என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற தினமும் சொல்ல வேண்டிய ஆஞ்சநேயர் அருள் தரும் மந்திரங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    ஆஞ்சநேயர் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம் வருமாறு:-

    ஸர்வ கல்யாண தாதாரம்
    ஸர்வ வாபத்கந வாரகம்
    அபார கருணா மூர்த்திம்
    ஆஞ்ச நேயம் நமாம் யஹம்

    தினமும் 21 முறை ‘ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்’ என்ற மந்திரத்தையும் கூறலாம்.

    அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற தினமும் சொல்ல வேண்டிய மந்திரம் வருமாறு:-

    ஸ்ரீராம தூத மஹாதீர
    ருத்ர வீர்ய ஸமத் பவ
    ஆஞ்சநேய கர்ப்ப ஸம்பூத
    வாயு புத்திர நமோஸ்துதே

    ஆஞ்சநேயரை வழிபட்டு கீழ்கண்ட சுலோகத்தை ஜெபித்தால் கெட்ட கனவுகள் பலிக்காது. சுலோகம் வருமாறு:-

    புத்திர் பலம் யசோதை ரியம்
    நிர்பயத்வ மரோகதா
    அஜாட்யம் வாக்படுத்வம்ச
    ஹனுமத் ஸ்மரணாத்பவேத்

    கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து ‘ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோ நம’ என்ற மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.
    சர்வசௌபாக்கியம் உண்டாக்கும் ராஜமாதங்கி மந்திரம் இது. இந்த மந்திரத்தை எத்தனை முறை எந்த முறையில் சொல்ல வேண்டும் என்று பார்க்கலாம்.
    ஓம் ஹரீம் ஸ்ரீம் கிலீம் சௌம் நமோ 
    பகவதி மாதங்கி மாதங்ககுவீர்த்தி
    கன்னிகா கிலீம் மமவசம் குருகுரு சுவாகா

    - 1008 உரு வீதம் 22 நாட்கள் செபிக்க மந்திரம் சித்தியாகும்.

    அவல் கடலை, சுண்டல், தேங்காய், பழம், பால் முதலிய பூஜை சாமான்களை வைத்து மந்திரத்தை செபிக்க வேண்டும். இதனால் பசு, பூமி, தனம், தானியம், பெண், புத்திரர், செல்வம், வாகனம் முதலிய சர்வசௌபாக்கியம் உண்டாகும் என்கிறது மலையாள மாந்திரீகம்.
    நவக்கிரகங்களின் முன்பாக நின்று, அவர்களுக்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்தால், ஒன்பது கிரகங்களும் மகிழ்ச்சி அடைந்து, துயரில்லாத வளமான வாழ்வை வழங்கும்.
    ஒவ்வொரு ஆலயத்திலும் நவக்கிரகங்களுக்கு என்று தனியாக சன்னிதிகள் இருக்கின்றன. அந்த சன்னிதியில் இருக்கும் நவக்கிரகங்களின் முன்பாக நின்று, அவர்களுக்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்தால், ஒன்பது கிரகங்களும் மகிழ்ச்சி அடைந்து, துயரில்லாத வாழ்வையும், வளமான வாழ்வையும் வழங்கும். இங்கே ஒவ்வொரு நவக்கிரகத்திற்கும் உரிய காயத்ரி மந்திரங்களைப் பார்க்கலாம்.

    சூரிய காயத்ரி

    ‘ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
    பாச ஹஸ்தாய தீமஹி!
    தன்னோ ஸுர்ய ப்ரசோதயாத்!’

    சந்திரன் காயத்ரி

    ‘பத்மத்வஜாய வித்மஹே
    ஹேமரூபாய தீமஹி
    தன்னோ ஸோம ப்ரசோதயாத்!’

    அங்காரன் காயத்ரி

    ‘ஓம் வீர த்வஜாய வித்மஹே
    விக்ன ஹஸ்தாய தீமஹி
    தன்னோ பௌம ப்ரசோதயாத்’

    புதன் காயத்ரி

    ‘ஓம் கஜ த்வஜாய வித்மஹே
    சுக ஹஸ்தாய தீமஹி
    தன்னோ புத ப்ரசோதயாத்’

    குரு காயத்ரி

    ‘ஓம் விருபத்வஜாய வித்மஹே
    க்ருணி ஹஸ்தாய தீமஹி
    தன்னோ குரு ப்ரசோதயாத்!’

    சுக்ரன் காயத்ரி

    ‘ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
    தநுர் ஹஸ்தாய தீமஹி
    தன்னோ சுக்ர ப்ரசோதயாத்’

    சனீஸ்வர காயத்ரி

    ‘ஓம் காக த்வஜாய வித்மஹே
    கட்க ஹஸ்தாய தீமஹி
    தன்னோ மந்த ப்ரசோதயாத்!’

    ராகு காயத்ரி

    ‘ஓம் நகத் வஜாய வித்மஹே
    பத்ம ஹஸ்தாய தீமஹி
    தன்னோ ராகு ப்ரசோதயாத்!’

    கேது காயத்ரி

    ‘ஓம் அச்வத் வஜாய வித்மஹே
    சூல ஹஸ்தாய தீமஹி
    தன்னோ கேது ப்ரசோதயாத்!’
    காயத்ரி மந்திரத்தினை சொல்லுவதன் பொருள் "உயர் அறிவு சக்தியினை அளித்து, அறியாமையை நீக்க வேண்டும்" என்பதாகும்.
    இம்மந்திரம் சொல்லப்படும் பொழுது எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது. இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன. காயத்ரி மந்திரத்திற்கு ஜாதி., மதம் என்ற எந்த பிரிவும் கிடையாது.

    "ஓம் பூர் : புவ : ஸீவ :
    தத் ஸவிதுர் வரேண்யம்
    பர்கோ தேவஸ்ய தீமஹி
    தியோ : யோந: ப்ரசோதயாத்"

    நம் புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள்.
    விஷ்ணுக்கு உகந்த கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரத்தை தினமும் அல்லது விஷ்ணுவுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வரலாம்.
    விஷ்ணுவை பாடல்கள் பாடியும், மந்திரம் சொல்லியும் வணங்கலாம். மிக எளிய மந்திரத்தை இங்கு பார்க்கலாம்.

    ஓம் விஷ்ணுவே நமஹ
    ஓம் நமோ  பகவதே வாசுதேவாய
    ஓம் நமோ நாராயணா
    ஓம் ஸ்ரீ ஹரி விஷ்ணு ஹரி ஓம்.

    விஷ்ணு அலங்கார பிரியர். இவருக்கு பிடித்த பூ தாமரை பூஜைக்கு மட்டுமே தாமரையை பயன்படுத்துவர். தாமரை பூ தெய்வ மலர். வாசனையுள்ள மலர்களையே பூஜைக்கு பயன்படுத்த வேண்டும்.

    நாளை வைகுண்ட ஏகாதசி நன்னாளில் பெருமாள் கோயில்களுக்கு செல்பவர்கள் பெருமாளை வணங்கி இந்த திருமால் 108 போற்றி பாடலாம்.
    சனிக்கிழமைகளிலும், நாளை வைகுண்ட ஏகாதசி நன்னாளில் பெருமாள் கோயில்களுக்கு செல்பவர்கள் இந்த போற்றியைப் பாடலாம். வீட்டில் திருவிளக்கேற்றியதும் இதைப்பாடி திருமாலின் திருவருளும், மகாலட்சுமியின் பேரருளும் பெற்று செல்வச்செழிப்புடன் வாழலாம்.

    1. ஓம் ஹரி ஹரி போற்றி
    2. ஓம் ஸ்ரீஹரி போற்றி
    3. ஓம் நர ஹரி போற்றி
    4. ஓம் முர ஹரி போற்றி
    5. ஓம் கிருஷ்ணா ஹரி போற்றி
    6. ஓம் அம்புஜாஷா போற்றி
    7. ஓம் அச்சுதா போற்றி
    8. ஓம் உச்சிதா போற்றி
    9. ஓம் பஞ்சாயுதா போற்றி
    10. ஓம் பாண்டவர் தூதா போற்றி
    11. ஓம் லட்சுமி சமேதா போற்றி
    12. ஓம் லீலா விநோதா போற்றி
    13. ஓம் கமல பாதா போற்றி
    14. ஓம் ஆதி மத்தியாந்த ரகிதா போற்றி
    15. ஓம் அநாத ரக்ஷகா போற்றி
    16. ஓம் அகிலாண்டகோடி போற்றி
    17. ஓம் பரமானந்தா போற்றி
    18. ஓம் முகுந்தா போற்றி
    19. ஓம் வைகுந்தா போற்றி
    20. ஓம் கோவிந்தா போற்றி
    21. ஓம் பச்சை வண்ணா போற்றி
    22. ஓம் கார்வண்ணா போற்றி
    23. ஓம் பன்னகசயனா போற்றி
    24. ஓம் கமலக்கண்ணா போற்றி
    25. ஓம் ஜனார்த்தனா போற்றி
    26. ஓம் கருடவாகனா போற்றி
    27. ஓம் ராட்சஷ மர்த்தனா போற்றி
    28. ஓம் காளிங்க நர்த்தனா போற்றி
    29. ஓம் சேஷசயனா போற்றி
    30. ஓம் நாராயணா போற்றி
    31. ஓம் பிரம்ம பாராயணா போற்றி
    32. ஓம் வாமனா போற்றி
    33. ஓம் நந்த நந்தனா போற்றி
    34. ஓம் மதுசூதனா போற்றி
    35. ஓம் பரிபூரணா போற்றி
    36. ஓம் சர்வ காரணா போற்றி
    37. ஓம் வெங்கட ரமணா போற்றி
    38. ஓம் சங்கட ஹரனா போற்றி
    39. ஓம் ஸ்ரீதரா போற்றி
    40. ஓம் துளசிதரா போற்றி
    41. ஓம் தாமோதரா போற்றி
    42. ஓம் பீதாம்பரா போற்றி
    43. ஓம் பலபத்ரா போற்றி
    44. ஓம் பரமதயா பரா போற்றி
    45. ஓம் சீதா மனோகரா போற்றி
    46. ஓம் மச்ச கூர்ம அவதாரா போற்றி
    47. ஓம் பரமேஸ்வரா போற்றி
    48. ஓம் சங்கு சக்கரா போற்றி
    49. ஓம் சர்வேஸ்வரா போற்றி
    50. ஓம் கருணாகரா போற்றி
    51. ஓம் ராதா மனோகரா போற்றி
    52. ஓம் ஸ்ரீரங்கா போற்றி
    53. ஓம் ஹரிரங்கா போற்றி
    54. ஓம் பாண்டுரங்கா போற்றி
    55. ஓம் லோகநாயகா போற்றி
    56. ஓம் பத்மநாபா போற்றி
    57. ஓம் திவ்ய சொரூபா போற்றி
    58. ஓம் புண்ய புருஷா போற்றி
    59. ஓம் புரு÷ஷாத்தமா போற்றி
    60. ஓம் ஸ்ரீ ராமா போற்றி
    61. ஓம் ஹரிராமா போற்றி
    62. ஓம் பலராமா போற்றி
    63. ஓம் பரந்தாமா போற்றி
    64. ஓம் நரஸிம்ஹா போற்றி
    65. ஓம் திரிவிக்ரமா போற்றி
    66. ஓம் பரசுராமா போற்றி
    67. ஓம் சகஸ்ரநாமா போற்றி
    68. ஓம் பக்தவத்சலா போற்றி
    69. ஓம் பரமதயாளா போற்றி
    70. ஓம் தேவானுகூலா போற்றி
    71. ஓம் ஆதிமூலா போற்றி
    72. ஓம் ஸ்ரீ லோலா போற்றி
    73. ஓம் வேணுகோபாலா போற்றி
    74. ஓம் மாதவா போற்றி
    75. ஓம் யாதவா போற்றி
    76. ஓம் ராகவா போற்றி
    77. ஓம் கேசவா போற்றி
    78. ஓம் வாசுதேவா போற்றி
    79. ஓம் தேவதேவா போற்றி
    80. ஓம் ஆதிதேவா போற்றி
    81. ஓம் ஆபத் பாந்தவா போற்றி
    82. ஓம் மகானுபாவா போற்றி
    83. ஓம் வசுதேவ தனயா போற்றி
    84. ஓம் தசரத தனயா போற்றி
    85. ஓம் மாயாவிலாசா போற்றி
    86. ஓம் வைகுண்டவாசா போற்றி
    87. ஓம் சுயம்பிரகாசா போற்றி
    88. ஓம் வெங்கடேசா போற்றி
    89. ஓம் ஹ்ருஷி கேசா போற்றி
    90. ஓம் சித்தி விலாசா போற்றி
    91. ஓம் கஜபதி போற்றி
    92. ஓம் ரகுபதி போற்றி
    93. ஓம் சீதாபதி போற்றி
    94. ஓம் வெங்கடாசலபதி போற்றி
    95. ஓம் ஆயாமாயா போற்றி
    96. ஓம் வெண்ணெயுண்ட நேயா போற்றி
    97. ஓம் அண்டர்களேத்தும் தூயா போற்றி
    98. ஓம் உலகமுண்டவாயா போற்றி
    99. ஓம் நானாஉபாயா போற்றி
    100. ஓம் பக்தர்கள் சகாயா போற்றி
    101. ஓம் சதுர்புஜா போற்றி
    102. ஓம் கருடத்துவஜா போற்றி
    103. ஓம் கோதண்டஹஸ்தா போற்றி
    104. ஓம் புண்டரீகவரதா போற்றி
    105. ஓம் விஷ்ணு போற்றி
    106. ஓம் பகவானே போற்றி
    107. ஓம் பரமதயாளா போற்றி
    108. ஓம் நமோ நாராயணா போற்றி! போற்றி!! 
    கடன், வறுமை நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை 108 முறை சொல்லி வந்தால் குபேரன், மகாலட்சுமி அருளினால் மிகுந்த செல்வம் கிடைக்கும்.
    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்
    ஞானாயை கமலதாரிண்யை
    சக்தியை சிம்ஹ வாஹின்யை
    பலாயை ஸ்வாஹா !
    ஓம் குபேராய நமஹ
    ஓம் மகாலட்சுமியை நமஹ

    என தினமும் 1008 முறை அல்லது 108 முறை சொல்லி வந்தால் குபேரன் மற்றும் மகாலட்சுமி அருளினால் மிகுந்த செல்வம் கிடைக்கும்.
    தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் ராகு காலத்தில் சொல்லி வந்தால் பலன் கிடைக்கும்.
    ஹராய பீமாய ஹரிப்ரியாய
    பவாய சாந்தாய பராத்பராய
    ம்ருடாய ருத்ராய த்ரிலோசனாய
    நமோஸ்து துப்யம் சரபேச்வராய         
    ஸ்ரீ சரபாஷ்டகம்  

    - இத்துதியை ஞாயிற்றுக்கிழமை, ராகு காலத்தில் பாராயணம் செய்தால் துக்கங்கள் நீங்கும்; தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிட்டும்.
    விருப்பங்கள் நிறைவேற தினமும் அல்லது பெருமாளுக்கு உகந்த நாட்களில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை சொல்லி வரலாம்.
    திவ்யாங்கதாஞ்சித புஜத்வய மங்களாத்மன்
    கேயூபூரஷண ஸுஸோபித தீர்கபாஹோ
    நாகேந்த்ரகங்கண கரத்வய காமதாயின்
    ஸ்ரீவேங்கடேச மம தேஹி கராவலம்பம்

    - ஸ்ரீ வெங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம்.

    பொதுப்பொருள் :

    திவ்யமான வளைகள் அலங்கரிக்கும் தோள்களைக் கொண்டவரே, வெங்கடேசா நமஸ்காரம். மங்களமான சரீரத்தை உடையவரே, ஆபரண அலங்காரத்தால் பிரகாசிக்கும் நீண்ட கரங்களை உடையவரே, அதே கரங்களில் சர்ப்பராஜனை கங்கணங்களாகத் தரித்திருப்பவரே, கோரிய அனைத்தையும் அருள்பவரே, வெங்கடேசா, நமஸ்காரம். என்னைக் கை கொடுத்துக் காத்தருள்வீராக.
    தினமும் காலையில் எழுந்தவுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை சொல்லி விநாயகரை வழிபாடு செய்து வந்தால் நலம் யாவும் கிடைக்கும்.
    கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
    கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
    உமாஸுதம் சோக வினாச காரணம்
    நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

    பொருள் :

    யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன் என்பதாகும்.
    தினம்தோறும் காலையில் நீராடும் போது எந்த மந்திரத்தைச் சொல்லவேண்டும் எவற்றை சொல்லக்கூடாது என்பது பற்றி பார்ப்போம்.
    தினம்தோறும் காலையில் எழுந்ததும் நீராடிவிட்டு பூஜையை செய்தபின் அந்த நாளுக்குரிய பணிகளை, கடமைகளைச் செய்தோமென்றால், நாள் முழுவதும் தன்னம்பிக்கையும், புத்துணர்வும் தெளிவான மனநிலையும் அமைவது சர்வநிச்சயம்.

    திருமுருக கிருபானந்தவாரியார் நீராடுவதற்கு முன்பாக,  எப்போதும்  குளிக்க இருக்கும் தண்ணீரில், 'ஓம் சரவணபவ' என்று நீரில் எழுதிவிட்டுத்தான் குளிப்பார். ஆடவர் இடுப்பில் அரைஞான் கயிறு அணிவது மிகவும் அவசியம். குளிக்கும்போது இடையில் உள்ளாடை மற்றும் இடுப்பில் துண்டுடன்தான் குளிக்கவேண்டும். அப்படிக் குளிக்கும்போது தனது மனதுக்குப் பிடித்த சுவாமியின் மந்திரத்தைச் சொல்லி வழிபாடு செய்துகொண்டே நாளை தொடங்கலாம். 

    எங்கு நாம் குளித்தாலும் நாம் குளிக்கும் நீர், கங்கையென நாம் கருதி குளிக்கவேண்டும். அப்படி நாம் குளிக்கும்போது 

    'கங்கேச யமுனா சைவ கோதாவரி 
    சரஸ்வதி நர்மதா சிந்து காவிரி 
    ஜலேஸ்மின் சந்நிதம் குரும்' 

    என்று நாம் சொல்லி நீராடினோமென்றால், அந்த நீராடல் புனித நீராடல் ஆக மாறிவிடுவதாக ஐதீகம்

    குளித்துக்கொண்டிருக்கும்போது, 'சோப்பை எடுதுக்கிட்டுவா சனியனே! இத்தனை நேரம் என்ன பண்றே? போன்ற அமங்கலமான சொற்களைச் சொல்லக் கூடாது. 'உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பே ஆலயம்' என்பதை நினைவில்கொண்டு குளிக்க வேண்டும். இப்படிச் செய்தால், குளிக்கும் நேரம் மட்டுமல்ல, அந்த நாளே உங்களுக்கு சுகானுபவமாக இருக்கும்.
    கோவிலில் நவகிரஹ சன்னதியில் வழிபாடு செய்யும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்ய வேண்டும்.
    ஆரோக்யம் ப்ரதாது நோ தினகர
    சந்த்ரோ யசோ நிர்மலம்
    பூதிம் பூமி ஸுதாம் சு தனய:
    ப்ரக்ஜாம் குருர் கௌரவம்
    கான்ய: கோமள வாக் விலாஸ மதுலம்
    மந்தோமுத முததம் ஸர்வத:
    ராஹுர் பாஹுபலம் விரோத சமனம்
    கேது: குலஸ்யோன்னதிம் ஓம்
    ×