என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    அவரவர் ஜாதகப்படி, எந்த நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறோமோ, அந்த நட்சத்திரத்திற்கு உரிய காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்து வந்தால் உரிய பலன்களைப் பெறலாம்.
    மந்திரங்களில் உயர்ந்தது காயத்ரி மந்திரம் என்று புராணங்கள் சொல்கின்றன. அத்தகைய காயத்ரி மந்திரங்களை மக்களுக்குத் தந்தவர் விசுவாமித்திரர். ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு காயத்ரி மந்திரம் இருக்கிறது. அந்த மந்திரங்களை உச்சரித்து வழிபாடு செய்தால் அனைத்து நன்மைகளையும் அடையலாம்.

    தெய்வங்களைப் போலவே, நட்சத்திரங்களுக்கும் கூட காயத்ரி மந்திரங்கள் இருக்கின்றன. அவரவர் ஜாதகப்படி, எந்த நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறோமோ, அந்த நட்சத்திரத்திற்கு உரிய காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்து வந்தால் உரிய பலன்களைப் பெறலாம்.

    ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு உரிய காயத்ரி மந்திரங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

    அஸ்வினி

    ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
    சுதாகராயை தீமஹி
    தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

    பரணி

    ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
    தண்டதராயை தீமஹி
    தன்னோ பரணி ப்ரசோதயாத்

    கார்த்திகை

    ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
    மஹாதபாயை தீமஹி
    தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

    ரோகிணி

    ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
    விச்வரூபாயை தீமஹி
    தன்னோ ரோஹிணி ப்ரசோதயாத்

    மிருகசீரிஷம்

    ஓம் சசிசேகராய வித்மஹே
    மஹாராஜாய தீமஹி
    தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

    திருவாதிரை

    ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
    பசும்தநாய தீமஹி
    தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

    புனர்பூசம்

    ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
    அதிதிபுத்ராய த தீமஹி
    தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

    பூசம்

    ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே
    மஹா திஷ்யாய தீமஹி
    தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்

    ஆயில்யம்

    ஓம் ஸர்பராஜாய வித்மஹே
    மஹா ரோசனாய தீமஹி
    தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்

    மகம்

    ஓம் மஹா அனகாய வித்மஹே
    பித்ரியா தேவாய தீமஹி
    தன்னோ மக ப்ரசோதயாத்

    பூரம்

    ஓம் அரியம்நாய வித்மஹே
    பசுதேஹாய தீமஹி
    தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்

    உத்திரம்

    ஓம் மஹாபகாயை வித்மஹே
    மஹாச்ரேஷ்டாயை தீமஹி
    தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

    ஹஸ்தம்

    ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே
    ப்ரக்ருப்ணீதாயை தீமஹி
    தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

    சித்திரை

    ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
    ப்ரஜாரூபாயை தீமஹி
    தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

    சுவாதி

    ஓம் காமசாராயை வித்மஹே
    மகாநிஷ்டாயை தீமஹி
    தன்னோ சுவாதி ப்ரசோதயாத்

    விசாகம்

    ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே
    மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி
    தன்னோ விசாகா ப்ரசோதயாத்

    அனுஷம்

    ஓம் மித்ரதேயாயை வித்மஹே
    மஹா மித்ராய தீமஹி
    தன்னோ அனுராதா ப்ரசோதயாத்

    கேட்டை

    ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
    மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி
    தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்

    மூலம்

    ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே
    மஹப்ராஜையை தீமஹி
    தன்னோ மூலாப் ப்ரசோதயாத்

    பூராடம்

    ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே
    மஹாபிஜிதாயை தீமஹி
    தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்

    உத்திராடம்

    ஓம் விஸ்வேதேவாய வித்மஹே
    மஹா ஷாடாய தீமஹி
    தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

    திருவோணம்

    ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே
    புண்யஸ்லோகாய தீமஹி
    தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்

    அவிட்டம்

    ஓம் அக்ர நாதாய வித்மஹே
    வசூபரீதாய தீமஹி
    தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்

    சதயம்

    ஓம் பேஷஜயா வித்மஹே
    வருண தேஹா தீமஹி
    தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்

    பூரட்டாதி

    ஓம் தேஜஸ்கராய வித்மஹே
    அஜஏகபாதாய தீமஹி
    தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

    உத்திரட்டாதி


    ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே
    ப்ரதிஷ்டாபநாய தீமஹி
    தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோத யாத்

    ரேவதி

    ஓம் விச்வரூபாய வித்மஹே
    பூஷ்ண தேஹாய தீமஹி
    தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத் 
    எந்த ஒரு வேலையை செய்வதற்கு முன்பும் அல்லது தினமும் கணபதிக்கு உகந்த இந்த மூல மந்திரத்தை சொல்லி வந்தால் நல்லதே நடக்கும்.
    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே
    வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா

    இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வரவும். நல்லதே நடக்கும்
    மகாலட்சுமி நமது வீட்டில் தங்க வேண்டுமென்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வர வேண்டும்.
    மகாலட்சுமிதேவியின் அருளைப் பெற கீழ்க்காணும் ஸ்லோகத்தை தினமும் மாலைவேளையில் விளக்கேற்றி வைத்துச் சொல்லிவாருங்கள். உங்கள் இல்லத்திலும் மகாலட்சுமி மனமாரக் குடிகொண்டு அருள்வாள். தினமும் இந்த வழிபாட்டைச் செய்ய இயலாதவர்கள், வெள்ளிக்கிழமைகளில் மட்டுமாவது இதைச் செய்வது நல்லது.

    *ஸஹஸ்ரதள பத்மஸ்த கர்ணிகா வாஸினீம் பராம்
    சரத்பார்வண கோடீந்து ப்ரபாமுஷ்டிகராம் பராம்
    ஸ்வதேஜஸா ப்ரஜ்வலந்தீம் ஸுகத்ருச்யாம் மனோஹராம்
    ப்ரதப்த காஞ்சனநிப சோபாம் மூர்திமதீம் ஸதீம்
    ரத்நபூஷண பூஷாட்யாம் சோபிதாம் பீதவாஸஸா
    ஈஷத்தாஸ்ய ப்ரஸன்னாஸ்யாம் சஸ்வத்ஸுஸ்திரயௌவனாம்
    ஸர்வஸம்பத்ப்ரதாத்ரீம் ச மஹாலக்ஷ்மீம் பஜே சுபாம்'

    விளக்கம்:

    ஆயிரம் தளங்களுடன் கூடிய தாமரை மலரின் நடுவில் வசிப்பவளும் சிறந்தவளும், சரத் காலத்தில் உள்ள கோடி சந்திரனுக்கு ஒப்பான காந்தி உள்ளவளும், தனது காந்தியால் மிகவும் பிரகாசிக்கின்றவளும், ஆனந்தமயமாகக் காட்சி தருபவளும், பக்தர்களின் மனத்தைக் கவருகின்றவளும், உருக்கி வார்த்த தங்கத்தின் காந்தியே (பிரகாசமே) உருவெடுத்து வந்தது போன்று இருப்பவளும், பதிவிரதையும், ரத்னாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளும், தங்கப் பட்டாடையால் விளங்குகின்றவளும், மந்தஹாஸத்தால் பிரசன்ன முகமுடையவளும், சாஸ்வதமாய் அமைந்துள்ள யௌவனத்தை உடையவளும், பக்தர்களுக்கு சர்வ சம்பத்துக்களையும் தருபவளும், மங்கலத்தை அருள்கின்றவளுமான ஸ்ரீ மகாலட்சுமியைப் பூஜிக்கிறேன்.

    ஸ்ரீதேவி பாகவதம் 9-வது ஸ்கந்தம், 42-வது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள இந்த ஸ்லோகம் நம் இல்லத்தில் சகல சௌந்தர்யங்களையும் கொண்டுவந்து சேர்க்கக்கூடிய சக்தி கொண்டது.
    நரசிம்மருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினசரி 18 முறைகள் கூறி வர அனைத்து துன்பங்களும் தீர்ந்து நன்மைகள் உண்டாகும்.
    மாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹ
    ப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹ
    வித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹ
    ஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹ
    இதோ நரசிம்ஹ பரதோ நரசிம்ஹ,
    யதோயதோ யாஹி: ததோ நரசிம்ஹ,
    நரசிம்ஹா தேவாத் பரோ ந கஸ்சித்
    தஸ்மான் நரசிம்ஹ சரணம் ப்ரபத்யே
    இந்த மந்திரத்தை தினமும் காலையில் 108 முறை சொல்ல, கல்வி அறிவு வளர்ச்சி பெறும். அறிவு விருத்தியாகும். தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் காலையில் 108 முறை சொல்ல, கல்வி அறிவு வளர்ச்சி பெறும். அறிவு விருத்தியாகும். தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும்.

    ஐம் ப்ளூம் ஓம் ஸ்ரீம்
    ஹ்ரீம் க்லீம் க்லௌம்
    கம் கணபதயே
    வர வரத ஐம் ப்ளூம்
    சர்வ வித்யாம்
    தேஹி ஸ்வாஹா
    அனுமனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி அனுமனை வழிபாடு செய்து வந்தால் எந்த விதமான ஆபத்துகளும் நம்மை நெருங்காது.
    ஆபன்னா கிலலோகார்த்திஹாரிணே ஸ்ரீ ஹனூமதே
    அகஸ்மாதாகதோத்பாத நாஸனாய நமோஸ்துதே
    ஸீதாவியுக்த ஸ்ரீராம ஸோக து:கபயாபஹ
    தபாத்ரிதயஸம்ஹாரின்னாஞ்ஜனேய நமோஸ்துதே!    

    - ஆபதுத்தாரண ஹனுமத் ஸ்தோத்திரம்.

    பொதுப்பொருள்: அனைவரையும் எல்லாவிதமான ஆபத்திலிருந்து காப்பவரே ஆஞ்சநேயா, நமஸ்காரம். மனக்கவலையைப் போக்குகிறவரே, சற்றும் எதிர்பாராதவகையில் வரும் ஆபத்துகளைப் போக்குபவரே, ஆஞ்சநேயா நமஸ்காரம். சீதையை விட்டுப் பிரிந்த ராமபிரானின் சோகம், துக்கம், பயம்  எல்லாவற்றையும் போக்கியவரும், எல்லாவகை மனவருத்தங்களையும் காணாமல் போகச் செய்பவருமான ஆஞ்சநேயரே நமஸ்காரம்.
    பிராம்ஹி தேவிக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் பாராயணம் செய்து வருபவர்களுக்கு ஞாபக மறதி நீங்கும்.
    மேற்கு திசைக்கு அதிபதியாக இருப்பவள் பிராம்ஹி. இவள், பராசக்தியின் முகத்தில் இருந்து உருவானவள். கலைவாணி என்று அழைக்கப்படும் கல்விக்கு அதிபதியான சரஸ்வதியின் அம்சமாக இவள் பார்க்கப்படுகிறாள். எனவே இவள் அன்னவாகனத்தில் வீற்றிருப்பாள். மான் தோலை தன் மீது அணிந்திருக்கும் இந்த அன்னை, ஞானத்தை வழங்கி அஞ்ஞானத்தை அகற்றுபவள்.

    ‘ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே
    தேவர்ணாயை தீமஹி
    தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்’

    என்ற பிராம்ஹி தேவியின் காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்து வருபவர்களுக்கு ஞாபக மறதி நீங்கும். கல்வி பயிலும் மாணவர்கள், முக்கியமான தேர்வுகளை எழுத உள்ளவர்கள் இந்தக் காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை, மேற்கு நோக்கி அமர்ந்தபடி உச்சரித்து வந்தால் பலன் கிடைக்கும்.
    மகேஸ்வரி அன்னைக்கு உகந்த இந்த என்ற காயத்ரி மந்திரத்தை வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து, 108 முறை பாராயணம் செய்து வந்தால், கோபம் நீங்கி, சாந்தம் பெறலாம்.
    வடகிழக்கு என்று கூறப்படும் ஈசானியம் திசையை நிர்வாகம் செய்பவள் மகேஸ்வரி. இவள், அம்பாளின் தோளில் இருந்து அவதரித்தவள். இவளது வாகனம் ரிஷபம் ஆகும். ஈஸ்வரன் நிகழுத்தும் சம்ஹாரங்கள் அனைத்தும், இந்த மகேஸ்வரி சக்தியால்தான் செய்கிறார் என்பதே, இந்த அன்னையின் ஆற்றலை வெளிப்படுத்தும் சான்று. சப்தமாதரில் ஒருவரான இவரை வழிபட்டு வந்தால், நமது கோபத்தை அகற்றி, சாந்தம் அளிப்பாள்.

    ‘ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
    சூல ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்’

    என்ற காயத்ரி மந்திரத்தை வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து, 108 முறை பாராயணம் செய்து வந்தால், கோபம் நீங்கி, சாந்தம் பெறலாம்.
    வைஷ்ணவி தேவிக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்து, வைஷ்ணவியை வழிபாடு செய்து வந்தால், சகல ஐஸ்வரியங்களும் உங்கள் இல்லத்தில் குடிகொள்ளும்.
    செல்வ வளம் தரும் அன்னையாக வைஷ்ணவி தேவி பார்க்கப்படுகிறாள். சகல சவுபாக்கியங்களுடன், செல்வ வளம் பெற விரும்புபவர்கள் வழிபட வேண்டிய தெய்வம் இவள். குறிப்பாக தங்கத்தை அளவின்றி கிடைக்கச் செய்பவள். அம்பாளின் கைகளில் இருந்து பிறந்தவள்.

    ‘ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
    சக்ர ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்’

    என்ற காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்து, வைஷ்ணவியை வழிபாடு செய்து வந்தால், சகல ஐஸ்வரியங்களும் உங்கள் இல்லத்தில் குடிகொள்ளும்.
    சாமுண்டிக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் உச்சரித்து, சாமுண்டியை வழிபட்டால், எதிரிகள் பயம் விலகும். எடுத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.
    சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய பத்திரகாளியே, தன்னுடைய கோரமுகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனாள் என்று கூறப்படுகிறது. இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அசுரனை அழித்தவள்.

    பதினாறு கைகள், மூன்று கண்கள் கொண்டவள். தனது 16 கரங்களிலும் விதவிதமான ஆயுதங்களை தாங்கியிருப்பவள். செந்நிற மேனியைக் கொண்ட இவள், யானையின் தோலை ஆடையாக அணிந்தவள். சப்த கன்னியர்களில் முதலில் தோன்றியவள் சாமுண்டி. ஏழு பேரில் சர்வ சக்தியையும் பெற்றவள் இந்த அன்னை.



    ‘ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே
    சூலஹஸ்தாயை தீமஹி
    தன்னோ சாமுண்டா ப்ரசோதயாத்’

    என்ற காயத்ரி மந்திரத்தை தினமும் உச்சரித்து, சாமுண்டியை வழிபட்டால், எதிரிகள் பயம் விலகும். வாழ்க்கைக்கு தேவையான வசதி வாய்ப்புகள் வந்து சேரும். எடுத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.

    வராஹி அம்மனுக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வந்தால், ஒருவரது வாழ்வில் விடாது துரத்தும் துன்பங்கள் கூட விலகி ஓடும்.
    வராஹ முகத்தோடு இருக்கும் இந்த அன்னை, பராசக்தியின் முக்கிய மந்திரியாக திகழ்பவள். இவள் விஷ்ணுவின் வராஹ அம்சமாக தோன்றியவள். இவளுக்கு ஈசனைப் போல மூன்று கண்கள் உண்டு. தவிர அம்பாளிடம் இருந்து உருவானவள்.

    எனவே இந்த வராஹி தேவி, சிவபெருமான், திருமால், பராசக்தி ஆகிய மூவரின் அம்சமாகவும் பார்க்கப்படுகிறாள். சப்த கன்னியர்களில் மிகவும் வேறுபட்டவள். மிருக பலமும், தேவ குணமும் கொண்ட இந்த அன்னை, தன்னை வழிபடுபவர்களின் துன்பங்களை அகற்றும் ஆற்றல் நிறைந்தவள்.

    ‘ஓம் ச்யாமளாயை வித்மஹே
    ஹல ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ வாராஹி ப்ரசோதயாத்’

    என்ற காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வந்தால், ஒருவரது வாழ்வில் விடாது துரத்தும் துன்பங்கள் கூட விலகி ஓடும்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள காயத்ரி மந்திரத்தை உச்சரித்து, இந்திராணியை வழிபாடு செய்து வந்தால் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணமும், கணவன்-மனைவிக்குள் ஒற்றுமையும் ஏற்படும்.
    தன்னை வழிபடுபவர்களின் உயிரைக் காப்பதிலும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணையை அமைத்துத் தருவதிலும் இந்த அன்னை சிறப்புக்குரியவள். மேலும் கணவன்-மனைவிக்குள் தாம்பத்ய சுகத்தைத் தருபவளும் இந்த அன்னையே. இவளை முறையாக வழிபாடு செய்யும் திருமணமாகாத ஆண்களுக்கு, குணத்தில் சிறந்த மனைவியும், திருமணமாகாத பெண்களுக்கு குணத்தில் சிறந்த கணவனும் அமைவர்.

    ‘ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
    வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்’

    என்ற காயத்ரி மந்திரத்தை உச்சரித்து, இந்திராணியை வழிபாடு செய்து வந்தால் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணமும், கணவன்-மனைவிக்குள் ஒற்றுமையும் ஏற்படும்.

    ×