஞ்சத்திற்கு நீயே அதிபதி. நீயே பகலைப் படைக்கிறாய்.

    * கருத்த குதிரைகளால் இழுக்கப்படுபவனே! ஆயிரம் கதிர்களைக் கொண்டவனே! சப்த என்ற பெயரை உடைய குதிரை பூட்டிய தேரை உடையவனே! விசேஷ பிரகாசம் உள்ளவனே! இருட்டை நாசம் செய்கிறவனே! உன்னிடமிருந்தே சகல சுகமும் எங்களுக்கு கிடைக்கிறது. இவ்வுலகத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் நீயே அழிக்கிறாய். அழித்த பிறகு மீண்டும் அவற்றை படைப்பதற்காக பிரகாசம் மாறாமல் அப்படியே இருக்கிறாய்.

    * கதிரவனே! நீ எல்லோராலும் கொண்டாடப்படுகிறாய். அக்னியை உனக்குள் அடக்கிக் கொண்டிருக்கிறாய். மாலை வேளையில் மறைந்து போகிறாய். பனியை அழிக்கிறாய். ஆகாயத்திற்கு நீயே நாதன், ராகு என்னும் இருளைப்பிளந்து கொண்டு வெளியில் வரும் படியான சக்தியைக் கொண்டிருக்கிறாய்.

    * ரிக், யஜூர், ஸாமம் என்ற வேதங்களின் முடிவைக் கண்டவனே! உன்னிடத்திலிருந்தே மழை உண்டாகிறது. நீ கடலரசனின் நண்பன், தட்சிணாயன காலத்தில் விந்தியபர்வதம் என்ற மலையின் வழியாக செல்கிறாய். ஆகாயத்தில் தெப்பமாய் மிதக்கிறாய். உன்னிடமிருந்தே வெயில் பிறக்கிறது.

    * வட்ட வடிவம் உடையவனே! விரோதிகளை நாசம் செய்கிறவனே! உதயகாலத்தில் மஞ்சள் நிறம் கொண்டவனே! மதிய வேளையில் எல்லா வஸ்துகளையும் தகிக்கச் செய்கிறவனே! சாஸ்திரங்களை உபதேசிக்கிறவனே! உலகிற்கு வழிகாட்டுபவனே! மகத்தான ஒளியை உடையவனே! எல்லா பிராணிகளிடமும் அன்பு கொண்டவனே! அந்தப் பிராணிகளை அழிக்கவும் செய்பவனே! உனக்கு நமஸ்காரம்.

    * நட்சத்திரங்களுக்கும் கிரகங்களுக்கும் அதிபதியே! பிரபஞ்சத்தை நிலைபெறச் செய்கிறவனே! எல்லா தேவதைகளைக் காட்டிலும் அதிகமான சக்தியை உடையவனே! இந்திரன், வருணன், தாரா, பகன், பூஷா, அர்யமா, அர்சிஸ், விவஸ்வான், த்வஷ்டா, ஸவிதா, விஷ்ணு என்ற மூர்த்திகளை உள்ளடக் கியவனே! உனக்கு நமஸ்காரம்.

    * கண் கண்ட தெய் வமே! உத்ய பர்வதமலையில் உதிக்கும் உனக்கு நமஸ்காரம். மேற்கு மலையில் அஸ்தமிக்கும் உனக்கு நமஸ்காரம். நட்சத்திர மண்டலங்களுக்கும், கிழமைகளுக்கும் அதிபதியாய் இருக்கும் உனக்கு நமஸ்காரம்.

    * வணங்குவோருக்கு வெற்றியையும், ளக்ஷமத்தையும் கொடுப்பவனே! குதிரைகளால் இழுக்கப்படும் தேரை உடையவனே! இருட்டை நாசம் செய்பவனே! வணங்குவோரின் எதிரிகளை அழிப்பவனே! பரந்த உலகத்தின் நாயகனே! நன்றியற்றவர்களை கொல்பவனே! உனக்கு நமஸ்காரம்.

    * உருகியோடும் தங்க ஆறு போன்ற ஒளியைக் கொண்டவனே! அக்னியின் வடிவே! சகல உலகமும் தோன்றக் காரணமானவனே! அஞ்ஞானம் என்ற இருளை போக்குகிறவனே! கருணாமூர்த்தியே! உலகிலுள்ள சகல ஜீவன்களின் புண்ணிய பாவங்களுக்கு சாட்சியாய் இருப்பவனே! உனக்கு நமஸ்காரம்.
    ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலையில் சூரியனுக்கான கோலமிட்டு, கோதுமையில் செய்த பலகாரம் படையலிட்டு இந்த ஸ்லோகத்தை சொல்லிவந்தால் சூரிய தோஷங்கள் நீங்கி, நற்பலன் பெறலாம்.
    தியாயேத் ஸுர்யம் அனந்தகோடி கிரணம்!
    தேஜோமயம் பாஸ்கரம்!!
    பக்தானாம் அபயப்ரதம் தினகரம்!
    ஜ்யோதிர்மயம் சங்கரம்!!
    ஆதித்யம் ஜகதீசம் அச்யுதம் அஜம்!
    த்ரைலோக்ய சூடாமணீம்!!
    பக்தா பீஷ்டவரப்ரதம் தினமணீம்!
    மார்த்தாண்டம் ஆதித்யம் சுபம்!!

    ஞாயிற்றுக்கிழமை தோறும் அதிகாலையில் சூரியனுக்கான கோலமிட்டு, கோதுமையில் செய்த பலகாரம் படையலிட்டு இந்த ஸ்லோகத்தை சொல்லிவந்தால் சூரிய கிரகத்தால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கி, நற்பலன் பெறலாம்.
    பொங்கல் தினத்தன்று சூரியனைப் பார்த்து நாம் வழிபடும் பொழுதும், மற்ற நாட்களில் காலை நேரத்தில் சூரிய உதயத்தின் பொழுதும், கீழ்கண்ட பாடலைப் பாடினால் வாழ்க்கை வளமாகும்.
    பொங்கல் தினத்தன்று சூரியனைப் பார்த்து நாம் வழிபடும் பொழுதும், மற்ற நாட்களில் காலை நேரத்தில் சூரிய உதயத்தின் பொழுதும், கீழ்கண்ட பாடலைப் பாடினால் வாழ்க்கை வளமாகும்.

    ஆற்றல் பெருகும். திறமைகள் பளிச்சிடும். எதிர் காலம் பிரகாசமாக அமையும். நவக்கிரகங்களில் ராஜகிரகம் என்று கருதப்படும் சூரியன், பயிர்கள் தளைக்கவும், உயிர்கள் வாழவும் வழிவகுக்கும். செங்கதிரவனை உத்ராயண காலத் தில் தை முதல் நாள் வழிபடுவது சிறப்பாகும்.

    சுகத்தைக் கொடுக்கும் சூரியா போற்றி!
    செல்வம் வழங்கும் செங்கதிர் போற்றி!
    நலங்களை வழங்கும் ஞாயிறே போற்றி!
    ஆற்றலை வழங்கும் ஆதவா போற்றி!
    நவக்கிரகத்தின் நாயகா போற்றி!
    நாளும் வரம் தரும் கதிரவா போற்றி!

    என்று துதிப்பாடல்களைப் பாடினால் வாழ்க்கை வளமாகும்; வசதிகள் பெருகும்.

    தினமும் காலையில் எழுந்து நீராடிய பின்னர் சூரிய பகவானுக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
    ‘காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும் 
    பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும் 
    வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த 
    தேசிகா எனைரட்சிப்பாய் சேங்கதிரவனே போற்றி’

    சூரிய பகவானின் காயத்ரி

    ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
    பாசஹஸ்தாய தீமஹி
    தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
    ஓம் பாஸ்கராய வித்மஹே
    திவாகராய தீமஹி
    தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
    சூரிய பகவானுக்கு உகந்த அஷ்டோத்திரத்தை தினமும் அல்லது பொங்கல் அன்று சொல்லி சூரியனை வழிபாடு செய்து வந்தால் நன்மைகள் உண்டாகும்.
    ஓம் அருணாய நம
    ஓம் சரண்யாய நம
    ஓம் கருணா ரஸ சிந்தவே நம
    ஓம் அஸ மாந பலாய நம
    ஓம் ஆர்த்த் ரக்ஷ காய நம
    ஓம் ஆதித்யாய நம
    ஓம் ஆதிபூதாய நம
    ஓம் அகிலாம வேதிநே நம
    ஓம் அத்யுதாய நம
    ஓம் அகிலக்ஞாய நம
    ஓம் அந்நதாய நம
    ஓம் இநாய நம
    ஓம் விஸ்வரூபாய நம
    ஓம் இஜ்யாய நம
    ஓம் இந்த்ராய நம
    ஓம் பாநவே நம
    ஓம் இந்திரா மந்த்ராப்தாய நம
    ஓம் வந்த நீயாய நம
    ஓம் ஈசாய நம
    ஓம் சுப்ர ஸந்நாய நம
    ஓம் சுசீலாய நம
    ஓம் சுவர்ச்யஸே நம
    ஓம் வஸுப்ரதாய நம
    ஸம் வஸவே நம
    ஓம் வாசுதேவாய நம
    ஓம் உஜ்வலாய நம
    ஓம் உக்ரரூபாய நம
    ஓம் ஊர்த் வகாய நம
    ஓம் விவஸ்வதே நம
    ஓம் உத்யத் கிரண ஜாலய நம
    ஓம் ஹ்ருஷீ கேசாய நம
    ஓம் ஊர்ஜஸ் வலாய நம
    ஓம் வீராய நம
    ஓம் நிர்ஜராய நம
    ஓம் ஜயாய நம
    ஓம் ஊருத்வய விநிர்முத்த நிஜசராதயே நம
    ஓம் ரிஷி வந்த்தாய நம
    ஓம் ருக் ஹந்ரே நம
    ஓம் ரிக்ஷ சக்ர சராய நம
    ஓம் ரிஜுஸ்வபாவ வித்தாய நம
    ஓம் நித்யஸ்துக்தாய நம
    ஓம் ரூகார மாத்ரூகா வர்ணரூபாய நம
    ஓம் உஜ்வல கேஜஸே நம
    ஓம் ரிஷாதி நாத மித்ராய நம
    ஓம் புஷ்பகரா க்ஷய நம
    ஓம் லுப்த தந்தாய நம
    ஓம் சாந்தாய நம
    ஓம் காந்திதாய நம
    ஓம் நாதய நம
    ஓம் கஞ்சுநாத பூஷணாய நம
    ஓம் கத்யோதாய நம
    ஓம் லூநிதாகில ஸ்வரூபினே நம
    ஓம் ஸத்யாநந்த ஸ்வரூபினே நம
    ஓம் அப வர்க்க ப்ரதாய நம
    ஓம் ஆர்த்த சரணாய நம
    ஓம் ஏகாகினே நம
    ஓம் பகவதே நம
    ஓம் ஸ்ருஷ்டி ஸ்தித்யந்த காரிணே நம
    ஓம் குணாத்மனே நம
    ஓம் க்ருணிப்ருதே நம
    ஓம் ப்ரஹ்மனே நம
    ஓம் ஐஸ்வர்ய தாய நம
    ஓம் சர்வாய நம
    ஓம் ஹரிதச் தாய நம
    ஓம் சௌரயே நம
    ஓம் தசதிக் ஸம்ப்ரகாசாய நம
    ஓம் பக்த வஸ்யாய நம
    ஓம் ஓஜஸ் கராய நம
    ஓம் ஜயிதே நம
    ஓம் ஜகதாநந்த ஹேதவே நம
    ஓம் ஐந்மம்ருத்யு ஜராவ்யாதி வர்ஜிதாய நம
    ஓம் ஒளந்நத்ய பதஸஞ்சார ரதஸ்த்தாய நம
    ஓம் அஸுராரயே நம
    ஓம் சமநீய கராய நம
    ஓம் அப்ஜ வல்லபாய நம
    ஓம் அந்தர் பஹிப் ரகாசாய நம
    ஓம் அசிந்த்யாய நம
    ஓம் ஆத்மரூபினே நம
    ஓம் அச்யுதாய நம
    ஓம் அமரேசாய நம
    ஓம் பரஸ்மை ஜயோதிஷே நம
    ஓம் அஹஸ்கராய நம
    ஓம் ரவயே நம
    ஓம் ஹரயே நம
    ஓம் பரமாத்மநே நம
    ஓம் தருணாய நம
    ஓம் வரேண்யாய நம
    ஓம் க்ரஹாணாம் பதயே நம
    ஓம் பாஸ்கராய நம
    ஓம் ஆதிமத்யாந்த ரஹூதாய நம
    ஓம் ஸெளக்யப்ரதாய நம
    ஓம் ஸகல ஜாதப் பதயே நம
    ஓம் ஸுர்யாய நம
    ஓம் கவயே நம
    ஓம் நாராயணாய நம 
    ஓம் புரேசாய நம
    ஓம் தேஜோ ரூபாய நம
    ஓம் ஸ்ரீம் ஹிரண்யகர்ப்பாய நம
    ஓம் ஹ்ரீம் ஸம்பத்கராய நம
    ஓம் ஐம் இஷ்டார்த்தாய நம
    ஓம் அம்ஸுப்ரஸந்தாய நம
    ஓம் ஸ்ரீமதே நம
    ஓம் ச்ரயேஸே நம
    ஓம் ஸெளக்ய தாயிநே நம
    ஓம் தீப்த மூர்த்தியே நம
    ஓம் நிகிலாகம வேத்யாய நம
    ஓம் நித்யா நந்தாய நம
    ஸ்ரீ குமாரஸ்தவம் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய முருகனுக்கு உகந்த இந்த ஸ்தோத்திரம் நற்பலனை வாரி வழங்க வல்லது. தினமும் சொல்லி வந்தால் நற்பலன்கள் நிச்சயம்.
    முருகனும் அவன் அடியாரும்… 
     
    ஓம் ஷண்முக பதயே நமோ நம!
    ஓம் ஷண்மத பதயே நமோ நம!
    ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம!
    ஓம்ஷட்க்ரீட பதயே நமோ நம!
    ஓம்ஷட்கோண பதயே நமோ நம!
    ஓம் ஷட்கோச பதயே நமோ நம!
    ஓம் நவநிதி  பதயே நமோ நம!
    ஓம் சுபநிதி  பதயே நமோ நம!
    ஓம் நரபதி பதயே நமோ நம!
    ஓம் சுரபதி பதயே நமோ நம!
    ஓம் நடச்சிவ பதயே நமோ நம!
    ஓம் ஷடஷர பதயே நமோ நம!
    ஓம் கவிராஜ பதயே நமோ நம!
    ஓம் தபராஜ பதயே நமோ நம!
    ஓம் இகபர பதயே நமோ நம!
    ஓம் புகழ்முநி பதயே நமோ நம!
    ஓம் ஜயஜய பதயே நமோ நம!
    ஓம் நயநய பதயே நமோ நம!
    ஓம் மஞ்சுள பதயே நமோ நம!
    ஓம் குஞ்சரி பதயே நமோ நம!
    ஓம் வல்லீ பதயே நமோ நம!
    ஓம் மல்ல பதயே நமோ நம!
    ஓம் அஸ்த்ர பதயே நமோ நம!
    ஓம் சஸ்த்ர பதயே நமோ நம!
    ஓம் ஷஷ்டி பதயே நமோ நம!
    ஓம் இஷ்டி பதயே நமோ நம!
    ஓம் அபேத பதயே நமோ நம!
    ஓம் கபோத பதயே நமோ நம!
    ஓம் வியூஹ பதயே நமோ நம!
    ஓம் மயூர பதயே நமோ நம!
    ஓம் பூத பதயே நமோ நம!
    ஓம் வேத பதயே நமோ நம!
    ஓம் புராண பதயே நமோ நம!
    ஓம் ப்ராண பதயே நமோ நம!
    ஓம் பக்த பதயே நமோ நம!
    ஓம் முக்த பதயே நமோ நம!
    ஓம் அகார பதயே நமோ நம!
    ஓம் உகார பதயே நமோ நம!
    ஓம் மகார பதயே நமோ நம!
    ஓம் விகாச பதயே நமோ நம!
    ஓம் ஆதி பதயே நமோ நம!
    ஓம் பூதி பதயே நமோ நம!
    ஓம் அமார பதயே நமோ நம!
    ஓம் குமார பதயே நமோ நம!
    படிப்பில் மந்தமாக இருப்பவர்கள், ஞாபக மறதியால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சரஸ்வதி தேவிக்கு உகந்த ஸ்லோகங்களை தினமும் சொல்லி வரலாம்.
    ஓம் ஸ்ரீ சரஸ்வதி ஸ்லோகங்கள் :- "ஓம் வாக்தேவ்யை நம"

    ஓம் ஸ்ரீ மகாஸரஸ்வதி மந்திரம்:- ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சரஸ்வதியைபுத ஜனன்னியை ஸ்வாஹா

    கம்ப்யூட்டர் துறையில் உலகம் வியக்க, மாபெரும் சாதனை புரிய தினந்தோறும் 1008 முறை ஜெபிக்க வேண்டிய ஸ்லோகம் :- 

    ஸ்ரீ அணுராதாக்ரமண ஸரஸ்வத்யை நம‌
    ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
    ஏய உணர்விக்கும் என்னம்மை தூய‌
    உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே
    இருப்பளிங்கு வாராது இடர்.
    காலையில் எழுந்தவுடன் விநாயகருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்த பின்னர் வேலையை தொடங்கினால் வெற்றி நிச்சயம்.
    கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
    கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
    உமாஸுதம் சோக வினாச காரணம்
    நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

    பொருள் : யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன் என்பதாகும்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள மகாலட்சுமி மந்திரங்களை தினமும் ஒரு முறை சொல்லி வந்தால் வாழ்வில் எந்த ஒரு பணக் கஷ்டமும் ஏற்படாமல் நிம்மதியாக வாழலாம்.
    குபேரர் அவர்கள் அட்சய திரிதியை அன்று மகாலட்சுமி தேவியை நினைத்து துதித்தார். அதனால் மகாலட்சுமி தேவி அவருக்கு ஆசி வழங்கி, குறையாத செல்வம் நிலைக்க வரம் அளித்தார். கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்தோத்திரங்களை சொல்லி மகாலட்சுமி தேவியைத் துதித்து அவரின் ஆசியுடன் செல்வ வளத்தை பெறலாம்.

    "ஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரி 
    ஸர்வ துர்க்க ஹரே தேவி 
    மஹாலக்ஷ்மி நமோஸ்துதே" 

    நான் மகாலட்சுமிக்கு தேவிக்கு வணக்கம் செலுத்துகிறேன். நீங்கள் அனைத்து வலி மற்றும் துயரங்களையும் அகற்றிடுவீர்கள். மகாலட்சுமி தாயே நான் உன்னை வணங்குகிறேன்.

    "ஸ்தூல ஸுக்ஷ்ம மஹாரெளத்ரே மஹாசக்தி மஹோதரே 
    மஹாபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே" 

    தாயே, நீங்கள் மிகப்பெரிய சக்தியாக உள்ளீர்கள், நீங்கள் மகிழ்ச்சிக்கும் செல்வத்துக்கும் பொறுப்பாக இருக்கிறீர்கள். நீங்கள் மிக பெரிய பாவங்களையும் அழித்துவிடவீர்கள். மகாலட்சுமி தாயே நான் உன்னை வணங்குகிறேன்.

    "மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் யவ்படேத் பக்திமான் நரக 
    ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா" 

    இத்தகைய புனிதமான ஸ்தோத்திரத்தை முழு பக்தியுடனும் எப்போதும் எல்லா வகையான திறன்களையும் எல்லா வகையான ஞானத்தையும் தருகிறாய். மேலும், இதை துதிப்பவர்கள் அனைத்து ஆடம்பரமாக பொருட்களையும் சொந்தமாகக் கொண்டிருப்பார் மற்றும் உலக ஆசைகளை நிறைவேற்றுவார்.
    ×