என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    குருவார வியாழக்கிழமையில், குரு பிரம்மாவையும் குரு பிரகஸ்பதியையும் குரு தட்சிணாமூர்த்தியையும் வணங்குங்கள். குரு பிரம்மாவை வியாழக்கிழமைகளில் வணங்கி வழிபடுவது ரொம்பவே மகத்துவம் மிக்கது.
    குருவார வியாழக்கிழமையில், குரு பிரம்மாவையும் குரு பிரகஸ்பதியையும் குரு தட்சிணாமூர்த்தியையும் வணங்குங்கள். குரு பிரம்மா குருவிஷ்ணு என்று சொல்கிறது ஸ்லோகம். எனவே குரு பிரம்மாவை வியாழக்கிழமைகளில் வணங்கி வழிபடுவது ரொம்பவே மகத்துவம் மிக்கது. நம்மைப் படைத்த கடவுளான பிரம்மாவை, பிரம்ம காயத்ரி சொல்லி வழிபடுங்கள். அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் அமர்ந்து பிரம்மாவை நினைத்து தியானிப்பதும் பல மடங்கு பலன்களை வாரி வழங்கும் சக்தி மிக்கது என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.

    குரு ஸ்லோகம் :

    குரு பிரம்மா குரு விஷ்ணு
    குரு தேவோ மகேஸ்வர;
    குரு சாஷாத் பரப்பிரம்மா
    தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

    குரு மந்திரம் :

    தேவாணாஞ்ச ரிஷிணாஞ்ச
    குரும் காஞ்சன ஸந்நிபம்
    புத்தி பூதம் திரிலோகேஸம்
    தம் நமமி பிருகஸ்பதிம்

    குரு பகவான் காயத்ரி :

    வருஷபத் வஜாய வித்மஹே
    க்ருணீ ஹஸ்தாய தீமஹீ
    தந்நோ குரு ப்ரசோதயாத்
    ஸ்ரீஇராமரை நம் குறிக்கோள் நாயகராகக் கொண்டால் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வநிலைக்கு உயரலாம் என்பது திண்ணம்!
    ஸ்ரீராம ராம ராமேதி ரமேராமே மனோரமே |
    ஸகஸ்ரநாம தத்துஸ்யம் ஸ்ரீராமநாமவரானனே ||

    என்ற ஸ்லோகம் விஷ்ணு சகஸ்ரநாமம்’ முழுவதும் கூறி பெருமாளை வழிபட்ட பலன் ராமநாமத்தைக் கூறுவதாலேயே சித்திக்கும் என்பதை உணர்த்துகிறது.
    விநாயகர் என்றால் ‘தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன்’ என்று பொருள். எளியவர்களும், எளிய முறையில் வழிபடும் தெய்வமாக பிள்ளையார் பார்க்கப்படுகிறார்
    சகஸ்ரநாமம்சுலோகம்காயத்ரிதுதி சுலோகம்
    சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
    ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
    கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
    கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
    உமாஸுதம் சோக வினாச காரணம்
    நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

    ஓம் தத்புருஷாய வித்மஹே
    வக்ரதுண்டாய தீமஹி
    தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

    ஐந்து கரத்தனை யானை முகத்தனை
    இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
    நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
    புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

    மூஷிக வாகன மோதக ஹஸ்த
    சாமர கர்ண விளம்பித சூத்ர
    வாமன ரூப மஹேஸ்வர புத்ர
    விக்ன விநாயக பாத நமஸ்தே.
    இந்த ஐந்து வார்த்தைகளில் ஒவ்வொன்றும் ஒரு குட்டாக ஐந்து தரம் நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள வேண்டும். தலையில் குட்டிக் கொள்வதால் மருத்துவ நலன்கனைப் பெறலாம்.

    எந்த ஒரு விஷயத்துக்கும் ஆரம்பத்தில் ‘சுக்லாம்பரதரம்’ சொல்வோம். இதற்கு விநாயகர் அவர் எல்லாமுமாக இருக்கிறார் என்பது பொருள். அந்த ஸ்லோகத்தை சொல்லி பாருங்கள் தெரியும்.

    சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்
    ப்ரஸந்த வதநம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
    ‘சுக்லாம்பரதர’ - வெள்ளை வஸ்திரம் கட்டிக் கொண்டிருப்பவர்.
    ‘விஷ்ணு’ என்றால் எல்லா இடத்திலேயும் பரவியிருப்பவர். ‘சசிவர்ண’- நிலா மாதிரி நிறம் உடையவர்-.
    ‘சதுர்புஜ’ - நான்கு கை உள்ளவர்.

    ‘ப்ரஸந்த வதந’- நல்ல மலர்ந்த முகமுள்ளவரான இவரை தியானிக்க வேண்டும் என்று வருகிறது. இந்த ஐந்து வார்த்தைகளில் ஒவ்வொன்றும் ஒரு குட்டாக ஐந்து தரம் நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள வேண்டும். தலையில் குட்டிக் கொள்வதால் மருத்துவ நலன்கனைப் பெறலாம்.

    மனித உடலில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞேயம் மற்றும் சகஸ்ரம் என ஏழு சக்கரங்கள் உள்ளன. அவற்றில் சுவாச நடப்பு நடக்கிறது. மேலும் சிரசில் இருக்கும் ஸஹஸ்ரார கமலத்தில் உள்ள ஆனந்த அமுதம் நாடி நரம்புகளின் வழியே சுவாசத்தோடு பாய்வதற்சாகவே சிரசில் குட்டிக் கொள்கிறோம்.
    நாளை விநாயகர் சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய விநாயகர் 108 போற்றியை கீழே பார்க்கலாம். சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) சொல்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் கைகூடும்.
    ஓம் விநாயகனே போற்றி
    ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி
    ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி
    ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
    ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி
    ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி
    ஓம் ஆனை முகத்தோனே போற்றி
    ஓம் ஆறுமுகன் சோதரணே போற்றி
    ஓம் ஆதி மூலமே போற்றி
    ஓம் ஆனந்த உருவே போற்றி
    ஓம் இமவான் சந்ததியே போற்றி
    ஓம் இடரைக் களைவோனே போற்றி
    ஓம் ஈசன் மகனே போற்றி
    ஓம் ஈகை உருவே போற்றி
    ஓம் உண்மை வடிவே போற்றி
    ஓம் உலக நாயகனே போற்றி
    ஓம் ஊறும் களிப்பே போற்றி
    ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி
    ஓம் எளியவனே போற்றி
    ஓம் எந்தையே போற்றி
    ஓம் எங்குமிருப்பவனே போற்றி
    ஓம் எருக்கு அணிந்தவனே போற்றி
    ஓம் ஏழை பங்காளனே போற்றி
    ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி
    ஓம் ஐயனே போற்றி
    ஓம் ஐங்கரனே போற்றி
    ஓம் ஒப்பிலாதவனே போற்றி
    ஓம் ஒதுக்க முடியாதவனே போற்றி
    ஓம் ஒளிமய உருவே போற்றி
    ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி
    ஓம் கருணாகரனே போற்றி
    ஓம் கரணத்தில் மகிழ்பவனே போற்றி
    ஓம் கணேசனே போற்றி
    ஓம் கணநாயகனே போற்றி
    ஓம் கண்ணிற்படுபவனே போற்றி
    ஓம் கலியுக நாதனே போற்றி
    ஓம் கற்பகத்தருவே போற்றி
    ஓம் கந்தனுக்கு தவியவனே போற்றி
    ஓம் கிருபாநிதியே போற்றி
    ஓம் கீர்த்தி அளிப்பவனே போற்றி
    ஓம் குட்டில் மகிழ்பவனே போற்றி
    ஓம் குறைகள் தீர்ப்பவனே போற்றி
    ஓம் குணநிதியே போற்றி
    ஓம் குற்றம் பொறுப்போனே போற்றி
    ஓம் கூவிட வருவோய் போற்றி
    ஓம் கூத்தன் மகனே போற்றி
    ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி
    ஓம் கொழுக்கட்டைப் பிரியனே போற்றி
    ஓம் கோனே போற்றி
    ஓம் கோவிந்தன் மருமகனே போற்றி
    ஓம் சடுதியில் வருபவனே போற்றி
    ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
    ஓம் சங்கடஹரனே போற்றி
    ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி
    ஓம் சிறிய கண்ணோனே போற்றி
    ஓம் சித்தம் கவர்ந்தோனே போற்றி
    ஓம் சுருதிப் பொருளே போற்றி
    ஓம் சுந்தரவடிவே போற்றி
    ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
    ஓம் ஞான முதல்வனே போற்றி
    ஓம் தந்தம் உடைந்தவனே போற்றி
    ஓம் தந்தத்தாற் எழுதியவனே போற்றி
    ஓம் தும்பிக்கை உடையாய் போற்றி
    ஓம் துயர் துடைப்பவனே போற்றி
    ஓம் தெருவெலாம் காப்பவனே போற்றி
    ஓம் தேவாதி தேவனே போற்றி
    ஓம் தொந்தி விநாயகனே போற்றி
    ஓம் தொழுவோ நாயகனே போற்றி
    ஓம் தோணியே போற்றி
    ஓம் தோன்றலே போற்றி
    ஓம் நம்பியே போற்றி
    ஓம் நாதனே போற்றி
    ஓம் நீறணிந்தவனே போற்றி
    ஓம் நீர்க்கரையமர்ந்தவனே போற்றி
    ஓம் பழத்தை வென்றவனே போற்றி
    ஓம் பாரதம் எழுதியவனே போற்றி
    ஓம் பரம்பொருளே போற்றி
    ஓம் பரிபூரணனே போற்றி
    ஓம் பிரணவமே போற்றி
    ஓம் பிரம்மசாரியே போற்றி
    ஓம் பிள்ளையாரே போற்றி
    ஓம் பிள்ளையார்பட்டியானே போற்றி
    ஓம் பிறவிப்பிணி தீர்ப்பவனே போற்றி
    ஓம் பிள்ளைகளை ஈர்ப்பவனே போற்றி
    ஓம் புதுமை வடிவே போற்றி
    ஓம் புண்ணியனே போற்றி
    ஓம் பெரியவனே போற்றி
    ஓம் பெரிய உடலோனே போற்றி
    ஓம் பேரருளாளனே போற்றி
    ஓம் பேதம் அறுப்போனே போற்றி
    ஓம் மஞ்சளில் இருப்பவனே போற்றி
    ஓம் மகிமையளிப்பவனே போற்றி
    ஓம் மகாகணபதியே போற்றி
    ஓம் மகேசுவரனே போற்றி
    ஓம் முக்குறுணி விநாயகனே போற்றி
    ஓம் முதலில் வணங்கப்படுவோனே போற்றி
    ஓம் முறக்காதோனே போற்றி
    ஓம் முழுமுதற்கடவுளே போற்றி
    ஓம் முக்கணன் மகனே போற்றி
    ஓம் முக்காலம் அறிந்தானே போற்றி
    ஓம் மூத்தோனே போற்றி
    ஓம் மூஞ்சுறு வாகனனே போற்றி
    ஓம் வல்லப கணபதியே போற்றி
    ஓம் வரம்தரு நாயகனே போற்றி
    ஓம் விக்னேஸ்வரனே போற்றி
    ஓம் வியாஸன் சேவகனே போற்றி
    ஓம் விடலைக்காய் ஏற்பவனே போற்றி
    ஓம் வெற்றியளிப்பவனே போற்றி
    மனதளவில் நாம் சோர்வுறும் சமயங்களில் கீழே உள்ள மாரியம்மன் ஸ்லோகத்தை சொன்னால் அம்மன் தானாக மனம் இறங்கி நம் கவலையை போக்குவாள்.
    மனிதர்களுக்கு துன்பம் வருவது இயம்பு தான். ஆனால் அந்த துன்பத்தை இன்பமாகும் சக்தி இறைவன் ஒருவருக்கே உண்டு. இறைவன் மனதை குளிர்வித்தால் அவர் தானாக நம் மனதை குளிரச்செய்வார். அந்த வகையில் மனதளவில் நாம் சோர்வுறும் சமயங்களில் கீழே உள்ள மாரியம்மன் தாலாட்டை பாடினால் அம்மன் தானாக மனம் இறங்கி நம் கவலையை போக்குவாள்.

    தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் பெண்களின் மனக்குறைகள் படிப்படியாக குறையும்.

    அக்நிஜ்வாலாசிகாம் அக்னிநேத்ராம் அக்னிஸ்வரூபிணீம்
    கரண்ட மகுடோபேதாம் கதா டக்கா கராம்புஜாம்|
    வீராஸநாம் கபாலாஸி பாச ஹஸ்தாம் ரவிப்ரபாம்
    வந்தே தேவீம் மஹாமாரீம் நாகாபரணபூஷிதாம்.
    எந்தவொரு காரியத்தில் இறங்குவதாக இருந்தாலும் முன்னதாக இந்த ஸ்லோகத்தை மனதாரச் சொல்லுங்கள். மதிப்பு கூடும். மரியாதை பெருகும்.
    எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும் மதிப்பும் மரியாதையும் சமூகத்தில் வேண்டும் என்று விரும்புவதுதான் முக்கியமான ஆசையாக இருக்கமுடியும். அப்படி வாழ்வில், மதிப்பும் மரியாதையும் கவுரவமும் தந்தருளும் மகாவிஷ்ணுவின் ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். எந்தவொரு காரியத்தில் இறங்குவதாக இருந்தாலும் முன்னதாக இந்த ஸ்லோகத்தை மனதாரச் சொல்லுங்கள். மதிப்பு கூடும். கவுரவம் உயரும். மரியாதை பெருகும்.

    ஸத்கர்த்தா ஸத்க்ருத: ஸாதுர்
    ஜஹ்நுர் நாராயணோநம:

    முழுமையாக சிரத்தையுடன் செய்யும் காரியத்திலும் தடைகள் வந்து நம்மை இம்சை பண்ணும். அப்படி நம்மை மீறிய செயல்களிலும் வீர்யத்தைத் தந்தருளும் ஸ்லோகம் இது. எண்ணிய காரியத்தை நிறைவேற்றித் தரும் ஸ்லோகம்.

    ஸித்தார்த்த: ஸித்த ஸங்கல்ப:
    ஸித்தித: ஸித்தி ஸாதன:

    வாழ்வில் மிக முக்கியமானதொரு திருப்புமுனை என்பது திருமணமாகத்தான் இருக்கமுடியும். மகனுக்கு இன்னும் திருமணம் நடக்கலையே... மகளுக்கு நல்ல வரன் அமையலையே என்று கலங்கித் தவிக்கும் பெற்றோர்களின் வேதனை சொல்லிமாளாது. ஏதோவொரு தடங்கலால் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும் திருமணத்தை தந்தருளும் ஸ்லோகம் இது.
    தினமும் ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்திரம் வாசிப்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் நினைத்தபடி உடனே நிறைவேறும் என்பது ஐதீகம். உங்கள் வீட்டில் சகல செல்வங்களும் சேரும்.
    ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்திரம் வாசிப்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் நினைத்தபடி உடனே நிறைவேறும் என்பது ஐதீகம். மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைத்து உங்கள் வீட்டில் சகல செல்வங்களும் சேரும். குடும்ப நன்மைக்காகவும், செல்வவளம் வேண்டியும் மகாலட்சுமியை அஷ்டோத்திரம் ஜெபித்து, மகாலட்சுமிக்கு குங்குமத்தால் 108 முறை அர்ச்சனை செய்து வர வேண்டும். இவ்வாறு செய்வதால் வேண்டிய வரத்தை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

    தேவ்யுவாச:

    தேவ தேவ மஹாதேவ த்ரிகாலக்ஞ மஹேஸ்வர |
    கருணாகர தேவேச பக்தாநுக்ரஹகாரக ||
    அஷ்டோத்தரசதம் லக்ஷ்ம்யா: ச்ரோதுமிச்சாமி தத்வத: |

    ஈஸ்வர உவாச:

    தேவி ஸாது மஹாபாகே மஹாபாக்யப்ரதாயகம் |
    ஸர்வைச்வர்யகரம் புண்யம் ஸர்வபாப-ப்ரணாசநம் ||

    ஸர்வதாரித்ர்ய-சமநம் ச்ரவணாத் புக்தி-முக்திதம் |
    ராஜவச்யகரம் திவ்யம் குஹ்யாத் குஹ்யதமம் பரம் ||

    துர்லபம் சர்வதேவாநாம் சதுஷ்சஷ்டி கலாஸ்தபம் |
    பத்மாதீநாம் வராந்தாநாம் நிதீநாம் நித்யதாயகம் ||

    ஸமஸ்ததேவ-ஸம்ஸேவ்யம் அணிமாத்யஷ்ட ஸித்திதம் |
    கிமத்ர பஹுநோக்தேந தேவி ப்ரத்யக்ஷ-தாயகம் ||

    தவ ப்ரீத்யாऽத்ய வக்ஷ்யாமி சமாஹிதமநா: ச்ருணு |
    அஷ்டோத்தர-சதச்யாஸ்ய மகாலக்ஷ்மீஸ்து தேவதா ||

    க்லீம் பீஜம் பதமித்யுக்தம் சக்திஸ்து புவனேச்வரீ |
    அங்கந்யாஸ: கரந்யாஸ: ஸ இத்யாதி ப்ரகீர்த்தித: ||

    த்யானம்

    வந்தே பத்மகராம் ப்ரஸந்நவதநாம் ஸௌபாக்யதாம் பாக்யதாம் |
    ஹஸ்தாப்யாமபயப்ரதாம் மணிகணைர் நாநாவிதைர் பூஷிதம் || 1

    பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர ப்ரஹ்மாதிபிஸ்-ஸேவிதாம் |
    பார்ச்வே பங்கஜ சங்க பத்ம நிதிபிர்யுக்தாம் ஸதா சக்திபி: || 2

    ஸரஸிஜ நயநே ஸரோஜஹஸ்தே தவளதராம்சுக கந்த மால்யசோபே |
    பகவரி ஹரிவல்லபே மனோக்ஞே த்ரிபுவன பூதிகரி ப்ரஸீத் மஹ்யம் || 3

    || ஓம் ||

    பிரக்ருதீம் விக்ருதீம் வித்யாம் ஸர்வ பூத ஹித ப்ரதாம் |
    ச்ரத்தாம் விபூதிம் ஸுரபீம் நமாமி பரமாத்மிகாம் || 1

    வாசம் பத்மாலயாம் பத்மாம் சுசிம் ஸ்வாஹாம் ஸ்வதாம் ஸுதாம்|
    தந்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் நித்யபுஷ்டாம் விபாவரீம் || 2

    அதிதிம் ச திதிம் தீப்தாம் வஸுதாம் வஸுதாரிணீம்|
    நமாமி கமலாம் காந்தாம் காமாக்ஷீ க்ரோதஸம்பவாம் || 3

    அநுக்ரஹப்ரதாம் புத்திம் அநகாம் ஹரிவல்லபாம் |
    அசோகாம் அம்ருதாம் தீப்தாம் லோக சோக விநாசிநீம் || 4

    நமாமி தர்மநிலயாம் கருணாம் லோகமாதரம் |
    பத்மப்ரியாம் பத்மஹஸ்தாம் பத்மாக்ஷீம் பத்மஸுந்தரீம் || 5

    பத்மோத்பவாம் பத்மமுகீம் பத்மநாபப்ரியாம் ரமாம் |
    பத்மமாலாதராம் தேவீம் பத்மிநீம் பத்மகந்திநீம் || 6

    புண்யகந்தாம் ஸுப்ரஸந்நாம் ப்ரஸாதாபிமுகீம் ப்ரபாம் |
    நமாமி சந்த்ரவதனாம் சந்த்ராம் சந்த்ரசஹோதரீம் || 7

    சதுர்புஜாம் சந்த்ரரூபாம் இந்திராம் இந்து சீதளாம் |
    ஆஹ்லாத ஜனனீம் புஷ்டிம் சிவாம் சிவகரீம் சதீம் || 8

    விமலாம் விச்வ ஜநநீம் புஷ்டிம் தாரித்ர்யநாஸிநீம் |
    ப்ரீதிபுஷ்கரிணீம் சாந்தாம் சுக்லமால்யாம்பராம் ச்ரியம் || 9

    பாஸ்கரீம் பில்வநிலயாம் வராரோஹாம் யசஸ்விநீம் |
    வஸுந்தரா-முதாரங்காம் ஹரிணீம் ஹேமமாலிநீம் || 10

    தனதான்யகரீம் ஸித்திம் ஸ்த்ரைண ஸௌம்யாம் சுபப்ப்ரதாம் |
    ந்ருபவேச்ம கதாநந்தாம் வரலக்ஷ்மீம் வஸுப்ரதாம் || 11

    சுபாம் ஹிரண்ய-ப்ராகாராம் ஸமுத்ர-தநயாம் ஜயாம் |
    நமாமி மங்களாம் தேவீம் விஷ்ணுவக்ஷஸ்தலஸ்திதிதாம் || 12

    விஷ்ணுபத்நீம் பிரசந்நாக்ஷீம் நாராயண-ஸமாஸ்ரிதாம் |
    தாரித்ர்ய த்வம்ஸிநீம் தேவீம் ஸர்வோத்பத்ரவ-வாரிணீம் || 13

    நவதுர்காம் மஹாகாளீம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகாம் |
    த்ரிகாலக்ஞான ஸம்பந்நாம் நமாமி புவனேச்வரீம் || 14

    லக்ஷ்மீம் க்ஷீரஸமுத்ர ராஜதநயாம் ஸ்ரீரங்க தாமேஸ்வரீம் |
    தாஸீபூத-ஸமஸ்ததேவ-வனிதாம் லோகைக-தீபாங்குராம் || 15

    ஸ்ரீமந்மந்த கடாக்ஷலப்த விபவ பிரஹ்மமேந்த்ர கங்காதராம் |
    த்வாம் த்ரைலோக்ய குடும்பினீம் ஸரஸிஜாம்
        வந்தே முகுந்தப்ரியாம் || 16
    மாதர்நமாமி கமலே கமலாயதாக்ஷீ | ஸ்ரீவிஷ்ணு
        ஹ்ருத்கமலவாஸிநி விச்வமாத: || 17 க்ஷீரோதஜே கமல கோமல கர்பகெளரி |
        லக்ஷ்மீ: ப்ரஸீத ஸததம் நமதாம் சரண்யே || 18
    த்ரிகாலம் யோ ஜபேத்வித்வான் ஷண்மாஸம் விஜிதேந்த்ரிய: |
    தாரித்ர்ய த்வம்ஸனம் க்ருத்வா ஸர்வமாப்நோதி யத்நத: || 19

    தேவீநாம ஸஹஸ்ரேஷு புண்யமஷ்டோத்ரம் சதம் |
    யேந ச்ரியமவாப்நோதி கோடி ஜன்மதரித்ரத: || 20

    ப்ருகுவாரே சதம் தீமாந் படேத் வத்ஸரமாத்ரகம் |
    அஷ்டைச்வர்ய-மவாப்நோதி குபேர இவ பூதலே || 21

    தாரித்ர்ய-மோசனம் நாம ஸ்தோத்ரமம்பாபரம் சதம் |
    யேந ஸ்ரியமவாப்நோதி கோடி ஜன்ம தரித்ரத: || 22

    புக்த்வா து விபுலான் போகான் அஸ்யாஸ் ஸாயுஜ்யமாப்நுயாத் |
    ப்ராத: காலே படேந்நித்யம் ஸர்வது:கோப சாந்தயே || 23

    படம்ஸ்து சிந்தயேத் தேவீம் ஸர்வாபரணபூஷிதாம் ||

    || ஸ்ரீ லக்ஷ்மியஷ்தோத்தர சதநாமஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||
    நம்மால் முடிந்த அளவிற்கு லட்சுமிக்கு நிவேதனங்கள் படைத்து இந்த பிரார்த்தனை ஸ்லோகத்தை சொல்ல வேண்டும். அந்த உபதேச பிரார்த்தனை வருமாறு:-
    மனிதனுக்கு முக்கிய தேவை பணம். ஆனால் ஒரு சிலரிடமே பணம் தங்குகிறது. பணத்தையும், பதவியையும் இழந்து மனிதர்கள் மட்டுமல்ல, தேவர்கள் கூட சிரமப்பட்டிருக்கிறார்கள். இந்திரன் தனது தகாத செயலால் பதவியை இழந்து அலைந்திருக்கிறார்.

    மீண்டும் பதவியை பெற பால்கடலில் பூஜை நடத்தினார். அப்போது விஷ்ணு சில உபதேசங்களை சொன்னார். இந்த உபதேசத்தை நாமும் நமது வீட்டில் பூஜை அறையில் அமர்ந்து சொன்னால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

    நம்மால் முடிந்த அளவிற்கு லட்சுமிக்கு நிவேதனங்கள் படைத்து இதை சொல்ல வேண்டும். அந்த உபதேச பிரார்த்தனை வருமாறு:-

    ஆயிரம் இதழ்களை கொண்ட தாமரைப்பூவில் வசிப்பவளே! ஆயிரம் நிலாக்களின் பிரகாசத்தைப் போன்ற முகத்தைப் பெற்றவளே! இனிமை தருபவர் உள்ளத்திற்கு உற்சாகத்தை அளிப்பவளே! தங்கத்தைபோல் மின்னுபவளே! ஒளி பொருந்திய ஆடையை அணிந்திருப்பவளே! பலவகை ஆபரணங்களால் ஒளி வீசும் தெய்வீக தன்மை கொண்ட தாயே! மலர்முகம் கொண்டவளே! மந்தகாச புன்னகையை உடையவளே! என்றும் குறையாத இளமையைக் கொண்டவளே! உன்னை வணங்குவோருக்கு சகல செல்வங்களையும் அள்ளித் தருபவளே! மகாலட்சுமி உன்னை வணங்குகிறேன்.

    சகல உலகங்களிலும் உள்ளவர்களால் போற்றப்படும் தாயே! உலக உயிர்களுக்கு மகிழ்ச்சியை தருபவளே! ரத்தினங்களாலும், தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டு விஸ்வகர்மாவால் செய்யப்பட்ட அழகிய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவளே! தாமரையில் வசிப்பவளே! உனக்கு தூய்மையான கங்கை நீரை அர்ப்பணம் செய்கிறேன். மிகவும் புனிதமானதும், பாவங்களை அழிக்கக் கூடியதுமான அக்னியைப் போன்றது இந்த கங்கை நீர், இந்தந ¦ரை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும். உனக்கு பூக்கள், சந்தனம் ஆகியவற்றுடன் கூடிய கங்கையின் புனித நீரை சங்கால் அபிஷேகம் செய்கிறேன். இதை நீ ஏற்றுக் கொள்வாயாக.

    அன்பிற்குரிய ஹரிக்கு மனைவியானவே! உனது தேகத்தின் அழகைக் கூட்ட நறுமண தைலத்தையும், நறுமண திரவியங்களையும் கொண்ட இந்த கங்கை நீரை அர்ப்பணிக்கிறேன். பரந்தாமனின் அன்பிற்குரிய செல்வமே! உனக்கு நறுமண திரவியங்கள் சேர்க்கப்பட்ட இந்த சாம்பிராணியைத் தருகிறேன். ஏற்றுக் கொள்.
    பொதிகை மலையில் விளையும் சந்தனத்தை உனக்கு அர்ப்பணம் செய்கிறேன். ஏற்றுக் கொள்வாயாக. அழகிய வடிவம் கொண்டதும், ஒளிபரப்புவதும் சகல உயிர்களுக்கும் கண் போன்றதுமான இந்த தீபத்தை உனக்கு அர்ப்பணிக்கிறேன். ஏற்றுக் கொள்வாயாக.

    அறுசுவை நிரம்பியதும் உடலுக்கு நல்லதுமான இந்த நைவேத்தியத்தையும் அளிக்கிறேன். இதையும் ஏற்றுக் கொள்.

    இவ்வாறு கூறி வணங்க வேண்டும்.

    ஒவ்வொரு பிரார்த்தனையை சொல்லும்போது அந்தந்த பொருட்களை அம்பாளிடம் ஒப்படைக்க வேண்டும். வசதி இல்லாதவர்கள் தீபம் ஏற்றி வழிபாட்டாலே போதுமானது. அதே நேரம், மானசீகமாக இந்த பொருட்களை எல்லாம் அம்பாளுக்கு அர்ப்பணிப்பதாக கருதி இந்த உபதேசத்தை சொன்னால் நீங்கள் பணம் குவிக்கும் வகையில் லட்சுமி தேவி செல்வத்தை அள்ளித் தருவாள்.
    திருமந்திரம் என்னும் நூல், பக்தி, நீதி, தத்துவம், உளவியல், ஊழியியல், வாழ்வியல், துறவறம், வானசாஸ்திரம் என பல துறைகளை இணைந்து மனிதனுக்கு நன்னெறிகளை சொல்லும் ஒரே நூலாக இருக்கிறது.
    மனிதனுக்கு இறைவன் சொன்னது, கீதை. மனிதன் இறைவனுக்கு பாடியது திருமுறைகள். மனிதனே மனிதனுக்கு தந்தது திருக்குறள். மனிதனுக்கு சித்தர் அருளியது திருமந்திரம்.

    ஒரு நூல் ஏதாவது ஒரு விஷயத்தை சொல்லும். சில நூல்கள் பக்தியை உரைக்கும். சில நூல்கள் நீதியை போதிக்கும். சில தத்துவம் பேசும். சில உளவியலைச் சொல்லும். சில வாழ்வியலை கற்பிக்கும். ஆனால் திருமந்திரம் என்னும் நூல், பக்தி, நீதி, தத்துவம், உளவியல், ஊழியியல், வாழ்வியல், துறவறம், வானசாஸ்திரம் என பல துறைகளை இணைந்து மனிதனுக்கு நன்னெறிகளை சொல்லும் ஒரே நூலாக இருக்கிறது.

    அந்த நூலில் இருந்து ஒரு பாடலையும் அதற்கான விளக்கத்தையும் இங்கே பார்ப்போம்.

    பாடல்:-

    அகம் புகுந்தான் அடியேற்கு அருளாலே

    அகம் புகுந்தும் தெரியான் அருள் இல்லோர்க்கு

    அகம் புகுந்து ஆனந்தம் ஆக்கி சிவமாய்

    அகம் புகுந்தான் நந்தி ஆனந்தியாமே.

    பொருள்:-

    இறைவன் எளியவர்களின் உள்ளத்தில் நுழைகிறான். அப்படி இறைவன் நுழைந்தாலும், அவன் அருளைப் பெறாதவர்கள், அவனை உணரமாட்டார்கள். நந்தியின் அதிபராக விளங்கும் சிவ வடிவைக் கொண்ட அந்தப் பெருமான், உள்ளத்தில் புகுந்து பேரின்பம் தந்து சிவகரணமாய் ஆனந்திப்பவன்.
    செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில், பண்டிகை முதலான நாட்களில், மனசஞ்சலத்தால் குழம்பித் தவிக்கும் தருணங்களில் காமாட்சி அன்னையின் ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்.
    ஸ்ரீகாமாக்ஷி அம்மனைத் துதிக்கும் மிக அற்புதமான ஸ்தோத்திரம் உள்ளது. இந்த ஸ்லோகம்குறித்து, காஞ்சி மகா பெரியவா நமக்கெல்லாம் அருளிச்சென்றுள்ளார். இந்த ஸ்லோகத்தை எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம். சொல்லி அம்பாளை வீட்டிலிருந்தே வழிபடலாம்

    செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில், பண்டிகை முதலான நாட்களில், மனசஞ்சலத்தால் குழம்பித் தவிக்கும் தருணங்களில் மூக பஞ்ச சதியில் உள்ள காமாட்சி அன்னையின் ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். துர்விஷயங்கள், கடன் தொல்லைகள், குடும்பத்தில் சஞ்சலங்கள், மனதில் தேவையில்லாமல் தோன்றும் பயம் முதலான தருணங்களில், வீட்டில் விளக்கேற்றி காமாட்சி அம்பாளை ஆத்மார்த்தமாக நினைத்து ஸ்லோகத்தைச் சொல்லி வந்தால், பூரண நலம் பெறுவாள். உலகின் தலைமைப் பீட நாயகியான காஞ்சி காமாட்சி, அகிலத்தையும் அகிலத்து மக்களையும் காத்தருள்வாள்!

    ச்ரியம் வித்யாம்தத்யாத்ஜனனி நமதாம் கீர்த்திமமிதாம்
    ஸுபுத்ரம் ப்ராதத்தே தவ ஜடிதி காமாக்ஷி! கருணா
    த்ரிலோக்யாமாதிக்யம் த்ரிபுரபரிபந்திப்ரணயினி
    ப்ரணாமஸ்த்வத்பாதே ஸமிததுரிதே கிம் ந குருதே
    மாயமாய் திரையின் பின்னால் நிற்பது போல் மறைந்து நிற்கிறாய் கண்ணா... உன்னை இரகசியமான மறைப்பொருளை அறிந்த ஞானியர் மட்டுமே உள்ளங்கை நெல்லிக்கனி போல் காண்கிறார்
    கண்ணன் குந்தி தேவிக்கிட்ட என்ன வரம் வேணும்ன்னு கேட்டப்ப, ‘எனக்கு எப்பவும் ஏதாவது கஷ்டம் இருக்கணும்‘ன்னு வரம் கேட்டாங்களாம். கண்ணன் ஆச்சரியமாய் ‘ஏம்மா...எல்லாரும் கஷ்டமே வரக்கூடாதுன்னுதான் வரம் கேப்பாங்க...நீங்க கஷ்டம் வேணும்ன்னு கேக்கறீங்களே’ன்னு கேட்டதுக்கு, ‘கண்ணா, கஷ்டம் வருகிறபோது தான் மக்களுக்கு உன் நினைப்பே வரும். நான் எப்பவும் உன் நினைப்பாகவே இருக்கணும்ன்னு நினைக்கறேன். அதான் அந்த வரம் கேட்டேன்’னு சொன்னாங்களாம்.

    இந்தப் பாட்டுல ‘நீயிருக்கிறப்ப எனக்கு எந்த குறையும் இல்ல’ அப்படின்னு ராஜாஜி எழுதியிருக்கார். வரிகளும் வரிகளோட அர்த்தமும் இதோ .

    குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
    குறை ஒன்றும் இல்லை கண்ணா
    குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (2)
    கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
    கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
    குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
    வேண்டியதை தந்திட வெங்கடேஸன் நின்றிருக்க
    வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
    மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
    திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - கண்ணா
    திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
    உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார் (2)
    என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா (2)
    குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா (2)
    குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா (2)
    மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
    கல்லிலார்க்கிறங்கி கல்லிலே இறங்கி
    நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா (2)
    குறை ஒன்றும் இல்லை
    யாதும் மறுக்காத மலையப்பா (2)- உன் மார்பில்
    ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை
    என்றும் இருந்திட ஏது குறை எனக்கு (2)
    ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா (2)
    மணிவண்ணா மலையப்பா
    கோவிந்தா கோவிந்தா (3)
    வேத உருவானவனே (மறைமூர்த்தி) கண்ணா... எனக்கு எந்தக் குறையும் இல்லை. பசுக்களை (உயிர்களை, எங்களை) மேய்ப்பவனாய் (காப்பவனாய்), கோவிந்தனாய் நீயிருக்கும் போது எனக்கு எந்தக் குறையும் இல்லை.

    எல்லா இடத்திலும் நீ நிறைந்து ஆனால் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறாய் கண்ணா... அதனால் என்ன... நீ எங்கும் இருக்கிறாய் என்னைக் காப்பதற்கு... அது போதும் எனக்கு. எந்தக் குறையும் இல்லை எனக்கு. நான் எது கேட்டாலும் கொடுப்பதற்குத் தயாராய் வேங்கடேசன் ஆகிய நீயிருக்கும் போது எனக்கு வேறு என்ன வேண்டும் உன்னைத் தவிர... வேதங்கள் சொல்லும் மெய்ப்பொருளே கண்ணா... நீலமணி போன்ற மேனி வண்ணம் கொண்டவா...திருமலையில் நிற்கும் என் அப்பா...என்னைக் காப்பவனே கோவிந்தா...

    மாயமாய் திரையின் பின்னால் நிற்பது போல் மறைந்து நிற்கிறாய் கண்ணா... உன்னை இரகசியமான மறைப்பொருளை அறிந்த ஞானியர் மட்டுமே உள்ளங்கை நெல்லிக்கனி போல் காண்கிறார்... என்றாலும் எனக்கு எந்தக் குறையும் இல்லை கண்ணா... நீ திருமலையின் மேல் கல்லாய் நிற்கின்றாய்...அது போதும் எனக்கு... நான் உன்னை நன்றாக தரிசனம் செய்து கொள்கிறேன். எனக்கு எந்தக் குறையும் இல்லை மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா...

    வேறு யுகங்களில் மக்கள் உன்னை தவம், தியானம், யாகம் போன்ற பலவற்றைச் செய்து கண்டனர். இந்த கலியுகத்திலோ மக்களால் அதையெல்லாம் எளிதாய் செய்யமுடியாது... அதனால் எங்களுக்கு இரங்கி நீ கற்சிலையில் இறங்கி நிலையாக திருமலைக் கோவிலிலே காட்சி தருகிறாய்... அழகிய சுருள்முடியை உடைய கேஸவா... மலையப்பா...நீ எது கேட்டாலும் இல்லை என்று சொல்வதில்லை...உன் மார்பில் எது கேட்டாலும் கொடுப்பதற்கு நிற்கும் கருணைக்கடலாகிய அன்னை மகாலட்சுமி இருக்கும் போது...நான் செய்த புண்ணிய பாபங்களைப் பார்த்து நீ கூட சில நேரம் நான் கேட்பதைத் தர யோசிக்கலாம்...ஆனால் அன்னையோ அப்படி அல்ல...அவள் கருணைக்கடல்...என் தகுதியையும் பாராமல் எது கேட்டாலும் தருவாள்...அப்படி இருக்கும் போது எனக்கு என்ன குறை இருக்க முடியும். எந்தக் குறையும் இல்லை கண்ணா... மணிவண்ணா... மலையப்பா... கோவிந்தா...கோவிந்தா....

    “ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்”

    ×