என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    முருகப்பெருமானின் அம்சமான கவுமாரி காயத்ரி மந்திரத்தை, தினமும் 108 முறை பாராயணம் செய்து வந்தால், குழந்தைப் பேறு விரைவில் கிடைக்கும் என்பது ஐதீகம்.
    கவுமாரன் என்றால் குமரன் என்று பொருள். குமரன் என்பது முருகக்கடவுளைக் குறிக்கும். ஈசனாலும் உமையவளாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர் தான் குமரக்கடவுள். அப்படிப்பட்ட முருகப்பெருமானின் அம்சம்தான் இந்த கவுமாரி. இவளுக்கு சஷ்டி, தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு. மயிலை வாகனமாக கொண்ட இந்த அன்னை, அஷ்ட திக்குகளுக்கும் அதிபதியாவாள். இவளை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    ‘ஓம் சிகி வாஹனாயை வித்மஹே
    சக்தி ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ கெளமாரி ப்ரசோதயாத’

    என்ற கவுமாரி காயத்ரி மந்திரத்தை, தினமும் 108 முறை பாராயணம் செய்து வந்தால், குழந்தைப் பேறு விரைவில் கிடைக்கும் என்பது ஐதீகம். 
    அமாவாசை அன்று அல்லது தினமும் பெருமாளுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் தீராப்பிணிகளும், பாவங்களும் நீங்கும்.
    நீர்மை கெட வைதாரும் நின்னொடு எதிர்த்தாரும்
    சீர்மைபெற நின் அடிக்கீழ்ச் சேர்க்கையினால் - நேர்மை இலா
    வெவ்வுளத்தினேன் செய்மிகையைப் பொறுத்து
    அருளி எவ்வுள் அத்தனே! நீ இரங்கு.
    பிள்ளைப்பெருமாள்

    ஐயங்கார் பாசுரம்.

    பொதுப்பொருள் :

    திரு எவ்வுள்ளூர் (திருவள்ளூர்) என்னும் திவ்ய தேசத்தில் எழுந்தருளி இருக்கும் என் தலைவனே! உந்தன் முன் அவதாரங்களில் உன்னை முறையில்லாமல் அறியாமையால் வசை பாடியவர்களும், உன்னை எதிர்த்துப் போரிட்டவர்களும்கூட சிறந்த முக்தியை அடையுமாறு உன் திருவடியில் சேர்ந்து அருள் பெற்றிருக்கிறார்கள். ஆகவே, நேர்மையற்ற, கொடிய மனம் கொண்ட அடியேன் செய்த பிழைகளையும் பொறுத்தருளி, என்பால் இரங்குவாயாக.

    - இத்துதியை மஹாளய அமாவாசை அன்று ஆரம்பித்து ஒவ்வொரு அமாவாசையன்றும் துதித்து வர பாவங்கள் நீங்கும். தீராப்பிணிகளும் திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் திருவருளால் தீரும்.
    தினமும் நீராடிய பின், “நரசிம்ம பிரபத்தி’ ஸ்லோகத்தை 3,12,24,48 என உங்களுக்கு வசதிப்படும் அளவுக்கு பாராயணம் செய்யுங்கள். 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடி விடும்.
    அறியாமலோ செய்த பாவங்களால், கிடைத்து வரும் தண்டனையில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும். நரசிம்மரின் திருவடிகளில் சரணாகதி அடைவது, தண்டனையில் இருந்து விடுதலை தரும்.

    தன்னை நம்பிச் சரணடைந்தவர் யாராக இருந்தாலும், அந்த விநாடியே ஏற்று அருளும் தாயுள்ளம் படைத்தவர் நரசிம்மர். அவரது படத்தை, பூஜை அறையில் கிழக்கு நோக்கி வையுங்கள்.

    தினமும் நீராடிய பின், “நரசிம்ம பிரபத்தி’ ஸ்லோகத்தை 3,12,24,48 என உங்களுக்கு வசதிப்படும் அளவுக்கு பாராயணம் செய்யுங்கள். இதே அந்த நரசிம்ம பிரபத்தி

    நரசிம்மரே தாய், நரசிம்மரே தந்தை.
    சகோதரனும் நரசிம்மரே தோழனும் நரசிம்மரே!
    அறிவும் நரசிம்மரே செல்வமும் நரசிம்மரே!
    எஜமானனும் நரசிம்மரே எல்லாமும் நரசிம்மரே!
    இவ்வுலகத்திலும் நரசிம்மரே!
    அவ்வுலகத்திலும் நரசிம்மரே!
    எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மரே!
    நரசிம்மரைக் காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை
    அதனால், நரசிம்மரே! உம்மைச் சரணடைகிறேன்.

    அஹோபில மடத்தின் 44வது பட்டமாக வீற்றிருந்த அழகிய சிங்கர் முக்கூர் சுவாமிகளால் அருளப்பட்ட மந்திரம் இது.

    இந்த ஸ்லோகத்தைச் சொல்லும்போது, லட்சுமி நரசிம்மரின் முன் விளக்கேற்றி, காய்ச்சி ஆற வைத்த பசும்பால் அல்லது பானகம் நைவேத்யம் செய்ய வேண்டும். இப்பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வரவேண்டும். கைமேல் பலன் தரும் சக்தி வாய்ந்த ஸ்லோகம் இது.

    48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடி விடும். அதன் பிறகு நரசிம்மர் கோயிலில் சுவாமிக்கு நெய்தீபம் ஏற்றி துளசிமாலை சாத்தி வழிபட வேண்டும். கடன், நோய், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, வேலையில் இடைஞ்சல் இன்னும் எந்த வித கோரிக்கைக்காகவும் இந்த பிரபத்தியைச் சொல்லலாம்.

    பால், பானகம் வைக்க வசதிப்படாதவர்கள் தண்ணீரை வைத்தாலே போதும். நரசிம்மர் மனம் உவந்து ஏற்பார். அவரைப் பொருத்தவரை நாளை என்பதே கிடையாது. உடனுக்குடன் பலன்களை அள்ளித்தருவார். ஆகையால் நாளை அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று மறக்காமல் நரசிம்மரை மனம் உருக வழிபடுங்கள்.
    வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு உகந்த இந்த ஸ்லோகங்களை சொல்லி வழிபாடு செய்து வந்தால் குழந்தை பாக்கியம், திருமண தடை போன்ற பிரச்சனைகள் அகலும்.
    வியாழக்கிழமைகளில் குரு பகவானை நினைத்து மேற்கொள்ளும் விரதம் ‘குரு வார விரதம்’ ஆகும். இந்த விரதம் இருப்பவர்கள் மஞ்சள் ஆடை அணிந்து குருவை வழிபட்டால் உயர்பதவி கிடைக்கும். செல்வச்செழிப்பு மேலோங்கும். சுக வாழ்வு, மன நிம்மதி கிடைக்கும். அறிவு விருத்தியடையும். மற்ற கிரக தோஷங்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    குரு சுலோகம் :

    குரு பிரம்மா குரு விஷ்ணு
    குரு தேவோ மகேஸ்வர;
    குரு சாஷாத் பரப்பிரம்மா
    தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

    குரு மந்திரம் :

    ‘தேவாணாஞ்ச ரிஷிணாஞ்ச
    குரும் காஞ்சன ஸந்நிபம்
    புத்தி பூதம் திரிலோகேஸம்
    தம் நமமி பிருகஸ்பதிம்’

    குரு பகவான் காயத்ரி :

    ‘வருஷபத் வஜாய வித்மஹே
    க்ருணீ ஹஸ்தாய தீமஹீ
    தந்நோ குரு ப்ரசோதயாத்’

    தோஷம், கடன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பெருமாளுக்கு உகந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
    ஸ்வாமின் ஜகத்தரண வாரிதிமத்ய மக்னம்
    மாமுத்தராத்ய க்ருபயா கருணாபயோதே
    லக்ஷ்மீஞ்சதேஹி விபுலாம் ருணவாரணாய
    ஸ்ரீவெங்கடேச மம தேஹி கராவலம்பம்.

    - வெங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம்

    பொதுப் பொருள்:

    அகில உலகத்திற்கும் இறைவனே, வெங்கடாஜலபதியே தங்களுக்கு நமஸ்காரம். அனைத்து உலகங்களையும் காப்பவரே, உம்மை வணங்குகிறேன். கருணைக்கடலே, உலகியல் மாயையில் மூழ்கித் தவிக்கும் என்னைக் கரை சேர்க்கக் கைகொடுத்து அருள்வாய். நான் பட்ட கடன்களைத் தீர்க்க என் மீது இரக்கம் காட்டுவாய். மகாலட்சுமியின் நாயகனே! எனக்கு எல்லா செல்வ வளங்களையும் அருளி, என் சகல தோஷங்களையும் போக்கி, என்னைக் காக்கும் இறைவனான வெங்கடாஜலபதியே, தங்களை மீண்டும் வணங்குகிறேன். 
    ராகு - கேது தோஷத்தால் திருமண தடைப்படுபவர்கள் அனைத்து நலன்களும் பெருக கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
    அர்த்தகாயம் மஹாவீர்யம் சந்த்ராதித்ய விமர்தனம்
    ஸிம்ஹிகாகர்ப்ப ஸம்பூதம் தம் ராஹும் ப்ரணமாம்யஹம்
    பலாசபுஷ்ப ஸங்காசம் தாரகாக்ரஹமஸ்தகம்
    ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம்
    நவகிரக ஸ்தோத்திரம்.

    பொதுப்பொருள்:

    பாதி (மனித) சரீரமுள்ளவரே, மகா பலசாலியானவரே, சந்திர-சூரியனையே மறைப்பவரே, ஸிம்ஹிகையின் கர்ப்பத்தில் பிறந்தவரே, ராகு பகவானே நமஸ்காரம். பலாச மலர் போன்றவரே, நட்சத்திரங்களுக்கும் கிரகங்களுக்கும் தலைவரானவரே, கோபம் மிக்க உருவம் கொண்டவரே, அநீதிக்கு அச்சமூட்டுபவரே, கேது பகவானே, நமஸ்காரம்.

    கிரக தோஷங்கள் நீங்கி நவகிரகங்களின் திருவருள் கிடைக்க தினமும் இத்துதியை பாராயணம் செய்தால் நவகிரகங்களின் திருவருள் பரிபூரணமாக கிட்டும்.
    ஆரோக்யம் ப்ரதாது நோ தினகர:
    சந்த்ரோ யஸோ நிர்மலம்
    பூதிம் பூமிஸுத: ஸுதாம்ஸுதனய:
    ப்ரஜ்ஞாம் குருர் கௌரவம்
    கான்ய: கோமளவாக்விலாஸமதுலம்
    மந்தோமுதம் ஸர்வதா:
    ராஹுர் பாஹுபலம் விரோதஸமனம்
    கேது: குலஸ்யோன்னதிம்

    - நவகிரக ஸ்லோகம்

    பொதுப் பொருள்:

    எல்லோருக்கும் ஆரோக்கியத்தை அருளும் சூரிய பகவானே, கீர்த்தியைக் குறைவின்றி வழங்கும் சந்திரனே, ஐஸ்வர்யங்களை  அள்ளித் தரும் அங்காரகனே, நல்ல புத்தியை நல்கும் புதன் பகவானே, நல்ல மதிப்பை அருளும் குரு பகவானே, பிறர் போற்றும் வண்ணம் அழகிய  பேச்சுத் திறமையை வழங்கும் சுக்கிரனே, சுகத்தைக் குறைவின்றி தரும் சனிபகவானே, நல்ல உடல் பலத்தையும் விரோதிகள் மேல் வெற்றியும்  நல்கும் ராகுவே, குல அபிவிருத்தி அருளும் கேதுவே, உங்கள் அனைவருக்கும் நமஸ்காரம். நவகிரகங்களும் நற்பேறுகளை அளிப்பீர்களாக.

    மரண பயத்தை போக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள கருட பகவானின் மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நிச்சயம் நல்ல பலனை காணலாம்.
    ஓம் தத்புருஷாய வித்மஹே
    சுவர்ணபக்ஷய தீமஹி
    தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்
    ஓம் பக்ஷிராஜாய வித்மஹே
    சுவர்ணபக்ஷய தீமஹி
    தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்
    ஓம் தக்ஷபத்ராய வித்மஹே
    தனாயுபுத்ராய தீமஹி
    தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்
    ராகுதிசை ராகுபுத்தி நடப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.
    நாகலிங்கபூ மந்தாரை மலர்கள் கொண்டு இறைவனை பூஜை செய்வதாலும் அபிஷேகத்தில் பாலில் அபிஷேகம் மஞ்சள் பொடி அபிஷேகம் செய்வதாலும் நேவேத்தியத்தில் பொரி தயிர் ஏடு அவியல் வகைகளை நைவேத்தியம் செய்வதாலும் உளுந்து பொருட்களில் செய்யப்பட்ட வடை புளியோதரை போன்ற உணவு வகைகளை நேவேத்தியம் செய்து உண்பதாலும் சிறுநாகப்பூ மரம் நாகலிங்கம் மரம் போன்ற மரங்களை நடுவதாலும் சிறுநாகப்பூ மரம் நாகலிங்கமரம் கருங்காலிமரம் செங்கருங்காலி மரம் மருதமரம் கடம்புமரம் போன்றவற்றிக்கு தண்ணீர் ஊற்றி வணங்கிவருவதாலும் ஆடை வகைகளில் நீலம் கருப்பு கருநீலம் கருப்பு கோடுகள் நீலநிற கோடுகள் போன்ற ஆடைகளை அணிவதாலும் ராகுவின் அருள் பெறலாம்.

    ராகுவின் ஆதிக்கம் பெற்றவர்கள் வாஸ்து சாஸ்திர முறைப்படி தென்மேற்கு திசைகளில் வசிக்கலாம்-வீடுகள் கட்டலாம்.

    ராகுதோஷம் நீங்க

    “அரிம் ஸ்ரீம் நசிமசி” மந்திரம் ஜெபித்தால் ராகுதோஷம் நீங்கும்.

    மேலும் ராகுவின் காயத்ரி மந்திரமான

    நகத்வஜாய வித்மஹே
    பத்மஹஸ்தாய தீமஹி!
    தந்தோ ராஹீ ப்ரசோதயாத்!

    மந்திரத்தை தினமும் 18 தடவை சொல்லாம். ராகுதிசை ராகுபுத்தி நடப்பவர்கள் தினமும் சொன்னால் சிறப்பான பலன்களை அடையலாம்.

    பதினெட்டு சித்தர்களில் புலிப்பாணி சித்தர் நாகதோஷ பரிகாரம் நீங்க 300 வழிமுறைகள் கூறியுள்ளார். மேலும் புலிப்பாணிசித்தரின் குருவான போகர் சித்தர் வைத்திய நுல்களிலும் ராகுதோஷம் நீங்க வைத்திய முறையில் 47 வகை வழிமுறைகள் கூறியுள்ளார்.
    செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அங்காரகனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
    செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அங்காரகனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    ஓம் வீரத்வஜாய வித்மஹே
    விக்ன ஹஸ்தாய தீமஹி
    தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்
    ஓம் அங்காரகாய வித்மஹே
    சக்திஹஸ்தாய தீமஹி
    தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத்
    ஓம் அங்காரகாய வித்மஹே
    சக்திஹஸ்தாய தீமஹி
    தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்
    ஓம் லோஹிதாங்காய வித்மஹே
    பூமிபுத்ராய தீமஹி
    தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்
    திரு பாம்பன் சுவாமிகள் இயற்றிய சண்முக கவசத்தை தினமும் ஆறுமுறை பாராயணம் செய்தால் நாம் நினைத்ததை எல்லாம் முருகன் நடத்தி வைப்பான் என்று பாம்பன் ஸ்வாதிகள் கூறுகிறார்.
    திரு பாம்பன் சுவாமிகள் இயற்றிய சண்முக கவசத்தை தினமும் ஆறுமுறை பாராயணம் செய்தால் நாம் நினைத்ததை எல்லாம் முருகன் நடத்தி வைப்பான் என்று பாம்பன் ஸ்வாதிகள் கூறுகிறார்.

    அண்டமாய் அவனியாகிஅறியொணாப் பொருளது ஆகித்
    தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி
    எண்திசை போற்ற நின்ற என் அருள் ஈசன் ஆன
    திண்திறல் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க

    ஆதியாம் கயிலைச் செல்வன் அணிநெற்றி தன்னைக் காக்க
    தாது அவிழ் கடப்பந் தாரான் தானிறு நுதலைக் காக்க
    சோதியாம் தணிகை ஈசன் துரிசு இலா விழியைக் காக்க
    நாதனாம் கார்த்திகேயன் நாசியை நயந்து காக்க

    இரு செவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க வாயை
    முருகவேள் காக்க நாப்பல் முழுதும்நல் குமரன் காக்க
    துரிசு அறு கதுப்பை யானைத்துண்டனார் துணைவன் காக்க
    திருவுடன் பிடரி தன்னைச்சிவ சுப்பிரமணியன் காக்க

    ஈசனாம் வாகுலேயன் எனது கந்தரத்தைக் காக்க
    தேசுறு தோள் விலாவும் திருமகள் மருகன் காக்க
    ஆசுஇலா மார்பை ஈர ஆயுதன் காக்க எந்தன்
    ஏசுஇலா முழங்கை தன்னை எழில் குறிஞ்சிக் கோன் காக்க

    உறுதியாய் முன்கை தன்னை உமையிள மதலை காக்க
    தறுகண் ஏறிடவே என்கைத்தலத்தை மாமுருகன் காக்க
    புறம் கையை அயிலோன் காக்க பொறிக்கர விரல்கள் பத்தும்
    பிறங்கு மால்மருகன் காக்க பின் முதுகைச் சேய் காக்க

    ஊண்நிறை வயிற்றை மஞ்ஞை ஊர்தியோன் காக்க வம்புத்
    தோள் நிமிர் சுரேசன் உந்திச் சுழியினைக் காக்க, குய்ய
    நாணினை அங்கி கௌரி நந்தனன் காக்க, பீஜ
    ஆணியைக் கந்தன் காக்க அறுமுகன் குதத்தைக் காக்க

    எஞ்சிடாது இடுப்பை வேலுக்கு இறைவனார் காக்க காக்க
    அம்சகனம் ஓர் இரண்டும் அரன்மகன் காக்க காக்க
    விஞ்சிடு பொருள் காங்கேயன் விளரடித் தொடையைக் காக்க
    செஞ்சரண்நேர ஆசான் திமிருமுன் தொடையைக் காக்க

    ஏரகத் தேவன் என்தாள் இரு முழங்காலும் காக்க
    சீருடைக் கணைக்கால் தன்னைச் சீரலைவாய்த் தே காக்க
    நேருடைப் பரடு இரண்டும் நிகழ் பரங்கிரியன் காக்க
    சீரிய குதிக்கால் தன்னைத் திருச்சோலை மலையன் காக்க

    ஐயுறு மலையன் பாதத்து  அமர் பத்து விரலும் காக்க
    பையுறு பழநி நாத பரன் அகம் காலைக் காக்க
    மெய்யுடன் முழுதும் ஆதி  விமல சண்முகவன் காக்க
    தெய்வ நாயக விசாகன் தினமும் என் நெஞ்சைக் காக்க

    ஒலியெழ உரத்த சத்தத் தொடுவரு பூத ப்ரேதம்
    பலிகொள் இராக்கதப் பேய் பலகணத்து எவை ஆனாலும்
    கிரிகொள் எனைவேல் காக்க கெடுபரர் செய்யும் சூன்யம்
    வலியுள மந்த்ர தந்த்ரம் வருத்திடாது அயில்வேல் காக்க

    ஓங்கிய சீற்றமே கொண்டு உவணியில் வேல் சூலங்களும்
    தாங்கிய தண்டம் எஃகம் தடி பரசு ஈட்டி யாதி
    பாங்குடை ஆயுதங்கள் பகைவர் என் மேலே ஓச்சின்
    தீங்கு செய்யாமல் என்னைத் திருக்கைவேல் காக்க காக்க

    ஒளவியமுளர் ஊன் உண்போர் அசடர்பேய் அரக்கர் புல்லர்
    தெவ்வர்கள் எவர் ஆனாலும் திடமுடன் எனைமல் கட்டத்
    தவ்வியே வருவாராயின் சராசரம் எலாம் புரக்கும்
    கவ்வுடைச் சூர சண்டன் கை அயில் காக்க காக்க

    கடுவிடப் பாந்தள் சிங்கம் கரடி நாய் புலிமா யானை
    கொடிய கோணாய் குரங்கு கோல மார்ச்சாலம் சம்பு
    நடையுடை எதனாலேனும் நான் இடர்ப்பட்டிடாமல்
    சடிதியில் வடிவேல் காக்க சானவி முளை வேல் காக்க

    ஙகரமே போல் தழீஇ ஞானவேல் காக்க வன்புள்
    சிகரிதேள் நண்டுக் காலி செய்யன் ஏறு ஆலப் பல்லி
    நகமுடை ஒந்தி பூரான் நளிவண்டு புலியின் பூச்சி
    உகமிசை இவையால் எற்கு ஓர் ஊறுஇலாது ஐவேல் காக்க

    சலத்தில் உய்வன் மீன்ஏறு தண்டுடைத் திருக்கை மற்று
    நிலத்திலும் சலத்திலும் தான் நெடிந்துயர் தரற்கே உள்ள
    குலத்தினால் நான் வருத்தம் கொண்டிடாது அவ்வவ்வேளை
    பலத்துடன் இருந்து காக்க பாவகி கூர்வேல் காக்க

    ஞமலியம் பரியன் கைவேல் நவக்கிரககக் கோள் காக்க
    சுமவிழி நோய்கள் தந்த சூலை, ஆக்கிராண ரோகம்
    திமிர்கழல் வாதம், சோகை சிரமடி கர்ண ரோகம்
    எமை அணுகாமலே பன்னிரு புயன் சயவேல் காக்க

    டமருகத்து அடிபோல் நைக்கும் தலையிடி கண்ட மாலை
    குமுறு விப்புருதி குன்மம் குடல்வரி ஈழை, காசம்
    நிமிரொணா(து) இருத்தும் வெட்டை நீர்ப் பிரமேகம் எல்லாம்
    எமை அடையாமலே குன்று எறிந்தவன் கைவேல் காக்க

    இணக்கம் இல்லாத பித்த எரிவு, மாசுரங்கள், கைகால்
    முணக்கவே குறைக்கும் குஷ்டம் மூலவெண்முளை தீமந்தம்
    சணத்திலே கொல்லும் சன்னி சாலம் என்று அறையும் இந்தப்
    பிணிக்குலம் எனை ஆளாமல் பெரும் சத்திவடி வேல் காக்க

    தவனமா ரோகம் வாதம் சயித்தியம் அரோசகம்
    சுவறவே செய்யும் மூலச்சூடு, இளைப்பு, உடற்று விக்கல்
    அவதி செய் பேதி, சீழ்நோய் அண்டவாதங்கள் சூலை
    எவையும் என்னிடத்து எய்தாமல் எம்பிரான் திணிவேல் காக்க

    நமைப்புறு கிரந்தி, வீக்கம் நணுகிடு பாண்டு சோபம்
    அமர்த்திடு கருமை வெண்மை ஆகுபல்தொழு நோய்க்கல்
    இமைக்குமுன் உறு வலிப்போடு எழுபுடைப் பகந்த(ர) ஆதி
    இமைப் பொழுதேனும் என்னை எய்தாமல் அருள்வேல் காக்க

    பல்லது கடித்து மீசை படபடென்றே துடிக்கக்
    கல்லினும் வலிய நெஞ்சம் காட்டியே உருட்டி நோக்கி
    எல்லினும் கரிய மேனி எமபடர் வரினும் என்னை
    ஒல்லையில் தார காரி  ஓம் ஐம் ரீம் வேல் காக்க

    மண்ணிலும் மரத்தின் மீதும் மலையிலும் நெருப்பின் மீதும்
    தண்ணிறை ஜலத்தின் மீதும் சாரி செய் ஊர்தி மீதும்
    விண்ணிலும் பிலத்தின் உள்ளும் வேறு எந்த இடத்தும் என்னை
    நண்ணிவந்து அருள்ஆர் சஷ்டி நாதன் வேல் காக்க காக்க

    யகரமேபோல் சூல் ஏந்தும் நறும்புயன் வேல் முன் காக்க
    அகரமே முதலாம் ஈராறு அம்பகன் வேல்வின் காக்க
    சக்ரமோடு ஆறும் ஆனோன் தன் கைவேல் நடுவில் காக்க
    சிகரமின் தேவமோலி திகழைவேல் கீழ்மேல் காக்க

    ரஞ்சித மொழி தேவானை நாயகன் வள்ளி பங்கன்
    செஞ்சய வேல் கிழக்கில் திறமுடன் காக்க அங்கி
    விஞ்சிடு திசையின் ஞான வீரன்வேல் காக்க தெற்கில்
    எஞ்சிடாக் கதிர் காமத்தோன் இகலுடைக் கரவேல் காக்க

    லகரமே போல் காளிங்கன் நல்லுடல் நெளிய நின்று
    தகரமர்த் தனமே செய்த சங்கரி மருகன் கைவேல்
    நிகழ் எனை நிருதி திக்கில் நிலைபெறாக் காக்க மேற்கில்
    இகல் அயில் காக்க வாயு வினில் குகன் கதிர்வேல் காக்க

    வடதிசை தன்னில் ஈசன் மகன் அருள் திருவேல் காக்க
    விடையுடை ஈசன் திக்கில் வேத போதகன் வேல் காக்க
    நடக்கையில் இருக்கும் ஞான்றும்  நவில் கையில் நிமிர்கையில் கீழ்க்
    கிடக்கையில் தூங்கும் ஞான்றும் கிரிதுளைத்துளை வேல் காக்க

    இழந்து போகாத வாழ்வை ஈயும் முத்தையனார் கைவேல்
    வழங்கும் நல்ஊன் உண்போதும் மால்விளையாட்டின் போதும்
    பழஞ்சுரர் போற்றும் பாதம் பணிந்து நெஞ்சு அடக்கும் போதும்
    செழும் குணத்தோடே காக்க திடமுடன் மயிலும் காக்க

    இளமையில் வாலிபத்தில் ஏறிடு வயோதிகத்தில
    வளர் அறுமுகச் சிவன்தான் வந்தெனைக் காக்க காக்க
    ஒளிஎழு காலை, முன் எல், ஓம் சிவசாமி காக்க
    தெளிநடு பிற்பகல்கால் சிவகுரு நாதன் காக்க

    இறகுடைக் கோழித் தோகைக்கு இறை முன் இராவில் காக்க
    திறலுடைச் சூர்ப்பகைத்தே திகழ் பின் இராவில் காக்க
    நறவுசேர் தாள் சிலம்பன் நடுநிசி தன்னில் காக்க
    மறைதொழ குழகன் எம்கோன் மாறாது காக்க காக்க

    இனம் எனத் தொண்டரோடும் இணக்கிடும் செட்டி காக்க
    தனிமையில் கூட்டந் தன்னில் சரவண பவனார் காக்க
    நனி அனுபூதி சொன்ன நாதர் கோன் காக்க, இத்தைக்
    கனிவொடு சொன்ன தாசன் கடவுள் தான் காக்க வந்தே.

    "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்'' 
    இத்துதியை வெள்ளிக்கிழமை அல்லது அஷ்டமி அன்றும் பாராயணம் செய்தால் பராசக்தியின் திருவருளால் தடைகள் நீங்கி, திருமணம் மகிழ்ச்சி பொங்க நடைபெறும்.
    ஓம் ஹ்ரீம் யோகினி யோகினி யோகிச்வரி யோக பயங்கரி
    ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய முக ஹ்ருதயம் மம வஸமாகர்ஷய
    கர்ஷய ஸ்வாஹா

    - ஸ்வயம்வரா பார்வதி மூல மந்திரம்

    பொதுப் பொருள் : ஹ்ரீம் எனும் பீஜத்தில் உறைபவளே, யோகினியே, யோகேஸ்வரியே, சகல ஜீவன்களும் எனக்கு வசமாக அருள்புரிவாய் அம்மா.

    இத்துதி, தேவி வழிபாட்டில் ஸ்வயம்வர கல்யாணி என்று போற்றப்படுகிறது. ருக்மிணி கிருஷ்ணனை இத்துதியை ஜபித்தே மணந்தாள். பார்வதியாக அவதரித்தபோது உமாதேவி இத்துதியை பராசக்தியைக் குறித்து துதித்தே ஈசனை மணந்தாள்.

    இத்துதியை வெள்ளிக்கிழமைகளிலும் அஷ்டமி தினத்தன்றும் குறிப்பாக பங்குனி உத்திர தினத்தன்றும் பாராயணம் செய்தால் தேவியின் திருவருளால் தடைகள் நீங்கி, திருமணம் மகிழ்ச்சி பொங்க நடைபெறும்.
    ×