என் மலர்
ஸ்லோகங்கள்
சனி பகவானுக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் பாராயணம் செய்து வந்தால் சனிபகவானின் நல்லருளைப் பெற இயலும்.
‘காகத் வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்தப் ப்ரசோதயாத்’
கிரக ஸ்துதி!
‘நீலாஞ்சன ஸமா பாஸம்
ரவி புத்ரம் யமாக்ரஜம்
ச்யாய மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி ஸ்னைச் சரம்’
இவற்றைத் தினமும் பாராயணம் செய்து வந்தால் சனிபகவானின் நல்லருளைப் பெற இயலும்.
நம்மை பிடித்த கிரக தோஷங்கள் விலக கீழே கொடுக்கப்பட்டுள்ள அனுமனுக்கு உகந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
நம்மை பிடித்த கிரக தோஷங்கள் விலக சொல்ல வேண்டிய மந்திரம் வருமாறு:-
ஆஞ்சநேய கர்ப்ப ஸம்பூதம்
குமாரம் ப்ரும்ஹ சாரிணம்
துஷ்ட க்ரஹ வினாஸாய
ஹனுமந்த முபாஸ் மஹே
கஷ்டம், துன்பம் போக்கும் ஆஞ்சநேயர் 108 போற்றியை தினமும் அல்லது சனிக்கிழமைகளில் சொல்லி வந்தால் நிச்சயம் நல்ல பலனை காணலாம்.
ஓம் அனுமனே போற்றி
ஓம் அதுலனே போற்றி
ஓம் அநிலன் குமார போற்றி
ஓம் ஆஞ்சினை மைந்தா போற்றி
ஓம் அஞ்சினை வென்றாய் போற்றி
ஓம் அஞ்சிலே ஒன்றை தாவினாய் போற்றி
ஓம் அஞ்சிலே ஒன்றை வைத்தாய் போற்றி
ஓம் அரியணை தாங்கிய அனுமனோ போற்றி
ஓம் அஞ்சனா கிரியில் உதித்தாய் போற்றி
ஓம் அரக்கர் படையினை வென்றாய் போற்றி
ஓம் அயித மாயா வருவனே போற்றி
ஓம் அக்க குமாரனை வென்றாய் போற்றி
ஓம் அலங்கல் தாழ் மார்புடையவனே போற்றி
ஓம் அசோகவனம் அடைந்தாய் போற்றி
ஓம் அன்மையின் ஆசி பெற்றாய் போற்றி
ஓம் அமரர் கோனே போற்றி
ஓம் அத்திரத்தில் கட்டுண்டாய் போற்றி
ஓம் அஞ்சா நெஞ்சன் படைத்தோனே போற்றி
ஓம் அன்னை உயிர் காத்தவனே போற்றி
ஓம் அகத்தி தனக்கும் கதி கொடுத்தாய் போற்றி
ஓம் அணுவாய் நுழைந்தாய் போற்றி
ஓம் ஆண் தகை அனுமனே போற்றி
ஓம் ஆறுதல் கூறிய யவனே போற்றி
ஓம் ஆதவ சீடனே போற்றி
ஓம் ஆஞ்சநேயனே போற்றி
ஓம் ஆத்ம பலம் அருள்வாய் போற்றி
ஓம் இராவணைனோடு அமர் புரிந்தாய் போற்றி
ஓம் இலங்கினியை வென்றாய் போற்றி
ஓம் இதனிமாலை அணிந்தாய் போற்றி
ஓம் அசையுடை அண்ணலே போற்றி
ஓம் இந்திரனின் ஆசி பெற்றால் போற்றி
ஓம் இராம தூதனே போற்றி
ஓம் இராம தாசனே போற்றி
ஓம் இளையவன் உயிர் காத்தாய் போற்றி
ஓம் இராம பாதமே போற்றி
ஓம் இராம பாதமே போற்றி
ஓம் இராம சேவையே போற்றி
ஓம் இராம நாமத்தை உச்சரிப்பவனே போற்றி
ஓம் இராகுவை ஆட்கொண்டவே போற்றி
ஓம் ஈங்கு எமக்கு அருள்வாய் போற்றி
ஓம் ஈடில்லா தெய்வமானாய் போற்றி
ஓம் உலகைக் காக்கும் உத்தமா போற்றி
ஓம் உண்மையான தொண்டனே போற்றி
ஓம் உதிக்கின்ற செங்கதிரே போற்றி
ஓம் உச்சித் திலகமே போற்றி
ஓம் கங்கையில் நடந்தாய் போற்றி
ஓம் கடல் கடந்து மாதியே போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் கலியுக தெய்வமே போற்றி
ஓம் கம்பனைக் காத்த கவீந்திரன் போற்றி
ஓம் கவிக்கரவே போற்றி
ஓம் கண்ணுதலைப் போல் நகுகின்றாய் போற்றி
ஓம் கண்டவன் என உரைத்தாய் போற்றி
ஓம் கண்டதி நதியில் நீராடினாய் போற்றி
ஓம் சாளக்கிராமம் கொணர்ந்தாய் போற்றி
ஓம் திரு ஆரைக்கால் வந்தாய் போற்றி
ஓம் திருமகளை கண்டாய் போற்றி
ஓம் கமலாயத்தில் கியாம் செய்தாய் போற்றி
ஓம் சாளக்கிராமத்தை பெயர்க்க முயன்றாய் போற்றி
ஓம் நரசிம்மனின் அசரீரி கேட்டாய் போற்றி
ஓம் நரசிம்மமூர்த்தியை தரித்தாய் போற்றி
ஓம் சாளக்கிராம மலையை வலம் வந்தாய் போற்றி
ஓம் அரங்கநாத சுவாமியை வணங்கினாய் போற்றி
ஓம் கணையாழி ஒப்புவித்தாய் போற்றி
ஓம் சூடாமணயை பெற்று வந்தாய் போற்றி
ஓம் பாழி நெடுந்தோள் வீரா போற்றி
ஓம் கடிகையில் அமர்ந்தாய் போற்றி
ஓம் அமிழ்தின் சுவையே போற்றி
ஓம் சுவையின் பயனே போற்றி
ஓம் ஐந்து முக அனுமனே போற்றி
ஓம் சிவந்த கண்களை உடையவனே போற்றி
ஓம் விரிந்த தாமரை முகத்தோனே போற்றி
ஓம் து£தனாய் இருந்து தொண்டனானாய் போற்றி
ஓம் மார்கழித் திங்களின் அவதரித்தாய் போற்றி
ஓம் மருத்துவ மலை எடுத்த வந்த மாருதியே போற்றி
ஓம் சொல்லின் செல்வா போற்றி
ஓம் சனியை ஆட்கொண்ட ராமதாசே போற்றி
ஓம் சமயத்தில் வந்து காப்பாய் போற்றி
ஓம் சஞ்சிதம் களையும் ரஞ்த முகனே போற்றி
ஓம் சங்கடம் தீர்த்திட வருவாய் போற்றி
ஓம் பகலவனைப் பழமெனப் பற்றினாய் போற்றி
ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
ஓம் வேண்டிய வரம் தருவாய் போற்றி
ஓம் தென்னிலங்கை சுட்ட இராமது£தா போற்றி
ஓம் நாமக்குன்றமெடுத்துவந்த அனுமனே போற்றி
ஓம் நாமகிரி அன்னையின் நற்சீடனே போற்றி
ஓம் நரசிம்ம சுவாமியை வணங்குபவனே போற்றி
ஓம் நான்மறையைப் பொருளே போற்றி
ஓம் நான்கு தேவங்களையும் கற்றுணர்ந்தாய் போற்றி
ஓம் கிட்கிந்தையில் வாழ்ந்தவனே போற்றி
ஓம் சுக்கிரிவன் நல் அமைச்சனே போற்றி
ஓம் ஐம் புலன்களையும் அடக்கியவனே போற்றி
ஓம் சுந்தர காண்ட நாயகனே போற்றி
ஓம் சீராளனே போற்றி
ஓம் மிக்க தாராளனே போற்றி
ஓம் தத்துவத்தை உணர்ந்தவனே போற்றி
ஓம் தத்துவத்திற்கும் தத்துவ மானவனே போற்றி
ஓம் நாமக்கல் நாதனே போற்றி
ஓம் சிரஞ்சீவி நீயே போற்றி
ஓம் சீதாராம பக்தனே போற்றி
ஓம் எங்கும் நிறைந்திருப்பவனே போற்றி
ஓம் கடமை வீரனே போற்றி
ஓம் அகிலமும் நீயே போற்றி
ஓம் என்றும் நிலைத்திருப்பவனே போற்றி
ஓம் சிறிய திருவடியே போற்றி
ஓம் உந்தன திருவடிளே போற்றி போற்றி
ஓம் ஸ்ரீ சீதாராம திருவடிகளின் சேவையே போற்றி போற்றி
ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று அவரை வணங்கி வழிபடும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகம் சொல்லி வழிபாடு செய்ய வேண்டும்.
ராமாயணத்தைப் பற்றியும், ராமரைப் பற்றியும் பேசும் போதெல்லாம், அனுமனைத் தவிர்க்க முடியாது.
‘யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூரண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்’
இந்த ஸ்லோகம் சொல்லும் பொருள் இதுதான்.. ‘எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கின்றதோ.. அந்த இடங்களில் எல்லாம் கண்களில் நீர் பெருக்கெடுக்க, பக்திப் பரவசத்துடன் அமர்ந்திருக்கும் நபர் எவரோ, அவரே அனுமன் என்று தெரிந்து கொள்.’
சூரிய (பூஜை) நமஸ்காரம் என்பது மற்ற தெய்வங்களை பூஜை அறையில் வழிபடுவது போல சூரியனையும் வழிபடுவதையேக் குறிக்கும்.
சூரிய (பூஜை) நமஸ்காரம் என்பது மற்ற தெய்வங்களை பூஜை அறையில் வழிபடுவது போல சூரியனையும் வழிபடுவதையேக் குறிக்கும். இது யார் வேண்டுமானாலும் எளிய முறையில் செய்யலாம்.
அதிகாலையில், அதாவது ஆறு மணிக்குள் எழுந்து குளித்து சுத்தமான ஆடை அணிந்து சமயச் சின்னங்களை (விபூதி, குங்குமம், திருமண் போன்றவை) அணிந்து கிழக்கு திசை நோக்கி நின்று சூரியனை தரிசனம் செய்வது சூரிய நமஸ்காரத்தின் முதல்படி.
ஓம் மித்ராய நம:
ஓம் ரவயே நம:
ஓம் சூர்யாய நம:
ஓம் பானவே நம:
ஓம் ககாய நம:
ஓம் பூஷ்ணே நம:
ஓம் ஹிரண்ய கர்ப்பாய நம:
ஓம் மரீசய நம:
ஓம் ஆதித்யாய நம:
ஓம் ஸவித்ரே நம:
ஓம் அர்க்காய நம:
ஓம் பாஸ்கராய நம:
கடன், பணக்கஷ்டத்தால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஓம் சிவாய நம
ஓம் சிவசக்தியே நம
ஓம் இச்சா சக்தியே நம
ஓம் கிரியாசக்தியே நம
ஓம் சொர்ண சொரூபியே நம
ஓம் ஜோதி லக்ஷமியே நம
ஓம் தீப லக்ஷமியே நம
ஓம் மஹா லக்ஷமியே நம
ஓம் தனலக்ஷமியே நம
ஓம் தான்யலக்ஷமியே நம
ஓம் தைர்யலக்ஷமியே நம
ஓம் வீரலக்ஷமியே நம
ஓம் விஜயலக்ஷமியே நம
ஓம் வித்யா லக்ஷமியே நம
ஓம் ஜெய லக்ஷமியே நம
ஓம் வரலக்ஷமியே நம
ஓம் கஜலக்ஷமியே நம
ஓம் காம வல்லியே நம
ஓம் காமாட்சி சுந்தரியே நம
ஓம் சுபலக்ஷமியே நம
ஓம் ராஜலக்ஷமியே நம
ஓம் கிருஹலக்ஷமியே நம
ஓம் சித்த லக்ஷமியே நம
ஓம் சீதா லக்ஷமியே நம
ஓம் திரிபுரலக்ஷமியே நம
ஓம் சர்வமங்கள காரணியே நம
ஓம் சர்வ துக்க நிவாரணியே நம
ஓம் சர்வாங்க சுந்தரியே நம
ஓம் சௌபாக்ய லக்ஷமியே நம
ஓம் நவக்கிரஹ தாயினே நம
ஓம் அண்டர் நாயகியே நம
ஓம் அலங்கார நாயகியே நம
ஓம் ஆனந்த சொரூபியே நம
ஓம் அகிலாண்ட நாயகியே நம
ஓம் பிரம்மாண்ட நாயகியே நம
சபரிமலை செல்லும் பக்தர்கள் தினமும் ஐயப்பனை வழிபாடு செய்து பாட வேண்டிய ஸ்ரீ ஐயப்பன் பக்தி துதிப் பாடலை பார்க்கலாம்.
கானகத்தில் புலியிருக்க
புலியும் சேர்ந்து துணைக்கு வர
போகணும் சபரிமலை போகணும்
போகணும் சபரிமலை போகணும்
வனத்தில் பல குயிலிருக்க
குயிலும் சேர்ந்து குரல் கொடுக்க
கூவணும் ஐயன் பெயர் கூவணும்
கூவணும் ஐயன் பெயர் கூவணும்
யானையடிப் பாதையிலே யானை பிளிரனும்
அந்த பிளிறல் பம்பை கணபதி ஓங்காரமாகனும்
ஸ்வாமியப்பா ஐயப்பா சரணமப்பா - என்
வாழ்விலே எல்லாம் ஐயனப்பா
ஸ்வாமியப்பா ஐயப்பா சரணமப்பா - என்
வாழ்விலே எல்லாம் ஐயனப்பா
போகும் வழி யாவும் பல இடர் கடக்கணும்
சபரி காட்டினிலும் மேட்டினிலும் நீ நடக்கணும்
ஐயப்பனின் இருமுடியை தலை சுமக்கணும்
ஐயன் நாமங்களை பக்தர்களின் மனம் நினைக்கணும்
காட்டினிலே வழி காட்டிடுவான் - அவன் சன்னதியில் அருள் கூட்டிடுவான்
காட்டினிலே வழி காட்டிடுவான் - அவன் சன்னதியில் அருள் கூட்டிடுவான்
ஏற்றிடுவான் தூக்கிடுவான்
வாழ்வில் கரை சேர்த்திடுவான்
ஸ்வாமியப்பா ஐயப்பா சரணமப்பா - என்
வாழ்விலே எல்லாம் ஐயனப்பா
பரமேஸ்வரன் பரந்தாமனுடன் சேர்ந்ததினாலே
இந்த பூமியிலே ஹரிஹரசுதன் அவதரித்தானே
காட்டினிலே மஹிஷியினை சம்ஹாரித்தானே
கற்பூர ஜோதியாக சபரியில்
அவன் ஜொலிப்பானே
ஜாதிமத பேதமெல்லாம் கடந்து - ஐயன்
திருவருளோ எல்லோருக்கும் உண்டு
ஜாதிமத பேதமெல்லாம் கடந்து - ஐயன்
திருவருளோ எல்லோருக்கும் உண்டு
சிவபக்தரும் ஹரிபக்தரும்
ஐயப்பன் சன்னதியில் ஒன்று. (கா).
வறுமை, பண கஷ்டத்தால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
நமோ லக்ஷ்ம்யை மகாதேவ்யை
பத்மாயை ஸததம் நமஹ
நமோ விஷ்ணு விலாஸின்யை
பத்மத்ஸாயை நமோ நமஹ
மகாலட்சுமி துதி
பொதுப் பொருள்: மகாலட்சுமிக்கு நமஸ்காரம். மகாதேவியும், எப்போதும் தாமரையில் வீற்றிருப்பவளுமான உனக்கு நமஸ்காரம். விஷ்ணுவின் மனதில் அமர்பவளும், தாமரையில் பிரியம் கொண்டவளுக்கும் மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.
அனுமனுக்கு உகந்த ஜெயந்தியான அனுமன் ஜெயந்தி அன்று அவரை ஆராதித்து வழிபட்டுக் கொண்டாடினால் பேறும் புகழும் கிடைக்கும்.
அனுமனுக்கு உகந்த ஜெயந்தியான அனுமன் ஜெயந்தி மார்கழி மாதம் 3-ந் தேதி (18.12.2017) திங்கட்கிழமை வரும் மூலம் நட்சத்திரமன்று வருகின்றது. அன்றைய தினம் அவரை ஆராதித்து வழிபட்டுக் கொண்டாடினால் பேறும் புகழும் கிடைக்கும்.
அனுமன் ஜெயந்தி நாளில்,
‘மூலம் உனது விண்மீனாம்
மோதும் கதையுன் கையிருப்பாம்!
ஆழக்கடலை கடப்பதற்கு
அரைநொடி போதும் உனக்கென்பார்!
வாழத் துடிக்கும் மாந்தர்களின்
வருங்காலத்தைக் கணிப்பவனே!
கால நேரம் பாராமல்
கண்ணீர் துடைப்பாய் அனுமானே!’
என்று மனமுருகிப் பாடுங்கள். மாருதியின் அருள் கிடைக்கும்.
கெட்ட எண்ணங்கள் கொண்டவர்கள், கண் திருஷ்டி, பிறர் பொருள்மீது மோகம் கொள்பவர்கள் நம்மிடம் வராமல் இருக்க ஸ்ரீ வராஹரை வழிபடுவது சிறந்தது.
ஸ்ரீ வராஹவதாரம் ஸ்ரீ மகாவிஷ்ணுவால் ஸ்ரீ பூமாதேவியை காக்க எடுக்கப்பட்டதாகும். முன்னொரு சமயம் ஹிரண்யாக்ஷன் என்னும் அசுரன் ஸ்ரீ பூமாதேவியை அபஹரிக்க வந்ததால், ஸ்ரீ மஹாவிஷ்ணுவிடம் தஞ்சம்புகுந்தாள் ஸ்ரீ பூமாதேவி. ஹிரண்யாக்ஷனை வதம் செய்து ஸ்ரீ பூமாதேவியை காத்தார். கெட்ட எண்ணங்கள் கொண்டவர்கள், கண் திருஷ்டி மற்றும் பிறர் பொருள்மீது மோகம் கொள்பவர்கள் ஆகியோர்கள் நம்மிடம் வராமல் இருக்க ஸ்ரீ வராஹரை வழிபடுவது சிறந்தது. வெல்லம், கோரைகிழங்கு ஆகியவை இவருக்கு பிரசாதம். ஸ்ரீ அம்புஜவல்லி தாயார் உடன் இருந்து ரக்ஷித்து வருகிறார்.
ஓம் தநுர்த்தராய வித்மஹே
வக்ர தம்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ வராஹஹ் ப்ரசோதயாத்
திருக்கார்த்திகை தீபமான இன்று மாலையில் தீபம் ஏற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பாடலை பாடி வழிபாடு செய்ய வேண்டும்.
தீபத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய 3 சக்திகளும் உள்ளனர். தீப ஒளி புற இருளை அகற்றுகிறது. தீப பூஜை உள்ளத்தின் இருளைப் போக்குகிறது. அதாவது தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. மனதில் உள்ள கவலைகளைப் போக்குகிறது.
கார்த்திகைக்குக் கார்த்திகை நாள் ஒரு ஜோதி
மலை நுனியிற் காட்டா நிற்போம்
வாய்த்த அந்தச் சுடர்நாளில் பசிபிணியில்
லாது உலகின் மன்னி வாழ்வார்
பார்த்தவர்க்கும் அருந்தவர்க்கும் இடையூறு
தவிரும் அது பணிந்தோர், கண்டோர்
கோத்திரத்தில் இருபத்தோர் தலைமுறைக்கு
முத்தி வரம் கொடுப்போம்.
உங்களது அனைத்து விதமான கோரிக்கைகளும் நிறைவேற கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐயப்பன் மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் பலன் கிடைக்கும்.
ஸ்ரீ பூதநாத ஸதானந்த
ஸர்வபூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ
ஐயப்பனை உடல் மன சுத்தியுடன் இந்த மந்திரத்தை தினமும் 18 உரு செபித்து, உங்களது கோரிக்கைகளை அவர்முன் சமர்ப்பிக்க, விரைவான பலனையும், பரிபூர்ண அருளையும் கொடுப்பார்.
மந்திரம் சித்தியாக பௌர்ணமியன்று 1008 உரு செபித்து பூஜிக்க சித்தியாகும். சுவாமி ஐயப்பன் யந்திரம் வைத்து வழிபடின் மேலும் சிறப்பாக இருக்கும்.
ஸர்வபூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ
ஐயப்பனை உடல் மன சுத்தியுடன் இந்த மந்திரத்தை தினமும் 18 உரு செபித்து, உங்களது கோரிக்கைகளை அவர்முன் சமர்ப்பிக்க, விரைவான பலனையும், பரிபூர்ண அருளையும் கொடுப்பார்.
மந்திரம் சித்தியாக பௌர்ணமியன்று 1008 உரு செபித்து பூஜிக்க சித்தியாகும். சுவாமி ஐயப்பன் யந்திரம் வைத்து வழிபடின் மேலும் சிறப்பாக இருக்கும்.






