search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "perumal slokas"

    இத்துதியை சனிக்கிழமைகளில் அல்லது தினமும் பாராயணம் செய்து வந்தால் தீவினைகள் அகன்று திருமால் திருவருள் கிட்டும்.
    செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
    நெடியானே வேங்கடவா நின்கோயிலின் வாசல்
    அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
    படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே.

    (பெரியாழ்வார் திருமொழி)

    பொதுப்பொருள்: மிகப்பெரிய தீவினைகளையும் அழித்திடும் வல்லமை மிக்க பெருமாளே! நெடிதுயர்ந்த திருவுருகொண்ட வேங்கடவா! நின் பக்தர்களும் தேவர்களும் ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை போன்ற நாட்டிய நங்கையரும் ஏங்கி எதிர்நோக்கும் உன் தரிசனம் காணும்படியாக இருந்து உன் பவளவாயை எந்நேரமும் தரிசிக்க அருள்புரிவாய்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பாராயணம் செய்து வந்தால் திருமால் திருவருள் கவசம்போல் நம்மைக் காக்கும்.
    நமோ த்வதன்ய: ஸந்த்ராதா த்வதன்யம் ந ஹி தைவதம்
    த்வதன்யம் ந ஹி ஜானாமி பாலகம் புண்யரூபகம்
    யாவத் ஸாம்ஸாரி கோ பாவோ நமஸ்தே பாவனாத்மனே
    தத் ஸித்திதோ பவேத்ஸத்ய: ஸர்வதா ஸர்வதா விபே

    நாராயண ஹ்ருதயம்

    பொதுப்பொருள்:

    திருமாலே, தங்களைக் காட்டிலும் என்னைக் காப்பவர் யாரும் இல்லை. புண்ணியமே உருவானவர் நீங்கள். என் மனதில் திடசித்தமாக விளங்கும் தங்களுக்கு நமஸ்காரம். ஜனன, மரண காலங்களுக்கு இடையே நான் ஈடுபடும் அனைத்து செயல்களிலும் வெற்றியை, தாங்கள் எப்போதும், எல்லா வழிகளிலும் அருளவேண்டும். திருமாலே, நமஸ்காரம்.

    ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பாராயணம் செய்து வந்தால் திருமால் திருவருள் கவசம்போல் நம்மைக் காக்கும்; அனைத்து செயல்களிலும் நாம் வெற்றி காண்போம்.
    புரட்டாசி மாதத்தில் தினமும் காலையில் இந்த துதியை ஜபம் செய்து வந்தால் திருமலையப்பனின் திருவருளால் கடன்கள் தீரும். சகல தோஷங்களும் விலகும்.
    ஸ்வாமின் ஜகத்தரண வாரிதிமத்ய மக்னம்
    மாமுத்தராத்ய க்ருபயா கருணாபயோதே
    லக்ஷ்மீஞ்சதேஹி விபுலாம் ருணவாரணாய
    ஸ்ரீவெங்கடேச மம தேஹி கராவலம்பம்.
    வெங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம்.

    பொதுப் பொருள்:

    அகில உலகத்திற்கும் இறைவனே, வெங்கடாஜலபதியே! தங்களுக்கு நமஸ்காரம். அனைத்து உலகங்களையும் காப்பவரே, உம்மை வணங்குகிறேன். கருணைக் கடலே, உலகியல் மாயையில் மூழ்கித் தவிக்கும் என்னைக் கரை சேர்க்கக் கைகொடுத்து அருள்வாய். நான்பட்ட கடன்களைத் தீர்க்க என் மீது இரக்கம் காட்டுவாய். மகாலட்சுமியின் நாயகனே! எனக்கு எல்லா செல்வ வளங்களையும் அருளி, என் சகல தோஷங்களையும் போக்கி, என்னைக் காக்கும் இறைவனான வெங்கடாஜலபதியே, தங்களை மீண்டும் வணங்குகிறேன்.

    காலையில் இந்த துதியை ஜபம் செய்து வந்தால் திருமலையப்பனின் திருவருளால் கடன்கள் தீரும். சகல தோஷங்களும் விலகும்.
    தீராத நோயால் அவதிப்படுபவர்கள் பெருமாளுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.
    நாராயணம் பரப்ரஹ்ம ஸர்வ காரண காரணம்
    ப்ரபத்யே வெங்கடேசாக்யம் ததேவ கவசம் மம
    ஸஹஸ்ர சீர்ஷா புருஷோ வேங்கடேச: சிரோவது
    ப்ராணேச: ப்ராண நிலய ப்ராணம் ரக்ஷது மே ஹரி
    ஆகாசராட்ஸுதாநாத ஆத்மானம் மே ஸதாவது
    தேவ தேவோத்தம: பாயாத் தேஹம் மே வேங்கடேஸ்வர:
    ஸர்வத்ர ஸர்வ காலேஷு மங்காம்பா ஜாநிரீச்வர:
    பாலயேந் மாமகம் கர்ம ஸாபல்யம் ந: ப்ரயச்சது
    ய ஏதத் வஜ்ரகவசம் அபேத்யம் வேங்கடேசிது:
    ஸாயம் ப்ராத: படேந்நித்யம் ம்ருத்யும் தரதி நிர்பய:

    - ஸ்ரீவெங்கடேஸ்வர வஜ்ரகவசம்.

    பொதுப்பொருள்:

    அனைத்திற்கும் காரணமான நாராயணனே. தங்களின்கவசம் பாடி சரணடைகிறேன். ஆயிரம் சிரங்கள் கொண்டு விஸ்வரூபம் எடுத்தவரே, என் சிரத்தைக் காப்பீராக. ப்ராணனுக்கே ப்ராணன் அருளும் தாங்கள் என் ப்ராணனை ரட்சிக்க வேண்டும். ஆகாசராஜனின் மருமகன் என் ஆத்மாவை சதாசர்வகாலமும் காக்கவேண்டும்.

    தேவர்களுக்கெல்லாம் தேவன் என் தேகத்தைக் காக்க வேண்டும். அலர்மேல்மங்கையின் மணாளன் சர்வகாலமும் என்னைக் காக்கவேண்டும். என் கர்மங்களையெல்லாம் அகற்றி என் உடலை வஜ்ரம் போல் உறுதிமிக்கதாகக் காப்பீராக.
    ×